கரையவில்லை உன்னிதயம்

 கரையவில்லை உன்னிதயம் 


இதயம் 1


தன் நிக்கான் கேமிராவில் படிந்த சிறு தூசியைப் பூ போல ஊதி தள்ளி அணிந்திருந்த வெள்ளை சட்டையில் அதை துடைத்து தன் பையினுள் பத்திரப்படுத்தி வைத்தவள், "ஃபங்சன் எங்கனு சொன்ன?"என தன் நண்பனிடம் கேட்டாள் வைஷ்ணவி.


"கே.கே. நகர், சந்திரன் அபார்ட்மெண்ட். பேபிஷவர் ஃபங்சன்?"என்றான் பரணி. "சரி, நான் அகிய கூட்டிட்டு போறேன். நீ நேத்து எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும் பிரிண்ட் போட்டு வை" என்றவளை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு,"அந்த வேலைய எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீ மொதல போற வேலைய ஒழுங்கா முடிச்சிட்டு வா ! ஃபங்சன் நடக்கற இடத்துக்கு போற பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காம போனோமா, வந்தோமானு இரு தாயி !"எனக் கையெடுத்து கும்பிட்டு கேட்டான்.


அவன் சொன்னதும் கோபம் முனுக்கென்று வந்தது அவளுக்கு."ஆமாடா நான் தான் எல்லா ஃபங்சன்லையும் போய்   வேலைய பார்க்காம பஞ்சாயத்து பண்றது தான் என் வேலை பார். நான் போட்டோ எடுக்கும்  போது என்னை டிஸ்டர்ப் பண்ணா, எனக்கு கெட்ட கோபம் வரும்னு உனக்கு தெரியாத?"


"எனக்கு தெரியும் தாயி. ஆனா அங்கிருக்கிறவனுக்கு தெரியணும்ல. ஒரு ஃபங்சன்னா கூட்டம் இருக்கத்தான் செய்யும் கஜகஜனு தான் இருக்கும். அதுக்காக நீ அங்க போய் அமைதியா இருங்க நான் போட்டோ எடுக்கணும் சத்தம் போடுவீயா? போற எடுத்துல எல்லாத்தையும் அட்ஜ்ஸ்ட் பண்ணி தான் ஆகனும்... பேமெண்ட் கிடைக்கணும்ல, அடுத்த ஆடர் கிடைக்கனும்னா உன் திரு வாய மூடிகிட்டு வேலைப் பார்த்து தான் ஆகணும். ப்ளீஸ் வைஷு எந்த ப்ராபலமும் பண்ணாம வேலைய முடிச்சிட்டு வாடி"அவன் காலில் விழுகாத குறையாகச் கெஞ்சினான் பரணி.


"சரி ட்ரை பண்றேன்" வீராப்பாக சொல்லியவளை வறுத்தெடுத்தான் வாய்க்குள்ளே.


மாவிலை தோரணங்கள் நிலைக் கதவைகள் இரண்டிற்கும் பாலமாக தொங்கி அலங்கரித்திருந்தன. வாசலில் ஜோடி செருப்புகள் நிறைந்திருக்க, உள்ளே இருக்கும் கூட்டத்தை எளிதில் கணித்து விடலாம். இருவரும் உள்ளே செல்லப் பெண்கள் தான் அதிகமிருந்தனர்.


அனைவரும் பட்டுச்சேலையில் மின்னிக் கொண்டிருக்க, இவர்கள் இருவர் மட்டும் பேண்ட் ஷர்ட்டில் வந்திருந்திருந்தனர். அவர்கள் இருவரையும்  அங்கிருக்கும் கூட்டம் ஒரு மாதிரி தான் பார்த்தது. அவர்கள் பார்வையை அறிந்து இருவரும் தங்களை ஒருதரம் பார்த்துக் கொண்டனர். 


