வரன் - 9

 



காத்தவராயனின் முன் நின்று அழுது  கொண்டிருந்தார் திருமால். அவனோ அந்தக்கடிதத்தைப் படித்து விட்டு அதிர்ந்து நின்றான்.


"என்னடா உன் பொண்ண, கடன அடைக்கச் சொல்லி வேலைக்கு வர சொன்னா, கடிதம் எழுதி வச்சி ஓடிப் போயிருக்கா?" எழுந்த அதிர்வை கோபத்தில் மறைத்து விட்டுக் கேட்டான். 


"எனக்கே தெரியதுங்கயா, அந்தப் புள்ள இப்படி பண்ணும்னு. இதுல உங்களால தான் ஓடி போயிருக்கேன் வேற எழுதி வச்சிட்டுப் போயிருக்காளே அந்தச் சிறுக்கி"என்று மேலும் புலம்பி அவனுக்கு பயத்தை ஏத்த, "என்னடா நீயும் உன் பொண்ணு கூட்டா? கடன அடைக்க வேலைக்கு வானு கூப்டா என்னையே மாட்டிவிட திட்டம் போடுறீங்களோ !" திருமாலை நம்பாமல் கேட்டான் அவன்.


"ஐயா ! நான் உங்க விசுவாசியா. என்னைப் போய் திட்டம் போட்டு மாட்டிவிட நினைக்கறேன் சொல்றீங்களே. உங்களை மாட்டிவிட்டு இந்த ஊர்ல தான் உயிரோட இருந்திட முடியுமா? அந்தக் கழுத ஓடறத்துக்கு முன்ன தெரிஞ்சிருந்தால், கால ஒடச்சி வீட்ல கிடனு சொல்லிருப்பேனுங்க, சத்த அலுப்புல  கொஞ்சம் குடிச்சிப்புட்டு  அசந்துட்டேனுங்க அதான் என்ன நடந்தது தெரியாம போச்சிங்கயா? இப்படி கோட்டிதனமா பண்ணிடுச்சேங்கயா" என்று வாயைப் பொத்தி அழுதார்.


அவரை நம்பாது பார்த்திருந்தவன், தாடையைத் தடவிய படி அவரிடம்"என்ன இத வச்சி போலீஸ் கம்பலைன்ட் எதுவும் கொடுக்க போறீயா டா திரு?" என நக்கலாகக் கேட்டான் காத்தவராயன்.


"எனக்கு என் பொண்ணு கூட வேணாம். ஆனா உங்கள பகைச்சிக்கிட்டு என்னால் இந்த ஊர்ல நிம்மதியா வாழ  முடியாதுங்கயா. உங்கள எதிர்க்கக் கூட ஏது தகுதிங்கயா?" 


"சரி, உனக்கு உன் பொண்ணு உயிரோட வேணுமா? இல்ல போணமா வேணுமா?" என கோபமாகக் கேட்டான். ஒரு கணம் பெத்தவனின் வயிறு கலங்கிப் போனது.


"அந்தக் கழுத எங்களுக்கு வேணாங்கயா? ஆனா ஒத்த பிள்ள, மனசு கேக்கல எங்கயாவது போய் பிச்சை எடுத்திட்டு கூட இருக்கட்டுங்கயா ! அவளை எதுவும் பண்ணிடாதீங்கயா" பெண்ணின் தகப்பனாகப் பதறி துடித்து கெஞ்சிக் கேட்டார். "உன் பொண்ணு ஓடி போனது வேற யார் யாருக்கு தெரியும்?"


"எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தவிர யாருக்கும் தெரியாதுங்கயா" என்றார்


" ம்ம்...  ஊர்ல உன் பொண்ணு எங்கனு யார் கேட்டாலும் வெளியூருக்கு படிக்க போயிருக்குனு சொல்ற, தப்பி தவறி உன் பொண்ணு என்னால தான் ஓடி போயிடுச்சின்ற விஷயம் வெளிய  தெரிஞ்சது ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி கொழுத்திடுவேன் ஜாக்கிறத!"என மிரட்டியவன் கடிதத்தைக் கசக்கி  கிழித்து எறிந்தான்.


