இதயம் - 2

 இதயம் 2


"என் மகனுக்கு கல்யாணமாகி பிள்ளையே பிறக்க போது" என்று  தன் பார்வையில் சிலாகித்து கொண்டிருந்த சரஸ்வதியவே " இவளை யாரு தான் கூப்பிட்டாங்களோ" என்று புலம்ப விட்ட  பெருமை நம் வைஷுவிற்கே சேரும். 'புகைப்படம் எடுக்கிறேன் 'என்ற பெயரில் அவரை அலகழித்து விட்டு தான் அலுவலகத்திற்கே வந்தாள்.

பரணியிடம் எடுத்தப் புகைப்படத்தை எல்லாம் கொடுத்து அடுத்தக் கட்ட வேலைகளைப் பார்த்து இரவில் தான் வீட்டிற்குச்  கிளம்பினாள்.

மகிழ்மதி மடியில் தலை வைத்து விஷ்ணுவர்தனின் மடியில் காலை வைத்து சயனத்தில் இருந்தான் எகாந்த்.

"டேய் மாப்ள !  எத்தனை நாளைக்கு தான்டா நாங்க உங்க ரெண்டு பேரையே மேய்க்க? போர் அடிக்கிதுடா ! சட்டு புட்டுனு பொண்ண பார்த்து லவ் பண்ணு. இல்ல நாங்க பார்க்கற பொண்ணயாவது கல்யாணம் பண்ணு. ரெண்டும் இல்லாம அத்தையடி மெத்தையடினு எங்க மடியில் குழந்தையாட்டம் கிடந்து காலத்த ஓட்டிறலாம் நினைக்காத டா" என்று தன் மடியில் கிடந்த அக்கா மகனின் காலை பிடித்துக் கொண்டே சொன்னார் விஷ்ணு.


"என்ன மாமே பண்ண 90'ஸ் கிட்ஸ்ஸா பொறந்தது என் தப்பா மாமே !  பொண்ணே கிடக்க மாட்டிக்கிது. அதுவும் இந்தக் காலத்துப் பொண்ணுங்க கிட்ட சும்மா பேச நெருங்கினாலே ' பிரதர் எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்குங்றாளுங்க ! நான் என்ன பண்ண?"என சிணுங்கினான்.


"சரிடா ! அப்போ நைன்டி'ஸ் கிட்ஸ்  பொண்ணுங்கள பார்க்க வேண்டியது தான?" மகியும் சொல்ல, " அட போ  மகி ! டு.கே வாது ஆள் இருக்குனு சொல்லுதுங்க, ஆனா இந்த 90'ஸ் கிட்ஸ்  கையில ஒண்ணு இடுப்புல ஒண்ணு வச்சிட்டு,' ஸாரி ஐ ஆம் மேரீட்ங்கிதுங்க !' நான் என்ன தான் செய்ய?"  மகியின் மடியில் கிடந்த வாக்கிலே தன் வேதனைகளைச் சொன்னான் எகா.


" இப்போ எல்லாம் பசங்களுக்கு பொண்ணே கிடைக்க மாட்டிங்கிது விஷ்ணு ! அதுவும் என் கிளாஸ்லே பசங்க தான் அதிகம் பொண்ணுங்க ரொம்ப கம்மி. இப்படியே போனா, நமக்கு நாமேன்ற பாலிஸி போல, என்னை நானே  கல்யாணம் பண்ணிக் கிட்டா தான் உண்டு. நினைச்சி பார் எகாந்த் வெட்ஸ் எகாந்த்... நல்லா இருக்கும்ல  " என கையை நீட்டிச் சொல்ல, இருவருக்கும் சிரிப்பை அடக்க வெகு நேரமானது.


"மகி சிரிக்காத, மாமே யூ டூ  சிரிக்கற ! ஒரு பையன் மனசு ஒரு பையனுக்கு புரிய வேண்டாமா ?  இப்படி சிரிச்சி உன் ஜூனியரான என்னை அவமான படுத்தலாமா?" என நியாயம் கேட்டான்.


