வரன் - 21

 




பள்ளி அலுவலகத்தில் காலைப் பிராத்தனை முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் முகம் விகசிக்க வெளியே வந்தனர். பள்ளியில் வருகின்ற நாட்களில் ஆசிரியர்களை மட்டும் இரண்டு நாள் பள்ளி சார்பாக இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்ல இருக்கின்றனர் அதுவும் ' கேரளா 'என்றனர்.வெளியே வந்த ஆசிரியர்கள் இப்போதே சுற்றுலா செல்வது போல தன் தேவைகளையும் எங்கெங்குச் செல்ல வேண்டும் என்று லிஸ்டும் போட ஆரம்பித்து விட்டனர் சிறு பிள்ளைகளை போல.


மேகா யோசனையோடு வர, நேகா கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஓட வைத்திருந்தாள். "மேகி ! இதான் நீயும் நானும் அக்கா தங்கையா  செல்லப் போற கடைசி டூர். அப்றம் நீ இன்னொரு வீட்டுக்கு மருமகளாகிடுவ, மாமா கிட்ட கேட்டுட்டு தான் நீ அடுத்த வருஷம் டூர் வருவ ! அதுவும் நீ வேலைக்கு வருவீயோ என்னவோ பச் ! அதனால இந்த வருஷ டூர நாம நல்லா எஞ்சாய் பண்றோம்" அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக, அவள் பேசினவை எல்லாம் மேகாவின்  காதுகளுக்கு எட்டவில்லை அப்படியே யோசனையோடு அவளுடன் நடந்து வந்தாள்.


தான் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம், அவளிடம் பதில் வரவில்லை என்றெண்ணியவள் அவள் புறம் திரும்ப, மேகாவின் பார்வையும் கவனமும் வேறெங்கோ இருந்தன,  அதனை கண்டு தலையில் அடித்துக் கொண்டவள், "மேகஆஆஆஆஆ...." என்று அவளை உலுக்கி எடுத்தாள். மேகாவோ வலியில் "பச்... வலிக்குதுடி" தன் இருபக்கத் தோளை அழுத்தியவளின் கைகளைத் தட்டி விட்டாள்.


"வலிக்குதுனா வலிக்கட்டும். நானே  ரெண்டு பிளோர் ஏற பிலிங்ஸோட பேசிட்டு வரேன். நீ என்னடானா எதையோ யோசிச்சிட்டு வர. அப்படி என்ன யோசனை உனக்கு?"


"பச் அத விடு ! உனக்கு என்ன பிலிங்க்ஸ்? என்ன பேசிட்டு வந்த அதை  சொல்லு" என்றாள்.


"போ, நான் சொல்ல மாட்டேன்" என்றவள் முறுக்கிக் கொள்ள, " அப்போ போ நானும் சொல்ல மாட்டேன்" என்று அவளுக்கு இணையாக முறுக்கி கொண்டு போனாள் மேகா " அடியே மேகா ! நில்லு" என்று முன்னே சென்றவளை நிறுத்தியவள், "இப்படி முறுக்கிட்டு போறதெல்லாம் உன் புருஷன் கிட்ட வச்சிக்க. என் கிட்ட வச்சிக்காத என்ன" எனவும் மேகாவிற்கு சிரிப்பு வந்துவிட அதை உதடு மடித்து அடக்கியவள், "சரி சொல்லு, என் செல்ல தங்கச்சி என்ன பீலிங்கஸா பேசிட்டு  வந்தீங்க?" செல்லம் கொஞ்சி கேட்க, நேகாவின் முகம் கொஞ்சம் வாடிப்போனது.


"இல்ல மேகி ! இது தான் நாம கடைசியா போற டூர். அப்றம் நீ  இன்னொருத்தர் மனைவி. கல்யாணத்துக்கு அப்றம் நீ ஸ்கூலுக்கு வருவீயோ மாட்டியோ ! இல்ல மாமா கூட அவர் வேலைப் பார்க்கற இடத்துக்கு கூட போக வாய்ப்பு இருக்கு. அதான் சொன்னேன். அதான் இந்தக் கடைசி டூர் ஹாப்பியா எஞ்சாய் பண்ணலாம்" எனும்  போதே அவள்  தொண்டை அடைத்தது. இருவர் கண்களும் கலங்க, மத்த ஆசிரியர்களும் வருவதைக் கண்டு துடைத்துக் கொண்டனர்.


"சரி அத விடு மேகா ! நீ என்ன யோசிச்சிட்டே வந்த?"


