வரன் - 15






 பாடலொன்றை விசிலடித்தப்படி கண்ணாடி முன் நின்று தலையை கோதிக் கொண்டிருந்தான், இன்று நடக்க போகும் நிச்சயத்தின் நாயகன் ஆரன். அன்று துணிக்கடையில் தன் சக்கரயை பார்த்தது தான், இன்று தான் பார்க்கப் போகிறான் பேராவலோடு.


அன்று அவள் ஏக்கமாகப் பார்த்து சென்றது மனதை பிசைந்தொரு வலியை பிரசவித்தாலும் தன் முக்கியத்துவத்தை  நிலைநாட்ட, நடத்திய நாடகமல்லவா அந்த மௌன போராட்டம். அவளது பல அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும்  கண்டு மனமகிழ்ந்தவன் வேதனையிலும் துவண்டான். இருந்தும் பிடிவாதம். தனக்கு தானே வேலிகளிட்டு கொண்ட புள் தன்னை ஏக்கமாகப் பார்க்கும்  ஆட்டு குட்டியுடன் உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது.


கார்த்திக்கும் ஜனனியும் புத்தாடை அணிந்து அங்கிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். தீரனும் குணசேகரனும் முன்னதாகவே மண்டபத்திற்கு சென்று விட்டனர்.  ஆரன், தேவகி, பிரதி, அருணா மற்றும் பிரதியின் குடும்பம் தேவகியின் அண்ணன் குடும்பம் என சொந்தங்களால் வீடு நிறைந்திருந்தது. ஹாஸ்டலில் தங்கி படித்த அருணா இன்று தான் வீட்டிற்கு வந்தாள்.


தனது இரண்டாவது அண்ணியை  நேரில் காண போகும் பேராவலில் இல்லம் வந்துள்ளாள். பெண் பார்க்கச் சென்ற அன்றைய நாளில் வர இருந்தவளை தடுத்த குணசேகரன் இன்று தான் அழைத்து வந்தார். மகளின் படிப்பு முக்கியமல்லவா அவருக்கு.


தாம்பூலத்தில் வைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க, தனது பிரோவில் இருந்து, பட்டுச் சேலையையும் மோதிரம் இரண்டையும் எடுத்து வைத்தவர் அச்சேலையை மெல்ல தடவிப் பார்த்தார். அவருக்கோ கணவன் , மகனின் உரையாடலே நியாபகத்திற்கு வந்தது.


"நீயா, முடிவெடுத்து எல்லாத்தையும் செஞ்சா, பெத்தவங்களா நாங்க எதுக்கு இருக்கோம்? மோதிரம் மாத்த போறதா நீயா முடிவெடுத்தா போதுமா? பெரியவங்க எங்க கிட்ட கேட்கக் கூடாதா?  சம்மந்தி வீட்டுக்காரங்க நம்மலை என்ன நினைப்பாங்க? முன்னாடியே என்கிட்ட சொல்றதுக்கென்ன? சம்மந்தி நானும் கலந்து பேசி இருப்போம்ல. நீயா மோதிர மாத்தணும் சொல்ற, நீயா போய் எடுக்கற, பணத்தக் கட்ற, என்னமோ உனக்குனு யாருமில்லாத மாதிரி?  ஏன் அப்பா எனக்கு மோதிர மாத்தணும் ஆசை இருக்குனு நேரடியா சொன்னா வேணானா சொல்லப் போறேன். அங்க வந்து மானத்த வாங்கற !" என மகனிடம் கடிந்தார் அந்தத் தகப்பன்.


" நிச்சயம் எனக்குப்பா ! ஆனா அதை பத்தி ஒரு விஷயம் கூட நீங்க எங்கிட்ட பேசல, என்கிட்ட சொல்லவும் இல்ல... எல்லாத்தையும் நீங்களா தான்  பேசி முடிச்சிருக்கீங்க. உங்க கடமைய சரியா செய்றீங்க, ஆனா  என்கிட்ட கேட்டு எனக்கு பிடிச்சது போல  செய்ய கடமைய மட்டும்  மறந்துட்டீங்க !  தீரா மாதிரி என்னால்  நீங்க செய்ற எல்லாத்துக்கும் தலையாட்ட முடியாதுப்பா ! எனக்கும்  சில ஆசைகள் இருக்கு கேக்குறதுல தப்பில்லையே. 


