இதயம் - 35

 

இதயம் 35

தான் நினைத்ததை மட்டும் தான் இதுவரை வரை நடத்தி வந்திருக்கிறார் சரஸ்வதி. அவர் வைத்தது தான் சட்டம் என இருந்தது அந்த இல்லம். ஆனால் அவர் வைஷுவை பார்த்த கணத்திலிருந்தே அவரது அதிகாரங்கள் பழிக்காமல் போனது. அவரது வார்த்தைக்களுக்கும் மதிப்பும் இல்லாமல் போய் விட்டது. அவளை கண்டாலே தனக்கு ஆகாது என்று மனதிற்குள் நினைத்துக்  கொண்டார் போலும். அவளை அறவே வெறுத்தார். 


அவள் மேலுள்ள வெறுப்பை தனக்குள் வைத்துக் கொள்ளாமல் அதை வெளியே காட்டியும் வர,  அவருக்குப் பிடித்தது சனி எனலாம்.  அவள் 'எக்கேடும் கேட்டு போகட்டும்' என்று இருக்காமல் தோழியை காப்பாற்றிக்கிறேன் என்று வேறெங்கோ சென்ற ஓணானை தன் மடியில் கட்டிவிட்டது போல தான் கதையானது. 



தனது தோழியின் வீட்டிற்கும் மருமகளா 'வைஷு செல்லக் கூடாது' என்று அவளை பற்றி தவறாகச் சொல்லி அவரது மனதிலும் வெறுப்பை விதைக்க வைத்தவர். இன்று அவளையே தன் செல்ல மகன் சைத்துவிற்கு மனைவியாக தனக்கு மருமகளாக்கி, தான் செய்த பாவத்தை அறுவடைச் செய்ய காத்திருக்கிறார் சரஸ்வதி.


அவளை மருமகளாக ஏற்க அவருக்கு மனம் வரவில்லை. அவரைப் போல மனமும் முரண்டு பிடித்தது. அவளை மருமகளாக ஏற்றுக் கொண்டால் அவளிடம் தோற்று போனதாகி விடும் என்று எண்ணியவர். சாந்தி கேட்க அவ்வாறு கோபம் கொண்டார். அவளை மருமகளாக வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது என மன உறுதியோடு இருந்தார். 


மற்றவர்களிடம் சொல்வதை விட, சைத்து விடம்  பேசுவது சரியென்று  நினைத்து அவனைத் தனியாக அழைத்து சென்றார். 


ஆனால் அவர் நினைத்தப்படி அவன் ஒன்றும் அவரது பழைய சைத்துவாக இல்லை. அவனோ முக்கால்வாசி வேற சைத்துவாக மாறிவிட்டான். கால்வாசி மட்டுமே அவரது சைத்துவாக இருக்க,  அவருக்கு சத்தியம் செய்து கொடுத்தான்.  


அதுவும் அவருக்காக அவரது உடல் நிலையை குறித்து தானே தவிர, அதில் முழு உடன்பாடோடு சத்தியம் செய்யவில்லை. நிலமை மாறும் என்ற நம்பிக்கையில் தான் சத்தியம்  செய்தான். நிலமை மாறும் தான். ஆனா அவன் நினைத்ததைவிட வேறாகிப் போகும் என்று அறியாமல் போனான். 


இருவரும் பேசி முடித்து விட்டு வெளியே வந்தனர். சாந்தி இருவரையும் கலக்கமாக பார்த்தார். சைத்துவோ அமைதியாக வந்தான். ஆனால் அவனது உள்ளக் குமறலை அவனால் வெளியே கொட்டி விட முடியவில்லை. தன் காதலி , அதிர்ஷ்டவசத்தால் அவளையே மனைவியாக வந்தாலும் 'குறுக்க இந்த கௌசிக் வருவான்'என்பது போல இருவருக்கும் நடுவில் மலைப் போல வந்து நிற்கிறார் சரஸ்வதி. 


ஏனோ அவன் புத்தியைக் கொஞ்சம் உபயோகித்ததால் தான் அவன் காதலையும் வாழ்க்கையையும் கொஞ்சம் காப்பாற்ற முடிந்தது. இல்லையே அவனது கல்யாண வாழ்க்கைக்கு முழுக்கு போட்டிருப்பார் சரஸ்வதி. 'ஏதோ தப்பித்தோம்' என்று  கொஞ்சம் நிம்மதியுடன் வெளியே வந்தான். 