"என்னடி எல்லாரும் நம்மலே ஒரு மாதிரி பாக்கறாங்க"வைஷுவின் காதைக் கடித்தாள் அகிலா. " இங்க நம்ம மட்டும் தான் ஆட் ஒன் அவுட்டா இருக்கோம். அப்போ நம்மலை அப்படி தான பார்ப்பாங்க.. பொண்ணு எங்க இருக்குனு கேட்டு ரூம் குள்ள ஓடி போயிடலாம் அகி !" என்றவள் "இரு" என அருகே நின்று பேசிக் கொண்டிருந்தவரை அழைத்தாள் வைஷு. திரும்பி நின்றவரின் முதுகை தட்டி"ஆன்டி... நாங்க பொண்ண போட்டோ எடுக்கணும் எங்க இருக்காங்க?" எனக் கேட்டாள். " பொண்ணாமா?" என திரும்பியவர்

வைஷுவை கண்டு "நீயா?" என்பது போல பார்க்க, அவளும்" நீங்களா?" என அதிர்ந்து பார்த்தாள். 

***

சரியாக தன் ஏழுமாத வயிற்றை தள்ளிக் கொண்டு வந்த  மனைவியை கைதாங்களாக வெளியே அழைத்து வந்தவன். தன் அன்னையை விழிகளால் துழாவ, அவன் கண்ணில் சிக்கியது அவனது தாயும் வைஷுவும் தான்.  வைஷுவை அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை, அவளை குழப்பத்தோடு பார்த்தான்.


வைஷுவின் மேல் படர்ந்த தன் கோபப்பார்வையை விலக்கவே இல்லை அவர். அவளோ" ஏன்டா இங்கே வந்தோம்?"என்று நெற்றியைக் கீறி தன் உணர்வை மறைத்தாள்.


"அம்மா "என தன் தாயை அழைத்தவனை திரும்பி பார்த்தாள் வைஷு. மனைவியின் தோளில் கைப் போட்டு கொண்டு நின்றிருந்தான் அவன்.


'அடப்பாவி இப்போ தான என்னை பொண்ணு பார்த்துட்டு போனான். அதுக்குள்ள கல்யாணம் பண்ணி பொண்டாட்டிக்கு வளைகாப்பும் வச்சிட்டான். நாம தான் இன்னும் டெவலப்பாகாம இருக்கோமா' தன் நிலையை எண்ணி நொந்துக் கொண்டாள் வைஷு.


"என்னம்மா எப்படி இருக்க? கல்யாணம் ஆகிடுச்சா?"நக்கலாகவே கேட்டார் சரஸ்வதி. அவரது நக்கலைப் புரிந்துக் கொண்ட வைஷு அவரை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு, "ஓ... ஆச்சே ! ரெண்டு கல்யாணம் ஆறு குழந்தைங்கனு ஆமோகமா இருக்கேன்" அவரை வாரிவிட்டுச் சென்றாள்.

****


சரஸ்வதியின் பொறுமை காற்றில் எங்கோ கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது. அவர் அருகில் அமர்ந்திருந்த பிரபுவும் சாய் பிரகாஷ்ஷூம் 'யாருக்கோ வந்த விருந்தாக' மகிழ் செய்து வைத்திருந்த கீரவடையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எப்படியும் தன் அன்னை இந்தப் பொண்ணையும் நிராகரிக்க போகிறார் என்று அறிந்துக் கொண்டவன் வந்ததுக்கு லாபம் என்று கீர வடையை ருசிக்க தொடங்கினான். 


இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு பெண் பார்க்க சென்று விட்டனர். தன் மகனுக்கு நிகரில்லை,  படிப்பில்லை, வேலைக்குச் செல்ல கூடாது ,  நிறமில்லை என்று இவரே மகனின் விருப்பத்தை கேளாமலே நிகாரித்தும் விடுவார். தன் மகனைக் காட்சி பொருளாக்கி பெண்கள் மூன் நிறுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் நினைவில்லை... தன் மகனுக்கும் தன் வீட்டிற்கும் ஏற்ற குத்து விளக்கு வேண்டும் அதை தான் தேடிக் கொண்டிருக்கிறார்? 'யார் அந்த குத்துவிளக்கோ ! ' 


சொந்தகார்கள் மூலம் வந்த  வரனாக, வைஷுவின் புகைப்படத்தைக் கண்டதும் சரஸ்வதிக்கும் பிரபுவிற்கும் பிடித்து விட்டது. பெண்ணின் புகைப்படத்தை சாய்யிடம் காட்ட,  அவனோ பார்க்க மறுத்துவிட்டான்.'எப்படியும் இதுவும் நிராகரிப்போகிற வரன் தானே எதற்கு பார்த்துக் கொண்டு 'என்று எண்ணி தான் பெண்ணின் வீட்டிற்கு வந்தான் ஆனால்  அவன் பார்க்க வந்த பெண் தான் வீட்டில் இல்லை. வைஷு இன்னும் வேலையை விட்டு வரவில்லை, வந்தவர்களை காக்க வைத்து பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள்.


