இதயம் - 17

 இதயம் 17


'இவளா????' என்ற ரீதியில் தலையில் கைவைத்து விட்டார் சரஸ்வதி. 'நானே!!!' என்பது போல புன்னகையுடன் வணக்கம் வைத்தாள் வைஷு.


அங்கே அவரது மகன்  சாய் வீட்டில் இல்லை. மனைவியின் பிரசவ நாள் நெருங்க,  மாமியார் வீட்டிற்குச் சென்று விட்டான்.


"என்ன சரஸ்வதி மேடம், வேற யாருக்கும்  தெரியாதா??? என்னை பொண்ணு பார்க்க வந்தது. எல்லாரும் புது கதைய கேட்டது  போல புரியாம புதுசா பார்கிறாங்க..." என சரஸ்வதியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு கேட்டாள்.


"நீ என் குடும்பத்துக்கு ஏத்த மருமகளாக  வந்திருந்தா  இவர்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. சும்மா பத்தோடு பதினொன்னா  பார்த்துட்டு  வந்த  பொண்ணை எல்லாமா சொல்லிட்டு இருக்க முடியும் "என்று வேறெங்கோ பார்த்துக் கொண்டுச் சொன்னார். 


உதட்டைப் பிதுக்கியவள் "சரிதான்,  நான் என்ன கேலண்டர்ல இருக்க மகா லட்சுமியா ??? பொண்ணும் பொருளோட வந்து வீட்டுவேலைப் பார்க்க,  லட்சியங்களும் கனவுகளும் கொண்ட சாதாரண பெண் தானே !!! சொல்லிக்கற அளவுக்கு இல்ல தான்"என்று பாவமாக உதட்டைவளைத்து அதில் கேலியை அதக்கி விட்டுச் சொன்னாள். 


"தெரிஞ்சா சரி தான். நாங்க எங்க குடும்பத்துக்கு ஏத்த நல்ல பொண்ணத் தான் மருமகளாக்குவோம். எங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கு கூட நல்ல விசாரிச்ச  நல்லா பையனா பார்த்து தான் கட்டி வைப்போம். இப்படி இவ காதல்னு வருவானு நாங்க என்னத்த கண்டோம்??? இந்தப் பையன பத்தி எங்களுக்கு எப்படி தெரியும்??? விசாரிக்க வேணாமா???" 


"அப்படியா !!! அப்போ உங்க பையன பத்தியும் விசாரிச்சி தான் உங்க மருமகளுக்கு கட்டிவைக்க நினச்சீங்களா???" 


"ஏய் என்ன என் புள்ளைய நான் ஏன் விசாரிக்கணும்??? அவன் நான் வளர்த்த புள்ள. அவன விசாரிக்கணும் எனக்கு எந்த அவசியமுமில்லை. என் புள்ள ரொம்ப நல்லவன், பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கறவன் பெரியவங்க பேச்சை மீறி  நடக்கவே  மாட்டான். அதுவும் நான்னா அவனுக்கு உயிர். என் பேச்சை மீறவே மாட்டான் என் புள்ள..." மார்த்தட்டி சொல்லாத குறையா பெருமை பேசினார் . உள் கட்சி பூசல் இருந்தாலும் வெளியே தன்  மகனை  விட்டுக்கு கொடுக்காது பேசினார்.


'சரிதான் இவர் கையில் வளர்ந்தவன் சைக்கோவா இல்லேனா தான் ஆச்சர்யம் ! ' என்று எண்ணிக் கொண்டவள் சரஸ்வதியிடம்

"ஆஹான் அப்புறம்..." என மோவாயில் கை வைத்து கதை  கேட்பது போல கேட்ட  வைஷுவைக் கண்டு சாந்திக்குச் சிரிப்பு வர சிரிப்பை அடக்கினார்.


"ஏய் என்னடி??? நான் என்ன கதையா சொல்றேன்??? அப்றங்கற..."எனக் கடுப்பானார்.


"ஓ அப்ப இது உங்க கற்பனை கதை இல்லையா??? நான் நினச்சேன் நீங்க உங்க பிள்ளைய பத்தி ஓவரா கற்பனை பண்ணி வச்சிருக்கீங்களோனு" என்று பக்கத்திலிருந்த சைத்துவைப் பார்த்து கேட்டாள்.


