வரன் - 4

 





"ஐயோ !! என் மேகா இப்படி லூசா மாறுவானு நான் நினைக்கலையே ! என்ன வசியம் பண்ணாரோ, மை வச்சாரோ, மாமா பித்து பிடிச்சி திரியிறாளே ! இத எங்கனு போய் சொல்லுவேன் என்னானு  போய் சொல்லுவேன்" மேகா எதிரே அமர்ந்து நேகா கன்னத்தில் கை  வைத்த படி புலம்ப,


" உண்மையில அவன் என்ன பண்றான் தெரியல டி நேகா. இன்னைக்கி  அவன் பேசினதெல்லாம் கேக்க கேக்க, என் உடம்புல இருக்க மொத்த முடியும் அட்டேசன்ல நின்றிருச்சி. அப்படியே என் மைண்ட மெர்மரைஸ் பண்றான். என் மொத்த கவனத்தையும் சுருட்டி வச்சிக்கிட்டான் டி. அவனை விட்டு அகல விடல, ஏதோ பண்ணிட்டான் டி உன் மாம்ஸ்" என்று அவளும் கன்னத்தில்  கை வைத்தப்படி.


"ஓ... அந்த அளவுக்கு போயிருச்சா? பெரியப்பா கிட்ட  மேரேஜ் டேட் மாத்த சொல்லணுமே !" எனவும் பதறியவள் " ஏன் டி  டேட் மாத்த சொல்ல போற?"


"ஐயோ மேகா ! முன்னாடி தான் வைக்க சொல்ல போறேன். நீ பைத்தியமாகி  பச்சைக்கலர் ட்ரெஸ் போட்றதுக்குள்ள,  உன்னை இப்படி பைத்தியமாக்கினவரே வந்து வைத்தியம் பார்க்கணும்ல அதான்" என்றவளை வெட்கத்துடன் "ச்சீ போடி"என்றாள்.


"ம்ம்... சரி சரி நீயும் மாமாவும் என்ன பேசுனீங்க?"என ரகசியமாக கேட்பது போல கேட்டாள் நேகா. " அதுவா..." என்றவள் சிரித்து கொண்டே கூறவும்,


 "அடப்பாவி ! சரியான 420 ஆ இருப்பார் போல நேகா. லவ்னு சொல்லி  ஃபலோவ் பண்ணி டார்ச்சர் பண்ணாம, ஸ்ரைட்டா மேரேஜ் பெட்டர்னு, பிளான் பண்ணி மூவ் பண்ணிருக்கார் . உன் டீடெய்லஸ் கிடைக்க, உன்னை பத்தி  முழுசா  தெரிஞ்ச  ஆளு தான் அவருக்கு ஹெல்ப் பண்ணிருக்கணும். இல்லேன்னா எப்படி உன்னை பத்தி இவ்வளவு நியூஸ் கேதர் பண்ணிருக்க முடியும்? ஏதோ ஒரு பிளாக் ஷிப் நம்ம கூட்டதுக்குள்ள இருக்கு மேகா" என அவள் சரியாக கணிக்க, 


"எனக்கும்  அதான் தோணுது நேகா ! ஆனால் நம்ம குடும்பத்தில இருந்து யாரும் இதை பண்ணிருக்க வாய்ப்பில்ல, மே பீ பிரண்ட் சர்கில் யாராவது தான்  இருக்கணும் நேகா"


"கண்டிப்பா, அந்தக் கருப்பு ஆடு யாருனு கண்டு பிடிக்கணும்" என்று சீரியல் வில்லியை போல சொன்னவளை வினோதமாக பார்த்தவள், "  என்னை விட நீ தீவிரமா இருப்ப போல ! அந்தக் கருப்பு ஆடு யார்னு தெரிஞ்சு என்ன பண்ண போற?"


"என்ன இப்படி கூல்லா கேக்கற? இது தப்பு இல்லையா?  உன் பெர்மிஷன்  இல்லாம எப்படி உன் டிடெய்ல்ஸ் கொடுக்கலாம் இது தப்பு மேகா" 


"தப்பு தான் நேகா, ஆனா அவங்க என் மேல உள்ள அக்கறையில தான் என் கிட்ட பெர்மிஷன் கூட கேக்காம குடுத்திருக்கணும். அந்த நபர் எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச ஆளா இருக்கணும். அவர் நல்லவரா  இருக்க போய் தான என் டிடெய்ல்ஸ் கொடுத்திருக்கணும்.  எப்படி பார்த்தாலும் அவங்க எனக்கு  நல்லது தான் பண்ணிருக்காங்க. யாருனு தெரிஞ்சா தேங்க்ஸ் சொல்லனும் டி" என்று எழுந்தாள்.


