அல்லி மடல் மேனியிலே






அல்லி மடல் மேனியிலே 

மடல் - 1


"திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்..."


கருணை கடலே கந்தா போற்றி!


கருணைக் கடலை தன் காலடியில் கொண்டு அலையலையாக பாதத்தில் வந்து சேரும் பக்தர்களுக்கு ஆசீயருளும் திருச்செந்தூர் முருகனின் உருவப் புகைப்படத்தின் முன் சூடம் காட்டிக் கொண்டிருந்தாள் தேவா !


பாடலை ஹை பிச்சில் ஒலிக்க விட்டு செய்யும் தொழிலே தெய்வம் , தொழில் செய்யும் இடமே கோவில்...


என்பதற்கேற்ப தங்களது (டாட்டூ ஷாபை)பச்சைக் குத்தும் கடையை தற்போதைய கோவிலாக்கி கொண்டிருந்தாள் தேவா !


புகை மண்டலத்திற்குள் அமர்ந்திருந்தாள் திகழ் பாரதி.


கடை முழுதும் குமஞ்சம் காட்டி விட்டு முருகன் காலுக்கடியில் வைத்தவள், கை கூப்பி வேண்டும் தேவாவை கண்டு அசட்டைச் சிரிப்புடன் நின்றிருந்தாள் திகழ்.


'தினமும் அதே முருகனை அதே முறையில் வணங்கி கொண்டு தான் இருக்கிறாள்.


தினமும் அதே கோரிக்கை ; தினமும் அதே நிராகரிப்பு ! ஆனாலும் அவளும் விடுவதாக இல்லை. முருகனும் இறங்குவதாகத் தெரியவில்லை.


சோதனை படலம் மட்டும் தினமும் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றென்னவோ ?!' என எண்ணிக் வேலைகளை கவனித்தாள்.


தேவாவும் முருகனின் படத்தை பார்த்து பெருமூச்சை இழுத்து விட்டபடி அவளுடன் இணைந்தாள்.


இருவரும் வேலை பார்க்கும் சமயத்தில் அவர்களது கடையின் அலைபேசி அலறியது. தேவா தான் எடுத்து பேசினாள்.


"ஹலோ 'ஶ்ரீ தி'டாட்டூ ஷாப் ! சொல்லுங்க என்ன வேணும்?"


அடுத்த பக்கம் ஏதோ சொல்ல "ஹலோ ! எங்க கடையில டாட்டூ போட்டா நாங்க தான் போட்டோம் சொல்வோம் ! நீங்க வேறெங்கயோ டாட்டூ போட்டு இங்க தான் போட்டோம் சொல்ல சொல்றீங்க? நாங்க ஏன் அப்படி சொல்லணும்?"


மீண்டும் அந்தப் பக்கம் பேச,


"ஹேய் என்ன மா நீ? உன் லவ்வர நம்ப வைக்க நாங்க எதுக்கு பொய் சொல்லணும் ?"


பதிலுக்கு அந்தப் பக்கம் வேகமாக எதையோ சொல்லி விட்டு வைக்க, "ஹலோ ஹலோ !"என்று இவள் மட்டும் கத்தினாள். அந்தப் பக்கம் பதில் இல்லை .


ரிசிவரை கவுத்தி வைத்து விட்டு தலையில் கை வைத்து நின்று முருகனை திரும்பி பார்த்தாள். திகழுக்கு அப்படி ஒரு சிரிப்பு.


"இன்னைக்கி உன் லார்ட் முருகன் சிறப்பான சம்பவத்தை செய்ய இருக்கார் போல ! "என்றவளை இவள் வெறிக்க,


மீண்டும் திகழ் அவளிடம் "நீயும் கடைக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுனு சாம்பிராணி, ஊது பத்தி, சூடம், பாட்டுனு எல்லாத்தையும் போடத்தான் செய்ற ! ஆனாலும் அதெல்லாம் வேலைக்கே ஆவுறதே இல்ல! கந்தன் கருணையே இல்லாம பிரச்சனைய அனுப்பறான். நீயும் இளிச்சிட்டு அவன் முன்ன நிக்கற ! எங்க போய் முடிய போகுதோ இதெல்லாம்... சொல்லு இன்னைக்கி என்ன பிரச்சனை?"


