இதயம் 18

 இதயம் 18

பிரபு , தேவன் , சாந்தி, அகல்யா, வஸ்தி  ஐவரும் எகாந்தின் குடும்பத்தை  வழியனுப்பி வைக்கச் சென்றனர். 


பேரமைதியாக இருந்தது அந்த இல்லம். இளசுகள் அனைவரும் சரஸ்வதியின் முகத்தை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தனர். அமைதியாக இருக்கும் அவர் எப்போது வேண்டுமானாலும் ருத்ரத் தாண்டவம் ஆடலாம் என்று எண்ணி இருந்தனர்.  


"தீப்... பெரியம்மா அநியாயத்துக்கு  சைலண்ட் இருக்காங்களே!!! என்னவா இருக்கும். இவ்வளவு அமைதியா இருக்காங்களே,  அடுத்து என்ன பண்ணுவாங்க, டான்ஸ் ஆடுவாங்களா??? இல்ல ட்ராமா போடுவாங்களா????"தன்னருகே நின்றிருந்த பிரதீப்பிடம் வினவினாள் சனா. 


"சிட்டுவேசன பார்த்தால் ட்ராமா போடுறது போல இல்ல. சோ கண்டிப்பா டான்ஸ் தான் ஆடுவாங்க. அதுவும் ருத்ர தாண்டவம்.  ரம்யா கிருஷ்ணனுக்கே டஃப் கொடுப்பாங்க. பார்க்க தானே போற உங்க பெரியம்மாவ ஓட ஆட்டத்தை !!! " ரஜனி ஸ்டைலில் சொன்னான். 


அதற்குள் அனைவரும் உள்ளே வந்தனர். பிரபுவுக்கும் தேவனுக்கும் கொஞ்சம் பயம் இருந்தாலும் மறைத்த படி உள்ளே வந்தனர். சாந்தியும் அகல்யாவும் பயத்தை வெளியே காட்டிய படி வந்தனர். 

வஸ்தி தன் பெரியம்மாவை வெறித்த படி வந்தாள். 


அனைவருக்கும் அவர் 'என் சொல்லிக் கத்த போகிறார்?' என்று ஆர்வத்தோடும் பயத்தோடும் காத்திருந்தனர். ஆனால் அவரை முந்திக் கொண்டாள் வஸ்தி. 


"மாமா..." என அவள் இருவரையும் அழைக்க  இருவரும் அவளைத் தான் பார்த்தனர். 


அவர்கள் முன் கைக் கூப்பியவள்" நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி மாமா !!! என் கல்யாணத்தை எடுத்து நடத்துறேன் சொல்லி முன்ன வந்து நின்னதுக்கு கோடி நன்றி சொன்னாலும் பத்தாது. என் உயிர் இருக்கற வரைக்கும்  இந்த நன்றி மறக்க மாட்டேன் மாமா !!! " என்று வணங்கினாள்.


"என்னமா நீ!!!  உதவி , நன்றினு சொல்லிட்டு இருக்க, இது எங்க கடமை இல்லையா, நீ எங்க வீட்டு பொண்ணுமா நாங்க முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வைக்காம வேற யார் பண்ணுவா? இதுக்கெல்லாம்  நன்றி சொல்லி எங்களை பிரிக்காத மா ! "என்று பிரபு  வருத்தப்பட, 


கசந்த புன்னகையை உதிர்த்தவள், "இந்த வீட்டுப் பொண்ணுனு என்னை மறுபடியும் சொல்லாதீங்க மாமா. அத கேட்க வெறுப்பா இருக்கு. இந்த வீட்ல ஏன்டா பொண்ணா பொறந்தேன் இருக்கு?"என்று வெறுத்து பேசினாள்.


"வஸ்தி " என சாந்தி அவள் தோளை அழுத்த, தன் தோளிலிருந்து அவர் கையை எடுத்தவள்,"எனக்கு இந்த வீட்ல இருக்கவே பிடிக்கல அத்த. என்னை பொண்ணா பெத்து தப்பு பண்ணது என் அப்பா அம்மா தான். ஆனா நான் தண்டனை அனுபவிக்கணுமா? என்னை ஏன் பொண்ணா பெத்தாங்கனு அவங்கிட்ட கோபப்பட வேண்டியது தான.