வீட்டுக்கு வந்த திருமால் மனைவிடம் நடந்ததைச் சொல்ல, "நல்ல வேளங்க நம்ம பொண்ணு விஷயத்தை அந்தாளு பெருசா எடுத்துக்கல ! இல்லன நம்ம பொண்ணோட சேர்ந்து நம்ம ரெண்டு பேரையும் அழிச்சிருப்பான். அந்தத் தம்பி மட்டும் வரலன்னா,  நம்ம பொண்ணு இந்த ஜென்மத்துக்கு அவன்  வீட்ல வேலக்காரிய கிடந்து கஷ்டப்பட்டு இருப்பா. எப்படியோ நம்ம கூட இல்லேன்னாலும், அவ நல்லா இருந்தால் போதுங்க" மகளின் நலனை கருதி மனதை கல்லாகிக் கொண்டு அவளுக்காக வேண்டிக் கொண்டனர் இருவரும்.


ஆரனை அலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொன்னார் "ஏன் அந்த முட்டாயப் பயனுக்கு இந்த ஊரே பயப்படுதுனு தெரியல. அவன் கிட்ட நீங்க வேலை பார்த்தால், நீங்க அடிமையா அவனுக்கு? அந்த நாய் பண்ணத நினைக்க கோபம் தான் வருது. உங்களுக்காகவும் உங்க பொண்ணுக்காகவும் தான் இந்த விஷயத்தில நான் நேரடியா இறங்கல இல்லேன்னா இங்க நடந்தது வேறயா இருக்கும்"என்றான் பல்லைக் கடித்து பின்னந்தலையை தேய்த்த படி" உங்க பொண்ணு என் பிரண்ட் வீட்ல சேஃப்பா இருக்காள். கவுன்சீலிங் அப்ளைப் பண்ணி, அவளுக்கு காலேஜ் சீட் கிடைக்கற வரைக்கும் அங்கத் தான் இருப்பாள். அவளுக்கு பிடிச்ச காலேஜுக்கு தேர்ந்தெடுத்ததுக்கு அப்புறம் நானே அவளை காலேஜிலே சேர்த்திடுவேன். உங்கப் பொண்ண லாயரா ஆக்க வேண்டியது என்னோட கடமை. உங்களுக்கு எப்போ உங்க பொண்ணு கிட்ட பேசணும்  தோணினாலும் போன் பண்ணி பேசுங்க, ஆனா கொஞ்சம் பார்த்து பேசுங்க"என்று மகளையும் அவளது பாதுகாப்பையும் பற்றிச் சொல்லி அவர்கள் நெஞ்சில் பாலை வார்த்தான் ஆரன்.


"குல சாமி மாதிரி வந்து என் பொண்ண காப்பாத்திட்டீங்க தம்பி. எங்க எங்கள போல அவளும் அந்தக் காத்தவராயனுக்கு அடிமையா  வாழ்ந்திடுவளோ உள்ளுக்குள் புலங்கிட்டே இருந்தேன். நீங்க வந்து அப்படி எதுவும் நடக்காது படி பண்ணிட்டீங்க. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பாத்தாது தம்பி " என்றழுதார்.


"அழாதீங்கயா, நான் உங்களுக்கு ஒரு மகன் இருந்து செய்றத தான்   செஞ்சிருக்கேன். அப்படி தான் என்னையும் நீங்க நினைக்கணும். அப்றம் தைரியமா இருங்க, கொஞ்சம் ஜாக்கிறதையாவும் இருங்க. நான் வைக்கிறேன்" என்று போனை வைத்தான்.


உமாவின் நிலையைக் கேட்டப்பின் அவளுக்கு உதவிச் செய்ய நினைத்தவன் தன் தோழியை அழைத்து விஷயத்தை சொல்ல, அவளும் உதவுவதாகக் கூறினாள். அவளை இங்கே வரவழைத்து இரவோடு இரவாக உமாவை இரண்டு காகிதங்களில் அவள் கைப்பட  ஓடிப்போவது போல கடிதம் எழுதி கையெழுத்தை வாங்கி விட்டுத் தான் அவளுடன் அனுப்பி வைத்தான்.  நேரடியாக களத்தில் இறங்காமல்  திருமாலுக்கும் உமாவிற்கும் பிரச்சினை வராது கவனமாக இருந்தவன், அடுத்ததாக காத்தவராயனை கண்காணிக்க ஆரம்பித்தான்.


