வரன் - 17

 




ஆரன், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அவனுக்கு வகுப்பாசிரியாராக வந்தவர் தான் அன்பு மிஸ். பெயரை போலவே மிகவும் அன்பான மிஸ் தான். ஆரனும் கார்த்திக் படிக்கும் பள்ளியில் தான் படித்தான். அன்றிலிருந்து இன்று வரை அவர் ஐந்தாம் வகுப்பு தான் எடுக்கிறார்.  பன்னிரெண்டாம் வகுப்பு எடுக்க அழைத்த போது கூட மறுத்து  குழந்தைகளுடன் இருப்பதே எனக்கு போதும் என்று விட்டார். அவரது மகனும் ஆரனும்  பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்கள். இருவரும் அவருக்கு வேறு வேறு இல்லை.' மிஸ் 'என்று ஆரன் அழைத்தாலும் அவர்கள் வீட்டில் உரிமையாக விளையாடி, உண்டு விட்டு வருவான்.


அன்புவின் மகன் விஜய்நவீன் ஃபாரினில் இருக்கிறான். மகனை அங்கே அனுப்பி வைத்து விட்டு தவியாகத் தவிக்கும் அந்தத்  தம்பதியருக்கு  இப்போது  மகனாக இருப்பது என்னவோ ஆரன் தான். வேலை வேலை என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களிடம் வாரத்தில் நான்கு முறை பேசிடுவான், ஒரு முறை பார்த்துவிட்டுச் செல்வான்.

அவன் வரும் வேளையில் அவனுக்காகச் சமைத்து, அவனை  சாப்பிட வைத்து தன் மகனை போல எண்ணிக் கண்கள் கலங்க பார்ப்பார்  அன்பு மிஸ். அவனும் கேலிக் கிண்டல்களுடே அவரைத் தேற்றுவான்.


பள்ளியில் கார்த்திக்கின் ஆசிரியராக மேகாவைப் பார்த்த போதிலிருந்து அவனுக்கு அவளை பிடித்து விட்டது.  அவளை பார்ப்பதற்காக கிடைத்த நேரத்தில் பிரதியிடம் கேட்டு பள்ளியில் கார்த்திக்கை அழைக்க வந்தவன் ஏமாந்து தான் போனான். கார்த்திக் கீழே இறங்கி விடுவதால் மேலே செல்ல வாய்ப்பு அமையாமல் போனது. கார்த்திக்கின் தலையை செல்லமாகக் கொட்டிவிட்டு, "ஏன்டா மேலே இருக்க மாட்டீயா கீழே வந்து உட்கார்ந்துக்கற, அப்றம் நான் எப்படி டா நான் பாரக்கறது?" என்று கடிந்தவனைக் கண்டு தலையை சொறிந்தவன், "அப்படி நீ யாரா நீ பார்க்கணும் பா?"என்று வினவியதும் நாக்கைக் கடித்தவன் அவனை சமாளிக்கும் விதமாக ,"அ... அது நீ இந்தக் கூட்டத்தில எங்க இருக்கனு தெரிய மாட்ற, கிளாஸ்னா நீ தனியா  இருப்ப அதான்...  இனி நீ கிளாஸ்லே இரு நான் வந்து கூட்டிட்டு போறேன்" என்று மிரட்டி கூட்டிட்டு போனான்.


மறுநாள் வகுப்பிலே அமர்ந்த  கார்த்திக்கைக் கண்ட மேகா அவனிடம், "என்ன இங்க உட்கார்ந்துட்ட கீழ போகலையா?"என்று வினவ, 


"இல்ல மிஸ், அப்பா மேலே  உட்கார் நான் வந்து கூட்டிட்டி போறேன் சொன்னார்" என்றான். "எதுக்கு டா?"எனக் கேட்கவும் உதட்டைப் பிதுக்கினான். வெகு நேரம் அவனை அழைக்க வராததால் கடுப்பானவள், " கார்த்திக் நீ  கீழ போ !"  என்றாள்.


"ஏன் மிஸ்?"