பொண்ணா ஏன் பொறந்தனு திட்டாம பொண்ணா ஏன்டா பொறந்தோம்னு நினைக்கற அளவுக்கு ஆயிரம் கண்டிஷன போட்டு நினைக்க வச்சிட்டாங்க


ஏன் பொண்ணுங்களுக்கு ஆசை கனவு லட்சியம்' லாம் இருக்கக் கூடாதா??? வீட்டுக்கும் குடும்பத்துக்கும் அடிமையா இருக்கணுமா??? எந்த காலத்துல  இருக்காங்க இவங்க?


மகனுக்கு பிடிச்ச பொண்ண கட்டி வைக்கனும் கங்கணம் கட்டிட்டு அழையிறாங்க, ஏன் மருமகளா, நானும் இந்த வீட்டு பொண்ணு தான. அவளுக்கு பிடிச்சப் பையனை கட்டிவைப்போம் ஏன் தோணல இவங்களுக்கு ?? அவன் மனசு உடைஞ்சிடுமா பதறுனாங்க ! எங்களுக்கு என்ன இரும்பா உள்ள இருக்கு !!! "சரஸ்வதியை  ஒரு பார்வை பார்த்து கேட்டாள். 


யாரும் அவளது கேள்விக்கு பதில் சொல்லவில்லை சொல்லவும் முடியவில்லை. 


"இவங்கள சொல்லி என்ன ஆகாப் போகுது அத்த, என்னை பெத்தவளே என் மனசையும் ஆசையும் புரிஞ்சிக்கல, இவங்களுக்கு புரிஞ்சிட போகுதா??? " கசந்த முறுவலோடு தாயைப் பார்த்தாள். அவரோ அவளை பார்க்க முடியாமல் தலை குனிந்தார்.


"வஸ்திமா, என்னடா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசற?? எல்லாரும் உன்ன புரிஞ்சுக்காம நடந்துகிட்டாங்க. விடுடா அழாத, எல்லாம் சரியாகிடும். போ போய் நீ ரெஸ்ட் எடு. இனி இத பத்தி நினைக்காத இவங்க கிட்ட நான் பேசிக்கிறேன் நீ போ, பிரதீப் உன் அக்கா கூட்டிட்டு போ !!! "என்றார். பிரகதியும் பிரதீப்பும் அவளை வஸ்தியை அழைத்து கொண்டு  போனார்கள்.


அகல்யா மூவரையும் கண்ணீரோடு பார்த்து நின்றார். "நீ ஏன் இப்போ அழற??"


"வேற என்ன அண்ணி பண்ண சொல்றீங்க?? அவ பேசிட்டு போனத தான் கேட்டீங்கள. என் கிட்ட அவ பேசுறதே இல்ல அண்ணி!!! கல்யாணம் வேணாம் சொன்னாள்.  நான் இவங்களுக்கு பயந்து பிரகதிய வச்சி மிரட்டி,  வெளிய போனு வேற எல்லாம் சொன்னேன். அதையே பிடிச்சிக்கிட்டு இப்போ என்னை குத்தி குத்தி காட்டிப் பேசறாள். 


அதை கூட விடுங்க, நான் இருக்கும் போதே அனாதைனு சொல்லிட்டாளே அண்ணி. இதை கேட்கத்தான்  நான் உயிரோட இருக்கேனா ???


சொந்தம் வேணும் நினைச்சதுக்கு என் மகளை நான் இழந்துட்டேனே. நான் இருக்கும் போதே என்னை தத்தெடுத்துக்கிறீங்களா கேக்குறா??? இதெல்லாம்  கேட்க, இந்த ஜடம் ஏன் இன்னும் உயிரோட இருக்கு அண்ணி!!!" என கண்ணீர் விட்டு புலம்ப,


"என்னடி பேசிட்டு இருக்க மூணு பெத்த வச்சிட்டு அவங்களுக்கு  நல்லது பொல்லத பார்க்காம ' இன்னும் ஏன் உயிரோட இருக்கனு கேட்டுட்டிருக்க? இங்க இருந்து அழறத விட்டுட்டு போ போய் உன் பொண்ண சமாதானம் பண்ணு !!"என்று அவரை அனுப்பி வைத்தார்.


