இதயம் - 34

 இதயம் 34

இரவு வீட்டிகுற்கு தாமதமாக தான் வந்தாள் வைஷு. அன்று முழுக்க அவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை.


சைத்து வந்து பேசிச் சென்றப் பின் எல்லாம் சுத்தம் அவளுக்கு. புதிதாக கத்துக் கொள்ள வந்த கத்துக் குட்டியைப் போல தான் அன்று முழுக்க யார் என்ன கேட்டாலும் 'பே' விழித்துக் கொண்டிருந்தாள்.


பரணியும் அகிலாவும் பல முறை அவளது பதில்களை கேட்டு தலையில் அடித்து கொண்டனர். 'தயவு செய்து  வீட்டுக்கு போ' என்று கூட சொல்லியும் விட்டனர்.


ஆனாலும் கேட்காமல் வேலை செய்கிறேன் என்று சொதப்பி வைக்க. அவளை ஓய்வு அறையில் அடைத்து வைத்து விட்டனர்.


மெத்தையுடன் கூடிய கட்டிலும் குட்டி பிரிட்ஜ்ஜூம் ஒரு பேனும் என தேவையான சில பொருட்களும் அந்த அறையில் இருந்தன. அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது அந்த அறையை உபயோகித்து கொண்டிருந்தனர். முக்கியமாக அகிலாக்கும் வைஷுவிற்கும் தான் அறை அதிகமாகவே பயன்படும்.


மெத்தையில் வந்து விழுந்தவள்  தலையணையை கட்டியணைத்து, நத்தை போல தன்னை சுருக்கிக் கொண்டு சைத்து சொன்னதை எல்லாம் எண்ணிப் பார்த்தாள்.


சிறு குழந்தைகள் கூட அவன் நடந்துக் கொண்ட விதத்தை கண்டு 'காதல்' என்று சொல்லிவிடும்.  அந்த அளவிற்கு காதலைச் சொல்லாமல் செயலில் காட்டிக் கொண்டிருந்தான்.


அவள் அதை 'காதல்' என்று முடிவு செய்து கொண்டாலும் அவன் வாயிலிருந்து வராமல் எதையும் தாமாக முடிவு செய்துவிட்டு பின் வருத்தபடக்கூடாது என்று தெளிவாக தான் இருக்கிறாள். அதுவும் அவன் 'சைக்கோ' எந்த நேரத்தில் என்ன பேசுவானென்று கணிக்க முடியாது. அதனால் 'அவனாக வந்து  சொல்லும் வரைக்கும் பொறுமையா இருப்போம்' என்று எண்ணிக் கொண்டவள், 


'நம்மலை லவ் பண்ணிட்டு எப்படி வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டான்?' என அவளுக்கு அவளே கேள்வியை  கேட்டுக் கொள்ள, 'அவன் தான் சைக்கோ வாச்சே ! இதுவும் பண்ணுவான் இதுக்கு மேலையும் பண்ணுவான்' என்று அவளுக்கு அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள்.

அவனிடம்  நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனாலும் பொறுமையாக இருக்கவே முடிவு செய்தாள். அன்று முழுதும் அதே யோசித்தவளுள் உறக்கம் சிறிதும் எட்டவில்லை.


சோர்வுடன் வரும் மகளை கண்டு வருந்தியவர், அவள் முன்னே சென்று " வா வைஷு சாப்பிடலாம்"என்று உண்ண அழைத்தார்  மகிழ்.


"எனக்கு எதுவும் வேணாம்" என்று அலட்சியம்  செய்து விட்டு அறைக்குள் முடங்கச் சென்றாள். அவருக்கு அவளது செயலால் கோபம் பழியாக வந்தது. "நில்லுடி... எதுக்கு இப்போ சாப்பாடு வேணாங்கற? நியாயமா பார்த்தால் நாங்க தான் உன் மேல் கோபப்படணும். நீ எங்க மேல கோபமா இருக்க?"எனக் கத்தினார். 


