Posts

Showing posts from July, 2024

இதயம் - 35

  இதயம் 35 தான் நினைத்ததை மட்டும் தான் இதுவரை வரை நடத்தி வந்திருக்கிறார் சரஸ்வதி. அவர் வைத்தது தான் சட்டம் என இருந்தது அந்த இல்லம். ஆனால் அவர் வைஷுவை பார்த்த கணத்திலிருந்தே அவரது அதிகாரங்கள் பழிக்காமல் போனது. அவரது வார்த்தைக்களுக்கும் மதிப்பும் இல்லாமல் போய் விட்டது. அவளை கண்டாலே தனக்கு ஆகாது என்று மனதிற்குள் நினைத்துக்  கொண்டார் போலும். அவளை அறவே வெறுத்தார்.  அவள் மேலுள்ள வெறுப்பை தனக்குள் வைத்துக் கொள்ளாமல் அதை வெளியே காட்டியும் வர,  அவருக்குப் பிடித்தது சனி எனலாம்.  அவள் 'எக்கேடும் கேட்டு போகட்டும்' என்று இருக்காமல் தோழியை காப்பாற்றிக்கிறேன் என்று வேறெங்கோ சென்ற ஓணானை தன் மடியில் கட்டிவிட்டது போல தான் கதையானது.  தனது தோழியின் வீட்டிற்கும் மருமகளா 'வைஷு செல்லக் கூடாது' என்று அவளை பற்றி தவறாகச் சொல்லி அவரது மனதிலும் வெறுப்பை விதைக்க வைத்தவர். இன்று அவளையே தன் செல்ல மகன் சைத்துவிற்கு மனைவியாக தனக்கு மருமகளாக்கி, தான் செய்த பாவத்தை அறுவடைச் செய்ய காத்திருக்கிறார் சரஸ்வதி. அவளை மருமகளாக ஏற்க அவருக்கு மனம் வரவில்லை. அவரைப் போல மனமும் முரண்டு பிடித்தது. அவளை மருமகளாக ஏற்றுக

இதயம் - 34

 இதயம் 34 இரவு வீட்டிகுற்கு தாமதமாக தான் வந்தாள் வைஷு. அன்று முழுக்க அவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. சைத்து வந்து பேசிச் சென்றப் பின் எல்லாம் சுத்தம் அவளுக்கு. புதிதாக கத்துக் கொள்ள வந்த கத்துக் குட்டியைப் போல தான் அன்று முழுக்க யார் என்ன கேட்டாலும் 'பே' விழித்துக் கொண்டிருந்தாள். பரணியும் அகிலாவும் பல முறை அவளது பதில்களை கேட்டு தலையில் அடித்து கொண்டனர். 'தயவு செய்து  வீட்டுக்கு போ' என்று கூட சொல்லியும் விட்டனர். ஆனாலும் கேட்காமல் வேலை செய்கிறேன் என்று சொதப்பி வைக்க. அவளை ஓய்வு அறையில் அடைத்து வைத்து விட்டனர். மெத்தையுடன் கூடிய கட்டிலும் குட்டி பிரிட்ஜ்ஜூம் ஒரு பேனும் என தேவையான சில பொருட்களும் அந்த அறையில் இருந்தன. அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது அந்த அறையை உபயோகித்து கொண்டிருந்தனர். முக்கியமாக அகிலாக்கும் வைஷுவிற்கும் தான் அறை அதிகமாகவே பயன்படும். மெத்தையில் வந்து விழுந்தவள்  தலையணையை கட்டியணைத்து, நத்தை போல தன்னை சுருக்கிக் கொண்டு சைத்து சொன்னதை எல்லாம் எண்ணிப் பார்த்தாள். சிறு குழந்தைகள் கூட அவன் நடந்துக் கொண்ட விதத்தை கண்டு 'காதல்' என்று சொல்லிவிடும். 

இதயம் - 33

இதயம் 33 அவள் சொன்னத்தை கேட்டு அதிர்ந்து போனவன் தன் வாய்க்கு ஒரு சிலுவை போட்டது போல சைகை செய்தான்.  'அது' என்றாள் விழிகளால்.  அவன் பைக்கை பார்க் செய்து விட்டு உள்ளே வர, அவனுக்காக காத்திருந்தவள் அவன் வரவும் அவனோடு நடந்தாள். இருவரும் இடத்தை தேடி அமர்ந்து  கொள்ள, அவர்களைக் கண்ட வெயிடரும் ஆடர் எடுக்க வந்து விட்டான்.  இருவரும் 'காஃபியை' ஆடர் சொல்லி விட்டு அமைதியாக இருந்தனர்.  அவன் மட்டும் 'ரசிக்கிறேன்' என்ற பேர்வழியில் அவளை விழுங்குவது போல பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையை உணர்ந்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருக்கும் அசராமல்  தன் விழிகள் அவளை காண மட்டுமே என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனது பார்வை  தன்னை துளைக்க. உடலேனோ ஒரு வித சிலிர்ப்பைக் கொண்டது. அவனது அசாரத பார்வை  அவளை ஏதோ செய்ய பொறுக்க முடியாமல் வாய்விட்டே கேட்டு விட்டாள். " ஏன் இப்ப..." என கேட்கும் முன் வெயிட்டர் வந்து காஃபியை வைத்தான். அவன் செல்லும் வரைக்கும் அமைதியாக இருந்தாள். அவனும் "வேற எதுவும் வேணுமா ஸார்?"என்றான். "நோ  தேங்க்ஸ்"என்று அவனை அனுப்பி வைத்தவ

