வரன் - 24

 




அன்று காபி' சாப்பில் கோபமாகப் பேசியத்தோடு சரி  இரண்டு நாளானது அவனும் அழைக்கவில்லை, அவள் அடித்தும் எடுக்கவில்லை எதையோ இழந்த உணர்வு தான் அவளுக்குள்.


என்ன தான் காதலனே ஆனாலும் பெண்ணாய் சில விஷயங்களை அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி. தனியாக  ஒரு ஆணுடன் தங்க முழுதாய் அவள் மனம் பக்குவ படவில்லை. அவன் மேல் நம்பிக்கை  இருந்தாலும் பெண்ணாய் அவள் பக்கம் கொஞ்சம் யோசித்து தான் பேசினாள். ஆனால் அதுவோ அவர்களது காதலுக்கான அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்தது. எதையோ இழந்தது போலச் சுற்றித் திருகிறாள் பெண்ணவள், நெஞ்சில் எதையோ வைத்து அழுத்தியது போல பாரமாக இருந்தது. போனையே வெறித்தாள். 'அவன் அழைப்பான்' என்று காத்துக் கொண்டிருக்கிறாள்.


அவனுக்கோ'தன்னை இன்னும் நம்பாமல் இருக்கிறாள்' என்ற ஆதங்கம். அவன் பெண்ணிடத்தில் இருந்து  யோசிக்கவில்லை ஆணாய் யோசித்தான். கண்மூடித்தனமாக காதலிக்கிறோம், அதன் விளைவு தான் இது. அவள் அருகே இருக்க வேண்டும் என்று மனம் தவிக்கிறது அவள் அருகாமை வேண்டும் என்று துடிக்கிறது. ஆனால் அந்த துடிப்பு ஐம்பது சதவீதம் கூட அவளுக்கு இல்லை என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது . என்னை இன்னமும் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையாகத் தான் பார்கிறாள் காதலனாக, புருஷனாக பார்க்கவில்லை என்ற வலி அவனுக்கு. பல பல சிந்தனைகளுக்கு மத்தியில் அவன் பிரச்சனையை பேசி தீர்க்காது உள்ளுக்குள்ளே போட்டுப் புலம்பினான்.

அவன் இறங்கி வருவதாக தெரியவில்லை... இவளும் அவனுக்கு அடித்துப் பார்த்து சோர்ந்து போய் அழுத படி அமர்ந்து விட்டாள்.


"மேகா" என அவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் நேகா. அவளருகே அமர்ந்தவள், " என்னாச்சி மாம்ஸ் போன் எடுக்கலையா?"எனக் கேட்கவும்" இல்லை" என்று தலையை ஆட்டியவளுக்கு கண்ணீர் கொட்ட, " மேகா" என அவளை அணைத்துக் கொண்டாள்.


"நான் என்னடி அப்படி தப்பா சொல்லிட்டேன். நாம நாலும் யோசிக்கிறது தப்பா? காதலிக்கறனால அப்படியே கண்மூடித்தனமா  நம்பணுமா? கூப்பிட்டதும் போயிடணுமா? பெண்களா  நாம சிந்திக்கக் கூடாதா? காதல்னு சொல்லி எத்தனை பெண்களோட வாழ்க்கை அழிந்து போயிருக்கு, அதுவும் காதலனை நம்பிப் போன பெண்கள் அதில் அதிகம். அவரை நம்பலனு நான் சொல்லல, ஆனால் அதுக்காகக்  கேட்டு தெளிவு பெறதுல தப்பு இல்லையே ! எதுலையும் மாட்டிக்காதனு உள் மனம் சொல்லும் போது நானும் என்ன செய்ய? இந்தக் காலத்துல முக்கியமா நம்ப வேண்டியவங்களே ஏமாத்ததான் செய்றாங்க. அதுல புருஷன் , காதலன், அப்பானு இவங்க யாரும் விதி விலக்கு இல்ல. ஏன் நானும் கூட அப்பாவ  ஏமாத்திட்டு தான் இருக்கேன் . அதெல்லாம் தெரிஞ்சா என் கூட முகம் குடுத்து கூட பேச மாட்டார். நானும் சராசரி பொண்ணு தான் அவர் காதலிக்கிறேன்றதுக்காக, கண்மூடித்தனமா நம்பணும் எதுவும் இருக்காடி? அவரை நான் நம்பல கோச்சிக்கிறார். ஆனா,  பொண்ணா இருந்து யோசிக்கலேல ! என்னை புரிஞ்சிக்கற புருஷன் கிடைச்சார் சந்தோசபட்டேன். அவரும் நானும் மத்தவங்கள போலனு நிருப்பீக்கார். அன்னைக்கே சொன்னேன், என் மேல் கோபம் இருந்தால் திட்டுங்க, அடிங்க பேசாம இருக்காதீங்க. ஆனா பாரு ரெண்டு நாளா போன் எடுக்கல?" என்னும் போதே குரல் உடைந்து போனது. கண்ணீர் சிந்த, அதைத் துடைத்த நேகா "மேகா ! மாம்ஸ் உன்னை புரிஞ்சு பார். அவர் பக்கம் இருந்து பார்க்கும் போது அவருக்கு' நீ நம்பலன்ற கோபம்'

