Posts

Showing posts from August, 2024

வரன் - 8

Image
  வடுகபட்டி (கற்பனை) கிராமத் தலைவர் தான் மந்தவராயன். அவரது தம்பி காத்தவராயன்.  இருவரும் ஒரே ஊரில் தனித்தனி இல்லத்தில் வசித்து வருகின்றனர். இருவரும் ஆளுங்கட்சி தொண்டர்கள். அந்தக் கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரௌடிகள். மந்தவராயனை கூட மனித லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் இந்தக் காத்தவராயன், எதிலும் சேர்க்க முடியாத உயிரினம். அண்ணன் தலைவர் என்பதால் வால்  நன்றாக ஆள்(டு)கிறது. ஊர்மக்களுக்குள் ஜாதி பார்த்து, தங்கள் ஜாதிக்காரர்களுக்கு அரசு சலுகைகளையும் இலவசங்களையும் அள்ளி கொடுத்து விட்டு, மற்றவர்களை ஏமாற்றுவதே இருவரது பொழப்பு.  மேலும் கட்டப் பஞ்சாயத்து, வட்டித் தொழில் பெண்கள் சகவாசம் என அனைத்து குணங்கள் பெற்ற கலப்படம் இல்லாத கெட்டவன் தான்  காத்தவராயன். அவனுக்கு வெளியே சொல்லிக் கொள்ள ஒரு மனைவியும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடவுகளாகப் பார்த்து ஒரு மகளோடு நிறுத்திக் கொண்டார். மகன் இருந்தால் மேலும் ஆடிருப்பான். மகள் கனிமொழி இன்ஜினியரிங் படித்து விட்டு வெட்டியாக காலத்தை தள்ளுகிறாள். அவன் வீட்டில் தோட்ட வேலை செய்யும் திருமால், பி .ஏ ஆங்கிலம் படித்து முடித்து மேற்கொண்டு பி.எல் பட

வரன் - 7

Image
  "அப்பா... அப்பாப்பா... ப்பா !"என்றழைத்தவாறு ஜனனியும் கார்த்திக்கும் ஆரனின் இருபக்கமும் நின்று உலுக்கி அவனை நினைவுலகிற்கு அழைத்து வந்தனர். "ஆஹாங்..." என்றவன் கடுப்பில் "என்ன தான் வேணும் உங்களுக்கு?" என்றான். "எங்களுக்கு ஐஸ் கிரீம் வேணும்"என்றாள் ஜனனி. " ஏதே ஐஸ் கிரீமா?" வாயை பிளந்தான் ஆரன்.  "நீ தானப்பா எங்க கிட்ட என்ன வேணும் கேட்ட? அதான் ஐஸ் கிரீம் வேணும் சொன்னேன்" என்று விவரமாக  பேசினாள் அந்தக் குட்டி . கண்கள் சுறுக்கி அவளை பார்த்தவன் "பாப்பு ஸ்கூலுக்கு வந்ததும் உனக்கு வாய் ஓவராகிடுச்சி. அண்ணி கிட்டபோட்டு கொடுக்கறேன்" என்றவனை கண்டு வாயில் கைவைத்து சிரித்தாள் ஜனனி. இந்த பக்கம் நின்ற காரத்திக்கோ "அப்பா, வாங்க வீட்டுக்கு போலாம்?"என்று உலுக்க, " இருடா  உங்க மிஸ் கிட்ட பேசிட்டு போலாம்" "எங்க மிஸ் கிட்ட நீ என்ன பேச போற?" அதிகாரமாய் கேட்டான்." உன்னை பத்தி கம்பலைன்ட் கொடுத்து, அடி வெளுக்க சொல்றேன் வா" என்று மிரட்டினான். "ஹிஹி...  ப்பா நீ போய் என் பெயரை சொல்லு, அவங்களே நிறைய கம்

