வரன் - 13

 






பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட அந்தப் பெரிய நகைக்கடையில் இரு குடும்பங்கள் படையெடுத்திருந்தாலும் இருவரும் மட்டும் தீவிரமாக மோதிரம் எடுக்கும் ஆர்வத்தில் திழைத்திருக்க, மற்றவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


வெயிலுக்கு இதமாக குளிரும், வாய்க்கு இதமாக குளிர்ந்த ஜூஸூம் கொடுத்து அனைவரையும் தணிக்க வைத்திருக்க, இருவர் மட்டுமே இன்னும் கொதிநிலையிலிருந்து இறங்காமல்  நின்றிருந்தனர்.


இந்த இருவரும் அந்த இருவரையும் கவனித்த வண்ணமிருக்க, அதை எல்லாம் கண்டுக் கொள்ளாத இந்த இருவர் வேறொரு உலகில் இருந்தனர்.


தனக்காகக் காத்திருக்கும் குடும்ப மக்களை பொருட்படுத்தாது, வித்தியாசமாக  வடிவமைக்கப்பட்ட மோதிர வகைகளில் ஒன்றை தேர்த்தெடுக்கும் தீவிர தேடுதலில் லயித்து இருந்தனர். மோதிர விரலில் தங்கத்தின் வழியே இதயத்திற்கு காதலை கடத்தவே இந்தத் தேடல். கரண்டை மட்டுமா தங்கம் கடத்தும் காதலையும் அல்லவா கடந்தும் இதோ இருவரின் தங்க தேடலினுடே காதலையும் தேடிக் கண்டறிந்து தொலைகிறார்கள்.


அவளது வெண்டைவிரலில் வட்ட வளையங்கள் பொறுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்து கொண்டே இருந்தன. "பச்... இதுவும் சேரல"என்றாள் உதட்டை பிதுக்கி.

அவள்  விரலைக் கண்டு விட்டு "இது விரலா? இல்ல வேப்பங்குச்சியா? மோதிரம் கூட உள்ள போக மாட்டிக்கிது? உனக்கெல்லாம் அளவு எடுத்து தான்  செய்யணும், பட் டைம் இல்ல இப்ப!"என்றவன் நெற்றியை தேய்த்து விட்டு இதை விட சின்னதா இருக்கா பாருங்க" என்று அந்த மோதிரத்தை கொடுத்தான்.


"நாம் வேணுன்னா நூல் சுத்தி போட்டுக் கட்டுமா?" அவன் அயர்வை கண்டு கேட்டாள்." வேணா வேணா, முதல் முறையா போட போற ரிங்கிலே அசிங்கமா நூல் இருக்கறது எனக்கு பிடிக்கல. வெயிட் பண்ணு ! இதுவும் செட் ஆகலைன்னா வேற கடை பார்ப்போம்"என்றான்  அசட்டையாகச் சொன்னான்.


"ஏதே !  வேற கடை பார்க்கணுமா? சும்மாவே நம்ம குடும்பம் கொல காண்டுல இருக்கு, இதுல வேற கடைன்னு சொன்னால் அவ்வளவு தான் எல்லாரும் ஜாம்பி ஆகிடுவாங்க. சீக்கிரமா ஒண்ண எடுத்திட்டு போயிடலாம்"என்று காலில் சுடுத்தண்ணியை ஊற்றிக் கொண்டது போல அவசர படுத்தினாள்.


"எதுக்கு அவசரம்? அவங்களுக்காக எல்லாம் என்னால அவசர அவசரமாலாம் எதையும் செய்ய முடியாது? நானா காத்திருக்க சொன்னேன் அவங்க வெயிட் பண்ணா நான் என்ன பண்றது? நீ அவங்களை பத்தி நினைக்காம நிதானமா உனக்கு பிடிச்சத பார் சக்கர !"என்றான் அழுத்தமாக, அவளும் அவர்களை ஒருதரம் பார்த்துவிட்டு மோதிரத்தை பார்க்கலானாள்.


"ரெண்டு மோதிரத்தை எடுக்க இன்னும் எவ்வளவு நேரம் தான்டா ஆக்குவாங்க?போய் என்னான்னு பாருடா உன் தம்பிய. அவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தான் எடுக்குறானா இல்ல ஊருக்கே எடுக்குறானா கேட்டுட்டு வாடா ? உங்க அப்பா வேற கொதிச்சி போய் இருக்கார். சீக்கிரமா வர சொல்லுடா !"என்று மூத்த மகனை ஏவி விட்டார்.