"டேய் ஸ்கூல் முடிஞ்சும் உங்களை தான் பார்த்துட்டு இருக்கணும்மா, கீழ போடா! அப்றம் உங்க அப்பாகிட்ட   நான் கீழயே இருக்கேன் நீங்க வந்து கூட்டிட்டுப் போங்கனு சொல்லிடு" என்று அனுப்பி வைத்தாள். அதைத் தாமாதமாக வந்த  ஆரனிடம் சொல்லி கார்த்திக் கோபம் கொள்ள, அவனிடம் இளித்து வைத்தவன், பள்ளிக் கட்டிடத்தை பார்த்து " ஒரு பையன உன்னால அதிக நேரம் பார்த்துக்க முடியாதா?  இதுல நாளைக்கு பிறக்க போகும் நம்ம குழந்தைங்கள எப்படி தான் பார்ப்பீயோ !" எதிரில் இல்லாத அவளிடம் இருப்பது போல  கடிந்து பேசிவிட்டு கார்த்திக்கை அழைத்துக் கொண்டு போனான். அடுத்து வந்த நாட்கள் அவன் பள்ளிக்கு வந்தும் அவனால் அவளை  பார்க்க முடியாமல் போனது. இதற்கிடையே கடவுளாக அவனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்.


அன்று பேரண்ட்ஸ்  மீட்டிங்  இருப்பதால் நானே போய்கிறதாகச் சொன்ன பிரதியிடம் சிறுப் பையனை போல அடம் பிடித்து உடன் வந்தான். இருவரும் சேர்ந்து வந்திருப்பதைக் கண்டவள்  கணவன் மனைவியென எண்ணிக் கொண்டாள்.


பெற்றோர்களிடம் மாணவர்களின் ரேங்க் கார்டை கொடுத்து அவர்களை பற்றி நிறை குறையை கூறுவதே மேகாவின் வேலை. அவளது வகுப்பில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் அமைதியாகவும் சிலர் தன் மகன் மகளை குறைகளை கூறிவிட்டு செல்வார்கள். கார்த்திக்,  அந்த வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தில் இருப்பதால், பின் பக்க பலகையில் அவனது பெயர் தான் முதலாக இருந்தது. அதன் அடுத்தடுத்த மதிப்பெண்கள் எடுத்த குழந்தைங்களின் பெயரையும் எழுதிருந்தாள்.


கார்த்திக்கின் பெயரை முதலிடத்தில் கண்டதும் பூரித்துப் போன தாய் செல்லில்  புகைப்படம் எடுத்து தந்தையானவனுக்கு எடுத்து அனுப்பி வைத்தாள். ஆரனோ, அவள் பெற்றோர்களிடம் மாணவர்களிடம் பேசும் அழகைப் பார்த்து கொண்டே  நின்றான்.  பெண்களுடன் பேசும் போது  ரசிப்பவன், ஆண்களுடன் பேசும் போது சற்று பொறாமை கொண்டு பார்ப்பான்.


ஒருவழியாக,  பிரதியும் ஆரனும் அவள் முன் வந்து நிற்க, இருவரையும் கணவன் மனைவியாக எண்ணிக் கொண்டு கார்த்திக் பற்றிப் கூறியவள், அவனது படிப்பை பற்றி பேச எதுவும் இல்லை. அவன் செய்யும்  சிறு சிறு சேட்டைகளைப் பற்றி மட்டும் கூறி முடித்து  நிறுத்துக் கொள்ள, அவன் தான் வீடாது அவளிடம் காரத்திக்கைப் பற்றி  இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி பத்து நிமிஷம்  அறுவைப் போட, பின்னாடி கூட்டமும் இவன் பேசுவதைக் கண்டு கடுப்பாகிப் போனார்கள். பெற்றவர்களின் முகத்தைத் தெரிந்த கடுகடுப்பைக் கண்ட மேகாவோ" சார் , ப்ளீஸ் பேரண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க, அவங்களையும் பார்க்கணும் . அவன் என்ன  சேட்டை பண்ணாலும்  டைரில எழுதி விடுங்க நான் பார்த்துகிறேன். இப்போ ப்ளீஸ் "என்று முடித்துக் கொண்டவள், அடுத்த பெற்றோர்களை சந்திக்க அவனுக்கு தான் "ச்ச்" என்றாகிப் போனது. அவனை வெளியே அழைத்து வருவதற்குள் போதும் என்றாகி விட்டது பிரதிக்கும் கார்த்திக்கும். இருவரும் அவனை முறைப்பதை கூட அறியாது வகுப்பின் வாயிலை நோக்கிய படி நின்றான். 


