வரன் - 20

 



குடங்களை வைத்துக் கொண்டு மேல் ஐயனார்  தெரு மக்கள் அனைவரும் ஆரனின் அலுவலகத்துக்கு  முன் அமர்ந்து " தண்ணீ வேண்டும் தண்ணீ வேண்டும்" என்று கோஷமிட, அக்கூட்டத்தை  காத்தவராயனும்  ஊராட்சி தலைவர் மந்தவராயனும்  தலமைத் தாங்கினார்கள்.

காலை வேளையாக அப்போது தான்  அலுவலகம் வந்த ஆரன். மந்தவாரயன் திட்டம் அறிந்து புன்னகையுடன்  உள்ளே வந்தான்.


தன் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்களை பொருட்படுத்தாது தன் வேலையைத் தொடங்கி விட்டான். " தம்பி" என கணேசன் இழுக்கவும், " விடுங்கண்ணே பார்த்துக்கலாம்... ஒரு மூணு நாள் தண்ணீ இல்லேனதும் போராட்டம் பண்ணுறானுங்களே. ஆறுமாசமா உடைஞ்ச குழாய், அதுல வர கொஞ்சோண்டு தண்ணீ பிடிச்சி வாழற மக்கள பாவம் இல்லையா? எல்லாம்  தெரிஞ்சும் இந்த மக்கள் அவங்களுக்கு பாவம் ஒண்ணும் பார்க்கலியே ! சுயநலமா தானே இருக்காங்க, நாமளும் இருப்போம்ண்ணே, அப்பவாது உரைக்குதானு பார்ப்போம்" என்று வேலையைக் கவனிக்கலானான் 


அவர்கள் கத்திக்கொண்டிருக்க, அங்கே கூடிய கீழத் தெரு மக்கள் அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர்.


"டேய்  சுரேஷு ! நமக்கே தண்ணீ நல்லா தான் வருது. வீட்டுக்கு வீடு கொழா இருக்கிறவனுங்களுக்கு தண்ணீ வராதா டா. எதுக்கு டா இங்கன வந்து கூவிட்டு கிடைக்காய்ங்க?" 


"மாப்ள ! உனக்கு விஷயந்தெரியாதா? நம்ம ஆரன் தம்பி இருக்குல, அது நமக்கு மட்டும் தண்ணீ திறந்து விட்டுட்டு மேல தெரு மக்களுக்கு தண்ணீ விடாம மூணு நாளா முடக்கி வச்சிருக்கு.  அதான் தண்ணீ வேணும் அவிக போராட்டம் பண்றாணுங்க"


"ஏன் அந்த தம்பி இப்படியெல்லாம் பண்ணுது?"


"எல்லாம் நமக்கு தண்ணீ கிடைக்கத்தான்  மாப்ள!" என்றான் அவன். " பரவாயில்ல அப்படி வீட்டுக்கு வீடு கொழா வந்தா நல்லது தான் மாப்ள ! தண்ணீ தூக்கச் சொல்லி என் பொண்டாட்டி இடிக்கறா மாப்ள" அவன் கஷ்டத்தைச் சொல்ல, கேட்டு கொண்டவனுக்கும் அதே இடிபாடு தான். பதினோரு மணியளவில் அவனுக்கு டீயும் வடையும்  வர,இங்கோ மக்கள் வெயிலில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.  அவர்கள் முன்னின்று டீயும் வடையையும் தின்று விட்டு மீண்டும் வேலையைப் பார்த்தான்  அவனது செயலிலும் வெயிலின் தாக்கத்திலும் உஷ்ணமேறி கொதிநிலையில் அமர்ந்திருந்தார்  மந்தவராயன்.


அவர்தான் இந்தக் கூட்டம் கூடவே காரணமானவர்.  ஆரனின்  மிரட்டலுக்கு பயந்தாலும், உடனே அவனது திட்டத்துக்கு அடிபணிந்து விட்டால், நம் பயத்தை உறுதிப் படுத்திக்  கொண்டு தன் பயத்தை வைத்தே ஆடுவான்

என்று எண்ணித் தான், மேலத் தெரு மக்களை அவன் அலுவலகத்தில் முன் போராட்டம் பண்ணச் சொன்னார்.

