மடல் - 14

 மடல் 14

விண்மீன் கூட்டங்கள் ககனத்தை மொய்த்து கொண்டு ஜொலிக்க, இரவெனும் இருள் போர்வை உயிர்களை அணைத்துக் கொண்டது.


தாரகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட இவ்விருள் போர்வையை கண்டு  வியந்து கொண்டு விழி மூடாமல் தவிக்கும் உயிர்களில் இவர்களும் ஒன்று.


"ஸ்...ஆ மதி வலிக்குது டா !"என்றவளை ஏறெடுத்து பார்த்து முறைத்த மதிவேந்தன்,  மேலும் தேவா தந்த A அண்ட் D  பெயர் கொண்ட களிம்பை கையில்  தேய்த்தான்.


"வலிக்கும் தெரியும்ல ஏன் போட்டீங்க மேடம்?" என மேலும் நீவிய படி கேட்டான்.


"போடணும்ன்ற ஆசைல போட்டேன். இது வலி வேற டிப்பார்மெண்ட்  ஆச்சே !"


"ம் அப்ப வலிக்கத்தான் செய்யும்.  இதை தவிர நான் ஒன்னும் பண்ண முடியாது !"என்று மீண்டும் தேய்த்தான் .


"டேய் அண்ணா ஒன்னு கவனிச்சீயா?" என்று சட்டென மூளையில் உதித்தவொன்றை கேட்டாள் வர்ஷினி, அதற்கு அவனோ,


"அந்த பொண்ணை தானே கவனிச்சேன் கவனிச்சேன், பாய் கட்லையும் அழகா தான் இருந்தாங்க... அவங்க டாட்டூ போட்டிருக்கேன் சொன்னாங்க..


எங்க போட்டு இருப்பாங்க யோசிக்கிட்டு இருக்கேன்" என்றான்.


மதியின் காதில் ஒன்னு, பொண்ணாக விழுகவும், அவன் மனதிலுள்ளதை கொட்டிவிட்டான்.


பெண்ணவளோ கிருஷ்ணனின் தங்கையான காளி அவதாரத்தை போல உருமாறி இருந்தாள்.


"அண்ணா !"என சத்தமாக அழைக்க,


பதறிய மதி " இப்போ எதுக்கு நீ அவரை கூப்பிட்ற?"


"ம்... உன் சந்தேகத்தை கிளியர் பண்ண தான் கூப்பிட்டேன் அண்ணா ? இரு..."என மீண்டும் ' அண்ணா ' என்று அழைக்க வாயை திறக்க, அவள் வாயை மூடியவன்" ஆத்தா மகமாயி ! எனக்கு சந்தேகமே இல்ல ! அவங்க எங்க பச்சை குத்தினா எனக்கு என்ன? கோர்த்து விட்டு தூங்குற நேரத்துல அட்வைஸ் வகுப்புல அமர வச்சிடாதடி பிளீஸ் !"


"ம்... எப்படி பட்ட அண்ணன வச்சிட்டுடு பொண்ண பத்தி பேசுறியா நீயி ! அதுவும் நான் ஒன்னு கவனிச்சீயானு கேட்டா, உனக்கு பொண்ண கவனிச்சீயா கேட்குதோ "என இடையில் கைவைத்து முறைக்க, அவனோ விழுந்தே விட்டது போல குனிந்து  கை கூப்பி கும்பிடு போட்டான்.


"ம்... அது ! சரி நான் சொல்றத கேளு அண்ணா !"


"என்னடி?"


"நிஜமா ! அண்ணா, நான் பச்சை குத்திக்கிட்டதை  அக்சபட் பண்ணிப்பார் நினைக்கவே இல்ல ! வீட்ல அம்மாவோட சேர்ந்து ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணுவார் நினைச்சேன். அங்கயே என் சீன் முடிஞ்சது நினைச்சேன். ஆனா எல்லாம் டோட்டலா மாறும் நான் எதிர்பார்க்கல டா ! அடிக்க கை தூக்கும் போதே வெலவெலத்து போச்சி என் உடம்பு ! ஆனா சம்பந்தமே இல்லாத ஒரு ஆள் உள்ள ஆஜராகி எல்லாத்தையும் ஒரு செக்ல மாத்திட்டாங்க பார்த்தீயா?"


