வரன் - 7

 






"அப்பா... அப்பாப்பா... ப்பா !"என்றழைத்தவாறு ஜனனியும் கார்த்திக்கும் ஆரனின் இருபக்கமும் நின்று உலுக்கி அவனை நினைவுலகிற்கு அழைத்து வந்தனர். "ஆஹாங்..." என்றவன் கடுப்பில் "என்ன தான் வேணும் உங்களுக்கு?" என்றான்.


"எங்களுக்கு ஐஸ் கிரீம் வேணும்"என்றாள் ஜனனி. " ஏதே ஐஸ் கிரீமா?" வாயை பிளந்தான் ஆரன். 


"நீ தானப்பா எங்க கிட்ட என்ன வேணும் கேட்ட? அதான் ஐஸ் கிரீம் வேணும் சொன்னேன்" என்று விவரமாக  பேசினாள் அந்தக் குட்டி . கண்கள் சுறுக்கி அவளை பார்த்தவன் "பாப்பு ஸ்கூலுக்கு வந்ததும் உனக்கு வாய் ஓவராகிடுச்சி. அண்ணி கிட்டபோட்டு கொடுக்கறேன்" என்றவனை கண்டு வாயில் கைவைத்து சிரித்தாள் ஜனனி. இந்த பக்கம் நின்ற காரத்திக்கோ

"அப்பா, வாங்க வீட்டுக்கு போலாம்?"என்று உலுக்க, " இருடா  உங்க மிஸ் கிட்ட பேசிட்டு போலாம்"


"எங்க மிஸ் கிட்ட நீ என்ன பேச போற?" அதிகாரமாய் கேட்டான்." உன்னை பத்தி கம்பலைன்ட் கொடுத்து, அடி வெளுக்க சொல்றேன் வா" என்று மிரட்டினான்.


"ஹிஹி...  ப்பா நீ போய் என் பெயரை சொல்லு, அவங்களே நிறைய கம்பலைன்ட் பண்ணுவாங்க.  நீ வேற கம்பலைன்ட் பண்ண போறீயா?" சிரித்த கொண்டே அசட்டையாகச் சொன்னான்.


அதிர்ந்தவன், "அடப்பாவி, அவ்வளவு சேட்டை பண்ணுவீயா? சரி சரி உன்னை பத்தி என்ன கம்பலைன்ட் சொல்றாங்க தான் கேட்போம் வா டா"   நின்ற நிலையில் அவளிடம் பேச துடிக்க, " அத நானே சொல்றேன் வா ப்பா" என்று முன்னே நடந்தான், 'ச்ச... இதுங்கள வச்சிட்டு ஒரு இன்றோ கூட பண்ண முடியாது போல' என்று சலித்துக் கொண்டு அவள் சென்ற திசையை ஏக்கத்தோடு பார்த்தவன் அவர்களோடு  நடந்தான்.

அந்நிகழ்வை எண்ணி நகைத்தவன், 'சக்கர ' அவள் முகத்தை மனக்கண்ணில் நிறுத்தி கண்டபடி கனவில் அவளோடு இருந்தான். 


ஆழியின் வழியே ஆதவன் பிறந்து ,புலர்ந்த காலையில் தன் ஆட்சியை  தொடர, அந்த வீட்டில் காலை வேலைகள் நிக்காமல் தொடர்ந்தன. 

காஃபி பருகிக் கொண்டிருந்த மேகாவின் அருகில் வந்த மோகனா கோயம்புத்தூரில் இருந்து வாங்கி வந்த புடவையை  அவள் கையில் கொடுத்தார்.


"எதுக்கு அத்த இது?" என இழுத்தாள்.


"ஊர்ல இருந்து வர்றேன், வெறுங்கையோடவா வர்றது. அதுவும் என் செல்ல மருமகளுக்கு எதுவும் வாங்கிட்டு வர்றாம எப்படி இருக்கறது?" என்று தாடையை பற்றிக் கொஞ்சினார். "நீ கல்யாணமாகி போயிட்டா, இந்த அத்தய மறந்திடுவியா செல்லம் ?"மெய்யான ஏக்கத்தில் கேட்டார். 


