வரன் - 16

 




தன்னைக் கடந்து தன்னைக் காணாது சென்ற தன் சக்கரையை எண்ண, முறுவலுடன் கூடிய வலியொன்று வந்து சேர்ந்தன. நிச்சயத்திற்கு இன்னும் நேரமிருப்பதால் முன்னதாகவே அவளை சந்தித்து பேச வேண்டும் என்றெண்ணியவன், தீனாவிடம் உதவிக் கேட்க, அவனும் அவனது ஒற்றன் போல மணப்பெண்ணின் அறைக்குள் சென்று  அரட்டை அடிப்பது போல நோட்டம் விட்டவன், மேகாவை  தனியே விட்டுவிட்டு இருவரையும் வெளியே அழைத்து வந்து சிக்னல் கொடுக்க, ஆரனோ பின் பக்க வழியாக சென்று அவளறை அடைந்தவன் ஜன்னல் வழியே  எகிறி உள்ளே குதித்தான். அவன் குதித்தை கூட உணராது, கதவை சாத்தி தன்னை தனியாக விட்டு சென்றவர்களை பற்றி யோசித்து கொண்டிருந்தாள் மேகா, அவள் பின்னால் வந்து நின்று, காதோரமாக ஊதிவிட்டவன், தொங்கி கொண்டிருந்த காதணியை சுண்டிவிட, புது ரத்தம்  உடலெங்கும் பாய்வதை சிவந்த தேகம் காட்டிக் கொடுத்தது. அவளது உடல் சிலிர்த்தெழ, கண்களை மூடி நின்றாள். மீண்டும் காதோரம் " சக்கர" என்று அழைக்க கண்களினுடே கண்ணீரும் வடிய, கன்னங்கள் வழியே கண்டவன்  பட்டென அவளை திருப்பி அவள் கண்ணமேந்தி கண்ணீரை அழுத்தித் துடைத்தவன், "என்னாச்சிடி ஏன் அழற? சொல்லு சக்கர ஏன் அழற?" அவள் கண்ணீரை துடைத்தபடி கேட்க,  இரண்டு நாள் இந்தக் குரலை கேட்காது போன வலியில் தான் அழுகிறாள்.


"சக்கர எதுக்கு அழற? போட்ட மேக்கப் எல்லாம்  உப்பு தண்ணில வாஸ் அவுட்டாகுதுடி. ப்ளீஸ் அழாம விஷயத்தை சொல்லுடி பொண்டாட்டி"என்று  தாடையை பிடித்து கெஞ்ச, அவன் கையை தட்டிவிட்டு கண்மை கலையாதவாறு கண்ணீரை துடைத்தாள்.


கைகாட்டி அதனை வேடிக்கைப் பார்த்தான். அவளும் துடைத்து விட்டு அவனை தான் பார்த்தவள், மீண்டும் கண்ணாடியில் தன முகத்தை சரி செய்தவள், " என் கூட பேசாம இருந்து என்னை அவாய்ட் பண்ணிட்டு இப்போ மட்டும் ஏன் வந்தீங்க?" குழந்தை போல முனைப்புடன் கூறியவளை கண்டு புன்னகை பூத்தான்.


"ஏன் வந்தேனா, என் சக்கரயோட கரம் பிடிச்சி மோதிரம் மாத்தி, அவளை என் பாதி பொண்டாட்டினு ஊருக்கே சொல்லத்தான் வந்தேன். அவளுக்கு மட்டும்,  நீ தான், இனி நீ மட்டும் தான் என் பொண்டாட்டினு சொல்ல வந்தேன், அப்றம் அவளுக்கு..." என்று அவளை நெருங்க, 


"அவளுக்கு... இந்த ரெண்டு நாள் பேசாம இருந்து வலிய கொடுத்தது போல மறுபடியும் ஏதாவது வலிய கொடுக்க போறீங்களா?"எனக் கேட்கவும் அவனுக்கு சுருக்கென்று இருந்தது.


"ச..க்...க...ர"என்றவன் குரல் உள்ளே போனது அவளது குற்றம் சாட்டிய விழிகளை கண்டு.