அவங்க பேச்சை அண்ணா கேட்பார் நான் நினைக்கவே இல்லணா... வீட்டுக்கு வந்து கத்துவார் நினைச்சேன். களிம்பை கேட்டு வாங்கிட்டு வந்து தடவி விடுறார்னா எப்படிப் பட்ட பவர் ஃபுல் வார்த்தையா இருக்கும் அவங்க வார்த்தை. அடங்கிப் போயிட்டார். இப்படி பட்டவங்க  நமக்கு அண்ணியா கிடைச்சா எப்படி இருக்கும்?"என்று கற்பனை கோட்டை  கட்ட ஆரம்பித்தாள் வர்ஷினி


"எனக்குமே, இது நம்ம அண்ணன் தானான்னு தோணுச்சு ! அவங்க சொன்னதும் எப்படி சட்டுனு ஆஃப்பாகிட்டார். எனக்கே ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி ! எப்படியோ உன்னால எனக்கும் திட்டு விழும் என்னையும் கத்துவார்னு நினைச்சேன், கோவிலுக்கே போகாட்டியும் கடவுள் என்னை ரட்சித்து விட்டார்..."என்று மேலே விட்டத்தை பார்த்து கும்பிட்டான்.


"கடவுள் இல்ல கடவுள் போல வந்த அந்த அண்ணி தான் நம்மல காப்பாத்தினாங்க..."என்றாள்.


"எது அண்ணியா?"


"சாரி கன்னிய தான் அண்ணினு சொல்லிட்டேன்... இருந்தாலும் இப்படி பட்டவங்க நமக்கு அண்ணியா வந்து நமக்கு சாதகமா பேசி அண்ணனை அடக்கினா எப்படி இருக்கும்...?"


"வேணாமே !"


"ஏன்?"


"நான் சைட் அடிச்சி அந்தப் பாவத்த பண்ணிட்டேனே !"என்று வழிய, தலையில் அடித்துக் கொண்டவள், " கூவாத்துல முங்குவீயோ இல்ல நல்ல ஆத்துல முங்குவீயோ உன் பாவத்தை கழிச்சிட்டு வந்திடு ! சுமந்திட்டே இருக்காத "என்று  அவள் உறங்கச் செல்ல,


"என்னமோ அவங்களையே அண்ணியா கூட்டிட்டு வர்ற மாதிரி என் பாவத்தை கழிக்க சொல்றா? யார் யாருக்கு என்ன இருக்கோ !"என சொல்லிக் கொண்டு அவனும் சென்று விட்டான்.


இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க, வெளியே அமர்ந்திருந்த தாயும் மகனுமோ வேறுவிதமாக பேசிக் கொண்டிருந்தனர்


"நம்ம  வீட்டுக்கு ஒத்துவராத ஒன்ன செஞ்சிட்டு வந்திருக்கா நீயும் அமைதியா இருக்க ! என்னன்னு கேட்க மாட்டியா வேந்தா?  நாளைக்கு இதே போல வேற எதையும் செஞ்சிட்டு வந்து நின்னா ஒத்துப்பீயா? "என்றதும் "அம்மா "என்றான் அழுத்தமாக,


"இந்தச் சின்ன விஷயத்தால, பாப்பாவ சந்தேகப் படாதீங்க ! என் வரு அப்படி பண்ண மாட்டா ! அவ என் கிட்ட சொல்லப் பயந்தாளே தவிர வீட்டுக்கு தெரியாம பண்ணல, மதிய கூட்டிட்டு தானே போயிருக்கா... நீங்களே உங்க பொண்ணா தப்பா சொல்லலாமா?"


"அப்படி இல்ல வேந்தா ! நாடு கெட்டு கிடக்கு ! பொண்ண வச்சிருக்க பெத்தவங்களுக்கு தான் அந்தப் பதைபதைப்பு தெரியும் பா ! இவ படிச்சி முடிச்சி இவளை ஒருத்தன் கையில குடுக்கிற வரைக்கும் அப்படி தான் இருக்கும்"என்றவரை நிமிர்ந்து பார்த்தான்.


"ரெண்டு பையன வச்சிருக்க உங்களுக்கு பயமில்லையா ? பொண்ணுன்னா மட்டும் ஏன் பயப்படறீங்க? எங்க ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் தப்பு பண்ண ஏத்துப்பீங்களா? அப்ப உங்க மானம் போகாதா?"எனவும் வசந்திக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.


"அதுக்கு இல்லப்பா நான் என்ன சொல்ல வர்றேனா?"