"இப்போ மட்டும் எப்படி இருக்கீங்க? கோபமா தானே இருக்கீங்க ! என்ன ஏதுனு கூட கேட்காம முகத்தை திருப்பிட்டு தானே போனீங்க? இப்போ மட்டும் வந்து எதுக்கு பேசறீங்க? " அவளும் தன் ஆத்திரத்தைக் கொட்டி விட்டு, மீண்டும் உள்ளே செல்ல எண்ணியவளைத் தடுத்தார் விஷ்ணு


"நீ பண்ணது தப்புனு உனக்கு தோணலையா வைஷு?" 


"தப்பு தான்ப்பா தப்பு தான். ஆனா மக எதுப் பண்ணினாலும் அதுல ஒரு ரீசன் இருக்கும் உங்களுக்கு தெரியும் தானே ! இத்தனை நாளா நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணிங்க தானே. இந்த விஷயத்தில மட்டும் ஏன் பா உங்களுக்கு கோபம் வந்தது? ஏன் என்னை புருஞ்சுக்கல சொல்லுங்க..." 


"அப்படி சப்போர்ட் பண்ணினதுனால தான்.  இப்படி ஒரு விஷயத்த நீ பண்ற அளவுக்கு உன்னை தூண்டி விட்டிருக்கு. எல்லாம் என் தப்பு தான். என் பொண்ணு எல்லாத்தையும் சரியா செய்வானு நினைச்சது என் தப்பு தான்"என்றதும், கோபத்தில் கத்தி விட்டாள்.


"ஸ்டாப் இட் பா ! இது வரைக்கும் நான் ஏன் இப்படி செஞ்சேன் கேட்கவே இல்ல நீங்க? தப்பு தப்புனு சொல்றீங்க. ஏன் அந்த தப்ப செஞ்ச நீங்க கேட்க மாட்டீங்கல. அப்ப நானும் சொல்ல மாட்டேன்... என்னை எவ்வளவு சீக்கிரமா  அந்த வீட்டுக்கு அனுப்ப முடியுமோ  அனுப்பிடுங்க. அப்றம் இந்த வீட்டுக்கு வந்து உங்களை நான் எப்பையும்  டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். அப்றம் நான் செஞ்ச தப்புக்கு நீங்க ஒன்னும் பேனாலிட்டி கட்ட வேண்டாம். என் ஸ்டூடியோவ வித்தாவது

என் ரிஷப்சனுக்கு நான் செலவு பண்ணிருக்கிறேன். என்னால் உங்களுக்கு நேர்ந்த அவமானத்துக்கும் மன்னிப்பும் கேட்டுகிறேன். எவ்வளவு சிறப்பா ரிஷப்பசன வைக்க முடியுமோ வைச்சு இழந்த உங்க அவமானத்த கொஞ்சமாவது திரும்பக் கொடுக்கிறேன். இனி உங்களுக்கு எந்த அவமானமும் என்னால வராது"என்றவள் கண்ணீருடன் கோபமாக உரைக்க, விஷ்ணுவும் மகிழும் அதிர்ந்து விட்டனர் அவளது பேச்சால். 


"வைஷு ஏன் இப்படி பேசற நீ? நீ பண்ண விஷயத்தை தாங்கிக்க முடியுமா  தானே அப்பா உன் மேல் கோப்ப்படுறார். ஆனால் ஒரு நாளும் நீ பண்ணினத அவமானமா பார்க்க மாட்டார் வைஷு... நீ ஏன் இப்படி பண்ணனின அப்பா கிட்ட தெளிவா சொல்லு ?" வஸ்தியும் சொல்ல.


"அதைப் பத்தி ஏதாவது கேட்டா தானே சொல்ல முடியும் வஸ்தி. அவங்க தான் கேக்கலையே ! நான் பண்ணது தப்புனு தானே சொல்லிட்டு இருக்காங்க..."


"சரி, நீ சொல்லு வைஷு ஏன் அப்படி பண்ணின?"விஷ்ணு பொறுமையாக கேட்டார்.


அமைதியாக நீள்விருக்கையில் அமர்ந்தவள் முகத்தை துடைத்துவிட்டு அங்கிருந்த மூவரையும் பார்த்தாள். சரியாக எகாவும் வந்து சேர்ந்தான். நால்வரும் அவள் சொல்ல போகும் கதை கேட்க  இருந்தனர். 