"உங்க பொண்ணுகிட்ட நாங்க பொண்ணு பார்க்க வரத சொன்னீங்களா?" சரஸ்வதி கோபத்தை அடக்கிப் பொறுமையாக கேட்டார்.


"தெரியும்ங்க. இதோ வந்திடுவா ! எங்க பொண்ணு, வேலைன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்திடுவா !" என்று குறிப்பாகச் சொல்ல மற்றவர்களுக்கு அது பதிந்ததோ இல்லையோ சரஸ்வதிக்கு மூளையில் நன்றாகவே பதிந்தது. 


"உங்க பொண்ணு கல்யாணதுக்கு அப்றமும் வேலைக்கு போவாளா?" நேரடியாகவே கேட்க, இருவருக்கும் என்ன பதில் சொல்வது என்ற தெரியவில்லை திரு திருவென முழிக்க, சரியாக வைஷுவும் வந்து சேர்ந்தாள். 


வாசலில் ஆறு ஜோடி செருப்புகளை கண்டு தலையில் கைவைத்தவள் அங்கிருந்தவாறே தாய் தந்தையை பார்க்க, அவர்களோ கண்களாலே வந்தவர்களை காட்டி, தங்கள் தவிப்பைச் சொல்ல, ஆர்பாட்டமாக என்றும் உள்ளே வருபவள் இன்று பொறுமையாக,  நிதானமாக, அடக்க ஒடுக்கமாக,  வருகிறேன் என்று தனக்கு சுத்தமாக வராத ஒன்றை செய்து கொண்டு வர விஷ்ணுவிற்கு சிரிப்பு  தான் வந்தது நாகரீகம் கருதி அடக்கிக் கொண்டார்.


"வணக்கம் ஆன்ட்டி, வணக்கம் அங்கிள்" என இருவரையும் பார்த்து வணக்கம் வைத்தாள். மூவரும் அவளை ஆராய்ந்தனர். ஜீன்ஸ்ஸூம் பேண்ட்டும் கருப்பு நிற சட்டையையும் கை முட்டி வரை மடக்கி விட்டிருந்தாள். குதிரையின் வாலைப் போல  தலை முடியை   மொத்தமாக அள்ளி ஒரு பேன்டில்  போட்டிருந்தாள். நெற்றியில் சின்னதாக கூட ஒரு புள்ளி இல்லை.. ஆனால் அழகாக களையாக இருந்தாள். சாய்க்கு அவளை பிடித்துவிட்டது தாயை மறந்து ரசித்தான்.


ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அவள் நேரதுக்கு வராதது ஒரு கோணல்.  ஆண் அணிவது போல கால்சட்டையும் சட்டையும் அணிந்து வந்திருப்பது இன்னொரு கோணல். 


அவள் வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற மகிழ்மதி அணிந்திருந்த ஆடை மேலே ஒரு புடவையை சுற்றிக் கொண்டு அவர்கள் முன்  நிறுத்தினார். மீண்டும் வணக்கம் வைத்தவள். அவர்கள் சொல்லும் முன்னே விஷ்ணுவின் பக்கத்தில் அமர்ந்து கீர வடையை  எடுத்து உண்டாள். 


விஷ்ணுவும் மகிழும் மகள் செய்யும் செயலைக் கண்டு அஞ்ச, அவளது ஒவ்வொரு செயலும் சரஸ்வதிக்கு பிடிக்கவில்லை மாறாக சாய்க்கு பிடித்தது. பல்லைகடித்துக் கொண்டு அவளிடம் பேச்சுக் கொடுத்தார்." ஏன் மா இவ்வளவு லேட்டு?" 