"நீ மாமாவ அக்சப்ட் பண்ணிட்ட, அப்போ அவர, நீ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீயா மேகா? " எனக் கேட்டுக் கொண்டே பின் சென்றாள்.

தோளை அசட்டையாக தூக்கியவள், ' தெரியல' என்பது போல உதட்டை பிதுக்கி விட்டு வண்டியை எடுத்தாள். தலையில் அடித்து கொண்டு வந்து அமர்ந்தாள். இருவரும் வீட்டை நோக்கி பறந்தனர்.


வீட்டில்   தனலெட்சுமியும் கனகலெட்சுமியும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

" இந்தாம்மா, எல்லாம் சரியா இருக்கானு பார்த்து சொல்லு.  அப்றம் அது இல்ல இது இல்லனு  கண்ணா , கேசவான்னு வந்த, அப்றம் நான் ஆண் காளியா மாறிடுவேன். வீட்ல கடைக்கூட்டி அதுவும் ஆண் குட்டினா  கடைக்கு அனுப்புவீங்களா? அதுவும் ஒரு தடவ ரெண்டு தடவ இல்ல மூணு தடவ , என்னமோ அவன் எனக்கு மறைதி வந்தது மாதிரி பார்க்கிறான். ஊர்ல இருந்து அத்தை தான வருது, அதுக்குனு இப்படியா? அத்தைய கட்டிக் கொடுத்து அது பெத்த பிள்ள வளர்ந்திருச்சி, இன்னமும் விருந்துக்கு வரது மாதிரியே நடந்துக்கிறீங்க. ஏன் ஊர்ல இருந்து வந்தா அவங்க வீட்டுக்கு போய் சமைச்சி சாப்ட்டு ரெஸ்ட் எடுக்க மாட்டாங்களா?  இல்ல  ஹோட்டலுக்கு போய் சாப்பிட வலிக்குதா ? ஊர்ல இருந்து இங்க தான் வரனுமா, ஒர்த்து இல்லாத தங்கச்சிக்கு, இவ்வளவு பில்ட்டப்பா ! வந்ததும் கால் அமுக்கி விடு கைய அமுக்கி விடுனு சொல்லட்டும் அப்ப இருக்கு அதுக்கு !"அத்தையின் மேலுள்ள ஆதங்கத்தையும் கோபத்தையும் கொட்டினான்.


"டேய் கத்தி தொலைக்காத உங்க ரெண்டு அப்பாவும் வந்திட போறாங்க" கனகா, அவன் வயடைக்க, " வரட்டுமே ! கேட்கட்டுமே அத்தையால  நம்ம எல்லாரும் அனுபவிக்கற கொடுமை தெரியட்டுமே.. முக்கியமா நான் படுற கொடுமைகளை எல்லாம்  நான் சொல்லத்தான்  போறேன்" என்று ஆவேசமாக மொழிந்தான் 


"அப்பா ஏதோ சின்ன பையன் தெரியாம பேசிட்டான் விட்டுடுங்கப்பா" என்ற நேகாவின் குரலை கேட்டதும் அப்பா தான் தான் பேசினதை கேட்டுவிட்டாரோ என்று பயந்து பட்டென திரும்ப, அங்கே மேகா தான் நமட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தாள்.


பக்கவாட்டில் நின்றிருந்த நேகாவை கொலவெறியாக பார்த்தான். "என்னமோ எல்லாத்தையும் சொல்ல போறேன் சொன்ன, இப்படி பயப்படறீங்க தம்பி" என்று சிரித்தவளை, கண்டு கடுப்பானவன், " அடியே ! இவங்க என்னடான்னா கடைக்கு அனுப்புறாங்க நீ வீட்டை விட்டே அனுப்பி விட்டுடுவ போல !"கடுப்பாக வந்து அமர்ந்தான்.


"என்னாச்சி நேத்ரா? ஏன் உனக்கு இவ்வளவு கோபம்" அவனருகில் அமர்ந்து மேகா கேட்கவும், அவன் நடந்ததை சொன்னான்." நாலு நாள் அவங்க கோயம்புத்தூர் போய் அவங்க நாத்தனார் பையன் கல்யாணத்த என்ஜாய் பண்ணிட்டு  அங்க இருந்து கிளம்பி வருவாங்களாம்,  ஆனா அவங்க அவங்க  வீட்டுக்கு போக மாட்டாங்களாம், இங்க வந்து தங்கி சாப்பிட்டு நாளைக்கு தான் போவாங்களாம். இவங்களும்  விருந்து சமைக்கிறது போல என்னைய மூணு நாலு தடவ கடைக்கு அனுப்புறாங்க, அந்தக் கடைகாரன் ஒரு தடவே எல்லாத்தையும் நியாபக வச்சிக்க மாட்டியாப்பானு கேலி பண்றார். இதுக்கெல்லாம் யார் காரணம்? அந்த அத்தை தான. வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள போடற கணக்கா  நாங்க வீட்டுக்கே போய்கிறோம் சொன்ன அத்தைய வம்படியா இங்க வர சொல்லிருக்கார் இந்தப் பெரியப்பா. தேவையா இதெல்லாம்?" நொந்து கொண்டு புலம்பினான் நேத்ரன்.


