Posts

Showing posts from May, 2024

இதயம் 3

இதயம் -  3 எகாந்த்தின் வருகை சைதன்யாவிற்குப் பிடிக்க வில்லை. அந்த இருவரையும் பார்க்க கடுப்பாக வந்தது. "யார் நீங்க ? எதுக்கு இப்போ பாராட்டு சான்றிதழ் குடுக்கிறீங்க?" என முகத்தை சுழித்து விட்டு கேட்டான். "இவன் என் கசின், என் வொர்க்கப் பத்தி தெரிஞ்சதுனால என்னை பாராட்டுறான். நல்லா இருக்கோ இல்லையோ பாராட்ட ஒரு மனசு வேணுமே அது ஒரு சில ஜென்மத்துக்கு எல்லாம் தெரியவே தெரியாது போல" என்று அவனுக்கு ஒரு குட்டு  வைத்தாள்.  புகைப்படத்தை கண்டு அவன்  வியந்து பார்த்ததை  அவள் பார்க்கத் தான் செய்தாள். ஆனால் அவனிடமிருந்து  ஒருவார்த்தை கூட பாராட்டாகவும் இல்லை பதிலாகவும் வரவில்லை . புகைப்படத்தை கண்டு  பாராட்ட எண்ணினாலும்'அவள் ஒரு  பெண்...  அவளை பாராட்டுவதா?' என்ற ஏளனம் அவன் கண்ணில் அதிகம் தென்படவே அப்படிச் சொன்னாள்.  தன்னை  தான் ஜாடையாக சொல்கிறாள்  என புரிந்துக் கொண்டவன் அவளை  முறைத்து விட்டு" பிரவஸ்தி,  இன்னும் ஏன் இங்க நின்னுட்டு இருக்க? நேரமாச்சி வா போலாம்" என்று பல்லைக்கடித்தான். "ஓகேங்க... ரொம்ப தேங்க்ஸ் என்னை இவ்வளவு அழகா போட்டோ எடுத்ததுக்கு  நான் வர்றேன்"

இதயம் - 2

  இதயம் 2 "என் மகனுக்கு கல்யாணமாகி பிள்ளையே பிறக்க போது" என்று  தன் பார்வையில் சிலாகித்து கொண்டிருந்த சரஸ்வதியவே " இவளை யாரு தான் கூப்பிட்டாங்களோ" என்று புலம்ப விட்ட  பெருமை நம் வைஷுவிற்கே சேரும். 'புகைப்படம் எடுக்கிறேன் 'என்ற பெயரில் அவரை அலகழித்து விட்டு தான் அலுவலகத்திற்கே வந்தாள். பரணியிடம் எடுத்தப் புகைப்படத்தை எல்லாம் கொடுத்து அடுத்தக் கட்ட வேலைகளைப் பார்த்து இரவில் தான் வீட்டிற்குச்  கிளம்பினாள். மகிழ்மதி மடியில் தலை வைத்து விஷ்ணுவர்தனின் மடியில் காலை வைத்து சயனத்தில் இருந்தான் எகாந்த். "டேய் மாப்ள !  எத்தனை நாளைக்கு தான்டா நாங்க உங்க ரெண்டு பேரையே மேய்க்க? போர் அடிக்கிதுடா ! சட்டு புட்டுனு பொண்ண பார்த்து லவ் பண்ணு. இல்ல நாங்க பார்க்கற பொண்ணயாவது கல்யாணம் பண்ணு. ரெண்டும் இல்லாம அத்தையடி மெத்தையடினு எங்க மடியில் குழந்தையாட்டம் கிடந்து காலத்த ஓட்டிறலாம் நினைக்காத டா" என்று தன் மடியில் கிடந்த அக்கா மகனின் காலை பிடித்துக் கொண்டே சொன்னார் விஷ்ணு. "என்ன மாமே பண்ண 90'ஸ் கிட்ஸ்ஸா பொறந்தது என் தப்பா மாமே !  பொண்ணே கிடக்க மாட்டிக்கிது. அதுவும