"அம்மா நான் போனா திட்டுவான் மா ! அவனே வரட்டும் " என சலித்துக் கொண்டான்.

"டேய் நீ மூத்தவன் டா ! அவனுக்குப் போய் பயப்படுற?"


"ஆமா மூத்தவன் தான் பேரு. ஆனா அவ தான் அப்படி நடந்துகிறான். அவன் பேச்சை தான் நீங்க கேக்கிறீங்க? அவன் இஷ்டப்படி நிச்சயம் பண்றான். ஆனா நீங்க என் ஆசையக் கூட கேட்காம  கல்யாணத்தை முடிச்சிட்டீங்க"என்று பிரதியை பார்த்து வருத்தத்துடன் சொல்ல அவள் முறைப்பில் அமைதியானான்.


"டேய் ! என்னடா சின்ன புள்ளை மாதிரி அவனோட போட்டி போட்டுட்டு இருக்க? அவன் பேச்சை நாங்க கேக்கறோமா ! கேக்க வைக்கிறான் டா எங்களை. நீ தான் பார்த்தேல நடுக்கடையில் நின்னுட்டு  எப்படி ஒரு செக் வச்சான்னு. அந்தப் பேச்சி திறமை உனக்கு இருக்கா? மூத்தது எல்லாம் மந்தமா இருந்தால் என்ன பண்றது?" என்று தீரனை கழுவி ஊத்த' இது உங்களுக்கு தேவையா?' ரீதியில் பிரதியின் பார்வையை அறிந்து தலை குனிந்துக் கொண்டான்.


"மோகனா ! பையன் அழகு மட்டும் இல்ல  ஸ்மார்ட்ல. உங்க  அண்ணனையே லாக் பண்ணிட்டானே ! "என்று துணிக்கடையில் நடந்த விடயத்தை மீண்டும் அசைப்போட்டார் மணிமாறன். தாயிடம் மிரட்டல் விடுத்தவனை  எதிர்கொண்டார் கங்காதரன்.


" மாப்பிள்ளை, நிச்சயத்தட்டு மாத்தி உறுதிப் படுத்திக்க தான் போறோமே !  எதுக்கு மோதிரத்தை மாத்தணும்?" வாய்க்கு வந்ததைக் கேட்டார்.


"நீங்க தட்டை மாத்திக்கிறது உங்களுக்காக ! நாங்க மோதிரம் மாத்திறது எங்களுக்காக.ஊறரிய நிச்சியம் வச்சி எல்லாருக்கும் இவங்க தான் பொண்ணு மாப்பிள்ளை. இவங்க குடும்பமும் எங்க குடும்பமும் சம்மதம் வைக்க போறோம் சொல்றீங்க அதோட சேர்த்து மோதிரம் போடுறதுல என்ன மாமா இருக்கு? இதுல மேகாவோட நலனும் இருக்கு. நிச்சயம் இப்ப வச்சிட்டு சாலிடா  ஒன் மன்த் கழிச்சி கல்யாணம் வச்சிருக்கீங்க, அந்த ஒன் மன்த் அவளோட சேஃப்டிகாக தான் இந்த எங்கேஜ்மென்ட் ரிங்.  தாலி போல ரிங் சேஃப்டிக்கு  தான். கல்யாணம் ஆனா மட்டுமில்ல, நிச்சயமானக் கூட வேற யாரும் மேகாவை உரிமையா பார்க்க கூடாது மாமா !"பொட்டில் அடித்தது போல சொல்லி முடிக்க, அதற்கு பின் அங்கு அந்த வாக்குவாதம் நீடிக்குமா என்ன? இதோ மோதிரம் எடுக்க அவர்கள் அனுமதியுடன் வந்து விட்டான்.


"ஆமாங்க ரொம்ப நல்ல பையனாவும் இருக்கான். நம்ம கூட இருக்கிறத விட அவன் கூட இருக்கும் போது  என் மருமக  சந்தோசமா இருக்காள். அதுவே சொல்லிடுச்சி அவளுக்கு அவனை எவ்வளவு பிடிச்சிருக்குனு. ரெண்டு பேரும் இதே போல சந்தோசமா இருக்கணும். என்ன விதி  நமக்கு  அவ இல்லைனு எழுதி வச்சிருக்கும் போல !" சந்தோஷம் கலந்த வருத்ததுடன் சொன்னார்.