"என்னத்த நீ,  கல்யாணமாகி போயிட்டா, என் அம்மா அப்பாவ மறப்பேனா. எனக்கு நீங்களும் அவங்களும் ஒன்னு தான் அத்த" என்றாள் அவரை அணைத்த படி. 


'அப்ப்பா அத்த மருமக பாசத்தை வச்சி சீரியல்ல கதை எழுதி பொழச்சிக்கலாம் போல., என்னம்மா பாசத்தையும் அன்பையும் கலந்து கொட்றானுங்க. எனக்கே கண்ணு கலங்குதே ' இருவரையும் சற்று பொறாமை பார்த்து புலம்பினாள் நேகா. பின் காஃபியை குடித்து முடித்து சமையலறைக்கு சென்று சிங்கில் போட்டுவிட்டு அவர்களை கடந்து அறைக்கு செல்ல இருந்தவளை அழைத்தார் மோகனா.


"ஏய் நில்லு டி" 


"என்னவாம்" தெனாவெட்டாக அவர் முன் நின்றாள். 


"என்ன டி அத்தைனு ஒரு மரியாதை இருக்கா உன்கிட்ட?  கூப்டுறேன் என்னங்கத்தனு கேட்டகாம என்னவாம்ங்கற கொழுப்பு டி உனக்கு" என்று கத்தினார்  


"நீங்க மட்டும் என்னை எப்படி கூப்டீங்களாம்? ஏய் ஓய்னு மாட கூப்டுற மாதிரி தான் கூப்டீங்க. அவளை மட்டும் செல்லம் வெல்லம் கொஞ்சினீங்க, என்னை அப்படி கொஞ்ச வேணாம் பேர் சொல்லி கூப்பிடலாம்ல" அவளும் விட மாட்டேன் என்பது போல காலையிலே ஆரம்பித்தாள்.


'ஆரம்பிச்சிட்டாங்கயா' என அயர்ந்து கண்ணை மூடினாள் மேகா. மேகா அருகில் வந்து நின்ற தீனா, இருவரையும் கண்டு தலையில் அடித்துக் கொண்டான்."என்ன மேகி காலையிலே வா ! " என்றான் சலித்து.


"ஹாஹா... ஆமா தீனா !" என்று சிரிப்பை தொடர, "எதுக்கு மேகி சிரிக்கற?" தீனா இருவரின் வாக்குவாதத்தை கண்டு படியே கேட்டான். 


"உனக்கு லைப் போர் அடிக்காம போக ரெண்டு பெஸ்ட் எண்டெர்டெயினர் உன் லைப்  இருக்கறத பார்க்க, எனக்கு சந்தோசமா இருக்கு தீனா !" என்றவளை எட்டி நின்னு முறைத்தவன், " நீ சொன்ன அந்த ரெண்டு எண்டேர்டைனர் இவங்க தான மேகா !"என்க


"அஃப்கோர்ஸ்" என்று  தோலைக் குலுக்கினாள் " யூ டூ புரூட்டஸ் ! நீயுமா என் நிலமைய கண்டு  சிரிக்கற?" 


"பச்... நான் வேணா உன் பின்னாடி சோகம் கீதம் வாசிக்க வா !" குறும்புடன் கேட்க, "போடி... "  என்றவன் அவர்கள் இருவரையும் கவனித்தான்.அவளும் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


"ஓ... மகாராணிய பெயர் சொல்லிக் கூப்பிட்டாத்தான்  என்னன்னு கேட்பீகளோ?" அவரும் விடவில்லை.


"பின்ன, அப்றம் எதுக்கு நீயும் உன் நொண்ணனும் சேர்ந்து  எனக்கு பேரு வச்சீங்களாம் கூப்ட தானே !என்னையும் மனுஷியா மதிச்சி கூப்டுங்க, நானும் உங்களுக்கு மரியாதை அள்ளி கொட்றேன். குடுக்க கஷ்டமா இருந்தால்  விடுங்க"  கடைசி வரியில் வலியோடு சொன்னவள் மேற்கொண்டு பேசாமல் அறைக்குச் சென்று விட்டாள். "தீனா" அருகே நின்ற மகனை அழைத்தார். 