"அன்னைக்கி வதனா ஆன்ட்டி, 'வேலைக்கு போற மருமக வேணாம்' சொன்னதெல்லாம் என்னை நிராகரிக்க சொன்ன ஒரு ரீசன் தான் பா. வதனா ஆன்ட்டிக்கு என்னை அப்ப புடிக்கல  காரணம் அந்த சரஸ்வதி ஆன்ட்டி தான்" என்றதும் மூவரும் அதிர்ந்தனர்.


"என்ன சொல்ற வைஷு அந்தம்மாவா??" என அதிர்ந்து கேட்டார் மகிழ்.


"ஆமா அந்தம்மா தான். வஸ்தி கல்யாணத்துக்கு வந்த வதனா ஆன்ட்டி கிட்ட என்னை பத்தி தப்புத்தப்பா சொல்லி அவங்க மனசுல என்னை பத்தின தப்பான இமேஜ் கிரியட் பண்ணி வச்சிருக்காங்க. அதுனால வதனா ஆன்ட்டி என்னை வேணாம் சொல்ல அப்படி ஒரு ரீசன சொல்லிட்டு  போனாங்க... இதை அவங்களே என் கிட்ட சொன்னாங்க "என்றவள்  நடந்த அனைத்தையும் அவர்களிடம் கூறி முடித்தாள். 


"நான் அன்னைக்கி சைத்துவை  கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கலப்பா. நான் அந்தப் பொண்ண அவன் லவ்வர் கூட அனுப்பினத்துக்கு இன்னொரு காரணம் அந்த அம்மாக்கு பாடம் புகட்டனும் தான். கல்யாணம் நின்னு போனால் அந்தப் பையனோட சேர்ந்து அவங்க பெத்தவங்களும் எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு  அந்த வலிய அவங்க கிட்ட சொல்லணும் நினைச்சேன் பா. ஆனா அப்பையும் அவங்க செஞ்ச தப்ப புரிஞ்சுக்காம அந்தச் சின்ன பொண்ணோட வாழ்க்கைய அழிக்க பார்த்தாங்க... வேற வழி இல்லாம தான் நான் மேடை ஏறி  கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ப்பா. தப்பு தான் உனக்கு ஏன் அந்த அக்கறைனு நீங்க கேட்கலாம்? அந்த பிரகதிய அவன் கல்யாணம் பண்ணிருந்தால், பிரகதியோட வாழ்க்கை அழிய நானும் ஒரு காரணமா இருந்திருப்பேன். அந்தக்  குற்றவுணர்ச்சி என்னை கொன்னுடும் தான் அப்படி பண்ணினேன் பா !"என்றாள் உருக்கமாக, 


"அது மட்டுமில்ல, எந்தப் பொண்ண அவங்க வேணாம் சொன்னாங்களோ ! எந்த பொண்ண பத்தி தப்புத்தப்பா சொல்லி அவ கல்யாணத்தை நிறுத்தினாங்களோ ! அவளே அவங்க வீட்டு மருமகளா போனா ! அப்படி  யோசிச்சு தான் பா இதை செஞ்சேன். என் மனசு ஆறல ப்பா ! நான் என்ன பண்ணுவேன். என்னை பத்தி கீழ்த்தரமா சொல்லி ஏன் என் கல்யாணத்தை நிறுத்தணும்? அவங்களுக்கு நான் என்ன பண்ணினேன்? அவங்க மனசில ஏன் என் மேல இவ்வளவு க்ரோதம் இருக்குனு தெரியலப்பா? ஆனா அதை  நான் கலை எடுக்கணும் பா ! இல்ல அது எனக்கு தான் ஆபத்து. நாளை பின்ன என் கல்யாணத்துக்கு வந்து அங்கயும் என்னைப்பத்தி நாலுபேர் கிட்ட  பேச மாட்டாங்க என்ன நிச்சயம்? அதுனால் என் கல்யாணம் நிக்காது என்ன நிச்சயம்???? நாம்  எதிர்பார்த்திருப்போமா என் கல்யாணம் நிக்கும் அதுவும் அவங்களால் நிக்கணும் நாம

நினைச்சோமா??? எனக்கு அவங்களை சும்மா விட மனசு வரல ப்பா அதான் இப்படி செஞ்சேன். உங்களுக்கு வேணா தேவை இல்லாத காரியமா இருக்கலாம் எனக்கு அப்படி இல்ல.. உள்ள வலிக்குது. என் வாழ்க்கையில் சம்பந்தமே இல்லாத ஆள் எதுக்குப்பா என்  கேரக்டர் ஆசாசினேட் பண்ணனும்? அதை கேட்டு என்னால சும்மா இருக்க முடியல. நீங்க என்னை என்ன வேணானாலும் நினைச்சுக்கோங்க.. நான் என் மனசுல பட்டது செஞ்சேன்" என்று முடித்துக் கொள்ள, மகிழுக்கும் , விஷ்ணுவிற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. 