தேவாவும் பெரிதாக மூச்சை இழுத்து விட்ட படி,"யாரோ சுருதியாம், அவ பாய் ஃப்ரெண்ட் ஊர்ல இல்லாத நேரம் பார்த்து வேற டாட்டூ ஷாப்ல டாட்டூ போட்டு கிட்டாளாம். போட்டது ஒரு மேல் டாட்டூ ஆர்டிஸ்ட்டாம். அதை அவன் கிட்ட மறச்சி ஃபீமேல் ஆர்டிஸ்ட்ட, அதுவும் நம்ம கிட்ட போட்டதா நம்ம கடை பெயர் கூகுள்ல பார்த்து சொல்லி இருக்கா ! அவனும் நம்பாம நம்மட்ட விசாரிக்க வர்றானாம்.


வர்றவன்ட, ஆமா எங்க கடையில தான் இந்த மேடம் போட்டாங்க நான் சொல்லனுமாம்


பிரச்சனை எது வழியாலாம் வருது பார்த்தியா நமக்கு !"என தலையில் அடித்துக் கொண்டாள்.


"என்ன நினைச்சிட்டு இருக்கா அவ? எதுக்கு இப்படி போய் சொல்லி அவ காதல காப்பாத்தணும்? நம்பிக்கை இல்லாதவன காதலிச்சு வாழ்க்கை முழுக்க அவ கடைக் கடையா ஏறி அவள நிருபீக்கணுமா? எதுக்கு இந்த காதல் கருவாடு எல்லாம் ச்ச ! இவனுங்க காதல் பண்றதெலாம் பாத்தா எனக்கு பத்திட்டு வருதுடி இணைக்கி வரட்டும் ரெண்டு பேரையும் ஒரு வழி பண்ணிட்றேன் "எனப் பொங்கினாள் திகழ்.


"ஏ திகழு ! எதுக்கு இப்போ நீ கொதிச்ச பாலாட்டம் பொங்குற?! இதெல்லாம் சப்ப மேட்டர்டி ! அதுவும் நமக்கு இதெல்லாம் என்டர்டெயின்மெண்ட் ! என்ஜாய் பண்ணனுமே தவிர பொங்கி பொலம்பக் கூடாது ! இன்னைக்கி நடக்கப் போற கூத்தை மட்டும் பாரு !"என்றாள் தேவா !


திகழோ 'என்ன பண்ண போறா இவ? ' என கிரகிக்க முடியாமல் திணறிய படி அவளை பார்த்தாள்.


தேவாவோ உதட்டை குவித்து பாடல் ஒன்றை சீழ்க்கை செய்து கொண்டே வேலையைத் தொடர்ந்தாள்.


***


அலைபேசியில் பேசிய சுருதியும் அவளது காதலன் வருணும் கடைக்குள் நுழைந்தனர்.


"எஸ் சொல்லுங்க என்ன வேணும்?"என்றாள் தேவா.


"நான் சுருதி "என்று அவள் பெயரை அழுத்தி சொன்னவள் கண்ணை பெரிதாக விரித்து பக்கத்தில் நின்ற காதலனை காட்டி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.


"ரெண்டு நாள் முன்ன வந்து இங்க டாட்டூ போட்டு போனேன்ல நியாபகம் இருக்கா !"என்றாள் ஒருவித பதட்டத்துடன்.


"ம் சொல்லுங்க ! போட்ட டாட்டூல


எதுவும் பிரச்சனையா ?"என்றாள் தேவா சாதரணமாக‌, திகழோ அவளது நடிப்பை மூரலுடன் பார்த்திருந்தாள்.


"டாட்டூல எந்த இஸ்சூஸ் இல்ல.
! இது என் லவ்வர் ! நான் இங்க தான் வந்து டாட்டூ போட்டேனான்ற சந்தேகம் இவனுக்கு. அதை கிளியர் பண்ண தான் இங்க வந்தோம் !"என்று விளக்கினாள் சுருதி.


"ஓ ...!"என்றாள் இருவரையும் தன் சாம்பல் நிற கண்களால் ஸ்கேன் செய்த படி.


"நீங்க தான் இவளுக்கு டாட்டூ போட்டீங்களா?"


"ம் "என்றாள்.


"வீடியோ எதுவும் எடுக்கலையே?"


"வீடியோவா? எதுக்கு எடுக்கணும்?"என புரியாமல் கேட்டாள்.


"உங்க இஸ்டா பேஜ்ல , யூ டியூப்ல் போஸ்ட் போட எடுத்தீங்களா கேட்டேன்?"