"பொண்ணுங்க தப்பு பண்ணா மட்டும் மானம் மரியாதை போயிட்றது இல்ல. ஆண்கள் நாங்களும் தப்பு செய்தாலும் மானம் மரியாதை போகும். வீட்டு பொண்ணுங்கள மட்டும் குறிப்பாக சொல்லாதீங்க மா ! உங்கள சொல்லி ஒன்னும் இல்ல... படிச்ச நானே அப்படி தான் கொஞ்ச நேரத்துல யோசிச்சு பாப்பாவ அடிக்கப் போயிட்டேன்.


அந்தப் பொண்ணு எனக்கு புரியும் படியா சொல்லலைன்னா அடிச்சிருப்பேன்.


இங்க நாம இத பண்ணக் கூடாது அதை பண்ணக் கூடாது அவளை தடுக்கறோம். ஒரு எல்லைக்குள் நிறுத்தி இதை நீ தான்டக் கூடாது சொல்றோம்... போற வீட்லையும் அப்படியே இருந்தா, வாழ்க்கையில அவ என்னத்த அனுபவிச்சிருப்பா?


உங்களுக்கு கிடைச்ச புருசன போல  என் வர்ஷினிக்கும் பாக்கணும்னு எனக்கும் ஆசை தான் . ஆனா அமையனுமே ! அப்படி அமையலேன்னா அவ இன்னொரு வீட்ல சிறை கைதியா தான இருப்பா ! அதுக்கு அவ ஆசைப்பட்ட வாழ்கையவே குடுக்கலாம்ல ! அவ தேர்வு சரியா இருந்தா, அண்ணனா அவளுக்கு நியாயம் செய்வேன். இல்லையா எடுத்து சொல்லி புரிய வச்சி நல்ல வாழ்க்கை அமைச்சு குடுப்பேன்.


உங்களை போல பயந்து அவ மேலே அவ நம்பிக்கையோட  இருக்க மாட்டேன். நீங்களும் அவ முன்ன காமிச்சுக்காதீங்க உடைஞ்சு போயிடுவா ! அவ இங்க இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருக்கணும்... அதுக்கு நம்ம தான் பொறுப்பு..."என்று எழுந்து செல்ல,


தன்னை கடிந்து கொண்டவர், மகனின் கூற்றை முழுதாக ஏற்க முயற்சித்தார்.


****


இருள் போர்வையை வாரி சுருட்டிக் கொண்டு சந்திரன், ஆதவனுக்கு வழி விட, தன் பொற்கதிர்களை மூலை முடுக்கெல்லாம் பரப்பி தன் வருகையை பதிவு செய்தான்.


வழக்கம் போல ஆரவாரத்துடன் ஆறுமுகனை பூஜை செய்து வழிபடும்  தேவா ! இன்று மௌன விரதத்தில் இருப்பது போல அமைதியாக வெறும் மணி ஓசையுடன் பூஜை செய்தாள்.


"தேவா ! தேவா !"கீழிருந்து யாரோ அழைக்க , முருகனை வணங்கி விட்டு கீழே எட்டிப் பார்த்தாள்.


"என்ன அண்ணே என்ன வேணும்?"என்றாள் மேலே இருந்தவாறு கேட்டாள்.


"ஒன்னுமில்ல மா நீ இருக்கீயா? இல்லையா? தெரிஞ்சுக்க கூப்பிட்டேன் மா "என்றார்.


"எதாவது  உதவி வேணுமாண்ணே !"என்றாள்.


"இல்ல மா காலையில பாட்டு போட்டு காம்ப்ளெக்ஸ் அதகளம் செய்வ இன்னைக்கி காம்ப்ளெக்ஸ்


அமைதியா இருக்கு அதான் நீ வந்திருக்கீயா? கடைய திறந்திருந்திட்டீயா? கேட்க தான் கூப்பிட்டேன் "என்றவரை எதுவும் சொல்ல முடியாத இயலாமையோடு பார்த்தாள்.


அவரது பக்கத்து கடைக்காரனோ, அவர் அருகே வந்து நின்று,"என்ன தேவா பாப்பா ! ரேடியோ எதுவும் ஓடலையா? கொண்டா சரி பார்த்து தர்றேன்..."


"ரேடியோ நல்லா தான் அண்ணே இருக்கு ! அதுக்கு ஒன்னுமில்ல ?"என்றாள்.