இருவரும் பேசிக் கொண்டதை வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டி வேறு வைத்திருக்கார். எல்லாம் அவரது உடல் நிலையைக் காட்டி தான் மிரட்டி அடக்கி வைத்திருக்கிறார்.  இல்லையேல் அவரது  பேச்சை தான் கேட்பானா என்ன??' 


"சாந்தி ! உங்க இஷ்டம் போல பண்ணுங்க. நான் சைத்துக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிறேன்"என்று உள்ளே சென்று விட்டார். சாந்தி , சைத்துவிடம்  'அக்கா என்ன சொன்னார்?'என்று வினவ அவனும்  ஒன்னும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டான்.


"என்னங்க,  இவனும் எதுவும் சொல்லாம போறான். அவங்களும் சைத்துவுக்காகனு சொல்லிட்டு போறாங்க எனக்கு ஒண்ணுமே புரியலங்க..."என்று அவர் குழம்ப, "சாந்தி, எதுக்கு தேவையில்லாம  குழம்பிட்டு இருக்க. அதான் அண்ணி ஒத்துக்கிட்டாங்கல. அவங்க மனுசு மாறாதுகுள்ள சீக்கிரமா நல்ல நாள் பார்த்து ரிசப்ஷன வைச்சி மருமகளை கூட்டிட்டு வந்திடுவோம். நீ எதுக்கும் கவலை படாத "என்றார்  தேவன். 


"தம்பி சொல்றது சரிதான். இனி உன் அக்கான்னு பார்க்காத, வாழ போற சைத்துவை பார். நல்ல காரியத்தை இனியும் தள்ளி போடாமல், சீக்கிரமாக முடிக்க பார். அவனும் வாழ வேண்டிய பையன் மா ! அவனுக்காக யோசி"என்றார் பிரபு. சாந்தியும் சரியென தலையை அசைத்தார். மூவரும் சேர்ந்து  முகூர்த்த நாளாக மூன்று நாட்களை குறித்து அதை விஷ்ணுவிடம் தெரிவிக்க, அவரும் தன் குடும்பத்து ஆட்களிடம் பேசி விட்டுச் சொல்வதாக கூறிவைத்து  விட்டார். 

இரவு வீட்டில் அனைவரும் கூடியிருக்க, விஷ்ணு, தேவன் சொன்ன மூன்று நாட்களை சொல்லி எந்த நாளில் ரிசப்ஷன் வைக்கலாம் என்று தன் மணையாளிடமும் மக்களிடமும் கேட்டார். 


அவர்களும் உங்க இஷ்டம் என்று விட,   கொடுத்த மூன்று நாளில் ஒரு நாளை தேர்வு செய்துவிட்டு தேவனுக்கு தகவலை சொன்னவர், அடுத்தடுத்த என்ன செய்ய வேண்டும் என்று பேசி விட்டு வைத்து விட்டனர். 


ஐவரும் சேர்ந்து உணவு உண்ண  எகாவின் முகம் மட்டும் சரியில்லை. இன்னமும் எகா, வஸ்திக்குள் சண்டை நீடித்துக் கொண்டிருந்தது. 


அன்று  இரவு உணவை மறுத்து விட்டு அறைக்குள் அடைந்து கொண்டான். அவனை எவ்வளவு அழைத்தும் வர மறுக்க, அவர்களும் விட்டு விட்டனர். அவனுக்காக பால் எடுத்து வந்து கொடுத்தாள் வஸ்தி. 


"காந்த் ! இந்தா இதையாவது  குடியேன்"என்று பாலை நீட்டினாள் வஸ்தி. 


"எனக்கு எதுவும் வேணாம். அதையும் நீயே குடி"என்று அவளை பாராமல்  அலைபேசியை பார்த்தபடி சொன்னான். அவளுக்கும் கோபம் வந்து விட்டது. 


"இப்போ ! நீயென் கோபமா இருக்க? உனக்கு என்ன தான் பிரச்சனை காந்த்?" 


"ஏன் கோபமா இருக்கேன் உனக்கு தெரியாதா? மறுபடியும் உனக்கு தனியா குறும்படம் போட்டு காட்டணும்... "என்று கடுப்பில் அவள் மீது எரிந்து விழுந்தான். 


