மடல் - 9

 மடல் - 9




பரபரவென இயங்கிக் கொண்டிருந்தது அந்தக் காவல் நிலையம். தேவாவும் திகழும் தயங்கியபடி உள்ளே நுழைந்தனர்.


அவளை பார்த்ததும் சுந்தரி அக்கா, அவர்கள் அருகே வந்தார்.


"வந்துட்டீங்களா ! வாங்க உள்ள இன்ஸ்பெக்டர் இருக்கார். உங்களை பத்தி சொல்லி வச்சிருக்கேன்.  துடுக்கு தனமா பேசிடாம கொஞ்சம் பணிஞ்சு பேசுங்க ! தேவா கடை வேணும்ன்னா கொஞ்சம் இறங்கி தான் போகணும்... உள்ள போங்க"என அறிவுரை சொல்லி உள்ளே அனுப்பிட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவர் சொன்ன திசையை நோக்கி சென்றனர்.


கோப்பையை பிரட்டிய படி உள்ளே காவல் அதிகாரி அமர்ந்திருந்தார். உள்ளே வர அனுமதி கேட்டு அவர் முன்னே வந்து நின்றனர் இருவரும்.


"யார் நீங்க? எதுக்கு வந்திருக்கீங்க?"


"சார் நான் தேவா ! இவ திகழ். நாங்க ஶ்ரீ தின்னு டாட்டூ கடை வச்சிருக்கோம்... எங்க கடை மேல கம்பளைண்ட்  வந்திருக்கிறதா சொல்லி சு... லேடி கான்ஸ்டபிள் ரெண்டு பேரு வந்து கடைய பூட்டி சாவி வாங்கிட்டு எடுத்து வந்துட்டாங்க... உங்களை பாக்கணும் சொல்லிட்டு போயிட்டாங்க. எங்க மேலே என்ன சார் கம்பிளைண்ட்?!"


"லேடி கான்ஸ்டபிள் சொல்லி இருப்பாங்களே ! ஸ்கூல் படிக்கற பசங்க கிட்ட காசு வாங்கிட்டு அவங்களுக்கு டாட்டூ போட்டு விட்டாத புகார் வந்திருக்கு !"


"யார் சார் குடுத்தா?"


"உங்க கடை இருக்க ஏரியால  உள்ள ஸ்கூல்ல படிக்கிற பசங்க தான், உங்க கிட்ட டாட்டூ போட்டுக்கிறதா அந்த ஸ்கூல் கரஸ்பொண்டர் கம்பளைண்ட் பண்ணிக்கார்"என்றதும் இருவரும் பார்த்துக் கொண்டனர்.


"சார் ! அவர் சொல்றது போல நாங்க, ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்க்கு டாட்டூ போட மாட்டோம் சார்.  எங்க கடைக்கு சில ரூல்ஸ் இருக்கு"என்று காகிதத்தில் அச்சிட்ட சில விதிமுறைகளை அவரிடம் காட்டினாள்.


" செய்யாத தப்புக்கு பழிய எங்க மேலே அவர் போட்டிருக்கார் சார். பிரச்சனை என்னனா?"என்று அவரிடம் விளக்கமாக சொன்னவள்" நீங்க வெளிய எங்க கடைய பத்தி விசாரிங்க சார்? நாங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் டாட்டூ போட மாட்டோம் சார் எங்களை நம்புங்க !!!"


" இது பெரிய இடத்துக்கு விவகாரம் மா ! பெரிய லெவல் பிரசர்.  கம்பளைண்ட் கொடுத்தா விசாரிக்கறதும் ஆக்சன் எடுக்கறதும் எங்க வேலை அதை தான நாங்க செய்றோம்..."


"சரி சார். நீங்க செய்றது சரி தான். அவங்க பக்கம் கொடுத்த கம்பளைண்ட்டுக்கு வேலை செஞ்சிட்டீங்க !


