வரன் - 8

 






வடுகபட்டி (கற்பனை) கிராமத் தலைவர் தான் மந்தவராயன். அவரது தம்பி காத்தவராயன்.  இருவரும் ஒரே ஊரில் தனித்தனி இல்லத்தில் வசித்து வருகின்றனர். இருவரும் ஆளுங்கட்சி தொண்டர்கள். அந்தக் கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரௌடிகள். மந்தவராயனை கூட மனித லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் இந்தக் காத்தவராயன், எதிலும் சேர்க்க முடியாத உயிரினம். அண்ணன் தலைவர் என்பதால் வால்  நன்றாக ஆள்(டு)கிறது.


ஊர்மக்களுக்குள் ஜாதி பார்த்து, தங்கள் ஜாதிக்காரர்களுக்கு அரசு சலுகைகளையும் இலவசங்களையும் அள்ளி கொடுத்து விட்டு, மற்றவர்களை ஏமாற்றுவதே இருவரது பொழப்பு.  மேலும் கட்டப் பஞ்சாயத்து, வட்டித் தொழில் பெண்கள் சகவாசம் என அனைத்து குணங்கள் பெற்ற கலப்படம் இல்லாத கெட்டவன் தான்  காத்தவராயன். அவனுக்கு வெளியே சொல்லிக் கொள்ள ஒரு மனைவியும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடவுகளாகப் பார்த்து ஒரு மகளோடு நிறுத்திக் கொண்டார். மகன் இருந்தால் மேலும் ஆடிருப்பான்.

மகள் கனிமொழி இன்ஜினியரிங் படித்து விட்டு வெட்டியாக காலத்தை தள்ளுகிறாள்.


அவன் வீட்டில் தோட்ட வேலை செய்யும் திருமால், பி .ஏ ஆங்கிலம் படித்து முடித்து மேற்கொண்டு பி.எல் படிக்க வேண்டுமென்ற கனவோடு இருக்கும் தன் மகளுக்காக, காத்தவராயனிடம் கடன் வாங்கி படிக்க வைக்க முடிவு செய்தார்.


மறுநாள் தோட்டத்தில் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த காத்தவராயன்   முன் கைகட்டி நின்றார் திருமால்.


"என்னடா வேணும்" திரு நின்ற தோரணையில் அவர் ஏதோ கேட்டு வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்டான் காத்து.


"ஐயா ! பொண்ண படிக்க வைக்கணும்  காசு வேணுங்கயா !"என்று தலையை சொறிந்தார். " என்னடா படிக்க போறா உன் பொண்ணு?"  தெனாவெட்டாகக் கேட்டான்  அவன். " வக்கீலுக்கு படிக்கணும் ஆசைப்படுதுங்கயா"  என்றான்.


"வக்கீலுக்கா... !" என நக்கலாகச் சிரித்தவன், " வக்கீலுக்கு படிக்க வைக்க வக்கத்து போயிருக்கியா நீ? ஏற்கெனவே நீ வாங்கன கடனையே இன்னும் அடைக்கல , இதுல இது வேறயா? போய் போய் அந்தக் கழுதைய வேலைக்கு அனுப்பி சம்பாரிச்சி என் கடன அடைக்கச் சொல்லு "என்றான். 


"ஐயா புள்ள படிக்கணும் ஆசைப்படுது, படிப்பு தான்யா நான் அதுக்கு கொடுக்கற சொத்தே ! என்னால முடிஞ்சதும் அதான். நீங்க காசு கொடுத்து உதவுங்கயா. காலம் முழுக்க உங்க காலடியிலே கிடந்து கடன அடைச்சிடுறேன்யா" என்று மண்டியிட்டு கெஞ்சினார் திருமால்.


அவரது கெஞ்சலில் இரக்கப்பட்டு விட்டால் அவன் காத்தவராயனே இல்லை, " சரி போய் வேலைய பாரு ! என்னாண்டு நாளைக்கு சொல்றேன் " அவரை அனுப்பி வைத்தான். மறுநாள்.ஆவலோடு வந்து வேலைப் பார்த்தார் திருமால். 


ஆனால் அவன் கண்டுக் கொள்வதாக தெரியவில்லை. தானாகச் சென்று கேட்டால்,  கண்டிப்பாக மோசமாகப் பேசி அனுப்பி விடுவான் என்று பொறுமை காத்தார் திருமால். காத்தவராயனுக்கு வங்கியிலிருந்து ஆங்கிலத்தில் ஏதோ குறுஞ்செய்தி  ஒன்று வந்திருக்க,  தன் மகளை அழைத்து விளக்கம் கேட்டார். அவளுக்கோ அது விளங்கவில்லை. " எனக்கு ஒன்னும் புரியல போப்பா...!" என்று உள்ளே  சென்று விட்டாள்.


