இதயம் 3

இதயம் -  3


எகாந்த்தின் வருகை சைதன்யாவிற்குப் பிடிக்க வில்லை. அந்த இருவரையும் பார்க்க கடுப்பாக வந்தது. "யார் நீங்க ? எதுக்கு இப்போ பாராட்டு சான்றிதழ் குடுக்கிறீங்க?" என முகத்தை சுழித்து விட்டு கேட்டான்.


"இவன் என் கசின், என் வொர்க்கப் பத்தி தெரிஞ்சதுனால என்னை பாராட்டுறான். நல்லா இருக்கோ இல்லையோ பாராட்ட ஒரு மனசு வேணுமே அது ஒரு சில ஜென்மத்துக்கு எல்லாம் தெரியவே தெரியாது போல" என்று அவனுக்கு ஒரு குட்டு  வைத்தாள். 


புகைப்படத்தை கண்டு அவன்  வியந்து பார்த்ததை  அவள் பார்க்கத் தான் செய்தாள். ஆனால் அவனிடமிருந்து  ஒருவார்த்தை கூட பாராட்டாகவும் இல்லை பதிலாகவும் வரவில்லை . புகைப்படத்தை கண்டு  பாராட்ட எண்ணினாலும்'அவள் ஒரு  பெண்...  அவளை பாராட்டுவதா?' என்ற ஏளனம் அவன் கண்ணில் அதிகம் தென்படவே அப்படிச் சொன்னாள். 


தன்னை  தான் ஜாடையாக சொல்கிறாள்  என புரிந்துக் கொண்டவன் அவளை  முறைத்து விட்டு" பிரவஸ்தி,  இன்னும் ஏன் இங்க நின்னுட்டு இருக்க? நேரமாச்சி வா போலாம்" என்று பல்லைக்கடித்தான்.


"ஓகேங்க... ரொம்ப தேங்க்ஸ் என்னை இவ்வளவு அழகா போட்டோ எடுத்ததுக்கு  நான் வர்றேன்" என்று அவனோடு கிளம்ப இருந்தவளை தடுத்தாள் வைஷு, " உங்க கிட்ட உங்க அட்ரஸ் கேட்டேனே ! போட்டோஸ் எல்லாம் பிரேம் போட்டு அனுப்ப !" 


" அதெல்லாம் ஒண்ணு வேணாம்... போட்டோஸ் எல்லாம் டெலிட் பண்ணிடு  எங்களுக்கு தேவை இல்லை அது  "என்றான் விட்டெரியாக. 

பாவம் வஸ்தியின் முகம் வாடி தான் போனது. அதை கவனித்த எகாந்த்திற்கு  ஏனோ மனம் பாரமானது.


"ஹலோ பாஸ் ! ஏன் இவ்வளவு கோபம்? எங்களை பார்த்தா ஏமாத்த வந்தவங்க போல தெரியுதா? நாங்க அப்படி கிடையாது . நாங்களும் டிசென்ட் பேமிலில இருந்து வந்தவங்க தான்... உங்களுக்கு எங்க மேல சந்தேகமிருந்தால் வீ வில் ஸோ அவர் ஐடிஸ். ஸோ உங்க பயம் அவசியம் இல்ல. அண்ட் அவ வொர்க்கே போட்டோ எடுக்கறது தான். அதான் போட்டோ எடுத்திருக்கா, உங்ககிட்ட பர்மிஷன் கேட்கல தான்.  ஆனா நாங்க தான் எங்க  பக்கம் கிளியரா சொல்லிட்டோமே, இன்ஃபாக்ட் அவங்களுக்கு  என் கசின் எடுத்த போட்டோஸ் எல்லாம் பிடிச்சிருக்கு. அவங்க வாங்கனும்  நினைக்கிறாங்க. உங்களுக்கு பிடிக்கலன்றனால, ஏன் அவங்களோட ஆசையையும் சேர்த்து அவாய்ட் பண்றீங்க? அவங்க ஒன்னும் ஜடமில்ல.  உங்க கோபத்துக்காக அவங்க ஆசைப்படுறத தடுக்காதீங்க..." வஸ்திக்காக  எகாந்த் பேச,தன்னை மறந்து அவள் மீண்டும் ஒரு முறை அவனைப் பார்க்கலானாள்.


பற்களை கடித்தப் படி  நின்றிருந்தான்  சைதன்யா. அவர்கள் அவ்வளவு பேச, தனக்காக வஸ்தி பேசாமல் இருப்பதை கண்டு அவனுக்கு கோபம் தான் வந்தது. எதிரே இருக்கும் இருவரும் விட்டுக்கொடுக்காமல்  இருக்க, இவள்  தனக்காக ஏன் பேசவில்லை என்பது தான் அவனுக்கு அதிக கோபத்தை  தந்தது.  ஆனால்  ஒன்றை மறந்து விட்டான். தன் கோபத்தால் அவளது ஆசையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் விட்டதை.