வரன் - 6

Image
  சர்வமும்  அடங்கிய படி அமர்ந்திருந்தாள் மேகா. ' இப்போது  தான் என் மனைவி எனக்கு பயப்பட கூடாது'என்றுரைத்தவன் தனது கோபக் குரலால் அவளுக்கு பயத்தை காட்டிக் கொண்டிருந்தான். "உன்னை நான் ஏமாத்தினா நீ சும்மா இருப்பீயா மேகா?" எனக் கேட்க அங்கே பதில் இல்லை. கோபத்தில் தன் பெயர் சொல்லிக் கேட்டதைக் குறித்து வைத்துக் கொண்டாள்.  "பல லட்சம் குடுத்து வாங்கின வேலைனு நினைச்சியா டி? பல நாள் இரவு  தூங்காம, ரோட்டோரமா பிரண்ட்ஸ் கூட  கொசுக்கடியிலும் குளீர்னு  பார்க்காம கண் விழிச்சி படிச்சி வாங்கினது டி. நேர்மையா இருக்கணும் நியாயமா இருக்கணும் மனசுல கல்வெட்டா பதிச்சி வச்சிட்டு வேலை பார்க்கிறேன். நேர்மையா இருந்தால் என்னால எவன் முன்னாடியும் தல நிமிர்ந்து  நிக்க  முடியும். எதிர்த்து கேள்வி கேட்க முடியும். ஃபிராட் வேலை பார்த்து பணம் வாங்கினேன் வச்சிக்கோ, வரவனெல்லாம் என்னை ஒரு நாயா நினைச்சி,  பணத்த தூக்கிப் போடுவான். அடுத்தவன் முன்னாடி  நாயா  நிக்கக் கூடாது சிங்கமா நிக்கணும்.  நான் நிப்பேன். என் வேலைத் தான் என்னோட பிரைட், அத மத்தவனுக்காக  என்னைக்கும் விட்டுக் கொடுக்க  மாட்டேன். அதுக்கு  ஒரு கலங

வரன் - 5

Image
  கங்காதரனுக்கு தன் மகள் மேகாவை தன் தங்கை மகன் தீனதயாளனுக்கு கொடுக்கத்தான் ஆசை.  ஆனால் அவளது ஜாதகத்தில், ரத்த சொந்தத்தில் கட்டிக் கொடுத்தால் தாலி கயிறு நிலைக்காது என்று வழக்கமாக கம்பிக் கட்டும் கதைகளை ஜோசியர் கூறவும் பயந்தவர், வெளியே மாப்பிள்ளையை  தேடவும் முதல் வரனே  கவர்மெண்ட் மாப்பிள்ளையாக வரவும் அவருக்கு விட மனசில்லை.  அதுவும்' வரதட்சனை 'என்ற வார்த்தையை அறவே வெறுக்கும் குடும்பத்தை வேணாம் என்று எந்த மடையனாவது சொல்வானா?. அதான் மகளின் சம்மதத்தை பேருக்கு கேட்டு விட்டு கல்யாணத்தை பேசி முடித்தார்.  மோகனாவிற்கு ஜாதகத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அதனாலே கங்காதரன், ஜோசியர் சொன்னதை சொன்னதும் அவர் பெரிதாக அலட்டிக்  கொள்ளவில்லை. கங்காதரனுக்கு ஜாதக நம்பிக்கை இருப்பதால், அவர் மோகனாவின் விருப்பத்திற்கு பிடிக் கொடுக்கவில்லை... மேகாவின் ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனையை மையமாக வைத்து தீனாவை  விடுத்து அவர் மாப்பிள்ளையை வெளியே தேடினார். ஆனால் அது கவர்மெண்ட் மாப்பிள்ளையாக வந்தது கங்காதரன் செய்த புண்ணியமாக  கூட இருக்கலாம்.  மோகனாவிற்கோ, கங்காதரன் தன் மகளுக்கு 'கவர்மெண்ட் மாப்பிள்ளை வரனாக அமைந