நான் இந்த வீட்ல இல்ல தான்.  என் வேலைக்காகத் தனியா வீடெடுத்து தங்கிருக்கேன் தான் அதுக்காக, இந்த வீட்டுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லன்னு ஆகிடுமா?  நேர்ல கூப்பிட வேணாம் அட்லீஸ்ட் போன்ல கூப்டு பேசி இருக்கலாமே ப்பா ! நிச்சயம் எனக்குப்பா யாருக்கோனு என்னால இருக்க முடியல.

நீங்க செய்ற கடமையை நான் தடுக்கல, ஆனா என் ஆசைகளை கொஞ்ச சேர்த்து கிட்டேன் இது தப்பாப்பா ?" அவனும் பதிலுக்கு நியாயம் பேசினான்.


"எது புடவை எடுக்கறது மோதிரம் மாத்திக்கணுங்கறது தான் உன் ஆசையா?"


"அதுவும் என் ஆசைகள் ஒன்னு ரெண்டு தான் என் முயற்சியில் நிறைவேத்திக்கிட்டேன். என் நிச்சயமும் கல்யாணமும் நான் நிறையா ஆசைப்பட்டேன்.  ஆனா நான் ஆசைப்பட்ட, எல்லாத்தையும் என்னால்  நிறைவேத்த முடியலனாலும் ஒன்னு ரெண்டு நெருக்கமான ஆசைகள் நிறைவேத்தணும் முடிவா இருந்தது எனக்கு தப்பா தெரியலப்பா ! நானாது பரவாயில்ல அங்க அவ வாயிருந்தும் புள்ளப்பூச்சியா அப்பா சொல்றது சரினு தலையட்றா ! ஆனா அவகிட்டையும் அவர் எதுவும் கேக்கல !  அவ யார்கிட்ட சொல்லுவா? ஆனா நான் கேட்டேன் என் கிட்ட சொன்னா, ஸோ என் உட்பி'க்கு நானே என் பணத்துல செலவு செஞ்சேன் தப்பா  என்ன?" அவர் வாயை அடைக்க முயன்றான்.


"சரி அத விடு ! ஹோட்டல் அப்படி தான் நடந்துப்பீயா, அந்த மனுஷன் உன்னையும், உன்னை வளரத்த என்னை என்ன நினைச்சி இருப்பார்?  கல்யாணமான பொண்டாட்டிய கூப்டற போல கூப்டற ! பாவம் அந்தப் பொண்ணு  தவிச்சிட்டு நின்னுச்சி, நாகரீகம் தெரிய வேணாம உனக்கு?"


"என் பக்கத்துல உட்கார  வச்சதுல நாகரீகம் சீர்கேடாகிடுச்சா என்ன? நீங்க மட்டும் அங்க ஜோடி ஜோடியா உட்காறீங்க நான் மட்டும் என்ன  உங்க வாய் பார்த்துட்டு இருக்கணுமா? என்னால முடியாது. நான் மேகாவை  முதல்  முறைய பார்த்த அன்னக்கே அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் பா ! அவ எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதான் அவ கிட்ட என் உரிமையும் காதலையும் காட்றேன். ஆனா குறுக்கால  உங்க சம்மந்தி தான்  முறைச்சிட்டு  நிக்கார்" என்று தான் ஆதங்கத்தையும் காதலையும் தனிவாகச் சொல்ல, அவருக்கு வந்த கோபமும் அவன் சொன்னதில் காத்தாகிப் போக, அவன் கூற்றை ஏற்றுக் கொண்டார். என்ன தான் சொன்னாலும் மகனின் ஆசையை விட அவருக்கு அங்கே பெரிதாக எதுவும் படவில்லை. இதற்கு மேல் கேட்டு,  அவன் வேறு விதமாகச் செய்ய கூடும் என்ற அச்சத்தில் ஒன்றும் சொல்லாமல் எழுந்தவர், சற்றி தள்ளி சென்று விட்டு, " நிச்சயத்துல எங்களுக்கு தெரியுமா எதுவும் செய்ய இருக்கியா?" வெளிப்படையாக கேட்டுவிட, அவனும் சிரித்து கொண்டே "இருக்குப்பா ! "என்றவனை கேள்வியோடு நோக்க, " ஆனா உங்க மானம் போக, நான் எதையும் பண்ண மாட்டேன். என்னை நம்பலாம் !"என்று நெஞ்சில் கைவைத்து சொன்னவனை நம்பிக்கையாக பார்த்துவிட்டுச் சென்றார்.


