வரன் - 18

 



நிச்சயக் கொண்டாட்டங்கள் இனிதாக முடிந்திட, மேலும் ஒரு நாள் கழித்து  வேலை செய்யும் கிராமத்திற்கு வந்தான். அந்தக் கிராமத்திலே அவன்  வீடெடுத்து தனியாக தங்கி இருக்கிறான்.  கிராம நிர்வாக அலுவலகர் தான் பணிகிடைத்த கிராமத்தில் தான் தங்கிக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு எழுதப்பட்ட சட்டம். சிலர் அதைப் பின் பற்றவதில்லை ஆனால் ஆரனோ  நேர்மைக்கு உரித்தானவனல்லவா அவ்வூரிலே  வாடகைக்கு வீடமர்த்தி தங்கி இருக்கிறான். அவன் இவ்வூருக்கு வந்து மூன்று மாதக் காலம் தான் ஆகிறது,  இன்னும் இவ்வூரைப் பற்றி  அவனது கணக்கெடுப்புகள் முடிந்த பாடில்லை...


அங்கே அவனுக்கு  மதிய உணவை மட்டும் சமைத்து தருவார் பாண்டியம்மாள். காலையும் இரவும் அவனே பார்தது கொள்வான்.  ஒரு அறை ஒரு ஹால் கொண்ட அடுப்படியென ஒரு சின்ன குடும்பம் இருக்கும் வீட்டில்  இப்போது, அவன் மட்டும் வசித்து வருகிறான்.


திருமணம் முடிந்ததும் , அவளுடன் இந்த வீட்டில் காதல் காவியம் வரைய எண்ணி கனவு காண்கிறான். அதற்கெல்லாம் மண்ணள்ளிப் போடுவதற்காக ஒரு புது பிரச்சினை அதற்கு அடித்தளமாக வந்தது .


காலையில் அலுவலகம் வந்தவன் தன் பணியை செவ்வனேன்று பார்க்க ஆரம்பித்தான். பாண்டியம்மாவும்  அந்த அலுவலகத்தில் இருந்த சிறு சிறு வேலை பார்த்து விட்டு பன்னிரென்று மணியளவில் அவனிடம் அனுமதி கேட்டு  சமைக்கச் சென்று, ஒன்றைப் போல வீட்டிற்கு வர, அவனும் அதே நேரம் வீட்டுக்கு வந்து விட்டான். மகனுக்கு சமைப்பது போல சமைத்துகொண்டு வந்தவர், அன்புடன் அவனுக்கு பரிமாறுவார்.


அவனும் மறுக்காமல்  கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவான்.  இன்றும் அதே போல் சமைத்து  எடுத்து வந்து  டைனிங் டேபிளில் வைத்தார். அவன் வருவதற்குள் தட்டு தண்ணீரை எல்லாம் எடுத்து வைத்தவர்,  முகமலம்பி வந்தவனை கனிவாகப் பார்த்து விட்டு, தட்டில்  சோற்றைப் போட்டு சாம்பரை  ஊற்றினார். பக்கத்தில் காய்கூட்டு அனைத்தையும் வைத்தார். ஒரு வாய் ருசித்தவனுக்கு நாவெல்லாம் தேனாய் தித்திக்க,  


"ச்ச...பாண்டியம்மா ! சான்ஸே இல்ல... என்னா டெஸ்ட் என்னா  டெஸ்ட் !  என் வாயும் வயிறும் உனக்கு அடிமை பாண்டியம்மா ! இப்போதான்  தெரியிது மனுஷன் ஏன் பாண்டியம்மா பாண்டியம்மா உன் பின்னால் சுத்துறார்னு. இப்படி  சமைச்சி போட்டு  அந்த மீசைக்காரர கவுத்துட்ட "என அந்த வயதானவரை கேலி செய்து வெட்கப்பட வைத்தான்.


"புருஷன்காரன் வாங்கிட்டு வர அல்லவாக்கும் மல்லிய பூக்கும் நாங்க மயங்கி கிடக்கிறது போல அந்த ஆறடி மனுசனை என் முந்தானையில முடியனும்னா, இப்படி வாய்க்கு ருசியா சமைச்சில போடனும்ப்பு. ஆனா இப்ப இருக்க பொண்ணுங்களுக்கு எங்க சமைக்க தெரியுது, புருஷன சமைக்க விடுறாளுக, இல்ல வெளியல வாங்கிறாளுக இதெல்லாம் சரி வருமாப்பு. புருசனுக்கு தன் கையில் சமைச்சி போடுறதுல இருக்கு அவுக மேல நாம வச்சிருக்க நேசமும் பாசமும்... அப்பு அந்தப் பிள்ளைக்கு சமைக்க தெரியுமா?" எனக் கேட்ட வாக்கிலே புளிக் குழம்பை ஊற்றினார் 


