வரன் - 14

 




கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை திக்கெங்கிலும் பார்த்து திகைத்து கொண்டு நிற்பது போல நின்றாள் மேகா. ஒரு புறம் தந்தையும் மறுபுறம் கணவனாக போகிறவனும் தன்னருகே அமர அழைக்க, அவளுக்கோ யார் அருகினில் அமர என்றானது. தந்தையின் அருகே சென்று அமர்ந்தால் நிச்சயம் அவன் கோவித்து கொள்வான். அவனருகில் சென்றால் தந்தை   தன்னை என்ன நினைப்பார். ' ஐயோ !' என்றானது.


ரெண்டு பக்கமும் செல்லாமல் நடுவில்  நின்றாள். கனகா , தனா ஒரு பக்கமும், நேத்ரன் , நேகா அவர்கள் எதிர்பக்கம் அமர்ந்து விட்டனர். மோகனாவும் மணிமாறன் ஒரு பக்கம் அவர்களுக்கு எதிரே கங்காதரனும் அவர் பக்கத்தில் இருந்த காலி இடத்தில் தன் மகளை அமர அழைத்தார்.


அதே நேரம் தேவகியும் குணசேகரனும்  ஒரு பக்கம் அவர்கள் எதிரே வேறு இருவர் அமர,  தீரனும் பிரதியும் ஒரு பக்கமும் அவர்களுக்கெதிரே ஆரனும் பக்கத்தில் இடம் காலியாக இருக்க, அந்த இடத்தை தன்னவளுக்காக காலியாக்கிருந்தான். அவளோ யார் அருகே அமர்வதென்று குழம்பி நின்றாள்.


"பாவம்டி அந்தப் பொண்ணு ! சம்மந்தி பேச்சை கேக்கறதா? இல்ல உன் புள்ள பேச்சைக் கேக்கறதானு தவிச்சிட்டு நிக்குது?  நிச்சயமே இன்னும் முடியல அதுக்குள்ள துரைக்கு அந்த பொண்ணு பொண்டாட்டினு நினைப்போ !  பொண்ண பெத்தவர்  என்ன நினைப்பார்? அவனை பெத்த என்னை தான் என்ன நினைப்பார்? படிச்சவன் தானடி உன் புள்ள எங்க எப்படி நடந்துக்கணும் தெரியாதா? பாரு இப்போ அந்தப் பொண்ணு யார்கிட்ட உட்காரனு தவிச்சிட்டு இருக்கு?" என பல்லைக் கடித்துக் கொண்டு தன் மகனை கடிந்தார்.


"அந்தப் பொண்ணு மட்டுமா தவிக்கிறா? ஊர்ல இருக்க எல்லாம் பொண்ணுங்களும் தான் தவிக்கறாங்க !" என உள்ளுக்குள். தேவகி முனங்க,   அவருக்கு அவரது  முனங்கள் சத்தம் மட்டும் கேட்டிட," என்ன சொன்ன?" எனச் சட்டென்று கேட்டார் "அது அந்தப் பொண்ண பார்த்தால் பாவமா இருக்குனு சொன்னேங்க"என்று சமாளித்தார்.  


மேகா மட்டும் இன்னும் அமராமல் நிக்கவும், மருமகனின் மீது கோபம் கொண்ட கங்காதரன் அதை வெளியே காட்டாது"நீ இங்க வந்து உட்கார் மா !"கடுமையாக கூறினார். அவளோ ஆரனிடம் அனுமதி கேட்டு  கண்களால் கெஞ்சிய படி நின்றாள். அதே நேரம் சிப்பந்தி மேசையில் தண்ணீர்  வைக்க கையில் தண்ணீர் டம்ளர்களுடன் அவளை கடந்து வந்தார். சரியாக  இவள் அமரும்  இடமருகே அவர் வர, ஆரன் தன் காலை வைத்து அவரை இடரச் செய்ய, தடுமாறியவர் தண்ணீரை அவள் அமர வேண்டிய நாற்காலியில் கொட்டிவிட்டார். நீர் குளமாகத் தேங்கி நின்றது.


"ஒ... ஸாரி ஸாரி " என்று சிப்பிந்தியிடம்  மொழிந்தவன் வெற்றி களிப்புடன் அவன் இடம் வந்து அமர்ந்தான். அவரும் அந்தத் தண்ணீரை கீழே கொட்டி விட்டுச் நாற்காலியை அங்கிருந்து அகற்றினார். வேறு வழி இல்லாமல்  தந்தையிடம் அனுமதி பெற்று ஆரனின் அருகிலே அமர்ந்தாள் மேகா.


