வரன் - 23

 





நேகாவின் தலையில் இரண்டடி தட்டிய பின்னே இருமல் நிக்க, தீனாவின் கையைப் பிடித்துக் கொண்டவள் ' உனக்கு முன்னாடியே தெரியுமா?'  என்பது போல பார்த்து வைக்க, அவனும் தெரியும் என்பது போல கண்களை மூடி திறந்தான். அவனை வெகுவாய் முறைத்து விட்டு தன் அக்காவைப் பார்க்க, அவளோ அதிர்ச்சியில் விரிந்து கிடந்த இரு கண்களை அவன் மேல் பதித்திருந்தாள்.


"மாமஸ் நீங்களும் இவனும் கூட்டு சேர்ந்து விளையாடுறீங்க தான? இது உண்மை  இல்ல தான !" பொய்யாக இருக்கக் கூடும் என்றெண்ணி அவள்  கேட்டு வைக்க, ஆரனோ  சகலையிடம் கண்ணைக்  கட்டினான். அவனும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவள் புறம் வாகாய் அமர்ந்தவன், 


"செல்லக்குட்டி, சகலையும் நானும் விளையாடலடி எங்களுக்கு விளையாடுற வயசு தாண்டிருச்சிமா"என்றான் கேலியாக. விஷயத்தை விளக்குவான் என்று அவன் கூற வருவதைக் கவனமாக கேட்டு வந்தவள் அவனது ஹாஸ்ய வார்த்தைகளை கேட்டு கொதித்து போனாள், " ஆல்ரெடி வெந்து போன மாதிரி இருக்க உன் முகத்த மேலும் வேக வச்சிடுவேன் விஷயத்தை சொல்லு!" எனத் தன் விழிகள் இரண்டையும் உருட்டி மிராட்டினாள்.


"ஓகே ஓகே சும்மா ஃபனுக்கு தான் சொன்னேன். அதுக்கு ஏன் உன் சோலி கண்ண, எனக்கு செய்வனை வைக்கறது போல உருட்ற!" என்றவனை நோக்கி காஃபியை நகர்த்த," சொல்லிடுறேன் சொல்லிடுறேன்" என்று சரணடைந்தவன், " சகலை எனக்கு தான் கால் பண்ணி, உங்க ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறத சொன்னார். நானும் ஏன் இதை என்கிட்ட சொல்றார்னு யோசிச்சேன். அப்றம் தான் சொல்றார், ரெண்டு நாள் போறாங்க, ஸோ அதே ரெண்டு நாளும் நாம நாலும் பேரும் ஏன் டூர் போகக் கூடாதுனு கேட்டார்? ஐடியா நல்லா இருந்தது அதான் ஓகே சொல்லிட்டேன். நீங்க ஸ்கூல்ல டூர் போறது போல வெளிய வாங்க, நாங்க உங்களை பிக் கப் பண்ணிட்டு போயிடுறோம். அதே டூடெஸ் தான் அதே போல நைட் வந்து விட்றோம்.தேட்ஸ் ஆல்" என்று தோளை குலுக்கியவனை 'கொன்றால் என்ன?'என்பது போல இருந்தது நேகாவிற்கு.


"நீ என்ன முட்டாளா தயா? மாமஸ்க்கு தான் அப்பாவையும் பெரியப்பாவையும் பத்தி தெரியல, உனக்குமா தெரியல ! இந்த விஷயம் தெரிஞ்சா எங்களை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவார் உன்னையும் சேர்த்து தான் தயா.  அவரோட கோபத்துக்கு எங்களை நீ பலி கொடுக்காம விட மாட்ட போல " என்றாள் பதற்றத்தோடு.


"உங்க அப்பா கசாப்பு  கடை வச்சிருக்கார்னு சொல்லவே இல்லையே மச்சி நீ! " என நக்கலுடன் கேட்ட ஆரனை தீயாய்  முறைத்தவள் " நீங்க அவங்க ரெண்டு பேரையும் பத்தி தெரியாம பேசறீங்க மாம்ஸ். உண்மை தெரிஞ்சா இந்தக் கல்யாணம் நிக்க கூட வாய்ப்பு இருக்கு. ப்ளீஸ் வேணாம் மாம்ஸ். நாங்க  டூர் கூட போகல வீட்லே இருக்கோம். இந்த ஐடியா வேணாம்" எனக் கெஞ்சினாள்.


