மடல் 7

 மடல் 7


விஷ்ணு தனது கடையை திறந்ததும், நேராக  கடவுளை வணங்கிட வந்தவன்

புகைப்படத்தை அலங்கரித்திருந்த பழைய பூவை,  தூர எறிந்து, புது பூவைச் சுற்றிப் போட்டு, விளக்கு ஏற்றி 

வணங்கி விட்டு வேலையைத் தொடர்ந்தான்.  அவனை தொடர்ந்து கடையில் வேலை செய்யும் பாலாவும் வந்தான்.


"வணக்கங்கணா !"என உள்ளே வந்தவன், புதிதாக வந்திருந்த பார்சலை பிரித்து,   புத்தகத்தை எண்ணி காலியான இடத்தில் அடக்கி வைக்கப் போனான்.


"பாலா !! எவ்வளவு புக்ஸ்  வந்திருக்கு? ஆடர் போட்ட புக்ஸ் எல்லாம் வந்திருக்கானு மட்டும் பார்த்து கணக்கை எழுதி வை ! பார்சல்ல இருந்து புக்ஸ எடுத்து அடுக்கி வைக்க வேணாம்..." என்றான்.


"அடுக்கி வைக்க வேணாமா? அப்ப அந்தக் காலியான இடத்தை பார்த்துட்டு கஸ்டமர் புக் 'கு இல்லனு  வந்துட்டு போகவா? வழக்கமா பண்றது தானே ஏன்ணா  வேணாங்கற?


"பாலா !  கடையவே காலிப் பண்ண போறோம்... எதுக்கு ரெண்டு வேலைனு தான் அதுலே இருக்கட்டும் சொல்றேன்..." என்றவனை உறுத்து விழித்தான் பாலா.


" என்னடா அப்படி பார்க்கற?"


"இல்லணா ! கண்டிப்பா கடைய காலி பண்ணத்தான் போறோமா?  இந்தக் கடை ஓனர் கூட போகாதீங்க தான அண்ணா சொன்னாரு ! நீங்க உங்க முடிவை மாத்திக்கவே மாட்டீங்களா? வேற கடைக்கு போய் தான் ஆகணுமா?" என சோகமாக கேட்டான்.



"என் முடிவுல மாற்றம் இல்ல பாலா ! நூலகத்துல மட்டும் அமைதி  இருக்கணும் இல்ல ! புத்தகக் கடையிலும் அமைதி இருக்கணும் 


ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்க, அதுல வடிச்சிருக்க வார்த்தைகளை  வாசிக்கும் போதே மனசோட பதியணும், இணையனும்

அதுக்கு  கடை வச்சிருக்க நாம, வாசிக்க வர்றவங்களுக்கு  ஒரு அமைதி சூழல கொடுக்கணும்...!"


ஒரு மாசமா அந்த அமைதி கடையில இல்ல ! முடிவெட்டுற கடை தான் ஆனா ஏதோ மியூசிக் கடையே வச்சிருக்கற மாதிரி அவ்வளவு சத்தம் ! கடைய மூடி உள்ள இருக்கறது போல இருக்கு ! 


எனக்கு கடைய மூடி வைக்கிறது பிடிக்காது உனக்கு தெரியும்ல ! அதான் கடையவே மாத்தலாம் முடிவு பண்ணிட்டேன்..."


"நேத்து வந்ததுங்களுக்காக கடையவே மாத்தனுமா அண்ணா? இப்ப தான் கடைக்கு ஓரளவு வரவேற்பு கிடைச்சிருக்கு ! அதுக்குள்ள காலி பண்ணனுமா?"


அவனோ சிரித்துக் கொண்டு"அதுக்காக இந்தச் சத்தத்துலே குடி இருக்கச் சொல்றியா? எடுத்துச் சொன்னா கேட்கற புத்தி இருக்கணும். அப்படி இல்லாத பட்சத்துல நாமலும் சரிக்கு சமமா நின்னு எவ்வளவு கத்தினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. கடந்து போயிட்றது போல போயிடனும். நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் இருக்கணும் இல்லையா...?


அப்புறம் 'வரவேற்பு' கடை இருக்கிற இடத்தால கிடைக்கல பாலா ! நாம விக்கற புத்தகத்தோட மதிப்பாலையும் அதனுடைய தகுதியாலையும் தான்.


