இதயம் - 33

இதயம் 33

அவள் சொன்னத்தை கேட்டு அதிர்ந்து போனவன் தன் வாய்க்கு ஒரு சிலுவை போட்டது போல சைகை செய்தான். 

'அது' என்றாள் விழிகளால். 

அவன் பைக்கை பார்க் செய்து விட்டு உள்ளே வர, அவனுக்காக காத்திருந்தவள் அவன் வரவும் அவனோடு நடந்தாள்.


இருவரும் இடத்தை தேடி அமர்ந்து  கொள்ள, அவர்களைக் கண்ட வெயிடரும் ஆடர் எடுக்க வந்து விட்டான்.  இருவரும் 'காஃபியை' ஆடர் சொல்லி விட்டு அமைதியாக இருந்தனர். 


அவன் மட்டும் 'ரசிக்கிறேன்' என்ற பேர்வழியில் அவளை விழுங்குவது போல பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையை உணர்ந்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருக்கும் அசராமல்  தன் விழிகள் அவளை காண மட்டுமே என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான். 


அவனது பார்வை  தன்னை துளைக்க. உடலேனோ ஒரு வித சிலிர்ப்பைக் கொண்டது. அவனது அசாரத பார்வை  அவளை ஏதோ செய்ய பொறுக்க முடியாமல் வாய்விட்டே கேட்டு விட்டாள்.


" ஏன் இப்ப..." என கேட்கும் முன் வெயிட்டர் வந்து காஃபியை வைத்தான். அவன் செல்லும் வரைக்கும் அமைதியாக இருந்தாள். அவனும் "வேற எதுவும் வேணுமா ஸார்?"என்றான்.


"நோ  தேங்க்ஸ்"என்று அவனை அனுப்பி வைத்தவன், மீண்டும் அவளைப் பார்த்து 'கேள்' என்பது போல புருவம் உயர்த்தினான்.


"எதுக்கு இப்படி திங்கற மாதிரி பார்க்கற? வீட்ல சாப்பிட்டு வந்தியா? இல்லையா? அப்படியே பார்த்தாலும் நான் ஒன்னும் பொங்கலோ  பூரியோ இல்ல, நீ விழுங்க" என்று இதழை சுழித்துக் கொண்டாள்.


"நீ பொங்கல் , பூரியோ இல்ல தான். ஆனா நீ, ஐம்பது கிலோ பால்கோவா. எதிர்க்க  இருந்தும் கைக்கு கிடைக்காம இருக்கே. கைக்கு மட்டும் கிடைக்கட்டும், திங்கறத தவிர வேற எனக்கு என்ன வேலை பொண்டாட்டி"என்று நக்கல் இழையோட சொன்னான்.


அவன் கூறியதில் லேசாக கன்னம் சிவந்து போனது. 'பொண்டாட்டி' என்ற வார்த்தையில் தேகம் முழுதும் சிலிர்த்து, அவளது கை முடியெல்லாம் நட்டுக்கிட்டு நின்றன. 


நவநீதன் அன்று' பொண்டாட்டி' என்று சொல்லும் போது கூட இப்படி ஒரு சிலிர்ப்பை அவள் உணர்வில்லை..  இவன் கூறும் போது ஒட்டு மொத்த உடம்பும் சிலிர்த்து அடங்க, 'கடங்காரன் என்ன செய்றான் என்னை?' என கேட்டுக் கொண்டாள் மனதிடம். அதுவோ நமட்டுச் சிரிப்பு சிரித்தது. அதை அடக்கி விட்டு அவனைப் பார்த்தாள்.


"என் பொண்டாட்டிய நான் பார்க்கிறது தப்பா???"என்றான் கைகளை விரித்து. 


"போதும் வந்த விஷயத்தை பத்தி பேசு !"என்றாள் அவள் வெட்கத்தை மறைக்க முயற்சித்து கொண்டு.  ஆனால் அதுவும் அவன் கண்ணில் பட்டுவிட, சிறு மூரலுடன் பேச ஆரம்பித்தான்.


"எதுக்கு என்னை கல்யாணம் பண்ண?? உனக்கு தான் என்னையும் என் பெரியம்மாவையும் பிடிக்காதே ! காலம் முழுக்க 'வார்' தான் நடக்கும் சொல்வ, இப்போ என்ன என்னை கல்யாணம் பண்ணிருக்க?" என்று தன் சந்தேகத்தை கேட்டான்.