சரஸ்வதியின் உக்கரம் குறையவில்லை பெரிய பெரிய  மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தார். 


"சனா வீட்டுக்கு போ!!!"என்றார்.அவளும் நகர்ந்திட, அமைதியாக நின்றிருந்த சைத்துவின் அருகே வந்தவர்" இதுக்கெல்லாம் காரணம் நீ தான்டா!!! உனக்கு வஸ்திய பிடிக்கலேனா பிடிக்கலனு சொல்ல வேண்டியது தான. அவளை பழிவாங்கறேன் பிரச்சினைய எந்த அளவுக்கு கொண்டு வந்திருக்க பாருடா !! உன்னால அவ நம்ம குடும்பத்தையே வெறுத்துட்டா ! ச்சீ என்ன புத்திடா உன் புத்தி? எந்த விஷயத்துல விளையாடனும் எந்த விஷயத்துல சீரியஸா  இருக்கணும் தெரியாதா டா உனக்கு. ஏன் இப்படி  நடந்துக்கற சைத்து?? அந்தப் பொண்ணு சொன்னது போல சைக்கோவா தான் தெரியற நீ" என்றதும் அவனுக்கு கோபத்துக்கு மாறாக சிரிப்பும் 'சைக்கோ' என்று அவள் சொல்லும் விதமும் நியாபகத்துக்கு வர, முறுவலித்தான்.


திட்டிக் கொண்டிருந்தவர் அவன் முகத்தில் தெரிந்த முறுவலைக் கண்டு குழம்பினார்.


"சைத்து !!!"என்றழைக்க அவனோ அதை காதலில் வாங்கிக்கொள்ளாமல் வைஷுவை சம்பந்தமில்லாமல் நினைத்து சிரித்து கொண்டிருந்தான்.


"அவனை ஏன்டி திட்டுற அவன் என்ன பண்ணினான்???"சரஸ்வதி அந்தக் கோபத்திலும் மகனை விட்டுக் கொடுக்காமல் கேட்டார்.


"அப்றம் அவனை திட்டாம யார திட்ட சொல்ற??? நீயும் அவனும் நடந்துக்கறது சரியே இல்ல. வஸ்தி நம்ம வீட்டு பொண்ணு தான. தம்பி, இல்லாத இடத்தில நாம தான நின்னு அவளுக்கு எல்லாம் செய்யணும். அவளுக்கு புடிச்ச பையன், அவனே வந்து பொண்ணு கேட்கும் போது கொடுக்கறதான நம்ம கடமை. அவளுக்கு பிடிக்காத ஒரு வாழ்கைய கொடுத்துட்டு உன் புள்ள ஆசையா நிறைவேத்தியாச்சினு சந்தோஷபடுவீயா???  அப்பையும் அவன் வாழ்க்கை நல்லா இருக்குமா??? வீட்டுக்கு பெரிய மனஷியா இருந்துட்டு ஓர வஞ்சனை பண்ணாதக்கா , பசங்களுக்கு நல்லது கெட்டது நீ தான பார்க்கணும்..." 


"இப்போ என்னடி அதான் என்னையும் கேட்காம உன் மருமகளுக்கு அவ காதலிச்சவனோட கல்யாணம்பேசி முடிச்சிட்டீங்களே அப்றம் என்ன ..." 


"நீ எடுத்து பண்ண வேண்டியது இப்படி வீம்பு பண்ணிட்டு இருக்க நீ???" என்றதும் அவர் பதிலேதும் சொல்லாமல் உள்ளே சென்று விட,  தேவன் சாந்தியை அழைத்து கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.


****

கை தாங்களா எகாவை அழைத்து கொண்டு வந்தவர்  ஹாலில் அமர வைத்தார். பின்னாடியே வைஷுவும்  வந்தாள். 


மகிழ் உள்ளே சென்று அனைவருக்கும் ஜூஸ் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தார். 