உள்ளுக்குள் சிறு வெற்றிக் கொண்டாட்டம் இருந்தாலும் வெளியே கோபமாக இருந்தான். அவள் அமர்ந்தும் அவள் புறம் திரும்பவில்லை எங்கோ வெறித்திருந்தான். அவனது கோபம் அவளுக்கு புரியாமல் இல்லை. எப்படி அவனை சமாதானம் செய்வதென்றும் தெரியவில்லை. முழித்து கொண்டிருந்தவள் பிரதி கேட்கும் கேள்விக்கு பதிலளித்தவாறு  ஓரக் கண்ணால் அவனையும் பார்க்க, அவனோ செல்லைப் பார்ப்பது போல அவளை நோட்டம் விட்டப்படி அமர்ந்திருந்தான். 


இலைகளிட்டு  உணவுகள் பரிமாற பட்டு அனைவரும் உண்ண ஆரம்பித்தனர். ஆனால் அவன் மட்டும் சாப்பிடாமல் இருக்க, அவன் கோபமறிந்து அவளும் சாப்பிடாமல் சாதத்தை வெறித்தாள்.


பிரதி அவளை கண்டுவிட்டு, " என்ன மேகா, சாப்டாம பார்த்திட்டு இருந்தாலே பசிப் போயிடுமா என்ன?  சாப்டுமா"என்க, அவளோ ஆரனை கண்காட்டினாள். அதனைப் புரிந்து கொண்ட, பிரதி, தீரனை இடித்துக் கண்ணைக் காட்டினாள்.


"ஆரா, வெட்டிக் கோபம் எதுக்கு? ஒழுங்கா சாப்டுறா !" என்றவன் தலைக்குனிந்து அமர்ந்திருந்த மேகாவைக் காட்ட, போனை  மேசையில் வைத்துவிட்டு, அவள் இலையிலிருந்த அவளுக்கு பிடிக்காத முட்டை கோஸ் கூட்டை தனது இலைக்கு இடமாற்றிக் கொண்டவன் அப்பளத்தை அவள் இலையில் வைத்து விட்டு உண்ண ஆரம்பித்தான்.


இதைக் கண்டு முறுவலுடன் உண்ண ஆரம்பித்தவள் உணவை பருக்கைப் பருக்கையாக எடுத்து உண்டாள். அதனைக் கண்டவன் எதுவும் சொல்லாது அவளது இடது கையை தனது இடது கையால் பற்றிக் கொண்டான். அவள் விழி ' எதற்கென்று' என்பது போல அவனைக் கேள்வியாக பார்க்க, " சாப்டு" என்று கண்ணைக் காட்டினான்.


அவளை முழுதாகச் சாப்பிட வைத்த பின்னர் தான்  அவள் கைகளை விட்டான். ஒருவழியாக உணவை முடித்து விடு  வெளியே வந்தனர்.  கிட்ட தட்ட   நிச்சயத்திற்கு வாங்க வேண்டிய அனைத்தும் வாங்கிவிட, வீட்டிற்கு கிளம்ப  இருந்தனர்.  இரு குடும்பமும் இரு திசையில் செல்ல இருக்க, கடைசியாக அவள் ஆரனைப் பார்த்தாள். எந்த உணர்வையும் பிரதிபலிக்காது அவளையே பார்த்திருந்தான். அவனும் தலையசைப்பான், கைக் காட்டுவான், என்றவளுக்கு ஏமாற்றமே.

காரில் அமர்ந்த பின்னும் அவனைத் தான் பார்த்தாள். மக்கூம் ரியாக்ஷனே இல்லை. கார் கிளம்பி விட்டது. குறுஞ்செய்தியில் "ஸாரி" என்று அனுப்பிவிட்டு தாயின் தோளில் சாய்ந்து கண் மூடிக் கொண்டு படுத்துக் கொண்டாள். அலைந்து வந்த கலைப்பில் அனைவரும் உறங்கச் சென்றனர். 


மாலைநேரமாக கணக்கு வழக்கைப் பார்க்க , தன் தம்பி , மணிமாறனுடன் அமர்ந்து  பார்த்துக் கொண்டிருந்தனர் கங்காதரன்.  ஸ்ரீதரன் இன்று கடையை பார்த்துக் கொண்டதால், அவர்  அவர்களோடு வரவில்லை. தீனாவும் கல்லூரிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் சென்று விட, மாலை நேரமாகத் தான் தன் மாமா வீட்டிற்கு வந்தான்.


கணக்கு வழக்கம் எல்லாம் சரியாக முடித்துவிட்டு மூவரும் பேசிக் கொண்டிருக்க, அவர்களுடன் வந்து அமர்ந்தவன் தன் தந்தையிடம் இன்றைய நிகழ்வை விசாரித்தான். அவரும் சொல்லிக் கொண்டிருக்க, அதை கேட்டுக் கொண்டு வந்த கங்காதரனுக்கு ஆரனின் செயல் பிடித்தமற்று போனது.


