Posts

Showing posts from September, 2024

வரன் - 23

Image
  நேகாவின் தலையில் இரண்டடி தட்டிய பின்னே இருமல் நிக்க, தீனாவின் கையைப் பிடித்துக் கொண்டவள் ' உனக்கு முன்னாடியே தெரியுமா?'  என்பது போல பார்த்து வைக்க, அவனும் தெரியும் என்பது போல கண்களை மூடி திறந்தான். அவனை வெகுவாய் முறைத்து விட்டு தன் அக்காவைப் பார்க்க, அவளோ அதிர்ச்சியில் விரிந்து கிடந்த இரு கண்களை அவன் மேல் பதித்திருந்தாள். "மாமஸ் நீங்களும் இவனும் கூட்டு சேர்ந்து விளையாடுறீங்க தான? இது உண்மை  இல்ல தான !" பொய்யாக இருக்கக் கூடும் என்றெண்ணி அவள்  கேட்டு வைக்க, ஆரனோ  சகலையிடம் கண்ணைக்  கட்டினான். அவனும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவள் புறம் வாகாய் அமர்ந்தவன்,  "செல்லக்குட்டி, சகலையும் நானும் விளையாடலடி எங்களுக்கு விளையாடுற வயசு தாண்டிருச்சிமா"என்றான் கேலியாக. விஷயத்தை விளக்குவான் என்று அவன் கூற வருவதைக் கவனமாக கேட்டு வந்தவள் அவனது ஹாஸ்ய வார்த்தைகளை கேட்டு கொதித்து போனாள், " ஆல்ரெடி வெந்து போன மாதிரி இருக்க உன் முகத்த மேலும் வேக வச்சிடுவேன் விஷயத்தை சொல்லு!" எனத் தன் விழிகள் இரண்டையும் உருட்டி மிராட்டினாள். "ஓகே ஓகே சும்மா ஃபனுக்கு தான் சொன்னே

வரன் 22

Image
  அதிகாலை அழகாய் புலர, மெல்ல கண்விழித்தாள் மேகவர்ஷினி. அழுது கொண்டே படுத்திருந்ததால் கண்களிரண்டும் எரிய, தலை விண்ணென்று தெறித்தது. இதற்கெல்லாம் காரணமானவன் அந்த மிளகா தான் என்று காலையிலே அவனை கடிந்தாள். தன் போனை சுவிட்ச் ஆன் செய்தவள் போன் ஆன்னானதும் எடுத்துப் பார்க்க, வெறும் " குட் நைட்" என்று தாங்கிய குறுஞ்செய்தி மட்டுமே தான் அவனிடமிருந்து வந்திருந்தது. அதைக்கண்டு இன்னும் ஆத்திரம்  கூடியது அவளுக்கு.  'ஓ சாருக்கு மறுபடியும் அடிச்சிக் கூப்பிட தெரியாதோ ! குட் நைட்டாம்  குட்  நைட் யார் அழுதா உங்க குட்  நைட்க்கு? போயா மிளகா !' எனக் கடுகடுத்தவள், போனை சுவிட்சாப் செய்ததை மறந்து போனாள். நேற்று "தூக்கம் வருது "என்று சொல்லி அழைப்பை வைத்தவளுக்கு தெரியவில்லை போனை முழுதாய் அணைத்து வைத்து விட்டோம் என்று.அந்த மக்கு டீச்சர் போனை சுவிட்சாப்  செய்த விடயம் அவன் வாயால் கேட்டால் தான் விளங்கும் போலிருக்கிறது. பழிப் போட ,ஓர் அடிமைக் கிடைத்தப் பின் சொல்லவா வேண்டும் அவன் நின்றாலும் உட்கார்ந்தாலும் படுத்தாலும் குற்றம் என்று எளிதில் பழியைப் போட்டு விட்டு தன் தவறுக்கு சேர்த்து தண்டனைகள

வரன் - 21

Image
  பள்ளி அலுவலகத்தில் காலைப் பிராத்தனை முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் முகம் விகசிக்க வெளியே வந்தனர். பள்ளியில் வருகின்ற நாட்களில் ஆசிரியர்களை மட்டும் இரண்டு நாள் பள்ளி சார்பாக இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்ல இருக்கின்றனர் அதுவும் ' கேரளா 'என்றனர்.வெளியே வந்த ஆசிரியர்கள் இப்போதே சுற்றுலா செல்வது போல தன் தேவைகளையும் எங்கெங்குச் செல்ல வேண்டும் என்று லிஸ்டும் போட ஆரம்பித்து விட்டனர் சிறு பிள்ளைகளை போல. மேகா யோசனையோடு வர, நேகா கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஓட வைத்திருந்தாள். "மேகி ! இதான் நீயும் நானும் அக்கா தங்கையா  செல்லப் போற கடைசி டூர். அப்றம் நீ இன்னொரு வீட்டுக்கு மருமகளாகிடுவ, மாமா கிட்ட கேட்டுட்டு தான் நீ அடுத்த வருஷம் டூர் வருவ ! அதுவும் நீ வேலைக்கு வருவீயோ என்னவோ பச் ! அதனால இந்த வருஷ டூர நாம நல்லா எஞ்சாய் பண்றோம்" அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக, அவள் பேசினவை எல்லாம் மேகாவின்  காதுகளுக்கு எட்டவில்லை அப்படியே யோசனையோடு அவளுடன் நடந்து வந்தாள். தான் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம், அவளிடம் பதில் வரவில்லை என்றெண்ணியவள் அவள் புறம் திரும்ப, மேகாவின் பார்வையும் கவனமும

