இதயம் 31

 இதயம் 31


உறவினர்கள் , சொந்தபந்தகங்கள்  நண்பர்கள் என மண்டபத்தை நிறைத்திருந்த அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். 


அகல்யா , அவளது  பிள்ளைகளும் வஸ்தி, எகா, விஷ்ணு , மகிழ், வைஷு , தேவன், ஸ்ருதி அவளது  பெற்றோர்கள் மட்டும் தான் மண்டபத்தில் இருந்தனர்.


தேவன், மண்டபத்திற்கு கொடுக்க வேண்டிய பணக்கணக்கு வழக்குகளை பார்க்கச் சென்று விட்டார். ஸ்ருதி தன் பெற்றோர்களை அனுப்பி வைத்துவிட்டு அகல்யாவிடம் வந்தாள்.


"அம்மா, வைஷுவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும். என்ன இருந்தாலும் இப்போ அவ நம்ம வீட்டு மருமக. ரெண்டு அத்தைங்க இல்லனாலும் நாம தான அவளை முறையா வீட்டிக்கு அழைச்சிட்டு போகணும். வாங்க போய் அவளை கூட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்..."என் வீட்டின் மூத்த மருமகளாகத் தன் கடமையை ஆற்றினாள் ஸ்ருதி.


ஸ்ருதி அகல்யாவிடம் பேச வரும் வரை அதிர்ச்சியில் சிலையாக நின்றவர், அவள் தீண்டலில் தான் நினைவை பெற்றார்.


தன் இளைய மகளுக்கு சற்று முன் நடக்க இருந்த அந்நியாயத்தை தடுத்து நிறுத்திய வைஷுவை, மகளை காப்பாற்றிய தெய்வமாகப் பார்த்தார் அகல்யா. ஆயினும் அவளே அந்த நரகத்தில் விழுவாள் என்று அவர் நினைக்கவில்லை.


பலியாக இருந்த தன் மகளை காப்பாற்றி , தன்னை பலியாக்குவாள் என்று  அவரும் எண்ணவில்லை..


தன் மகளை நினைத்து கவலை பட்டது போல தானே வைஷுவின் பெற்றோர்களும் வைஷுவை எண்ணி வருந்துவார்கள் . அவர்களை நினைக்க ஒரு பக்கம் பாவமாகவும் மறு பக்கம்  பயமாகவும் இருந்தது.


எங்கே தன்னிடம்' உங்க மகளை காப்பாத்த தான் என் மக இந்த முடிவை எடுத்தாள். எல்லாம் உங்களால தான்'என்று சொல்லி விடுவார்களோ என்று அஞ்சி தயங்கினார். 


அவரது தயக்கத்தை பார்த்த ஸ்ருதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர் தான் இப்போது  இங்கு இருக்கும் பெரிய மனுசி. அவரை வைத்து பேசலாம் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவரோ தயங்க,


"அம்மா,  தயங்காம வாங்க போய் பேசலாம். இப்போ நீங்க தான் இங்க பெரிய மனுஷினு  இருக்கீங்க. வாங்க வந்து பேசுங்க..."என்று அவரை இழுக்காத குறையாக  அழைத்து போனாள்  விஷ்ணு மகிழிடம்.


இன்னும் மகளின்  செயலையும் முடிவையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமலும் உள்ளுக்குள் தவித்த படி அமர்ந்திருந்தனர். எகா இன்னும் அதே கோபத்தில் நொடிக்கு ஒரு முறை வைஷுவை முறைத்து கொண்டிருந்தான்.


தன் தங்கையை அவள் காப்பாற்றி பெருமுதவி செய்தாலும் தோழியாக அவள் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை வஸ்தியால். 'அவள் மனதில் ஓடுவது என்ன , ஏன் இப்படி செய்தாள்?' என்று  கேட்க தோன்றியது. கொஞ்சம் குற்றவுணர்வும் அதில் கலந்திருந்தது.