"நீங்க என்ன புரிஞ்சி நடந்துப்பீங்க சொன்னீங்க தான. இருந்தும் அப்பா கிட்ட முட்டிக்கிட்டு தான இருந்தீங்க. உங்க பக்கத்தில் உட்கார , எங்க அப்பாவ கடுப்பேத்த நல்லவே பண்ணிங்க. சரி என்னையும் உங்க பக்கத்தில உட்கார  வச்சீங்கல, ஆனாலும் என்கிட்ட பேசாம தான சாப்ட்டீங்க, போகும் போது கூட ஓரு பார்வை கூட இல்ல, ரெண்டு நாளா போனும் இல்ல நல்லாவே தண்டனை கொடுத்தீங்க ! ரொம்ப வலிச்சது இங்க"என்று தேம்பி தேம்பி அழ, அவளை தன் மார்போடு சாய்த்தவன், " நானும் தானடி அந்த வலி அனுபவிச்சேன். எனக்கும்  தான அந்த  தண்டனை சக்கர... 


உன் விஷயம் வரும் போது என்னால எப்படியோ விட முடியல.நீ எனக்கு மட்டும் தான். என் காதலையும் உன் மேல் எனக்கு இருக்க உரிமையும் என்னனு உனக்கு புரியவைக்க தான் உன்கிட்ட பேசல. நான் உனக்கு எவ்வளவு முக்கியம்ன்ற நீ தெரிஞ்சுக்கணும் தான் உங்கிட்ட பேசல !அதுனால நீ மட்டும் இல்ல நானும் அந்த வலிய அனுபவிச்சேன்டி. எனக்கும் ரொம்ப வலிச்சது சக்கர ! ஆனா உன்னை பார்த்ததும் வலி காணோம போச்சி. எனக்கு உன் அப்பாவை விட உன் மேல உரிமை அதிகம் காட்டனும். நான்தான் கடைசி வரைக்கும் உன் கூட இருக்க போறேன்ற கர்வம், இவ எனக்கு மட்டும் தான் சொந்தம் என் மேகா என் சக்கரனு உங்க அப்பாகிட்ட சொல்லணும் , எனக்கு அடுத்து  தான் நீங்க எல்லாரும்னு சொல்ல அப்படி நடந்துகிட்டேன். ஸாரி சக்கர ! உன்னை ரொம்ப ஹார்ட் பண்ணிட்டேன். ரியலி ஸாரிடி" எனக் கெஞ்ச அவள் சமாதானமானாள்.


"ம்ம்ம்... சரி.இனிமே உங்களுக்கு கோபம் வந்தால் என்னை என்ன வேணா திட்டுங்க. ப்ளீஸ் பேசாம இருக்காதீங்க  வலிக்குது" என்றதும் அவளை காதலாக பார்த்தவன்,  நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனது முதல் நெற்றி முத்தத்தை பதிவு செய்தான். ரெண்டு நிமிடம் சென்றிருக்க, அவனிடமிருந்து சட்டெனப் பிரிந்தாள்.


"ஏன்டி" என்றான் ஏமாற்றத்துடன்,


"ம்ம்... இங்கே நிக்கறதா உத்தேசமா? நமக்கு இன்னக்கி நிச்சயம் , இங்க நின்னனா எப்படி நடக்கும்,  போங்க போய் கிளம்புங்க..."அவனை துறத்தி விட, " சரிடி போறேன். ஆனா அதுக்கு முன்ன எதாவது கொடுக்கலாமே "என்று உதட்டைப் பார்த்து கேட்க, "எ... என்ன.வேணும்?"  என்று தடுமாறினாள்.


"வேற என்ன முத்தம் தான் கொடு போயிடுறேன். பேசாம இருந்து வலிச்சதுக்கு முத்தம் தான் சரியான மருந்துனு டாக்டர் சொல்லிருக்கார்.ஸோ  இப்போ கொடு, சமத்தா போயிடுவேன்"என்றவனை பார்க்க முடியாமல் தவித்தவள்" அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம் " என்றாள்.


"சரி நீ அப்ப கொடு. நான் இப்போ கொடுக்கிறேன்" என்று இதழை நோக்க குனிய பின்னால் நகன்றவள், "வேணா ஆரன்..." சுவரில் மோதி நின்றாள். 


"எனக்கு வேணும் சக்கர !" இதழை நோக்கி குனிய , அவளோ இறுக்கமாக கண்ணை மூடிக் கொண்டாள். அதில் அவளை கண்டு இதழை மடித்து சிரித்தவன், அவளை ஏமாத்தாது 


கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு வந்த வழியே  சென்றான். அவள் தான் அந்த சிறு முத்தத்திற்கே சிந்தம் மறந்து யாவும் மறந்து போய் வேறொரு லோகத்தில் திழைத்திருந்தாள் 


அதே நேரம் காவல் காத்த  ஜோடியோ சண்டையில் இருந்தது. " நீ பாக்கறது என்ன  வேலைனு தெரியுதா தயா?"என்று கடுப்போடு கேட்டாள் நேகா. 