நாம நேர்மையாகவும் கடுமையாவும் உழைச்சா, அதுக்கு தகுந்த பலன் கிடைக்க போது, அது எந்த இடத்துல இருந்தாலும் கிடைக்கும் ! இருக்கற இடம் பெருசு இல்ல எப்படி இருக்கிறோம் தான் பெருசு...



சோஷியல் மீடியா மூலமா நம்ம கடைக்கு வர்ற கஸ்டமர்ஸ்  கடையோட  இடம் மாற்றத்தையும் புதிய கதையோட அட்ரஸ் குடுப்போம்... நீ சொன்னது போல இடத்தால நாம பிரபலமாகி இருந்தால், கஸ்டமர்ஸ் நம்மல தேடி வரமாட்டாங்க !


இல்ல நம்ம கடை புத்தகத்துக்காக வர்றாங்கன்னா  கடை எங்க இருந்தாலும் தேடி வருவாங்க பாலா...!  ஃபீல் பண்ணாம போய் வேலைய பாரு... !"என்று விளக்கம் கொடுத்து அனுப்பி வைக்க, அவனும் வாய்க்குள்ளே சில முனங்களை மென்று கொண்டே வேலையை தொடர்ந்தான்.


பாலாவின் முனங்கள் கேட்கவில்லை என்றாலும் அது என்ன என்பது விஷ்ணுவிற்கு நன்றாகவே தெரியும்... சிரித்தபடியே நகன்று சென்றவனின் முதுகை பார்வையால் துளைத்தான்.


விஷ்ணுவின் பார்வை தன் மேல் இருப்பதை  உணர்ந்தாலும் திரும்பாது வேலையை பார்க்க,


"பாலா "என்றழைத்தான்.


அவனும் திரும்பி அவனை பார்த்து நின்றான்.


"கடைய மாத்தினதும், உனக்கு பெட்ரோலுக்கு தனியா காசு ஏத்தி தர்றேன்  போதுமா? இப்போ முனங்காம வேலைய பாரு !"என்றான் சிரிப்பை மறைத்து

அவனோ பிடரியை சொறிந்து படி வழிந்தான்.


"கடைய பார்த்துட்டீங்களா அண்ணா?"ஆர்வமாகக் கேட்டான்.


"இன்னைக்கி ஈவினிங் போய் பார்க்கனும் டா !"என்று  கடையின் விலாசத்தை சொல்ல ,"சரி"என்று தலையை ஆட்டி விட்டு வேலையை தொடர்ந்தான்.



****


மதிய வேளை கடையை அடைத்து விட்டு இருவரும் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை பிரித்து சாப்பிட ஆரம்பித்தனர். 


எலுமிச்சை சாதம், கொஞ்சம் சாம்பார், உருளை கிழங்கு, ஊர்காய், கொஞ்சம் வெள்ளை சாதம்,  தயிர் என  வகைவகையாக வைத்திருந்தனர்.


தேவா பசியில் வேகமாக உணவை உள்ளே இறக்கினாள். திகழோ ஏதோ யோசனையில் சாதத்தை பிசைந்து கொண்டிருந்தாள் .


தேவா அதை கவனித்து விட்டாள். திகழின் முகத்தை குறுகுறுவென பார்த்தபடியே இருக்க, தன்னை ஒரு ஜீவன் பார்ப்பதை கூட உணராமல் சோற்றை பிசைய, கண்கள் சுவரை வெறிக்க, சிந்தனையில் உழன்று கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது.



"திகழு ! சோறு பெரிசா இருந்தா மிக்ஸில அடிச்சி எடுத்து வர வேண்டியது தான. ஏன் கிடந்தது அதை பெசஞ்சுட்டே இருக்க?"என  அவளை தட்டி கேட்க, 


"ஹாங்...  என்னடி?"என விழித்தாள்.


"சோத்த இந்த பெச பெசையிறீயே , சோறு பெருசா இருந்தா அரைச்சி கொண்டு வர வேண்டியது தானே கேட்டேன்... என்ன  நெனைப்புல திங்காம இருக்க நீ?"



"இல்லடி என்னால தான ! நம்ம கடைய காலி பண்ண சொல்லி காசு குடுக்கற அளவுக்கு  போயிருக்கான் அவன். வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்கணும்ல நானு..."என்றவள், தன் தவறென்று வாயிலே அடியை போட்டாள்.


