இதயம் - 50

மூன்று மாதங்களுக்கு பிறகு...


சாந்தியின் கைகள் , சமையலறையில் பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அவர் தாழிக்கும் வாசனை மூன்று அறையிலும் வசிக்கும் மக்களின் மூக்கையும் துளைத்தெடுத்தது.


வாசனை மூலம் அம்மக்களுக்கு  தூது அனுப்பியவர், மகள்கள் இருவருக்கும் மதிய  உணவை பாத்திரத்தில் அதக்கிக் கொண்டிருந்தார்.


மகன் இல்லாத இவ்வேளையில் மகளாகி போனாள் வைஷு.  வைஷு வந்ததும் மகன் வந்து விடுவான் என்று நினைத்தார். ஆனால் அவள் வந்தும் அவன் வரவில்லை. 'அவன் எங்கு இருந்துக் கொண்டு  கஷ்டப்படுகிறான்? ' என்று அவருக்கு கவலையாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். மீறி காட்டினால் வைஷுவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியது  தான்.


'விட்டுச் சென்றவனை  நினைச்சி அழுதா மட்டும் வந்திடுவானா??? உங்களை என்னையும் வேணானு நினைச்சி  தான போனா ! அவன நினைச்சி ஏன் அழறீங்க?? அவனுக்காக அழுதீங்க அப்றம் நானும் எங்கயாவது போயிடுவேன். உங்கப் பொண்ணுங்க  நாங்க இருக்கும் போது  உங்க பையன மனசு தேடுதா??? பிச்சு... பிச்சு... !"என செல்லமாக மிரட்டினாலும் அதிலிருக்கும் அவளது கோபம் சரி என்பதால் அவரும் அமைதியாக மகனை மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். 


இங்கே தலை வாரிக் கொண்டிருக்கும் வைஷுவுக்கும் கூட அவனது நியாபகம் தான். 


எப்பவும் கண்ணாடி முன் நின்றாலே  கட்டியணைத்து கன்னங்கள் உரசி அவளோடு சேர்ந்து அவனும் முகம் பார்ப்பான் ; முத்தம் வைப்பான் ; இன்னும் சில சில்மிஷங்கள் செய்து அவளிடம் அடி வாங்குவான். அந்த அழகான 

தருணம் எல்லாம்  முன் திரையில் படமாக ஓட லேசாக விழியோரத்தில் துளிர்த்தன கண்ணீர் துளிகள். அதை துடைத்துக் கொண்டவள் கண்ணாடியில் தெரிந்த அவன் புகைப்பட பிம்பத்தை கண்டதும்  சீப்பால் அடித்தாள்.


'நாயே ! காதலிச்சிட்டு,  எல்லாத்தையும்  முடிச்சிட்டு என்னை விட்டுட்டு தனியா போய் இருக்கேல. பொறுக்கி நாயே ! நீ இருக்கற இடம் மட்டும் தெரியட்டும் வந்து உன்னை கொன்னுட்டு கொலை கேஸ்லே உள்ள போறேனா இல்லையானு பாருடா ! 


நீ என் கண்ணுல பட்ட அன்னைக்கி தான்டா மவனே உனக்கு கடைசி நாளு ! ' என்றவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர கண்ணீரும் பொசுக்கென விழுந்தன.


'இவனுக்காக  நான் ஏன் அழனும்? அழ மாட்டேன்... அழவே மாட்டேன்"என்று கத்தி அழாத குறையாக அழுதாள்.


"வைஷு..." வெளியே சாந்தியின் குரல் கேட்க "வர்றேன் அத்த!"என்று பதில் அளித்துவிட்டு, நேராக குளியலறைக்குள் நுழைந்து முகத்தை கழுவி துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.


அங்கே அவளுக்காக  கூடத்தில் நவநீதனும் அவனது உட்பி தாராவும் 

தங்கள் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்திருந்தனர். 


நவநீதனை பற்றி அவளுக்கு எல்லாம்  தெரியும் என்பதால் அவர்களை சாதாரணமாகவே வரவேற்றாள் வைஷு. 


"வாங்க நவீ  ! வாங்க தாரா ! எப்படி இருக்கீங்க??"என்று  கேட்டு பின் மூன்று குடும்பத்தின் நலனை குசலம்  கேட்டு விட்டு சாந்தியிடம் அழைப்பிதழை நீட்டி "கண்டிப்பாக வர வேண்டும் "என்று சொல்லிக் கொடுத்தனர் இருவரும். அவர்களும் வருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். 