"அந்த விதி தான், நமக்கு நேகாவை கொடுத்திருக்கு. செல்ல வாயாடி கிடைக்க நம்ம கொடுத்து வச்சிருக்கணும் மோகனா ! "என்றிட, அதை கேட்டு முதலில் முறைத்தவர், பின் உண்மை என்பது போல் முறுவலித்தார். மேலும் ஒரு பெட்டியை எடுத்து வந்து அவர்கள் முன் வைத்து பார்க்கச் சொல்ல, அதில் பொறுமையிழந்த கங்காதரன், 


"மாப்பிள்ளை ! இன்னும் முடியலையா? சாப்பிடுற நேரம் வந்திடுச்சி. எல்லாருக்கும் பசிக்கும். கொஞ்சம் சீக்கிரமா பாருங்க மாப்பிள்ளை "என்றார்  பொறுமையாக, 


"என்ன மாமா பண்றது? உங்க பொண்ணு விரலுக்குள்ள எந்த மோதிரமும் போக மாட்டிக்கிது? விரல் தானா இது? நீங்களே பாருங்க" என்று அவள் கையை பிடித்து அவரிடம் காட்டிட, அவருக்கு தான் மகளின் கையை வருங்கால மாப்பிள்ளை என்பதையும் தாண்டி ஒரு ஆடவன் பிடித்திருப்பதைக் கண்டு சீற்றம்  கொண்டவர் தாடையை இறுகிய படி, "அவளுக்கு அப்படி தான் மாப்பிள்ளை. நாம வேணா நூல் சுத்தி போடுக்கலாம்"என்றிட, "இல்ல மாமா ! அப்படி வேணாம். இருங்க இதுல எதுவும் இருக்கானு பார்க்கிறேன்" என்று மீண்டும் அவன் தேடுதலில் இறங்க, எந்நேரம் வேண்டுமானாலும்  கொதிக்கும் எண்ணெய்யிலிட்ட கடுகாக பொறிய காத்திருத்தார்.


அவள் நீண்ட விரலுக்கு மோதிரம் கிடைத்தது, அதில் அவளுக்குப் பிடித்த இதய வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை  தேர்வு செய்தாள். அதைப் போல அவன் அளவிற்கு மோதிரம் எளிதில் கிடைத்தது.

அம்மோதிரத்திற்கு அவனே பணம் செலுத்த எத்தனிக்க, "மாப்பிள்ளை நீங்க எடுத்த ரெண்டு மோதிரத்திற்கு நான் பணம் கொடுத்திடுறேன்"என்று அவர் வழிய வந்து கேட்க, "வேணாம் மாமா ! நிச்சயம் பண்ணறது வேணாம் உங்க ரெண்டு பேரோட முடிவாக இருக்கலாம். ஆனா, மோதிரம் மாத்திறது முழுக்க முழுக்க என் முடிவு. அதுனால பணமும் என்னோடதா தான் இருக்கணும்"என்று சொல்லிவிட்டு அங்கிருப்பவர்களைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பணத்தை செலுத்த சென்றான்.

குணசேகரனுக்கு கங்காதரனை  ஏறெடுத்து பார்க்கவே முடியவில்லை. மகனின் செயலை அவரிடம்  விவரித்து சமாதானம் செய்ய முடியாமல் தவித்தார்.


அனைத்தையும் முடித்துக் கொண்டு, வெளியே வந்தனர், அனைவரின் வயிறு கபகபவென இருக்க,  சைவ  உணவகத்துக்குள் படையெடுத்திருந்தனர்.

அவரவர் இடம் தேடி அமர, பின்னால் வந்த மேகாவோ 'எங்க அமர?' என்று யோசிக்கும் வேளையில் தான் "மேகா ! இங்க வா !"என்றழைத்தான் ஆரன். "மேகா மா இங்க வா !"என கங்காதரனும் ஒரு பக்கம் அழைக்க, அவள் எங்கு சென்று  அமர முழித்து நின்றாள்

Comments

  1. Ha ha !! Parents can’t enforce military rules at home like Gangatharan

    ReplyDelete
  2. சித்ரா ஹரிதாஸ்September 11, 2024 at 3:14 PM

    நன்றி மா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2