"எகா லிவிட்... ஸாரி மேம் அண்ட் ஸாரி உங்களை டிஸ்டர்ப் பண்ணினதுக்கு. எதெல்லாம் என் கண்ணுக்கு அழகா இருக்கோ அதெல்லாம் போட்டோ எடுப்பேன். இட்ஸ் மை ப்ரோப்சன்... அண்ட் என்னோட சோசியஸ் மீடியால கூட நான் எடுக்கற பொண்ணுங்க போட்டோஸ் போட மாட்டேன். அண்ட் அவங்க பெர்மிஷனே கொடுத்தாலும் மாட்டேன். எனக்கு சில ப்ரின்சிப்பில்ஸ் இருக்கு  அதை நான் எதுக்காகவும் மாத்திக்க மாட்டேன்...  உங்க தாட் தப்பில்ல, முன்ன பின்ன தெரியாத யாரையும் நம்பக் கூடாது இல்லையா ! எனிவே  ஃபர்ஸ்ட் நம்ம மீண்டிங் இப்படி அமைஞ்சது  பரவாயில்ல ஹாவ எ குட் டே !" என்றவள்  அங்கிருந்து கிளம்ப , எகாந்த்தும் வஸ்தியை ஒரு முறைப் பார்த்து விட்டு அவளுடன் சென்றான் 

சைத்து திரும்பி வஸ்தியை பார்க்க, ஏக்கமாக போகும் அவர்களை பார்த்தாள். மனம் கேளாமல்

"ஒரு நிமிஷம்... " என்றான் சைதன்யா. 


இருவரும் 'என்ன?' என்பது போல திரும்பி பார்த்தனர்.  அந்த போட்டோஸ் எல்லாத்தையும்  இந்த அட்ரஸ்க்கு அனுப்பிடுங்க..."என்று அவனது நடனப்பள்ளியின் முகவரியை கொடுத்தான். எதுவும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டு எகாவுடன் நடந்தாள்.


"தேங்கஸ் சைத்து !"  என்றவளை வெறித்தவன் "போலாம்" என்றான். அவளும் சரியென்று தன் பையை எடுக்கச்  சென்றாள்.


தன் கேமராவில் வஸ்தியின் போட்டோவை பார்த்து கொண்டே வர, எகாவிற்கோ அவனது காதலியின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தாலும் அவளிடம் கேட்டால் போதும் துருப்பு சீட்டு கையில் கிடைத்த போல மொத்த விஷயத்தை பிடிங்கி விடுவாள் என்று பயந்து மௌனம் காத்தான் 


"அவங்க ரொம்ப கியூட் ல எகா !" என்று  அமைதியாக வரும் அவனை வம்பிழுத்தாள். அவனும் யாரை சொல்கிறாள் என்று தெரிந்தாலும் தெரியாமல் "யார் ?" என்றான் . 


ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியவள் "அப்போ நான் யாரை சொல்றேனு உனக்கு தெரியாது, அப்படி தான?"என்றதும் உதட்டைப் பிதுக்கி தோளைக் குலுக்கி விட்டு "தெரியாது"என்றான். ஆனால் அவனது  கண்களில் கள்ளத்தனம் ஒளிந்திருந்தது.


"சரி விடு எகா !  நீ தான் அவங்க இருக்கற இடத்தை கூட திரும்பியே பார்க்கலேல உனக்கு எப்படி தெரியும் ..." என்றிட அவனும் "ஆமாமென்று" இளித்து வைத்தான்.


"ஆனா, நீ தான் அவனை பார்க்கல, அவளை ஒருத்தன் திங்கற மாதிரி பார்த்துட்டு இருந்தான் தெரியுமா? அவன் பார்வையே சரியில்ல... விட்டா தூக்கிட்டே போயிருப்பான் அந்தப் பொண்ண. அப்படி  பார்த்தான். அவனை போட்டோ கூட எடுத்து வச்சிருக்கறேன். நீ பார்க்கிறீயா?"எனக் கேமராவை  அவனிடம் நீட்டினாள்.


'யாரோ ஒருவன்   தன்னவளை பார்ப்பதா ???  பொறாமை , கோபம்' எனக் கொண்டவன் யாரென கேமராவை பிடிங்கிப் பார்க்க, அதில் அவன் முகம் தான் இருந்தது. தூணில் சாய்ந்து அவளை ரசிப்பதை போல் போட்டோ பிடித்து வைத்திருந்தாள். " யாருனு உனக்கு தெரிஞ்சதா எகா?" என மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு கேட்டாள். 