"என்னைக்கி நம்ம வாய் சும்மா இருந்தது? வாய் வச்சிட்டு அமைதியா இருந்திருக்கணும் நாம யோசிச்சதே இல்லையே இதென்ன புதுசா இருக்கு?"என்றாள்.


"புதுசு இல்ல தான்... ஆனா கடைய காலி பண்ண சொல்லி மிரட்டல் வரது புதுசு தானே !  டீச்சர் தான என்ன பண்ணிடப் போறான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். அவன் கரஸ்பொண்டரா இருப்பான் நான் என்ன கனவா கண்டேன்...?! கொஞ்சம் பொறுமையா பேசிருக்கணுமோ ! "என முகம் வாட சோர்வாக சொன்னவளை முறைத்தவள்,



"தப்பு பண்ணாலே நாம ஃபீல் பண்ண மாட்டோம்... இதுல உன் தப்பு எதுவுமே இல்ல சும்மா புலம்பினு கிடக்க !  என்ன பண்ணிடுவான் அந்த ஆளு? கடைய காலி பண்ண வைக்க என்ன முயற்சி எடுக்கணுமோ எடுக்கட்டும் ! ஒரு கை நாமளும் பார்த்திடலாம்..."என்று தைரியமாக சொன்னாள்.



"ஒரு கை பார்த்திடலாமா? அவ்வளவு தைரியமாடி உனக்கு? அவன் கூட மோதற அளவுக்கு சக்தி நம்ம கிட்ட இல்ல தேவா ! காசு கொடுத்து கடைய காலி பண்ண நினைச்சி இருக்கான். அப்பவே அவன் பலம் தெரியலையா உனக்கு? மோதி பார்க்கலாம்னு வாய் வார்த்தையால தான் பேச முடியும் ! நிஜமா அவனை எதிர்க்க நம்மலால முடியாது !"



"என்ன பேசற நீ? காசு கொடுத்து கடை காலி பண்ண வைன்ன நினைச்சவனால ! அத பண்ண  முடிஞ்சதா? அவனோட பலம் என்ன நம்ம வைகுண்டத்துக்கிட்ட கூட பழிக்கல ! இது தான் அவன் பலம்  !அடுத்து என்ன பண்ண நினைக்கிறானோ பண்ணட்டும்  ! 

நம்ம பக்கம் எந்த தப்பும் இல்ல திகழு !


தெளிவா, நிதானமா இருந்தா எந்த வில்லங்கத்தையும் முறியடிக்கலாம்...!  கேஸ்வலா இருடி!"என அவளை சமாதானம் செய்தாள்.


அவளது விளக்கத்துக்கு ஏதோ பேருக்கு என்று அமைதியாக இருந்தாலும் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது உள்ளுக்குள்.


திகழின் முகத்தில் படர்ந்த குழப்ப ரேகைகளை படித்தவள், அவள் தெளிவாகாமல் குழப்பத்தில் மூழ்கி இருப்பதை உணர்ந்தாள்.


"திகழு உன் தன்மானத்தை அடகு வச்சி இந்த கடைய மீட்கணும் எனக்கு அவசியம் இல்ல ! அப்படி ஒரு முடிவ நீ எடுக்கணும் நினைக்காத "என பொட்டில் அடித்தது போல சொல்லி விட, அவளை  விழி விரித்து ஆச்சர்யமாக பார்த்தாள்.


திகழ், தேவா சொன்னதை முன்பே யோசிக்க தான் செய்தாள். முதலில் தன்மானத்தை நினைத்து தனக்குள்ளே மன்னிப்பு கேட்பதை மறுத்தவள், தேவாவை பார்க்கும் போது குற்றவுணர்வு சுருக்கென்று வந்து தாக்கியது.


தேவாவின் உழைப்பக்கு முன்னாள் தன் தன்மானம் ஒன்றுமில்லை என்று முடிவுக்கு வர, அவள் யோசனையை படித்தது போல தக்க பதிலை கொடுத்தாள் தேவா !


"நேர்மையான எந்த விஷயத்துக்கும் பணிஞ்சு போகலாம் திகழு !  வீம்புக்கு பண்ற விஷயத்துக்கு பணிஞ்சு போகணும் அவசியம் நமக்கு இல்லை... எப்பவும் போல தைரியமா இரு !"என்று எழுந்துகொள்ள, 


மறைந்து போன தைரியம்  உள்ளுக்குள் முளைத்த பயத்தை விழுங்கி கொண்டது. முறுவலுடம் உண்ண ஆரம்பித்தாள்.



