Amazon _ Short stories

 தளைந்தேன் உன்னில் எம்மயிலே 



மயிலு என்கிற மயிலினி பெண்ணிற்கு, தன் ஆசை வளர்க்கற அழகேந்திரன் என்கிற காளையை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல எந்த வீரர் அடக்குகிறானோ அவனை தான் கட்டுவேன் என்று நிற்க , கால் நடை மருத்துவராக அவ்வூருக்கு வரும் மாதவன என்கிற மாட்டு டாக்டரு, காளையை அடக்கி மயிலுவை எப்படி கரம் பிடிக்கிறான் என்பதே கதை  ஏழு அத்தியாயங்கள் கொண்ட குறுநாவல்


தளைந்தேன்_உன்னில்_எம்மயிலே


மண்ணிலே ஈரமுண்டு




காதலித்து வீட்டை விட்டு ஓடி வந்து  கல்யாணம் செய்து கொண்டவள் தினமும் சந்தேகம் பொண்டு  புருஷனிடம் அடி வாங்கியே  வாழ்க்கைய ஓட்ட, ஒரு நாள் கணவன் குடித்து விட்டு லாரியில்  அடிப்பட்டு இறந்து வி,  கணவன் வீட்டிலிருந்து வந்தவர்கள் வாரிசுக்காக அவளது பிள்ளைகளை தூக்கிக்  கொண்டு போக, தனியா போராடி தன் குழந்தைகளை மீட்க நினைக்கும் ஒரு பெண்ணின் கதை ! 12 அத்தியாயங்கள் உள்ள  குறுநாவல்


மண்ணிலே_ஈரமுண்டு


 நதிப்போலொரு வழிப்பயணம்




தன்னுடைய அப்பாவிற்காக வாடகை தாயாகும் மகள்,  ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு வந்தாலும் தன் சூழ்நிலை எண்ணிக் கனவை துறக்கிறாளா?  கலந்துக் கொண்டு ஜெயிக்கிறாளா?

ஐந்து அத்தியாயங்கள் கொண்ட கதை.



நதி_போலொரு_வழிப்_பயணம்

கண்ணம்மா :




பல வீடுகளில்  வேலை செய்து தன் பிள்ளைகளை வளர்க்கும் கண்ணம்மா என்கிற பெண்ணின் கதை . வேலை செய்யும் இடங்களில் அவள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து போராடி மீண்டும் வரும் தைரியமான பெண்ணின் கதை

கண்ணம்மா

ஆசான் :



தன் மகன் செய்த  தவறால பள்ளி மாணவி பாதிக்கப்பட, அம்மாணவிக்காக தவறு செய்த மகனை கைது செய்ய கோரும் ஆசிரியரின் கதை...

ஐந்து அத்தியாயங்கள் கொண்ட  குறுநாவல்.

ஆசான்


மனம் திருந்தினால் (ள்) :




' இவனா ஐயோ எத்தனை  முறைதான் இவன் கிட்ட சொல்லுறது கேட்கவே மாட்டான் போல ' என்று நினைத்தவள்.


அவனை பார்த்தும் பார்க்காதவாறே அவனைக் கடத்து செல்ல வேகமெடுத்தாள். அவனோ வழி மறித்து நின்றான்.


" என்ன தாங்க வேண்டும் உங்களுக்கு? ஒருமுறை  இரண்டு முறை இல்லை பல முறை சொல்லிட்டேன். எனக்கு காதலிக்க நேரமும் இல்ல கல்யாணம் பண்ணிக்க ஆசையும் இல்லன்னு. ஏன் திரும்ப திரும்ப வந்து டார்ச்சர் பண்ணுறீங்க?


இதுல வீட்டுல கல்யாணம், பேச பெண் பார்க்க வேற வர்றீங்க .இதுக்கு மேல தெளிவா எப்படிங்க சொல்லி புரியவைக்கனும்  சொல்லுங்க.


