வரன் - 11

 





மேகாவிற்கு நிச்சயப்பட்டு எடுக்க வந்த பெண்கள் அனைவரும் தனக்கு எதிரே இருந்த அந்த ஆண் ஊழியரை வேற்றுகிரக வாசியைப் போல பார்த்தனர். " தம்பி, பொண்ணுக்கு நாங்க இப்போ தான் நிச்சயத்துக்குப் பட்டு எடுக்க வந்திருக்கோம். நீங்க என்ன ஏற்கெனவே எடுத்து பில் போட்டாங்கனு சொல்றீங்க. நல்லா பாருங்க வேற யாராவது எடுத்து வச்சிருக்க போறாங்க" என்று விவரமாக பேசுவதாக எண்ணிக் கூறினார் மோகனா.


"அம்மா ! மணமக்கள் பேர் மேகவர்ஷினி  ஆரன் தானே" எனச் சரியாக அவர் சொல்ல, "ஆமாம்" என்றனர் பெண்கள் கோரஸாக. "அப்போ,  இது தான் பொண்ணுக்கு எடுத்த நிச்சயப்பட்டு" என்று அவர்களிடம் மீண்டும் அதை நீட்டினார். பெண்கள் அனைவரும்  விளங்காத பார்வையைப் பார்த்துக் கொண்டனர். ஆனால் எல்லாம் தெரிந்த மேகாவோ தாய்மார்ளும் அத்தைமார்களும் குழம்பி நிற்பதைக் கண்டு உள்ளக்குள் சிரித்துக் கொண்டாள்.


"யார் இந்தச் சேரிய செலக்ட் பண்ணி பில் போட்டது?" நேகா கேட்கவும்" மிஸ்டர் ஆரன்"என்றார். அனைவரின் வாயும் 'ஆ-வென' விரிந்தன.


தேவகி, பக்கத்தில் நின்ற மருமகள் பிரதியிடம்"பார்த்தீயா பிரதி ! உன் கொழுந்தன் பண்ண வேலைய, இவனே பட்டுச்சேலையையும் எடுத்து காசையும் கொடுத்திருக்கான். அப்றம் எதுக்கு நம்மளையும் சம்மந்தி வீட்டுக்காரங்களையும்  முக்கியமா அந்தப் பொண்ணையும் வரச் சொல்லணும்? காசுக்குப் பிடிச்ச கேடா. உன் கொழுந்தன் பண்றதெல்லாம் பார்த்தால் என் புருஷன் கிட்ட என்னை வாங்கிக் கட்டிக்க, வைக்கத் தான் போறான்" என்று நொடித்துக் கொண்டார்.


தனா, கங்கா இருவரும் தன் மருமகனை எண்ணி மெச்சிக் கொண்டனர். மோகனாவோ"இதுக்கு எதுக்கு பொண்ணு வந்தே ஆகணும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க  கங்கணம் கட்டிக்கிட்டாக ?"என சலித்துக் கொண்டார். நேகா, இங்கு நடக்கும் கூத்தைக் கண்டு புரியாமல் தமக்கையை பார்த்தாள். அதற்கு எதிர்விதமாக நகைச்சுவையைப் பார்த்தது  போல் சிரித்துக் கொண்டிருந்தாள் மேகா. அதில் 

கொஞ்சம் தெளிவானவள், "இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா மேகி !" எனக் கேட்டு காதைக் கடித்தாள்.

"தெரியும்..."என்ற மேகா, இருவரும் பேசிக் கொண்ட முந்தைய நாளை நினைத்து பார்த்தாள்.


சாங்கோபாங்கமாக கறுத்து விட்ட, ககனத்தில் விலாசியும் வான்முகிலும் கண்ணா மூச்சி ஆடும் சோபையை சாளரம் வழி கண்டுக் கொண்டவளின் முகம், அவ்விலாசியின் பிரதியாக இருந்தது. 