"இத எல்லாம் கட்டிக் கொடுத்து புருசன்  வீட்டுக்கு அனுப்பு விட்ருக்கணும், படிக்க வெச்சேன் ஒண்ணத்துக்கும் ஒதவல... கட்டுன பணம் எல்லாம் கரியா போச்சி" என்று புலம்பிய படி வந்தவன் திருமாலை பார்த்து, "ஏன்டா உன் பொண்ணு படிச்சிருக்காண்டு சொன்னேல கூட்டியாடா "என்றான் 

அவரும் வேக எட்டில் வீட்டை அடைந்தவர், மகளை அழைத்துக் கொண்டு, அவர் முன் நின்றார். 


"ஏ புள்ள இதென்னாண்டு வாசித்து சொல்லு !" என்றான். அவளும் அலைப்பேசியை வாங்கி பார்த்து படித்துவிட்டு விளக்கம் சொன்னாள்."பரவாயில்ல, யோவ் புள்ள நல்லா தான் படிச்சிருக்கு... இங்கயும்  ஒன்னு இருக்கே  தண்டதுக்கு !" உமா முன் அவர் மகளை திட்டிவிட்டார். அவளை அனுப்பி வைத்த திருமால். " ஐயா ! பொண்ணு படிப்பு செலவுக்கு காசு..." மீண்டும் தலையை சொறிந்தார். 


"நாளைக்கு, சொக்கன் கிட்ட கேட்டு வாங்கிக்கோ" என்று  உள்ளே சென்று விட, அவரோ மகிழ்ச்சயுடன் தோட்டத்திற்குச்  சென்றார்.


வேலைக்காரர் மகள் முன்  தன்னை திட்டியது நினைத்து அவமானமாக எண்ணியவள், கையறுத்து தற்கொலை செய்து கொள்ள முயல, அவளை தடுத்து ஒரு அறை விட்ட அவளது தாய் தேவி.  கணவனை அழைத்து விஷயத்தை சொல்ல, துடித்தவன் , "ஏன் கழுத சாக போன? நாங்க உனக்கு என்ன குறை வைச்சோம்"மற்றவர்களுக்கு துடிக்காத இதயம் மகளுக்கு என்றதும் துடித்து விட்டது " நீ அந்த வேலைகாரன் பொண்ணு முன்னாடி என்னை அசிங்க படுத்தின அதான் இப்படி செஞ்சேன்"என்று பேயாட்டம் கத்த, அவனுக்கு உரைத்தது. " மன்னிச்சக்க த்தா, இனி அப்பா  அப்படி செய்ய மாட்டேன்" என்று கெஞ்ச, 


"அந்த வேலைக்காரன் பொண்ணு என்ன எப்படி கேவலமா பார்த்தா தெரியுமா? எனக்கு ஒரே அசிங்கமா போச்சி"அவள் செய்யாததை செய்ததாக சொல்ல, அவனுக்கு கோபம் பழியாக வர, "அந்த புள்ள அப்டியா  உன்ன பார்த்துச்சி, இரு வர சொல்லி உன் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுறேன்" என்றவரை தடுத்தவள், 


"அதெல்லாம் வேணாம், அந்தப் புள்ள படிக்கக் கூடாது . நம்ம வீட்டுக்கு வந்து வேலைப் பார்க்க சொல்லுங்க, அவ படிக்க போனா, இந்த ஊர்ல உங்க பொண்ண விட அந்த வேலைக்காரன் பொண்ணு பெரிய படிப்பு படிச்சிருக்குனு சொல்லுவாங்க, அது யாருக்கு அசிங்கம் உங்களுக்கு தான " என்று அவள் மேல் எழுந்த பொறாமையிலும் அவள் முன் தன்னை அசிங்க படுத்திய வன்மத்தையும் கொட்டியவள் தகப்பனின் மனதை மாற்றிவிட்டாள். மறுநாள் சொக்கனிடம் பணத்தை கேட்ட  திருமாலை, காத்தவராயன் போய் பார்க்க சொல்ல, அவரும் " ஐயா" என்று முன்ன நின்றார். 