"கல்யாணம் ஊட்டில மா ! குடும்பத்தோட வந்திடணும்..."என்றவன் வைஷுவின் புறம் திரும்பி 


" வைஷு, உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..."என்றான்.


"ம்ம்..."என்று நீள் விருக்கையில் அமர்ந்திருந்தவள் எழுந்து அவனை அறைக்கு அழைத்து சென்றாள். 


"சொல்லு நவீ !"என்றாள்.


"சைத்து  எங்க இருக்கான் தெரிஞ்சிக்கிட்டீயா??" என கேட்கவும் அவள் அமைதியாக தரையைப் பார்த்து நின்றாள். 


"சைத்துவ நான் பார்த்தேன் வைஷு !"என்றதும் அதிர்ந்தவள் 'எங்கே?'என்பது போல விழியால் வினவ "ஊட்டில, அவன் பிரண்ட் வீட்ல !"என்றவன் உண்மையை விளக்கினான்.


"இனியும் அவன் வருவான் வெயிட் பண்ணாத ! நேரடியா களத்துல இறங்கிடு வைஷு ! அவன் உன்ன அங்க எதிர்பார்த்திருக்க மாட்டான். முன்னாடி போய் நின்னு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடு. இனி உன்னை விட்டுப் போக கூடாதுனு நினைக்கற அளவுக்கு அவனுக்கு நீ கொடுக்க போற ட்ரீட்மெண்ட் இருக்கணும்..."என்றிட, சிரித்தவள் "நன்றி" உரைத்தாள். 


"தேங்கஸ் நவீ !"என்றாள் மனதார,


"இதுக்காகவா நன்றி??"என்றான்.


"இல்ல எல்லாத்துக்கும். வதனா ஆண்டிய ஏத்துக்கிட்டத்துக்கு,  மனசு மாறி மேரேஜ்க்கு ஒத்துக் கிட்டதுக்கு... நீ எங்கே அப்படியே இருந்திடுவியோனு சின்ன பயமும் குற்றவுணர்வும் இருந்தது. ஆனா இப்ப இல்ல... ஆல் தி பெஸ்ட்"என்றாள்.


"பிராக்டிக்கலா யோசிச்சேன். நான் பண்றது எல்லாம் சரினு தோணுச்சி பண்ணிட்டேன்... எனக்கும் வாழ்க்கை இருக்கு என்னை சார்ந்து ரெண்டு ஜீவன்களும் இருக்கு. என்னை வைத்து அவங்களுக்கு நிறைய கனவுகளும் இருக்கும் அதை எல்லாம் அழிச்சிட்டு  காதல் தோல்வினு முத்திரை குத்திட்டு எல்லாத்தையும் இழந்து வாழ்றனால என்ன கிடச்சிட போது? அதான் மாறிட்டேன் மாத்திக்கிட்டேன் என்னை"என்றான் சாதாரணமாக, 


"ரொம்ப சரி நவீ ! இப்போ தான் ஹாப்பியா இருக்கு... உன் துணையோட நல்லது கெட்டது பார்க்க வாழ்நாள் மகிழ்ச்சியோடு வாழ என்னோட வாழ்த்துக்கள்"என்றாள். இருவரும் சிநேகிதமாகப் புன்னகைத்துக்  கொண்டனர்.



வந்த இருவரும் கிளம்பிட, அழைப்பிதழை பார்த்துக் கொண்டிருந்த சாந்தியிடம் திரும்பி "உங்கப் புள்ள  ஊட்டில, அவர் பிரண்ட் வீட்ல இருக்காராம் அத்த.  இவங்க  ரிசப்ஷனுக்கு டான்ஸ் குரூப் வேணும் புக் பண்ண போன இடத்தில உங்க புள்ளைய நவீ பார்த்திருக்கான். அவர் பிரண்டோட டான்ஸ் அகாடமில தான் வேலை பார்த்துட்டு இருக்காராம். அவரை என்ன பண்ணலாம்னு சொல்லுங்க பாஸ்???"என


தேடிக் கொண்டிருப்பவனின் மறைந்திருக்கும் இடத்தை அறிந்ததும்

அவனை போட்டு தள்ள திட்டமிடும் வில்லனை போல அவள் கேட்டிட, 


சாந்தியோ" உயிர மட்டும் விட்டு வச்சிட்டு  மத்ததெல்லாம்  உன் இஷ்டம் போல பண்ணிக்கமா ! சேதாரமானாக் கூட பரவாயில்லை ஆனா இங்க தூக்கிட்டு வந்திடு !"என்றிட,  இருவரும் ஹைபை போட்டுக் கொண்டு சிரித்தனர்.