"சரிடா மருமவனே !  சிரிக்கல  உன் ஆதங்கம் எனக்கு புரியது. தனி ஒருவனுக்கு பொண்ணு இல்லேனா இந்த ஜகத்தையே அழிச்சிடுவோம் டா மருமவனே என்ன சொல்ற?" ஆவேசமாகப் பொங்குகிறேன் என்று காமெடி செய்தவரை முறைத்தவன், " எல்லாத்தையும் அழிச்சி சொர்க்கத்துல போய் பொண்ணு தேடச் சொல்றீயா? போ மாமே !" என சலித்து கொண்டான்.


இங்கே இவர்கள் பேசிக் கொள்ள, வண்டியை நிறுத்தி வைத்து விட்டு உள்ளே நுழைந்தாள் வைஷு. ஒரு கையில் தன் பேக்கையும் மறுகையில் வளைகாப்பில் கொடுத்த சிறு கிண்ணம் சாக்லேட் வெத்தலைப் பாக்கு கொஞ்சம் கண்ணாடி வளையல் கொண்ட மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள், ஹாலில் கண்ட காட்சியில் இடுப்பில் கை வைத்து முறைத்தவள்" யோவ் எகா மாமே !  உன் டைம் முடிஞ்சு கீழ இறங்க இனி அது என் பிளேஸ்" என்றாள் அன்னை , தந்தை மடியைக் காட்டி.


தலையை நிமிர்த்தி பார்த்தவன், அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல்  இன்னும் வாகாகப் படுத்துக் கொண்டான் எகாந்த். அதில் கோபம் கொண்டவள், " எப்பா காலகாலத்துல இவன ஒருத்தி கையில பிடிச்சி கொடுத்து பொண்ணு வீட்டுக்கு  அனுப்பாம, உன் மருமவன மடியில போட்டு கொஞ்சிட்டு இருக்க ?" எனக் கத்தினாள்.


"இவ்வளவு நேரம் இவன் கிட்ட   அதான்டா  புலம்பிட்டு இருக்கேன். பிடியே கொடுக்க மாட்டிக்கிறான் !  என்ன  தான் இவன பண்ண?" 


"ம்ம்ம்..  பொண்ணே கிடைக்காத அறிய வகை ஆண் ஜந்துனு ஜூல,  மியூசத்துல  இவனை வச்சி  ஒரு போர்ட் வைங்க ! அப்பயாவது யாராவது  பரிதாபப்பட்டு பொண்ணு கொடுக்கறாங்களா பார்ப்போம் " என்று அவனை மரண பங்கம் செய்ய, " அடிங்கு .... " அவளை அடிக்க துரத்த அவனுக்கு போக்கு காட்டி ஓடிவிட்டு, இவள் வந்து மடியில் படுத்துக் கொண்டாள். 


அவள் படுத்ததும் இல்லாமல் வக்கனை வேறு வைக்க, கையை முறுக்கினான்."வலிக்குது தடியா விடுடா ! " அவளை கத்த விட்டு தான்  விடுவித்தான்.


" ரெண்டுக்கும்,  எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கோம் நினைப்பு இருக்கா? பாரு இன்னமும் குழந்தை போல சண்டைப் போடுதுங்க"விஷ்ணு செல்லமாய் கடிந்துக் கொள்ள,


" யப்பா ! நாங்க வளர்ந்தாலும் உனக்கு குழந்தைங்க தானே ! அதான் எங்க பெத்தவங்க கிட்ட குழந்தையா இருக்கோம் என்ன எகா?"


"ஆமான்டி, மாமே என்ன தான் நாங்க வளர்ந்தாலும் உங்க கிட்ட குழந்தையா இருந்து சேட்டை பண்ண தான் தோணுது மாமே !" என்று அவர் மடியில்  வைஷு காலை உரசியபடியே தலை வைத்தான்.


"இன்னைக்கு என்ன ஃபங்க்ஷன் வைஷு?"  அவள் கொண்டு வந்ததை பார்த்து விட்டு கேட்டார் மகிழ்

" வளைகாப்புமா ! "  என்றவள் அங்கு நடந்ததைச் சொன்னாள்.



"இப்போ தான் என்னை பொண்ணு பார்த்துட்டு போனது போல இருக்கு அதுக்குள்ள வளைகாப்பே வச்சிட்டான். என்னா ஃபார்ஸ்ட் இல்ல" எனக் கேட்க,, விஷ்ணுவும் மகிழ்மதியும் தலையில் அடித்துக் கொண்டனர்.


