இதயம் - 32

 இதயம் 32

கூடத்தில் அமர்ந்தவர்கள் அனைவரும் அமைதியைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர். யாரும் யாரிடமும் பேசவில்லை. ஆனால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு எண்ணம் தோன்றாமலும் இல்லை. வெளியே சொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர். சிலர் உள்ளுக்குள் வைத்துக் கொள்ள நினைத்தனர். 


ஆனால் கூடத்தில் அமர்ந்திருந்த சாந்திக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய கட்டாயம். வைஷுவின் இரு நிபந்தனைக்கு அவர் பதில் சொல்லத் தானே வேண்டும். 


அவர் தேவனையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தார். அவர்களோ 'வாயை திறக்க மாட்டோம் ' என்பது போல அழுத்தமாக சாந்தியை தான் பார்த்திருந்தனர். ஆனால் யாருக்கும் அவளது நிபந்தனைக்கு மறுமொழி கூறும் எண்ணம் இல்லை.  சாந்திக்கு தான், மருமகளிடம் மறுமொழி கூற விருப்பமில்லை. 


குரலை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்."வைஷுமா, முதல் கண்டிஷனுக்கு என்னால வாக்கு கொடுக்க முடியும்.  நம்ம வீட்லே யாரும் உன்னை  பிலேம் பண்ண மாட்டாங்க. நான் முன்ன சொன்னது போல, மண்டபத்தில என்ன நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். உனக்கும் அக்காக்கு உடம்பு சரி இல்லாமல் போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அதுனால உன்னை யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க. ரெண்டாவது கண்டிஷனுக்கு... " என யோசித்தவர் மகனின் முகம் பார்த்தார். அவனும் அவரது பதிலை எதிர்பார்த்து அவர் முகத்தை தான் பார்த்திருந்தான்.


வைஷு, அவர் முகத்தை வெறித்தாள். 'எப்படியும் முடியாதுனு தான் சொல்ல போறாங்க' என்று உள்ளுக்குள் ஒரு அலட்சியம் வந்தது. 


"எனக்கு எந்த அப்ஜக்சனும் இல்லம்மா... உன் புருசனுக்கு இருக்கானு கேட்டுக்கோ..."என்று முடித்துக் கொண்டு அவளையும் அங்கிருப்பவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 


"என்ன ஆண்ட்டி சொல்றீங்க? உங்களுக்கு எந்த அப்ஜக்சனும் இல்லையா???  உங்க அக்காக்கு மருமக வேலைக்குப் போனா பிடிக்காதே ! நீங்க எப்படி ஒத்துக்கிட்டீங்க...??"என உள்ளுக்குள் எழுந்த சந்தேகத்தைத் தீர்க்க கொள்ள கேட்டாள். 


"அது என் அக்காக்கு தானே மா  பிடிக்காது. எனக்கு பிடிக்காது நான் சொல்லையே ! அப்றம் நீ எனக்கு தானே மருமக. அப்போ என் விருப்பத்தை தான் நீ கேட்கணும். அவங்க விருப்பத்தையோ முடிவையோ இல்ல. இது வரைக்கும் சைத்துவைச் சார்ந்த முடிவுகளை அவ தான் எடுத்திருக்கா. அதுக்கு நான் எந்த தடையும் நான் சொன்னதே இல்ல. ஏன்னா அவ அவனை வளர்த்திருக்கா  ! அதுனால நான் அவளுக்கு உரிமை கொடுத்திருக்கேன். ஆனா உன் விஷயத்தில அப்படி இருக்க மாட்டேன்.  நீ என் மருமக. அவ எடுக்கற முடிவுகளை நான் உன் கிட்ட  திணிக்க மாட்டேன். நீ வேலைக்குப் போலாம் அதுல எந்த அப்ஜக்சனும் இல்ல. ஆனா என் பையன நான் தனிக்குடித்தனம் அனுப்ப மாட்டேன். நீ அதுக்கு ஒத்துக் கிட்டு தான் ஆகணும்..."என்று அவள் கைப்பற்றிச் சொன்னார். அவர் சொல்லி முடித்ததும் அவர் கண்ணீல் சிறு கவலை பயமும் தென்பட்டது.