" மா" என்று அருகே வந்தவனிடம்"இந்தச் சின்ன கழுத  என்ன வாய் பேசிட்டு போறானு பார்டா "என்றார் கடுப்பில்


"அவ சொல்றதுல என்னம்மா தப்பிருக்கு? நீ மேகாவை ஒரு மாதிரியும் நேகாவை ஒரு மாதிரியும் ட்ரீட் பண்ற. நேகாவுக்கும் அவ அத்தை அவகிட்ட பாசமா பேசணும் எதிர்பார்ப்பு இருக்கும் தான. நீயும் அவ கிட்ட வீம்பா தான்  பேசற, இதுல அவ வாய் பேசறானா என்ன அர்த்தம்" என்று விளக்கம் தந்தான்.


"அப்படிங்கற, ஆனா என்னவோ டா அவ கிட்ட வம்பு வளர்க்க தான் பிடிச்சிருக்கு எனக்கு " என்ற சிரித்த வண்ணம் சொன்னவரை,  முறைத்தவன் "எல்லாம் நேரமும் அது சரிவராது மா. பாசம் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டனும், வம்பு பண்ற நேரத்தில வம்பு பண்ணனும், இல்ல உனக்கு அவளை அறவே பிடிக்காதுனு நினைச்சிட்டு விலகி போயிடுவா ! அப்றம் நட்டம் உனக்கு தான் கடைசி வரை  அவ தான் உன் கூட வர போறவ பார்த்துக்க " என் மேலோட்டமாக அவனது  ஆசையை அன்னையிடம் சொன்னவன் அவர் கையில் இருந்த சேலையைக் கண்டு" இது அவளுக்கு தான குடு நானே குடுத்துகிறேன்"என்று எடுத்துக் கொண்டு நேகாவின் அறைக்குச் சென்றான்.


'இவன் என்ன சொல்ல வர்றான் கடைசி வரைக்கும் அவ தான் வருவாளா? அப்படினா?' யோசித்தவர், சிரித்துக்கொண்டே ' படவா' என்று நகர்ந்தார்.


குளித்து சேலை உடுத்தி பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் நேகா. அவள் அறைக்குள் நுழைந்தவன் கதவை தாழிட்டான். திரும்பி அவனை பார்த்து அசட்டை செய்தவள் தன் வேலையை தொடர்ந்தாள். 


மெத்தையில் கை ஊண்டி அமர்ந்தவன் அவளை பாராமல் "கோவமா இருக்கீயா நேகா?"எனக் கேட்டான். 


"என்ன சொல்லனும் நீ எதிர்பார்க்கற தயா?" என்றாள் நெற்றியில் பொட்டை வைத்துக் கொண்டு. "நான் எதையும் எதிர்பார்த்து வரல டி. ஏன்னா இது உனக்கும் உன் அத்தைக்குமான  சண்டை. இடையில் நான் வரவும் மாட்டேன். உங்க ரெண்டு பேரையும்  சமாதானம் செய்யவும் மாட்டேன்" என்றான் தீர்க்கமாக,


"அப்படியா? அப்போ எதுக்கு இங்க வந்த நீ?" அவன் எதிரே இடையில் கைவைத்து நின்றவளை இழுத்து மடியில் அமர வைத்தவன், "உன்னை கொஞ்ச தான் வந்தேன்" அவளிடையை இறுகி, கழுத்தில் முகம் புதைத்தான். 