"ஏன் இந்த அளவுக்கு பயப்படுறீங்க? நிச்சயம் பண்ண என் கூட தான அவ வர போறா, உன் அத்தைப் பையனோட  நீ வர போற, அவருக்கு தெரிஞ்சா தான பிரச்சனை அதை தெரியாம பார்த்துபோம். இல்ல தெரிஞ்சு அவர்  பெர்மிஷனோட போகணும்ன்னா சொல்லு , நான் போய் கேக்குறேன்" என்றவனைக் கண்டு நொந்தவள், "மாம்ஸ் காலம் மாறானாலும் எங்க ரெண்டு அப்பாவும் மாறாத கேசஸுங்க நீங்க ஈஸியா பெர்மிஷன் வாங்குறேன் சொல்லிட்டீங்க. அது அவ்வளவு  எளிதான விஷயம் இல்ல... எந்த வீட்டலையும் கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளையும் பொண்ணையும் வெளிய போக அனுப்பி வைப்பாங்க? அதுவும் இது மதுரை மாம்ஸ், இங்க அப்படி கிடையாது" என்று இருவரும் தீவிரமாகப் பேச மேகாவோ கற்பனை குதிரை தட்டி விட்டு ஓட விட்டவள், அவரது தந்தை அவளை வெளியே தள்ளும்  அளவுக்குஓடியது. விழித்திறந்திருந்தாலும் கற்பனைக் கனவு கண்டவள் சட்டென " அப்பா " என முகம் வியர்க்க அதிர, அதுவரை இவளை காணாத மூவரும் அவளது நிலையை கண்டு அதிர்ந்தனர். வேகமாக கிளாசில் தண்ணீரையை நிரப்பி அவளுக்கு கொடுத்தான் மடக்மடக் கென்று குடித்தவள் உதட்டை துடைத்தாள்.


"மேகா ஆர் யூ ஓகே" எனக் கேட்டு முதுகை தடவிக்  கொடுத்தான். அவளுக்கு  சரியாகிட ஆரனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்." ஆரன் ப்ளீஸ் இதெல்லாம் வேணாம். எல்லாம் கல்யாணத்துக்கு அப்றம் பார்த்துக்கலாம். இப்ப எதுவும் பிரச்சினை வேணாம் ஆரன்"


"உங்க அப்பாக்கு தெரிஞ்சா தானடி பிரச்சினை வரும்,  நீங்க டூர் போறது போல கிளம்பி வந்திடுங்க.நாங்க உங்களை பிக்கப் பண்ணிக்கிறோம். உங்க ஸ்கூல் எப்ப வந்து விடுறாங்களோ  ! அப்ப வந்து விடுறோம். நீ ஸ்கூல் இருந்து டூர் போறதாவே இருக்கும் சக்கர ! உங்க அப்பாக்கும் எந்த சந்தேகமும் எழாது " தன் திட்டத்தை விளக்க, ஆனால் அது எதுவுமே  அவள் கருத்தில் பதியவில்லை. அவளது மூளை முழுக்க போகாதே என்று உரைத்தது.


"இல்ல வேணாம் ஆரன், இந்தப் பிளான இப்பவே ட்ராப் பண்ணிடுங்க . நாங்க எங்கையும்  போல " என்றதும் அவன் தலையில் கைவைத்து  அமர்ந்து விட்டான்.


"மேகா ! புரிஞ்சிக்க, இது நம்ம  நாலு பேருக்கும் கிடைச்சா நல்ல சான்ஸ் விட சொல்றீயா? பிளான் பக்கவா போட்டாச்சி, நீ ஒத்துக்கிட்டா  சரியா போகும் மேகா !"என தீனாவும் கெஞ்ச, 


"தீனா, நம்ம வீட்டை பத்தியும் உன் மாமா பத்தி தெரிஞ்சும், எப்படி நீயும் சரிங்கற?"