"ம்ம்... வாட்ச்மேன் வேலை !" என்றான் தோலை குலுக்கிய படி, "ஓ அதுக்கு இப்படியும் கூட சொல்லலாமா?" என இழுத்தவளை கண்டு பல்லைக் கடித்தவன், "ஏய்" என்று கோபத்தில் சீறினான்.


"ரெண்டு பெரும் பேசாம இருந்தாங்க, சமாதானமா போக ஒரு சின்ன ஹெல்ப் பண்ணினேன், அதை ஏன்டி தப்பா பேசற? நீ உன் அக்காக்கு ஹெல்ப் பண்ண மாட்டீயா என்ன?"


"ஹெல்ப் பண்ணுவேன் தான். ஆனா அப்பா , பெரியப்பா யாராவது பார்த்தா உன்னல்ல டா தப்பா நினைப்பாங்க " 


"நினைச்சா நினைச்சி போகட்டும்டி எனக்கு மேகாவோட ஹாப்பி தான் முக்கியம்" என்றிட, "அப்போ என் ஹாப்பிலாம் முக்கியமில்லையாக்கும்"என்று வாய்க்குள் முணங்கினாலும் அவனுக்கு தெளிவாக கேட்க, " உன் ஹாப்பினஸூம் எனக்கு முக்கியம் தாண்டி" கன்னத்தில் அவள் எதிர்பாராத நேரம் முத்தம் வைக்க, அவளோ விழிகள் விரிய நின்றாள். அவளை குறும்புடன் பார்த்தவன் கதவு தட்டும் அரவம் கேட்டு, திறக்கச் சென்றான். நேகாவும் தலையை சிலுப்பிக் கொண்டு பின் தொடர்ந்தாள்.


நாணத்தில் அவள் முகம் சிவக்க, இருவரும்  நமட்டுச் சிரிப்புடன் பார்த்து நின்றனர்.


"விடுக்கா ! மாம்ஸ் என்ன கொடுத்தார் கேட்கவும் மாட்டோம், நீ என்ன கொடுத்தனு கேட்கவே மாட்டோம்" என்றவளை அடித்தவள் மறுநொடி அவளிடமே தஞ்சம் புகுந்தாள்.


நல்ல நேரத்தில் பெரியோர்களின் முன்னனில் இருவீட்டாரும் நிச்சய பத்திரிகை வாசித்து, தட்டை மாற்றிக் கொள்ள, ஆரன் ஆசையாக நிச்சயத்திற்கு  எடுத்த புடவையை அணிந்து வருமாறு பெரியவர்கள் பணிக்க, பிரதி மேகாவின் அறைக்குள் நுழைந்து அந்த புடவையை கட்ட கொடுத்தாள் பெண்கள் கூடி  அவள் புடவை கட்ட உதவி புரிந்தனர். 


மணமகன் ஆரனும் அவளுக்கு பிடித்த ஆடையில் கிளம்பி தயாராக நின்றான். 


அவனை முதலில் அழைக்க, மேடையில் வணக்கம் வைத்து பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன்,  தாய்மாமன் அணிவித்த மாலையை சூட்டி நின்றான்.


பின் பெண்ணை அழைக்க, கொடுத்த புடவையை சுற்றிக் கொண்டு, வான்முகிழவள் நடந்து வர விழியகற்றாது பார்த்து நின்றான். அவளும் அவனை போலவே மேடையில் பெரியவர்களின் முன்னனில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவள் தாய்மாமன் கையால் மாலை வாங்கிக் கொண்டாள்.


மேடையில் இருவரையும் சேர்த்து நிற்க வைக்க, சேர்ந்தே, வந்தவர்களை வணக்கம் வைத்து வரவேற்றனர். பின் மோதிரம் மாத்திக்கொள்ள, இரு மோதிரத்தை, கையில் ஏந்திய படி பிரதியும் தீரனுக்கு நிற்க, மணப்பெண் அருகே தீனாவும் நேத்ராவும் நின்றனர்.


ஆரன் தனது இடது கையை நீட்ட, அவன் கையில் தன் வலது கையை வைக்க போகும் நேரம், நேத்ரா பிடித்துக் கொண்டவள், "அதெப்படி சட்டுனு கையில மோதிரத்தை மாத்திடுவீங்களா? ப்ரோபோஸ் பண்ணுங்க மாமா ! அப்ப தான் பொண்ணு உங்களுக்கு "நேகா ஆரம்பிக்க, மேகாவோ தந்தையை பார்த்துவிட்டு நேகாவை முறைக்க, அவளோ அசட்டை செய்தாள்.