உன் பக்கம் இருந்து பார்க்கும் போது ' நீ யோசிக்கறதும் தப்பில்ல தான். இதை ரெண்டு பேரும் பேசித்  தீர்க்க வேண்டிய பிரச்சனை மேகா" 


"எங்க அவர் தான் பேச மாட்டிக்கிறாரே !   பிரச்சினை எங்கப் பேசி தீர்க்க?" என சலித்துக் கொண்டாள். " எங்க போயிட போறார்  மாம்ஸ் என்ன கோவிச்சாலும் நீயே கதினு திரும்ப வரப்போறார். அப்ப  நீ வச்சு செய்" என்றதும் அவள் உதட்டில் சிறு மூரல் எட்டிப் பார்த்தது.


"சரி விடு மேகா !  இந்த டூர் போறது தான பிரச்சினை எங்கயும்  போக வேணாம், வீட்லே தூங்கி ரெஸ்ட் எடுப்போம்" என்றதும் அவள் முகம் வாடியது. 


"என்ன மேகா !  ஏன் சோகமாகிட்ட?

"ஸாரிடி  தீனா, உன் கூட இருக்கணும் எவ்வளவு ஆசைப்பட்டான். எல்லாம் என்னால தான?"என்று  மீண்டும் கண்ணீர் வடிக்க, 


"ஹேய் லூசு, அதெல்லாம் இல்ல"அவளை சமாதானம் செய்ய முயன்றாள், "நேகா ! நீ வேணா போயிட்டு வா ! எனக்காக உங்க பிளான் ட்ராப் பண்ண வேணாம்"என்றாள்.


"ஏதே நான் மட்டும் அவன் கூட தனியாகப் போகவா? ம்கூம் மாட்டேன். நீயும் வா போலாம்" என்றாள்.


"ஏன் தீனா கூட போறதுல என்ன இருக்கு?" எனக் கேட்டதுமே அவள்  மனதில்  வேற எண்ணம் ஆனால் இவளுக்காக நடித்தாள்.." இத்தன வருஷம் பழகிட்டு இருக்க, தீனா கூட தனியா போக யோசிக்கும் போது, காதலிச்சி மூணு மாசம் தான் ஆகுது வீட்லே பேசி இருக்காங்க தான். அவர் கூட போக நானும் யோசிப்பேன் தான. எனக்குள்ள எழுந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கிறது அவர் கடமை தான். நம்பிக்கையில்லனு குதிச்சா தகுமா? என் மனசில எழுந்த கேள்விக்கு பதில் அளித்து எனக்கு உண்மை என்னன்னு புரியல வைக்கணும் கோபப்பட்டால் எல்லாம் சரியாகிடுமா?" எனக் கேட்டதும் அலைபேசி வழியே அவள் கேட்ட கேள்வியை கேட்டவனுக்கு தன் தவறு புரிந்தது.


'சராசரி பெண்ணாக யோசித்து  இருக்கிறாள் அதில் தவறில்லையே பெத்த அப்பனே பிள்ளையை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் கலிகாலத்தில் அல்லவா இருக்கிறோம், இதில் கணவன் என்ன?  புருஷன் என்ன? பெண்கள் நிகழும் கொடுமை பெரிது, அதை  எல்லாம் கேட்ட பின்னும், உள்ளே சந்தேகம் எழாமல் இருந்தால் தானே தவறு, தன் சக்கரையின் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கும்  போது கோபத்தில் முறுக்கிக் கொண்டு இருப்பது தவறு' 

என்று புரிய , வாய் மொழியில் உரைப்பதை விட செயலில் காண்பது தான் சாலச் சிறந்தது' என்றெண்ணியவன் அவளை எப்படியாவது வரவழைத்து தன் அவள் கேள்விகளுக்குப் பதிலுரைக்க வேண்டும் முழுமையான

நம்பிக்கை பெற வைக்க வேண்டும்" என்றெண்ணிக் கொண்டான்.