  

"எனக்கு நம்ம வீட்டை பத்தியோ  மாமா பத்தியோ கவலை இல்ல . எனக்கு நேகா கூட ஒரு நாள் முழுக்க இருக்கணும். அவக்கூட பேசணும், அவளை என் பக்கத்துல வச்சிக்கணும் ஆசை அது இப்ப வரைக்கும் முடியல,  நைட் போன் பேசறது தவிர வேற  ஒன்னுமே இல்ல எங்களுக்குள்ள.  சில நேரம் டையர்டா இருக்குனு தூங்கிடுவா ! எனக்கும் காலேஜ்ல வொர்க் பிரஷர் இருக்கு. அந்த பிரஷர நான் குறைக்கணும் மேகா கூட இருக்கணும், இதை மாமா கிட்ட சொல்லி  என்னால் இவள தனியா கூட்டிட்டு வரவமுடியுமா சொல்லு மேகா? ஸோ நான் கிடைக்கற  சான்ஸே யூஸ் பண்ணிக்கனும் நினைக்கிறேன் அவ்வளவு தான். அப்படியே உனக்கு உறுத்திட்டே இருந்தால் மாமா கிட்ட கொஞ்ச நாள் கழிச்சு சொல்லிக்கலாம், அதுவும் அவர் பேரன் பேத்தி கொஞ்சிட்டு இருக்கும்  போது சொல்லிக்கலாம். இப்ப  நம்ம டூர் போலாம்" என்றதும் ஆரன் புன்னகையுடன் மேகாவைப் பார்க்க அவளோ தெளியாமல் இருந்தாள்


நேகாவோ, தீனாவின் கையை பற்றிக் கொண்டவள் அவன் தனக்காக ஏங்குவதை எண்ணிக் கண்கள் கலங்கி, அவன் தோளில் சாய்ந்தாள். "ஸாரி தயா ! நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்" என்றவள் தன் காதலுக்காக அவனுடன் போக எண்ணினாள்  அவள் தலையை அழுத்தினான் ஆரனோ மேகாவை பார்த்து கண்ணைக் காட்டினான்.


ஆனால் ஏனோ அவள் மனது இடமளிக்கவில்லை... "இல்ல , நான் வர மாட்டேன்.  அப்பா என் மேல் நம்பிக்கை வச்சிருக்கார். அதை என்னால  உடைக்க முடியாது" என்று பிதற்றினாள்.


"ஐயோ !! சக்கர அவரோட நம்பிக்கைய நீ என்னைக்கோ  உடைச்சிட்ட,  இப்போ வந்து உடைக்க மாட்டேங்கற, என் கூட போன் பேச, காபி சாப் வரனு அவர் போட்ட கண்டிஷன்ஸ் எல்லாத்தையும் டப் டப்புனு உடைச்சிட்ட செல்லம், அதே போல இப்பையும் அவருக்கு தெரியாம என் கூட வருவீயாம்..." எனவும் அவனை முறைத்தவள், 


"எல்லாம் உங்களால் தான். உங்களால தான் என் அப்பா என் மேல வச்ச நம்பிக்கைய உடைச்சேன்..." என்று அவன் மேல் மொத்த பழியையும் போட்டாள் மேகா


"ஒ... நான் தான் வந்து உன் அப்பாவ ஏமாத்த சொன்னேன்.  அவரோட நம்பிக்கைய உடைக்கறது போல நடந்துக்கச் சொன்னது நான் தான.  இல்லேன்னா நீங்க அப்பாக்கு தப்பாத பிள்ளையா இருந்திருப்பீங்க இல்ல. சனிக்கிழமை ஸ்கூல் சீக்கிரமா விட்டா, உங்க அப்பாவை ஏமாத்திட்டு ஜிகர்தண்டா கடையில் அக்கெளண்ட் ஓபன் பண்ண சொன்னது நான் தான. ஜம் ஜம் கடையில மசாலா பூரிக்கு பேன்ஸ் கிளப் ஓபன் பண்ணதும் நான் சொல்லி தான்,  நீங்க இல்ல பாருங்க "என்றதும் நேகா, மேகா இருவரும் தன் திருட்டு முழித்தனர்.


"இது வேறையாடி?" தயா நேகாவிடம் கேட்க, அவனைப் பாராமல் ஆமாமென்று தலையாட்டினாள். "உங்கள போய் அடக்க ஒடுக்கமான பொண்ணு நினைச்சேனே !" என்றவனின் புஜத்தில் கிள்ளியவள், "இதெல்லாம் பண்ணினதால எங்க அடக்க ஒடுக்கம்  குறைஞ்சு போனத நீ பார்த்தீயா" என அவனிடம் வழக்காட, "தனியாவாடி உன்ன பார்த்துக்கிறேன்" கையை தேய்த்துவிட்டு அவளுக்கு மட்டும் கேட்கப்படி சொன்னான்.