தேவகியின் கைப்பக்குவத்தில் மதிய  உணவை வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தார் குணசேகரன். உடனிருந்து பரிமாறி கொண்டிருந்தார் தேவகி. "தேவா ! நானும் சம்மந்தியும்  மண்டபம்,  மாலை , சாப்பாடுனு எல்லாத்துக்கு சொல்லிட்டு வந்துட்டோம். அடுத்து நிச்சயத்துக்கு யார் யார கூப்பிடனும் நீயும் பிரதியும் சேர்ந்து ஒரு லிஸ்ட்  போட்டு வைங்க அவங்களுக்கு போன்ல சொல்லிடலாம். சம்மந்தி வீட்டுக்கும் முக்கியமானவங்களுக்கு மட்டும் நேர்ல போய் சொல்லிடுவோம். வெள்ளிக்கிழமை நல்ல நாள்  அன்னைக்கிப் பொண்ணுக்கும் பையனுக்கும் துணி எடுத்திடலாம்.  உன் புள்ளைக்கிப் போன போட்டு என்ன ட்ரெஸ் என்ன கலர்ல வேணும் கேட்டு வை?  "என்று  நிச்சய வேலைகளில் செய்ததையும் அடுத்தடுத்து செய்யப் போவதையும் சொல்லி வேலையும் கொடுத்தார் குணசேகரன் "வேற எதுவும் விட்ருந்தா சொல்லு தேவா?" என தேவகியை பார்த்து கேட்டு விட்டு உண்டார். அவரும் யோசிக்க, சாப்பிட்டு முடித்தவர் தேவகியிடம், "பொறுமையா யோசித்து சொல்லு தேவா. அப்றம் வெள்ளி கிழமை போறோம் ரெடியா இருங்க" என்று சொல்லிவிட்டுப் போக, தேவகி, பிரதியிடம்

"பிரதி,  உன் புருசன்  கிட்ட  வெள்ளிக்கிழமை ட்ரெஸ் எடுக்க போறோம் சொல்லி, துணைக்கு வர சொல்லு. ஆரன வர சொல்ல முடியாது இவன் வந்தா கொஞ்சம் உதவியா இருக்கும் மா"என்றாள்.

"சரிங்க அத்த, நான் அவர் கிட்ட சொல்லிடுறேன்" என்றாள்.


கூடத்தில் அமர்ந்திருந்த கங்காதரனும் ஸ்ரீதரனும் நிச்சயத்திற்கு அழைக்க வேண்டிய சொந்தங்களை பட்டியல் போட்டுக் கொண்டிருந்தனர்.  


"தம்பி, ஒரு ஐம்பது பேருக்கு சொன்னால் போதும்.நீ பாதி பேருக்கு சொல்லிடு நான் பாதி பேருக்கு சொல்லிடுறேன். மோகனாக்கு நானும் தனாவும் போய்  சொல்லிடுறோம். முறையா சொல்றது தான் நல்லது. வெள்ளிக்கிழமை எந்த வேலையும் வச்சிக்க வேணாம். நீ , நான், தனா , கனகா, மோகனா,  மச்சான் மட்டும் போய் சம்மந்தி வீட்டோட சேர்ந்து துணி எடுத்திட்டு வந்திடுவோம்.

வேற எதுவும் இருக்கா?" என இருவரும் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தனர். 


"ஏன் மா, இந்தக் ஹிட்லர் அண்ட் கோ மட்டுமே டிஸ்க்ஸ் பண்ண இதென்ன, ஆஃபீஸ் மீட்டுங்கா? உன் பொண்ணுக்கு நடக்கப் போற நிச்சயதார்த்தம், உன்கிட்ட கூட கேட்காம அவங்க மட்டும் பேசிக்கிறாங்களே, நீ என்னா ஏதுனு கேட்க மாட்டீயா ?" நேகா தனாவை உசிப்பேத்தினாள்.