அவனோ,  அவளை சுவராஸயமாக பார்த்துக் கொண்டிருந்தான். 'தன்னை பற்றி இவள் என்ன நினைக்கிறாள்??' என்று அறிய, படு ஆவலில் இருக்கிறான்.


"என் புள்ள அப்படி இல்லனு  சொல்ல வர்றீயா???"


"நிச்சயமா??? ஒரு சைக்கோ இவனை வளர்த்தா எப்படி இருக்குமோ அப்படியே இருக்கான். பிடிக்கலேனா போட்டோவ கிழிக்கறதும். தன் பேச்சை கேட்கலேனா தன்னை மீறு போனதுக்கு பழிவாங்க,  மன்னிப்பு கேட்டு கால்ல விழுணும்ன்றதுக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன இந்த சைக்கோ எல்லாம் நல்லவனா???"


சற்று முன் வஸ்தி  சொன்னதையே இவளும் செல்ல உண்மையான காரணம் அதுவாகக் தான் இருக்குமோ என்று சைத்துவை பார்க்க அவனோ தன்னை கிழிகிழியென கிழித்து கொண்டிருக்கும் வைஷுவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


"சைத்து, அவ உன்னை பத்தி பேசிட்டே போறா நீ என்ன அமைதியா இருக்க???  என்ன தைரியம் இருந்தா அவ உன்னை பத்தி தப்பா பேசுவா??? அவளுக்கு சரியான பதிலடி கொடுடா!!!" என்றிட, 


"இதுல பதிலடி கொடுக்க ஒண்ணுமே இல்ல பெரியம்மா !! அவ சொல்றத எல்லாம் உண்மை தான். எனக்கு வஸ்தி மேல் பெருசா இன்டெரஸ்ட் எல்லாம் இல்ல... அவ என் பேச்சை மீறி நடந்தாள். அவள என் கால்ல விழ வைக்க நான் போட்ட ட்ராமா தான் இது. அவ என் கிட்ட 'ஸாரி' சொல்லி கெஞ்சிட்டா போதும், அடுத்த நான் அவளை சீண்ட கூட மாட்டேன். அவ எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்"என்று பகிரங்கமாக தன்னைப் பற்றி சொல்லிவிட சரஸ்வதியின் முகம் செத்து போயி விட்டது.


"உன் கிட்ட ஸாரி தான  கேட்கணும், நான்  கேட்கிறேன். ஆனா தயவு செய்து உன் பெரியம்மாவுக்கு சொல்லி புரியவை. ஏதோ நீ என்னை காதலிக்கறதா , நான் உன் மனச உடைச்சிட்டதா நினச்சிட்டு இருக்காங்க... ப்ளீஸ் அவங்க கிட்ட சொல்லு !!! "


"பெரியம்மா !! நான் அவளை விரும்பி  கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கல்ல!! அவ எனக்கு அடங்கிப் போகணும்  நினைச்சி தான் அப்படி சொன்னேன். அவ கணக்க நான் தனியா டீல் பண்ணிக்கிறேன். அவளுக்கு அவ லவ் பண்றவனோட கல்யாணம் பண்ணி வைங்க.. இல்லேனா இவ என்னை கல்யாணம் பண்ணிட்டு, எனக்கு விஷயம் வச்சுட்டு அவன் கூட போனாலும் போவா இவ !! அதனால எனக்கு இவ வேணாம்"  என்று பயந்தது போல விளித்து விட்டான்.


"அக்கா!!! எனக்கு இவன் மேல  அப்பவே இந்த சந்தேகம் இருந்துச்சி. உன் கிட்ட சொன்னாலும் நீ எதையாவது சொல்லி என் வாயடைப்பனு தான் சொல்லல, வஸ்திய அவளுக்கு பிடிச்சவனோட கட்டி வைக்கறது தான் சரி.