ஆனா நாங்க தப்பு பண்ணல ! இது தவறான புகார். நாங்க சொல்றத விட,  நீங்களே எங்களை பத்தி விசாரிச்சிட்டு,  உண்மை என்ன தெரிஞ்சிக்கிட்டு நியாயம் செய்ங்க சார்..."என்றாள் தேவா உணர்ச்சி வசப்பட்டு.


திகழ் அவள் கையை அழுத்த, தன்னை சமன் செய்தாள். தேவாவை முறைத்த காவல் அதிகாரி.


"நாங்க என்ன பண்ணனும் எங்களுக்கு தெரியும் மா ! நீங்க சொல்லி செய்யணும் இல்லம்... ஒழுங்கா கடையை காலி பண்றோம் எழுதி கொடுத்துட்டு சாவி வாங்கிட்டு போங்க !!! இனி உங்க டாட்டூ கடை அங்க இருக்க கூடாது "என்றதும் திகழுக்கும் கோபம் வந்தது.


"எங்க பக்கம் இருக்க நியாயத்தை கூட கேட்க மாட்டீங்களா சார்? பணம் இருக்க பக்கம் தான் உங்க நியாயம் எல்லாம் குடியிருக்குமா? நாங்க எல்லாரும் நியாயமில்லாதவங்களா? ஐஞ்சி வருஷமா நாங்களும் அங்க தான் கடை வச்சிருக்கோம், அந்த ஸ்கூலும் அங்க தான் இருக்கு. ஆனா  இப்படி ஒரு கம்பளைண்ட் வந்ததே இல்லை...


அந்த கரஸ்ட்பொண்டர் இப்போ வந்தவரா கூட இருக்கட்டும். எங்க மேலே எந்தத் தப்பும் இல்லனு


தெரிஞ்சும் கம்பளைன்ட் கொடுத்து இருக்கார்ன்னா , பசங்க மேலே இருக்க அக்கறையிலா ? இல்ல தான் நினைச்சது நடக்கணுகங்கற அகங்காரத்துல செய்ராறா? நீங்க இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா சார்?"என்றாள்.


அதை எல்லாம் அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை...  "இப்படி நீ பேசிட்டு இருக்குறதுல எந்த பிரயோஜனம் இல்ல... ஒன்னு அவர் கிட்ட பேசி சமாதானமாகி கம்பளைண்ட் வாப்ஸ் வாங்க வைங்க ! இல்லையா கடைய காலி பண்றேன் எழுதி குடுத்துட்டு போயிட்டே இருங்க !" என என்றவர் தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க ,


' இவரிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது வீண் ' என்று எண்ணியவர்கள், அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தனர்.


சுந்திரி அக்கா விசாரிக்க, அவர்கள் இருவரும் உள்ளே நடந்ததை சொல்ல, "இந்த மனுஷன் காசுக்கு ஆசை பிடிச்சவன், பணத்தை நீட்டினா போதும், என்ன வேணாம் செய்வான். இவன் கிட்ட நியாயத்தை எதிர்பார்க்க முடியாது மா  ! பேசாம ரெண்டு பேரும் ஸ்கூல் கரஸ்பொண்டர் போய் பாருங்க ! அவர் கிட்ட பேசி வாபஸ் வாங்க சொல்லுங்க... "என இருவரிடம் சொல்ல அவர்களோ சலித்துக் கொண்டனர்.


"வேற வழி இல்ல திகழு ! இல்லைனா கடைய காலி பண்ண சொல்லுவாங்க... என்ன பண்றது முடிவு பண்ணுங்க !!!"என்று அவர் உள்ளே சென்று விட,


இருவரும் அமைதியாக மண்ணை பார்த்து நின்றிருந்தனர்.  தலையை நிமிர்த்தாத திகழோ  "சாரி தேவா ! உன்னை இப்படி கெஞ்சுற நிலைமைக்கு உன்னை கொண்டு வந்துட்டேன்! நான் பொறுமையா இருந்திருக்கணும் தப்பு பண்ணிட்டேன் தேவா ! நான் வேணா அந்த்க் கரஸ்பொண்டர் கிட்ட மன்னிப்பு கேட்டு கேஸ் வாபஸ் வாங்க சொல்லட்டுமா?"என்றதும் பட்டென கன்னத்தில் அறைந்திருந்தாள் தேவா !