இதயம் - 32

 இதயம் 32 கூடத்தில் அமர்ந்தவர்கள் அனைவரும் அமைதியைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர். யாரும் யாரிடமும் பேசவில்லை. ஆனால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு எண்ணம் தோன்றாமலும் இல்லை. வெளியே சொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர். சிலர் உள்ளுக்குள் வைத்துக் கொள்ள நினைத்தனர்.  ஆனால் கூடத்தில் அமர்ந்திருந்த சாந்திக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய கட்டாயம். வைஷுவின் இரு நிபந்தனைக்கு அவர் பதில் சொல்லத் தானே வேண்டும்.  அவர் தேவனையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தார். அவர்களோ 'வாயை திறக்க மாட்டோம் ' என்பது போல அழுத்தமாக சாந்தியை தான் பார்த்திருந்தனர். ஆனால் யாருக்கும் அவளது நிபந்தனைக்கு மறுமொழி கூறும் எண்ணம் இல்லை.  சாந்திக்கு தான், மருமகளிடம் மறுமொழி கூற விருப்பமில்லை.  குரலை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்."வைஷுமா, முதல் கண்டிஷனுக்கு என்னால வாக்கு கொடுக்க முடியும்.  நம்ம வீட்லே யாரும் உன்னை  பிலேம் பண்ண மாட்டாங்க. நான் முன்ன சொன்னது போல, மண்டபத்தில என்ன நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். உனக்கும் அக்காக்கு உடம்பு சரி இல்லாமல் போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அதுனால உன்னை யாரும் அ

இதயம் 31

 இதயம் 31 உறவினர்கள் , சொந்தபந்தகங்கள்  நண்பர்கள் என மண்டபத்தை நிறைத்திருந்த அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.  அகல்யா , அவளது  பிள்ளைகளும் வஸ்தி, எகா, விஷ்ணு , மகிழ், வைஷு , தேவன், ஸ்ருதி அவளது  பெற்றோர்கள் மட்டும் தான் மண்டபத்தில் இருந்தனர். தேவன், மண்டபத்திற்கு கொடுக்க வேண்டிய பணக்கணக்கு வழக்குகளை பார்க்கச் சென்று விட்டார். ஸ்ருதி தன் பெற்றோர்களை அனுப்பி வைத்துவிட்டு அகல்யாவிடம் வந்தாள். "அம்மா, வைஷுவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும். என்ன இருந்தாலும் இப்போ அவ நம்ம வீட்டு மருமக. ரெண்டு அத்தைங்க இல்லனாலும் நாம தான அவளை முறையா வீட்டிக்கு அழைச்சிட்டு போகணும். வாங்க போய் அவளை கூட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்..."என் வீட்டின் மூத்த மருமகளாகத் தன் கடமையை ஆற்றினாள் ஸ்ருதி. ஸ்ருதி அகல்யாவிடம் பேச வரும் வரை அதிர்ச்சியில் சிலையாக நின்றவர், அவள் தீண்டலில் தான் நினைவை பெற்றார். தன் இளைய மகளுக்கு சற்று முன் நடக்க இருந்த அந்நியாயத்தை தடுத்து நிறுத்திய வைஷுவை, மகளை காப்பாற்றிய தெய்வமாகப் பார்த்தார் அகல்யா. ஆயினும் அவளே அந்த நரகத்தில் விழுவாள் என்று அவர் நினைக்கவில்லை. பலியாக இருந்த த

மடல் - 14

 மடல் 14 விண்மீன் கூட்டங்கள் ககனத்தை மொய்த்து கொண்டு ஜொலிக்க, இரவெனும் இருள் போர்வை உயிர்களை அணைத்துக் கொண்டது. தாரகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட இவ்விருள் போர்வையை கண்டு  வியந்து கொண்டு விழி மூடாமல் தவிக்கும் உயிர்களில் இவர்களும் ஒன்று. "ஸ்...ஆ மதி வலிக்குது டா !"என்றவளை ஏறெடுத்து பார்த்து முறைத்த மதிவேந்தன்,  மேலும் தேவா தந்த A அண்ட் D  பெயர் கொண்ட களிம்பை கையில்  தேய்த்தான். "வலிக்கும் தெரியும்ல ஏன் போட்டீங்க மேடம்?" என மேலும் நீவிய படி கேட்டான். "போடணும்ன்ற ஆசைல போட்டேன். இது வலி வேற டிப்பார்மெண்ட்  ஆச்சே !" "ம் அப்ப வலிக்கத்தான் செய்யும்.  இதை தவிர நான் ஒன்னும் பண்ண முடியாது !"என்று மீண்டும் தேய்த்தான் . "டேய் அண்ணா ஒன்னு கவனிச்சீயா?" என்று சட்டென மூளையில் உதித்தவொன்றை கேட்டாள் வர்ஷினி, அதற்கு அவனோ, "அந்த பொண்ணை தானே கவனிச்சேன் கவனிச்சேன், பாய் கட்லையும் அழகா தான் இருந்தாங்க... அவங்க டாட்டூ போட்டிருக்கேன் சொன்னாங்க.. எங்க போட்டு இருப்பாங்க யோசிக்கிட்டு இருக்கேன்" என்றான். மதியின் காதில் ஒன்