அங்கே சுழலும் மின்விசிறியை தவிர வேறெவரும் பேசிடவில்லை. விஷ்ணு,  மகிழின் முன் வந்த ஸ்ருதி, "அப்பா  அம்மா ! இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க போறீங்க? யாரும் இப்படி நடக்கும் நினைச்சி கூட பார்க்கல. ஆனாலும் விதிப்படி இப்படி  தான் நடக்கணும் இருந்திருக்கு. வைஷு இப்போ எங்க வீட்டுப் பொண்ணு அவளை  எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்பா. நிறைய சடங்குகள் இருக்கு. அவளை நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா பா " என்று கேட்டாள் தன்மையாக,


அவளை நிமிர்ந்து பார்த்தவர் பெருமூச்சை விட்டபடி"மாப்பிள்ளை இல்லாம என்ன சடங்கு செஞ்சு உங்க வீட்டுப் பொண்ண கூட்டிட்டு போவீங்கமா ?"எனக் கேட்க இருவரும் தலை குனிந்தனர். 


"இப்போ,  உங்க வீட்டு பொண்ண நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். உங்க பெரிய அத்தை குணமாகி வீட்டுக்கு வந்ததும். முறையா வந்து அவங்க மருமகளை அழைச்சிட்டு போக சொல்லுங்க. அதுவரை அவ எங்க வீட்லே இருக்கட்டும்... கல்யாணம் தான் இப்படி, அடுத்து நடக்கற சடங்குகளாவது ஒழுங்கா நடக்கட்டும் மா. இப்போ நாங்க கிளம்புறோம்."என்றவர், 


மனைவியை கையில் பிடித்துக் கொண்டவர்"வஸ்தி மா"என்று வைஷுவை காட்டிவிட்டு முன்னே நடந்தார். எகாவும் கோபத்தில் அவர்கள் பின்னே நடந்தான்.


வஸ்தி, தந்தையின் செயலில் சிறு ஏமாற்றத்தை தழுவி நின்ற வைஷுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.


அகல்யாவும் ஸ்ருதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். தேவனும் வந்து சேர, அவரிடம் விஷயத்தை சொன்னார்கள்.' அதுவும் சரியென்று' நினைத்தவர் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்..



தீவிர சிகிச்சை பிரிவில் சரஸ்வதியை வைத்திருந்தனர்.  வெளியே பிரபு ஒரு புறமும், சாந்திக்கு ஆதரவாக சாய்யும்  தனியாக சைத்துவும் அமர்ந்திருந்தனர்.


சாந்தி மட்டும் அக்காவை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

அவரை நெஞ்சில சாய்த்து  சமாதானம் செய்து கொண்டிருந்தான் சாய்.


சைத்துவின் மனதுக்குள் பெரும் புயல் அடித்துக்கொண்டிருந்தது. உள்ளே சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பெரியம்மா ஒரு புறம். தாலி கட்டிய நொடி  தனியாக தவிக்க விட்டு வந்த மனைவியின் எண்ணமும் ஒரு புறமும் வந்தது.


அவன் மற்றவர்களை என்றும் நினைப்பவன் அல்ல தான். தாலியின் வித்தையோ மகிமையோ இல்ல காதலோ அவளையும் சேர்த்து புதுசாக நினைக்க வைத்தது இந்த மனது.


'அடுத்த என்ன நிகழும், அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்? கிடைக்காத வாழ்க்கை கையில் கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயம் . சிகிச்சையை முடித்து குணமாகி வரும் பெரியம்மா என்ன சொல்வார் என்ற பயம் வேறு. கவலைகள் மொத்தமாக அவனை சூழ்ந்து இருந்தன.


தேவனும் அவர்களை வீட்டில் விட்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தவர் மனைவுயின் அருகில் வந்து அமர்ந்தார்.


அருகே அமர்ந்த கணவனிடம் அக்கறையுடன் மருமகளை பற்றி விசாரித்தார் சாந்தி. அவருக்கு வைஷுவின் மேல் துளியும் கோபம் இல்லை. கோபம் எல்லாம் தன் அக்கா பேரில் தான். ஆனால் அவரை கேட்க முடியாத நிலையில்  தான் இருக்கிறாரே ! 