அவள் அவனை அமைதியாக பார்த்திருந்தாள். "பிரகதிக்காகனு மட்டும் சொல்லிடாத. அதை நம்ப நான் ஒன்னும் ஸ்டுபிட் இல்ல. சொல்லு எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட?" 


"உங்க பெரியம்மாவுக்கு புத்தி புகட்டத் தான் உன்னை கல்யாணம் பண்ணினேன்"என்று உண்மையை உடைத்தாள்.


"வாட் டூ யூ மீன்?"


"உன் பெரியம்மா என் கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. அதுக்கு ரிவஞ்ச் கொடுக்கணும் இல்லையா? அதுக்கு தான் உன்னை  நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"என்றாள் அசட்டையாக.


"என் பெரியம்மா உன் கல்யாணத்தை நிறுத்தினாங்களா? அதுக்கு வாய்ப்பே இல்ல. நீ தப்பா புரிஞ்சுகிட்டனு நினைக்கறேன்" தன் பெரிய அன்னைக்காக பேசினாலும், அவருக்கு மனதார நன்றியை உரைத்தான்.


விரக்தியில் சிரித்தவள்"உங்க பெரியம்மா மட்டும் அவங்க பிரண்ட் கிட்ட என்னை பத்தி தப்பா  சொல்லி கல்யாணத்தை நிறுத்தாம இருந்தால்,  இந்நேரம் அந்த நவநீதனோட ஒரு ஹாப்பி லைஃபை ஸ்டார்ட் பண்ணிருப்பேன். எல்லாம் உங்க பெரியம்மானால வந்தது தான்"என்று பற்களை கடித்து கோபத்தை அடக்கினாள்.


அவனுக்கும் உள்ளுக்குள் எரிந்தது. நவநீதனின் பேரை கேட்டதும். ஆனால் அவனோட நடக்க இருந்த கல்யாணத்தை  தனக்கே தெரியாமல் தடுத்து நிறுத்தி, அவள் கிடைக்க மறைமுகமாக உதவிய செய்த பெரியம்மா அவனுக்கு தெய்வமாகத் தெரிந்தார்.


"ஸோ..  நீ என் பெரியம்மாவ பழிவாங்க என்னை மேரேஜ் பண்ணிருக்க ரைட்??"


அவள்' இல்லை' 'ஆமா' என்பது போல தலையால் சிலுவைப் போட்டாள்.


"அவங்களுக்கு பாடம் புகட்ட, பழிவாங்க, என்னையும் என் மேரேஜையும் யூஸ் பண்ணிருக்க. அவங்கள பழிவாங்கினத்துக்கு அப்றம் நான்? என் லைஃப் என்னாகும் யோசிச்சியா?? அவங்கள பழிவாங்கறேன் என் லைஃப் மொத்தத்தையும் அழிச்சிட்டு போகப் போற அப்படித் தானே !" என்று குரலை  சற்று உயர்த்த, அவளுக்கு தன் தவறு புரிந்தது.


சரஸ்வதியின் மேலுள்ள கோபத்தில்  அவருக்கு பாடம் புகட்ட நினைத்தவள் , நடுவில் இப்படி ஒரு ஜீவனை இருப்பதை   மறந்து விட்டாள். 


"ஸாரி, அப்போ நான் உங்க பெரியம்மாவை பத்தி யோசிச்சேனே தவிர உன்னை பத்தி நினைக்கல. உன் வாழ்க்கையும் சேர்த்து இதுல அடகு வைப்பேன் நினைக்கல..."


"நினைக்கல இல்ல உன் நினைவுல இல்லன்னு சொல்லு. பிரகதிக்குனு எல்லாரும் துடிச்சீங்க. எனக்கும் தான வாழ்க்கைனு ஒன்னு இருக்கு. அத பத்தி ஏன் யாரும் யோசிக்கல? அவங்க பண்ண தப்புக்கு  நான் என்ன பண்ணுவேன்? எனக்கு ஏன் இந்த தண்டனை??" என்று கொஞ்சம் விறைப்பாகப் கேட்டான். ஆனால் உள்ளுக்குள் அவள் முக வடிவையும் அதில் காட்டும் உணர்ச்சியை ரசித்த படி.