அவள் காலை பற்றி இழுத்தவன், "தெரியுதுல... அப்றம் ஏன் கல்யாணத்துக்கு ஓகே சொல்ல மாட்டிக்கற? எவன் வந்தாலும் உன் லட்சியம் கனவுனு கழுத்தறுத்து ஓட வைக்கிற  நீ ! எத்தன காலம் ஆனாலும் உன் டிமெண்ட் அக்சப்ட் பண்ணிக்கிறது போல பையன் வரமாட்டான் அவன் குடும்பமும் ஒத்துக்காது.  முக்கியமா பையனோட  அம்மா ஒத்துக்க சான்ஸே இல்ல ! நீ மார்ட்ன் ஒவ்வை தான் "என்றான்.


"மாமே ! எல்லாருமே அம்மா பையனா தான் இருப்பாங்கனு சொல்ல முடியாது ! ம்ம்  எவனாவது அம்மா பேச்சை கேட்காம  சுயமா முடிவெடுக்கறவனும் இருப்பான் அதுவும் எனக்காக பொறந்திருப்பான். அப்படி எவனும் இல்லேனு வையேன் உன் கூடவே  நானும் ஒரு சன்னியாசியா இருக்கேன் மாமே ! ரெண்டு பேரும் தனி உலகம் படைக்கிறோம் நம்மல தேடிவர ஃபிகரு கூட அஜால் குஜால் இருப்போம்" என கேலி செய்ய, அவள் கையை வலிக்காமல் திறுகினான். மீண்டும் அவர்கள் சண்டைப் பிடிக்க, இளையவர்களின் கூத்தியில் பெரியவர்கள் இருவரும் இணைத்துக் கொண்டனர்.



மகிழ்மதி விஷ்ணு தம்பதியரின் ஒரே சொத்து வைஷ்ணவி தான். எகாந்த் விஷ்ணுவின் அக்கா பையன் . அவனது பெற்றோர்கள் இருவரும் இறந்து விட சிறு வயதிலிருந்தே அவனை இவர்கள் தான் பார்த்து பாசமாக வளர்த்துக் கொண்டிருந்தனர்.


விஷ்ணு டிபார்ட்மென்ட்ல ஸ்டோர் வைத்திருக்கார் அவருக்கு துணையாக மகிழ்மதியும் உடனிருந்து பார்த்துக் கொள்கிறார்.. எகாந்த்,  கேட்டிரீங் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறான். வைஷு போட்டோகிராப்பராக  இருக்கிறாள். தங்கள் எல்லைகள்  , பொறுப்புகள் அறிந்து வளர்ந்த பிள்ளைகள். நண்பர்களாய் பழகும் பெற்றோர்கள் என அழகான சிறு குடும்பம்.



"சரஸ்வதி,  இன்னும் ஏன் இந்த முகத்த தூக்கி வச்சிட்டே இருக்க? நல்ல தான் இர்றேன்" என்றார் பிரபு. "இல்லங்க அந்த அடங்கா பிடாரி தான் மூளைக்குள்ள உட்கார்ந்துட்டு சதி பண்றா?" பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார் .


"எதுக்கு நீ அந்தப் பொண்ணு நினைச்சிட்டு இருக்க? அந்த பொண்ணுக்கு நமக்கும் எந்த சம்மந்தமும் இல்ல ! இனி  நீ அவளைப் பார்க்க போறதும் இல்ல. ஏன் வீணா யாரோ ஒரு பொண்ண நினைச்சி உனக்கு நீயே பிரஷர் ஏத்திக்கிற?"



"ஆமாங்க அவளை ஏன் நான் மறுபடியும் பார்க்க போறேன்... ஆனாலும் என் மண்டைக்குள்ள உட்கார்ந்து இருக்காளே ஆனாங்க அந்த மாதிரி பொண்ண நம்ம வீட்டு மருமகளா எடுக்கல ! இல்ல என் நிம்மதியே போயிருக்கும்... இது யார் வீட்டுக்கு மருமகளாக போய் யார் நிம்மதியை கெடுக்க போகுதோ !" எனப் புலம்ப,.


"அது சத்தியமா நம்ம வீடா இருக்காது ! என்னா  நமக்கு இருக்க ஒரே பையனுக்கும் கல்யாணம் முடிச்சாச்சி இனி நீ யாருக்கு போய் பொண்ணுப் பார்ப்ப !"