வைஷு அருகில் வந்த எகா, அவளை அவன் புறம் திருப்பியவன்"  எல்லாம் சரி தான் வைஷு. ஆனா நீ கல்யாணம் பண்ணி இருக்கிறது அந்த சரஸ்வதி அம்மாவை இல்ல. சைத்துவ , அந்தக் சைக்கோவ. அவன் கூட தான் நீ கடைசி வரைக்கும் வாழ போற. அந்த சரஸ்வதிம்மா கூட இல்ல... அவன் ஒரு சைக்கோனு உனக்கு தெரியும்ல. அவனை பத்தி தெரிஞ்சும்  நீ கல்யாணம் பண்ணிருக்க. அவன் கூட எப்படி வாழ போற? அவன் எந்த நேரத்தில என்ன பண்ணுவானே தெரியாது. அவன் கூட வாழ்ந்து என்ன பண்ண போற?"


"எனக்கு முதல்ல இந்த சைக்கோவ கல்யாணம் பண்ணிக்கணுமானு தான் தோணுச்சி... ஆனா அவன் தாலி கட்டும் போது அவன் கண்ணுல என் மேல அவன் வச்சிருந்த காதலை நான் பார்த்தேன்... அது மட்டுமில்ல இன்னைக்கி அவன் எங்க ஸ்டூடியோக்கு வந்திருந்தான்..."என்றவள் அவர்கள் பேசிக் கொண்டதை சொன்னாள். 


"அவன் உன்னை லவ் பண்றானா? அவன் உன்னை லவ் பண்ணினா? எதுக்கு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்???" 


"எனக்கு தெரியல... அவன் கிட்ட தான் கேட்கணும் எகா"என்றால் அசட்டையாக, அவனோ கடுப்பானான். அதற்குள் வஸ்தியோ "எனக்கு இப்பதான்  ஒரு விஷயம் புரியுது. அன்னைக்கி நிச்சயத்தப்ப ரொம்ப சோகமாக இருந்தான். நான் போய் அவன்ட பேசினேன்..."என்று அவர்கள் பேசிக்கொண்டதை சொன்னாள். 


எகாக்கு அவனை நினைத்து திருப்தி இல்லை. "இப்படி மனசுல உன்னை நினைச்சிட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டவன். நாளைக்கு உன்னை விட்டுட்டு வேற ஒருத்திய நினைக்க மாட்டான் என்ன நிச்சயம்?"கோபத்தில் வாயை விட, 


வைஷு அவனை முறைத்துக் கொண்டு அவன் முன் கையை கட்டி நின்றாள். வஸ்திக்கோ எகாவின் மேல் கோபம் வந்தது" அப்படி பார்த்தால். நானும் கூட உன்னை மனசில நினைச்சிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன் எகா ! நியாபகம் இருக்கா??? அப்போ நீயும் என்னை அப்படி தான் நினைக்கிறீயா???"எனவும் அவனுக்கு கோபம் வர "ஏய் !" என்று பல்லைக் கடித்துக் கொண்டு வஸ்தியிடம் எகிறினான்.