"அப்படி என்னடா செய்ய போற?" தேவகி  மெல்ல அவனருகில் வந்து ரகசியம் வந்து கேட்பது போல கேட்க, அவர் தோரணையில் அங்கு நின்ற  மூவரும் சிரிப்பை அடக்கச் சிரமம் கொண்டனர்.


அவரைப் போல அவனும் ரகசியமாக சொல்வது போல்" அதுவாம்மா ! அவளை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுக்கலாம்னு இருக்கேன்"என்றதும்  முகத்தை சுளித்தவர், அவன் சிரிப்பதை கண்டு முதுகில் ஒன்று வைத்தார்."ச்ச்ச... கொழுப்புடா உனக்கு"என்று முகத்தை திருப்பிக் கொள்ள, "சும்மா தேவகி ! ஏதோ உன்னை வெறுப்பேத்தறதுல அப்படி ஒரு ஆன்ந்தம்"என்றதில் அவனை மேலும் சாத்தினார்.


"சரி சரி கூல் மா !"என்றவன் அவர்  தோளில் வாகாக கையை போட்டு கொண்டு" மா ! நீ என்ன பண்றனா ! நல்லா மருதாணி இலையா  பறிச்சி,  கையில் சிவ சிவனு சிவக்க நீ அரைச்சி உன் மருமகளுக்கு குடுப்பீயாம் அவளும் வச்சிட்டு வருவாளாம் என்னம்மா !"எனக் கேட்டு அவர் வாயைப் பிளக்கவைத்தார்.


"எதே மருமக கை சிவக்க, மருதாணி அரைச்சி குடுக்கணுமா? ஏன் இந்த மெஹந்தி போடக் கூடாதா? மருதாணி தான் வைக்கணுமாமா? "


"உன் மருமகளுக்கு அது தான் பிடிக்குது என்ன பண்ண? நிச்சயத்துக்கு முன்னாடி  மறக்காம அரைச்சி குடுத்தனுப்பிடு மா ! "என்று தன்னறை நோக்கி நடந்தனிடம்,"மருமகளுக்கு புடிச்சதெல்லாம் செய்ற, மருமக கிட்ட போன் பேசிட்டு  இருக்கீயா நீ?"செல்லமாக அதட்ட, "குடும்பமே நடத்துறேன், நீ இப்போ வந்து கேளுமா !"என்று நக்கல் செய்துவிட்டு போனான்.


"என்னடா  இவன் இப்படி மாறிட்டான்?" என்ற தேவகியை வெறித்தவன்" அவன் கிட்ட வாய குடுக்கக் கூடாது தான் அப்பாவே அமைதியா போனார், அது தெரியாம நீங்க அவன் வாய பிடுங்கிறீங்க, ஒரு மாசம் கழிச்சி கல்யாணம்  வச்சா,  அவ குடும்பம் நடத்தாம என்ன பண்ணுவான் ? போங்கமா "என்று அவனும்  செல்ல அவர் தான்'பே' விழித்து நிற்க, அவரை நமட்டுச் சிரிப்புடன் கடந்தாள் பிரதி.