"தண்டனையா??? நான் தான் தாலி கட்டும் முன்ன உனக்கு பிடிக்கலைனா எந்திருச்சி போக சொன்னேனே !போயிருக்கலாம்ல. அப்ப போகமாக  என் வாழ்க்கை போச்சே வந்து என் கிட்ட பொலம்புற"என்று முறுக்கிக் கொண்டாள்.


"ஏன் சொல்ல மாட்ட? பேச்சு வார்த்தை வரைக்கும் வந்து உன் கல்யாணம் நின்னு போனத்துக்கே உனக்கு கோபம் வருதே ! கல்யாண மேடை வரைக்கும் வந்து அந்த பொண்ணு ஓடிப்போனா எப்படி இருக்கும் எனக்கு? சரி என் ஃபிலீங்கஸ் விடு !  நீ ஒரு பொண்ணு தைரியமா வந்து மேடையில் உட்கார்ந்து என்னை தாலி கட்ட சொல்ற. நானும் அதே திமிரோட முடியாதுனு எழுந்து போனால். உன் கதி என்னாகும் தெரியுமா??  உன் லைப் என்னாகும் யோசிச்சியா? அதுக்கு அப்றம் உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா? உன்னை போல நான் இல்லை. உன் வாழ்க்கையையும் நினைச்சி யோசிச்சி தான் உங்கழுத்துல தாலிய கட்டினேன்"என்றான் நல்லவனை போல.


அவளோ அமைதியாக லேசாக கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள். தன் தவறுக்காக வருந்தினாள். அவன் மட்டும் எழுந்து  சென்றிருந்தால். பெற்றோர்கள் கோபத்திற்கு  ஆளாகி இருப்பேன். சரஸ்வதி சொன்னது போல தான் நானும்  அனைவருக்கும் திமிரு பிடித்த பெண்ணாக தப்பான பெண்ணாக தெரிந்திருப்பேன்..."என்ற பயம் உள்ளுக்குள் புதிதாக தோன்றியது. குற்றவுணர்வும் அதனோடு சேர்ந்து கொண்டது.


"ஸாரி... உன் வாழ்க்கைய பத்தி நினைக்காம இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன். அகேன் ஸாரி. நீ என்ன சொல்றீயா அதை செய்றேன். ஆனா என்னை அடிமை ஆக்கணும் மட்டும் நினைக்காத. அது உன்னால் முடியாது. சொல்லு உனக்கு நான் என்ன பண்ணனும் ?"என்றாள். அவளது குற்றவுணர்வும் திமுரும் கோபமும் அவனுக்கு பிடித்திருந்தது. அதை எல்லாம் தன் இதழால் அடக்க வேண்டும் என்ற ஆசை உள்ள பேயாய்  ஆட்டம் போட்டது. 


"என்னால உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டு  மூணாவதா ஒரு பொண்ண பார்த்துக் கல்யாண மேடை வரைக்கும் போக எனக்கு விருப்பமில்லை. ஸோ கடைசிவரைக்கும் உன் கூட  தான் நான் வாழணும் முடிவு பண்ணிட்டேன்.  நீயும் என் கூட தான் வாழணும். நீ பண்ண தப்புக்கான தண்டனை. புரிஞ்சதா??"என்று மிரட்டினாலும் மறைமுகமாக கடைசி வரைக்கும் நீ என்னோட தான் இருக்க வேண்டும் என்று உரைத்து விட்டான்.

அதை அறியாத பேதை பெண் முழித்துக் கொண்டிருந்தாள்.

"நீ எங்க வீட்டுக்கு வந்து  எங்க பெரியம்மாக்கு பாடம் எடுத்தாலும் சரி டெஸ்ட் வச்சாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா பொண்டாட்டியா நீ  எனக்கு செய்றத செஞ்சு தான் ஆகணும். அண்ட் டோன்ட் வொர்ரி, உன் கிட்ட ஹார்ஷா நடந்துக்க மாட்டேன். இங்கிளுடிங்க செக்ஸ். உன் விருப்பம் இல்லாம உன்னை தொட மாட்டேன். ஆனால் நீ என் பொண்டாட்டியா இருக்கணும்.  அதுக்கு முன்ன நம்ம மேரேஜ ரிஜிஸ்டர் பண்ணனும். அதை சொல்ல தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்.