*****


"ஐயோ ! அம்மா வலிக்குதே! அம்மாஆஆஆஆ" என வலியில் கத்திக் கொண்டிருந்தாள் வஸ்தி. உடனே பிரசவ வலி என்று  நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. வாங்க என்னவென்று பார்ப்போம்.


"ஐயோ ஐயோ  ! வெட்றானே பாவி !பாவி ! கஷ்டப்பட்டு நான் வளர்த்த நகத்தை எல்லாம் வெட்றானே ! இதை கேட்க யாருமில்லையா? ஒரு நாதியும் இல்லையா ?? ஐயோ ! டேய்... டேய்... அதாவது இருக்கட்டும் டா விட்டு வைடா !" என கெஞ்ச , அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாது வெகு நாட்களாக தன்னிடம் டிமிக்கி கொடுத்தவளை இன்று வளைத்து பிடித்து அவள் கையை அக்கத்தில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு விரலிலுமுள்ள வளர்ந்த நகங்களை கலைந்தான். 


இதமாக சுகமாக இருக்கிறதென்று மேடிட்ட வயிற்றை தன் கூர் நகங்களால்  புண்ணாக்காத குறையாக ஆடையின் மேல் நகத்தை  வைத்து சொரிந்து தள்ள, 'எங்கே அவ்விடம் புண்ணாகி விடுமோ?' என்ற பயத்தில் , 

அவனும்  இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான், தப்பித்து ஓடியவளைத் தாவி அவளது கைகளைப் பிடித்து நகங்களைப் பிடுங்க,  அழுகாத குறையாகக் கெஞ்சினாள்.


"என் காந்த்ல என் செல்லம்ல அந்தக் கட்ட விரல் நகத்தை மட்டும் விட்டுடேன் ப்ளீஸ்!!!!"என கெஞ்ச


" ம்கூம். அது தான் வெரி டென்ஞ்சரஸ் ! அதை தான் முதல்ல எடுக்கணும் "என முதலில் அதை வெட்டி போட,


"ஐய்ய்ய்யோ  போச்சே !" என துக்கம் விழுந்தது போல கவலைப் பட்டவள் "ஏன்டா இப்படி எல்லாம் பண்ற? " என்று இடது கையால அவன் புஜத்தை அடித்தாள்.


"பின்ன என்னடி பண்ண? அரிக்குதுனு சொரிஞ்சா பரவாயில்லை. நீ சுகமாக இருக்குன்னு  சொரிஞ்சு சொரிஞ்சு சுக பிரசவத்தை காட்டிலும் நீயே  நோண்டி நோண்டி உள்ள இருக்க பிள்ளை எடுத்து கையில கொடுத்திடுவ போல  ! 


நானும் இந்த அரிப்புக்கு டாக்டர் கிட்ட காட்டி அதுக்கான மருந்தையும்  மாத்திரையும்  கொடுத்துட்டு தான் இருக்கேன். இருந்தும் கொசு கடிச்சது போல வரட்டு வரட்டுன்னு சொரிஞ்சா, வயித்துல ஓட்ட போட்டுடுவ போல,  உள்ள இருந்து  என் புள்ள ஜன்னலுனு எட்டி பார்த்துடுவான்டி. 


அதுனால நீ  நகம் இல்லாம இப்படியே சொரிஞ்சுக்க என்ன...!"என இரு கைகளில் இருக்கும் நகத்தை  எல்லாம் வெட்டிவிட்டான்.