"என் பொண்ணு வஸ்தி ரொம்ப பாவங்க... எனக்கு அந்த பொம்பலையா பார்க்கப் பார்க்க கோபம் பொத்துகிட்டு வருது. என்ன பொம்பலையோ!!! நல்ல வேள  வைஷு அவங்க வீட்டுக்கு மருமகளா  போகல, இல்ல பிள்ளைய என்ன பண்ணிருப்பாளோ !!!"என  கவலையாகச் சொன்னார்.


"அத்தே, வைஷு அங்க போகாதது நல்லது தான். ஆனா, நீ பயப்படற மாதிரி அந்த பொம்பலை எதுவும் வைஷுவ செய்யாது. வைஷுவேனா அந்தப் பொம்பலைய டார்ச்சர் பண்ணிருக்கும். நீ அந்தப் பொம்பலை நினைச்சி பீல் பண்ணிருப்ப!!!" என  எகா சொல்ல, விஷ்ணு வாய் விட்டே சிரித்தார்.  அவனது பின்னந்தலையில் அடித்தாள் வைஷு.


"ஆமா எகா !!! இன்னைக்கி வைஷு கேட்ட கேள்விக்கு அந்தப் பொம்பலை வாயடைச்சு போயிருச்சி !!! வைஷுவ பார்த்து அந்தப் பொம்பளை பயப்படுது நினைக்கிறேன்"விஷ்ணு சொல்ல


"ஆமா, அந்த பொம்பலைக்கு நான் மாமியாருக்கு மாமியார் என்னை பார்த்து பயப்படுது. அதுக்கு தன்னை  எதிர்த்து எவன் கேள்வி கேட்ப்பான்ற திமிர்ல இருக்கு. ஆனா,  நான் எதிர்த்து கேக்குறனால அதுக்கு என்ன பிடிக்கல, அதுவும் நான் அந்த அம்மா வாயடைக்கறது போல கேள்வி கேட்கிறேனா அதான் என்னை பார்த்து ஜெர்க்காகுது"என்றாள் அசட்டையாக.


"என்னவோ அந்தக் குடும்பத்துல இருந்து சீக்கிரமா வஸ்திய கூட்டிட்டு வந்திடணும். எனக்கு அந்தப் பொண்ண, அங்க விட்டுட்டு வர மனசே இல்லங்க..." 


"எனக்கும் தான்... ஆனா என்ன பண்ண முறைப்படி அனுப்பி வைக்கிறேன் சொல்லும் போது மறுக்க முடியல ! சரி கொஞ்ச நாள் தான் அங்க இருக்கட்டும் அப்றம் வஸ்தி இங்க நிம்மதியா இருக்க போறாள் என்ன எகா !!"


"ஆமா மாமே ! அவளுக்குள்ள இவ்வளவு  வலிகள் இருக்கும் எனக்கு தெரியாது. அவ சொன்னதும் இல்ல... ஆனா இதுக்கு அப்றமும் அவளை எந்த விதத்திலும் அழ விடக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன் மாமே ! அவளை நல்லா பார்த்துக்கணும் இன்னொரு விஷ்ணு மகிழா நாங்க வாழந்து காட்டணும்" என அவன் கூறியதும் விஷ்ணு காதலாக தன் மனைவியை பார்க்க, மகிழோ வெட்கப்பட்டார்.


"வச்சாம் பார் எம்மாம் பெரிய ஐஸா !! யோவ் மாமா விஷ்ணுக்கு  ஜன்னி வந்திட போகுதுயா?? உலகத்துல இருக்க பணி மலைக்கு எல்லாம்  நீ டஃப் கொடுப்ப போல..."


"நான் என்னடி ஜஸ் வைக்கிறேன் உண்மைய தானே சொன்னேன். என்ன மாமே??? என் மகி???" என கேட்டு இருவரை மேலும் சிவக்க வைத்தான்,


"ச்சீ போங்கடா !!" என எழுந்த மகிழ் வஸ்திக்கு போன் போட்டு பேசி எப்படி இருக்கானு கேட்டு சொல்லு"என்று உள்ளே செல்ல அவரை பின் தொடர்ந்து உள்ளே சென்றார் விஷ்ணு.

அவர்கள்  இருவரும் செல்வதை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தனர்.


"வைஷு ஹாஸ்பிட்டல்ல  இருந்து நீ எங்க போனா??? எப்படி சைத்துவோட வந்த???"