"அதுவும் இதுவும் ஒண்ணா ஆரன்.இதையும் அதையும் சம்பந்தப்படுத்தாதீங்க" 


"தப்புல என்ன சின்ன தப்பு பெரிய தப்பு தப்புனாலே எல்லாம் ஒன்னும் தான். நீ ஆல்ரெடி தப்பு பண்ண ஆரம்பிச்சிட்ட அதுல இதையும் சேர்த்திட்டு என்கூட வற சம்ஜே !" 


"இல்ல என்னால வர முடியாது . நான் வர மாட்டேன்" என்றாள் வீம்புடன். 


"ஏன் ஏன் வர மாட்ட? என்ன ரீசன் சொல்லு ? பட் உங்க அப்பாவை காரணம் சொல்லாத, அவரை ஈஸியா ஏமாத்தலாம், வேற என்ன ரீசன் அதைச் சொல்லு" என்றதும் அவள் தடுமாறினாள்.


"சொல்லு சக்கர வேற என்ன ரீசன்?"


"கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி பொண்ணு பையனும் தனியா தங்கறது தப்பு இல்லையா?" மெல்ல உரைத்தாள்.

என்றதும் அவனால் அவளை ஓரளவு கணிக்க முடிந்தது. 


"ரெண்டும்  பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க தான? தனியா தங்கறதுல என்ன தப்பு?" என்றவனை உறுத்து விழித்தவள், "என்ன தப்பு இல்லங்கறீங்களா?" 


"மனசுக்குள்ள காதல் மட்டும் இருந்ததுனா அவங்க தனியா தங்கறதுல தப்பில்லங்கறேன் !" அவனை பட்டென பார்த்தாள்.


"ஸோ, உனக்கு என்கூட தனியா தங்கறதுல விருப்பம் இல்ல, என் மேல உனக்கு நம்பிக்கை வரல. கல்யாணம் பண்ணினாதான் வரும் அப்படி  தான?" எனவும் பயந்தவள், " இல்ல... நான் அப்படி சொல்ல ஆரன்" என்றவளை தடுத்தவன்.


"உனக்கு அவ்வளவு தான் என் மேல் நம்பிக்கை. கல்யாணத்துக்கு அப்றம் வரட்டும் என் மேல முழு நம்பிக்கை. நீ என்கூட எங்கயும் வர  வேணாம்..  நீ கிளம்பு சக்கர" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்


"இல்ல ஆரன் நான்..." கையை உயர்த்தி தடுத்தவன், "தப்பு தப்புனு சொல்றதுல தெரயுது மேகா ! உனக்கு என் மேல நம்பிக்கை இல்லனு. ஆனா எனக்கு தான் உன் மேலே கண் மூடித்தனமா காதல். 

உன் கூட இருக்கணும் ஆசைப்பட்ட என் மனச சொல்லனும், உனக்கு இந்த செருப்படி தேவையா? நான் தான் காதல் கத்திருக்கான்னு. பொலம்புறேன். ஆனா நீ இன்னனும் அப்பா ஓகே சொன்ன மாப்பிள்ளையா தான் என்னை நினைக்கற ல... ப்ளீஸ் போயிடு மேகா, இல்ல நான் கத்திட போறேன்" என்று முகத்தை திருப்பிக் கொண்டான். 


அழுகையுடன் எழுந்து சென்றாள். "சகலை..."அவன் கையை அழுத்த, "விடுங்க சகல... எனக்கு ஒண்ணுமில்ல !" என்றான். " இந்த டூர கேன்சல் பண்ணிடலாம்" என்றதும். "மறுத்தவன், இல்ல சகல போறோம், மேகாவும் வருவா ! உங்களுக்காவாது கண்டிப்பா டூர் போறோம்... நேகா நான் சொல்றத செய் " என்றவன் திட்டத்தை கூற, சரி என்று தலையாட்டியவள், கிளம்பி செல்ல, இருவரும் வெகு நேரம் கழித்தே சென்றனர்.


முகம் வாட்டதுடன் வந்தவள், தலைவலி என்று அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். இரவு பத்து மணியை தாண்டியும் அவன் அழைக்கவில்லை இவளும் அவனுக்கு அடித்து பார்த்து ஓயந்து போக அவன் எடுக்கவில்லை. அழுதாள் இரவு முழுதும். இரண்டு நாட்கள் இப்படியே செல்ல, டூர் செல்ல வேண்டிய நாளும் வந்தது இருவரும் தங்கள் பொருட்களுடன் பள்ளியை நோக்கிச் செல்ல, அவளை வம்படியாக காரில் ஏற்றி கொடைக்கானலுக்கு கடத்தி சென்றனர்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2