"நீ ஏற்கெனவே தர வேண்டிய காசு அதிகம், இதுல பொண்ணு படிப்புன்னு சொல்லி கடன் கேட்டா, அது கூட்டிட்டே போகுது. இந்தக் காசை எல்லாம் எப்போ நீ அடைக்கிறது, உனக்கு வேற வயசாகிட்டே போகுது, அதுனால நாளையிலிருந்து உன் பொண்ணையும்  வீட்டு வேலைக்கு அனுப்பிடு. ரெண்டு பேரும் சேர்ந்து வேலைப் பார்த்து கொடுக்க வேண்டிய கடனை அடைச்சிட்டு போங்க" என்றிட, திருமாலோ அதிர்ந்து போனார். அவர்  கெஞ்ச  கெஞ்ச மனம் இளகாதவன், கட்டளையாக சொல்லி விட்டு போக, மகளிடம் அழுது புலம்பியவர், வேறு வழியின்றி மகளை காத்தவராயன் வீட்டில் வேலைக்கு அனுப்பினார். உமாவின் தாய் பாண்டியம்மாவிடம் வேலைக்கு செல்லும் மகளை எண்ணி  புலம்ப, அவரோ ஆரனிடம் சொல்லிவிட்டார் மனம் கேளாமல்.


ஆரன், திருமாலை அழைத்து உமாவை படிக்க வைப்பதாக சொல்லிப் புரிய வைத்தவன்  யோசித்து முடிவை சொல்லுமாறு சொல்லிருந்தான். வீட்டில் மனைவி மகளுடன் கலந்து பேசியவர்.  ஆரனை நம்பி மகளை படிக்க வைக்க முடிவு செய்தவர். மகளை அழைத்துக் கொண்டு  தன் முடிவை அவனிடம் சொல்ல வந்திருந்தார். 


"தம்பி, அந்த காத்தவராயன் மோசமான ஆளு. அவனை எதிர்த்து நீங்க என் பொண்ண படிக்க வைக்கிறது தெரிஞ்சா, உங்களையும் சேர்த்து ஏதாவது பண்ணிடுவானோண்டு பயமா இருக்கு தம்பி " என்றவரின் அருகே வந்தவன், "நான் சொல்ற படி செய்ங்க, உங்க பொண்ணுக்கும் எனக்கும் எந்த ஆபத்து வராது.  என்னை நம்புங்க" என்றவன் அவர்களிடம் தன் திட்டத்தை கூற அவர்களும் அது சரியென பட்டது. கொஞ்சம் பயம் தெளிந்தே தங்களின் விடிவுகாலத்தை எண்ணி மகிழ்வோடு சென்றனர். 


கங்காதரனும் ஸ்ரீதரனும்  கூடத்தில் அமர்ந்து கணக்கு வழக்குப் பார்த்துக்  கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் டீ  கொடுத்த தனா, போகாமல் அங்கே நின்றார். அவர் நிற்பதை கவனித்த கங்காதரன், "என்ன?"  என்று வினவ" நிச்சயத் தேதி நெருங்கிட்டு இருக்கு, பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ட்ரெஸ் எடுக்கணும் நிச்சய வேலை நிறைய இருக்கு. மாப்பிள்ளை வீட்ல இருந்து எதுவும் பேசின மாதிரி தெரியல கொஞ்சம் போன் போட்டு பேசிக் கேளுங்களேன்" என்றார் பணிவாக


"ஆமாண்ணே ! கல்யாணம் தான ஒரு மாசம் கழிச்சி வச்சிருக்கோம் நிச்சியத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான இருக்கு சீக்கிரமா வேலைய ஆரம்பிக்கணும்ல. மண்டபம் , சாப்பாடுனு எல்லாம்  பார்க்கணும்.அவங்க தான் அமைதியா இருக்காங்கன்னா நாமளும்  அமைதியா இருக்கிறது . போன போட்டு பேசுணே" ஸ்ரீதரனும் சொல்ல, 


"சரி தம்பி, போன் போட்டு என்னானு பேசிடுறேன்" என்றவர் அடுத்த நொடியே குணசேகரனை அழைத்து பேசிட, நாளைக்கே மண்டபத்தையும் கேட்ரிங் ஆளையும் பிடித்து சாப்பாட்டிற்கு சொல்லிவிடலாம். இந்த வாரத்தில் ஒரு நல்ல நாளன்று துணி எடுக்க  போகலாம் என்று இருவரும் பேசி முடிவெடுத்தனர்.