"என்ன பேசற நீ ! தப்பு செய்யாம மன்னிப்பு கேட்டு இறங்கி போனாத்தாம் கடை நமக்கு கிடைக்கும்ன்னா வேணாம்... நாம கடைய காலி பண்ணிடுவோம்..."


"ரெண்டும் ஒன்னு தாண்டி, ரெண்டுமே அவன் எதிர்பார்க்கிறது தானே !!! " திகழ் சொல்ல, தேவா அவளை தான் பார்த்தாள்.


"என்ன தான் பண்ண சொல்ற?"


"முதல்ல பேசி பார்ப்போம்... பிறகு யோசிப்போம் வா போலாம்" என்றாள். இருவரும் பள்ளியை நோக்கி சென்றனர்.


***


பள்ளி வளாகத்தினுள் இருவரும் நுழைந்தனர். விசாலமாக இருந்தது பள்ளி. பெரிய பெரிய கட்டிடங்களும் ,  அதற்கு இணையாக பெரிய விளையாட மைதானமும் இருந்தன. உள்ளே அலுவலகத்தை அடையவே அவர்களுக்கு  மூச்சு வாங்கியது.


இருவரையும் கண்டதும் வழி மறித்து நின்றான் ப்யூன் ' அலெக்ஸ் '.


"நீங்க இந்தக் காம்ப்ளக்ஸ்ல டாட்டூ கடை வச்சிருக்கறவங்க தான?" என்றான்.


"ம்... ஆமா!  இப்போ உங்க சாரை பார்க்கணும்...!"என்றாள் தேவா.


அவர்கள் இருவரையும் ஒரு மாதிரி பார்த்து விட்டு உள்ளே சென்றான். தனிஷ்ஷிற்கு வேலை இருந்ததனால் அவன் அலுவலகத்தில் இருந்தான். அவனுக்கு வகுப்பு மதியம் என்பதால் இங்கே அலுவலக வேலையை பார்க்க, அவனது அறையில் அமர்ந்து கொண்டான்.


"சார்...!" என்று கதவை அலெக்ஸ் தட்ட, "உள்ள வாங்க"என்று குரல் தந்தான்.


"சார் ! உங்களை பார்க்க அந்த டாட்டூ கடை வச்சிருக்க பொண்ணுங்க வந்திருக்காங்க !"என்றான்.


' அவங்களா? அவங்க எதுக்கு வந்திருக்காங்க?' என நுதலை தேய்த்து கொண்டு யோசித்தவன், "வர சொல்லுங்க "என்றான்.


அலெக்ஸ் வெளிய வந்து சொல்ல முன்னே சென்ற திகழின் கையை அழுத்தி, கண்ணை மூடித் திறந்தாள் தேவா. அவளும் தலையை அசைத்து விட்டு உள்ளே நுழைந்தாள்.


"மே ஐ கம்மின்?"என்றாள்.


"எஸ்"என்றதும் இருவரும் உள்ளே நுழைந்தனர்.  திகழை மட்டும் பார்த்தவன் பக்கத்தில் நின்றிருந்த தேவா புதியவளாக தெரிந்தாள்.


அவன் இருக்கையை காட்டி உட்காரச் சொல்ல, இருவரும் அமர்ந்தனர்.


"என்ன விஷயம்?"


"எப்படி சார் தெரியாதா மாதிரி, என்ன விஷயம் கேக்குறீங்க?" என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டாள் திகழ்.