மனைவி பற்றி தெரிந்ததும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவனுக்கு. சரியாக டாக்டரும் வெளியே வந்தார். அவரை சூழ்ந்துக் கொண்டனர்.


"மைல்ட் அட்டாக் வந்திருக்கு... ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கோம் பேஷண்ட் கொஞ்சம் வீக்கா இருக்காங்க பார்த்துக்கங்க. அதிர்ச்சியான விஷயங்கள்ல சொல்லாதீங்க. அவரை அதிகமாக எமோசனல் ஆக விடக் கூடாது. பேஷண்ட் இப்போ மயக்கத்தில் இருக்காங்க, நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க. அவங்க கண் விழிச்சத்தும் போய் பாருங்க"என்று கூறிவிட்டுச் சென்றார்.


"சிறு மயக்கம் தான்" என்று அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் அது 'மைல்ட் அட்டாக்' என்று யாரும் நினைக்கவில்லை . ஏன் சரஸ்வதி கூட நினைத்திருக்க மாட்டார். அங்கிருந்த அனைவரும் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.


****


"பிரகதிய காப்பாத்துன சரி. நீயேன் அந்தக் பாழுங்கிணத்துல  விழுந்த வைஷு. அந்த சைக்கோவ கல்யாணம் பண்ணனும் என்ன நிபந்தனை உனக்கு??  எங்க போச்சி உன் புத்தி?  வாழ்க்கையில் தெளிவா யோசிச்சு முடிவெடுக்கற நீ, உன் மேரேஜ் விஷயத்துல இப்படி லூசுத்தனமா  முடிவு எடுத்து வச்சிருக்க "என்று ஆதங்கம் தாங்காமல் கோபத்தில் கேட்டு விட்டான்.


"நான் எடுக்கற முடிவு தெளிவா தான் இருக்கும் தான சொல்ற. அது போல இந்த முடிவையும் நான் தெளிவோட  தான் எடுத்து இருக்கேன்  எகா !"என்றாள் சாந்தமாக,


"மண்ணாங்கட்டி, இது உனக்கு தெளிவா யோசிச்சு எடுத்த முடிவா?? அவசரத்துல புத்தி மழுங்கிப் போய் எடுத்த முடிவு. அந்த சைக்கோவ , எப்படி கல்யாணம் பண்ணிக்க  மனசு  வந்தது உனக்கு ?"


"மனசு வந்ததுனால தான் இந்த முடிவு எடுத்தேன்"என்றாள். தலையில் கைவைத்தான். "நான் சொல்றது ஏன் உனக்கு புரிய மாட்டிகிது? அவன் கூட உன்னால் நிம்மதியா வாழ முடியும் உனக்கு தோணுதா???" 


"அவன் அந்த அளவுக்கு சைக்கோ இல்ல எகா ! அவனும் மனுஷன் தான். உன்னை போல ஒரு ஸ்மூத்தான வாழ்க்கை எனக்கு அமையும்  சொல்ல முடியாது எகா ! வாழ்க்கையில் டிஃப்ரணட் கைண்ட் ஆப் பீபில்ஸ்ஸும் இருக்கத் தான் செய்வாங்க... உன்னை போல எனக்கு லைப் பாட்னர  தேடுனா தேடிட்டே இருக்க வேண்டியது தான்... எனக்கு ஸ்மூத்தான லைப்வ வாழ இஷ்டமில்ல. நான் தேர்ந்தெடுத்திருக்க வாழ்க்கை என் இஷ்டத்தோட எடுத்தது தான். அதுக்கான முழுப்பொறுப்ப நானே ஏத்துப்பேன். அதுல வர பிரச்சனைய நானே சாலவ் பண்ணிப்பேன். யார்கிட்டையும் வந்து நிக்க மாட்டேன்"என்றாள் தீர்க்கமாக


எகா ஏதோ சொல்ல வர"விடு எகா, அவங்க தான் முடிவு எடுத்துட்டு அதை நிறைவேத்திக்கவும் செய்துகிட்டாங்க... பிரச்சினைனு வந்தா அவங்களே ஃபேஸ் பண்ணிப்பாங்க சொல்லிட்டாங்க... இதுக்கு மேல தெளிவா பேசும் போது. நாம் ஏன் குறுக்கால நிக்கணும்? அவங்க வீட்ல இருந்து வந்ததும் முறை செய்து அனுப்பி வச்சிடலாம் எகா" என்றார்.