அவர்கள் போராட்டம் செய்தால் நிச்சயம் விஷயம்  மாவட்ட ஆட்சியர் வரைக்கும் போகும் அவனை சத்தம் போட்டு விட்டு தண்ணீரை திறந்து விடச் சொல்வார் அவனும் திறந்து விடத் தான் வேண்டும், தன்னிடம் அவனது பாட்சா பழிக்காது  என்று எண்ணி தப்பு கணக்கை போட்டு கற்பனைக் கோட்டை  எல்லாம் கட்டி வைத்து சிம்மாசனமிட்டு அவர் அமர, அந்த சிம்மாசனத்தில் இருந்து  அவரை எழுப்பி விட்டு அவன் அமர போகிறான் என்று அறியாமல் ஜாம்பமாக இருந்தவர். அவன் நடந்துக் கொள்ளும் முறையே கண்டு கொஞ்சம் அடித்தான் போனார்.


அதுவும் வேளாவேளைக்கு  டீ வடை சாப்பாடு என அவன் எடுத்துக் கொண்டு தங்களை எல்லாம்  வாயில்லா ஜீவனாக கூட பாராமல் கல்லையும் மண்ணையும் போல பார்த்து விட்டு  தன் வேலையை பார்ப்பவனை என்ன செயவதென்று தெரியவில்லை. மந்தவராயனுக்கு காத்தவராயனுக்கும் வயிறு, சாப்பாடு கேட்டு கூப்பாடு போட, எழுந்து போய் நேரம் கடந்து வந்தால் தவறாக  மக்கள் தங்களை நினைப்பார்கள் என்று அமர்ந்த வாக்கிலே வீம்பாக இருப்பது போல  அமர்ந்திருந்தனர். மாலையானது வேலை முடிந்து வெளியே வந்து அலுவலகத்தைப் பூட்டிக்  கொண்டு கணேசனும் ஆரனும் செல்ல, கூட்டத்தில் ஒருத்தன்.."நாங்க இங்க வெயிலு மழைனு பார்க்காம புள்ளை குட்டியோட நின்னா நீர் பாட்டுக்கு உம்ம வேலைய பார்த்துட்டு போறீரு ! அப்போ எங்க போராட்டத்துக்கு என்னா தான் தீர்வு ?"என ஆவேசமாக கேட்க மக்களும் எழுந்து நின்று மீண்டும் கத்த ஆரம்பித்தனர்.


கையை உயர்த்தி அவர்களை அமைதி படுத்தியவன், "இந்தக் கேள்விய கேட்க இவ்வளவு நேரமா?  அப்பவே கேட்டா பதில் சொல்லிருப்பேனே !" என்றவனை  கண்டு மக்கள் ஆ வென  வாயைப் பிளக்க, காத்தவாராயனும் மந்தவராயனும் அவனை வெட்டவா? குத்தவா? என்ற ரீதியில் பார்த்தனர்.


"உங்க போராட்டத்துக்கான தீர்வு உங்க

ஊராட்சி தலைவர்  கையில தான்

இருக்கும் அவர் மனசு வச்சா உங்களுக்கு தண்ணீ கிடைக்கும்" என்றவன் கொழுத்திப் போட, அனைவரின் பார்வையும் மந்தவாராயன் பக்கம் திரும்பியது.


"தம்பி ! எம்ம மக்கள திசைத் திருப்ப பார்கிறீகளா ?  எம்ம மக்கள் எப்போது நியாயத்தின் பக்கம் தான் நிப்பாங்க... எங்களுக்கு தண்ணீ விடுவீங்களா?  மாட்டீங்களா?  நீங்க கண்டுக்கலனு சொல்லி கலெக்டர் ஆபிஸ் முன்னாடி போராட்டம் பண்ணுவோம்" என்றார்  நல்வரைப் போல.


"ஆஹான்... மக்கள் நியாயத்தின் பின்னாடி தான் நிப்பாங்களா? அப்போ நீங்க நியாயத்தின் மருவுறுவமா தலைவரே !" என நக்கல் செய்ய கொதித்தேழுந்தார்.


"தம்பி, இந்தக் நக்கல் நையாண்டி எல்லாம் உங்களோட வச்சுங்க. எங்களுக்கு  தண்ணீ விடுவீகளா? மாட்டீகளா?"