வரன் - 19

Image
  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர்  தலமையில் காலையிலே கூட்டம் போட்டனர். கிராம நிர்வாக அலுவலகரிலிருந்து தாசில்தார் வரைக்கும் மாவட்ட ஆட்சியர் முன்னமர்ந்திருந்து ஊரின் முன்னேற்றத்தை குறித்தும், தங்கள் பணிபுரியும் ஊரிலிருக்கும் சிக்கல்களையும்  நிறைக்குறைகளையும் கூறி தீர்வு பெறவும்  மழைக்காலம் வர  இருப்பதால், ஊர் கம்மாய்களைத்  தூர்வார்வது பற்றியும்  பேசி தீர்மானித்து விட்டு அக்கூட்டம் முடிவு பெற, வந்தவர்கள் அனைவரும் கிளம்பினார்கள். ஆரன் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் ,  தாசில்தார், வாட்டாச்சியர் மூவர் மட்டும் செல்லாமல் அவன் பேச போகும் விஷயத்தை கேட்கவே அமர்ந்திருந்தனர்.  வடுகப்பட்டி  கிராமத்தையும் அக்கிராம மக்களுக்குள் இருக்கும் சாதி பிரிவினையும் பிரச்சனையும் முன்னாள் கிராம நிர்வாகி ஏமாற்றியதையும் கூறி முடித்தான். "கிராமும், நகரம் போல வளர்ந்தாலும் இன்னும் மக்களோட எண்ணம் மட்டும் வளரல ஆரன்"என்றார் மாவட்ட ஆட்சியர்." உண்மை தான் சார். காலம் அப்டேட் ஆயிட்டே போனாலும் இன்னும் சிலர் சாதினு சாக்கடை குள்ள புரல தான் செய்றாங்க" என்று முடித்துக் கொண்டா

வரன் - 20

Image
  குடங்களை வைத்துக் கொண்டு மேல் ஐயனார்  தெரு மக்கள் அனைவரும் ஆரனின் அலுவலகத்துக்கு  முன் அமர்ந்து " தண்ணீ வேண்டும் தண்ணீ வேண்டும்" என்று கோஷமிட, அக்கூட்டத்தை  காத்தவராயனும்  ஊராட்சி தலைவர் மந்தவராயனும்  தலமைத் தாங்கினார்கள். காலை வேளையாக அப்போது தான்  அலுவலகம் வந்த ஆரன். மந்தவாரயன் திட்டம் அறிந்து புன்னகையுடன்  உள்ளே வந்தான். தன் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்களை பொருட்படுத்தாது தன் வேலையைத் தொடங்கி விட்டான். " தம்பி" என கணேசன் இழுக்கவும், " விடுங்கண்ணே பார்த்துக்கலாம்... ஒரு மூணு நாள் தண்ணீ இல்லேனதும் போராட்டம் பண்ணுறானுங்களே. ஆறுமாசமா உடைஞ்ச குழாய், அதுல வர கொஞ்சோண்டு தண்ணீ பிடிச்சி வாழற மக்கள பாவம் இல்லையா? எல்லாம்  தெரிஞ்சும் இந்த மக்கள் அவங்களுக்கு பாவம் ஒண்ணும் பார்க்கலியே ! சுயநலமா தானே இருக்காங்க, நாமளும் இருப்போம்ண்ணே, அப்பவாது உரைக்குதானு பார்ப்போம்" என்று வேலையைக் கவனிக்கலானான்  அவர்கள் கத்திக்கொண்டிருக்க, அங்கே கூடிய கீழத் தெரு மக்கள் அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர். "டேய்  சுரேஷு ! நமக்கே தண்ணீ நல்லா தான் வருது. வீட்டுக்கு வீடு கொழா இருக்கிற