"என்ன இப்படி சொல்லிட்டீங்க ? என்  சைத்துக்கு நான் தான பொண்ணு பார்க்கணும்... அவன் என் பேச்சை மட்டும் தான்  கேட்பான் . அவனுக்கு முதல்ல நான் தான். அடுத்த தான் என் தங்கச்சி ! அவனுக்கும் நம்ம தான முன்னாடி எல்லாம் செய்யணும்" என்றிட பிரபு பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.


"அவனுக்கு ஏன் நீ பொண்ணு பார்க்க? அதான் நம்ம மருமக பிரவஸ்தி இருக்காளே, எதுக்கு நீ வெளிய தேடற?" 


"அதை தான் சொல்றேன்... இந்த அகல்யா பிடியே கொடுக்க மாட்ற? மகளுக்கு இப்போ கல்யாணம் வேணாமா? காலகாலத்துல பொம்பளை பிள்ளையா காட்டிக் கொடுக்க வேணாம்... என் தம்பி இருந்திருந்தா என் பேச்சை   கேட்டு உடனே கல்யாணத்தையே முடிச்சிருப்பான்.  அவன் இல்லாதனால இப்படி ஆடுறா ! சீக்கிரமா இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்" என்றிட, 


' இது  திருந்தாது இதுக கூடப்பொறந்ததும் திருந்தாதுங்க, பாவம் இந்தக் குடும்பத்துல வாக்கப்பட்ட  நாங்களும்' என மனதுக்குள்  புலம்பிக் கொண்டார்.


மறுநாள் வியாழக்கிழமை அரசாங்க விடுமுறை நாளாக இருக்க, காலை நேரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான் எகாந்த்.  வேலைக்கு செல்ல கிளம்பி வந்த வைஷு அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.


"மகி, நான் கோயிலுக்கு போறேன் வந்து சாப்டுகிறேன்" எனக் கத்தினான், "எது கோவிலுக்கா ? என்ன  மாமே புதுசு புதுசா பண்ணுது? இரு கண்டுபிடிக்கிறேன்... ' என்றெண்ணியவள், "அம்மா எனக்கு முக்கியமான வேலை  இருக்கு நான் கிளம்புறேன் லஞ்சுக்கு வந்திடுறேன்" என்று அவளும் அவன் பின்னே சென்றாள்.


"இதுங்களுக்கு வேலா வேலைக்கு எந்திருச்சு செய்றேன்ல எனக்கு தேவைதான்" என்று முணங்கிக் கொண்டார்  மகிழ்.


அவன் வண்டியை எடுக்க, அவள் பின்னே ஏறி அமர்ந்தாள். "என்னடி?" அவள் புறம் திரும்பி கேட்டான்.


" வண்டியில பெட்ரோல் இல்ல" என்றாள் தோளைக் குலுக்கி. " சரி நான் பஸ் ஸ்டாப்ல இறக்கி விடுறேன். நீ ஆட்டோல போயிடு ! " என்று மீண்டும் ஒரு உதை உதைக்க வண்டி ஸ்டார்ட்டானது. 


"நானும் கோவிலுக்கு வர்றேன்" சத்தமில்லாமல் குண்டைத் தூக்கிப் போட, " எதுக்கு?" என அலட்டிக் கொள்ளாமல் கேட்டான், " கொஞ்சம் போட்டோஸ் எடுக்கணும்" என்றாள்.' சரி வந்து தொல' என்று முணங்கிக் கொண்டான்.


வண்டியை நிறுத்தி விட்டு ,கோவிலுக்குள் நுழைந்தவன் செக்கிங் முடித்து உள்ளே சென்றான்.  தன் ஐடியை காட்டி  உள்ளே வந்தவள் பணம் கட்டி புகைப்படம் எடுக்க ரசித்து  வாங்கி  விட்டு உள்ளே நுழைந்தாள். மீனாட்சியையும் சொக்கரையும் வழிப்பட்டவர்கள் கோவில் வளாகத்தில் நடக்க, அவளும் போட்டோ எடுத்த படி வந்தாள்.


