Posts

Showing posts from June, 2024

மடல் - 8

 வழக்கம் போலவே  விடியலை எதிர்கொண்டு, ஆற்ற வேண்டிய கடமைகளை முடித்து விட்டு, மறு வீட்டிற்கு (கடைக்கு ) வந்த சேர்ந்தனர் தேவாவும் திகழும். கடைக்குள் நுழைந்த தேவா ! முருகனை ஏக்கமாகப் பார்த்து விட்டு  சென்றாள். அவள் முருகனை ஏக்கமாகப் பார்த்து  விட்டு செல்வதை திகழும் கவனிக்க தான் செய்தாள். இன்னும் மூன்று நாட்களுக்கு முருகனுக்கு எந்தப் பூஜையும் இருக்க போவதில்லை.  சுவரில் மாட்டிருக்கும்  புகைப்படங்களை போல அவரும் காய்ந்த பூவுடன் வாடி கிடக்க வேண்டியது தான். முருகனுக்கு பூ வாங்கி போடுவதும் பூஜை செய்வதும் தேவா மட்டும் தான். திகழ் செய்வே மாட்டாள். அந்த மூன்று நாட்களில் தேவா அவளை செய்ய சொல்வாள், "மக்கூம்...  போடி "என்று போய் விடுவாள். தன் அன்னை இறந்த பின் குறைந்து போன கடவுள் பக்தி, சிற்றன்னையின் கொடுமையில் கொஞ்சம் குறைய, தந்தை இறந்த பின் கடவுள் மேல் பற்று இல்லாமல் போனது திகழுக்கு. அவள் கடவுளை தரிசிக்க மாட்டாள். கோவிலுக்கும் செல்ல மாட்டாள், தேவா வீம்பாக  அழைத்துச் சென்றாலும், பொங்கல் புளியோதரையுடன் முடித்துக் கொள்வாள். மேற்படி வேண்டுதலும் வைக்க மாட்டாள்... அவளை அவள் போக்கில் விட்டு விட்டாள்

மடல் - 9

Image
 மடல் - 9 பரபரவென இயங்கிக் கொண்டிருந்தது அந்தக் காவல் நிலையம். தேவாவும் திகழும் தயங்கியபடி உள்ளே நுழைந்தனர். அவளை பார்த்ததும் சுந்தரி அக்கா, அவர்கள் அருகே வந்தார். "வந்துட்டீங்களா ! வாங்க உள்ள இன்ஸ்பெக்டர் இருக்கார். உங்களை பத்தி சொல்லி வச்சிருக்கேன்.  துடுக்கு தனமா பேசிடாம கொஞ்சம் பணிஞ்சு பேசுங்க ! தேவா கடை வேணும்ன்னா கொஞ்சம் இறங்கி தான் போகணும்... உள்ள போங்க"என அறிவுரை சொல்லி உள்ளே அனுப்பிட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவர் சொன்ன திசையை நோக்கி சென்றனர். கோப்பையை பிரட்டிய படி உள்ளே காவல் அதிகாரி அமர்ந்திருந்தார். உள்ளே வர அனுமதி கேட்டு அவர் முன்னே வந்து நின்றனர் இருவரும். "யார் நீங்க? எதுக்கு வந்திருக்கீங்க?" "சார் நான் தேவா ! இவ திகழ். நாங்க ஶ்ரீ தின்னு டாட்டூ கடை வச்சிருக்கோம்... எங்க கடை மேல கம்பளைண்ட்  வந்திருக்கிறதா சொல்லி சு... லேடி கான்ஸ்டபிள் ரெண்டு பேரு வந்து கடைய பூட்டி சாவி வாங்கிட்டு எடுத்து வந்துட்டாங்க... உங்களை பாக்கணும் சொல்லிட்டு போயிட்டாங்க. எங்க மேலே என்ன சார் கம்பிளைண்ட்?!" "லேடி கான்ஸ்டபிள் சொல்ல