உவகைக்  கொண்ட உள்ளம், உள்ளிருப்பவனை நாடியது. இருவர் பேசிக் கொள்ளும் நேரத்தை கடிகாரம்  இன்னமும் எட்டவில்லை. அந்நேரம் சீக்கிரம் விரைய காத்திருக்கிறாள்  அப்பாவை. அவனுக்காக அவளை காக்கும் படி மாற்றி விட்டான் அவன். இதுவரை இரவு பத்து மணியை பார்த்திராதவள்,  இப்போதெல்லாம் இரவு பத்து மணிக்காக காத்திருக்கிறாள். அவனும் அவன் காதலும் அலைபேசியில்  தொணிக்கும் அவன் குரலும் அவளுக்குள் செய்த ஜாலங்கள் ஏராளம். அதை அவளால் விவரிக்க  முடியவில்லை. தந்தையின் வார்த்தையைக் கனவில் கூட  மீறாதவள், இன்று யாரோ ஒருவனுக்காக மீறி அனைத்தையும் செய்கிறாள். அடிமையாகல்ல அவள் அவளாகச் செய்கிறாள். எங்கிருந்து அவளுக்கு 'இந்தச் துணிச்சல் வந்தது?' என்று கேட்டால் அவளுக்கே அது மர்மம்  தான். அலைபேசியில் உரையாடக் கூடாது  என்று தந்தை கறராகச் சொல்லிய பின்னும், தினமும் இரண்டு மணிநேரம் பேசமுடியாமல்  அவளால் இருக்க முடியவில்லை.


தந்தையின் அனுமதியின்றி எங்கும் செல்லாதவள், இன்று  தன்னவனின் தேரில் சென்றதுமில்லாமல் இரண்டு முறை அவனோடு காபிக் கடைக்குச் சென்றிருக்கிறாள். தந்தையின் நூற்பாவையாக இருந்தவள், இன்னொருவனின் அசைவிற்கு ஆடுகிறாள். 'அவன் வந்த குறுகிய நாட்களில் அவளுக்குள் இத்தனை மாற்றாங்களா?'


தன்னையும் இக்காதலை ருசிக்க வைத்து அதை உயிரமுதமாய், அதனின்றி இருக்க முடியாது என்பது போல தனக்குள் ஊறெடுக்க வைத்து விட்டானே ! கிராதகனின் காதலால் என்னென்ன  விழைய போகிறதோ என்னில். அவனுக்காக என்னென்ன செய்ய போகிறோமோ !' தன்னிலை எண்ணி வெட்கம் கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள். சரியாக அவளவனும் அவனை நினைத்த நொடியில் அது நானே என்பது போல அலைபேசியில் வழியே வந்து விட்டான்.


வேகமாக காதில் வைத்தவள்,அவனழைக்கும் ஒற்றை வார்த்தை, அவ்வார்த்தை போல  உள்ளெங்கிலும் சக்கரையாக இனித்தது."ஓய் சக்கர ! எனக்காக தான்  வெய்ட்டிங்கா?" என்றவனின் குரலில் மயங்கித்தான் போனாள்.


"ஓய் என்ன பதிலே இல்ல?! என்னாச்சி?"என்றான்."ஒன்னில்ல" என்றாள். ஆனால் அவள் குரலில் இருந்த மலர்ச்சியே அவனுக்கு சேதியை சொல்லிவிட்டது.


"நிஜமா ஒன்னுமில்லையா?" தெரிந்தும் சந்தேகத்துடன் கேட்டான்." நிஜமா ஒன்னுமில்ல"என்றாள் அவனைக் கடுப்பேத்திட, "அப்ப ஓகே, நான் வச்சிடுறேன்" என்றதும், அதிர்ந்தவள், "இல்ல... இல்ல... இருக்கு இருக்கு" என்றாள்.உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், "என்ன இருக்கு?" என்றான் தெரியாததைப் போல்." பேச  நிறையா இருக்கு, சொல்ல நிறையா இருக்கு" என்றாள் வழிந்து கொண்டு.