"அதுவா..."என்று நடந்த அனைத்தையும் சொல்ல அவன் கண்கள் கனிந்தது. "ஏன்டி அவனை போய் பார்த்த??? அவன் ஒரு ஆளுனு. அவனால தான்டி  இவ்வளவு பிரச்சினையும்... அவன் மட்டும் இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லேன்னு சொல்லிருந்தால், என் பிரதி எனக்கு ப்ரோப்போஸ் பண்ணிருப்பாடி. கொஞ்ச நாள் நாங்களும் லவ் பேர்ட்ஸ் சுத்திருப்போம்.  அப்றம் வீட்ல பேசி ரெண்டு குடும்பமும் சம்மதம் சொல்லி ஹாப்பியான மொமெண்ட்ஸ் இருந்திருக்கும். எல்லாம் அந்த  சைக்கோ நாயால தான்"என்று அவனை வறுத்தெடுத்தான். 


"லவ் உடனே கிடைச்சா கிக்கே இருக்காது மாமே!!  கிடைக்குமா கிடைக்காதனு  சேர்ந்து வாழ்வோமா மாட்டோமா??  இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரை பார்க்க முடியுமா முடியதா ஒருத்தரை ஒருத்தர் நினைச்சி அழுது கண்ணீர் வடிச்சி, சோகமா ஸ்டேடஸ் வச்சி?? வீட்ல சண்டைப் போட்டு, கையில காலுல விழுந்து சமாதானம் பேசி ரெண்டு குடும்பமும் சம்மதம் சொல்லி சேர்றதுல இருக்குமே அது தான் கிக் மாமே !"  என்றிட,


"போடிங்க இவளே ! கிக்காம்ல கிக்கு. லவ் ஃபீல் எப்படியோ அதவிட அதிகமா  இந்த லவ் ஃபெயிலியர் பீலிங்ஸ் உள்ள இருக்குடி.

பிரதி, லவ்வே வேணாம்னு சொல்லிட்டு போனதுக்கே இதுவரைக்கும் அனுபவிக்காத வலிய அனுபவிச்சேன்டி இங்க" என்று நெஞ்சைக் குத்திக் காட்டினான்.


"நான் படுத்ததும் தூங்கற ஆள்னு உனக்கு தெரியும் தான வைஷு . ஆனா விடிய விடிய தூங்காம இருந்திருக்கேன்டி. யாரோ இதயத்தை சதக் சதக் குத்த மாதிரி வலிக்கும்டி. சாகவும் முடியாம, வாழவும் முடியாம நரகம்டி எனக்கு. இந்த கால்ல அடிப்பட்டது கூட அப்படி ஒன்னும் பெருசா வலிக்கல. ஆனா நேத்து வரைக்கும் என் உடல்ல கட்டி வச்சி சிதைக்கிற வலி இருந்துச்சிடி எனக்கு "என்றவனின் கண்கள் கலங்கி இருந்தன.


அவனை அணைத்துக் கொண்டவள் "ஸாரி டா !!! உன் நிலமைய பார்த்து கிண்டல் ,கேலினு பண்ணிருக்கேன். ஆனா உனக்குள்ள இவ்வளவு வலிய  அனுபவிச்சிருக்கனு ஒரு பிரண்டா புரிஞ்சிக்க முயற்சி பண்ணாம இருந்துட்டேன். ஸாரி டா  எகா!! அழாத, இனி நீ எப்பையும் அழக் கூடாது. வஸ்தியும் நீயும் இனி ஹாப்பியா இருக்கணும். பாஸ்ட் வேணாம் டா"என அவன் கண்ணீரை துடைக்க, அவளை மேலும் அணைத்து கொண்டான். 



வைஷுவும் அவனும் சிரித்து சிரித்து பேசுவதைக் கண்டு சைத்துவின் மூளை சூடேறி கொதித்து போயிருந்தான்,  இங்கோ சரஸ்வதியோ சைத்துக்கு ஏற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்த சந்தோஷத்தில்  அவளை நெற்றி முறித்து வழித்து கொஞ்சிக் கொண்டிருந்தார். 

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2