"கொழுத்தனாரே ! இன்னும் என்னலாம் என் மகனை போட்டு கொடுக்கலாம் யோசிக்கிறீங்களோ !"என்றவள் அவள்  கவனத்தை தன் பக்கம்  திருப்பினாள்.


"ஆமா அண்ணி ! கார்த்திக் வீட்ல பண்ற சேட்டை சொன்னாதானே நாளைக்கு அவனை கண்டிப்பாங்க ! இருங்க அண்ணி, எல்லாரும் போனதுக்கு அப்றம் நாம தனியா பேசிட்டு போலாம்" என்றவனை வெட்டவா குத்தவா ரீதியில் கண்டனர் இருவரும். அவர்கள் இருவரும் முறைப்பதைக் கண்டு இளித்தவன்," உங்களுக்கு வேலை இருக்குமோ ! வேணும்னா நம்பர் வாங்கிட்டு போய் வீட்ல பேசலாம்ல அண்ணி" என்றவனை பைத்தியக்கார லிஸ்ட்டில் சேர்த்தால் கூட ஆச்சரியர்துக்கில்லை. 


"வாங்க கொழுந்தனாரே ! மானம் போயிட போகுது !"என்று தலையில் அறைந்து விட்டு கார்த்திகை அழைத்து கொண்டு போனாள்.' கொஞ்சம் ஓவரா போறோமோ ! சரி போவோம் போனா தானே என் வாழ்க்கைக்கு ஒரு வழி கிடைக்கும்' என்றெண்ணிக் கொண்டு மீண்டும் வகுப்பையும் பார்த்து விட்டுப் போனான்.


அவளை பார்க்கவே தினமும் கார்த்திக்கை அழைக்க வருவான், அன்று கூட அவன் வரும் போது அன்பு மிஸ்ஸிடம் அவள் பேசுவதை கண்டு கண்கள் விரிய பார்த்தவன் அவளை பற்றி அறிய கிடைத்த வாயப்பைப் பயன்படுத்திக் கொண்டான். 


மறுநாள் ஞாயிறு அன்று அன்புவைத் தேடி அவர் வீட்டிற்குச் சென்றான். வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பின், அன்பு அருகே ஆர்வமாக அமர்ந்து பல்லிளிபவனை  வினோதமாக பார்த்தவர் அதை கேட்டும் விட்டார்."என்னடா என்ன ? என்ன வேணும் இந்த அன்பு மிஸ் கிட்ட?" என நேராக விஷயத்துக்கு வந்தான். 


"அதுஊஊ..." மேசையை பேர்த்தெடுத்தவனின் கையை தட்டிவிட்டவர், "என்ன டா லவ் வா? "அவன் வெட்கத்தை கணித்து கேட்க, " முகத்தை  வச்சி என்னானு கண்டிப்பிடிக்கறதுல அம்மாக்கு அப்றம் டீச்சர்ஸ் தான்ல. செம போங்க"  என்றான் அவரறிந்ததை கண்டு.


டீச்சரிஸ் ஆர் செகண்ட் மதர். யூ க்னோ" என்று இல்லாத காலரை தூக்கி விட்டுச் சொன்னார். 


"ஒத்துக் கொள்கிறேன் தாயே !"கரம் கூப்பியவன், விஷயத்தைச் சொல்ல தயங்கினான். "நானும் உன் அம்மா தான் ஆரா ! சொல்லு" என்றார்.