"எந்த புள்ளைக்கு பாண்டியம்மா?" என்றவன் சோற்றை பிசைந்து வாயில் வைத்தான்." விளையாடாத அப்பு,  உங்கள கட்டிக்க போற புள்ளைக்கு தான்" என்றிட " ம்ம்ம்... சமைக்கத் தெரியுமாம், ஆனா இந்த கறி எல்லாம் சமைக்க வராதாம், கத்துட்டு இருக்கிறேன் சொல்லிருக்காள் பாண்டியம்மா. பாப்போம் எப்படி சமைச்சி போட்டு முந்தானையில முடிஞ்சி வைக்கிறாளா? இல்ல  மூக்க சிந்தி நிக்கிறாளானு.."என்றான் கேலியாக,


"ஏன் அப்பு  அப்படி சொல்றீக, அதெல்லாம் பிள்ளை நல்லா சமைக்கும்... பார்க்க நல்லா லட்சணமா, சாந்த சொரூபியா  இருந்துச்சி, நீங்க சொன்னீங்க படக்குன்னு என் காலையிலும் விழிந்திருச்சி  எனக்கே பட்டணத்தில் இப்படி ஒரு  பொண்ணா யோசிக்க தோணுச்சு அப்பு. உங்களுக்கு பொறுத்தமானவக  தான்.உங்க ஜோடி பொருத்தத பார்க்க என் கண்ணனே பட்டுடுச்சு அப்பு. அந்தப் புள்ள வந்ததுக்கு அப்றம் இந்த பாண்டியம்மா சமையல்  தேவைப்படாது உங்களுக்கு..."சிறு வருத்தம் கலந்த மகிழ்ச்சியில் மொழிந்திட, 


"என்ன பாண்டியம்மா  நீ இப்படி பீல் பண்ற, வர புள்ளைக்கு  நீ தான் மாமியார் கொடுமை பண்ண போற. நீ போய் இப்டி பீல் பண்றீயே, புருஷன எப்படி முந்தானையில முடிச்சி வைக்கிறத நீ தான் சொல்லி  கொடுக்கணும் , சூதுவாது  தெரியாத புள்ள பாண்டியம்மா நீ தான் கூட இருந்து பார்த்துக்கணும்" என்றிட, " இதை நீ சொல்லணுமாப்பு என் மக போல பார்த்துப்பேன்"என்றார் மனம் நிறைய , அவனும் சாப்பிட்டு முடிக்க, சாப்பிட்ட தட்டை கழுவி  வைத்தவன்  சட்டையை மாட்டிக் கொண்டு அலுவலகம் புறப்பட்டான்.


மாலை  வேளை வரை வேலை அவனை வெட்டித் தள்ள அக்கடா  என்று சீட்டில் சாய்ந்து கைகளை முறுக்கும் வேளையில் தான் அவன் காதில் விழுந்தது  மக்களின் அரவம். வெளியே வந்து பார்க்க, பெண்களும்  ஆண்களும் குழாய் அருகே நின்று தண்ணீருக்காக சண்டைப் போட்டு கொண்டிருந்தனர்.


பல வருஷம் பாழடைந்த  குழாயில்   இப்பவோ அப்பவோ நின்று விடுவேன் என்பது போல தண்ணீர் வடிய, அதைப் பிடிக்க மக்கள் முந்திக் கொண்டு சண்டையிட்டு கொண்டிருந்தனர்.


அங்கு வந்தவன் அந்தத் தண்ணீர் குழாயை கண்டு அதிர்ந்தான்." ஏங்க இந்த ஊர்ல இந்தக் குழாய் தான்  இருக்கா? இதுலே தண்ணீ  வர மாட்டிக்குது இதுல தண்ணீ பிடிக்க சண்டையா?" என்றவனை அனைவரும் கொஞ்சம் கோபத்தோடு தான் பார்த்தனர்  ஏனென்றால் அவன் அரசு அதிகாரி அல்லவா !