அதை கவனித்தவள், முறுவலுடன் அவரிடம் "கவலை படாதீங்க, தனியா போய் வாழ்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல. ஏன்னா எனக்கு சமைக்க தெரியாது. உங்க புள்ளைக்கு சமைக்க தெரியுமானு தெரியல. அப்படி தெரிஞ்சாலும்  அந்த விஷப் பரீட்சைக்கு நான் ஆள் இல்ல. தனியா போறதுனா முதல் அஃபேக்ட் ஆகுறது என்னவோ நான் தான் ஆன்ட்டி. ஸோ எப்பையும் அந்த தப்பான முடிவை நான் எடுக்கவே மாட்டேன்" என்றிட, சாந்தி 'கிளிக்' என சிரித்து விட்டு சைத்துவைப் பார்த்தார் அவனோ இருவரையும் முறைத்தான் . 


"எங்க வீட்லே சைத்து ரொம்ப சைலண்ட். சனா மட்டும் ஏதோ கொஞ்சம் பேசுவா ! இவர் சுத்தம். எங்க வீடு ரொம்ப அமைதியா இருக்கும். எனக்கு அது பிடிக்காது. அதுனால டி.விய சத்தமா வச்சு கேட்பேன். ஆள் இல்லேன்னா அந்த சத்தம் தான் எனக்கு துணை. இவங்க இருந்தும் ரூமே கதினு கிடக்கற  இந்த மக்கள் அந்த சத்தத்தை கேட்டு ஹாலுக்கு வந்து கொஞ்ச நேரம் பேசுவாங்க... இதான் அங்க எனக்கு வேலை. ஆனா இனி அப்படி இல்லைனு நினைக்கறேன். இப்படி பேசற மருமக தான் எனக்கு வேணும்..."என்றார் தாடையை பற்றி. 


"உங்க அக்காக்கும் உங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ஆன்ட்டி..."என்றாள். 


"அவள் கொஞ்சம் குண்டு... நான் கொஞ்சம் ஒல்லி"எனவும் அவள் கண்களை சுருக்கி முறைக்க அவர் சிரித்து விட்டார். " கேரக்டர்லையும் தான் ஆன்ட்டி"என்றாள்.


"என்ன ஆன்ட்டினு சொல்லிட்டு இருக்க, அத்தைன்னு சொல்லு. அதான் அழகு"என்றார்." சரிங்க அத்தை" என்றாள்.


அவள் மனதில் நேற்று இருந்த இறுக்கம் இன்று மறைந்திருந்தது. ஏதோ உள்ளுக்குள் நிம்மதி கண்டது போல உணர்ந்தாள் அவள். 


இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை ஆ- வென பார்த்திருந்தனர் அவளது குடும்ப மக்கள். 'நேற்று வரை மகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ?' என பயத்தில் அடித்து கொண்டது மனது சற்று அமைதி அடைந்தது  போல் இருந்தது மகிழ்மதிக்கு.  சாந்தியின் பேச்சில் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இருந்தாலும் மருமகனை எண்ணிக் கொஞ்சம் பயந்தார் மகிழ். 


விஷ்ணுவிற்கு அவர்கள் இயல்பா பேசிக் கொள்வது நல்லதாகவே பட்டாலும்.  அவர்களது முடிவில் சரஸ்வதியின் தலையிடல் இல்லாமல் இருக்குமா? அப்போது சாந்தியும் இவ்வாறு தன் மகளுக்கு ஆதரவாக இருப்பாரா???' என சந்தேகம் உள்ளுக்குள் எழ, கேட்க முடியாமல் தவித்தார். 


எகாவிற்கு சைத்துவை  கண்டாலே பிடிக்கவில்லை. அவனோடு சகஜமாக பேசும் எண்ணம் இதுவரையிலும் வந்ததில்லை. பேசவும் விருப்பமுமில்லை. ஆனால் வைஷு  தன்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிவிட்டதை எண்ணி அவளை திட்டினான். 