"ஓ... என்கிட்ட பேச நிறையா  இருக்கா?  அப்போ பேசு, விடிய விடிய  கேட்கறேன் சக்கர !" 


"ஏதே விடிய விடிய பேசணுமா?" 


"நீ தான சொன்ன பேச நிறைய இருக்குனு, இந்த இரவு போதுமா என்ன?"


"போதாது தான். ஆனால் விடிய விடிய உன்கிட்ட பேச, இன்னும் நேரம் வரல. வந்ததும் விடிய விடிய என்ன விடிஞ்சப் பின்னும் பேசறேன்" என்றவளே அவனுக்கு எடுத்துக் கொடுக்க, "அந்த  நேரம் வரும் போது விடிய விடிய பேசலாம் முடியாது சக்கர பேசறதுக்கு அங்கே வேலையும் இல்ல  

ஒன்லி லவ்மேக் தான். ஸோ இப்பயே பேசிடு உனக்கு நான் டைம் குடுக்கிறேன்"என்றவன் அவள் முகத்தில் நாண நேரகையை படரச் செய்தான்.


"பச்... சும்மா இருங்க ஆரன்" என்றாள் வெட்கிய படி."இன்னும் நான் எதுவுமே பண்ணலையே சக்கர !" மேலும் தீரியை தூண்டுவதைப் போல அவள் நாணத்தை தூண்டி விட்டான்.


"ஆரன்ன்ன்.." என  செல்லமாக சிணுங்கியவளை அள்ளி அணைக்க ஆசை தான் ஆனால் அருகில் இல்லையே என்று கடுப்பில் மெத்தையை குத்தினான்."என்னை பேச விடுங்க" என்றதும் அவனும் அமைதியாக  சமத்தாக அவளைப் பேச விட்டான்." ரொம்ப தேங்க்ஸ் ஆரன் ! நீங்க சொல்லி தான் அத்தை, இங்க வீட்ல பேசி என்னையும் ட்ரெஸ் எடுக்க கூட்டி வரச் சொன்னாங்கனு தெரியும்.

அப்பா என்னை கூட்டிட்டு போக மாட்டேன் சொல்லிட்டார். நீங்களும் வேற வந்தே  ஆகனும் சொன்னீங்களா? என்னால உங்களையும் அப்பாவையும் மீறி எதுவும் செய்ய முடியல, ரொம்ப தவிச்சிட்டு இருந்தேன். ஆனா நீங்க எனக்காகப் பேசி, ட்ரெஸ் எடுக்க வர பெர்மிஷன் வாங்கிக் கொடுத்திருக்கீங்க தேங்க்ஸ் ஆரன்" என்றாள் மகிழ்ந்து. ஆனால் அவன் முகம் இறுகியது.


"ஆனா சக்கர, இதே போல  நான் எப்பையும் இருப்பேன் நினைக்காத  ! அப்படி நான் தான் செய்யணும் நீ எதிர்பார்த்தால், உங்க அப்பாக்கும் எனக்கும் நம்ம மேரேஜ்க்கு முன்னாடியே முட்டிக்கும், மருமகன் மாமனார் சண்டைப் போடுவோம் உன்னால பார்த்துக்க"என்றதும் அதிர்ந்தவள், "நீங்க  என்ன சொல்றீங்க?"