"என்ன சார் பேசற நீ, வீட்டுக்கு குடிக்க, சோறாக்க  தண்ணீ வேணாமா? இதான் எங்களுக்கு காலையிலையும் சாந்திரமும். இப்படி தான் வரும். நாங்க சண்டைப் போட்டு தான் பிடிப்போம்" என்று கூட்டத்தில் ஒருவன் தங்கள் கஷ்டங்களை மொழிந்திட, மேலும் அதிர்ச்சியை தனதாக்கியவன், " என்ன சொல்றீங்க, ஒவ்வொரு வீட்டுக்கும்  கார்பிரேஷன்  தண்ணீ கிடைக்க குழாய் போடலையா?" எனக் கேட்டவனை  விசித்திரமாக பார்த்தவர்கள், "அப்படி குழாய் வீட்டுக்கு வீடு போட்டுருந்தால்,  நாங்க ஏன் சார் இங்க வந்து சண்டப் போடணும்? இங்க இருக்க நாலு தெருக்கு ரெண்டு கொழா தான், மொத கூட நல்லா வந்துச்சி, ஆனா இப்போ சுத்தம் சார்"என்றனர்.


"ஏன் வர மாட்டிக்கிது கம்பலைன்ட் பண்ணிங்களா?".


"அதெல்லாம் கொடுத்தோம் இந்த ஊர் ஊராட்சி தலைவர் கிட்ட ,  ஆனா அவர் சூடுதண்ணீ போட விறகு அடுப்பு பத்த வைக்க குப்பையோட குப்பையா

போட்டுட்டார். இந்த மேல் அய்யனார் தெரு முழுக்க வீட்டுக்கு வீடு கார்பிரேசன் கொழா போட்டு அங்கத் தண்ணீய இழுத்துக்கிறாய்ங்க இங்க எப்படி  வரும் சார்"


அதை கேட்டு நெற்றி நரம்புகள் புடைக்க  கோபமமெழ, "என்ன அந்த தெருக்கு மட்டும் போட்டிருக்காங்களா? இந்தத் தெருக்கு எதுவும் போடுறேன் சொல்லிருக்காங்களா? " எனக் கேட்டவனை கேலியாகப் பார்த்தவர்கள், "அங்க கொழா போட்டு ஆறுமாசம் ஆச்சி, இந்த தெரு பக்கமே வந்து எட்டி கூட பார்க்கல, இதுல எங்குட்டு வந்து போடுவேன் சொல்வாங்க, இந்தப் பக்கம் வாழற ஜனங்க நாங்க கூலி வேலை செஞ்சிட்டு கஷ்டப்படுறோம், எங்களுக்குனு இலவசமா கிடைக்கிறது இந்த தண்ணீ தான் அதையும் ஒழுங்கா கொடுக்கிறாய்ங்களா?  ஓட்டு போட்டு ஏமாறது தான எங்க பொழப்பு" என்று ஒருவர் புலம்பிக் கொண்டு  நீர் நிறைந்த குடத்தை  தோளில் வைத்த படி நடந்தார்.


சுற்றி தேங்கி பாசம் படிந்து இடத்தில் தன் ஆயுள் காலம் வெகு விரைவில் எனக் காட்டிக் கொண்டு நின்ற குழாயை பாடாய் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தனர் அந்த மக்கள். அவர்களையே பார்த்தவன்,


"நீங்க ஏன் ஊராட்சி தலைவர் கிட்ட மனு கொடுக்கக் கூடாது?" என்று கேட்டவனை கண்டு அனைவரும் சிரித்தனர்.அவன் புரியாமல் விழிக்க, " அதான் சொன்னோமே ஸார்,  அப்படி கொடுத்தா அவர் வீட்டு அடுப்புக்கு  தான் உதவும்" என்றனர்.கோபம் பொத்துக் கொண்டு வர, "இன்னும் ஒரு மாசத்துல உங்களுக்கு  கார்பிரேசன் தண்ணீர் வீட்டுக்கு வீடு கிடைக்கற போல பண்றேன்" என்று  அங்கிருந்து நகன்றவனை அனைவரும் பத்தோடு பதினொன்றாக எண்ணினர்.


வேகமாக அலுவலகம்  சென்றவன், அக்கிராமத்தின் கணக்கு வழக்குகள் அடங்கிய கோப்புகளை திறந்து ஆறு மாதத்திற்கு முன் இருந்த கார்பிரேசன் குழாய் கணக்குகளை  எடுத்து பார்த்தவனுக்கு அந்த கோப்புகளில் இருந்த பக்கங்களை கிழித்து எரிய வேண்டும் போல இருந்தது.  


"என்ன கணேசண்ணா இது?  எல்லா வீட்டுக்கும் கார்பிரேசன்  குழாய் போட்டதா கணக்கு காட்டி இருக்காங்க  ஆனா இங்க, இந்த கிராமத்தில இருக்க  பத்து தெருல,  நாலு தெருக்கு போடவே இல்ல, ஆனா போட்டதா கணக்கு காட்டிருங்க, எப்படி அண்ணா?"