"பச்... மாமா ! எனக்கு மாப்பிள்ளை பண்றது சுத்தமா பிடிக்கலை. பேசி தான முடிச்சிருக்கோம், அதுக்குள்ள உரிமையா பொண்ணோட கைய பிடிக்கறது பக்கத்துல உட்காரச் சொல்றதும்  எனக்கு இத்தெல்லாம் அறவே பிடிக்கலை. இது என்ன பழக்கம்? பொண்ணுக்கு  புடவை எடுக்க, நாம பொண்ண கூட்டிடே போக மாட்டோம். ஆனா மாப்பிள்ளை ரொம்ப உரிமை எடுத்துக்கிறார். எனக்கு சரினு படலை மாமா !"முகத்தை சுழித்துக் கொண்டு கூறினார்.


"இவர் தன் அந்தக் காலத்து ஆட்களை போல இருக்கார்னா நம்மலையும் அதே எண்ணத்தில  இருக்கச் சொல்வார் போலையே !' என எண்ணிக் கொண்டவன், மணிமாறனுடன் சேர்ந்து நகைத்தான்.


"ஏன் மாமா ! நானும் தான் நேகா, மேகா கூட உரிமையா பேசுறேன். கேலி, கிண்டல் பண்றேன். பக்கத்துல உட்கார்றேன். சில நேரம் வண்டில கூட கூட்டிட்டு போயிருக்கேன். ஏன் என் மேல உங்களுக்கு கோபமோ வெறுப்போ இல்ல முக சுளிப்போ வரல?" எனக் கேட்க, 


"என்ன மாப்ள பேசற நீ!  நீ நான் பார்த்த வளர்த்த புள்ள ! உன் மேல எங்களுக்கு எப்படி நம்பிக்கை இல்லாம இருக்கும் எங்க வளர்ப்பு எப்படி தப்பாகும் மாப்ள ?" என்று  கர்வமாகச் சொன்னவரை அடுத்த கேள்வியில் மடக்கினான் தீனா.


'அப்போ ஏன் மாமா உங்க மாப்பிள்ளை  மேல உங்களுக்கு நம்பிக்கை இல்ல ?ஏன் அவர் பண்றது எல்லாம் உங்களுக்குப் பிடிக்கலை ? அவரை நம்பி மேகாவை கல்யாணம் பண்ணி கொடுக்க போறீங்களே எந்த நம்பிக்கையில கட்டிக்கொடுக்க போறீங்க? வேலைய நம்பியா? பெத்தவங்கள நம்பியா? அவரை முழுக்க முழுக்க நம்பித் தான கட்டிக் கொடுக்கப் போறீங்க. அப்ப ஏன் மாமா இதெல்லாம் உங்களுக்கு தப்பாப் படுது?அவர் மேகாவை எவ்வளவு விரும்பிறார் உங்களுக்கு புரியலையா? இதுவே கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்றம் அவர் இப்படி நடந்திருந்தா பூரிச்சி போயிருப்பீங்கள ! என்  மருமகன் என் பொண்ண ராணி மாதிரி பார்த்துகிறார் பெருமையா சொல்ல தோணும் தானே மாமா ! அதை அவர் கல்யாணத்துக்கு முன்னாடியே செய்றார் இதுல என்ன மாமா இருக்கு? செலவை  எல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க மேல திணிக்காம, தன் செலவுல தன்னோட மனைவி ஆசைய நிறைவேத்தனும்  நினைக்கற மனுஷன் கிடைக்க, நீங்களும் மேகாவும் கொடுத்து வச்சிருக்கணும் மாமா ! எனக்கு என்னமோ நம்ம மேகா,  இங்க இருக்கறதவிட அங்க சந்தோசமா தான் இருப்பானு தோணுது  யோசிச்சிக்கோங்க மாமா !"என்று மேகா அறைக்குள் நுழைந்தான். தன் மகனை எண்ணி மெச்சிக்  கொண்டனர் மணிமாறனும் மோகனாவும்..


சோர்வாக அமர்ந்திருந்த மேகாவின் அருகே அமர்ந்தான் தீனா. அவன் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள் மேகா, நேகாவும். 