இதயம் - 19

  இதயம் 19 சரஸ்வதியைத் தவிர்த்து அனைவரும் கல்யாணப் பரபரப்பில் இருந்தனர். சைத்துவும் கூட  கல்யாண வேலையில் தன்னை ஒன்றிருந்தான்.  வஸ்தியின் மேல் சிறு கோபம் இருந்தாலும் உடன் பிறந்தவளின் திருமணம் போல, பிரபு தேவனோடு கொஞ்சம் பொறுப்பாக எடுத்து பார்த்தான். பிரதீப்பை தனக்கு துணையாக வைத்துக் கொண்டு அனைத்து வேலையையும் செய்தான். வஸ்தியைப் பெண் கேட்டு சென்ற  ஐந்தாம் நாளிலே ஸ்ருதிக்கு பிரசவ வலி வந்திருக்க, அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். நல்ல நேரத்தில் அழகான பூக்குவியலாக  பெண் மகவை பெற்றெடுத்தாள். அந்த வீட்டின் முதல் பேரப்பிள்ளை.  சாய் எதிர்பார்த்தது போல பெண் மகவை தான்  அவனது மனைவியும் ஈன்றெடுத்திருக்கிறாள்.  ஆனால் சரஸ்வதி எதிர்பார்த்ததோ ஆண் மகவு. விஷயத்தை கேட்டதும் அவரது சந்தோசம் முற்றிலும் வடிந்து போனது. இந்த விஷயத்திலும் தான் எண்ணியது நடக்காமல் போக, ஏதோ தொடர்ந்து அடிவாங்கியது போலொரு எண்ணம் அவருக்கு . அவர் முகமே சரியில்லாமல் போக,  ஸ்ருதிக்கு மாமியாரை நினைத்து அல்லு விட்டது. சிறு பயமும் உள்ளுக்குள் உறுத்தலாகவும் இருந்தது.  இத்தனைக்கும்  அவள் அவருக்கு பிடித்த மருமகளாக தன் ஆசைகளை எல்லாம் மறந்து

இதயம் 18

 இதயம் 18 பிரபு , தேவன் , சாந்தி, அகல்யா, வஸ்தி  ஐவரும் எகாந்தின் குடும்பத்தை  வழியனுப்பி வைக்கச் சென்றனர்.  பேரமைதியாக இருந்தது அந்த இல்லம். இளசுகள் அனைவரும் சரஸ்வதியின் முகத்தை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தனர். அமைதியாக இருக்கும் அவர் எப்போது வேண்டுமானாலும் ருத்ரத் தாண்டவம் ஆடலாம் என்று எண்ணி இருந்தனர்.   "தீப்... பெரியம்மா அநியாயத்துக்கு  சைலண்ட் இருக்காங்களே!!! என்னவா இருக்கும். இவ்வளவு அமைதியா இருக்காங்களே,  அடுத்து என்ன பண்ணுவாங்க, டான்ஸ் ஆடுவாங்களா??? இல்ல ட்ராமா போடுவாங்களா????"தன்னருகே நின்றிருந்த பிரதீப்பிடம் வினவினாள் சனா.  "சிட்டுவேசன பார்த்தால் ட்ராமா போடுறது போல இல்ல. சோ கண்டிப்பா டான்ஸ் தான் ஆடுவாங்க. அதுவும் ருத்ர தாண்டவம்.  ரம்யா கிருஷ்ணனுக்கே டஃப் கொடுப்பாங்க. பார்க்க தானே போற உங்க பெரியம்மாவ ஓட ஆட்டத்தை !!! " ரஜனி ஸ்டைலில் சொன்னான்.  அதற்குள் அனைவரும் உள்ளே வந்தனர். பிரபுவுக்கும் தேவனுக்கும் கொஞ்சம் பயம் இருந்தாலும் மறைத்த படி உள்ளே வந்தனர். சாந்தியும் அகல்யாவும் பயத்தை வெளியே காட்டிய படி வந்தனர்.  வஸ்தி தன் பெரியம்மாவை வெறித்த படி வந்தாள்.  அ