இந்த சைத்துவ நம்பி வஸ்தி கட்டிவைக்காதக்கா... அவளும்  நம்ம வீட்டுப் பொண்ணு தான். அவ நல்லா இருக்கணும். இந்தக்  கல்யாணத்துக்கு ஒத்துக்கோ கா!!!" சாந்தி கெஞ்ச, 'இவருக்கு இப்படி ஒரு சாந்தமான தங்கச்சியா???' என வாயை பிளந்தவளுக்கு சாந்தியை பார்த்த உடனே  அவளுக்கு பிடித்து விட்டது.


"எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல ... அதுவும் இவ இருக்க வீட்லையா சம்மந்தம் பண்ண??? வேணாவே வேண்டாம். அகல்யா உன் பொண்ண கூட்டிட்டு போ !! அவளுக்கு நம்ம  சொந்தத்துல நல்ல வரனா பார்த்து கட்டி வைக்கலாம்"என்றார் கண்முன் தெரியாத கோபத்தில். அகல்யா  கைகளை பிசைந்து கொண்டு மகளை ஏக்கமாக  பார்த்தார்.


வைஷு ஏதோ வாயை திறக்க அவளை அடக்கிய வஸ்தி கண்டு அமைதியானாள். தன் தாயை வெறுப்புடன் பார்த்தவள், சரஸ்வதியையும் அதே போல பார்த்துவிட்டு விஷ்ணு , மகிழ் புறம் திரும்பினாள்.


"அம்மா ! அப்பா !  இந்த அனாதைக்கு  இங்க யாருமே இல்ல  என்னை உங்க பொண்ணா தத்து எடுத்துக்கிறீங்களா???"என வலியுடன் கேட்க, தாயானவள் துடித்துவிட்டாள்.


"வஸ்தி!!! என்னடி பேசற நீ !! அம்மானு நான் உனக்கு இருக்கும் போது எதுக்குடி உன்னை அனாதைங்கற???" ஒரு நொடி அவளை சுமந்த வயிறு பேரும் வலி கொடுத்து அடங்கியது.


"நீ தான சொன்ன,  எனக்கு சொந்தம் தான் முக்கியம். உனக்கு இந்தக் கல்யாணதுல விருப்பம் இல்லேனா, வீட்ட விட்டு போனு !!! அந்த நொடியே  நான் அனாதை ஆயிட்டேன். உனக்கு தான் இவ்வளவு பேர் இருக்காங்கல, இவங்களுக்காக தான, என்னை நீ வீட்ட விட்டு போனு சொன்ன, அப்றம் என்னை நான் அனாதைனு சொல்லிக்கிறதுல உனக்கு ஏன் துடிக்குது????" எனக் கேட்கவும் அவருக்கு முகத்தில் அறைந்தாற் போல இருந்தது. 


"அம்மா, அப்பா நீங்க சொல்லுங்க என்னை உங்க மகளா ஏத்துப்பீங்களா?? இப்போ நான் ஒரு அனாதை தான்" என்று முடிக்கும் முன்ன கூறிக்கிட்ட எகா"நீ வேற எந்த வார்த்தை வேணா சொல்லு பிரதி ஆனா, தயவுசெய்து அனாதைனு சொல்லாதடி !!! நான் இருக்கிறவரைக்கும்  நீ அந்த வார்த்தைய சொல்லவே கூடாது. இப்போ என்ன என் மாமா , அத்தை  உனக்கு அம்மா , அப்பா தான். அவங்க ஆசீர்வாதத்தோடு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..." என்று அவள் கண்ணீரை துடைத்தவன்


"மாமே !! நாம இங்க இருந்து போலாம்... பிரதியா கூட்டிட்டு போயிடலாம். அவளை அனாதைனு சொல்ல வச்ச குடும்பம் அவளுக்கு வேணாம் ப்ளீஸ் மாமே வா போலாம்..." என்றான் சிறு கோபத்தில்.


விஷ்ணுவும் மகிழும் தயங்கினார்கள். வஸ்தியை முறைப்படி அழைத்துச் செல்ல தான் விரும்பினார்கள். இந்த சூழ்நிலையில் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. மனம் வாட,  இருவரும் எழுந்தனர். 