"தம்பி பையா, வேலியில போற ஓணான எதுக்கு வீட்டுக்கு கூப்டு விருந்து கொடுக்கறார்னு தெரியுமா உனக்கு?" என நேகா பீடிகை போட, அந்த நால்வரும் எதற்கு என்று அவளை ஆர்வமாக பார்த்தனர்.


"எதுக்கு டி?" தனா வாய்விட்டே கேட்க, "உனக்கு கூட புரியலையா தனாமா, அத்தைக்கு,  தீனாக்கு மேகாவை  கட்டிக் வைக்கணும் ஆசை, ஆனா பெரியப்பா  தான் அவளுக்கு வேற சம்பந்தம் முடிச்சிட்டாரே, அத்தை  கோபமா இருக்கும், அதை பேசி சமாதானம் பண்ண தான் இந்த விருந்து, இது கூட தெரியாம இருக்கீங்க  ட்யூப் லைட்டுகளா, இல்லன்னா பெரியப்பா ஏன் வேலில போற ஓணானக்கு விருந்து கொடுக்க நினைக்கறார்? எல்லாம் காரணமா தான் தனாமா"என்று உண்மையை கணித்து சொல்ல, வாயை பிளந்தனர் மற்றவர்கள்.


"இன்னைக்கி நீங்க வேணா பாருங்க கண்டிப்பா, சண்டை  இருக்கு, அத்தை கண்ணை கசக்கும் உங்க ரெண்டு புருஷனும் அந்தக் கண்ணீர பார்த்து தவிப்பாங்க, பெரியப்பா  கல்யாணத்த பத்தி யோசிப்பார்" என்று மேகா தலையில் இடியை இறக்க, அவளோ கலக்கமாக நேகாவைப் பார்த்தாள் .


"ஐய்யோ ! என் பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்க கூட விட மாட்டாங்களா? நல்ல சம்பந்தம் கவர்மெண்ட் மாப்பிள்ளை இந்தக் காலத்துல யாருக்கு வாய்க்கும், இந்த மனுஷன் தங்கச்சி பாசத்துல என்ன முடிவெடுக்க போறாரோ !" தலையில் அடித்து படி சமையலறைக்குள் நுழைத்தார் தனா, அவரை தொடர்ந்து கனகாவும் உள்ளே சென்றார். 


வாடிய முகத்துடன் மேகா, மெத்தையில் சரிய, அவளை தொடர்ந்து வந்த நேகா அவளருகே அமர்ந்தாள். "என்ன மேகி இதுக்கே சோர்ந்து போயிட்ட இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு, இதுக்கே டல்லா ஆகிட்ட?" என நக்கல் செய்தாள்.


"எப்படி நேகா இதோட  சீரியன்ஸ் தெரியாம பேசற? இதுல பாதிக்க பட போறது நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கை, நீ என்னடானா நக்கல் பண்ணிட்டு இருக்க?" என்றாள் சலிப்போடு.


"நக்கல் பண்ணாம என்ன உன்னை மாதிரி பயப்பட சொல்றீயா? உனக்கு வேணா இந்த விஷயத்தை நினைச்சி பயமா இருக்கலாம். ஆனா எனக்கு இல்லப்பா" அசட்டையாக  தோளை குலுக்கினாள். அவளோ புரியாது தன் தமக்கையை பார்த்தாள். 


"எனக்கு என் காதல் மேலையும் என் தீனா மேலையும் நம்பிக்கை இருக்கு மேகா. அவன் என்னை கைவிட மாட்டான். அவங்க அம்மாவையும் எதிர்த்து என்னை கல்யாணம் பண்ணிப்பான். இந்த உப்பு சப்பு இல்லாத மேட்டருக்கெல்லாம் பயந்தால் என் இமேஜ் என்னாகறது" இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.


அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள் மேகா, "சப்போஸ், அத்தை பேச்சை கேட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னா என்ன பண்ணுவ நேகா ?" அவளது அசட்டு தைரியத்தை ஆட்டிப்பார்த்தாள் மேகா. 