"உன் கழுத்துல என் தாலி ஏற வரைக்கும் நீ என் பிராபர்டி இல்ல. உங்க அப்பா பிராபர்டி  தான். ஸோ உனக்கு பிடிச்சத செய்ய, நீ அவர் கிட்ட தான் பெர்மிஷன்  கேட்கணும். நான் உனக்காக வர முடியாது. அப்படியே  உனக்காக வந்து பேசினாலும் இந்த விஷயம் போல சுமுகமாக முடியும் சொல்ல முடியாது சக்கர ! எனக்கும் அவருக்கும் பயங்கர சண்டை வரும். என் பொண்டாட்டி விருப்பத்துக்கு முட்டு கட்டய  போடுறவருக்கு நான் எப்படி மரியாதை கொடுப்பேன் சொல்லு. உங்க அப்பாக்கும்  எனக்கு சண்டை தான் வரும் தேவையா? வருங்கால மாமனாரோட  முட்டிட்டு நிக்க நீ தான் காரணமா இருப்ப ! அதுனால தயவு செய்து அப்பா என்ன நினைப்பார்? ஆட்டிகுட்டி என்ன நினைக்கும் நீ பயப்படுறத விட்டுட்டு, தைரியமா உனக்கு என்ன தேவையோ, உனக்கு என்ன விருப்பமோ, அதை அவரிடம் கேளு. அவர் கிட்ட பேசு. அப்பாவா இருந்தாலும் உன் வாழ்கையில உன் விருப்பம் தான்  இருக்கணும். ஆனா நீ உன் வாழ்க்கைய அவர் கையில கொடுத்துட்டு உங்க விருப்பம் போல செய்ங்க சொல்றீயே சக்கர. அவரும் என்ன பண்ணுவார்? அவர் இஷ்டத்துக்கு உன்னை ஆட்டி வைக்கத் தான் செய்வார். உன் வாழ்க்கையில உன் ஆசைக்கு உயிர் கொடுக்கறதும் அத புதைக்கிறதும் கூட உன் விருப்பமா தான் இருக்கணும் உங்க அப்பா விருப்பத்துக்கு விடாத ! அதுக்காக உன்னை அப்பாக்கு பொண்ணா இருக்காதனு சொல்லல, அவர் பெண்ணாக இருந்தாலும் உன் வாழ்க்கை உன் இஷ்டப்படி இருக்கணும் புரியுதா சக்கர ?"என்று அறிவுரையை அவளுக்கு போதிக்க, அந்தப்பக்கம் பேரமைதி, " இருக்கீயா சக்கர !"என்றான் மென்மையாக, " இருக்கேன்  ஆரன்"என்றாள் சுரமின்றி.

"என்னாச்சி என் மேல எதுவும் கோவமா, நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?" 


"இல்ல ஆரன், நீங்க சொன்னது சரிதான்.  ஆனா, என்னால எங்க அப்பாவ மீறி என் விருப்பத்தை செய்ய எனக்கு துணிவு துளிகூட இல்லை. இது வரைக்கும் அவர் வார்த்தையை மீறனதும் இல்லை. ஆனா நீங்க வந்த பிறகு இப்போ எல்லாம் அவரை நான் பயந்து பயந்து பார்க்கறேன். அவருக்கு தெரியாம தான் உன்கிட்ட பேசுறேன், உங்க கூட காபி சாப்'க்கு வந்தேன். இதெல்லாம்  தெரிஞ்சால் என்னை அவர் என்ன நினைப்பார்னு நினைக்கும் போதே உள்ளுக்குள் புளியக் கரைக்குது ஆரன். இந்த பயம், இன்னைக்கி நேத்து   வந்ததது இல்ல சின்ன வயசில இருந்தே இருக்கு, மாத்த முடியாது ஆரன்"என்று தன்னிலையை அவள் விளக்க, அவனுக்கு தான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 