"சரி நீ போட்டோ  எடு நான் பிரசாதம் வாங்கிட்டு வரேன்"  என்று நழுவிக் கொண்டான்.அவனை சிரிப்புடன் பார்த்து விட்டு நடந்தவாறே போட்டோ எடுக்க அவள்  கண்ணில் சிக்கியது அந்த ஆடும் மயில் 


தோகையில்லா  பெண் மயில் தன் உடலை வளைத்து ஆட,  அதைக் கண்டு மெய் மறந்து பார்த்திருந்தனர்  அம்மயிலவளின் குட்டி குட்டி மாணவர்களும் , அப்பக்கம் செல்லும் பக்தர்களும். அதில் ஒருவனாக 

ஒரு பக்கத் தூணில் சாய்ந்துக் கொண்டு அவள் நடனத்தையும் அவளையும் ரசித்துக் கொண்டிருந்தான்  எகாந்த்.


அவனுக்கு எதிர்புரமாக நின்றிருந்த  வைஷுவின் கேமிராவில் அவன்  விழ, அவன் பார்வை செல்லும் இடத்தை ஜூம் செய்து பார்த்தாள் பிரவஸ்தி தன் மாணவர்களுக்கு நடனம் சொல்லிக் கொண்டிருந்தாள்.


'ஆத்தி !! இதென்ன காதல் பார்வையால இருக்கு. பையன்  இந்த மயிலோட ஆட்டத்தில விழுந்துட்டானோ. ஐயோ இனி பைத்தியமால அழைப்போறான்' என எண்ணியவள், பிரவஸ்தியைப் போட்டோ பிடித்தாள்.


பிரவஸ்தியின் கவனம் நடனத்தில் இருந்தது. வைஷு அவளைப் புகைப்படம் எடுத்தாள். வழக்கமா சட்டை பேண்டுடன் வந்தவள், மாஸ்க்குடன் வெயில் என்பதால் தலையில் கைகூட்டையையும் அணிந்து கண்கள் தெரிய முகத்தை மறைத்திருந்தாள். அவளை பின் பக்கமிருந்து பார்த்தால் ஒரு ஆணைப் போல தெரிந்தாள். 'வஸ்தியை ஒரு ஆடவன் புகைப்படம் எடுக்கிறான்' என்று எண்ணிக் கொண்டு வைஷு பின்னே வந்து அவள் அசந்த நேரம் அவளது ஒரு கையை பின்னால் மடித்து கேமராவை பிடிங்கினான்.


"ஏன்டா நாயே பப்ளிக் பிளாஸ் பெர்மிஷன் இல்லாமல் ஒரு பொண்ண போட்டோ வா எடுக்கற ?  இருடா உன்னை  போலீஸ கூப்பிட்றேன் " மேலும் ஒற்றைக் கையை முறுக்கினான்" ஆஆஆ...." என  அவள் வலியில் கத்த வஸ்தியும் அரவம் கேட்டு அருகே ஓடி வந்தாள்.


தன் இன்னொரு கையை வைத்து , தன் முக  கவசத்தையும் தலையிலிருந்த  கைகுட்டையையும்  விலக்கியவள்" நானும் பொண்ணு தான் விடுயா?"என கர்ஜித்தாள்

"பொண்ணா ! " என தன் நெஞ்சில சாய்த்திருந்த அவளை பாட்டென விட்டான்.


கை வலி உயிரே போனது, கையை உதறியவள் அவனை கொலவெறியோடு முறைத்தாள் . " என்னாச்சி சைத்து யாரிது?"  என பிரவஸ்தியும் வர, " சைத்து இல்ல ஷைத்தான்... அப்பா என் கைய முறுக்கிட்டான்" என்று வஸ்தியிடம் முறையிட்டாள்.


"பின்ன போட்டோ எடுத்த கைக்கு முத்தம் கொடுத்து பாராட்டனுமா? பெர்மிஷன் இல்லாமல் எப்படி நீ போட்டோ எடுக்கலாம்?" 


"பெர்மிஸ்ஸனோட தான் போட்டோ எடுத்தேன்..." என்று டிக்கெட்டை கட்டினாள் "நான் அத  கேட்கல,  இவ கிட்ட  பெர்மிஷன்  கேட்டா நீ போட்டோ எடுத்தனு கேட்டேன்?" என்றதும் அவள் உதட்டை பிதுக்கி தலையை இடதுவலமாக ஆட்டினாள் வஸ்தியைப் பார்த்தவாறு, வைஷுவின் குழந்தை முகம் பார்த்து வஸ்திக்கு கோபம் வரவில்லை மாறாக புன்னகை வந்தது..


"நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க, என் கேமராவும் என் கண்ணு  உங்களை போட்டோ எடுக்க ரொம்ப ஃபோர்ஸ் பண்ணச்சி அதான் எடுத்துட்டேன். இஃப் யூ டோன்ட்  மைண்ட், ப்ளீஸ் இந்த போட்டோஸ் எல்லாம் ப்ரிண்ட் போட்டு தரட்டுமா ! மணி எல்லாம் கொடுக்க வேண்டாம். உங்களுக்கு பீரி தான். அண்ட் நான் ஒரு பொண்ணு, ஐ கனோவ் ஒரு பொண்ணோட போட்டோ சோசியல் மீடியால வந்தா  என்னாகும் எனக்கு தெரியும். பட் ஐ ஸ்வீர்  நான் அப்படி பண்ண மாட்டேன். உங்க அட்ரஸ் கொடுத்தால் போதும் நானே ஃபிரேம் போட்டு தருவேன்... நீங்க என்ன சொல்றீங்க? அண்ட் இது ஒரு விதத்துல ப்ரோமோசன் கூட நினைச்சிங்க... ஏன்னா சப்போஸ் நீங்க அரங்கேற்றம் பண்ணும் போது போட்டோ எடுக்கணும்னா எங்க வொர்க் பார்த்து கூப்பிடுவீங்கனு ஒரு சின்ன ப்ரோமோசன்... ஸோ ஒன் ஸ்டோன் டூ மேங்கோஸ்"என்று சொல்லி வழிந்திட, எனோ அவளது பேச்சு வஸ்தியை கவர்ந்தது.


"ஏய் என்ன விட்டா பேசிட்டே போற? பெர்மிஷன் இல்லாம ஏன் போட்டோ எடுத்தனு கேட்டா? ஏதேதோ பேசி அவளை மடக்கிட்டு இருக்க. வஸ்தி இது தப்பு அவளை டெலிட் பண்ண சொல்லு" என்றான் வைஷு முறைத்துக் கொண்டு.


"பச் யார் மேம் இது? உங்க ஹஸ்பண்ட்டா?" 


"இல்லல்ல  இவன் என் கசின் சைதன்யா !" என்றாள். "ஷைத்தானா?"என வாய்விட்டுக் கேட்க, அவளோ பக்கென சிரித்துவிட்டாள். 

"ஏய் ...." என அவன் நெருங்க, "கூல் கூல் பாஸ் காதுல அப்படி தான் விழுந்தது "என்றாள் இரண்டடி பின் சென்று.


"வஸ்தி, இவ கிட்ட என்ன பேச்சு? டெலிட் பண்ண சொல்லிட்டு வா போகலாம்" என்றான் கடுமையாக, "மேம் நீங்க போட்டோவ பாருங்க, நல்லா இல்லேனா நானே டெலிட் பண்ணிடுறேன்" என்ற அவள் கேமராவை கொடுக்க,  வாங்கி பார்த்தவள், "நானா?" என்றே வியந்து பார்த்தாள். இயற்கை அழகை உரித்தாக்கி இருந்தது அந்தப் புகைப்படம், "சைத்து இதை பாரேன்..." என்று அவனிடமும் காட்ட கோபத்தை மறந்து வியந்து பார்த்தான். 


"ரொம்ப அழகா இருக்கு" என மீண்டும் வஸ்தி சொல்ல, "அவ எப்பயும் இப்படி தாங்க அழகா இருக்கிற எல்லாத்தையும் எல்லாரையும் போட்டோ எடுத்திடுவா !"என்று அங்கு வந்த எகாந்த் வைஷுவை பாராட்டுவது போல பிரவஸ்தியை '  அழகு ' என்றான். சட்டென அவள் முகம் செக்கரை பூசிக் கொள்ள, சைத்துவோ அந்நிய ஆணவனை கண்டு புருவம் சுருக்கினான்.

'அடப்பாவி மாமே ! நல்லாவே பளர்ட் பண்றான். இவனும் சீக்கிரமா கல்யாணம் முடிச்சிடுவானோ' என்று சந்தேகமாக இருவரை பார்த்தாள்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1