செடியிலிருந்து உதிர்ந்த பூவை கண்டு வாடுதை  போல அவள் விரலில் வளர்ந்த நகங்கள் எல்லாம் வெட்டி போடுவதை கண்டு வாடினாள் . நகம் இல்லாத விரலை கண்டு உதட்டை வளைத்து சிறு பிள்ளை போல அழுபவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு "கண்ணுல அழக் கூடாது மாமா ! உனக்கு  டைரி மில்க்..."என இடைவெளி விட்டவனிடம் "சிலக்கா? வாங்கி தரப் போறீயா??..." என ஆர்வமாக கேட்க,  இடது வலது புறமாக தலையை ஆட்டி "இல்ல... டைரிமில்க் பத்து ரூபாய் சாக்லேட் வாங்கி தர்றேனு சொல்ல வந்தேன்"என்றவனை. 


மண்டையில் 'நங்கு' என்று குட்டு  வைத்தாள். தலையை தேய்த்து கொண்டே" ராட்சஷிடி நீ ! இம்சைடி நீ ! உன் தொல்லைய தாங்கவே முடியலடி !"என என்றான் பல்லைக் கடித்து கொண்டு.


"ஓ... அப்போ உனக்கு தொல்லையா இருக்கேன்ல நான்... பரவாயில்லை இனி

உனக்கு  நான் தொல்லை கொடுக்கல. நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்"என எழுந்தவளை கண்டு தலையில் அடுத்துக் கொண்டு அவளை மீண்டும் பக்கத்தில்  அமர்த்திக் கொண்டான்.


இது போல பல முறை  அழுவது போல பாசாங்கு செய்து அவன் வாய் மொழியாக அவள் மீது வைத்திருக்கும் அன்பை கேட்டு கொள்வதில் அவளுக்கு அதில் அலாதி இன்பம்.


"பேசாம  ! உனக்கு பதில் நான் மசக்கை ஆகிருக்கணும்டி"என்றான். "ஏன்???" என்றவள் , அவனை அது போல கற்பனை பண்ணிக் கொண்டு சிரிக்க, அவளை முறைத்தவன்" நீ பண்ற தொல்லை எல்லாம் நானும் உனக்கு பண்ணிருப்பேன். இன்னும் அதிகமாகவே பண்ணிருப்பேன்"என்றான் பொய்யான கோபத்தில்.


"ஆஹான் !... "நக்கலாக அவனை பார்த்தவள், அவன் புஜத்தில் சாய்ந்துக் கொண்டு" இந்த மாசம் மட்டும் தான்டா உன்னை தொல்லை பண்ண முடியும், அடுத்த மாசம் எல்லாம் பண்ண முடியாதுடா !"என்று வருத்தமாகச் சொல்ல"ஏன்?"என்றான் சந்தேகமாக.


"அடுத்த மாசம் வளைகாப்பு வச்சி அம்மா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க.

குழந்த பொறந்து மூணு மாசம் அங்கே தான் இருக்க சொல்லுவாங்க..  எப்படி  உன்னை தொல்லை பண்றது??? நீயும் இங்க, நான் இல்லைனு ஜாலியா இருப்ப !" என உதட்டை வளைக்க, அதில் முத்தமிட்டவன், 


"ஆமா நானும் ஜாலியா தான் இருப்பேன். ஆனா இங்க இல்ல என் மாமியார் வீட்ல. மாமியார் கவனிப்புல. ஐயா !  ராஜா வா இருப்பேன்"என்று காலரை பின்னுக்கு இழுக்க, 


"ஐ ! அப்போ நீயும் என் கூட வந்திடுவீயா???"எனக் குதூகலமாக கேட்டவளின் நெற்றி முட்டி" நீ  என் கூட இருக்கும் போது தான் நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன். நீ இல்லேனா அங்க எனக்கு என்னடி சந்தோசம்? தத்தி !நீ தான் என் சந்தோசம்"எனவும் அவனை இருக்க அணைத்துக் கொண்டாள்.


*****



"மச்சி ! நாளைக்கு ஈவினிங்  ஒரு எங்கேஜ்மெண்ட் இருக்கு. நம்ம குரூப் தான்,  டான்ஸ்க்கு புக் பண்ணிருக்காங்க.

நீ கூட்டிட்டு போய்ட்டுவா ! நாளைக்கு நான் அம்மாவா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்"என்றான் கௌவுதம். 


"சரி டா ! எங்க என்கேஜ்மெண்ட்? டைமிங் அட்ரஸ் எல்லாம் கொடு ! நான்  நாளைக்கு நம்ம பசங்கள கூட்டிட்டு போயிட்டு வர்றேன் "என்றான் சைத்து. அவனும் அவனிடம் அழைப்பிதழை கொடுக்க இடத்தை மட்டும் பார்த்து விட்டு "சரி "என்றான் .