"ஹான் ஆன்ட்டி, இன்னைக்கி ஒரு மேரேஜ் ஃபங்சன். கூட்டம் ரொம்ப. போட்டோ எடுக்கறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சி . எல்லா வொர்க் முடிச்சிட்டு வர ரொம்ப லேட் ஆகிடுச்சி. ஸாரி ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா?" என்றாள்.


கண்களை சுருக்கி மன்னிப்பு வேண்டியது ரொம்ப பிடித்து இருந்தது அவனுக்கு. " நீ என்ன வேலை பார்க்கறமா ?"

"நான் ஒரு போட்டோகிராபர் ஆன்ட்டி. பிரண்ட்ஸ்  எல்லாரும் சேர்ந்து  ஸ்டுடியோ வச்சிருக்கோம்... எல்லாம் பங்கசன்ஸூம் அவைலப்பிலா இருப்போம் ஆன்ட்டி"என்றாள்.


பெண்கள் கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போவதே விரும்பாதவருக்கு மருமகள் ஒரு போட்டோகிராபர் என்றால் ஏத்துக் கொள்வாரா? அதுவும் ஆண்கள் செய்யும் வேலையை பெண்கள் செய்வதா என்ற எண்ணம் வேறு.


"ஏன்டி மா நீ என்ன படிச்சிருக்க?" 


"எம்.எஸி போட்டோகிராபி படிச்சிருக்கேன் ஆன்ட்டி" 


"ஏன்டி மா... உனக்கு இந்த மேத்ஸ் ,  சைன்ஸ், சோசியல் எல்லாம் வராதா? இதென்ன ஆம்பள புள்ள படிக்கற  படிப்பு எடுத்து படிச்சிருக்க?" என்றதும் அவள் முகம் மாற தாயைப் பார்த்தாள். அவரோ கண்களால் இறஞ்சினார். 


"எனக்கு போட்டோகிராஃப்பில கொஞ்சம் இன்டெர்ஸ்ட் அதிகம். அதான் அதை எடுத்து படிச்சேன் ஆன்ட்டி" என்றாள் உள்ளே எழுந்த கடுப்பை மறைத்து. 


"சரிடிமா, கல்யாணத்துக்கு அப்றமும்  இந்த வேலைக்கு போற எண்ணம் இருக்கா?" என வினவ, " எஸ் ஆன்ட்டி மேரேஜூக்கு அப்றமும்  கண்டிப்பா என்னோட ப்ரொபைசனல் கண்டினுயூ பண்ணுவேன்" என்றாள் உற்சாகமாக, 


"ஆனா, என் வீட்டுக்கு வர போற மருமக, வேலைக்கு எல்லாம் போகக் கூடாது, வீட்டையும் என் பையனும் எங்களையும் பார்த்துக்கற பொண்ணு தான் எங்களுக்கு வேணும். என் பையனுக்கு அப்படி பட்ட பொண்ணை தான் பார்த்திட்டு இருக்கேன் ..." என்றதும் அதுவரை சோபாவின் நுனியில் அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து அமர்ந்தாள். தனக்கு எதிரே இருந்த சாய்யை கேள்வியாகப் பார்க்க. அவனோ தலைகுனிந்தான்.



"ஏன் ஆன்ட்டி ஒரு பொண்ண பெத்து  வளர்த்து காசை கொட்டிப் படிக்க வச்சு, நகை நட்டு எல்லாம் போட்டு கட்டிக் கொடுக்கறது

எதுக்கு? உங்களுக்கும் உங்க புள்ளைக்கும் சேகவம் பண்ணவா? உங்களையும் உங்க புள்ளையையும் பார்த்துக்க ஆள் வேணும்னா விளம்பரம் கொடுக்கலாமே, எதுக்கு உங்க புள்ளைக்கு பொண்ணு தேடுறேன் வீட்டுக்கு ஒரு ஆஃபிரென்டிஸ தேடிட்டு இருக்கீங்க? 