மாலையில் பள்ளி முடிந்து அனைவரும் வெளியேறிட, மேகா, நேகா  இருவரும்  வண்டியில் கேட்டை தாண்டி வெளியே வந்தனர். சரியாக அவர்கள்  முன் சரக்கென்று  வண்டி வந்து நிற்கவும்,  மேகா சடன் பிரேக் போட்டு நிறுத்த, நேகா, மேகா அணிந்திருந்த தலைகவசத்தில் மோதிட, வலியில் மூக்கை தேய்த்துக் கொண்டாள். 


" ஹலோ பாஸ் ! கொஞ்சமாச்சும்  இங்க எதுவும் இருக்கா?" நெற்றியை தொட்டு கேட்டவள், "இது ஸ்கூல் ஜோன் இப்படி தான் ஃபாஸ்ட்டா வந்து வழிய மறைச்சி நிக்கறதா? நாங்க சரி, குழந்தைங்க எதுவும் நடுவுல வந்தாங்கன்னா என்னாகிருக்கும்? கொஞ்சம் கூட சென்ஸே இல்லாமல்,  எது மேலே கவனத்தை வச்சிட்டு வரீங்க மிஸ்டர்?" என்று தனக்கு எதிரே  தலைக்கவசம் அணித்திருந்த மனிதனை திட்டிக் கொண்டிருந்தாள். 


"அதெல்லாம் சென்ஸோட தான் வந்தேன் சக்கர ! " என்று தலைக்கவசத்தை கழட்டியவனை கண்டு அவளது சுருங்கிய முகம் விரிந்தது. தன்னை அறியாமல் அவள் இதழ்கள் புன்னகையில் பூத்தன.


"நீங்களாஆஆ?"


"நானே, அப்றம் எது மேலே கவனத்தை வச்சிட்டு வந்தீங்கனு கேட்டியே சொல்லட்டுமா?" என புருவத்தை உயர்த்தி கேட்டவனை கண்டு வெட்கம் கொண்டாள். இருவரும் நடுரோட்டில் நின்று வழிந்துக் கொண்டிருப்பதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட நேகா"ஹலோ லவ் பேர்ட்ஸ், நீங்க எங்க நின்னு லவ் பண்றீங்கனு தெரியுதா?" என்றதும் இருவரும் நினைவிற்கு வர, "சக்கர, வா என் கூட. ஒரு ட்ரைவ் வித் காஃபி சாப்பிடலாம்" என்றான் ஆசையாக.


அதை கேட்டு அதிர்ந்தவள் தலையை " மாட்டேன்" என்பது போல இடதுவலது புறமாக ஆட்டினாள். அவள் மறுப்பை கண்டு கண்களை சுருக்கி அவளை முறைத்தான்.  "பயமா இருக்கு யாராவது பார்த்திட்டாங்கன்னா..." என்று இழுத்தவளின் கண்களில் அத்தனை பீதி. 


கடுப்பில் பைக்கை குத்துவிட்டவன், "இங்க பாரு, நான் ஒன்னும் திருட்டு தனமா உன்னை கூட்டிட்டு போக நினைக்கல, நான் உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை. நீ எனக்கு பேசி வச்சருக்க பொண்ணு. அடுத்த வாரம்  நமக்கு நிச்சயமே முடிஞ்சிடும். இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணிக்க போறோம். என் கூட வரதுல என்ன பிரச்சனை உனக்கு,  வா சக்கர" என்றான் சன்னமாக, 


அவள் தயங்க, அவள் தயங்குவதை கண்டு மேலும் கோபம் கொண்டவன், "இட்ஸ் ஓகே கல்யாணம் பண்ணினா தான் நீ என்னை நம்புவ !  ஓகே ரைட், உன் கூட கிடச்ச நேரத்தில டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் நினைச்சேன். இட்ஸ் ஓகே அப்போ நான் கிளம்புறேன்" என்று இறுகிய முகத்துடன் சொன்னவனை பதற்றத்தோடு பார்த்தவள், அவன் வண்டியை உதைத்ததும் வேகமாக அவனை தடுத்தாள். 


"நா... நான் உங்க கூட வரேன்" என்று வண்டியை நேகாவிடம் கொடுத்து தொடர சொன்னவள், அவனுடன் வண்டியில் அமர்ந்தாள். அவனை பிடிக்காமல் கம்பியைப் பிடிக்க, அவளை மிரர் வழியே முறைத்தவன், ' டேய் ஆரா, இந்த சக்கர மேல  தான் இஷ்டம் வரனுமா உனக்கு! " என்று தலையில் அடிக்காத குறையாக நொந்து போனான். அவளோடு வண்டியில்  செல்ல, அவளை பின் தொடர்ந்தாள்  நேகா.