அவர் அருகே அமர்ந்ததும் அவள் தோளில் சாய்ந்தாள். "தேங்கஸ் தீனா ! நீயாவது அவரை புரிஞ்சிக்கிட்டீயே !ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிட்டு முழிக்கிறேன் டா . அவர் கிட்ட என் நிலமைய சொல்லியும் புரிஞ்சிக்காம இருக்கார். அப்பாவ சொல்லவே  வேணாம். யார் பேச்சை கேக்கனு  தெரியாம நொந்து போறேன்டா !" என்று கண்ணீரை சிந்த,


"அட மேகா  லூசு ! இதுக்காக அழற ?!" கண்ணீரை துடைத்து தலையை வருடிக் கொடுத்தான். "நீ பொண்ணா பொறந்திருந்தால் தெரிஞ்சிருக்கும்" நேகா இடையில் புகுந்திட, 


"உறவுகள்ல புரிஞ்சிக்க பெண்ணா பொறக்கணும்  அவசியம் இல்லை  மனுசனா பொறந்தாலே  போதும் நேகா"என்றவன் மேகாவிடம்" மாமாவும் சரி அவரும் சரி உன் மேல்  நிறைய அன்பு வச்சிருக்காங்க.  தந்தைனு அவரும் கணவனு அவரும் உன்கிட்ட உரிமை காட்ட  இப்படிச் செய்றாங்க. கல்யாணம் ஆகிட்டா, உனக்கு மாமா ரெண்டாம் பட்சம் தான் அந்த வேதனையைக் கூட அவர் இப்படி காட்ட நினைக்கலாம். அப்றம் மாமா அந்தக் காலத்துக்கு ஆளு. அவரை மாற்றுவது அவ்வளவு சுலபமும் இல்ல, அவர் இந்தக் காலத்தை ஏற்றுக் கொள்ள வைக்க ரொம்ப நாளாகும் மேகா ! அதுவரைக்கும் இந்தக் கஷ்டங்கள் இருக்கும் தான். நீ தான் மெச்சுரடா நடந்துக்கணும் !"என்று அறிவுரை கூறினான்.


"எனக்கு புரியுது  தீனா? ஆனா ஆரனை என்ன சொல்ல? அப்பாக்கு தோதா முறுக்கிட்டு நிக்கறார். இதோ இப்போ கூட எங்கிட்ட பேசவே இல்ல. கஷ்டமா இருக்கு  தீனா இவராவது என்னை புரிஞ்சிருக்கலாம்ல !"வருத்தப்பட்டவளை கண்டு முறுவலித்தவன், 


"அவர் உன்னை புரிஞ்சிக்கிட்டார் மேகா ! ஆனாலும் அவருக்குன்னு ஒரு இயல்பு இருக்கும் தான ! சட்டுனு எப்படி அதை மாற்ற முடியும் சொல்லு ! அவர் பேசாம இருக்கிறது கூட உனக்காக,  இருக்கலாம். எதையும் போட்டு குழம்பிக்காம, நிச்சயம்  பண்ணப் போற பொண்ணா சந்தோசமா இரு. இன்னைக்கி இருக்கற இந்த நிலை மாறும்"என்று தேற்றினான்.


நேகா, தன் காதலனை எண்ணி உள்ளுக்குள் ஆயிரம் முத்தங்கள் தந்து மெச்சிக் கொண்டவள் அவனைக் காதலாகப் பார்த்தாள். அவனும் அவள் கண்களில்  வழியும் காதலை கண்டு புருவமுயர்த்தி என்னவென்று அவன் கேட்க , 


மேகா அறியா வண்ணம் , இதழை குவித்து முத்தங்கள் பறக்கவிட்டாள் நேகா. அதைப் பெற்றுக் கொண்டு அம்முத்தங்களை கைக்குள் சிறை பிடித்துக் கொண்டான். இருவரும் கண்களால் சிரித்து கொண்டனர்.


நாட்கள் நிச்சயத்தை நோக்கி பரபரப்பாக நகர்ந்து. வீட்டில் அனைவரும் நிச்சய வேலைகளில் தலையைக் கொடுத்திருந்தனர். ஆரனும் தனது வேலையில் பிசியாக இருக்க, அன்றிலிருந்து அவன் அவளிடம் பேசவில்லை...  அவனது அழைப்புக்காக காத்திருந்து ஏமாந்து தான் போனாள். நிச்சய நாளும் நெருங்க,மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்ததாகக் கூறி மருதாணியைப் பக்குவமாக அரைத்த கிண்ணத்தில் வைத்து கொடுக்க, ஆச்சரியமாக அவ்வீட்டில் பார்த்தனர். அதிலெல்லாம் அவனுக்கு கவனமாக இருக்க, ஏன் தன்னிடம் மட்டும் பேசவில்லை என்ற கோபமும் வேதனை அவளை வாட்டியது. மருதாணி வைத்த கணம் சில்லென்று பரவினாலும் உள்ளுக்குள் கொதித்து  கொண்டிருந்தாள். 


மறுநாள் இருவரும் நேருக்கு சந்திக்க போகும் நாள் இருவருக்கும் எப்படி அமையுமோ !

Comments

  1. Let’s wait and see

    ReplyDelete
    Replies
    1. சித்ரா ஹரிதாஸ்September 11, 2024 at 3:15 PM

      நன்றி மா

      Delete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2