தன் மனைவியை குடும்பத்தில் ஏத்துக் கொண்டது போல தானே வைஷுவின் கணவனையும்  குடும்பத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்... ஆனால் அவனை தான் தனக்கு பிடிக்கவே இல்லையே. இதில் எங்கே அவனை சொந்தமாக ஏற்றுக் கொள்ள, வைஷுவின் கணவனை பற்றி அவள் கனவு  கண்டாளோ இல்லையோ எகா நிறைய கற்பனை செய்து வைத்திருந்தான். அதை எல்லாம்  இடித்து தரமட்டமாக்கியத்தோடு பெரியப் பாராங்க கல்லை வைத்து அடைத்து விட்டாள். 


அவனை ஒரு முறை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான். வஸ்திக்கோ சந்தோசம் ,  சோகம் என  எல்லா உணர்வுகளும்  கலவையாக உள்ளுக்குள் தோன்றியது .


"சரி சம்மந்தி, ஒரு நல்ல நாள் பார்த்துட்டு வந்து நாங்க எங்க மருமகளை அழைச்சிட்டு போறோம்"என்றார். 


"சம்மந்தி ஒரு விஷயம் பேசணும்"என்று விஷ்ணு தான் ஆரம்பித்தார். "என் பொண்ணு உங்க வீட்ல வாழ போறானு முடிவாகிடுச்சி. அவளை நீங்க முறையா அழைச்சிட்டு போகணும்  நினைக்கும் போது நாங்களும் முறையா செஞ்சு அனுப்பணும் இல்லையா.... எங்க வீட்டுக்கு சொந்தக் காரங்களுக்கு என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்தது தெரியாது. அதுனால ஒரு ரிஷப்ஷன் போல வச்சா என்ன???"என்றார். 


தன் தந்தையை ஆச்சர்யமாகப் பார்த்தாள் வைஷு. உதட்டில்  சிறு புன்னகை வந்து போனது. 


"வச்சிடலாம் சம்மந்தி ! வீட்ல பேசிட்டு நல்ல நாள்ல வைக்கலாம். உங்களுக்கும் உங்க பொண்ணு கல்யாணத்தை சிறப்பா செய்யணும் ஆசை இருந்திருக்கும்.. ஆனா இப்படி ஆகிடிச்சி !"என்று தேவன் வருத்தப்பட, மகளை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, அவள் தலை குனிந்தாள்.


"வேற எதுவும் இருக்கா சம்மந்தி??" எனக் கேட்க, "இருக்கு சம்மந்தி.  நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க? பொண்ணுக்கு நாங்க என்ன செய்யணும்?" என்றதும் மூவரும் முழித்தனர்.


"என் பாதி சொத்து அவளுக்கு தான். அவ பெயருல தான் நிலம் எல்லாம் இருக்கு. அப்படியே கொடுக்க கூட எங்களுக்கு சம்மதம் தான். நீங்க என்ன சொல்றீங்க?" என்றதும் மூவரும் பார்த்துக் கொண்டனர்.


"சம்மந்தி என் மருமக மருமகளா வந்தா போதும் நான் நினைக்கிறேன். செல்வம் கொண்டு வந்தால் தான் அவ லட்சுமினு இல்ல... அவ வெறுங்கையோடு வந்தாலே மகாலட்சுமி தான். எங்களுக்கு எதுவும் வேணாம். எனக்கு அதைப் பத்தி ஒரு விவரமும் தெரியாது. நீங்க உங்க மருமகன் கிட்ட கேட்டுக்கோங்க..."அவனை மாட்டிவிட்டு அவர் ஒதுங்கிக்கொண்டார்.