ப்ளீஸ் என்னை, விட்டுங்க. எனக்கு என் வீட்டுச்சுமையே அதிகமாக இருக்கு. இதுல இன்னொரு வீட்டுச் சுமையே என்னால ஏத்துக்க முடியாதுங்க, என்னை விட்டுடுங்க..." என்று கையெடுத்து கும்பிட்டாள் நேத்ரா.


" நேத்ரா நான் சொல்லுறத கேளு. ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, கண்டிப்பா உன் சுமைய நான் பாதியா ஏத்துகிறேன். நான் உன்கூட கண்டிப்பா உறுதுணையா இருப்பேன்.

வேணான்னு சொல்லதா நேத்ரா.

நான் உன்னை ரொம்ப வருசமா காதலிக்கிறேன்..

உன்கூட வாழனும் ஆசைப்படுறேன் ப்ளீஸ்  அண்டர்ஸ்டான்ட் நேத்ரா" அஜய் கெஞ்சினான்.


" சாரிங்க, என்னோட சுமைய நான் தான் குறைக்கனும் இன்னொருத்தர் தலையில கட்டிட்டு என்னால சந்தோசமா இருக்க முடியாது. எனக்கு என் குடும்பம் மட்டும் போதும் இன்னோரு குடும்பத்த ஏத்துகிட்டு என் குடும்பத்த கஷ்டத்துல விட முடியாது.

இனியும் என் பின்னாடி வராதீங்க"  என்றவள் வேகவேகமாக அவன் அழைப்பதையும் மறுத்து சென்றுவிட்டாள்.


***


" டேய் அவங்களே, இந்த தொழிலை இஷ்டப்பட்டு செய்றாங்க. என்னமோ நான் வற்புறுத்தி அவங்கள வர வச்ச மாதிரில பேசுற!

எனக்கு இந்த சுகம் தேவைப்பட்டது அதுனால நான் கூப்பிட்டேன். இவங்க இஷ்டப்பட்டு வந்திருக்காங்க. இதுல என்ன இருக்கு?"


" டேய் நாம மிருகம் இல்லடா,

ஆறறிவு கொண்ட மனுசங்க. பகுத்தறிவு கொண்ட மனுசங்கடா நாம!


ஒருத்தருக்கு ஒருத்தின்னு வாழும் கலாச்சாரம் கொண்ட நாட்டுல வாழ்றோம்.


உன்னை நம்பி வர பொண்ணுக்கு நீ பண்ற துரோகம் இது.


ச்ச இதே போல அவளும் யாருக் கூடயாவது இருந்துட்டு வந்தா ஏத்துப்பீயா டா நீ?!


அவங்க இஷ்டப்பட்டு வராங்கன்னு, உனக்கு தெரியுமாடா?

வாய் கூசாம அவங்கள ஐட்டம் சொல்றீயே! அத சொல்றதுக்கு முன்னாடி அவங்க ஒரு பொண்ணு நினைச்சி மதிச்சா, அப்படி ஒரு வார்த்தை வருமாடா உன் வாயில ? " 


" டேய் அவங்க ஐட்டம் தானே டா... என்னை விட எத்தனையோ பேருகிட்ட போயிட்டு வந்தவங்க தானே! அவங்கள என்ன பத்தினினா அழைக்க சொல்ற! " என்றவன் கேலி செய்தான்.


" ஓ,.. அப்ப அவங்க பலர் பேருகிட்ட போயிட்டு வந்தா அவங்க பெயர்

ஐட்டம்.


சரி உன் சுகத்திற்காக இந்த மாதிரி கூப்பிட்ற உன்னையும் ஐட்டம் பெயர் வச்சு கூப்பிடலாமா?"அஜய் கேட்டிட 


கோபத்தில்  அவனது சட்டையைப் பிடித்தான் கிஷோர்.


மனம் திருந்தினால் ( ள்)


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2