"அவன் முன்னாடியே தீக்குளிச்சி அவனை போய் கட்டிபிடிச்சி, நான் செத்து அவனையும் சாக அடிப்பேன். என்னை நம்ப வச்சி ஏமாத்தினவன் உயிரோட இருக்கவே கூடாது" என்று சற்று முன் இருந்த விளையாட்டு தனம் மறைந்து போனது அவள் முகத்தில் " ஏய் நேகா  என்ன பேசற?" என்று பதறினாள். 


"உண்மை தான் சொல்றேன் நேகா.  'உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு' வாக்கையும் மனசுல நம்பிக்கையையும் கொடுத்தவன், அதைக் காப்பாத்தனும்.  அவன் தான் ஆம்பள. அந்த நம்பிக்கை உடைச்சி ஏமாத்தறவன் ஆம்பளையும் இல்ல அவன் உயிரோட இருக்க தகுதியும் இல்ல... நீ எதையும் போட்டு குழம்பிக்காத நான் இருக்கேன். அப்றம் இந்த விஷயத்தை மாமா கிட்ட சொல்லிட்டு  இருக்காத, நம்ம குடும்பம் மேல கோபப்பட போறார். ரெஸ்ட் எடு மேகா" என்று நம்பிக்கையூட்டி விட்டுச் சென்றாள்.


எட்டு மணியளவில் மோகனா, மணிமாறன், தீனதயாளன் மூவரும் கங்காதரன் வீட்டுற்கு வந்தனர். மோகனாவின் முகம்  கடுகடுவென இருந்தது.  தீனா, மணிமாறன் முகம் மலர்ந்தே இருந்தன. அவர்கள் மூவரையும் விருந்துக்கு வந்த விருந்தாளியை போலவே வரவேற்றனர். 


"என்ன அண்ணே எங்களை போய் விருந்தாளி மாதிரி கவனிக்கற?  வஞ்சி புகழ்ச்சி அணியில் அண்ணனை குத்திக் காட்டினார் மோகனா.


'இந்தா ஆரம்பிச்சிருச்சில அத்த' அருகே நின்ற மேகாவின் கதைக் கடித்தாள் நேகா. ஆனால் அவளோ கலக்கத்தோடு தான் நின்றிருந்தாள்.


" மோகனா எப்பையும் போல தான எங்க கவனிப்பு இருக்கு, இந்த முறை உனக்கு வித்தியாசமா தெரியுதா என்ன?" பதிலுக்கு பேச, 'சபாஷ் சரியான போட்டி, ஆமா நம்ம பெரியப்பா இப்படி பேசற ஆள் இல்லையே?' என மீண்டும் மேகா விடமே கேட்டாள், அவளோ அயர்ந்து போனாள். 


"இனி இந்த வித்யாசத்தை அடிக்கடி பார்க்கணும் போல இருக்கே?" என மேலோட்டமாக  பேசி சண்டையை ஆரம்பித்து வைத்தார் மோகனா. 


'பைட் ஸ்டார்ட் ஆயிடுச்சி !' 


"மோகனா..." என மணிமாறன் தடுக்க" என்ன எதுவும் பேசக்கூடாது அதானே ! பேசல சாமி பேசல, இனி எனக்கு பேச எங்க இருக்கு உரிமை? இனி அப்படியே அன்னியமா போயிட வேண்டியது தான்" என்று கண்ணை கசக்கி முந்தானையால் துடைத்தார்.


"என்ன பேசற மோகனா, நீ எப்படி அன்னியமாவ? " தனா தன் பங்குக்கு கேட்டார் . "அன்னியமா நினைக்காம தான் என் மருமளுக்கு வேற ஒரு இடத்துல சம்மந்தம் பார்த்தீங்களா அண்ணி?"என்று கேட்டவர் விடாமல் தொடர்ந்து "ஏன் என் பையன் கவர்மெண்ட் மாப்பிள்ளை இல்லைனு தான அவன உங்க வீட்டு மாப்பிள்ளையா எடுக்கல?" என சண்டைக்கான மையப்புள்ளிக்கு வந்தார் மோகனா.


நடுக்கூடத்தில் மோகனா சண்டையிட்டு கொண்டிருக்க, நேகா தன் காதலனை கனல் விழியால் எரித்து கொண்டிருந்தாள். அவனோ கண்களால் அவளிடம் இறஞ்சினான்.

மறுபக்கமோ, மேகாவின் செல் அலறி அலறி அணைந்தது. அனைவரின் முன் எடுக்க முடியாமல் தவித்தாள்

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2