மகனின் காதல் எண்ணி பிரமித்தவர், நல்ல முறையில் கைகூட்டினாலே போதும் என்று உள்ளுக்குள் வேண்டிக் கொண்டார். கிளம்ப வேண்டிய நேரம்  வர, கடவுளை வணங்கிவிட்டு காரில் ஏறிக் கொண்டனர்.


அவன் முன்னே அமர , பெண்கள் மூவரும் பின்னே அமர்ந்துக் கொள்ள 

குழந்தைகளும் ஏறிக்கொண்டனர். இன்னொரு வண்டியில் சொந்தங்கள் ஏறினார்கள். தேவகி பக்கத்தில் அமர்ந்த  அருணா, அன்னையிடம் கேள்வியாகக் கேட்டு குடைந்தாள்.


"ஏன் மா சின்ன அண்ணி எப்படிமா அண்ணனுக்கு பொருத்தமா இருப்பங்களா?"


"பொருத்தமா தான் இருப்பா ! ஒரு விஷயத்தை தவிர்த்து " என்றார். "என்னமா அது?" ஆவலாக கேட்டாள்."இவன் வாய திறந்தால் மூட மாட்டான். அவ வாயவே திறக்க மாட்றா, எப்படி தான் இவன, அவ சமாளிக்க போறாளோ ! என் பொறுப்ப அவகிட்ட சீக்கிரமா கை மாத்தணும் "என்றார் அலுத்துக் கொண்டு..


"இன்னுமா அண்ணி, பொறுப்பு கைமாறல !"பிரதியின் அன்னை கேட்க, "இன்னைக்கி அதான் வேலையே அண்ணி !"என்க சிரித்துக் கொண்டனர். 


மண்டபத்தை வந்தடைய உறவுக்கார பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்க, அவனுக்காக வாயிலில் காத்திருந்தனர் அவனது நண்பர்கள். அவர்களுடன்  ஐக்கியமானான். அவர்கள் வந்த சற்று நேரத்தில் பெண் வீட்டுக்காரர்களும் வந்தனர். அடம்பிடித்து அருணா தான் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தாள். ஒருபக்கம்  அருணாவும் ஒரு  பக்கம் நேகாவும் நடுவில் மேகாவை அழைத்து வந்தனர். 


"ஹாய் அண்ணியரே !"எனவும் அவளை முதலில் யாரோவென்று பார்க்க, அவளது அந்நிய பார்வையை கண்டு பயந்த அருணாவோ, "அண்ணியரே ! நான் அருணா ! இப்படி ஒரு கேரக்டர்  இருக்குனு உங்க கிட்ட யாரும் சொல்லலையா?" பதற்றமாக கேட்கவும் சிரித்தவள், "அருணானு ஒரு கேரக்டர் இருக்கும் தெரியும் நாத்தனாரே ! ஆனா அது நீங்க தான்னு இப்ப தான் தெரியுது !எப்படி இருக்கீங்க? ஓவர் படிப்பாளியோ ! இந்தப் பக்கம் வரவே இல்லையே !"சற்று நேரத்தில் இருவரும் பழகியவர்கள் போல பேச ஆரம்பித்தனர். 


"என்ன அண்ணி பண்றது எல்லா எங்க அப்பா பண்ற கொடுமை. எப்படா படிச்சி முடிச்சி வீட்டுக்கு வந்து ரெண்டு அண்ணிங்கள கலாய்சிட்டு வாழ்வோம் இருக்கு!"என்றிட, "எனக்கும் தான் என் செல்ல நாத்தனர் கூட வம்பிழுக்கனும் ஆசை, சீக்கிரம் படிச்சி முடிங்க நாத்தனாரே !"என்றிட இருவரும் சிரித்து கொண்டனர். 


"அடேப்பா ! அண்ணியாருக்கும் நாத்தனாருக்கும் பார்த்ததும் காதலா ! இப்ப எல்லாம் இதான் ட்ரெண்டு போல முன்ன மாறி கெத்து காட்டி சிலிப்பிக் கிட்டு போறது இல்ல போலையே"என்றிட, அவளை செல்லமாக இடித்தாள் மேகா.