" சரி, உங்க அப்பா வார்த்தை நீ மீற வேணா மேகா. ஆனா  உன்னால என் விருப்பமும் இங்க பாதிக்கப்படுதே. நானும் ஏன் உன்னை போல என் விருப்பத்தை உங்க அப்பாக்காக இழக்கணும்? இப்ப நடக்கப் போற  நிச்சயத்திலிருந்து கல்யாணம் வரைக்கும் நம்ம ரெண்டு பேரோட குட்டி குட்டி ஆசைகளும் விருப்பங்களும் தான் இருக்கணும்  நினைக்கிறேன். ஆனா உன்னால அதெல்லாம் தடைப்படுது உனக்கு புரியுதாடி? உன்னை போல என் மேரேஜ இன்னொருத்தர் கையில் கொடுத்துட்டு என்னால் வேடிக்கைப் பார்க்க முடியாதுடி. முழுக்க முழுக்க என் விருப்பமும் உன் விருப்பமும் மட்டும் தான் இருக்கணும். இப்ப நான் எங்க வீட்ல பேசலேனா, நீ நாளைக்கு வர மாட்ட தான?"என்று ஆவேசமாக அவளிடம் கேட்டான் பதிலுக்கு  அங்கிருந்து விசும்பல் தான் வந்தது.


"சக்கர அழறீயா நீ?" அதிர்ச்சியோடு கேட்டான். அவள் அமைதியாக  இருந்தாள்.


"சக்கர !"


"ம்ம்..." என்று முனங்கினாள்.


"ஏன் அழற?" 


"என்னால நீங்க சொல்ற படி இருக்க முடியல. நான் அப்பா பேச்சை கேட்டு அப்பாக்கு பயந்தே வளர்ந்துட்டேன்.  எனக்கு அவரோட வார்த்தையை மீறுற தைரியமும் இல்ல.ரெண்டு பேருக்கு நடுவுல  இருந்துட்டு யார் பேச்சை கேக்குறதுனு குழம்பித் தவிக்கிறேன். என்னால் எங்க அப்பாவும் நீங்களும் கஷ்ட்டபடக் கூடாதுனு நினைக்கிறேன். ஆனால் உங்க ரெண்டு பேருக்கு இடையில் நின்னுட்டு மாட்டிட்டு கஷ்டப்படுறேன். என்னால உங்க ஆசையும் பாதிக்கப்படுது. என்னால உங்க ஆசை தடைப்பட  வேணாம், நீங்க உங்களுக்கு ஏத்த மாதிரி தைரியமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க ஆரன்.நான் உங்களுக்கு வேணாம்" என்று வெளிய வந்த அழுகையை உள்ளிழுத்து கொண்டு வார்த்தையை விட்டாள் மேகா.  பாவம் எதிரில் மட்டும் அவன் இருந்தால் கன்னம் பழுத்திருக்கும். ஆனால் அவளது நல்ல நேரம் தப்பித்து விட்டாள்.


"நீ என்ன பைத்தியமாடி? உன்னால் என் ஆசை தடபடுத்துனு சொன்னா,  நீ என்ன என்னை வேற பொண்ண கல்யாணம் பண்ண சொல்ற, சுத்தமா அறிவின்றது இல்லாம போச்சா என் மக்கு டீச்சரே ! என் மேரேஜ்ல முழுக்க முழுக்க என் விருப்பம் தான் இருக்கணும் சொன்னேனா, அதுல முதல் விருப்பம் நீ !. என் ஆசையே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறது தான்டி. உன்னை லவ் பண்றேன்டி, வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்க சொல்ற, நீ மக்கு டீச்சர் தான். அதுக்குனு அப்பப்ப ப்ரூவ் பண்ணிட்டே இருப்பீயா?"எனப் கோபத்தின் உச்சிக்கே சென்றவன் அவளுக்கு பதில் பற்களை அரைத்து கோபத்தை அடக்க முயன்றான்.


"நான் ஒன்னும் மக்கு டீச்சர் இல்ல !" முணுக்கென்று கோபம் வந்து அவளுக்கு.

"ஆஹான்... மக்கு டீச்சர் சொன்னா மட்டும் மேடமுக்கு கோபம் சுர்னு வரும் மத்த விஷயத்துல அப்படியே சைலண்ட் இருக்கறது. எப்படிடி என்னை இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்க சொல்ல உனக்கு மனசு வந்துச்சி? அப்ப நீ என்னை காதலிக்கல அப்படித்தான? உங்க அப்பாக்காக தான ஒத்துக்கிட்ட ? உனக்கு என் மேல காதல் இல்லேலடி"வலியுடன் கேட்டாலும்,அவள் இல்லை  என்று மறுக்கும் பதிலை எதிர்பார்த்திருந்தவனின் நெஞ்சில் பாலை வார்த்தால் பெண்ணவள்.