நாளைக்கு உன்னோட எல்லாம் டிடெய்ஸ் எனக்கு வேணும் நாளைக்கே வேணும். இன்னைக்கே அனுப்பினாலும் ஓகே தான். சீக்கிரமா அனுப்பிடு !"என்றான்.

அவளால் ஏன் எதுக்கு என்று கேட்க முடியவில்லை அவன் பேச்சில் கட்டுண்டது போல் இருந்தாள். 


"எனிந்திங் எல்ஸ். ஏதாவது சொல்லணுமா??"


"அதான் எனக்கும் சேர்த்து நீயே பேசிட்டியே ! சொல்ல ஒண்ணுமில்ல..." என்றாள் சலித்துக் கொண்டு.


"தேட்ஸ் குட் போலாமா?"என்று  எழுந்தான். அவள் விறுவிறுவென வாசலை நோக்கி சென்று விட்டாள். அவனோ பணத்தை கட்டிவிட்டு ஒரு டைரி மில்க் சாக்லேட்டை எடுத்துக்  கொண்டு வெளியே வந்தான்.


அவள் முகத்தை தூக்கி வைத்திருக்க, அவள் பட்டு கன்னத்தில் ஜில்லென்று இருந்த சாக்லேட்டை வைக்க அதிர்ந்து விட்டாள்."ஏய் என்ன பண்ற?"என்று விலகினாள் 


"சும்மா, இந்தா சாக்லேட் வச்சிக்கோ !"என்று நீட்டினான். அதை அவன் கையில் வெடுக்கென்று பறித்தவள்,"சைக்கோ" என்று முணங்கி கொண்டாள். அவன் பைக்கை எடுத்துக் கொண்டு அவள் முன் வந்து நிறுத்தினான். அவளும் இருபக்கமாக காலைப் போட்டு விட்டு நடுவில் பேக்கை வைத்தாள். அதை கண்டவனுக்குள்  ஏகபோக கடுப்பு.


அந்த பேக்கை எடுத்து முன்னே வைத்துக் கொண்டான்."பாவி என் பேக்"என அதை எடுக்க அவள் முன்னே கையை கொண்டு வர, அவள் கையை பிடித்து அவன் நெஞ்சில் வைத்துக் கொண்டான்.


அவள் ஒரு நொடி அதிர்ந்து அவனை பார்த்தாள். "பிடிச்சிருக்கு இருக்கட்டும்"என்றான் கிறங்கிய குரலில் அவனது குரலிலிருந்த மாயம்,  மகுடிக்கு அடங்கும் பாம்பாக அவனது பேச்சிற்கு அடங்கி கையை எடுக்காமல் விட்டாள். இருந்தும் கை வலிக்க அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். அவன் நெஞ்சிலிருந்த கையை எடுக்க வில்லை. அவனோடு இருக்கும் நெருக்கம்  அவளுக்கும் பிடித்திருப்பது போல இருந்தது.


இந்த முறை அவன் வேகமாக வண்டியை ஓட்டவில்லை. அவளது நெருக்கத்தை நிதானமாக அனுப்பவித்து ஓட்டினான். அவளது ஸ்டுடியோ வந்ததும் நிறுத்த மனமில்லாமல் வண்டியை நிறுத்தினான் .


அவள் இறங்கி கொண்டு அவள் பேக்கை  எடுத்துக் கொண்டாள். "நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும். டீடெயில்ஸ் அனுப்பிடு. சீக்கிரமா நல்ல நாள் பார்த்து உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டுட்டி போறேன் ! சீ யூ சூன் பால்கோவா !"என்று கண்ணடித்து விட்டு சென்றான்.


'இவன் உண்மையில் சைக்கோ தான்... என்னை மிரட்டுறான். கையை பிடிக்கறான். வாழலாம்ங்கறான் . என் பேச்சை தான் கேட்கணும் சொல்றான். கண்ணடிக்கிறான்... உண்மையிலே இவன் நம்மல லவ் பண்றானோ ! அப்றம் ஏன் சொல்லாம இருக்கான்??  என்னவோ உண்மை வெளிய வர தானே போகுது பார்த்துக்கலாம்...'என்று அவளும் விட்டு விட்டாள்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2