****


மாலை நேரமாக வெளியே சென்றாள்  திகழ். தேவா மட்டும் கடையில் இருந்தாள்.


வைகுண்டம் சொன்ன படி மாலையில் நேரத்துக்கு வந்து விட்டான் விஷ்ணு. நேரமா காம்ப்ளக்ஸ்க்குள் நுழைந்தான்.

கீழே இருந்த கடைகளை எல்லாம் நோட்டம் விட்ட படி ! மேலே ஏறினான். 


அழகான இரண்டு மாடி கொண்ட  'ப ' வடிவ கட்டிடம். மொத்தமாக அதில் பத்து கடைகள் இருந்தன. கீழே ஐந்து மேல ஐந்து கடைகள் இருந்தன. இந்தப் பக்கம் இரண்டு அந்தப் பக்கம் இரண்டு அதை இணைக்கும் இடத்தில் ஒரு கடையென இருந்தது.


மேலே ஏறி வந்தவன் நேராக ' ஶ்ரீதி   பச்சைக் குத்தும்  கடைக்குள் நுழைந்தான். அங்கே அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு நின்றாள் தேவா !


காதில் காதொலிப்பானை மாட்டிக் கொண்டு அலைபேசியில் மூழ்கி இருந்தாள்.


அவளது பின் தோற்றம், ஓர் ஆணின் தோற்றம் போல தான் தெரிந்தது. ஆண்கள் அணியும் உடையிலும் ஆண்களை போல முடியையும் கத்தரித்து விட்டிருந்தாள். அதுவே அவளை அவனுக்கு ஆணாக காட்டியது.


முதலில் தொடாமல் அவளை அழைத்து பார்த்தான்.  அவள் திரும்புவதாக தெரியவில்லை..


ஆண் என்ற நினைப்பில், அவன் முதுகில் ஐவிரலும் பதிய தட்டினான்.


"தம்பி ! எதித்தாப்புல இருக்க கடைய பார்க்கனும் சாவி குடுப்பா !"என்றாள்.


சட்டென  மின்சாரம் தாக்கியது போல சுர்ரென்று இருக்க , படக்கென திரும்பினாள்.


அவளை முதுகில் தட்டியது ஆண்ணென கண்டதும் விழிகள் பெரிதாக விரித்து அவனை பார்த்தாள்.


"எதிர்த்த கடை..."என இவன் ஆரம்பிக்க, அதற்குள் அவளோ "அறிவில்ல உனக்கு ஒரு பொண்ணோட முதுகை தட்டி தான் கூப்பிடுவீயா?"என எகிறினாள்.


அவள் பெண் என்றதை நம்ப முடியாமல் பார்த்தவன்" பொண்ணா ? நீயா?" என வாயை பிளந்தான்.


"ஆமா நான் பொண்ணு தான் இப்போ அதுக்கு என்ன?  யார்ரா இருந்தால் 

என்ன கை வச்சி தான் கூப்பிடனுமா?"


"சாரி மா நீங்க எனக்கு பொண்ணு தெரியாது. ஒரு பையனா நினைச்சி உங்களை கூப்பிட தான் தொட்டேன். கை வச்சி கூப்பிட்றது எனக்கு பழக்கம் இல்ல !  ஆனா ஹெட் போனை காதுல மாட்டிட்டு கூப்பிட்டாலும் கேட்காத அளவுக்கு சத்தம் வச்சி பாட்டு கேக்குறவங்கல எனக்கு இப்படி கூப்பிடத்தான் தெரியும்... "என பதிலடி கொடுக்க, முறைத்து கொண்டிருந்தவளின் முகம் லேசாக மாறியது.


தன் மீது தவறென ஒத்துக் கொண்டவள்" சாரி !! என் மேலே தான் தப்பு !"பட்டென தவறை ஒத்துக் கொண்ட பெண்ணை ஒரு நொடி அதிசயமாக பார்த்தவன், பின் பார்வையை மாற்றிக் கொண்டான்.


"என்ன விஷயம் ?"


"நான் விஷ்ணு ! எதுத்த கடைய பார்க்க வந்திருக்கேன்"என்றான்.