"உனக்கு துணைக்கு நிஷா வருவா,  என்ன ஹெல்ப் வேணும்னாலும் அவ கிட்ட கேளு"என்றதும் சைத்துவின் முகம் அஷ்டகோணலாகப் போனது.


"அவ கிட்டயா? டேய் உனக்கு வேற ஆளே  கிடைக்கலையாடா ! அந்த லூசு கிட்ட தான் என்னை கோர்த்து விடுவீயா? தயவு செய்து எனக்கு ஹெல்ப்க்கு வேற ஆள அனுப்பி வைடா அவ மட்டும் வேண்டாம்டா !"என்றவனை மேலும் கீழுமாக பார்த்தவன்" ஏன்டா அவளை வேணாங்கற?"


"அந்த லூசு என்னை லவ் பண்றேன் டார்ச்சர் பண்ணுதுடா ! நானும் பொம்பலை புள்ளை ஆச்சே  ! பொறுமையா  எடுத்து  சொன்னா கேட்கவே மாட்டிக்கிறா !பிடிக்கலனு  சொன்னா பிடிக்க வைக்கிறேன் சவால் மாதிரி விடுறா என்ன டா பண்ண அவளை??" கடுப்பாக உரைத்தான்.


"உனக்கு மேரேஜ் ஆனத சொல்ல  வேண்டுயது தானே !"


"சொன்னா, ஊரே தம்பட்டம் அடிச்சிடுவா ! ஊரே வந்து என் கிட்ட துக்கம் விசாரிக்கவா போடா !!!" 


"அப்ப நான் என்ன பண்ணனும்ங்கற???


"அவ எனக்கு ஹெல்ப்க்கு வரக் கூடாது ! அவளோ தான்" என்றதும் 'சரி' என்றான்.


மருநாள் மாலை வேளையில் அந்த பெரிய மண்டபத்தில் நவநீதன் தாரா நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.


வைஷு,   வதனாவுக்கு துணையாக அந்த வீடு மகளாக அனைத்து வேலையும் இழுத்து போட்டு செய்தாள். நிச்சய தட்டு பெரியவர்கள்  மாற்றிட, மணமக்கள் இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டனர். 


அதன் பின் அங்கே ஆடல் பாடலும்  நிகழ்ச்சி தொடங்கியது.

ஒரு பக்கம் மேடையில் டான்ஸ் குரூப்புடன் சின்ன சிறுசுகளும் பொடுசுகளும் வயதானவர்களும் வந்து ஆடினார்கள். பொழுது நன்றாகவே போனது . போடும் பாடலுக்கெற்ப  குதூகலமாக ஆடினார்கள்.


ஆனால் அவற்றை எல்லாம் சைத்து கருத்தில் பதிய வில்லை பதிந்து எல்லாம் வைஷு தான்.


அங்கே வைஷு இருப்பத்தை கண்டு கொண்டவனுக்கு மூச்சடைத்ததும் இல்லாமல் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 


தாயை கண்ட குழந்தையாக அவளை அணைத்து முத்தமிட ஆவல் கொண்டு அவளை நெருங்க அவளோ  கண்டும் காணாமல் போனாள். அவனுக்கு முகம் கறுத்துவிட்டது.


அவளை தொடர தொடர அவளோ விலகி விலகி போக இவனுக்கு ஓரு மாதிரி ஆகிப்போனது. ஓரமாக ஒதுங்கி கொண்டு அவளை மட்டும் பார்த்திருந்தான்.  இங்கே அனைவரின் கவனமும்  ஆட்டம் பாட்டத்தில்  தான் இருந்தது.



நவநீதனின் நண்பன் ஒருவன், வைஷுவை ஆட அழைக்க,  அவள் மறுத்துக் கொண்டே இருந்தாள். அவன் மேலும் மேலும் வற்புறுத்த, அவளுக்கு கடுப்பாகி போனது. அவனும் விடாது அழைக்க, அங்கே சைத்து வந்தவன் வைஷுவின் தோளை அணைத்து" சி இஸ் மை ஒயிஃப்"என்றவன் அவள் திமிர திமிர அறைக்குள் அழைத்து சென்று கதவை சாத்திய நேரத்தில்  சத்தமில்லா ஒரு முத்தத்தோடு காதை கிழிக்கும் அறை சத்தமும்  கேட்டது..