காலை கட் செய்தவன் , அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் அவளை எப்படியாவது அழைத்து வந்து விடு !"என்று அதை படித்து முடிக்க இடையில் தீனாவும் அழைக்க அவனது அழைப்பை எடுக்காமல் அணைத்தாள்.

"ஏன் நேகா கட் பண்ற? எடுத்து பேசு" என்றாள். " இல்ல எடுத்த , வரச் சொல்லி கெஞ்சுவான், அவன் கெஞ்சுறது கஷ்டமா இருக்குது அதான்..." என்றிழுத்தாள் 


"நேகா, பாவம் தீனா ! நீயாவது போய் சந்தோசமா இருடி" எனக் கெஞ்ச, யோசித்தவள், " சரி நான் போறேன் ஆனா நீயும்  வரணும்"


"நான் வரவா? நான் வரல !" 


"ஐயோ மேகா நீ வராம என்னை எப்படி தனியா விடுவாங்க? நீ என் கூட வர்றது போல வா, அங்க வந்து என்னை அவன் கூட விட்டுடு நீ போயிடு. இங்க வந்து உடம்பு சரியில்லனு சொல்லி நான் போகல அவளை அனுப்பி வச்சிட்டேன் சொல்லிக்க ப்ளீஸ்டி" எனக் கெஞ்ச, அவளும் ' சரி 'என ஒத்துக் கொண்டாள் அவளும் அவளை அணைத்து விட்டுத் தன் அறைக்குச் சென்றாள். மேகாவோ ஏக்கமாக அலைப்பேசியை பார்த்தாள். 'பேசி சமாதானம் செய்து அழைத்து போக மாட்டானா ? 'என்றிருந்தது அவளுக்கு.


அறைக்கு வந்தவள், தீனாவை அழைத்து விஷயத்தைச் சொன்னாள், "ஸாரி தயா ! உன் மேலே நம்பிக்கை இல்லாம அப்படி சொல்லல,  உன் மேல முழு நம்பிக்கை இருக்குனு சொன்னால், அவளுக்குள்ள எழுந்த கேள்விகள் எல்லாம் தப்புனு நினைச்சிட்டு அதை மனசுக்குள்ள போட்டு புழுங்குவா ! அதுக்கு மாம்ஸ் கிட்ட கேட்டே  தெளிவு படுத்திக் கட்டும்னு அப்படி சொன்னேன் ஸாரி தயா" என அவனிடம்  உண்மையைச் சொல்லி  மன்னிப்பு கோர, அவள் மேல் கோபம் எழவில்லை மாறாக, காதல்  தன் பெருகியது.


"அப்போ என்னை நீ முழுசா நம்பறீயா நேகா!" எனவும்"ம்ம்"  என்றாள். "நான் ஏமாத்திட்டா?"


"அதுகெல்லாம் நீ லயிக்கு இல்ல !" என்று சிரிக்க, முதலில் அவனுக்கு கோபம் வந்தாலும் உண்மை என்றதும் பக்கென அவனும் சிரித்து விட்டான். மறுநாள் பள்ளிச் சென்றவர்கள் மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பினார்கள்.இரவு ஒன்பது மணியளவில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதால் சீக்கிரமாகவே அவர்களை விட்டனர்.இரவு ஒன்பது மணி வரையிலும் அவன் அழைத்து பேசுவான் என்று எண்ணியே போனை பார்த்து ஏமாந்து  தான் போனாள்.  ஆனால் அவன் அடிக்கவே இல்லை இருவரும் டூர்க்கு செல்ல வேண்டிய அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினார்கள். தந்தைக்கு தெரிந்த ஆட்டோவில் ஏறினர் இருவரும். அவரும் பள்ளிக்கு  அருகே வர,  நேகா அவரை நிறுத்த சொன்னவள், " இல்லன்னா பிஸ்கட் வாங்கணும். அதுனால வாங்கிட்டு, நாங்க உள்ள போறோம் நீங்க போங்க" என்றதும்' சரி' என்று  அவரும் சென்று விட்டார். இருவரும் பள்ளிக்கு செல்லாமல், இவர்களுக்காக காத்து கொண்டிருக்கும் கார் அருகே சென்றனர்.