வஸ்தியின் மனநிலை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்காக பேசவோ வாதாடவோ அவள் குடும்பத்திலிருந்து ஒருத்தரும் முன் வரவில்லை என்பதே கண்கூடாகப் பார்த்த பின் அவளை அங்கே விட அவர்களுக்கும் மனமில்லை. அழைத்து கொண்டு போக முடிவெடுத்தனர். 


"சரி போலாம் வாம்மா???"அவர் மனதார அழைக்க, மனம் நொடிந்து போனவளுக்கு அவரது அழைப்பு இதமாக இருந்தது. அவர்களுடன் செல்ல முடிவெடித்தாள்.


"கொஞ்சம் பொறுங்க..."என்று பிரபு அவர்களை நிறுத்த, அனைவரும்  புரியாமல் பார்த்தனர். 


"வஸ்திய நாங்க முறைப்படி  அனுப்பி வைக்கிறோம். அவ அனாதை இல்ல. அவளுக்கு பெரிய மாமா சின்ன மாமானு சொல்லிக்க உறவுகள் நாங்க இருக்கோம். முறையா எல்லாம் செய்து உங்க மருமகனுக்கு எங்க மருமகளை கொடுக்கிறோம்... எங்களுக்கு  இந்தக் கல்யாணத்துல முழு சம்மதம். நாம உட்கார்ந்து பேசி  நல்ல நாள் பார்க்கலாமே???" எனக் கேட்டு வஸ்தியின் அருகே வந்தார் பிரபு.


"அமைதியா இருந்தோம் தப்பா எடுத்துக்காதடா, உனக்கு தா தெரியுமே!!! இங்க யார் குரல் ஓங்கி இருக்கும்னு. ஆனா உன் விஷயத்துல அப்படி இருக்க முடியாதுடா !!!  நீ இந்த வீட்டு மகாலட்சுமி.  உன்னை இப்படி அனுப்பி வைத்தால் எங்கள போல கல்நெஞ்சகாரங்க யாருமில்ல !!! நீ அழுகாத நாங்க உன் கல்யாணத்த முன்னாடி நின்னு நடத்துவோம். என்ன தேவா????" 


"சரி தான் அண்ணே !!! தாய் மாமனா  முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வைக்கிறது நம்ம கடமை. சாந்தி வந்தவங்களுக்கு ஜூஸ் கொண்டு வா நல்ல விஷயம் பேச போறோம் கொஞ்சம் ஸ்வீட்டும் எடுத்துட்டு  வா !!!"  என்று கட்டளையிட அவரும் விரைந்தார். 


கேலண்டரை எடுத்துக் கொண்டு வந்தார் தேவன். விஷ்ணு ,பிரபு,தேவன் மூவரும் சேர்ந்து  நிச்சயத்திற்கும் , கல்யாணத்துக்கும்  சேர்ந்து நல்ல நாள் பார்த்து தேர்வு செய்து முடித்தனர். 


அகல்யா பிரபுவிடம்  வரதட்சனை பற்றி கேட்கச் சொல்ல , விஷ்ணுவும் எகாவும் திட்டவமாக மறுத்துவிட்டனர்.  பொண்ணுக்கு நீங்க செய்ய வேண்டியதை செய்யுங்கள். ஆனா திருமணம் முழுவதும் எங்கள் செலவு என்றிட, அதை மறுத்தவர்கள் பாதி பாதி என்று உடன் படிக்கைக்கு  வந்தனர். 


அங்கே சரஸ்வதி என்ற ஓர் உயிர் இருப்பதை  கூட மறந்து, திருமணத் தேதியும் மற்ற விஷயங்களையும் மடமடவென பேசி முடிவு செய்துவிட்டு கிளம்பினார்கள். அவர்களை இன்முகத்தோடு வழியனுப்பி வைத்தனர். 


காரில் மூவரும் செல்ல இருக்க, தன் வண்டியில் வருவதாக அவர்களிடம் சொல்லி அனுப்பி வைத்தவள் தன் வண்டியை எடுக்க சென்றாள். 


அவளை தடுத்தது ஒரு உருவம், யாரென பார்க்க, சைக்கோ தான் கையில் தலைகவசத்தோடு நின்றிருந்தான்.