கதவைத் தாழிடும் சைத்துவின் முதுகை வெறித்தாள் வைஷு. திரும்பி அவளது பார்வையை அவன் 

எதிர்கொண்டதும் அனிச்சையாக அவனது தலைத் தாழ்ந்தது.


தலை குனிந்து நின்றவனைக் கண்டு  அவளது இதழ்கள் விரக்தியில்

விரிந்தன. அமைதியை தத்தெடுத்தவனாக எதுவும் பேசாமல் நின்றிருந்தான். 


கைக்கட்டி அவனையே பார்த்து கொண்டிருத்தவளுக்கு பொறுமை கரைய அவளே வாயை திறந்தாள். 


"மிஸ்டர், எதுக்கு இப்படி இழுத்துட்டு  வந்து கதவ அடைச்சி வச்சிருக்கீங்க...? உங்களுக்கு என்ன வேணும்? யார் நீங்க...?"என்று அவனைத் தெரியாதது போலவே அவனிடம் கேட்டாள். 


"வைஷுஊஊ" எனக் குரல் காற்றில் கரைந்து போனது அவள் அழுத்த பார்வையில். 


"ம்... சொல்லுங்க நான் வைஷு தான். நீங்க...?"என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.


"வைஷு !" என்று அவளது பெயரை மீண்டும் அழுத்தினான். 


"எஸ்,  நான் வைஷு தான். நீங்க...?"என்றாள் மீண்டும். இப்போது அவனுக்கு பொறுமை கரைந்து போனது.


"நான் சைதன்யா, உன்  புருஷன். மறந்துட்டீயா...?"என்றான் கடுப்பில். 


"ஓ... அதெல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கா...? நான் என்னவோ உங்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் என்னையும் நமக்கு நடந்த கல்யாணத்தையும் மறைந்திட்டு இங்க வந்து தங்கிருக்கீங்கனு நினைச்சேன்..."என்றாள் நக்கலாக, அதற்கு அவன் மீண்டும் தலை குனிந்தான். 


அவளோ சலிப்பாக அங்கிருந்து நகர, அவள் கையை பற்றி "வைஷு ப்ளீஸ்"எனவும் அவனை பேச விடாமல் நிறுத்தினாள். 


அவளது இரு நயனங்கள் கண்ணீரை சொரிய, அவனுக்கு தான் மேலும்  குற்றவுணர்வானது. அவளது ஒவ்வொரு துளி கண்ணீரும் அவனை குத்திக் கிழித்தது. 


"நீ என்னை ஏமாத்திருக்க சைத்து. எனக்கு கோபம் வரக் கூடாதா? இல்ல நான் கோபப்படக் கூடாதா? நீ என் புருஷன்றனால நான் உன்னை மன்னிச்சு ஏத்துக்கணுமா???இல்ல நீ ஏமாத்தினாலும் , உன் கூட எதுவுமே நடக்காத மாதிரி நான் நடந்துக்கணுமா சொல்லு "எனவும் அவளை அடிபட்டப்பார்வை பார்த்தான். 


"சொல்லுடா ! அப்படி நான் நடந்து கிட்டா, நீ  என்னை விட்டு  இப்படி மூணு மாசம் பிரிஞ்சிருக்கவே மாட்டேல, என் கூடவே இருந்திருப்பேல??"எனவும், 


அவன் ஏதோ பேச வர அவனை தடுத்தவள்," எனக்கு கோபம் தான். அப்போ ரொம்ப கோபம் தான். உன்னை கொல்ற  அளவுக்கு கோபம். ஆனா அதுவும் கொஞ்ச நாளைக்கு தான். என்னால ரொம்ப நாளைக்கு உன் மேல கோபத்தை காட்டிட்டு  இருக்க முடியாது டா சைக்கோ ! உன்னை அவ்வளவு நேசிச்சேன். ஆனா, நீ என் மேலே காதலே இல்லாம பாசமே இல்லாம எல்லாத்தையும் தூக்கி போட்டு வந்து இங்க உட்கார்ந்து இருக்க.