மூவரும் அதே காஃபி சாப்பிற்குள் நுழைந்தனர். வழக்கம் போல நேகா தனியாக அமர, இருவரும்  சேர்ந்து அமர்ந்தனர். " அப்றம் சக்கர உனக்கு..." என்றவன் அவளிடம் எதுவும் கேட்காமல் இருவருக்கும் சேர்த்தே  ஆடரை சொல்லி அனுப்பி வைத்தான். 


"ஏன் என்னை சக்கர னு கூப்பிடுறீங்க?" அவன் அழைத்த நாளிலிருந்து கேட்கணும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த கேள்வியை கேட்டாள். "ம்ம்... உன் பேர் என்ன?" 


"மேகவர்ஷினி" 


"ம்ம்.. எப்படியும் உன்னை மேகா, மேகி வர்ஷி வர்ஷினி,  வர்ஷுனு தான் கூப்பிடுவாங்க.  நான் உனக்கும் நீ எனக்கும் ஸ்பெஷல்ல ஸோ உன்னை சக்கரனு கூப்பிடுறேன்" என்றான்.


"சரி, அது ஏன் சக்கரனு கூப்பிடுறீங்க?" 


"சீனினு முடியற உன் பேர தான் சக்கரனு கூப்பிடுறேன்" என்றதும் அவள் பதில் பேசவில்லை, புன்னகை  செய்தாள். இருவருக்கும் காஃபி வர பருகியபடியே  பேச்சைத் தொடர்ந்தனர். 


"எங்கேஜ்மெண்ட் டேட் வரப்போகுது எனி பிளான்?" எனக் கேட்டதும்  திருதிருவென முழித்தாள். "என்னடி முழிக்கற? நமக்கு நடக்க போற என்கேஜ்மெண்ட் பத்தி  ஆசை, கனவு ஏதாவது இருந்தா சொல்லு" என்றான். அவளோ பாவம் போல முகத்தை வைத்திருந்தாள். " அதை பத்தின இமாஜினேசன் கூடவா இல்ல?"என கேட்டவனிடம் உதட்டை பிதுக்கியவள், "எப்படியும் அப்பா தான்  பார்த்து பார்த்து பண்ணுவார், எங்கிட்ட கேட்க மாட்டார். அதுனால நான் எதையும் யோசிக்கல " என்றாள் தோலை குலுக்கி.


அவளை வெறித்தவன், "இது உங்க அப்பாக்கு நடக்க போற நிச்சயமா? இல்ல நமக்கு நமக்கு நடக்க போற  நிச்சயமா? அப்பா விருப்பம் தான்னா, உனக்குனு எந்த விருப்பமே இல்லையா?" அவளோ அமைதியாக இருந்தாள். 


"சரி நம்ம எங்கேஜ்மெண்ட் ட்ரெஸ் எப்படி இருக்கணும்னு யோசிச்சிருக்கீயா? சேரியா, ஜொலியா, லெங்காகவா  எது உனக்கு இஷ்டம் சொல்லு ! " என்றான். 


"எனக்கு பட்டு சேலைக் கட்டி, நார்மலா தலைப் பின்னி நிறைய பூ வச்சி, கொஞ்சம் நகை போட்டு சிம்பிள்ளா இருக்க பிடிக்கும். மேக்கப்பும் கொஞ்சமா தான் போடணும். அடிக்கற மாதிரி போடக் கூடாது. நான் இதுவரைக்கும் மேக்கபே போட்டது இல்ல... என் ஃபேஸ்க்கு ஒத்துக்குமானு எனக்கு தெரியாது ஸோ கொஞ்சமா போட்டா போதும். இந்த மெஹந்தி எல்லாம் வேணாம், கை நிறைய மருதாணி வச்சி அதை நுகர்ந்து பார்க்கணும். அப்றம் நீங்க  கோட் சூட் எல்லாம் போடாம ஒயிட் ஷர்ட் அண்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டுட்டு  கொஞ்சமா நெத்தில சந்தனம் வச்சி சிம்பிளா இருக்கணும். பக்கத்தில ஓரசி ஓரசாம நின்னு அப்பப்ப ஒரு குட்டிப் பார்வை பார்த்துக்கணும். தொட்டு தொடாமா நின்னு போட்டோ எடுக்கணும். அப்றம் சேர்ந்து சாப்பிடணும்... வீட்டுக்கு போகும் போது தலையசைத்து போயிட்டு வரேன் சொல்லனும்" தன்னை மறந்து சொன்னவளை மறந்து ரசித்து கொண்டிருந்தான். அவள் சொல்லி முடித்துவிட்டு அவனை பார்க்க,அவனோ இமைக் கொட்டாது அவளையே பார்த்திருந்தான். 