" இல்லடி நீ இப்படி யோசிக்கற? ஆனா நான் என்னயோசிச்சேனா , நிச்சயமான என்னை டூர்க்கு விடுவாங்களானு யோசிக்கிறேன் நேகா !"என்றதும் 'ங்கே' என விழித்தவள், நிச்சயமான பெண்ண ஸ்கூலுக்கு விடுறாங்க. ஏன் டூர்க்கு விடமாட்டாங்களா என்ன?" 


"எதுவும் ரெஸ்ட்ரிக்ஷன் போட்டா என்ன பண்றது? எனக்கு டூர் போகணும் ஆசை தாண்டி. நாமளும் இப்படி எப்படியாவது அரேஞ்சு பண்ணினா  தான் வெளிய போறோம்.இவங்க நம்மல எங்க வெளிய கூட்டிட்டு போறாங்க. அப்பா ஒத்துகிட்டார்னா போதும் ஹாப்பியா போயிட்டு வரலாம்" என்றிட, "ஓ... அப்பா கிட்ட நீ பெர்மிஷன்  கேட்டா போதுமா , மாமா கிட்ட கேட்க மாட்டீயா?"என்றதும்


வெட்கம் கொண்டவள், "சொல்லுவேன்,என்னோட விருப்பத்தை    கேட்டு எல்லாம் செய்றவர், கண்டிப்பா இதுக்கும் போகச் சொல்வார். எனக்கு அப்பா மட்டும் தான் இடைஞ்சல் " என்றாள். ஆனால் பாவம் அப்படியே  எல்லாம் தலை கீழாக மாறப் போவதை அறியாது  உரைத்தாள் அப்பேதை. ' எப்படியாவது வீட்டில் பேசி  சம்மதிக்க வைத்திடலாம் 'என்று இருவரும் ஒரு முடிவோடு இருக்க, அந்த முடிவும் தவிடுப்பொடியாகப் போகிறதென்று தெரியாமல் கற்பனை கோட்டைக்குள் நுழைந்தனர் இருவரும்.


அன்று முழுக்க பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே இந்தப் பேச்சே ஓடிக் கொண்டிருந்தது. மாலை பள்ளி விட, இருவரும் இல்லம் வந்தனர்.வீட்டில் பெண்கள் தங்கள் வேலைகளை செய்து முடித்து அமர, கங்காதரணும் ஸ்ரீதரணும்  இல்லம் நுழைந்தனர். அவர்கள் இருவருக்கும் தேவையானதை அவரவர் மனைவிமார்கள் செய்து விட்டு இரவு உணவு செய்ய சமையலறை சென்றனர்.


அண்ணன் தம்பி இருவரும் கணக்கு வழக்கு பார்த்து விட்டு நாட்டுநடப்புகளைப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் முன் இருவரும் தயங்கி நின்றனர். சமையலறையில்  தனமும் கனகாவும்  சின்ன வயதிலிருந்து இன்று வரை தந்தையிடம் எதாவது ஆக வேண்டும் என்றால் எப்படி பவ்யமாக  நிற்பார்களோ ! அதே போல கல்யாண வயது வந்தாலும் வளர்ந்தாலும் அதை மாற்றாது மழலைப் பருவத்தை நினைவுட்டும் மகள் இருவரையும் சிரிப்புடன் பார்த்து நின்றனர்.


"அப்பா ! எங்க ஸ்கூல் எப்பையும் போல இந்த முறையும் டூர் கூட்டிட்டு போறாங்க ! நானும் நேகாவும் போகட்டுமா ப்பா" மிகப் பணிவுடன் கேட்டாள் மேகா.


"இது தான்பா மேகா, என்கூட வர கடைசி  டூர். அடுத்த வருஷம் இதெல்லாம் கிடைக்காது. நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வர்றோம் பா !" நேகாவும் தன் பங்கு கெஞ்சினாள். அண்ணனும் தம்பியும் யோசித்தவர்கள் ஒரே முடிவாக இருவரும் "சரி போயிட்டு வாங்க..." என்றனர்.  இருவருக்கும் அதை நம்ப முடியவில்லை ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டவர்கள் " தேங்க்ஸ் பா" என்று அவ்விடம் விட்டு அறைக்கு வந்து கட்டிக் கொண்டனர் மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்