கரையவில்லை உன்னிதயம்

 கரையவில்லை உன்னிதயம்  இதயம் 1 தன் நிக்கான் கேமிராவில் படிந்த சிறு தூசியைப் பூ போல ஊதி தள்ளி அணிந்திருந்த வெள்ளை சட்டையில் அதை துடைத்து தன் பையினுள் பத்திரப்படுத்தி வைத்தவள், "ஃபங்சன் எங்கனு சொன்ன?"என தன் நண்பனிடம் கேட்டாள் வைஷ்ணவி. "கே.கே. நகர், சந்திரன் அபார்ட்மெண்ட். பேபிஷவர் ஃபங்சன்?"என்றான் பரணி. "சரி, நான் அகிய கூட்டிட்டு போறேன். நீ நேத்து எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும் பிரிண்ட் போட்டு வை" என்றவளை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு,"அந்த வேலைய எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீ மொதல போற வேலைய ஒழுங்கா முடிச்சிட்டு வா ! ஃபங்சன் நடக்கற இடத்துக்கு போற பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்காம போனோமா, வந்தோமானு இரு தாயி !"எனக் கையெடுத்து கும்பிட்டு கேட்டான். அவன் சொன்னதும் கோபம் முனுக்கென்று வந்தது அவளுக்கு."ஆமாடா நான் தான் எல்லா ஃபங்சன்லையும் போய்   வேலைய பார்க்காம பஞ்சாயத்து பண்றது தான் என் வேலை பார். நான் போட்டோ எடுக்கும்  போது என்னை டிஸ்டர்ப் பண்ணா, எனக்கு கெட்ட கோபம் வரும்னு உனக்கு தெரியாத?" "எனக்கு தெரியும் தாயி. ஆனா அங்கிருக்கிறவனுக்கு தெ

மடல் 2

Image
அல்லி மடல் மேனியிலே மடல் - 2 "தப்பு தெரிஞ்சதும் உடனே மன்னிப்பு கேட்கிற காதலன் கிடைக்க உனக்கு கொடுத்து வைச்சிருக்கணும் ! அவன போய் நீ ஏமாத்தலாமா  சுருதி?"என பாவம் போல கேட்க ' அதானே ! தேவாவாது சேர்த்து வைக்கிறதாவது ! காதலுக்கு எமனில அவ !' என நினைத்துக் கொண்டு சுவாரஸ்யத்துடன் பார்த்தாள் திகழ். "ஏமாத்தினாளா? என்ன சொல்றீங்க நீங்க?" என வருண் பதற "எஸ் ! சுருதிக்கு நாங்க டாட்டூ போட்டு விடல வருண் ! அவ எங்க கடைக்கு வரவே இல்ல !  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் பண்ணி டாட்டூ போட்டு விட்டதா சொல்ல சொன்னா ! "என்று உண்மையை உடைத்துச் சொல்ல, சற்று முன் கோர்த்த கைகளை உதறி தள்ளினான். "ஏன்டி மறச்ச? எனக்கு தெரியும்டி நீ இப்படி பண்ற ஆள் தான். உன் மேல சந்தேகப்பட்டு தான் ஷாப்ப காமினு நின்னேன். நான் நினைச்ச மாறி நீ பண்ணிட்டேல !"என அவன் ஆரம்பிக்க, "நான் எங்க டாட்டூ போட்டா உனக்கு என்ன டா? நான் யார் கிட்ட போடணும் நீ  டிசைட் பண்ணக் கூடாது. நான் தான் பண்ணுவேன். நீ சொல்றத நான் செய்யணுமா?" "அதுக்காக எவனோ ஒருத்தன் கிட்ட எல்லாத்தையும் காட்டுவீயா?&qu

அல்லி மடல் மேனியிலே

Image
அல்லி மடல் மேனியிலே  மடல் - 1 "திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்..." கருணை கடலே கந்தா போற்றி! கருணைக் கடலை தன் காலடியில் கொண்டு அலையலையாக பாதத்தில் வந்து சேரும் பக்தர்களுக்கு ஆசீயருளும் திருச்செந்தூர் முருகனின் உருவப் புகைப்படத்தின் முன் சூடம் காட்டிக் கொண்டிருந்தாள் தேவா ! பாடலை ஹை பிச்சில் ஒலிக்க விட்டு செய்யும் தொழிலே தெய்வம் , தொழில் செய்யும் இடமே கோவில்... என்பதற்கேற்ப தங்களது (டாட்டூ ஷாபை)பச்சைக் குத்தும் கடையை தற்போதைய கோவிலாக்கி கொண்டிருந்தாள் தேவா ! புகை மண்டலத்திற்குள் அமர்ந்திருந்தாள் திகழ் பாரதி. கடை முழுதும் குமஞ்சம் காட்டி விட்டு முருகன் காலுக்கடியில் வைத்தவள், கை கூப்பி வேண்டும் தேவாவை கண்டு அசட்டைச் சிரிப்புடன் நின்றிருந்தாள் திகழ். 'தினமும் அதே முருகனை அதே முறையில் வணங்கி கொண்டு தான் இருக்கிறாள். தினமும் அதே கோரிக்கை ; தினமும் அதே நிராகரிப்பு ! ஆனாலும் அவளும் விடுவதாக இல்லை. முருகனும் இறங்குவதாகத் தெரியவில்லை. சோதனை படலம் மட்டும் தினமும் ஏதோ ஒரு ரூபத்தில் வ