"டாட்டூவ மட்டும் எடுத்து போடுறது வழக்கம். ஆனா ப்ரைவேட் பார்ட்ல போடும் போது எடுக்க மாட்டோம். முக்கியமா லேடீஸ் ஹாண்ட்ஸ் தவிர, வேற எந்த பார்ட்ஸையும் நாங்க வீடியோ , போட்டோ ரெண்டும் எடுக்க மாட்டோம்... கஸ்டமர்ஸ் பெர்மிஷன் இல்லாம எதுவும் போஸ்ட் போட மாட்டோம்"


அவனோ திரும்பி "நீ வீடியோ எடுக்க பெர்மிஷன் கொடுக்கலை தான?"எனக் கேட்டான். அவளோ தேவாவை ஒருதரம் பார்த்து விட்டு "கொடுக்கலை "என்றாள்.


"ம்... இது ஃபீமேல் ஆர்டிஸ்ட் ஷாப் தானே ! இல்ல மேல் ஆர்ட்டிஸ்ட்டும் வொர்க் பண்றாங்களா? "மேலும் சந்தேகத்தை கேட்க, தேவாவிற்கும் திகழுக்கும் அவரவரது பொறுமை குறைய ஆரம்பித்தது.


"இல்ல இங்க நாங்க ரெண்டு பேர் மட்டும் தான். சோ மேல் ஆர்டிஸ்ட் இல்ல ! ஆனா நாங்க ஜென்ஸ்க்கு டாட்டூ போட்டு விடுவோம்..."என்றாள்.


"ஓ... "என்றவன் யோசனையாக காதலியிடம் திரும்பி "நீ போட்றப்ப ஜென்ஸ் கஸ்டமர் யாரும் வந்திருந்தாங்களா?"என அவளிடம் கேட்க,


' கொப்பமவனே ! விட்டா இந்த நீடில் , இன்க் எல்லாம் யாரு செஞ்சது கேட்பான் போல ! இவன் ஒரு ஆளு இவனுக்கு காதலும் காதலியும் ஒரு கேடு! எனக்கு மட்டும் இவன் லவ்வாரா இருந்தா ! நான் தான் பிரேக்கிங் நியூஸால இருந்திருப்பேன். சந்தேகம் கொண்ட காதலனை சாகடித்த காதலினு ! இவன போய் காதலிக்கற இவளை சொல்லணும் !' என தேவ உள்ளுக்குள் பொருமி தள்ளினாள்.


அவளும் "இல்லை"என்று தலை ஆட்ட, இன்னும் அவன் நம்பாமல் கடையை விழிகளால் சோதனை போட்டான்.


"என்ன சார் ? சிசிடிவி கேமரா பதிவு ஆகிருக்குமே ! அதை யாரு மேல்ஆ? இல்ல ஃபீமேல்ஆ? யாரு மெயின்டெயின் பண்றாங்க? அடுத்த கேள்வி கேட்க போறீங்களா?"என அவன் பார்வையை கணித்து கேட்க, அவன் விழிகள் ஆச்சரியத்தை கண்டு அதை தான் கேட்க போகிறான் என்று உறுதி படுத்திக் கொண்டாள் தேவா


"எப்பிடிங்க? அதை தான் கேட்க வந்தேன் நான் ! நீங்க பிரில்லியன்ட்ங்க !"என்று புகழ, அவளோ மனதில் ' பின்ன உன்னை போல ஆள ! நான் என்ன புதுசாவா பாக்கிறேன் ' என எண்ணிக் கொண்டாள்.


"இன்னும் எதுவும் கேட்கணுமா?"என்றாள் குரலை சற்று உயர்த்தி! "இல்ல மேம் ! இனி நோ கொஸ்டீன் ! எனக்கு இவ சேஃப் ரொம்ப முக்கியம் அதுக்காக அவ டாட்டூ போட்ட ஷாப்ப செக் பண்ண வந்தேன். நாங்க கிளம்புறோம்..."என கூறிவிட்டு இருவரும் கிளம்ப இருந்த வேளையில் இடைப்பட்டாள் தேவா !


"எனக்கு ஒரு டவுட் கேட்கலாமா?"


"ம் கேளுங்க !"


"இல்ல நீங்க அவங்க சேஃப்க்காக கேட்டீங்களா ? இல்ல அவங்க மேல இருக்க பொஸ்ஸஸிவ்ல கேட்டீங்களா?"


"ரெண்டும் தான் ! எனக்கு என் லவ்வரோட சேஃப்டி முக்கியம். அட் தி செம் டைம் அவள ஒரு ஜென்ஸ் தொட்றது எனக்கு சுத்தமா பிடிக்காது எனக்கு அவ மேல பொஸ்ஸஸிவ் அதிகம் இருக்கு "என்றான்.