"வைஷு ... அது???" என தலையை சொறிந்தான்.,"வழியாத எப்போ இருந்து  இந்து வேலை நடக்குது?" எனக் கேட்கவும் அவளை சந்தித்த நாளை எண்ணிப் பார்த்தான். 


வியாழக்கிழமை தோறும் எகாந்த் கோவிலுக்கு வருவது வழக்கம் அன்று கூட கோவிலுக்கு வந்திருந்தான். அவன் முன்னே ஒரு சிறுமியும் பாட்டியும் நடந்து சென்றனர். பாட்டியின் பேச்சை கேட்காமல் காலில் சலங்கையை அணிந்து  ஆடிக் கொண்டு முன்னே சென்றவளை அவரது பாட்டி எச்சரிக்கை செய்துக் கொண்டே பின்னே நடந்தார். அவர் எச்சரிக்கை செய்ததையும் மீதி அவளது விளையாட்டும் தனத்தால் முன்னே நடக்க,, அங்கிருந்து தண்ணீரில் காலை வைத்து வழுக்கி விழுந்து வார காலில் அடிப்பட்டது. சிறுமி விழுந்து அழுவதை கண்டதும் வேகமாக ஓடிக் சென்று தூக்கினான்.


கண்களை கசக்கி உதட்டைப் பிதுக்கி அழும் குழந்தையை தூக்கி சமாதானம் செய்தான் எகாந்த், "அச்சசோ செல்லக் குட்டி விழுந்திட்டிங்களா? அடிப்பட்டிருச்சா? எங்க காலை காட்டுங்க" என்று பிஞ்சு மலர் பாதங்களை   சோதிக்க, லேசாக சிராய்த்து ரத்தம் வந்தது. அதை தன் கைக் குட்டையால் துடைத்து விட்டான். "ஒன்னும் இல்ல வீட்லே போய் மருந்து போடுங்க. உங்க புண்ணு சரியாகிடும்"என கொஞ்சி அவள் அழுகையை நிறுத்தி சமாதானம் செய்ய அவர் பாட்டி மெல்லமாய் நடந்து வந்தார். 



"சொன்னா கேட்குறீயாடி? ஆடிட்டே போனேலே அதான் விழுந்துட்ட, உன்னை  தூக்க முடியலனு தான. நடக்க வச்சு கூட்டிட்டு போறேன் ஒழுங்கா என் கூட நடந்து வந்தா என்ன ? இப்போ உங்க அப்பனுக்கு வேற நான் தான் பதில் சொல்லணும்" என அந்தப் பிஞ்சை கடிந்து கொண்டு காலை ஆராய்ந்தார். 


"ஒன்னும் ஆகல பாட்டி லைட்டா தான் அடிப்பட்டிருக்கு எண்ணெய் போட்ட சரியாகிடும்" 


"சரிப்பா ! நான் கூட பெரிய அடியா இருக்கோம்னு பயந்துட்டேன்.. இல்லேனா இவ அப்பனுக்கு  யார் பதில் சொல்றது. கீழ இறங்குடி  டான்ட்ஸ் கிளாஸ்க்கு வேற போகணும்" என்றார். 


"ம்கூம் கால் வலிக்குது. நீ தூக்கிட்டு போ !" கைகளை பாட்டியிடம் நீட்டியது அக்குழந்தை. " என்னால் முடியாதுடி நீ நடந்து வரதா இருந்தா வா, இல்லேன்னா போ நான் போறேன்" என்று நகர, எகாந்த் கையில் இருந்தவாறே அடம்பிடித்தது.


"சரி சரி... அங்கிள் உன்னை தூக்கிட்டு வர்றேன்" என்று பரதநாட்டிய வகுப்பை நோக்கி நடந்தான். அங்கே பிரவஸ்தி வகுப்பை தொடங்கி நடனம் சொல்லித் தந்து கொண்டிருந்தாள்.


அவளை "மிஸ் " என்று அழைத்தாள் அந்தச் சின்ன குட்டி எகாந்த் கைகளில் இருந்தவாறு.


பிரவஸ்தி,  திரும்பி அக்குழந்தையை பார்த்தாள். "அச்சு குட்டி என்னாச்சி ஏன் லேட்டு?" எனக் கேட்டபடி அவன்  அருகே வர, அவளை பார்த்த கணத்தில் இதயம் வேகமாக அடித்துக்  கொள்ள, ஏனோ மூச்சு முட்டியது. 