அவளுக்கோ சுறுக்கென்று இருந்தது. ஆனாலும் வலியை காட்டாமல் அவர் முன் சன்னமாக நின்று" நன்றி"என்று உரைத்து விட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். 


விஷ்ணுவிற்கு மகளின்  இந்தப்  பிடிவாதம் கோபத்தை தான் கொடுத்தது. பேசற்று போனார்கள் அனைவரும்.   இரவு வரை அங்கே யாரும் எதுவும் உண்ணவில்லை  வஸ்தி அழைத்தும் மறுத்து விட்டனர். 


மறுநாள் விடிய, மகிழும் , விஷ்ணு , எகா  அமர்ந்திருக்க, வைஷுவோ ஸ்டூடியோவிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். 


யாரையும் முகம் கொடுத்து பார்க்காதவள் வாசல் வரைச் செல்ல , அவர்கள் வீட்டின் முன் கார் வந்து நின்றது. யாரென அவள் பார்க்க, சாந்தி , தேவன் , சைத்து மூவரும் இறங்க...  "வாங்க"  என்று மூவரையும் உள்ளே அழைத்தாள். 


மூவரும் தயக்கத்துடன் உள்ளே வர, அவர்களை கண்டு சிறு தயக்கத்துடன் வரவேற்றனர் மூவரும்.


வஸ்தி அவர்களுக்கு குடிக்கக் கொடுக்க சமையலறைக்குள் சென்றாள். வைஷு ஒரு ஓரமாக நின்றிருந்தாள். 


அவளை  ஓரக் கண்ணால் முழுதாய் அளந்து கண்ணில் நிரப்பிக் கொண்டிருந்தான் சைத்து.

என்றும் அணியும் குர்தா ஜீன்ஸ்ஸில் புதிதாக மின்னிய மஞ்சள் தாலி, அதுவும்  தான் அணிவித்தது. அவள் என் மனைவி இனி என்னவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள் என்றவன் கர்வம் கொண்டான்.


அவளை தன்னுடன் அழைத்து செல்ல, அனைத்து செல்களும் பரபரத்தாலும் முறையாக அவள் வீட்டிற்கு வர வேண்டும் என்று தன்னைக் கட்டுப் படித்துக் கொண்டான்.


"ஏன் மா அங்கே நிக்கற. இங்க வந்து உட்கார்"என்று சாந்தி மருமகளை அருகே அமர வைத்தார். அவளும் அவர் அருகே  அமர்ந்தாலும் எதுவும் பேசவில்லை. அவளை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சாந்தி.


"சம்மந்தி எப்படி இருக்காங்க? நாங்க வந்து பார்க்கலாமா??"என்று விசாரித்தார் விஷ்ணு. 

"இன்னும் ஐ .சி. யூ ல தான்  இருக்காங்க. அவங்க நார்மல் வார்ட் மாத்தினதும் சொல்றேன் சம்மந்தி வந்து பார்த்துட்டு போங்க..."என்றார் சிரித்த முகத்துடன்.


அவருக்கு 'மைல்ட் அட்டாக்'என்று வஸ்தி மூலம் வீட்டில் அனைவரும் அறிந்திருந்தனர். 

எங்கே அவருக்கு அட்டாக் வர காரணம் தங்கள் மகள் தான் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்தனர் இருவரும். ஆனால் சாந்தி அவ்வாறு நினைக்கவில்லை என்பது இப்போது தான் அறிந்துக் கொண்டனர்.