"ஆரன்... ஆரன்... மிஸ்டர் மிளகா !" அவன் கையை உலுக்கியதும் நினைவிற்கு வந்தான். " க்யூட் சக்கர ! மத்த பொண்ணுங்கல விட நீ டிபரெண்ட் டி, நீ சொன்னது போல பண்ணிக்கலாம் வேற இந்த மோதிரம் போடுறது பிடிக்காதா?" 


"மோதிரம் போடறது பிடிக்கும். ஆனா அப்பா அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார்.என்ன தான் கற்பனை பண்ணாலும் அப்பாக்கு பிடிக்காத விஷயங்களை கற்பனை பண்ணிக்க முடியல, அவர் அந்தக் காலத்து மனுஷன் ஸோ இதெல்லாம் அதிகம் விரும்ப மாட்டார்" என்றாள்.

"ம்ம்ம்... ஆனா உனக்கு பிடிக்கும் தான?" 'பிடிக்கும் 'என்று தலையை அசைத்தாள்.


"அப்றம் பட்டு சேலை எப்படி உனக்கு பிடிச்ச ப்ளூ கலர்ல வாங்கிடலாமா?" 


"எனக்கு ப்ளூ பிடிக்கும் உங்களுக்கு எப்படி...?" எனக் கேட்க வந்தவள் வாயை மூடிக் கொண்டாள். " ம்ம்.. கேளு"என கேட்கவும் " வேணாம், எப்படியும் நீங்க சொல்ல மாட்டீங்க எதுக்கு?"என முனைப்புடன் திரும்பிக் கொண்டாள். "சரி எனக்கு  என்ன கலர் பிடிக்கும் கேட்க மாட்டீயா?" 


"உங்களுக்கு ஆஷ் கலர் தான பிடிக்கும்" என்றதும் இம்முறை அவன் அதிர்ச்சியாக, " உனக்கு எப்படி தெரியும்?" 


"நீங்க என்னை பத்தி தெரிஞ்சிக்க ஸ்பை வச்சிருக்கும் போது  உங்களை பத்தி தெரிஞ்சிக்க நான் ஒரு ஸ்பை வச்சிருக்க கூடாதா மிஸ்டர் மிளகா?" கன்னத்து மேடையோடு புருவத்தை உயர்த்தி கேட்க, அதில் உள்ளுக்குள் உருகியவன் வெளியே காட்டாது, புன்னகைத்து விட்டு "கார்த்திக்'ஆஆ அந்தப் ஸ்பை !" என்றான்.அவளும் புன்னகையுடன் ஆம்மென்றாள். அவன் கிளம்பும் நேரம் வர, "கொஞ்சம் வொர்க் இருக்கு சக்கர, அதனால என்னால  இந்த வீக்  முழுக்க உன்னை மீட் பண்ண முடியாது. நைட் போன் பண்றேன். அடுத்த மீட்டிங் நம்ம எங்கேஜ்மெண்ட் ட்ரெஸ் எடுக்கும் போது தான் அப்போ  பார்க்கலாம் " என்றான்.


"அப்பா, என்னை கூட்டிட்டு  வர மாட்டார். பெரியவங்களா தான் போய் எடுப்பாங்க" என்றாள் பதற்றமாக, 

"என்னையும் தான் எங்க அப்பா வரவேணாம் சொல்வார். அதுக்காக நான் வராம இருந்திடுவேனா?. எங்கேஜ்மெண்ட் நமக்கு தான் அவங்களுக்கு இல்ல, ஸோ நீ வர சம்ஜே !"என்று சென்றிட,  அவளோ அயர்ந்து போனாள்.

****

மறுநாள் திருமால்,  காத்தவராயன் வீட்டின் முன் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டு மகள்  கடிதம் எழுதி வைத்து ஓடி விட்டதாக சொல்லி அழுதவர், அதற்கு காரணம் நீங்கள் என்று மகள் குறிப்பிட்டு எழுதி இருந்ததை சொல்லி அழுக, காத்தவராயன் அதிர்ந்து போனான்

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2