"நல்ல வேள எங்க பெரியப்பா மாட்டேன் சொல்விடுவாரோ பயந்துட்டேன். அப்றம் என்ன சிங்கத்துகிட்ட இருந்து பெர்மிஷன் கிடைச்சிருச்சி ! அடுத்து உன் ஆள், புலி கிட்ட கிடைச்சா போதும், நாம மஜா பண்ண வேண்டியது  தான்" என்றவளை இளநகையுடன் பார்த்தாள். " கவலை படாத உன் மாமாவும் போக ஓகே சொல்லிடுவார் அப்றம் மஜா தான்" அவளும் கூற," இன்னும் எத்தன நாளைக்கி எல்லார் கிட்டயும் நாம செய்ய போற எல்லா விஷயத்துக்கும் பெர்மிஷன் கேட்டுடே  இருக்கணும். பசங்க மட்டும் இன்ஃபார்ம் பண்றாங்க. ஆனா நாம பெர்மிஷன் கேட்கிறோம். ஏன் தான் பொண்ண பொறந்தோமோ? "என்று தலையில் அடித்து கொண்டு சென்றாள். அவளும் அதனை எண்ணிப் பெருமூச்சு விட்டவள், ஆரனுக்கு புலனத்தில் குறுஞ்செய்தி தட்டிவிட்டு  பதிலுக்காகக் காத்திருந்தாள்.  இரவு பத்து மணிக்கு தான் அவனது அழைப்பு வரும் என்பதால் இடைப்பட்ட நேரத்தில் தன் வேலைகளை முடித்து காத்திருந்தாள்.  அலைப்பேசியும் அலற வேகமாக எடுத்து காதில் வைத்தாள்.


"என்ன சக்கர மாமன் குரல கேட்க அவ்வளவு  ஆவலு !"எனவும் வெட்கப்பட்டவள்," என் மிளகாவோட  குரலுக்கு மிகப்பெரிய ஃபேனாக்கும் நான்" என்றவள் அவனை நெகிழ வைக்க, "சக்கர" எனக் கிசுகிசுத்தான், "ம்ம்" என்றாள்.


"எப்போடி இங்க வருவ?"டன் கணக்கில்  காதல் வழியக் கேட்டான்,"ஏன்?" என்றாள் உடல் சிலிர்த்து." தனியா சமைக்க முடியலடி"  என்றதும் அவளுக்கு புஸ் என்றானது, " யோவ் மிளகா !  அப்ப நீ என்னை உனக்கு சமைச்சி போடத்தான்  தேடுறீயா ?" என ஏமாற்றமாகக் கேட்டாள்.


"அட என் பைத்தியமே ! நான் அப்படி சொல்லலடி" என அவன் விளக்க வரவும், "வேற எப்படி?" என்று முறுக்கிக் கொண்டு கேட்டாள்." அப்படியே கண்ண மூடி மாமன் சொல்றத எல்லாம் கற்பனை பண்ணுவீயாம்" என்றவன் தன் சக்கரையுடன் இத்தனை நாள் நிகழ்த்திய கற்பனைக் காதலை மொழிய ஆரம்பித்தான்.


"சக்கர நீ  நைட் டிஃப்ன் எனக்காக செஞ்சுட்டு  இருப்ப, நானும் என் வேலை எல்லாம் முடிச்சிட்டு, உனக்கு ஹெல்ப்  பண்ண வருவேன்" என்றதும் இடைவெட்டியவள், " நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணவா வருவீங்க"என நக்கலாக கேட்க, " பச்!  குறுக்க கேள்வி கேட்கக் கூடாது ஜஸ்ட் நான் சொல்றத அப்படி கற்பனை பண்ணு" என்றவன் கற்பனைக்குள் மூழ்க நாமளும் கற்பனைக்குள் செல்வோம்.


ஆரனின் சக்கரை சமைத்து கொண்டிருக்க, "சக்கர" என செல்லமாக அழைத்தப்படியே அவளை பின்னின்று அணைத்து தோளில் தன் இதழை பதித்தான். அவனணைப்புக்குள் இருந்தவாறு நெழிந்தவள், அவனை தள்ளி விட முயல அதுவோ முடியாமல் போனது.


"சமைக்க விடுங்க மிளகா ! ஆல்ரெடி லேட்" என சேமியா கிண்டிக் கொண்டிருந்தாள், அவனும் அவள் இடையை  அழுதிய படி "ஆமான்டி லேட் தான் அப்படியே ஆப் பண்ணிட்டு வா ! நாம போய்" எனக் காதுக்குள் கிசுகிசுக்க... "ச்சீ" என வெட்கம் கொண்டவள் அவனைத் தள்ளி விட்டு, சேமியாவை டைனிங் டேபிளை வைத்தாள். இருவரும் சாப்பிட  தட்டுடன் வந்து அமர்ந்தான். அவனது தட்டில்  சுடச்சுட பரிமாறினாள். தனக்கென இன்னொரு தட்டை எடுத்து வராதவனை பார்க்க,  ஊட்டிவிட சொன்னான்  அவளும் ஊட்டி விட, சேமியாவிற்குத் தொட்டுக்க சக்கரை வைக்க மறந்தவள் அதை எடுக்கச் செல்ல, "எங்கடி போற?" என தடுத்தான்.