"நான் மந்திரவாதியும் இல்ல. மனசுல இருக்கிறத படிக்கிற வியாதியும் எனக்கு இல்ல... நீங்க என்ன விஷயமா வந்தீருக்கீங்க எனக்கு எப்படி தெரியும்?"என நக்கல் சிரிப்புடன் கேட்க, இருவரும் தங்களை சமன் செய்ய அரும்பாடு பட்டனர்.


"எப்படி நாங்க வந்திருக்க விஷயம் தெரியாம இருக்கும்? நாங்க கடைய காலி பண்ணனும் தான உண்மை என்னனு தெரிஞ்சும் போலீஸ்ட்ட பொய்யா ஒரு கம்பிளைண்ட் குடுத்திருக்கீங்க? அதன் படி நாங்க உங்க கிட்ட கெஞ்ச வருவோம் உங்களுக்கு தெரியாதுல" பல்லைகடித்த படி கோபத்துடன் பேசினாள்.


அவள் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ந்தவன்,"வாட்?! நான் கம்பளைண்ட் குடுத்தேனா? என்ன உளர்றீங்க?"என்றான்.


"யார் உளறா? இப்போ நாங்க அங்க இருந்து தான் வர்றோம்.. எங்க மேலே பொய்யா புகார் கொடுத்ததும் இல்லாமல் லஞ்சம் வேற கொடுத்திருக்கீங்க... எங்களை காலி பண்ண வைக்க, எவ்வளவு பணம் நீங்க விரையம் செய்றீங்க? அப்படி என்ன சார் எங்க மேலே அப்படி ஒரு வெறுப்பு? பொண்ணுன்றனாலையா?நாங்க திமிரா பேசறனாலையா? உழைச்சி உண்மையா சம்பாதிக்கிற எங்களுக்கு திமிர் இருக்க கூடாதா? பணம் இருக்க உங்களுக்கு மட்டும் தான் இருக்கணுமா?" தேவாவும் தன் பொறுமையை உடைத்து கேள்வி கேட்டாள்.


அவர்கள் இருவரும் பேசியதில் சீற்றம் கொண்டவன் ." வாட் ரப்பிஸ் ! நான் கடைய காலி பண்ண சொல்லி மிரட்டனது உண்மை தான். வாடகைக்கு இருக்கற உங்களை காலி பண்ண சொல்லி பணம் குடுக்கறதா சொன்னதும் உண்மை தான்.


ஆனா அந்த பெரிய மனுஷன் கிட்ட பேசினதுல இருந்து உங்க கடைய பத்தி யோசிக்கிறதே நான் மறந்துட்டேன்... இதுல நான் ஏன் மெனக்கெட்டு போலீஸ் கம்பளைண்ட் குடுக்கணும்? நான் குடுக்கல !


உங்களுக்கு தப்பா யாரும் தகவல் குடுத்திருக்கலாம்... மே பீ உங்களால் பாதிக்கப் பட்டவங்க கூட உங்க கடை மேல புகார் குடுத்திருக்கலாம்... ஆனா நான் குடுக்கல !"என தீர்க்கமாக சொல்லி விட, இருவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பாத்தனர்.


"என்ன விளையாட்றீங்களா? நாங்க அங்க இருந்து தான் வர்றோம்... நாங்க ஸ்கூல் பக்கத்துல கடை வச்சிருக்கிறதால பசங்க டாட்டூ போட்டுடு போறாங்க கம்பளைண்ட் குடுத்திட்டு, நான் குடுக்கலை சொன்னா என்ன அர்த்தம்? எங்களை பார்த்தா முட்டாள் போல தெரியுதா? "என கொதித்து எழுந்து விட்டாள் திகழ்.