அவன் கேசத்தைப் பற்றி பின்னிழுத்தவள், "அப்பாங்க இருக்காங்கனு கொஞ்சம் கூட பயம் இருக்க மிஸ்டர் தயா உனக்கு?  உள்ள வந்து கதவ சாத்தற,  கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்கற வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையாட்டம் " என்றவளை மேலும் கொஞ்சியவாறு,


"பின்ன, அவங்களுக்கு மாப்பிள்ளை இல்லாம என்னவாம் நானு. என்னைக்கி  இருந்தாலும் இதே அறையில இதே போல மடியில வச்சி  கொஞ்ச தான் போறேன். உன்னை கட்டிபிடிச்சி இந்த மெத்தையில் உருள தான் போறேன் அப்ப உங்க அப்பாங்க கேட்பாங்களா என்ன?" 


"அப்ப கேக்க மாட்டாங்க, ஆனா இப்போ கேட்பாங்க, மரியாதையா ரூம விட்டு வெளிய போயிடு இல்ல  உன்னை வீட்டுக்கே வரவிடாம பண்ணிடுவார் உன் பெரிய மாமா, வெளிய போடா" அவனிடமிருந்து தன்னை பிரித்து வாசலை கை காமித்தாள்.


"ப்ச்... இவ ஒருத்தி, வெளிய தூரத்திலே குறியா இருப்பா ! போறேன். அதுக்கு முன்ன இந்தா" என்று புடவையை நீட்டினான். அதை வாங்கி பார்த்தவள், "நீ வாங்கினதா? அத்தை வாங்கினதா?"


"உங்க அத்தை உனக்கு வாங்கினது தான். ஆனா பாரு,கொடுக்கற நேரம் சண்டை போட்டீங்களா. அதான் நான் உன்கிட்ட கொடுக்கற சாக்கில, உன்கூட  ரொமன்ஸ் பண்ண வந்தேன். ஆனா அந்த  ரெண்டு ரௌடி பீஸை  நியாபகப் படுத்தி மூட் ஸ்பாயில் பண்ணிட்ட போடி !" என்று முறுக்கிக் கொண்டு வெளியே போனான். சிரித்து கொண்டே வெளியே கிளம்பி வந்தாள்.மேகாவும்  நேகாவும் பள்ளிக்கு கிளம்பினார்கள்.


இரண்டு நாள் விடுமுறைக்கு பின், இன்று தான் அலுவலகம் வந்திருந்தான் ஆரன். கிராம நிர்வாக அலுவலகத்தை தினமும் கூட்டி வாசல் தெளித்து கோலம் போட்டு , அலுவலகத்தை சுற்றி விழும் சருகுகளை சுத்தம் செய்யவும்  நீர் பிடித்து வைக்கவும், ஏதாவது தேவை என்றால் வாங்கி தரவும் என அந்தக் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியர் இருவரையும் வேலைக்கு வைத்திருந்தான். வயதான காலத்திலும் வேலை செய்து தான் கஞ்சி குடிப்போம் என்று இருக்கும் இந்த தம்பதியருக்கு  இந்த சின்னச் சின்ன வேலையை கொடுத்து அதற்கு சம்பளத்தையும் கொடுத்து, குழந்தை இல்லாத அவர்களுக்கு மகனா அனைத்தையும் செய்து வருகிறான் ஆரன்.


ஆரனை பார்த்ததும் இருவரின் முகமும் மலர்ந்தன. இரண்டு நாள் அவனிடம் பேசாமல் வம்புகிம்பு பண்ணாமல் வாடி  இருந்த அவர்களின் முகம் இன்று மலர்ச்சியை சூட்டிக் கொண்டது 


"அப்றம் பாண்டியம்மா ! ரெண்டு நாள்  என்னை பார்க்காம இளச்சி கிடக்க போல, உன் புருஷன் போட்ட சோறு இறங்களையா என்ன?" வழக்கமாக செய்யும் கேலியோடு ஆரம்பித்தான் ஆரன்.


"ஏதே நானா? இப்பதான் ரெண்டு கிலோ கூடி இருக்கிறதா, அந்த ஆஸ்பத்திரியில இருக்க மிஷினு காட்டுச்சி. நீ என்ன இளச்சிட்டேங்கற, என் புருஷன் போட்ட சோறு என்னை ரெண்டு கிலோ கூட்டிருக்குப்பா !" அவரும்  பதிலுக்கு கேலியாக சொன்னார்."உன் புருஷன் போட்ட சோறு மட்டும் உன்னை ரெண்டு கிலோ கூட்டின மாதிரி தெரியலே" அவரை ஒரு மார்கமாக பார்த்து கூற, "போயா" என அழகாய் வெட்கப்பட்டார்.