" அதான் சொன்னேன்ல நீங்க மனசு வச்சா தான்  உங்களுக்கு தண்ணீ கிடைக்கும்" என்றான்


"நான் என்ன பண்ணனும் ?"என்று கேட்டார் தியாகியை போல , ' இந்தக் கேள்விக்காக தானே இத்தனை நேரம் காத்திக் கொண்டிருந்தான்  ஆரன். 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை' என்ற வாக்கியத்தை மருத்துவரிடம் சொல்லும் போது அவருக்கு கிடைக்கும் ஆனந்தத்தை போல இருந்தது மந்தவராயன்  சொல்லும் போது ஆரனுக்கும்.

"வேற என்ன தலைவரே உங்க கிட்ட கேட்க போறேன், இங்க கீழ தெரு மக்களுக்கு நீங்க வீட்டுக்கு வீடு கொழா போட்டு தாங்க. நான் உங்கத் தெரு மக்களுக்கு தண்ணீய திறந்து விடுறேன்" என்று அவரது வாக்கை வைத்தே அவரை கைது செய்து விட்டான்.


"மூணு நாள்  தண்ணீ இல்லன்னு  போராட்டம்  பண்ணி குதிக்கிறீங்களே ! ரொம்ப வருஷமா உடைஞ்ச கொழாவோடவும் ஆறுமாசமா ஒழுகற தண்ணீ பிடிக்கற மக்களுக்கு எப்படி இருக்கும். ஏன் உங்களை போல அவங்களும் மக்கள் தான் அவங்க வேற்று கிரக வாசியா? இல்லேல அவங்களும் உங்களை போல உழைச்சி உண்டு வாழற உங்களை போல சதையும் ரத்தமும் இருக்கிற மக்கள் தான் உங்களுக்கு கிடைத்த  அரசாங்க சலுகை அவர்களுக்கும் கிடைக்கணும் நான் நினைக்கிறது தப்பா? இங்க காத்து தண்ணீ, ஆகாயம்  எல்லாம் பொதுனு எப்போ தான் உங்க மனசுக்கும் மூளைக்கும் உரைக்கும், உங்களுக்கு கிடைக்க  வேண்டியதை  தண்ணீ போராடி  வாங்கனும் நினைக்கற நீங்க, இந்த தண்ணீயோட தேவை அவர்களுக்கும் இருக்கும் ஏன் தோணல? சுயநலமா இருக்கலாம் ஆனா உங்களுக்குள்ள இருக்க மனித நேயத்தை  மறக்கிற அளவுக்கு சுயநலமா இருக்காதீங்க. இப்போ நீங்க அவங்களுக்கு கொழா போட்டு தந்தால் நானும் தண்ணீய திறந்து விடுவேன், இல்ல நீங்க கலெக்டர் ஆபீஸ் போய் போராட்டம் பண்ணுவேனு சொன்னாலும், தாராளமாக போகலாம். ஏன்னா அவருக்கு விஷயம் போயிருச்சி, என்னை என்ன வேணாம் பண்ண சொல்லிட்டார், அதிகாரம் இப்போ என் கையில். ஊர் தலைவர் மனுசு வைச்சா உங்களுக்கு தண்ணீ இல்லேன்னா "என்று தோளை குலுக்கி விட்டுத் தன் வேலையை முடிந்து விட்டது போல அவன் சென்று விட்டான்.

அவன் சென்ற பின் மக்களின் கவனம் முழுக்க முழுக்க மந்தவராயன் பக்கம் திரும்பியது. 


"தலைவரே ! அந்த தம்பி சொல்றத செய்ஞ்சி சீக்கிரமா தண்ணீய தொறந்து விடுங்க... தண்ணீ இல்லாம நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம், எத்தனை நாளைக்கி உப்பு தண்ணீல சோறாக்கி திங்க, சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க தலைவரே ! " எனக் கூடத்தில் ஒருவன் சொல்லிட, மற்றவர்களும் அதை ஆமோதித்து கோஷமிட்டனர்


"மந்தவாரயா ! கொழாவ போட்டு  பிரச்சனைய முடிவுக்கு கொண்டு வாயா ! இல்ல உம்ம அரசியல் வாழ்க்கைக்கு நீ வேட்டு வச்சிக்காத" என பெரியவர் ஒருவர் சொல்லிவிட்டு செல்ல, கூட்டமாக இருந்த மக்களும் களைந்து போனார்கள்.