வரன் - 18

Image
  நிச்சயக் கொண்டாட்டங்கள் இனிதாக முடிந்திட, மேலும் ஒரு நாள் கழித்து  வேலை செய்யும் கிராமத்திற்கு வந்தான். அந்தக் கிராமத்திலே அவன்  வீடெடுத்து தனியாக தங்கி இருக்கிறான்.  கிராம நிர்வாக அலுவலகர் தான் பணிகிடைத்த கிராமத்தில் தான் தங்கிக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு எழுதப்பட்ட சட்டம். சிலர் அதைப் பின் பற்றவதில்லை ஆனால் ஆரனோ  நேர்மைக்கு உரித்தானவனல்லவா அவ்வூரிலே  வாடகைக்கு வீடமர்த்தி தங்கி இருக்கிறான். அவன் இவ்வூருக்கு வந்து மூன்று மாதக் காலம் தான் ஆகிறது,  இன்னும் இவ்வூரைப் பற்றி  அவனது கணக்கெடுப்புகள் முடிந்த பாடில்லை... அங்கே அவனுக்கு  மதிய உணவை மட்டும் சமைத்து தருவார் பாண்டியம்மாள். காலையும் இரவும் அவனே பார்தது கொள்வான்.  ஒரு அறை ஒரு ஹால் கொண்ட அடுப்படியென ஒரு சின்ன குடும்பம் இருக்கும் வீட்டில்  இப்போது, அவன் மட்டும் வசித்து வருகிறான். திருமணம் முடிந்ததும் , அவளுடன் இந்த வீட்டில் காதல் காவியம் வரைய எண்ணி கனவு காண்கிறான். அதற்கெல்லாம் மண்ணள்ளிப் போடுவதற்காக ஒரு புது பிரச்சினை அதற்கு அடித்தளமாக வந்தது . காலையில் அலுவலகம் வந்தவன் தன் பணியை செவ்வனேன்று பார்க்க ஆரம்பித்தான். பாண்டியம்மாவ

வரன் - 17

Image
  ஆரன், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அவனுக்கு வகுப்பாசிரியாராக வந்தவர் தான் அன்பு மிஸ். பெயரை போலவே மிகவும் அன்பான மிஸ் தான். ஆரனும் கார்த்திக் படிக்கும் பள்ளியில் தான் படித்தான். அன்றிலிருந்து இன்று வரை அவர் ஐந்தாம் வகுப்பு தான் எடுக்கிறார்.  பன்னிரெண்டாம் வகுப்பு எடுக்க அழைத்த போது கூட மறுத்து  குழந்தைகளுடன் இருப்பதே எனக்கு போதும் என்று விட்டார். அவரது மகனும் ஆரனும்  பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்கள். இருவரும் அவருக்கு வேறு வேறு இல்லை.' மிஸ் 'என்று ஆரன் அழைத்தாலும் அவர்கள் வீட்டில் உரிமையாக விளையாடி, உண்டு விட்டு வருவான். அன்புவின் மகன் விஜய்நவீன் ஃபாரினில் இருக்கிறான். மகனை அங்கே அனுப்பி வைத்து விட்டு தவியாகத் தவிக்கும் அந்தத்  தம்பதியருக்கு  இப்போது  மகனாக இருப்பது என்னவோ ஆரன் தான். வேலை வேலை என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களிடம் வாரத்தில் நான்கு முறை பேசிடுவான், ஒரு முறை பார்த்துவிட்டுச் செல்வான். அவன் வரும் வேளையில் அவனுக்காகச் சமைத்து, அவனை  சாப்பிட வைத்து தன் மகனை போல எண்ணிக் கண்கள் கலங்க பார்ப்பார்  அன்பு மிஸ். அவனும் கேலிக் கிண்டல்களுடே அவரைத் தேற்றுவான். பள்ளியில் கா

வரன் - 16

Image
  தன்னைக் கடந்து தன்னைக் காணாது சென்ற தன் சக்கரையை எண்ண, முறுவலுடன் கூடிய வலியொன்று வந்து சேர்ந்தன. நிச்சயத்திற்கு இன்னும் நேரமிருப்பதால் முன்னதாகவே அவளை சந்தித்து பேச வேண்டும் என்றெண்ணியவன், தீனாவிடம் உதவிக் கேட்க, அவனும் அவனது ஒற்றன் போல மணப்பெண்ணின் அறைக்குள் சென்று  அரட்டை அடிப்பது போல நோட்டம் விட்டவன், மேகாவை  தனியே விட்டுவிட்டு இருவரையும் வெளியே அழைத்து வந்து சிக்னல் கொடுக்க, ஆரனோ பின் பக்க வழியாக சென்று அவளறை அடைந்தவன் ஜன்னல் வழியே  எகிறி உள்ளே குதித்தான். அவன் குதித்தை கூட உணராது, கதவை சாத்தி தன்னை தனியாக விட்டு சென்றவர்களை பற்றி யோசித்து கொண்டிருந்தாள் மேகா, அவள் பின்னால் வந்து நின்று, காதோரமாக ஊதிவிட்டவன், தொங்கி கொண்டிருந்த காதணியை சுண்டிவிட, புது ரத்தம்  உடலெங்கும் பாய்வதை சிவந்த தேகம் காட்டிக் கொடுத்தது. அவளது உடல் சிலிர்த்தெழ, கண்களை மூடி நின்றாள். மீண்டும் காதோரம் " சக்கர" என்று அழைக்க கண்களினுடே கண்ணீரும் வடிய, கன்னங்கள் வழியே கண்டவன்  பட்டென அவளை திருப்பி அவள் கண்ணமேந்தி கண்ணீரை அழுத்தித் துடைத்தவன், "என்னாச்சிடி ஏன் அழற? சொல்லு சக்கர ஏன் அழற?" அவள்