இதயம் - 17

 இதயம் 17 'இவளா????' என்ற ரீதியில் தலையில் கைவைத்து விட்டார் சரஸ்வதி. 'நானே!!!' என்பது போல புன்னகையுடன் வணக்கம் வைத்தாள் வைஷு. அங்கே அவரது மகன்  சாய் வீட்டில் இல்லை. மனைவியின் பிரசவ நாள் நெருங்க,  மாமியார் வீட்டிற்குச் சென்று விட்டான். "என்ன சரஸ்வதி மேடம், வேற யாருக்கும்  தெரியாதா??? என்னை பொண்ணு பார்க்க வந்தது. எல்லாரும் புது கதைய கேட்டது  போல புரியாம புதுசா பார்கிறாங்க..." என சரஸ்வதியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு கேட்டாள். "நீ என் குடும்பத்துக்கு ஏத்த மருமகளாக  வந்திருந்தா  இவர்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. சும்மா பத்தோடு பதினொன்னா  பார்த்துட்டு  வந்த  பொண்ணை எல்லாமா சொல்லிட்டு இருக்க முடியும் "என்று வேறெங்கோ பார்த்துக் கொண்டுச் சொன்னார்.  உதட்டைப் பிதுக்கியவள் "சரிதான்,  நான் என்ன கேலண்டர்ல இருக்க மகா லட்சுமியா ??? பொண்ணும் பொருளோட வந்து வீட்டுவேலைப் பார்க்க,  லட்சியங்களும் கனவுகளும் கொண்ட சாதாரண பெண் தானே !!! சொல்லிக்கற அளவுக்கு இல்ல தான்"என்று பாவமாக உதட்டைவளைத்து அதில் கேலியை அதக்கி விட்டுச் சொன்னாள். 

மடல் 7

 மடல் 7 விஷ்ணு தனது கடையை திறந்ததும், நேராக  கடவுளை வணங்கிட வந்தவன் புகைப்படத்தை அலங்கரித்திருந்த பழைய பூவை,  தூர எறிந்து, புது பூவைச் சுற்றிப் போட்டு, விளக்கு ஏற்றி  வணங்கி விட்டு வேலையைத் தொடர்ந்தான்.  அவனை தொடர்ந்து கடையில் வேலை செய்யும் பாலாவும் வந்தான். "வணக்கங்கணா !"என உள்ளே வந்தவன், புதிதாக வந்திருந்த பார்சலை பிரித்து,   புத்தகத்தை எண்ணி காலியான இடத்தில் அடக்கி வைக்கப் போனான். "பாலா !! எவ்வளவு புக்ஸ்  வந்திருக்கு? ஆடர் போட்ட புக்ஸ் எல்லாம் வந்திருக்கானு மட்டும் பார்த்து கணக்கை எழுதி வை ! பார்சல்ல இருந்து புக்ஸ எடுத்து அடுக்கி வைக்க வேணாம்..." என்றான். "அடுக்கி வைக்க வேணாமா? அப்ப அந்தக் காலியான இடத்தை பார்த்துட்டு கஸ்டமர் புக் 'கு இல்லனு  வந்துட்டு போகவா? வழக்கமா பண்றது தானே ஏன்ணா  வேணாங்கற? "பாலா !  கடையவே காலிப் பண்ண போறோம்... எதுக்கு ரெண்டு வேலைனு தான் அதுலே இருக்கட்டும் சொல்றேன்..." என்றவனை உறுத்து விழித்தான் பாலா. " என்னடா அப்படி பார்க்கற?" "இல்லணா ! கண்டிப்பா கடைய காலி பண்ணத்தான் போறோமா?  இந்தக் கடை ஓனர் கூட போகாதீங்க தா