"என்ன தம்பி எப்படினு கேட்கிறீங்க? எல்லாம் காசு தான் ! இந்த ஊரோட, ஊராட்சி தலைவரும் அவர் தம்பியும்  ஜாதிவெறி புடிச்சவங்க,  அவங்க ஜாதிக்காரனுங்களுக்கு மட்டும் நல்லது செய்வானுங்க,  நீங்க சொல்ற நாலு தெரு முழுக்க****ஜாதிகாரனுங்க   இருக்காங்க, அவருக்கு அவனுங்கள பிடிக்காது. அதுனால அவங்களுக்கு எதுவும் செய்ய மாட்டார். அந்த தெருக்காரனுங்கள அடிமையா தான் வைக்கணும் எப்பையும் கையேந்தி நிக்கணும்ன்ற எண்ணம்  அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கு இருக்கு. அதுனால அந்த மக்களுக்கு எதுவும் நல்லது நடக்காது நடக்கவும் விட மாட்டானுங்க... இங்க வந்த  வி.ஏ.ஒ கைக்குள் போட்டுக்கு குழாய் வச்சதா சொல்லி கணக்கு காமிச்சி அந்த மக்களுக்கு மட்டும் போட்டு குடுத்துட்டு, மீதத்த ஆட்டைய  போட்டுட்டாங்க... என்ன தம்பி பண்ண ஆள் பலம் பணம் பலம் இருக்கற அவனுங்கள அசைக்கவும் முடியாது, இந்த மக்களுக்கு விடிவுகாலமும்  பிறக்காது"என அவர் புலம்ப, 


"ஒரு அரசு அதிகாரியா இருந்துட்டு இப்படி சொல்லலாமா அண்ணா நீங்க?  இதுக்கு கண்டிப்பா நான் ஒரு முடிவு கட்டுறேன். அந்த மக்களுக்கும்  நமக்கு சரிசமம் தான்னு அவனுங்களுக்கு காட்டுறேன்" என்றவன் செல்லை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவன், வளைத்து வளைத்து தண்ணீர் குழாயையும் தேங்கி கொசு அமர்ந்து இருக்கும் பாசம்படிந்த அழுக்கு நீரையும்  புகைப்படம் பிடிக்க, மக்கள் அவனையே பார்த்தனர். 


"நீங்க கம்பலைன்ட் கொடுக்க வேணாம் என் வேலைய நான் செய்வேன்"அந்த மக்களிடம் மொழிந்து விட்டு அலுவலகம் சென்றான்.  இரவு ஏழுமணிக்கு  வீட்டிற்கு

வந்தவன்,  தன்னை சுத்த படித்துக் கொண்டு உடை மாற்றியவன், அடுப்பங்கறைக்கு வந்து காபி கலந்து ஹாலில் அமர்ந்து அவன் கொண்டு வந்த சில கோப்புகளை பார்த்தப்படி அமர்ந்தவன், தன்னுடன் பயிற்சியில் இருந்த சில வி.ஏ.ஓவை நண்பர்களாக்கியவன்,  அவர்களுடன் அலைபேசி வழியிலே இந்தப் பிரச்சினை விவாரித்தான். மூன்று  மணி நேரமாக நடந்த இந்த விவாதம் ஒரு முடிவுக்கு வந்து போனை வைத்தவனின் வயிறு அப்போது தான் கூப்பாடு போட, இரண்டு தோசைகள் ஊற்றச்சென்றவன், மதியம் இருந்த சாம்பாரை சூடு செய்து உண்ண, அவனது சக்கரை அவனை அழைத்தாள். 


தினமும் பத்து மணிக்கு சரியாக அடித்து பேசுபவன், இன்று பத்தரை ஆகியும் பேசாமல் இருக்க, அவளே அழைத்தாள்.

அலைபேசி சிணுங்கிட, எடுத்தவன் தலையை தட்டிக் கொண்டான். வேகமாக அழைப்பிற்கு உயிர் கொடுத்தவன், "சக்கர" என்றான்.


"என்னாச்சி மிளகாக்கு பொண்டாட்டி கிட்ட பேச மறக்கற அளவுக்கு ஓவர் வேலையோ" என்று அவனை கலாய்க்க, 


"ஸாரி சக்கர ! ஒரு சின்ன பிரச்சினை அதையே நினைச்சிட்டு இருந்தனா, டைம் போனதே தெரிலடி ஸாரி சக்கர"என்றிட, " சரி சரி இருக்கட்டும் ஏதாவது சாப்டீங்களா?" 