"அண்ணே அவனால உங்கல என்ன செஞ்சிட முடியுமுண்டு  இந்தப் பெரிசு  எச்சரிச்சிட்டு போகுது ! அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா,   'உம்'ஒர் வார்த்தை சொல்லுண்ணே போட்டு தள்ளிடுறேன்ங்கறேன் அவன " வேட்டியை மடித்து கட்டி விறைத்து நின்றவனை முறைத்தவர்


"காத்தவராயா ! உங்கிட்ட எத்தனை முறை தாண்டா சொல்றது, இப்போதைக்கு அவன ஒண்ணும் செஞ்சிடாத, அது அந்தப் பெருசு சொன்னது போல தான் ஆகிடும் கொஞ்சம் அமைதியா கிட, என்னால இந்த பதவிய விட முடியாது . என் பதிவு முடியற போற காலம் வந்திடுச்சி, இந்த நேரம் நீ ஏதாவது  செஞ்சி ஆப்புகிப்பு வச்சிட்டாத வா !"என்றார். அண்ணன் அடங்கிச் செல்வதை புரியாது குழம்பி போனான் காத்தவராயன். ஆனால் அவரோ உள்ளே கொதித்து கொண்டிருந்தார், சிறு பொடியனிடம் தன் திமிர் , பதவி  என எதுவும் எடுபடாது போகவே ! அவனை அழிக்க முடியாத கையறு நிலையில் இருக்கிறார். அவனை வீழ்த்த காலத்தை எதிர்பார்த்து காத்திருக்க, அக்காலமும் விரைவில் இல்லை.


மறுநாளே, கீழத் தெரு மக்கள் வாய் பிளக்கும் அளவுக்கு அன்று காலையிலே ஆச்சரியமொன்று நிகழ்ந்தது. வேற என்ன கீழ தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கார்பிரேசன்  குழாய் அமைத்துக் கொண்டிருந்தனர். அதை கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன். ஏனோ அவனது  முதல் வெற்றியை முதல் படி கடந்தது போல இருந்தது. 


மக்கள் அனைவரும் ஆரனிடம் வந்து கையெடுத்து கும்பிட்டு நன்றி உரைக்க, மெல்ல முறுவலுடன் " நீங்க நன்றி சொல்லனும் அவசியம், இது தான் என்னோட வேலை அதை தான் செய்தேன். நன்றி சொல்லி பெரியவனா   ஆக்காதீங்க. நான் எப்பையும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கு சேவை செய்றவன் எப்பையும் என்னுடைய இந்த சேவை தொடரும்..." என்றவன் அடுத்து வேலையை பார்க்கச் சென்றான்.


வந்த மூன்று மாதத்தில் அம்மூர் மக்களின் மனதில் நின்றவன், ஏனோ மந்தவாராயனுக்கு காத்தவாரனுக்கும் மட்டும்  எதிரியாக தெரிந்தான். இந்தப் பிரச்சனை விடுத்து மேலும் நில ஆக்கிரப்பு பிரச்சினையில் காத்தவராயனுக்கு குடைச்சல் கொடுத்து அவனை  ஜெயிலுக்கு அனுப்பி வைத்தான். அவனும்  ஜாமினல் வெளிவந்து   ஆரனின் மேல் வன்மத்தை வளர்த்தான். அண்ணனும் தம்பியும் அவனை  அழிக்க  சரியான நேரம் கிடைக்க காத்து கொண்டிருக்கின்றனர்.


இதற்கிடையில், மேகாவின் பள்ளியில் டூர் அழைத்துப் போவதாக சொல்லிருந்தனர். இவளும் ஆசையாக ஆரனிடம் செல்ல அனுமதி கேட்டாள். ஆனால் அவனோ அதை வைத்து வேறு ஒரு கணக்கை போட்டு வைத்தவன், அவளுக்கு அனுமதி கொடுக்க மறுத்தான்.அவளும்  கெஞ்சிக் கொஞ்சி அனுமதி கேட்க, அவன் மறுக்கவே கோபத்தில் சண்டையிட, நிதானமாக தன் திட்டத்தை அவளிடம் சொல்ல, கொஞ்ச நாள் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த கள்வன் விழித்துக் கொண்டு பழைய மிளகாவாய்  அவளை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தான்

Comments

  1. Replies
    1. சித்ரா ஹரிதாஸ்September 17, 2024 at 7:41 PM

      நன்றி மா

      Delete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2