"அப்புறம் ஏன் பாட்டு போடலை? உன் பாட்டை கேட்டா தான அந்த நாளே நல்லா இருக்கு ! பாட்டு கேட்காம அமைதியா இருக்கு பாப்பா இந்தக் காம்ப்ளக்ஸ். பார்க்கவே நல்லா இல்ல சீக்கிரமா பாட்ட போடு பாப்பா !"என்றார்.


"அது வந்து... அண்ணே கொஞ்சம் வேலை இருக்கு வந்து சொல்றேன்"என நழுவிச் சென்றவள் , பக்கத்திலுள்ள காப்பிக்காரன் கடைக்கு முன் வந்து நின்றாள்.


"டேய் கதிரே வெளிய வாடா ! நீ வெளியே வரல நான் உள்ள வந்து உன்னை சாவடிச்சி இங்கே உனக்கு சமாதி கட்டிடுவேன் வெளிய வாடா !"எனக் கத்த,


உள்ளிருந்த கதிரோ மஞ்சுவின் பின்னால் ஒளிந்து படி வந்தான்.


"மானங் கெட்டவனே ! பொண்டாட்டி பின்னாடி ஒளியாம முன்னாடி வாடா !"என்றாள்.


அவனும் எச்சிலை கூட்டி விழுங்கிய படி முன்னே வந்தான்.


"என்னடா பொண்டாட்டி பின்னாடி பம்புற  உண்மைய சொல்லு ! எதுக்கு என் கிட்ட பொய் சொன்ன ?"


"பொய்யா அப்படின்னா?"என்றவனை வெட்டவோ குத்தவோ ரீதியில் அவள் பார்த்து வைக்க, இவன்  இளித்து வைத்தான்.


"ச்சீ இளிக்காத ! அந்த பேனா கடைக்காரணும், ஜெராக்ஸ் கடைக்காரணும் என் மேலே பிராது குடுத்திருக்காங்க, அவளை சத்தமா பாட்டு போட வேணாம், அப்பா கிட்ட சொன்னாங்க சொன்ன, அப்பா கூட என்கிட்ட சொல்ல சங்கடப் பட்றதா சொன்னீயே, இப்ப இவனுங்களே வந்து பாட்டு போடலையானு கேக்குறானுங்க ! உண்மைய என்னன்னு இப்போ நீ சொல்ற, இல்ல மூஞ்சி முகரைய எல்லாம் பேத்துடுவேன் !


என் பாட்டுக்கு இந்தக் காம்ப்ளெக்ஸ் அடிமையா இருக்கு, இவனுங்க கம்பிளைண்ட் கொடுத்தானுங்களா? உண்மைய சொல்லுடா ! இல்ல உன்னை கொன்னு என் முருகனுக்கு படையல் போட்டுவேன்...!"என்றாள் மிரட்டலோடு


"ஆமா ! இவுக பெரிய பாப் சிங்கரு ! இவ பாட்டுக்கு இந்த காம்ப்ளக்ஸே அடிமை பாரு ! "


"அடிமை தான்டா ! பாரு ஒரு மணி நேரம் கூட தாக்கு பிடிக்கல ! அதுக்குள்ள நான் இருக்கேன்னா இல்லையா ஏன் பாட்டு போடலை கேட்கிறானுங்க? இதுலே தெரியல நான் போட்ற பாட்டுக்கு இவங்க பேன்ஸ்!"


"பெரிய சீலிங் ஃபேன்ஸ் போடி!"என்றவனின் தலையில் நங்கென்று கொட்டி வைத்தாள்.


"அம்மா "என அலறியவனிடம்


"உண்மைய சொல்லு !"என்ற பிடியிலே நிற்க, அவனோ  அவளிடம் மறைத்து வைத்த உண்மையைச் சொல்ல,  அடுத்த நிமிடமே அவளது அவதாரம் வேறாக இருந்தது. பயந்து போனான் கதிரேசன்


அடுத்த அத்தியாத்திலிருந்து.


"ஸ்கூல் பீஸ் கட்டலை, அதுக்கு ஒரு வாரம் வெளிய உட்கார வைக்கிறது எந்த விதத்துல நியாயம்? எல்லாரும் சமம் தான் ஸ்கூல்ல யூனிஃபார்ம் கொடுத்தாங்க.. ஆனா நீங்க வெளிய உட்கார வச்சி பிரிவினை காமிச்சிட்டீங்கல !"என்ற திகழை கண்டு புரியாமல் விழித்தான் தனிஷ்


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2