தாயை முறைத்து விட்டு மாமனார் புறம் திரும்பியவன்"அவள் பேர்ல இருக்கிறது  எல்லாம் அப்படியே உங்க கிட்டையே இருக்கட்டும். அதை மெயின்டேயிண்ட் பண்ணி கணக்கு வழக்கு பார்க்க எனக்கு நேரமில்லை  ! எந்தக் குறையும் அவளுக்கு நான் வைக்க மாட்டேன் மாமா. அதையும் மீறி அவளுக்கு தனிப்பட்டு எதுவும் தேவை பட்டால், உங்க கிட்ட வந்து  கேட்டால் கொடுங்க... அவ விருப்பப்பட்டு கேட்டால் நீங்க செய்ங்க.. எங்களுக்கு தனிப்பட்டு எதுவும் வேணாம் மாமா. உங்க பொண்ணு மட்டும் போது"என்று அவள் விழிகளை பார்த்து சொல்ல, புதிதாக அவனை பார்ப்பது போல பார்த்தாள். அவன் மட்டும் இல்லை அங்கிருக்க அனைவரும் தான். 


அந்த பேச்சு வார்த்தை வைஷுவின்  வீட்டுக் சூழலை மாற்றியது. அவர்கள் சொல்லிவிட்டுச் செல்ல, வைஷுவை ஒரு ஏக்கப் பார்வையுடன் பார்த்து விட்டுச் சென்றான்.


இறுக்கம் அகன்று இதமான நிலைக்கு வந்திருந்தனர். மீண்டும் வைஷு வெளியே கிளம்ப, அவரை தடுத்து நிறுத்தினார் மகிழ். 


"சாப்பிட்டு போ !"என்றார். 

அவரை பார்த்து சிரித்து விட்டு சென்று வெளியே விட்டாள். 


"என்னங்க???"என அவர் விஷ்ணுவை பார்க்க, அவர் கண்ணாலே அமைதியாக இருக்கும் படி சொன்னவர் மகளை தான் நினைத்தார்.


***** 


வைஷுவின் வீட்டிலிருந்து நேரகமாக மருத்துவமனைக்குச்  மூவரும் சென்றனர். அங்கே நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு மயக்கம் தெளிந்து நிலையில் அமைதியாக இருந்தார் சரஸ்வதி. 


மூவரும் உள்ளே நுழைய சாந்தி, அவர் அருகே அமர்ந்தார். இருவரும் சரஸ்வதியின் எதிரே தான் நின்றனர். அவர் பார்வை என்னவோ சைத்துவை தான் நிலைக்குத்தி இருந்தது. 


"என்ன பெரியம்மா ஏதாவது வேணுமா???" அக்கறையாக கேட்டான். உடனே முகத்தை திரும்பிக் கொண்டார். அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. 


"பெரியம்மா... பெரியம்மா..."அவர் திரும்பவில்லை. அதற்கு மேல் அவனும் அங்கு அவன் நிற்கவில்லை வெளியே வந்துவிட்டான். ஆனால் உள்ளிலிருந்து பெரியம்மாவின் பேச்சு அவனுக்கு கேட்டு விட்டது. 


"எனக்கு அவளை சுத்தமா பிடிக்காது. அவளுக்கு தாலி கட்டி பொண்டாட்டியா ஆக்கி வச்சிருக்கான் இவன். என்னால் அவளை மருமகளா ஏத்துக்க முடியாது. அவ  மருமகனு சொல்லிட்டு வீட்டுக்கு வரக் கூடாது...." என்று ஆவேசமாக கத்த, அவரை சமாதானம் செய்தார் சாந்தி. 


சைத்துவின் மனம் அடித்துக் கொண்டது. மீண்டும் பெரியம்மா ஏதேனும் 'சூழ்ச்சி செய்வாரோ' என்ற பயம்  உள்ளுக்குள் இதயத்துடிப்பை அதிகப்படுத்த,

எதை செய்தால் அவளை தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியவன், முடிவெடுத்தவனாக வைஷுவைத் தேடிச் சென்றான். 


****


சுறுக்கமாக நடந்ததை தன் தோழர்களிடம் சொல்லி முடித்தாள் வைஷு. அவளுக்கு ஆறுதலாக இருந்தனர் அவளது  நண்பர்கள். அவளும் வேலை பார்க்கச் செல்ல, அவளது ஸ்டியோவிற்கு வந்து  நின்றான் சைத்து. 