"ஆமா,  அப்படியே என் பேச்சை கேட்டுட்டாலும். அந்த மனுஷன் வாய தொறந்து பதில் பேசி, வாம்மா வந்து உட்காரும்மா, சொல்லுமாங்குவார் போடி  இவளே. என்னமோ அவர் மட்டுமே பெத்தது மாதிரி எல்லாம் வேலையும் செய்றார். என் பங்கு இல்லாமையா இவ பொறந்தா? "எனச் சலித்துக் கொண்டார். நேகா பற்ற வைத்த நெருப்பு பற்றிக் கொள்ள, நேகா , மேகா இருவரும் சிரித்துக் கொண்டனர். 


"தனா, ஃபயரோட, போய் எரிமலையா பொங்கிட்டு வா போ !" என நேத்திரன் அவரை அனுப்பி வைக்க "இந்தா போறேன். என்னை விட்டுட்டு எப்படி நீங்க பேசலாம்னு கேக்குறேன் " என்று கிளம்பியவரை தடுத்தாள் கனகா.


"அக்கா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இதுங்க சொல்லுதுங்கனு மாமா முன்னாடி நின்னு கேள்வி கேட்க போறீயா? வேணாம் போகாதக்கா திட்டு வாங்கிட்டு தான் வருவ. சொன்னா கேளு!" என்றதும் அவருக்கு பயம் தொற்றிக் கொள்ள, பயந்து போய் உட்கார்ந்து கொண்டார்.  மூவரும் கனகாவை முறைத்தனர், " இல்ல நாங்க தான் சின்ன பசங்க, நீங்க பெரியவங்க தான் போய் பேசுறதுல என்ன இருக்கு? " நேகா கோபமாக கேட்டாள்.


"அடியேய் நீ எங்கள உசுப்பேத்தி, அவங்க முன்னாடி பேச வச்சி, எங்களை இந்த வீட்டை விட்டு வெளிய போக வைக்கறது தான உன் பிளானு. அக்கா இவ சொல்றானு எதையும் செஞ்சித் தொலைக்காதக்கா, நஷ்டம் நமக்கு தான். போக தாய் வீடு கூட இல்ல நமக்கு பார்த்துக்க" என்று எச்சரிக்கை  செய்தவரைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.


"நீங்க தேற மாட்டிங்க. கடைசி வரை அடுப்படியே கதினு கிடங்க. எங்களுக்கு என்ன வந்துச்சாம்?" அசட்டை செய்தவள்,"அத விடுங்க இப்போ முடிவா என்ன சொல்றீங்க ட்ரெஸ் எடுக்க எங்களை கூட்டிட்டு போவீங்களா? மாட்டீங்களா? பதில் சொல்லுங்க"  முடிவாகக் கேட்டாள் நேகா. 


"ஏன்டி உங்க பெரியப்பா உங்களை கூட்டிட்டு போவாருன்ற நம்பிக்கை வேற இருக்காடி உனக்கு? அவர் சொன்னது காதுல விழல? உங்களை எல்லாம் கூட்டிட்டுப் போக மாட்டார். முக்கியமா உங்க ரெண்டு பேரைக்கும் அந்த வாய்ப்பே இல்ல..." என்றார்.


"அப்போ என்னைய?" 


"உன்னைய வேணா கூப்டுவார் டா" என்றாள் கனகா"அப்படியா அப்பா என்னையும் கூட்டிட்டு போவாரா?" ஆவலோடு கேட்டான்.


"பின்ன ட்ரெஸ்ஸூ பையை எல்லாம் யார் தூக்கிட்டு வரப்போரது நீ தான" என்றிட, நேகா சத்தமாகவே சிரித்தாள். 


இதை எல்லாம் கருத்தில் கொள்ளாத மேகா, அப்பாவிடம் இருந்து அனுமதி கிடைக்காது  என்று முடிவாக தெரிய, முக வாட்டத்துடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினாள். நேகாவும் அவள் பின்னால் சென்றாள்."என்னாச்சி மேகா, ஏன் ஒரு மாதிரியா இருக்க?" 