"கீழ விழுந்துட்டாமா, ஆடாதனு சொன்னா கேக்குறாளா... ஆடிட்டே வர்றா,  தண்ணீல கால வச்சி விழுந்து நடக்க முடியலனு தம்பி தான் நான் தூக்கிட்டு வர்றேன்  சொல்லிட்டு தூக்கி வந்திருக்கு" என்று சொல்ல, அவனிடம் நன்றி நவில்ந்து விட்டு குழந்தை தூக்கி கொண்டு  காயத்தை ஆராய்ந்தாள்.


"அப்படியே ! அவ செய்றதெல்லாம் ஸ்லோ மோசனல் தெரியுமே உனக்கு?" என்றதும்  அவள் முகம் பார்த்து  பல்லைக் காட்டினான்.


"ஸோ !  தர்ஸ்டே தர்ஸ்டே ஸார் இங்க  தான் விஜயமா?" எனவும் ஆமாமென்று தலையை ஆட்டினான்.  "அப்ப நீ லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட?" மீண்டும் கேட்க, மீண்டும் தலையை ஆட்டினான்.


"நேத்து என்னமோ பொண்ணே இல்ல மண்ணே இல்லைனு புலம்பின, இன்னைக்கி என்னடானா காதல்னு வந்து நிக்கிற?" 


"அதுக்காக,  அவங்க கிட்ட காதலிக்கிறேன்  சொல்ல முடியுமா? இன்னும் கண்ஃபார்ம் பண்ணாம என்னத்த சொல்ல சொல்ற? ஆமா நீ எப்படி கண்டுப்பிடிச்சி நான் அந்தப் பொண்ண லவ் பண்றேன்னு"


"வைஷு போக்கஸ்ட் ஆல் மாமே ! வைஷு கண்ணு கேமரா கண்ணு எல்லாத்தையும் பசக்கு பசக்கு பசக்குனு  போட்டோ எடுத்துடும் ! அப்படி எடுக்கும் போது தான் நீ  ' பே 'னு பார்த்து பார்த்தேன்" 


"சரி தான்... " என்றெண்ணியவன் " வைஷு" என்று இழுத்தான். 


"என்ன எகா இழுக்கற ?" 


"இல்ல நீ ஃபிரேம் போடும் போது எனக்கு ஒரு காபி கொடேன்" 


"உனக்கு ஏன் கொடுக்கணும்?" 


"நான் அவளை லவ் பண்றேன்... என் லவ்வர் போட்டோ என் கிட்ட இருக்க கூடாதா?" என்றவனை கேவலகமாக பார்த்தவள், 


"முதல்ல அவங்க கிட்ட லவ் சொல்லு, அவங்க உன் லவ் அக்ஸப்ட் பண்ணி உன்னை லவ்வரா ஏத்துக்கிட்டதும் நான் உங்க ரெண்டு பேருக்கும் பிரசண்ட் பண்றேன்"


"ஏன்டி?"


"இல்ல நீ பாட்டுக்கு போட்டோ ஃபிரேம் வாங்கி உன் ரூம்ல வச்சிருப்ப ! நாளைக்கு உன் ஒயிப் வந்து இது யாருனு கேட்டு உன்கிட்ட வந்து சண்டை போட்டு உன் லைஃப்ல தானடா டேமேஜ் ஆகும்?"


"அடிப்பாவி அப்போ அவ எனக்கு கிடைக்க மாட்டானு சொல்ல வர்றீயா?" 


"இல்ல... மேபீ ! ஏன்னா அந்த சைத்தான பார்க்க  கொஞ்சம் டவுடா இருக்கு? எதற்கும் ஒரு முறை இரண்டு முறை யோசித்துகோ  எகா ! அப்புறம்  தாடி தண்ணீனு சுத்திட்டு இருக்காத " என்று அறிவுரை  சொல்லிவிட்டு நகன்றாள். அவனோ யோசனையுடன் அங்கே நின்றான். 



இங்கோ சரஸ்வதி படபடவென்று வெடித்துக் கொண்டிருந்தார். சைத்தான் பத்த வைத்த நெருப்பால். " அவன் உன்னை கட்டிக்கப் போறவன்,  அவன் பேச்சை தானே நீ  கேட்கணும். உனக்கு அவன் நல்லது தான சொல்வான். ஏதோ ஒரு பொண்ணு போட்டோ எடுத்துச்சாம் இவளும் அட்ரஸ் கொடுத்துட்டு வந்தாளாம். அவ உன் போட்டோ வச்சி என்ன என்ன பண்ணுவாளோ ! இந்த போட்டோ பிடிக்கற பொண்ணுங்கள பார்த்தாலே கோவம் கோவமா வருது !"என்று வைஷு வை மனதில் எண்ணி தான் சொன்னார். வஸ்தியோ முறைத்து கொண்டிருந்தாள்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2