"திகழ் ! அமைதியா இரு !!" என அவளை அடக்கிய தேவா


"பொண்ணுங்க தான் சார் நாங்க இல்லைனு சொல்ல ! குடும்பம் மொத்தத்தையும் விட்டுடு, கிடைச்ச காசுல கடைய வச்சி , எத்தனை பேரோட வன்மும்,  வக்கர , போட்டி பொறாமைங்க


மத்தியில கடைய நடந்தறது எங்க குடும்ப சூழ்நிலைக்காக தான்... நாங்க உங்க ஸ்டூடண்ட்க்கு டாட்டூ போடலை உங்களுக்கு நல்லாவே தெரியும்... இருந்தும் எங்களை மொத்த அழிக்க எதுக்கு சார் இப்படி ஒரு வேலை ?"என்றாள் தேவா.


அவனுக்கு குழப்பமாக இருந்தது"எந்த ஸ்டேஷன்?"என்றான்.


அவளும்  காவல் நிலையத்தின் இருப்பிடத்தை சொல்ல, வேகமாக கூகுள் மூலமாக எண்ணை அறிந்து கொண்டு  அவர்களை தொடர்பு கொண்டான்.


"நான் தியாகராஜர் வித்யாலையா ஸ்கூல்ல இருந்து கரஸ்பொண்டர் பேசறேன்..."என்றவன் அவர்களிடம் விவரத்தை கேட்க அவர்களும் நடந்ததை சொல்ல, தன்னை மீறி யார் கம்பளைண்ட் என்று தெரிந்து கொண்டான்.


அலைபேசி வழியாக வாபஸ் வாங்கி  கொள்வதாகவும், நேரில் வந்து பேசுவதாகவும், கடையின் சாவியை உரிமையாளர்களிடம் கொடுக்க, சொல்லி விட்டான் அவர்கள் முன்னே .


"நான் கேஸ் வாபஸ் வாங்கிட்டேன். சாவி வாங்கிங்க !"என்று அடக்கமாக பேசினான்.


திகழ் கோபத்தில் ஏதோ பேசு எத்தணிக்க, அவளை தடுத்த தேவா " ரொம்ப நன்றிங்க ! நாங்க வர்றோம்" என்று அங்கிருந்து கிளம்பி விட்டனர்.


அலுவலகத்திலிருந்து வெளியே வந்ததும் தேவா கையிலிருந்து தன் கையை உருவ முயல ! அவளோ மாட்டேன் என்பது போல தரதரவென வெளியே இழுத்து வந்தாள்.


"எதுக்குடி இழுத்துட்டு வந்த? அவனை நாலு கேள்வி நறுக்குன்னு கேள்வி கேட்கணும் டி ! இவரே போலீஸ் கம்பிளைண்ட் குடுப்பாராம்,, இவரே நான் குடுக்கலை கேலி பேசுவாராம் அப்புறம் இவரே வாபஸ் வாங்கிக்கிறேன்  சொல்வாராம், நம்ம என்ன கேனை போல தெரியிறோமா? கிழி கிழினு கிழிச்சாத்தான் என் ஆத்திரம் அடங்கும் டி விடு டி"என்றாள். 


  அவள் கையை உதறிய தேவாவும்.


"தாராளமா போ ! அப்படியே நம்ம கடையயையும் மறந்துடு என்ன ! வாபஸ் வாங்கினதே பெருசு ! இதுல நறுக்குன்னு கிழிக்கிறேன் போய் மொத்தமா கடைக்கு முழுக்கு போட்டு  வீட்டுல பத்து பாத்திரம் தேய்க்க வேலைக்கு  போவோம்...


நமக்கு கடை தான் முக்கியம் திகழு ! அது கிடைச்சிருச்சி போதும் சண்டைய இழுத்து சட்டைய மொத்தமா கிழிச்சிறாத ஒன்னுமே இல்லாம போயிடும் பார்த்துக்க..."என்றதும் தன்னை சமன் செய்துக் கொண்டு அமைதியாக வர  மென்சிரிப்புடன் அவளுடன் நடந்தாள்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2