"இல்லடி அவர் நீ ட்ரெஸ் எடுக்க வந்தே ஆகனுங்கறார். அப்பா நான் வரக்கூடாதுங்கறார். நான் என்ன தான்டி பண்ண?அப்பா சொல்றதுக்கு எல்லாம் ஆபோசோட் அவர் நடந்துக்கறார். என்னையும் அப்பாவை மீறி செய்யச் சொல்றார். நான் அப்பா பேச்ச கேட்கறதா? இல்ல இவர் பேச்ச கேக்கறதா? அப்பாவ நினைச்சா எனக்கு ஒருபக்கம் பயமா இருக்குடி. என்னை அவர் எப்படி எல்லாம் நினைச்சிட்டு  இருக்கார். அதெல்லாம் பொய்னு வரும் போது எப்படி ஃபீல் பண்ணுவார்? நினைச்சாலே திக்  திக்ங்குது நேகா "தன்னிலையை விளக்கினாள்.


"ம்ம்ம்.. உன் நிலமை எனக்கு புரியுதுடி, கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே புருஷனா? தகப்பனான்ற ? கேள்விக்கு வந்து நின்னுட்ட,  உன்னை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு ! ஆனா சொல்லு, இதுல யார் சொல்றது உனக்கு பிடிச்சிருக்கு? யார் கிட்ட ஃபீரிய இருக்கிறது போல இருக்கு?" நேகா கேட்கவும், 


"பட்டென்று " அவர் கூட இருக்கும் போது தான் ஃப்ரீயா இருக்கிறது போல இருக்கு, ரொம்ப பிடிச்சிருக்குடி" என்றாள்.


"அவரும் உனக்கு பிடிச்சதை தான செய்ய சொல்றார். உன்னை பிடிக்காதத கம்பெல் பண்ணலையே ! ஸோ நீ மாமா பேச்சையே கேளு"என்றாள் ஆதரவாக,


"அப்போ அப்பா? என்னை தப்பால நினைப்பார்"


"இல்ல நான் கேக்குறேன், அவரா உன்னை பத்தி நல்ல விதமா நினைச்சிட்டு, நீயும் அப்படியே இருக்கணும்ன்னா நீ என்ன ரோபோவா? மனுஷிடி. கல்யாணம் ஒரு முறை தான் நீ பண்ண போற, அதுல இருக்கற சின்னச் சின்ன ஹாப்பினஸ் அனுபவிக்க வேண்டாமா நீ? இப்படி வீட்லே கிடந்து அதைக் கற்பனை மட்டுமே பண்ணிட்டு இருக்கப் போறீயா?" காட்டமாகவே கேட்டாள் நேகா.


"இப்போ என்னை என்ன தான் பண்ண சொல்ற? "


"நீயும் ட்ரெஸ் எடுக்கப் போனு சொல்றேன்" 


"எப்படிடி அப்பாவை எதிர்த்து போகச் சொல்ற? அவர் தான் ஈஸியா ' நீயும் வரனு சொல்லிட்டார்' எப்படிடி என்னால அப்பாவை மீறி போக முடியும்?"


"நீ வா னு கூப்பிட்டவருக்கு எப்படி உன்னை வர வைக்கணும் தெரியாதா? கண்டிப்பா மாமஸ் ஏதாவது பண்ணுவார். பெரியப்பாவே உன்னை ட்ரெஸ் எடுக்கக் கூப்பிடுவார்.  நீ வேணா பார் கண்டிப்பா மை மாம்ஸ் ஏதாவது செய்வார்" என்று சரியாக  கணித்து, அடித்துச் சொன்னாள்.


அவள் சொன்னது போல ஆரன் தாயிடம் "ஒழுங்கா, பொண்ணு வீட்ல பேசி மேகாவையும் ட்ரெஸ் எடுக்கக் கூட்டிட்டு வர சொல்ற. இல்ல நானும் அவளுமா சேர்ந்து தனியா போய் ட்ரெஸ் எடுப்போம்? என் புருஷன் ஒத்துக்க மாட்டார், அது இதுனு சொல்லி நீ என்னை சமாளிக்கலாம்னு நினைக்காம, களத்தில இறங்கி வேலைய முடிக்கற தேவகி. மேகா ட்ரெஸ் எடுக்க வந்திருக்கணும். இல்ல இந்த ஆரன் சொன்னத செய்வான் சம்ஜே !" என்று தாயைக் கதிகலங்க வைத்தான் அவரது தவப்புதல்வன்.

Comments

  1. Ha ha . Aaran you are so sweet

    ReplyDelete
    Replies
    1. சித்ரா ஹரிதாஸ்September 7, 2024 at 7:33 AM

      நன்றி மா

      Delete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2