வரன் - 4

Image
  "ஐயோ !! என் மேகா இப்படி லூசா மாறுவானு நான் நினைக்கலையே ! என்ன வசியம் பண்ணாரோ, மை வச்சாரோ, மாமா பித்து பிடிச்சி திரியிறாளே ! இத எங்கனு போய் சொல்லுவேன் என்னானு  போய் சொல்லுவேன்" மேகா எதிரே அமர்ந்து நேகா கன்னத்தில் கை  வைத்த படி புலம்ப, " உண்மையில அவன் என்ன பண்றான் தெரியல டி நேகா. இன்னைக்கி  அவன் பேசினதெல்லாம் கேக்க கேக்க, என் உடம்புல இருக்க மொத்த முடியும் அட்டேசன்ல நின்றிருச்சி. அப்படியே என் மைண்ட மெர்மரைஸ் பண்றான். என் மொத்த கவனத்தையும் சுருட்டி வச்சிக்கிட்டான் டி. அவனை விட்டு அகல விடல, ஏதோ பண்ணிட்டான் டி உன் மாம்ஸ்" என்று அவளும் கன்னத்தில்  கை வைத்தப்படி. "ஓ... அந்த அளவுக்கு போயிருச்சா? பெரியப்பா கிட்ட  மேரேஜ் டேட் மாத்த சொல்லணுமே ! " எனவும் பதறியவள் " ஏன் டி  டேட் மாத்த சொல்ல போற?" "ஐயோ மேகா ! முன்னாடி தான் வைக்க சொல்ல போறேன். நீ பைத்தியமாகி  பச்சைக்கலர் ட்ரெஸ் போட்றதுக்குள்ள,  உன்னை இப்படி பைத்தியமாக்கினவரே வந்து வைத்தியம் பார்க்கணும்ல அதான்" என்றவளை வெட்கத்துடன் "ச்சீ போடி"என்றாள். "ம்ம்... சரி சரி நீயும் மாமாவும் என

வரன் - 3

Image
   திருமணம் நிச்சயமானதும் வீட்டிலுள்ளவர்களுக்கு அத்தனை களிப்பு. அதிலும் ஆரனுக்கு சொல்லவா வேண்டும், இப்போதே தாலியை கையில் கொடுத்து  'கட்றா  தாலிய '  குணசேகரன் சொன்னால் போதும். மூன்று என்ன ஏழு எட்டு போட்டுவிட்டு கையோடு மேகாவை அழைத்து வந்திருப்பான். ஆனால் குணசேகரன் அப்படி  சொல்லும் ஆளில்லை... பழைய பஞ்சாங்கத்தை பாக்கெட்டில் வைத்து சுத்துபவர்.வீட்டில் அனைவரும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். தான் எண்ணிய படி, வீட்டில் உள்ளவர்களை நடக்க வைக்கும் அந்த வீட்டு எம்டன் அவர். சாங்கி சடங்குகளை மதிப்பவர்.எல்லாம்  விடயங்களும் சம்பிரதாயப்படி நடக்க வேண்டும் என்று முனைப்போடு வலம் வருபவர். வீட்டு மக்களோடு ஒட்டாத ஆள் குணசேகரன்.  ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல, தேவகியிலிருந்து அவர்கள் வீட்டுக் குட்டி தேவதை ஜனனி வரைக்கும் சிரிக்கத் தெரிந்தவர்கள். குணசேகரன் இருக்கும் வரை அமைதியாக  இருக்கும் வீடு அவர் சென்ற பின்,  சிரிப்பலைகள் வாசல் வரை வந்து  முட்டிச்செல்லும். தேவகி, குணசேகரனுக்கு மூன்று பிள்ளைகள், மூத்தவன் தீரன், இரண்டாவது ஆரன் மூன்றாவது அருணா. மூத்தவன், மதுரையை சுற்றிருக்கும் கிராமங்களில