"அப்பா விருப்பத்துக்காக தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன், ஆனா உங்கள் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது முழுக்க முழுக்க என் விருப்பம் தான் ஆரன்.  உங்கள் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னபோ உங்கள காதலிக்கல. ஆனா  இப்போ உங்கள நான் மனசார காதலிக்கிறேன் ஆரன்"என்றவளின் வார்த்தை அவனை விண்ணைத்தாண்டி எங்கோ கொண்டு சென்றது.


"அப்ப ஐ லவ் யூ சொல்லுடி சக்கர"என்று கோபத்தில் இருந்தவன் அக்கோபம் தடம் தெரியாமல் போகக் கேட்டான். அவன் அவ்வாறு கேட்க, அழுகையும் சோகமுமாக இருந்தவளின் முகம் மாறி நாணிக் கோணிப் போகோ வெட்கத்தில் "ம்கூம் மாட்டேன். இப்போ  சொல்லமாட்டேன்"என்றாள்.


"வேற எப்போ?" எனக் குழைந்தவனின் குரலில் அகப்பட்ட  உணர்வு அவளுக்குள் ஆட்டிப்படைத்தது." சொல்லுவேன் நம்மளுடைய ஸ்பெஷல் டே ல !"என்றாள் வெட்கம் கொண்டு.


"பர்ஸ்ட் நைட் ல  எல்லாம் முடிஞ்சதுக்கு அப்றம வா !" என்றதும் தேகம் முழுக்க 

சிவந்து போனாள்"ஆரன்ன்ன்..." என்றாள் கூச்சத்தில்." சரிடி நீ சொல்ல போற நாளுக்காக, இந்த ஆரன் ஈகர்லி வெயிட்டிங்டி சக்கர !" என்றவன் சிறு இடை வெளி விட்டு, "ஸாரி சக்கர ! எனக்கு நீ அப்படி  சொன்னதும் ஏத்துக்க முடியல ! உன்னை மேரேஜ் பண்ணிக்க என்னென்ன செஞ்சேன் உனக்கு தெரியும். தெரிஞ்சும் நீ அப்படி சொன்னது சட்டுனு கோபம் வந்துட்டு சக்கர ! வெரி ஸாரி. ஆனா இனி இப்படி பேசாத ப்ளீஸ் ! நான் உன்னோட சிட்டுவேசனை அன்டர்ஸ்டென்ட் பண்ணிக்கிறேன். கல்யாணம் முடியற வரைக்கும்  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்டி. அதுக்காக வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்லாத ! எனக்கு இந்த மக்கு டீச்சர் தான் வேணும்" என்றவனின் பேச்சில் பெருமூச்சு விட்டாள்'அவன் இவ்வளவு  தூரம் இறங்கி வந்ததேபெருசென்று' நிம்மதி கொண்டவளுக்கு கடைசி வாக்கியம்  அவனது அசைக்க முடியாத காதலை உணர்த்தியது.


"சக்கர உன் வாட்ஸப்க்கு ஒரு வீடியோ அனுப்பிருக்கேன் பார்த்துட்டு பிடிச்சிருக்கானு சொல்லு" என்று காலை கட் பண்ணினான். அவளும் புலனத்தில் அவன் அனுப்பிய காணோலியை திறந்து பார்த்தாள்.  ஆகாய நிறத்தில் வெள்ளி ஜரிகை வைத்த பட்டு புடவையை முழுமையாக 

கட்டாமல் பாதி விரித்து காட்டிருந்தனர்  அந்தக் காணோலியில் முடிய  மீண்டும் திரையில் அவனே வர, "பிடிச்சிருக்கா?"என்றான்.