"இவங்க...?" என அவளிழுக்க, "என் தங்கச்சி" என்றாள் மேகா. "ஓ... சின்ன அண்ணியார். சின்ன அண்ணியாரே ! இப்போ எல்லாம் அண்ணி கூட சேர்ந்து ரீல்ஸ் பண்றது தான் ட்ரெண்டே !  சிலிப்பிக்கிட்டு போற  காலம்  எல்லாம் மலையேறி போச்சி சின்ன  அண்ணியாரே ! நடைமுறை தான முக்கியம்" எனவும் பெண்கள் மூவரும் சிரித்துக் கொண்டே, மணப்பெண் அறையை நோக்கி நடக்க, தூரமாக நின்று தன் வருங்கால வனிதையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஆரன்.


தலை குனிந்த படி வந்து கொண்டிருந்தவளின் கையை அழுதியவள், "மாம்ஸ் தூரமா நின்னு உன்னை தான் சைட் அடிக்கறார். கொஞ்சம் நீ தரிசனம் கொடு மா !" எனக் கிண்டல் செய்ய,  "போன் பண்ணி விசாரிக்காதவருக்கு எதுவும் இல்லை"என்று அவனை பார்க்காமல் நடந்தாள். 


தன் அண்ணன் தன் அண்ணியை சைட் அடிப்பதைக் கண்டு, அருணா அவளை மறைத்து விளையாட்டு காட்ட, அங்கிருந்து நாக்கை துருத்தியவன், "தள்ளிபோடி"என்றான் சைகையில் அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு நகன்றாள்.  அவன் அவளை வச்சக்க  கண்ணெடுக்காமல் பார்க்க, அவளோ அவனை ஏறெடுத்து பார்க்கவில்லை. 


"அண்ணியாரே ! வெட்கப்படாம அண்ணன பாருங்க "என்று கேலி செய்ய, 


"வெட்கமா ! கோபம் உங்க அண்ணன் மேல அதான் பார்க்கல , பார்க்கவும் மாட்டேன் "என்கவும் "அதுக்குள்ளவா !"என்று  சிரித்துக்கொண்டாள். மணப்பெண் அறையில் மூவரும் நுழைந்திட, 


அவள் கோபத்தை எண்ணி உள்ளக்குள் நகைத்து கொண்டான். "என்னடா சிஸ்டர் உன்னை பார்க்கவே இல்ல " அவனது தோழன் அருள் கேட்க, "எல்லாம் என் மேல உள்ள கோபம் தாண்டா"என்றான் அவளறையை பார்த்து வழிந்து கொண்டே .


"ஹாய் சகள" என்று அங்கே வந்து அதிர்ச்சி கொடுக்க நினைத்தான் தீனா. "வாங்க சகல"அவனுக்கே மீண்டும் அந்த அதிர்ச்சியை கொடுத்தான் ஆரன்.


"என்னை தெரியுமா உங்களுக்கு?" என்றான் அதிர்ச்சி மாறாமல், "ம்ம்... தீனதயாளன் கசின் ஆப் மேகா"என்றான் புன்னகையுடன், அப்புன்னகை  அவனுக்கும் தொற்றிக் கொள்ள, உதட்டில் தவழ விட்டுக் கொண்டே அவனிடம், "ப்ரீ இன்றோ கொடுத்தாச்சி போல  ! எல்லாம் உங்க ஆளு தானா ?"என்றிட, "ஆமாம்" என்றவன்"ரொம்ப நன்றி தீனா ! எனக்காக மாமா கிட்ட, என்னை நல்லவிதமாக சொன்னீங்களாமே வெரி தேங்க்ஸ் "என்றவனை முகம் சுருக்கி பார்த்தவன், "இதுவும் உங்க ஆள் தானா?"எனவும்,


"இல்ல உங்க ஆள் !"என்றான். 