"பச்... எனக்கு புரியல டா ! உனக்கு வைஷு சைத்துவை கல்யாணம் பண்ணினது  புடிக்கலையா? இல்லை  வைஷுவும் நானும் சைத்துவுக்கு சப்போர்ட் பண்ணி பேசறது புடிக்கலையா. எதனால இப்போ நீ கோபமா இருக்க?" 


"எல்லாம் தான் காரணம்"என்றான் பல்லைக் கடித்துப்படி. 


"எல்லாம்னா  என்ன அர்த்தம்? வைஷு, அவ வாழ்க்கையை அவ சூஸ் பண்ணிருக்கா? அவளுக்கு பிடிச்சவனோட வாழப் போறாள். இதுல உனக்கு என்ன கோபம் காந்த்? அவளே நான் பாத்துக்கிறேன் சொல்லும் போது உனக்கு என்ன டா பிரச்சினை??" 


"அவ, பார்த்துக்கிறேன் சொன்னா அப்படியே விட முடியுமா? அவ அந்த சைக்கோவ கல்யாணம் பண்ணிருக்கா. அதை நினைச்சாலே எனக்கு ஆத்திரமா வருது. இதுல அவன் அவளை லவ் பண்றானா? இதெல்லாம் கேட்க ஸ்டுபிட்டா இல்ல.  எனக்கு என்னமோ இதெல்லாம் இவனோட ட்ராப்பா தான் இருக்கும் தோணுது. அந்த நாய் ஏதோ பிளான் பண்றானோனு தோணுது. இவளும் அதை புரிஞ்சுக்காம அவன நல்லவன் நினைச்சி அவன் லவ் பண்றான் சொல்லி நம்மலை முட்டாளாக்கிட்டு இருக்காள்... நீங்களும் அது நம்பிட்டு இருக்கீங்க? அந்த நாயோட முகத்திரை ஒரு நாள் கிழியும் அப்ப தெரியும்" கோபத்தில் தன்னை அறியாமல்  பேசி விட்டான்.


"ஸ்டாப் பிட் காந்த. என்ன கேவலமான கற்பனை உன்னோடது? எதுக்கு சைத்து ட்ராப் போட்டு வைஷுவ கல்யாணம் பண்ணிக்கனும். வைஷுவா தான் போய் மணமேடையில் உட்கார்ந்தாள். சைத்து ஒன்னும் அவளை வம்படியா உட்கார சொல்லல. இன்பாக்ட் அவன் அவளை லவ் பண்ணி இருந்தும் அவகிட்ட சொல்லாம தான இருந்தான். இவளா போய் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தால் அவனுக்கு இவளுக்கு சம்மந்தம் இல்லாமல் தான் இருந்திருக்கும். உண்மை என்னானு தெரிஞ்சுக்காம ஒருத்தர் மேல பழிய போடாத காந்த. அதுவும் இப்போ அவன் இந்த வீட்டு  மாப்பிள்ளை நாம மரியாதை கொடுக்கணும் டா"எனவும் அவனுக்கு மேலும் கோபம்  வர,


"ஆமா, அந்த நாய்க்கு மரியாதை ஒன்னு தான் கேடு!" என்று முனங்க, 


"காந்த போதும். இது அப்பா , அம்மா காதுக்கு போச்சினா என்ன நினைப்பாங்க. அவன் மேல உனக்கு ஏன் டா இவ்வளவு வெறுப்பு? இவ்வளவு கோபம் ஏன்டா?"


"ஏன் உனக்கு தெரியாதா?? உன் மேல விருப்பமே இல்லாம உன்னை பழி வாங்கறேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னவன் தானே ! அவன் நல்லவனா??? சைக்கோ சைக்கோ ஒன்னா நம்பர் சைக்கோ... ! அது தெரியாம அவனை நல்லவன் நொல்லவன் சர்டிபிகேட் கொடுத்துட்டு இருக்கீங்க... உங்களுக்கு தான் அறிவே இல்ல"என்று  தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றே இருந்தான்.


"காந்த, மனுஷன் எல்லா நேரம் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.  அவன் அப்போ அப்படி இருந்தான்.ஆனா இப்போ அவன் மாறியிருக்கலாம்ல. கொஞ்சம் அவனை புரிஞ்சக்க ட்ரை பண்ணு !"என்றாள்.


"நீ என்ன அவனுக்காக இவ்வளவு பேசற. ஓ அவன் உன் கசினாலையா? ரெண்டு பேரும் என்ன கூட்டா...?"என வாயை விட,


"கூட்டா கூட்டுனு என்ன சொல்ல வர நீ?" அவன் விட்ட வார்த்தையை பிடித்துக் கொண்டாள்.