"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு !"என்றாள் துள்ளலாக,"நம்ம எங்கேஜ்மெண்டுக்கு நீ கட்ட போற சேரி !" என்று அவளை அதிர்ச்சி ஆக்கினான். "என்ன சொல்றீங்க ஆரன்? இந்த சேரி எ... எங்கெஜ்மெண்ட் சேரியா?"


"ஆமா சக்கர, இது உன் எக்கேஜ்மெண்ட் சேரி தான். நானே கடைக்கு போய் உனக்கு பிடிச்ச கலர்ல எடுத்துட்டு வந்தேன். விலை எவ்வளவுனு கேட்காத. நீ கேட்டாலும் சொல்ல மாட்டேன்" என்றான் சன்னம்மாக."ஆனா நாளைக்கு தான் எல்லாரும் சேரி எடுக்க போறோமே ! அதுக்குள்ள ஏன் எடுத்தீங்க?"


"நாளைக்கு எப்படியும் உனக்கு புடிச்ச கலர்ல சேரி யாரும் எடுக்க மாட்டாங்க ! நீயும் கேட்கவும் மாட்ட. அவங்க சொல்றதுக்கு தலை ஆட்டிட்டு நிப்ப. அதுக்கு தான் நானே பார்த்து பார்த்து உனக்கு பிடிச்ச கலரா எடுத்திருக்கேன். நாளைக்கு  இதை தான் எங்கெஜ்மெண்ட் சேரினு சேல்ஸ்மென் அவங்க கிட்ட நீட்டவார், பில் பே  பண்ணியாச்சினு சொல்லுவார். அவங்களும் கப் சிப்னு வாயை மூடிட்டு வாங்கிட்டு வருவாங்க !ஸோ என் சக்கர அவளுக்கு பிடிச்ச சேரிய தான்  நிச்சயதுக்கு காட்டணும் அதுக்கு தான். உனக்கு ஹாப்பியா சக்கர !" எனக் கேட்க, அவனுக்கு எங்கே தெரிய போகிறது அவளது ஆனந்தக் கண்ணீர். 

அவன் காதலை எப்படி எல்லாம் காட்டி தன்னை அவன்பால் ஈர்க்கிறான் என்று. அவனை போல காதலிக்க தன்னால் முடியுமா என்ற கேள்வியே அவளுக்கு  அப்பத்தமாக இருந்தது. ஏனெனில் அவளுக்கும் சேர்த்தே அவன் காதலிக்கிறான் அல்லவா !


"சக்கர !"என்றதும்" ரொம்ப லக்கி நான் ஆரன். என் மேல் கோபம் இருந்தாலும் நீங்க என்னை வேணான்னு சொல்லிட மாட்டீங்க தான?" என்றவள் அவனுக்கு வளர்ந்த குழந்தை தான்.முன் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள சொன்னவள், இப்போது இவ்வாறு கேட்க அவனுக்கு சிரிக்கிறதை தவிர  வேற என்ன செய்வதென்று தெரியவில்லை.


"என் மக்கு டீச்சரே ! என் சக்கரையே ! உன்னைய விட்டு போகவா ! நான் என் அப்பாவையும் மீறி இவ்வளவு செய்றேன்னா, புரிஞ்சிக்கோடி நீ தான் எனக்கு கடைசிக் காலம்  வரைக்கும் எல்லாமே ! ஒரு தடவ இது எனக்கு தானு நான் முடிவு பண்ணிட்டால், அது எப்பையும் எனக்கு மட்டும் தான். கடைசி அது வரைக்கும் என் சொந்தமா இருக்கும், இருக்கணும்  உன்னை உட்பட சக்கர  சம்ஜே !" என்றவனின் பேச்சு, இப்போது இனித்தாலும்  பின்னாடி கசக்கப் போவதை அறியாது மலர்ந்து போனாள் பெண்ணவள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2