"என் பொண்டாட்டிய கிண்டல் பண்ணது போதும் ராசா ! நீ போன காரியம் என்னாச்சி? பொண்ணு பார்க்க போனீகளே பொண்ணு பிடிச்சதா? பொண்ணுக்கு உங்கள பிடிச்சதா?" 


"அதெப்படி என் புள்ளய பொண்ணுக்கு பிடிக்காம போவும், அழகு ராசாவ யாரு தான் வேணாம்பா !"என்று ஆரனை நெற்றி முறிக்க, "அப்படி சொல்லு பாண்டியம்மா ! என்னைய  பொண்ணுக்கு எப்படி பிடிக்காம போகும் ? அதெல்லாம் ரெண்டு குடும்பமும் பேசி  வர தேதில நிச்சயம் வச்சிருக்காங்க. நான் முத்தின நாளே கூட்டிட்டி போயிடுவேன் உங்கள !" என்றவன் இருப்பிடத்தில் அமர்ந்து வேலையை கவனிக்கலானான். அவர்களோ மகிழ்ந்தனர்.


கையெழுத்திட வேண்டியவை எல்லாம் அவன் உடன் பணி செய்யும் கணேசன் அவனது மேசையில் எடுத்து வைக்க, அவனும் கையெழுத்து போட்டவாறே வேலையை தொடர்ந்தான். 


"தம்பி..." என வாசலில் இருந்து வந்த குரலை கேட்டு யாரென்று கணித்தவன், "வாங்க  அண்ணே ! என்ன முடிவு பண்ணிருக்கீங்க?" அவரை பாராமல் கேட்டான்.


"பிள்ளைய படிக்க வைக்க முடிவு பண்ணிட்டேன் தம்பி. அந்தப் புள்ளைக்கு சொத்துன்னா அது தானே தம்பி. அதான் உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன்" என்றார் உண்மையை உணர்ந்து. 


அவர் அருகே நின்ற அவரது மகளை  கண்டவன், "ம்ம்..

சொல்லு நீ என்ன படிக்க விரும்பற?"


"எனக்கு பி.எல் படிக்கணும் ஆசை அண்ணே " 


"பார்த்தியண்ணே வருங்கால வக்கீல எவனோ சொன்னானு வேலைக்கு அனுப்பிருக்க, உன்னை என்ன பண்ணலாம்? நீ கவலை படாதம்மா, நீ விரும்பறத  படிக்க  நான் இருக்கேன். நீ தைரியமா படி" என்றான்.


ஆனால் அவளது  தந்தையோ இன்னும் பயம் தெளியாமல் இருக்க, கணேசனோ, "  நீங்க மோதுறது பெரிய இடம்  தம்பி  ! எதுக்கு நமக்கு தேவ இல்லாத பிரச்சனை ? வந்த வேலைய பார்த்திட்டு போயிடுவோம்" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி எச்சரிக்கை செய்ய "நீங்க சொன்னத தான பண்றேன். என் வேலய தான் பண்றேன். நாட்ல நல்லது பண்றதெல்லாம் தேவ இல்லாத வேலையா போச்சி இல்ல ! திரு' ண்ணே நீ போங்க, 

எந்தப் பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துகிறேன், உங்க பொண்ண படிக்க வைக்கறது என் பொறுப்பு. நீங்க மனசு மாறாம இதே முடிவோட இருக்கணும் சம்ஜே !" என்றான் பின்னால் வரப் போகும் பிரச்சனையை அறியாமல்

Comments

  1. Hmm
    படிக்க வைப்பது கூட குத்தமா போவுது .

    ReplyDelete
  2. சித்ரா ஹரிதாஸ்September 7, 2024 at 7:34 AM

    நன்றி மா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2