சாந்தி தான்  தொடர்ந்தார்."இப்படி நடக்கும் நாம யாருமே நினைச்சி இருக்க மாட்டோம்.  ஆனா விதி யாருக்கு யார்னு எழுதி வைச்சிருக்கோ  அவங்களை தான் சேர்த்திருக்கு. வைஷுவ நாங்க எங்க மருமகளா  முழு மனசோட எங்க வீட்டுப் பொண்ணா ஏத்துக்கிட்டோம். அவளை நாங்க முறையா அழைச்சிட்டு போவோம்... எங்க அக்கா நல்லப்படியா வீடு திரும்பினது. நல்ல நாள் பார்த்து அவளை நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம் சம்மந்தி. தப்பா எடுத்துக்காதீங்க அதுவரை வைஷு இங்க இருக்கட்டும். அக்கா இல்லாம் அழைக்க வேண்டாம் நினைக்கிறோம்... நீங்க என்ன  சொல்றீங்க?"என்றவர் அவர்கள் பக்க விருப்பத்தையும் கேட்டார்.


"இவ்வளவு நடந்தும், எங்க பொண்ணு மேல் கோபப்படாம, அவளை மருமகளா ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம்ங்க.. ரொம்ப நன்றிங்க..."என்று மகிழ் சொல்ல, 


" என்னை பொறுத்தவரைக்கும் அவ மேல எந்த தப்பு இல்ல சம்மந்தி. பிரகதிய என்னால் சைத்து மனைவியா நினைச்சி பார்க்க முடியல. அவளை நாங்க இன்னமும் குழந்தையா தான் பார்க்கிறோம். நிச்சயம் சைத்து அவளை கல்யாணம் பண்ணிருக்க மாட்டான். சைத்து வைஷுவ கல்யாணம் பண்ணிகிட்டதே எனக்கு பெரிய நிம்மதி இல்லேன்னா அவன் இன்னொரு முறை மேடை ஏறுவான்ற நம்பிக்கை எனக்கு இல்ல.. வைஷுவ பார்க்கும் போது இவ நமக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும் யோச்சிருக்கேன். ஆனா அது அப்படியே பழிக்கும் எதிர்பார்க்கல ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் மருமகள நான் சீக்கிரமா  கூட்டிட்டு போயிடுவேன்..." அவள் கையை அழுத்த, அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


விஷ்ணு , மகிழ்  மனதில் கொஞ்சம் பயம் அகன்றது போல இருந்தது. மகிழ் மகிழ்ச்சியுடன்" வந்து அழைச்சுட்டு போங்க சம்மந்தி. இனி அவ உங்க வீட்டு பொண்ணு "என்றார். வஸ்தி வந்து காபி கொடுக்க மூவரும் எடுத்து பருகினார்கள்.


சாந்தி வைஷுவின் பக்கம் திரும்பி, "உனக்கு  நம்ம வீட்டுக்கு வர முழு சம்மதமா வைஷு?" எனக் கேட்கவும்


"சம்மதம் தான் ஆன்ட்டி ஆனா எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு.  அதுக்கு சம்மதம்னா நான் உங்க வீட்டுக்கு மருமகளா முழு மனசோட  வரேன்"என்று பீடிகைப் போட, அனைவரும் அவளை புரியாமல் பார்த்தனர்.


"என்ன கண்டிஷன் சொல்லுமா?"


"உங்க அக்காக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு நான் தான் காரணம் உங்க வீட்ல யாரும் என்னை பிலேம் பண்ண கூடாது. ஏன்னா உண்மை என்னனு உங்களுக்கே தெரியும். தப்பு செய்யாம என்னை கார்னர் பண்ணா எனக்கு கோபம்  வரும். அடுத்தது உங்க வீட்டுக்கு நான் மருமகளா வந்தாலும் நான் என் போட்டோகிராபி வேலைய பார்ப்பேன். ஸ்டூடியோக்கு போவேன் வேலைக்கு போவேன். அதை நீங்க தடுக்கக் கூடாது. இந்த ரெண்டு கண்டிஷனும் உங்களுக்கு ஒகேனா நான் உங்க வீட்டுக்கு மருமகளா வரேன்..."என்று முடித்துக் கொள்ள


சாந்தியும் தேவனும் பார்த்துக் கொண்டனர். மற்றவர்கள் அவர்கள்  பதிலை எதிர்பார்த்து இருந்தனர்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2