அவன் கையை பற்றி தடுத்த வைஷு" எகா, அமைதியா இரு. ப்ளீஸ் என்னால நீங்க சண்டை போட்டுக்க வேண்டாம். எகா, இப்போ வேணாம் அவன் மேல் எனக்கு காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனா அவனோட காதல் என்னையும் காதலிக்க வைக்கும். நான் நம்புறேன். நிச்சயமா நாங்க ஹாப்பியா வாழ்வோம்டா புரிஞ்சுக்க..." என்று சமாதானம் செய்ய,  அவனோ அரை மனசாக தலையை ஆட்டிவிட்டு கோபமாக உள்ளே சென்றான். வைஷு வஸ்தியை பார்க்க, அவளும் தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றாள். அவர்கள் செல்வதை பார்த்து கொண்டிருந்தமகளை வந்து அணைத்துக் கொண்ட விஷ்ணு


" ஸாரிடா !  உன் முடிவ நினைச்சி அப்பா கொஞ்சம் பயந்துட்டேன். அதான் அப்பாக்கு உன் மேல் கோபம். ஆனா இப்பையும் என் பொண்ணு எது செஞ்சாலும் சரி தான். உனக்கு துணையா அப்பா கடைசி வரைக்கும் இருப்பேன். நீ சூஸ் பண்ண லைஃப்ல பிரச்சினை வந்தாலும் அப்பா உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்... லவ் யூ டா பாப்பா"என்று முதுகை வருடி கொடுக்க  "தேங்க்ஸ் பா அண்ட் லவ் யூபா "என்று அவளும் அணைத்துக் கொள்ள, அவர்களோடு மகிழும் ஐக்கியமானாள்.


******


இரண்டு நாள் கழித்து இல்லம் வந்து சேர்ந்தார் சரஸ்வதி. சாந்தி  'சரஸ்வதி, கொஞ்ச நாள் தன் வீட்டில் இருக்கட்டும்' என்று பிரபுவிடம் கேட்க, அவரோ சரஸ்வதியை அனுப்ப தயங்கினார். ஆனால் சரஸ்வதியோ வம்படியாக 'சாந்தி வீட்டில் இருக்கிறேன்' என்று முடிவாக சொல்லிவிட்டு இரண்டு நாள் கடத்தி விட்டார். அவரும் ஓரளவுக்கு நன்றாக பேச நடக்க என இருக்க. சாந்தி சைத்து, வைஷுவிற்கு ரிஷப்பசன் வைப்பதை பத்தி பேச்சை எழுப்ப  தயங்கினார்.  


"என்னடி ஏதோ சொல்ல வரதும் அமைதியா இருக்கிறதுமா இருக்க, என்ன விஷயம்???" சரஸ்வதி சாந்தியின் தவிப்பை கண்டு கேட்டு விட, அவரோ வேறு வழியின்று சொல்ல வந்ததை சொல்லி விட்டார். 


"இல்லக்கா என்ன இருந்தாலும் சைத்து அந்தப் பொண்ணு கழுத்துல தாலிய கட்டிட்டான். அந்தப் பொண்ணு இப்போ நம்ம வீட்டுப் பொண்ணு இல்லியா??  நீ வந்ததும்  உங்கிட்ட சொல்லி அந்தப் பொண்ணை  முறை படி கூட்டுட்டி வரலாம் இருக்கோம் அக்கா... அதுவும் அவங்க ரிஷப்பசன் வைக்கணும் சொல்றாங்க அக்கா..." என்று சொல்லி முடிக்க, 


மூன்றாவது கண் இல்லாதது தான் குறை என்பது போல கண்களில்  கனலை தேக்கி அனைவரையும் எரித்து விடுவது போல முறைத்தார் சரஸ்வதி.


"அக்கா....!" என அவர் இழுக்க, "பேசாதடி, அவளை மருமகளா கொண்டு வந்து என்னை அவமான படுத்த போறீயா??  எனக்கு இப்படி ஆனதுக்கு அவ தான் காரணம்.  அவள போய் இந்த வீட்டுக்கு மருமகளாக்க நினைக்கற. ஒரு தாலிய கட்டிட்டா அவ இந்த வீட்டுக்கு மருமகளாகிடுவாளா? ஒரு நாளும் அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்... அவ இந்த வீட்டுக்கு மருமகளா  வரக் கூடாது" என்றார் கட்டளையாக..


"அப்போ இவன் கட்டுன தாலியை என்ன பண்ணறது? இதுல ரெண்டு பேரோட வாழ்க்கையும் அடங்கிருக்கு அக்கா ! "


"தாலியா! அந்த கல்யாணத்துக்கு மதிப்பே இல்லங்கறேன்... நீ தாலிய என்ன பண்ணறது கேக்குற? கழட்டிக் கொடுக்க சொல்லு"என்றதும் பிரபுவும் தேவனும்  அதிர்ந்தனர். சாய் சைத்துவை பார்க்க அவனோ அவர் உடல் நிலையை கருதி அமைதிக் காத்தான்.