உங்க வீட்டிக்கு மருமகளா வரவங்களுக்கு எந்தக் கனவும் , பேஷனும் இருக்கக் கூடாதுல. வீட்டோட அடிமையா, காலம் முழுக்க  உங்க வீட்லே வந்து இருக்கணும்.  ஸாரி அதுக்கு நான் ஆள் இல்ல. என் பேஷனையும் ப்ரோபஸனலையும் மதிக்கற ஒருத்தன் தான் எனக்கு புருஷனாகவும் என்னை அப்படியே அக்சப்ட் பண்ணிக்கறவாங்க தான் பேமிலி தான் எனக்கு வேணும். ஸோ நீங்க...."என வாசலை நோக்கி  கையை காட்டிப் போகச் சொன்னாள்.


சரஸ்வதி தான் பார்த்த பெண்களை எல்லாம் நிகாரித்தார். 'முதல் முறையாக' என்று சொல்வது போல அவரையும் அவரது பையனையும் நிகாரித்தாள் வைஷ்ணவி !  சரஸ்வதியும் மூவரையும் முறைத்தவர்,"இப்படியே நீ எதிர்த்து பேசிட்டு இருந்தா, உனக்கு இந்த ஜென்மத்தில கல்யாணமே நடக்காது" என்று விட்டு தன் மகனையும் கணவனையும் இழுத்து கொண்டு போய்விட்டார். அவளும்" தேங்க் யூ" என்றாள் சிரித்துக் கொண்டு.மகன் 'இவளிடமிருந்து தப்பித்தான் 'என்று எண்ணிக் கொண்டார். ஆனால் மகன் இதயத்தில் துளிர்ந்த காதல் அந்த நொடியே பட்டும் போனது.


சரஸ்வதியும் வைஷுவும் அவரவர்  நினைவிலிருந்து மீண்டனர்.  வைஷு  வந்த வேலையைப் பார்த்தாள். சாய் பிரகாஷ்ஷின் மனைவி ஸ்ருதிக்கு தான் இன்று வளைகாப்பு. பெரியவர்கள் வந்து சந்தனம் பூசி குங்குமம் வைத்து வளையல் போட்டு ஆசிர்வதிப்பதை  எல்லாம் அழகாகப் படம் பிடித்தாள். பின் சாய் மற்றும் ஸ்ருதியை வைத்து ட்ரெண்டிங்கான போஸ்களை வைத்து புகைப்படங்களை நிறையவே எடுத்தாள். பின் சடங்குகள் என்று ஸ்ருதியை அழைத்துக் கொண்டு சென்று விட்டனர்.


அகி, அவளை சாப்பிட அழைக்க 'வேண்டாம்'என்று மறுத்தவள், அவளை மட்டும் அனுப்பி வைத்து விட்டு ஓரமாக  நின்று புகைப்படங்களை எல்லாம் பார்த்து கொண்டிருந்தாள். அவள் அருகே வந்தான் சாய்.


"ஹாய் !" என்றான். பதிலுக்கு புன்னகைத்தாள்."எப்படி இருக்கீங்க?"


"பைன்" என்றாள்."உங்க வொர்க் எல்லாம் எப்படி போகுது?" எனவும்"குட்" என்றாள். 

"டோண்ட் மிஸ்டேக் மீ ஏன் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?" 

என்றதும் பதில் அளிக்காது வெறும் தோளைகளை மட்டும் குலுக்கினாள்.


"வாழ்க்கை முழுக்க இப்படியே  கல்யாணம் பண்ணிக்காமலே இருக்க போறீங்களா?" அவனது கேள்வியை கேட்டதும் சிரித்தவள், "இல்லியே நான் கல்யாணம் பண்ணிப்பேன். அதுவும் தன் வாழ்க்கையில் தானே சுயமா முடிவெடுகற ஒருவன கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். யூ டோன்ட் வொரி" என அவனை மறைமுகமாக தாக்கிவிட்டுச் சென்றாள். அவளது மறைமுகத் தாக்குதலைக் கண்டு முறுவலுடன் சென்றான்.


மறுநாள், வைஷுவின் கைகளைப்  பின்னே வைத்து தன் வலிய கரத்தால் அவள் கைகளை முறுகியபடி கோபமாக நின்றவனுக்கு முன் தன்  வலியை மறைத்து அவனுக்கு சரிசமமாக முறைத்து தானும் கோபமாக இருப்பது போல காட்டிக் கொண்டிருந்தாள் வைஷு.


Comments

Popular posts from this blog

வரன் 1

இதயம் - 2