தீனா காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நேகாவின் பின்னே சென்றாள் மேகா. காரில் லைட் போடாததால் உள்ளே அமர்ந்திருந்த ஆரன் அவளுக்கு தெரியவில்லை .


தீனாவின் அருகில் வந்தவள், "பார்த்து கூட்டிட்டு போ தீனா, அங்க போனதும் போன் பண்ணுங்க" என்றவளை கண்டு கள்ளத்தனமாகச் சிரித்தான். நேகாவோ டிக்கில் பேக்கை வைத்து விட்டு அவளை கண்டுச் சிரிக்க, "ரெண்டு பேரும் எதுக்கு சிரிக்கிறீங்க?"  எனும் போதே அவளுக்கு சந்தேகம் வர அதற்குள் அது நிகழ்ந்து விட்டது. 


மேகாவின் கையிலிருந்த பேக்கை பிடிங்கி நேகாவிடம் தூக்கிப் போட அவளோ பேக்கை டிக்கில் வைத்தாள். அதை உணரும் முன்னே அவளை முன்சீட்டில்  அமர்த்தி கதவை சாத்திவிட்டு பின் சீட்டில் அமர்ந்து கொண்டான். நேகாவும் அமர கதவு லாக் செய்ய, அவளால கதவை திறக்க முடியவில்லை, சட்டென அவள் திரும்ப ஆரன் தான் டிரைவர்  சீட்டில் அமர்ந்திருந்தான். அவனை விழிவிரித்துப் பார்க்க, அவனோ வெளியே வேடிக்கை பார்த்தான் அதில் எனோ  மனம் வாடிப்போனாள்.பின்னால் திரும்பி "இதெல்லாம் உங்க வேலை தானா? எதுக்கு டா  என்னையும் சேர்ந்து கடத்திட்டுப் போறீங்க ?" என அவள் கத்த, பெரிதாய் சிரித்தனர் இருவரும்.


" எங்க க்ரைம் பாட்டனர் நீ ! நீ இல்லாம நாங்க மட்டும் இந்தக் குற்றத்த செஞ்சு மாட்டிக்கவா, எது பண்ணாலும் சேர்ந்தே பண்ணுவோம் சேர்ந்தே மாட்டுவோம்" என்றவர்களை ஏகத்துக்கும் முறைத்தாள்  மேகா. அவர்களோ அவளது முறைப்பை கண்டு கொள்ளவில்லை. நேகா, தீனாவின் புஜத்தைக் கட்டிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள், அதை ஏக்கமாகப் பார்த்தவள் அருகே இருந்த ஆரனை பார்க்க, அவனோ கார் ஒட்டுவதில் மும்மரமாக இருந்தான்.

அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர, ஜன்னல் புறம் திரும்பி கண்ணீர் விட்ட படி வந்தாள்.  கார் கொடைக்கானலை நோக்கிச் சென்றது.

இரண்டு மணி நேரப் பயணத்தில் மூவரும் உறங்கிவிட இவன் மட்டும் மிக  கவனமாகக் கொண்டை ஊசி வளைவுகளை கவனமாக வளைத்து ஓட்டி தங்க வேண்டிய ஹோட்டல் முன் நிறுத்தினான். அப்போது தான் மூவரும் கண் விழித்தனர்.


காரைப் பார்க்க செய்தவன், உள்ளே ரிசப்ஷனிடம் பேச இரண்டு  ரூம் சாவிகளை அவனிடம் கொடுத்தனர். நால்வருமாக லிப்டில் பயணம் செய்ய மேகாவிற்கு தான் லிப்ட்  என்றால் பயம். எப்பையும் நேகாவின் கையை பிடித்துக் கொள்வாள். இன்று நேகாவும் தீனாவுக்கு தள்ளி நின்று கொள்ள,  பயத்தில் ஆரனின் சட்டையை பிடித்துக் கொண்டு கண்களை மூடி நின்றாள். அவளால் அவள் பயத்தை  உணர முடிந்தது . அணைக்க துடித்தத் கைகளை கட்டுப்படுத்திக்  கொண்டான்.


பின்  அவர்கள் புக் செய்திருந்த அறையும் வர, சாவியை தீனாவிடம் நீட்டினான். "சகல , உங்க ரெண்டு பேருக்கும் இந்த ரூம் என்றதும், நேகா தீனா இலகுவாக இருக்க, மேகா தான் அதிர்ந்து விழித்தாள்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2