"நான் கார்த்திக்கோட மிஸ், மிஸ். மேகவர்ஷினியை லவ் பண்றேன்  அன்புமா. அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்கள லவ் பண்ணி, அவங்க பின்னாடி அலைஞ்சு காதலிக்க வச்சி, அவங்க வீட்ல, என் வீட்ல அது தெரிஞ்சி ஒத்துக்காம போய்  அவங்களை கன்வீன்ஸ் பண்ணி, சண்டைப் போட்டு ஊப்! எதுக்கு இதெல்லாம்? அதுக்கு பதில, நீங்க அந்தப் பொண்ண பத்தின விவரத்தை எல்லாம் தெரிஞ்சிகிட்டு, எங்கிட்ட சொன்னீங்கனா. நானும் வீட்ல பேசி அரெஞ்ச் வித் லவ் கம்மா மாத்தி   அவங்களோட என் லைப் செட்டாளாகி பேஸ்ஸா வாழ்வேன்" என்றதும்" அதிர்ந்து முகம் வாடியவர், ஆரனை கண்டதும் சட்டென மாற்றிக் கொள்ள, அதை அவன் காணாமலில்லை.


"வாவ் ! சூப்பர் சாய்ஸ் ஆரா ! மேகா ரொம்ப நல்ல பொண்ணு.  அமைதியா இருப்பா. தனக்கு தீங்கு செய்றங்கனு தெரிஞ்சும் அதுல அவங்களுக்கு தன்னால கிடைக்கற  நம்மைய தான் பார்ப்பா ! அவ்வளவு சீக்கிரம் அவளுக்கு கோபம் வராது. ஆனா ஒருத்தவங்க மேல  வந்தது, அவங்களை அறவே வெறுத்துடுவா.  அவங்க அப்பா மேலே கொஞ்சம் பயம் கலந்த பாசம் இருக்கும்.வீட்ல பார்க்கற  மாப்பிள்ளை தான் கட்டிப்பேன் எங்கிட்ட அடிக்கடி சொல்லுவா ! அவங்களும்  உன் கேஸ்ட் தான்(அவங்க அப்பாக்காக சொல்றார்) நீ சொன்னது போல லவ்வுனு அலையாம இந்த வழியில போறது ரொம்ப பெட்டர். எங்கிட்ட  அவளோட ஜாதகம் ஜெராக்ஸ் கூட இருக்கு ஆரா !" படப்படவென ஒப்பித்து முடித்தார். ஒற்றைப் பழத்தை பறிக்கச் சென்றவனுக்கு  மரத்தின் மொத்த கனிகளும் கிடைத்தது போல மகிழ்ச்சி இருந்தாலும் அன்புமாவின் சிறு வருத்தம் நெருடலாகவே இருந்தது.


"அன்பு மா" அவன் கையை அழுத்த, 

"என்னடா ?" அவன் மேல் கைவைத்து கேட்டார். " உங்களுக்கு இதுல வருத்தம் இல்லையே !" என்றவனை முறைத்தவர், " என் பிள்ளைக்கு நல்லது நடக்கப் போகுதுனா அதுலே சந்தோசப்படுறதுல முதல் ஆள் நானா தான்  இருப்பேன். எனக்கு ஏன் டா வருத்தமா இருக்க போகுது?"என்றவரை விழிகளால் ஊடுருவியவன், " அப்போ நான் விஷயத்தை சொன்னதும் ஒரு நொடி உங்க முகம் சோகமாச்சே ஏன்?"நீங்கள் மறைத்ததை கண்டு கொண்டேன் என்ற கர்வ பார்வையை கண்டு நெகிழ்ந்தவர்  அவனிடம் மறைக்காமல்  பகிர்ந்தார்.


"உன்கிட்ட சொல்றதக்கு என்ன? எனக்கு மேகாவை ரொம்ப பிடிக்கும், சரி நம்ம விஜய்க்கு பொண்ணு கேட்கலாம், நினைச்சி அவ  ஜாதகத்தை வாங்கி வச்சேன். ரெண்டு பேருக்கும் பொறுத்தம் பார்க்கனும் நினைச்சேன். ஆனா, எனக்கு நேரமே அமையல.  தள்ளி தள்ளிப்  போச்சி, அது ஏன் தள்ளி போனது இப்பதான் புரியுது, யார் யாருக்கு கடவுள் தீர்மானத்த மாத்த முடியுமா? மேகா உனக்கு தான்னு எழுதிருக்கு" என்றவரை வறுத்தத்துடன் ஏறிட்டவன் "அன்பு மா "என்றழைப்பிலே குற்றவுணர்வில் இருக்கிறான் என்றறிந்தவர் அவன் கையைப் பற்றி, 