"ஓ... நீங்களா ? வைகுண்டம் அப்பா சொன்னார் வாங்க காட்றேன்" என்று சாவியை எடுத்துக் கொண்டு  "வாங்க என்று முன்னே நடக்க,  அவனும்  அவளை தொடர்ந்தான் .


கடையை திறந்து இருவரும் உள்ளே வந்தனர். அவன் சுற்றி சுற்றி பார்த்தான் கடை அவனுக்கு ஏற்றது போல இருக்க பிடித்து விட்டது.


"என்ன கடை வச்சிருக்கீங்க?"என்று அவள் தான் ஆரம்பித்தாள்.


"புக்ஸ் ஸ்டோர்"என்றான் ஒரு வார்த்தையாக, அவ்வளவு தான் அவள் முகம்  போன போக்கை கண்டு காணாமல் இருந்தான்.


"பழைய கடைக்கு என்னாச்சி? ஏன் காலி பண்றீங்க?" என அடுத்த கேள்விக் கேட்டுவிட,


அவளை ஒரு தரம் பார்த்து விட்டு பதில் சொல்லாது கடையை தான் பார்த்தான்.


'என்ன பார்வை இது? நாமலே பதில் தேடிக்கணும் நினைக்கிறானா? ' இவள் எண்ணிக் கொண்டிருக்க,


சரியாக கதிரும் இரு காப்பி கப்புடன் உள்ளே நுழைந்தான். முதலில் சென்று  விஷ்ணுவிடம் நீட்ட, அவன் மறுத்து விட்டான்.


தோலை குலுக்கி கொண்ட கதிர் தேவாவிடம் ஒரு காப்பை கொடுத்து விட்டு, இவனும் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தான் .


"என்ன கடை வச்சிருக்கீங்க?" அதே கேள்வி, தேவாவை ஒரு கணம் பார்த்து விட்டு "புக்ஸ் ஸ்டோர்", என்றான். தேவா அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றாள்.



"ஏன் கடைய காலி பண்றீங்க? "அடுத்தும் அதே கேள்வி தான்.


'இவனுக்காகவது பதில் சொல்றானா பார்ப்போம்...' என ஆர்வமாக விஷ்ணுவின் வாயை தான் பார்த்தாள்.


"நான் வைகுண்டம் சார் கிட்ட பேசிக்கிறேன்... இப்போ கிளம்புறேன்"என்று அங்கிருந்து அவன் கிளம்பி விட, இருவரும் போகும் அவனை புரியாமல் பார்த்தனர்.


"என்ன தேவா பதில் சொல்லாம போறான்... என்ன கேட்டுட்டேன் நானு ?!" என அலுத்துக் கொள்ள,


"அதே தான் நானும் கேட்டேன் பதில் இல்ல ! உனக்கு பதில் சொல்லி பர்சியாலிட்டி பார்க்கறவனோ நினைச்சேன், உனக்கு அதே பதிலை தான் குடுத்தான். கொஞ்சம் முசடு தான் போல !"


"இவன் நமக்கு செட் ஆக மாட்டான்...!"


"அதையும் தான் பார்ப்போம்..."என கப்பை அவனிடம் கொடுத்து வெளியே  செல்ல இவனும் உடன் வர கதவை அடைத்து விட்டு சென்றாள்.



****


அடுத்த அத்தியாத்துல இருந்து சில வரிகள்.


"எதுக்கு கடைய பூட்டிருங்க போலீஸ் அக்கா !"என தேவா விவரவமறியாமல் கேட்டாள்.


"இந்த கடையால பக்கத்துல படிக்கற ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் டாட்டூ போட்டு கெட்டு போறாங்க... கடைய காலி பண்ண சொல்லி எங்களுக்கு மேல் இடத்தில இருந்து உத்தரவு வந்திருக்கு மா ! அதான் ஏரியா இன்ஸ்பேக்டர் கடைய அடச்சி சாவிய வாங்கிட்டு வர சொன்னார்... எதுவா இருந்தாலும் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிட்டு சாவிய வாங்கிக்க"எ

ன்று பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு போய் விட,


திகழுக்கோ அதிர்ந்து போய் நிற்கும் தேவாவை பார்க்க முடியவில்லை. உலகமே அவர்களை வாழவிடாமல் தடுத்தது போன்ற உணர்வில் இருவரும் தத்தளித்தனர்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2