"ஸாரி, மறந்துட்டேன்"என்றிட, அவனே அவள் தலையில் மாட்டிவிட்டான். 


அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள் புன்னகையுடன் " தேங்க்ஸ் " என்றாள்.


"ஹெல்மட் மாட்டுனதுக்கா???"


"இல்ல... உன் பெரியம்மா  முன்னாடி  உண்மையா சொன்னதுக்கு???  எங்க நீ அங்கயும் சைக்கோவா நடந்துப்பீயோனு நினச்சேன். ஆனா நீ அப்படி எதுவும் நடந்துக்கல. வீம்பு பண்ணாம அவளை அவனோட சேர்த்து வைக்க சொல்லி சொன்னது பிடிச்சிருந்தது. நீ  நல்ல சைக்கோ தான்... "என்று அவள் விளிக்க, சைக்கோவிலிருந்து  நல்ல சைக்கோவிற்கு முன்னேறிருந்தான் சைத்து. 


"நல்ல சைக்கோ !!! நானா??? சரி இருக்கட்டும். என் பெரியம்மா உன்னை சாய்க்கு பொண்ணு பார்க்க வந்தங்களா???"


"ம்ம்ம்.. ஆமா.  அதை ஏன் கேக்குற இப்ப???" 


"ஏன் சாய வேணாம் சொன்ன???"


"ஏன்னா உங்க பெரியம்மா  போட்ட கண்டிஷன்ஸ் எனக்கு பிடிக்கல... ஏன் உங்க பெரியம்மாவையும் எனக்கு பிடிக்கல. சோ வேண்டாம்னு சொல்லிட்டேன்"என்று தோளைக் குலுக்கினாள். 


"ஆனா எங்க அண்ணன் ரொம்ப நல்லவன், அமைதியானவன் நீ மிஸ் பண்ணிட்ட அவன !!! " என்றான்.


அதற்கு புன்னகைத்தவள்" மிஸ் பண்ணல எஸ்கேப் ஆகிருக்கேன். இல்லேனா எல்லா டேயும் வார்டே தான். ஒரு கிரிஞ்சு சைக்கோ மாமியார் கூட குப்பை கொட்டுறதுக்கு பெட்டர் தனியாக இருந்திடலாம்.


அப்றம் உங்க அண்ணன் ஒரு அம்மா புள்ள, தனக்கு பிடிச்சத கூட கேட்டு வாங்கிக்க தெரியாம அவங்க அவங்களுக்கு பிடிச்சிருக்கேனு அவங்க கொடுத்த வாழ்க்கைய வாழ சொல்றாங்க, அவனும் ' சரிமானு' அப்படியே வாழ்றான். 


அப்படி பட்டவன் எனக்கு வேணாம். தாங்க் காட், உங்க குடும்பத்தில இருந்து மீ கிரேட் எஸ்கேப்   !!! ஆனா  உங்க வீட்டுக்கும் உனக்கும் உன் பெரியம்மாக்கும் வடிச்சு கொட்ட போற  மகராசி நினைச்சா தான் பாவமா இருக்குது !!!  அது நானில்லை நினக்கும் போது ஹாப்பிய இருக்குது.   "என்று சொன்னவளை முறைத்தான் அவன்.


"முறைக்காத நான் சொன்னது  ஹண்டர் பெர்சென்ட் மறுக்க முடியாத உண்மை. அதுவும் உன்னை கட்டி மேய்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். எப்ப  நீ  என்ன பண்ணுவனு பார்த்துட்டே இருக்கணும் ஒரு லேடி வாட்ச்உமேன் தான் உனக்கு மனைவிய வரணும். 


அப்றம் இன்னொரு ப்ரீ அட்வைஸ் சொல்றேன் கேளு.  உன் பெரியம்மா சொன்னங்கனு அவங்க சொல்ற வாழ்க்கைய வாழாத, சட்டைய போல அதையும் கழட்டி வேற சட்டைய மாத்த முடியாது.  சோ நீயாவது சொந்த புத்தியோட நடந்துக்க..." என்று அட்வைஸ் கொடுத்து வண்டியில் பறந்து விட  யோசனையுடன் அவள் சென்ற இடத்தை பார்த்திருந்தான்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2