"என்னக்கா ஈசியா சொல்ற? எல்லார் முன்னாடியும் அவன் அந்தப்பொண்ணு கழுத்துல தாலி கட்டிருக்கான். நியாயப்படி பார்த்தால் அவ தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும் க்கா !" என்றிட இவர்களிடம் பேசுவது வீண் என்று  சைத்துவைப்  பார்த்தார்.


"சைத்து, என் கூட உள்ள வா !"என்றார். அவனும் தாய் தந்தையை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். 


கதவை தாழிட்டவர், " சைத்து கண்ணா ! பெரியம்மா சொல்றத கேளு. அந்தப் பொண்ணு உனக்கு வேணாம் டா. உன் வாழ்க்கையில் நிம்மதி இல்லாம அழிச்சிடுவா டா ! அந்த பொண்ணு வேணா சைத்து...."என்று கெஞ்சினார்.


"ஆனா, பெரியம்மா... "தன் காதலை பற்றி சொல்ல வர அவரோ அவனை பேசவிடாமல்" வெறும் மஞ்சக் கயிறு தான டா கட்டிருக்க... எங்களுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்லி வாங்கிடலாம் டா. அந்த பொண்ணு உனக்கு வேணாம் சைத்து"எனவும்.


"இல்ல பெரியம்மா எங்க மேரேஜ் ரெஜிஸ்டர் ஆகிடிச்சி... இனி எங்களை பிரிக்கணும்னா நாங்க டிவோர்ஸ் பண்ணினா தான் முடியும். அதுவும் ஒன் இயிர் கழிச்சி தான்"என்றதும் அதிர்ந்து விட்டார். 


"யாரை கேட்டு ரெஜிஸ்டர் பண்ணின நீ?" 


"இல்ல, அவங்க வீட்ல தான் பிரஷர் பண்ணி பண்ண வச்சாங்க"என்று பொய்யை அவிழ்த்து விட்டான். சற்று நேரம் அமைதியாக எதையோ யோசித்தார். 


சைத்துவோ 'அடுத்து என்ன குண்டை  தூக்கிப் போட போறாங்களோ !' என்று   பீதியுடன் இருந்தான். அவன் எண்ணியது போல அவரும் குண்டை தூக்கிப் போட்டார்.


"அவ இங்க வந்தாலும் நீ அவ கூட வாழக் கூடாது. அவளே டிவோர்ஸ் கேட்டு போறது  போல நீ அவகிட்ட நடந்துக்கணும். அவ உனக்கு வேணாம் சைத்து. அவளை நீ டிவோர்ஸ் பண்ணிடு !  "என்றார் முடிவாக,


"ஆனா அம்மா நான்..."என அவன் சொல்லும் முன்பே முந்திக் கொண்டு" நீ என் தலையில அடித்து சத்தியம் பண்ணு சைத்து. அவன் கூட வாழ மாட்டேன்னு. இல்ல அவ தான் வேணும் சொன்னால்,  நான் உயிரோட இருக்க மாட்டேன் சைத்து. இது உண்மை...." என்று கையை நீட்ட,  அவனோ தயங்கினான். 

அவன் தயக்கத்தை அறிந்து மேலும் அவர் ஊந்த, அவர் கையில் தன் கையை வைத்தான். ஆனால் உள்ளே எண்ணிக் கொண்டதோ வேறு. 


'இந்த ஒரு வருஷத்தில எல்லாம் மாறும் பெரியம்மா. உங்களுக்கு வைஷுவ பிடிக்கும். கண்டிப்பா இது நடக்கும். அப்போ இந்த சத்தியம் பொய்யா போகனும. நீங்களே வாபஸ் வாங்குவீங்கனு நம்பி சத்தியம் பண்றேன்' தனக்குள்ளே நினைத்துக் கொண்டு அவர் கையில் வைத்து அவர் மனதை குளிர்வித்தான். ஆனா அதுவே அவனுக்கு ஆபத்தாக போவதை அறியாமல் போனான்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2