அவன் பக்கத்தில் நின்ற காதலியோ அவனை பெருமை பொங்க பார்த்து விட்டு "எனக்கு இவன் கிட்ட பிடிச்சதே இந்த பொஸ்ஸஸிவ் தான்"என்றாள் வெட்கம் கொண்டு.


இருவரையும் சகிக்க முடியாமல் பார்த்து வைத்தனர் திகழும் தேவாவும்.


"ஓ... அப்போ இதே போல நீங்க ஒரு டிரேஸ் கடைக்கோ ! இல்ல ஷூ கடைக்கோ ! இல்ல ஹோட்டலுக்கோ இவரு இல்லாம போனா ! மறுநாள் இதே போல நீங்க போன கடைக்கு உங்களை அழைச்சிட்டு போய் அங்க இருக்கவங்க கிட்ட கேள்வி கேட்டா அதையும் நீங்க பொஸ்ஸஸிவா எடுத்துப்பீங்களா?


செருப்பு கடையில செருப்பு விக்கிறவன் உன் கால்ல பிடிச்சானா? ட்ரெஸ் கடைசியில் உன் ஷேப் பார்த்து சைஸ் சொன்னது ஆணா ? பெண்ணா?


நீ சாப்பிட்டதை சமைச்சது ஆணா? இல்ல பெண்ணா? இதெல்லாம் கேட்டா அப்பவும் பொஸ்ஸஸிவ் காய்னு  நீங்க இவரை பார்த்து பெருமைப் படுவீங்களா?"என்று கேட்டதும் சுருதியின் முகம் மாறிப் போனது.


"ஹலோ என்ன பேசுறீங்க நீங்க?"என எகிறிக் கொண்டு வந்தான் வருண்.


"ஹலோ உண்மைய சொன்னேன்"என்று அவனிடம் பதில் தந்து விட்டு


சுருதியிடம் "இல்ல இப்படி அவங்க சொன்ன எதையும் நம்பாம, சந்தேகப்பட்டு கடையேறி வந்து கேட்கிறது உங்களுக்கு பொஸ்ஸஸிவ்வா தெரிஞ்சா, உங்களை போல கேனை இங்க யாருமே இல்ல சுருதி !


இவருக்கு உங்களை நிரூபிக்க கண்டிப்பா நீங்க கடை கடையா ஏறி தான் ஆகனும். காதல்ல முக்கியம் நம்பிக்கை அது அவர்ட்ட இல்ல ! சந்தேகபட்றதுக்கு நீங்க வச்ச பெயர் பொஸ்ஸஸிவ்ல ! இவர்ட்ட உங்களை நிரூபிச்சட்டே இருக்க வேண்டியது தான் காலம் முழுக்க ! அப்போ எப்போ காதலிப்பீங்க?"என சுருதியை பார்த்து கேட்டாள்.


அவளுக்கு அழுகையும் கோபமும் ஒரு சேர வந்தது. "உங்களுக்கும் தான் வருண் இப்பிடி நீங்க சந்தேகப்பட்டு கடை கடையா ஏறினா எப்போ தான் வாழ்வீங்க? சந்தேகம்ன்ற கரப்பான் உள்ள வந்திட்டா வாழ்க்கைய ஒன்னுமில்லாம அழிச்சிடும் ! பொஸ்ஸஸிவ்ன்ற பெயர்ல சந்தேகப்படுறீங்க ! அவங்க உங்களுக்காக தன்னையே நிரூபிக்க போராடனும். நீங்களும் சந்தேகப்பட்டு உங்க நிம்மதி இழந்து இருப்பீங்க ! இது தான் காதலா?"என்று கேட்க. இருவரும் அமைதியாக இருந்தனர்.


தன் தவறை உணர்ந்த வருண் சுருதியிடம் மன்னிப்பு கேட்டான். அவளும் பெருந்தன்மையாக மன்னித்தாள். இருவரும் சிரிப்புடன் கைக்கோர்த்து நின்று தேவாவிற்கு நன்றி சொல்ல, அவளும் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டாள்.


ஆனால் திகழ் பாரதியோ ! நம்ப முடியாமல் தேவாவை பார்த்தாள்.


' காதலர்களை சேர்க்கறது இவ பாணி இல்லையே ! திருந்திட்டாளோ ! ' என யோசித்து கொண்டிருக்கும் போதே அடுத்த டுவிஸ்ட்டை கொடுத்தாள் தேவா !

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2