"ம்ம்... தோசை  நீ "என்று "ம்ம்,"என்றவள், சில பல அக்கறை கவனிப்பு விசாரிப்புகள் முடிய, "என்ன பிரச்சனை கேட்க மாட்டீயா சக்கர?"


"இல்ல நீங்க கவர்மெண்ட் எம்பிளாயி, உங்க வொர்க்ல சில சீக்கிரட்ஸ் இருக்கும், சேர் பண்ணுவீங்களானு தெரியல,  சேர் பண்ணறதா இருந்தா பண்ணிருப்பீங்கல அதான் கேட்கல" என்றிட அவளை நினைத்து  மெச்சிக் கொண்டவன், "விஷயத்தை எடுத்து  சொல்ல"அவளுக்கே அந்த விஷயம்  ஆச்சர்யமாக இருந்தது. 


"இன்னமும் சாதி பார்கிறாங்களா?  முன்னாடி இப்படி  தான்  இருக்கும் கேள்விப் பட்டுருக்கேன். சீனிமால பார்த்துருக்கேன். ஆனா இந்தக் காலத்துலையும் இருக்குனு நீங்க  சொல்லி தான் தெரியுது"என்றவள் சொன்னதை  கண்டுச் சிரித்தவன்.


"சக்கர, இதெல்லாம் நம்ம ஜீன்லே ஊறி போனது எத்தனை ஜெனரேஷன் வந்தாலும் இந்தச் சாதிப்  பார்க்கற  வழக்கத்தை மட்டும் விடமாட்டானுங்க. அதிலும் தன் சாதி உயர்ந்து கர்வம் கொள்றவன், அடுத்த சாதிய மட்டம் தட்ட தான் செய்வான்.  தனக்கு கீழனு தான் நினைப்பான். எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும் அவனுங்க  ஜீன்ல கலந்த சாதியை  வாஸ் அவுட்  பண்ணவே முடியாது சக்கர ! கவர்மெண்ட் அதுக்கு உடந்தை தான். ஸோ சாதியோட சேர்ந்து அடக்கு முறை இருக்க தான் செய்யும்... சாதிய ஒழிக்க வந்த தலைவர்கள் எல்லாரும் வெறும் பாடப்புத்தக தலைப்பா மாறி ரொம்ப நாள் ஆச்சி சக்கர. ஸோ  நாடு முன்னேறினாலும்  இந்த சாதீ மட்டும் அணைந்து போகாது"என்றான்  மூச்சை விட்டபடி, 


"அந்த மக்களுக்கு நீங்க கண்டிப்பா  நியாயம் கிடைக்கப்  பண்ணணும் ஆரன். நீங்க வேலைக்கு சேர்ந்து மக்களுக்கு பண்ண போற முதல் சேவை. நீங்க ஜெய்க்கணும் உங்க கிட்ட இருந்து நல்ல செய்தி வரனும்" என்று அவனுக்கு ஊக்கம் கொடுக்க, 


"தேங்க்ஸ் சக்கர, எங்க நீ தேவையில்லாத பிரச்சினையில தலையிடாதீங்க சொல்லிடுவியோ பயந்தேன். ஆனா நீ,  உன்னோட சப்போர்ட் எனக்கு மேலும் போராடனும் தோணுதுடி" 


"என்ன ஆரன் நீங்க ? இது உங்க வேலை அதைப் பார்க்க வேணாம் சொல்வேணா, என்னைக்கும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பேன். எந்த சூழ்நிலையிலும் நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்"என்றவள் எதிரில் இருந்தால் காற்றுப்போகதளவுக்கு அணைத்து  இருந்திருப்பான். 


"லவ் யூ சக்கர !  நீ மட்டும் இப்போ நேர்ல இருந்தால்"என இழுக்க, அவள் வெட்கம் கொண்டவள்"ஆனா ஆரன் கொஞ்சம் ஜாக்கறதையா இருங்க..."என்றாள் குரலில் இருந்த பயத்தில். பின் இருவரும் நீண்ட நேரம் பேசி விட்டு வைத்தனர்.


மறுநாள் காலையில் ஊராட்சி தலைவர் முன் திமிராக அமர்ந்திருந்தவனை கோபத்தோடு பார்த்திருந்தான் காத்தவராயன்

Comments

  1. Replies
    1. சித்ரா ஹரிதாஸ்September 17, 2024 at 7:42 PM

      நன்றி மா

      Delete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2