"நான்... அது..."என தடுமாற, "என்ன உங்க மாமா சொத்த எழுதி வாங்க கூட்டா வந்திருக்கும் சொல்ல வர்றீயா?"என நக்கல் இழையோட ஆத்திரத்திலும் கேட்டு விட, சப்பென்று அடித்து விட்டான்.


அவள் கன்னத்தில் கைவைத்தவள் கண்ணீரோடு முறைத்து நிற்க. அவனோ சென்று அவளுக்கு முதுகாட்டிய படுத்துக் கொண்டான். அவளும் ஓரமாக வந்து படுத்துக் கொண்டாள். அன்றிலிருந்து இரண்டு மூன்று நாட்களானது  அவனும் அவளும் பேசிக் கொண்டு.


விஷ்ணவும் மகிழும் அதை கண்டும் காணாமல் இருந்து கொண்டனர். இது உள் கட்சிப் பூசல் நமக்கு  எதுக்கு வம்பு என்று இருந்து விட, வைஷுவிற்கு தான்  கொஞ்சம் குற்றவுணர்வாக இருந்தது.


இருவரும் இறங்கி வராமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தனர். "யாராவது ஒருத்தர் இறங்கி வந்தால் தான் என்ன?"என வைஷு கேட்க, அமைதியாக  நின்றாள் வஸ்தி."என்னை வச்சி ஏன் மக்கா சண்டை போட்டுகிறீங்க.சரி வஸ்தி அவன் தான் தப்பு செஞ்சான்.  நான் சொல்லறபடி செய் அவனே இறங்கி வருவான்"என்று ஐடியா கொடுக்க அவளை அணைத்து முத்தம் வைத்தாள்


"ஆமா எனக்கு குடு ! இத அவனுக்கு கொடுத்திருந்தால் இந்நேரம் பிரச்சனை முடிஞ்சு இருக்கும்..."என்றிட, "ச்சி போடி "என்று வெட்கம் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.


அவள் சொன்னது போலவே மாலை நான்கு மணிக்கு கிளம்பி பரதம் சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு சென்றாள்.  ஆனால் 'வகுப்பு இல்லை' என்று கூறிவிட்டு வாசலில் அமர்ந்து விட்டாள். அவனும் கல்லூரி முடிந்ததும் நேராக அவளை அழைத்து போக வந்தான்.


அவன் வரும் நேரம், அவள் மானாக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டிருப்பாள். இல்லை என்றால் தாளம் போட்டு கொண்டிருப்பாள்.


இன்று அவள் வாசலில் தனியாக அமர்ந்திருந்தாள். அவனும் அவள் தனியாக அமர்ந்திருப்பத்தை கண்டு விட்டு அருகில் வந்தான்."இன்னைக்கி கிளாஸ் இல்லையா??" என கேட்டான்.


அவளும் அவனை பாராமல்" இல்ல வைக்கல"என்றாள்.  "வைக்கலனு வீட்ல இருந்திருக்க வேண்டியது தானே ! நானும் அலைஞ்சிருக்க வேண்டியது இல்லேல"என்றதும் அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.


"சரிவா போலாம்... " என்றழைத்தான்.


"நான் வரல, ரெண்டு நாள் இங்க தான் இருக்கப் போறேன். அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டேன். நீ இருக்கிறதுனா இரு இல்லனா போறதுனா போ ! "என்றாள்.


"ஏன் இங்க இருக்கணும் நினைக்கற?" 


"நிம்மதி வேணும் அதுக்கு தான்..."என்றாள். "சரி நீ இருந்துட்டு வா நான் கிளம்புறேன்"என்றவனை வெறித்துப் பார்த்தாள். அவனும் பைக்கை எடுத்துக் கொண்டுச் செல்ல அவளுக்கு அழுகையே வந்தது. முகத்தை மூடிக் கொண்டு அழ, பக்கத்தில் யாரோ அமர்வது போல இருந்தது. முகத்தை தூக்கி பார்த்தாள். அவன் தான் அமர்ந்திருந்தான்.


"பிரதி மா... !"என அவள் கையை பற்றி இறங்கி வர, அவன் கையை தட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள். அவனும் கதவைத் தாழிட்டு உள்ளே வர, உள்ளே முற்றத்திலிருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினாள். அந்த நேரத்தில் தண்ணீர் ஊற்றவது அவன் தான். இன்று அவள் கையில் எடுத்திருந்தாள்.


தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவளை வெடுக்கென்று திருப்ப, சட்டென திரும்பியவள் அவனையும் நனைத்திருந்தாள்.


"ஐயோ ! ஸாரி ஸாரி காந்த ! தெரியாம பண்ணிட்டேன்"என்றிட, "இல்ல நீ வேணும்னே தான் பண்ணின"என்று அவனும் அவள் மேல் நீரை அடித்து விட இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டு தொப்பலாக நனைத்தனர் .


அவன் அவளைப் பிடிக்க வர, அவனது கைகளுக்குள் சிக்காமல்  ஓடியவள் தண்ணீரில் வழுக்கி விழப்போக இருந்தவளை, விழாமல் பிடித்து தூக்கியவன், அவளை கைக்குள் இரண்டாக மடித்து  அறைக்கு தூக்கிச் சென்றவன் மெத்தையில் கிடத்தினான்.


அவன் தலையில் நீர் சொட்டு சொட்டாக வடிய அவளோ போர்வையைக் கொண்டு கைகளைத் தூக்கி துடைக்க, அவனோ இதான் சாக்கென்று அவளது  அங்கங்களை அளந்தான். அவளும் அவன் கைகளை தட்டி விட்டாள். அவனும் பாவம் போல "சாப்டு நாளாச்சிடி..."என்றான் அவள் தேகத்தை ருசித்தபடி "உன்னை யாரு சாப்பிட வேணாம் சொன்னது. நீ தான முறுக்கிட்டு போன !"என்றாள்.


"அதுக்காக புருஷன பட்னி போடுவீயாடி நீ???"


"நீ சாப்பாடு வேணாம்னு பட்னியா கிடந்தால் நான் அதுக்கு ஆளா??? போடா??"என்றாள்."ம்ம்ம்... உனக்கு வாய் கூடி போச்சு இருடி"என்றவன் அவளை சிறையெடுக்க, அதன் பின் எல்லாம் அவன் வசம் தான்.


சின்ன சின்ன முனங்களோடு அவர்களது கோபம்  காற்றோடு  கரைந்து காதலும் காமமும் போட்டி போட்டுக் கொண்டு ஆட்சி  செய்தது அவ்விருவருக்கும் இடையில் . இரண்டு நாள் கழித்து மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர் இருவரும். 


பெரியவர்கள் அவர்களது சிரித்த முகத்தைக் கண்டு மனம் நிம்மதி அடைந்தது. இருவரும் ரிசப்ஷனுக்கான வேலைகளை இழுத்து போட்டு செய்தார்கள். எகா வைஷுவிற்காக அனைத்து வேலைகளையும் செய்தான். வீடே கலைக் கட்டிருந்தது.


****


"என்ன பெரிய மாமியார், உங்க கல்லூரித் தோழி உங்களை புகழ்ந்திட்டு போறாங்க போல..." என வைஷு நக்கல் செய்ய, "எல்லாம் உன்னால் தான்டி. உன்னை மாதிரி ஒரு அடங்காபிடாரி அவளுக்கு மருமகளா வரக் கூடாதுனு அவளுக்கு நல்லது பண்ணனும் நினைச்சேன். ஆனா அவ என்னையவே திட்டிட்டு போற ! அவளுக்கு நல்லது நினைச்சி பாரேன் என்ன சொல்லணும்"என அவளை முறைத்து கோபத்தை அடக்க,


"உங்களை தான் சொல்லணும்  பெரிய அத்தை"என்றவளை பல்லைக் கடித்துக் கொண்டு  பார்த்து நின்றார்.


" அவங்களுக்கு நல்லது செய்யணும்னு  இருந்த உங்க நல்ல மனசுக்கு தான் நானே உங்களுக்கு மருமகளா வந்திருக்கேன் பெரிய அத்தை. நான் உங்களுக்கு மருமகளாக நீங்க என்ன கொடுத்து வச்சிருந்தீங்களோ. உங்க  நல்ல மனசுக்கு இனி நல்லதே நடக்கும். அதுவும் நான் இருக்கற வரைக்கும் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் பெரிய அத்தை... "என்று கேலியாக உதட்டை வளைக்க, அவளை ஏதும் சொல்ல முடியாமல் கையறு நிலையில் தன்னை அடக்கி கொண்டு நின்றார் சரஸ்வதி. 

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2