" எனக்கு நீயும் விஜய்யும் வேற வேற இல்ல. நான் ஜாதகம் ஒண்ணா இருந்தால் அப்றம் விஜய் கிட்ட  போட்டோ காட்டலாம்  இருந்தேன்.ஆனால் அதுக்கு தான் நேரமே அமையலயே ! ஆனா பார், நீ அவளை லவ் பண்றேன் வந்து நிக்கற ! அவ விஜய்க்கு கிடைக்கலன்ற வருத்தத்தை விட நீ லவ் பண்ணி உனக்கு கிடைக்கலன்ற வருத்தம் அதிகமா இருக்கும்.  அவ உனக்கு பொண்டாட்டியா வந்தாலும் அவ எனக்கு மருமக தானடா ! இதுல என்ன வருத்தம் இருக்க போகுது? இதை பற்றி கவலைப்படாம  அவளை சீக்கிரமா மருமகளாக்க முயற்சி பண்ணு மேன் நான் உனக்கு எப்பையும் சப்போர்ட்டா இருப்பேன்" என்று நம்பிக்கைக் கொடுக்க அவரைச் செல்லமாக அணைத்து கொண்டான். அன்றிலிருந்து அன்பு மா காதல் ஒற்றனாகிப் போனார்.


மேகாவைப் பற்றி அனைத்தையும் பகிர்ந்தார், அவள்  உளறி வைக்கும் குடும்ப விஷயத்தை அவனிடம் பதமாகக் கூறுவார். இப்படி தான் அவளைப் பற்றி அனைத்து விவரங்களைக்  கண்டறிந்து சில சில தகிடுதத்த வேலைகளைப் பார்த்தும் அவளை கைப்பிடிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறான்.


பொங்கலை சுவைத்தவாறு  சொல்லி முடிக்க, அவனை முறைத்தாள்." என்னடி?" என்றான்.


"இதுல முழுக்க முழுக்க உங்க ஸ்மார்ட் வொர்க் தான் இருக்கு இல்ல ! நான் உங்களுக்கு ஈஸியா கிடைச்சிட்டேனோ !" எனவும்.


"மேபீ ! கோடிக்கு கோடிக்குல  ஒருத்தனுக்கு கிடைக்கிற அதிர்ஷ்டம் போல தான் நீ எனக்கு கிடைச்சிருக்க, ஸ்மார்ட் வொர்க் தான் பட் ஹெவி வோர்க் எல்லாம் மேரேஜ்க்கு அப்றம்" என்றிட அவளுக்குப் புரையேறியது. அவள் தலையை தட்டிவ தண்ணீரைக் குடிக்க  வைத்தான். அவனைப் போலியாக முறைத்து விட்டு வெட்கத்தை மறைக்க கஷ்டப்பட்டாள். இருவரும் சாப்பிட்டு எழுந்து கைகழுவி வந்தனர்.


அவர்கள்  ஒன்றாக நிற்க வைத்து இரண்டு மூன்று  புகைப்படம் எடுத்துக் கொள்ள, அதில் அவர்கள் இருந்த நெருக்கம், அவளுடலில் பதிந்த கைகள் அவளை குறுகுறுக்கச் செய்ய,  இருவர் கண்களிலும் காதல் வழிந்தது அதை புகைப்படமாக எடுக்க. தனியாக பிரேமில் போட்டு தரச் சொன்னான்.


ஒருவழியாக நிச்சயம் நன்றாக முடிய இரு வீட்டார்களும் பரஸ்பர அன்பைப் பகிர்ந்து விட்டு விடைப்பெற்றனர். மேகாவும் ஆரனும் சிறு தலை ஆசையோடு விடைப்பெற்றனர்.


இரண்டு நாள் விடுமுறைக்கு முடிந்து ஊருக்குச் சென்றவனுக்கு காத்திறந்தது பெரிய பிரச்சனை ஒன்று.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2