"அதெல்லாம் என் கொழுந்தனாருக்கு சொல்லியா தரணும், பாருங்க எப்படி ப்ரோபோஸ் பண்றார்னு "என்று ஆரனை ஏத்திவிட, "அதையும் பார்க்கலாம் அக்கா பண்ண சொல்லுங்க"நேகா தான் மீண்டும். 


"சரி சரி என்ன வச்சி பண்ணனும் முடிவு பண்ணிட்டீங்க பண்ணுங்க" என்ற ஆரனை நக்கலுடன்" நீங்க தான் மாமா ப்ரோபோஸ் பண்ணணும்" என்றிட, "உங்க ஆசையேன் கேட்டுப்பானே பண்ணிட்டா போச்சி" என்றவன், அவளுக்காக வாங்கி மறைத்து வைத்த ரோஜா கொத்துக்களை மேடையில் இருந்து எடுத்து வந்தவன், அனைவரும் அசர, அவள் முன் மண்டியிட்டு, "சக்கர, இதுவரை எப்படியோ தெரியாது . ஆனா இனி வாழ போற  ஒவ்வொரு நொடியும் நமக்காக மட்டும் தான். இதுவரை நிறைவேறாத உன் ஆசைகளை எல்லாம் நிறைவேத்தற ஒரு நல்ல தந்தையா, நீ எல்லாத்தையும் பகிர ஒரு நல்ல நண்பனா, காதல்ல திக்குமுக்காட வைக்கிற காதலனா, அன்பு கட்டி அரவணைக்கற புருஷனா எப்பையும் இருக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீயா ? உன் வாழ்க்கையின் பாதியா என்னை ஏத்துப்பீயா?" என்று மோதிரத்தை காட்டி கேட்க, கண்களில் காதலுடன் கண்ணீர் பணிக்க தலையசைத்து சம்மதம் சொன்னாள்., அவள் விரவில் மோதிரம் போட, அவள் விழிநீர் அவன் கைகளில் பட்டு தெறித்தன. அதை காண முடியாமல் சட்டென எழுந்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து தன் முழு காதலையும் அவனுக்கு முத்தங்களாக மொழிந்தான். அனைவரும் வாயை பிளந்தனர்.


அவன் விலக, கண் மூடிய வண்ணம் நின்றாள். "சக்கர"அவனது மெய்யான அழைப்பில் விழித்திறந்தவள், "லவ் யூ மிளகா !"கன்னத்தில் தேங்கி நின்ற நீரோடும் உதட்டில் தவழ்ந்த மூரலோடு உரைத்தவள், அவன் விரலுக்குள் மோதிரத்தை செலுத்தினாள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலாகப் பார்த்து நிற்க, நேத்திரன் பாப்பர்ஸ் திறுக, அது இட்ட அரவத்தில் இருவரும் சகஜ நிலைக்கு வர, வந்த மக்கள் அனைவரும் கைத்தட்டினர். 


பார்க்க அழகா இருந்தாலும் அதனை ரசிக்காது உர்ரென்று பார்த்து நின்றார் கங்காதரன். மற்றவர்கள் அதனை ரசித்தனர். 


வந்தவர்கள் மேடை ஏறி மணமக்களை ஆசீர்வதித்து பரிசுகளை கொடுத்து விட்டு செல்ல. அவளுடன் வேலை செய்யும் ஆசரியர் தன் கணவனுடன்  மேடை ஏறி வர, அவரை தீரனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.


"இவங்க தான் அன்பு மிஸ்,  எனக்கு ரொம்ப கிளோஸ், என்னோட வெல்விஸர்.. எனக்கு இன்னொரு அம்மா போல" என்றாள்.


"ஒ... ஹலோ" என்றான்.


"ஏன்டா படவா ! இன்னுமா நீ இவ கிட்ட, 


நான் யாருனற உண்மைய சொல்லல?" என்கவும், மேகா  புரியாமல் விழித்தவள், "உங்களுக்கு இவங்களை தெரியுமா?"எனக் கேட்கவும் நமட்டுச் சிரிப்புடன் நிற்கும் ஆரனை கண்டவளுக்கு அந்த அன்பு மிஸ் யாரென கொஞ்சம் கொஞ்சமாக விளங்க அதிர்ச்சியானாள்

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2