"இருங்க ஆரன் தொட்டுக்க சக்கரை எடுத்துட்டு வரேன்" என்றவளை விடாது "என் சக்கர  நீ இருக்கும் போது அந்த சக்கரைய வா தொட்டுக்க" என அவன் முகம் சுழிக்க, அவளோ அவனை செல்லமாக முறைத்தாள். ஒருவாய் அவள் அவனுக்கு வைக்க, அடுத்த நொடி அவள்  இதழை சுவைத்தான். அப்படியே ஒவ்வொரு வாய்க்கும் அவளது இதழை நாடி ஒரு வழியாகிவிட்டான். இப்போது அவள் சாப்பிட தட்டில் போட்டு அவளுக்கு ஊட்டிவிட்டவன், தன் இதழை ருசிக்க சொல்ல, அவளோ, "நான் சேமியாக்கு மிளகாவ எல்லாம் தொட்டுக்க மாட்டேன்" என்று இதழை சுழிக்க, அதற்கும் அவனிடம் அவள் செல்லத் தண்டனைகள் பெற்றாள். இருவரும் சாப்பிட்டு முடிக்க, அவளை அடுத்த வேலையைச் செய்ய விடாமல்  அவளைச் சயனறைக்கு தூக்கிச் சென்றான் . அதற்குள் மேல் அவனை கூற விடாமல் "ஆரன் போதும் " எனச் சிணுங்கினாள்.


" அதுக்கு அப்றம் தான் இருக்கு மெயின் மேட்டரே ! சொல்ல விடாம தடுத்துட்யேடி சொல்லட்டுமா சக்கர ! " என மீண்டும்  கெஞ்சி கொஞ்சி ஆரம்பிக்க, "வேணாம் ஏற்கெனவே உங்க காதல் மழையில் நான் முழுசா நனைஞ்சுட்டேன், இதுக்கு மேல நனைஞ்சா எனக்கு ஜுரமே வந்துடும். உங்க கற்பனை காதலை கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு நிஜத்துக்கு வாங்க ஆரன்" என்றவள் பள்ளியில் செல்ல இருக்கும் டூரை பற்றிக் கேட்டாள். " வாட்ஸப் பார்த்திங்களா ஆரன். நான் டூர் போகட்டுமா?"  எனக் கேட்டவள் அவனது' சரி ' என்னும் வார்த்தையைக் கேட்க விரும்பியிருந்தாள். ஆனால் அவனோ "வேணாம் சக்கர  நீ போக வேணாம்" என்றான்.  அவளால் நம்ப  முடியவில்லை, "ஏன் ஆரன் போக வேணாம் சொல்றீங்க?" எதிர்பாராத பதிலை கேட்டு ஸ்தம்பித்தவள், வலியுடன் கேட்டாள்.


"நாளைக்கு மீட் பண்ணும் போது சொல்றேன். இப்போ வேற பேசலாமா?"  எனக் கேட்கவும் அடுத்து அவனிடம்  பேச

அவளுக்கு மனமே இல்லை," இல்ல நீங்க ரீசன சொல்லுங்க ஏன் வேணாம் சொல்றீங்க? நானும் நேகாவும் எவ்வளவு ஆசையா இருந்தோம் தெரியுமா? அப்பா கூட  ஓகே சொல்லிட்டார். நீங்களும் போக சொல்வீங்க நினைச்சேன்" என்றவள் விளக்க,"அது சப்ரஸ் சக்கர ! நாளைக்கு சொல்றேனே !" என மீண்டும் அதையே சொல்ல அவளுக்கு கோபம் வந்தது "எனக்கு தூக்கம் வரது நான் தூங்க போறேன்" என்று அவனது பதிலைக் கூட எதிர்பாராது கோபத்தில் போனை வைத்து விட்டுப் படுத்துக் கொண்டாள். மறு நாளும் அவன் முன் முறுக்கி கொண்டிருந்தாள். ஆனால் அவன் சொன்ன விஷயத்தை  கேட்ட நொடியே உடலதிர, பேச்சற்று போனாள்.

Comments

  1. Replies
    1. சித்ரா ஹரிதாஸ்September 17, 2024 at 7:41 PM

      சொல்றேன் மா நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2