"வீட்லே உளவு துறை வச்சிருக்கீங்க போல"என ஹாஸ்யம் பேச, "எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா சகள"என்றவன் அவன் காதுக்குள் எதையோ ஓத, "பண்றேன் சகள"என்றவன் அவன் சொன்ன வேலையை செய்ய சென்றான்.


இங்கோ  மேகாவை ஆடம்பரமின்றி அழகாக அலங்கரிக்க நேகாவோ புரியாது விழித்தாள்.


"என்ன மேம் என் அக்காவை சிம்பிளா ரெடி பண்றீங்க?"சற்று கோபத்துடன் கேட்கவும், "இல்ல இப்படி தான் ரெடி பண்ணச் சொல்லி அனுப்பினாங்க"என்றாள் அவளை அலங்கரிக்க வந்த அழகியல் நிபுணர்.


"யார் சொன்னா?"


"ஆரன் சார் தான்"என்றார்.


"என்னக்கா சுத்த பழமைவாதியா இருப்பார் போல, மருதாணி வைக்க சொல்றார், இப்படி சிம்பிளா ரெடி பண்ண சொல்லிருக்கார், இவர் இன்னுமா அப்டேட் ஆகல போல !"என அலுத்துகொள்ள, 


"அவர் பழமைவாதி இல்ல நான் தான் அந்த பழமைவாதி.  நான் சொல்லித்தான் இப்படி மேக் போடுறாங்க, நான் சொல்லித் தான் இந்த மருதாணியும் கூட"என்று செக்கரையாய் சிவந்த  மருதாணியிட்ட கைகளை, ஆசையாக கண்டுவிட்டு நுகர்ந்தவள்.


"ஏன் மேகி ?"


"நானே இயற்கையாவே அழகு தான் . கூடுதலா அழகா காட்றேன் சொல்லி, என்னை நானே பூதமா காட்ட விரும்பல. எனக்கு சிம்பிளா இருக்கத் தான்  பிடிக்கும்"என்று முடித்துக் கொள்ள நேகா தலையில் அடித்து கொண்டாள்.


"டொக் டொக் "என கதவு தட்டும் சத்தம் கேட்கவு திறக்க, அங்கே தீனா அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். 


"வாவ் ! மேகா வா இது !"கண்ணாடி வழியே அவளைக் கண்டு பிரமித்தான். 


"ச்ச... இவ்வளவு அழகான பொண்ண விட்டுட்டு இந்த தொத்தல போய் லவ் பண்ணித் தொலைச்சிட்டேனே !"சுவற்றில்  முட்டிக் கொண்டு வருத்தப்படுவது போல நடிக்க, நேகாவோ கூலாக, அவன் தோளை தொட்டு "இப்பையும் ஒன்னு கேட்டு போகல மச்சி, நீ மேகாவை  கட்டிக்கோ நான் மாமஸ் கட்டிக்கிறேன்"என்றாள் அசால்டாக,


"வாய்டி வாய்டி உனக்கு ! "என்று காதை திருக்கினான் தீனா. "எனக்கு வந்த தக்காளி சட்னி, உனக்கு வந்தா ரெத்தமா !"காதை அவனிடமிருந்து மீட்டாள்.


"சரி சரி விட்டா நீ பேசிட்டே இருப்ப,இப்ப  என் கூட வா !"என்று அவளை கையோடு, அழைத்து சென்றவன், போகும் போது அந்த அழகியல் நிபுணரையும் அழைத்துக் கொண்டு மேகாவிற்கு தனிமையை கொடுத்து விட்டு செல்ல, அவளோ போகும் அவர்களை புரியாதது விழித்த பார்த்தபடி நின்றாள். 


அவள் பின்னால் வந்து நின்றவன் அவளது காதணியைச் சுண்டிவிட்டு அவள் காதோரம் ஊத, அவன் மூச்சுக்காற்று தீண்ட  சிலிர்த்தடைந்தாள் அவனது வெண்மேகம்..

Comments

  1. Replies
    1. சித்ரா ஹரிதாஸ்September 11, 2024 at 3:15 PM

      நன்றி மா

      Delete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2