"உன் கிட்ட கொஞ்சம் பேசணும்... வெளிய போலாமா???"என்றான். 


அவளும் சரியென்று சொல்லிக் கொண்டு தன் ஸ்கூட்டியை எடுக்க, "என் கூட வண்டிலே வரலாம். மறுபடியும் கொண்டு வந்து விடுறேன்"என்றான். 


அவளும் அவன் பின்னே அமர்ந்தவள், சாதரணமாக அவன் தோளில் கையை வைத்தாள். அவன் ஆசையாக அதைப் பார்த்தான். அவள் பார்வையை உணராது அவனுக்கு 'பிடிக்கவில்லையோ' என்ற ரீதியில் கையை எடுத்து "ஸாரி "என்றாள்.


"நான் உங்க ஹஸ்பண்ட் தான் மிஸஸ் சைத்து. கையையும் வச்சிக்கலாம் கட்டியும் பிடிச்சிக்கலாம் தப்பில்ல"என்று கண்ணாடியூடே கன்னத்து மேடையை உயர்த்திச் சொல்ல, "ஹஸ்பண்ட்னு நியாபகப் படுத்தினதுக்கு தேங்க்ஸ் மிஸ் வைஷு. பட் எனக்கு கை வைக்க,  கட்டிபிடிக்கற எண்ணமில்ல... நீங்க போலாம்"என்று இதழை சுழித்து கொண்டாள்.


"அப்படி எண்ணம் வரும் போது தாராளமாக..."என்று  கைகளை விரிக்க, "இப்போ நீ போறீயா? இல்ல நான் மறுபடியும் ஸ்டியோகுள்ள போகட்டுமா???" என்றதும் அமைதியாக வண்டியை எடுத்தான். 


மனதில் இருந்த குதூகலத்தில் வண்டியை தாறுமாறாக ஓட்டினான்., எண்ணமில்லை என்றாலும் அவசியம் போல அவனை இறுக்க கட்டிக் கொண்டாள். 


காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் பறவையின் மீது அமர்ந்திருந்து இருப்பது போல இருந்தது. சட்டென வண்டி நிறுத்தினான். தரைக்கு வந்துவிட்டது போல எண்ணினாள். 


"இன்னும் ரைட் போகணும் ஆசையா இருக்கா பொண்டாட்டி... !"எனக் கேட்கவும் அவனை விட்டு விலகி சுற்றும்முற்றும் பார்த்து விட்டு வேகமாக இறங்கியவள், அவனை தன் கைப்பையை வைத்து அடித்தாள்.


"சைக்கோ.. சைக்கோ...! கொஞ்ச நேரத்துல என் உயிரே போக இருந்துச்சி.  அதை இழுத்து பிடிச்ச வச்சிருக்கிறதுக்குள்ள..." என்று மூச்சை இழுத்து வெளியே விட்டாள். 


"இதுக்கே இப்படினா, இனி நீ கடைசி வரைக்கும் என் கூட தான் வாழணுமே. என்ன பண்ண போற மிஸஸ் சைத்து ! நீயும் முன்னாடியே யோசிச்சி இருக்கணும்" என்று தாடையை தடவியப்படி அறிவுரைச் சொன்னான். 


"முன்னாடி என்ன சைக்கோ... இப்பையும் யோசிக்க டைம் இருக்கு எனக்கு.. !என்ன  யோசிக்கட்டுமா??"இடையில் கைவைத்து புருவமுயர்தி அவனிடம் நக்கலாக கேட்க, "எ... என்ன... யோசிக்கப் போற நீ?"கொஞ்சம் தடுமாறினான்.


  "இன்னும் நம்ம கல்யாணம் ரிஜிஸ்டரே ஆகல சைக்கோ... தாலிய கழட்டி கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு"என கேட்டு அவனது அடிமடியில் கையை வைக்க,  பையன் அதிர்ந்துவிட்டான்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2