பொண்டாட்டி கோபமா இருந்தா, இருந்திட்டு போகட்டும் நமக்கெதுக்குனு இங்க வந்துட்டேல. உனக்கு நானோ என் கோபமோ  முக்கியம் இல்லேல. என் நியாபகம் உனக்கு வரலேல !  இங்க  நீ நிம்மதியா இருக்கேல " தாடையில் வடிந்த நீரை துடைத்துக் கொண்டு சொன்னவளை

இழுத்து அணைத்துக் கொண்டான் . ஒரு நிமிடம் முழுவதும் அவன் அணைப்பில் இருந்து விட்டு  அவனிடமிருந்து திமிறி  நின்றாள்.


"இப்படி எல்லாம் செஞ்சா மட்டும் என் கோபம் தணிஞ்சிரும்னு நினைக்காத சைக்கோ ! நீ தப்பு மேல் தப்பு பண்ணிட்டு இருக்க..."என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவளுக்கு கோபத்தின் வீரியம் சற்று குறைந்து தான் போயிருந்தது அவனது அணைப்புக்கு பின்.


இருந்தும் அவள் கோபமாக இருப்பது போல காட்டிக் கொள்ள, அவளை கண்டு கொண்டவன் நக்கலாக இதழை வளைத்து" ஆமா தப்பு தான் பண்ணினேன்.. இன்னும் தப்புக்கு மேலே தப்பு பண்ணுவேன்... என்னடி பண்ணுவ?"என நெருங்க அவளோ சுவற்றில் சாயந்து நின்றாள்.


அழுகையை கட்டுப்படுத்த அவள் கடித்து சிவப்பேறிய இதழை பார்வையால் வருடியவன் மெல்ல இதழ் கொண்டு வருடினான். வெகு நாட்களுக்கு பின் அவனது இதழ் முத்தம் அவளை மயக்கச் செய்தாலும், மூளை சட்டென அவளது கோபத்தை நினைவூட்ட  அவனை சட்டென தள்ளிவிட்டு அறைந்திருந்தாள்.


கன்னத்தில் கை வைத்து அவளை திகைப்புடன் பார்த்து நின்றான் சைத்து.


"இந்த மாதிரி அன்னைக்கி பண்ணிருந்தா, உன் மேல எனக்கு இருந்த கோபம் குறைஞ்சிருக்கும்...  ஆனா நீ நான் வேணா தானே போன ! நாலு தடவ  மன்னிப்பு கேட்டு  என் பின்னாடியே வந்திருந்தால் உன்னை மன்னிச்சிருப்பேன்ல டா ! 


ஆனா  உனக்கு உன் ஈகோ தான பெருசு... போ ! போ ! அதையே  கட்டி அழு ! இனி என்னைத் தேடி வந்திடாத ! இந்த முறை கண்டிப்பா டைவர்ஸ் தான்"என்று கூறி முடிக்கையிலே கதவு தட்டப்பட்டது. இருவரும் திகைத்து நின்றனர்.


அவன், யாரென பார்க்க தயங்கி தயங்கி கதவை திறந்தான். அங்கே இன்னொரு காளியாக நின்றிருந்தாள் நிஷா.

அவளை உதவிக்கு அனுப்ப வேண்டாம் என்று சொன்னதை  கேட்டு கோபத்தில் அவனை திட்ட வந்தவள்,  அவன் இன்னொரு பெண்ணுடன்  உள்ளே சென்றதை கண்ட கோபமேற காத்திருந்தவள் பொறுமை இழந்து கதவை தட்டினாள்.



"நீயா..."என்று அவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள, அதற்குள் அவள் புயல் போல் உள்ளே நுழைந்து வைஷு முன் வந்து நின்றாள்.


வைஷுவும் அவளது தோரணையை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றாள்.


"இங்க ஏன் வந்த நிஷா? நான் இங்க இருக்கேன் உனக்கு யார் சொன்னது...?"என்று கடுப்பாகக் கேட்டான்.


அவளோ பதில் சொல்லாமல்" யார் இவ...?எதுக்கு இவளை தனியா கூட்டிட்டு வந்து பேசிட்டு இருக்கீங்க??" சிறு பிள்ளை கோபம் கொண்டு கேட்பது போல கேட்டாள்.


" அது உனக்கு  எதுக்கு? நீ முதல்ல  வெளிய போ !"என்றான் சைத்து.


"முடியாது. இது யார்னு நான் தெரிஞ்சுக்கணும்..." என்று விடாது நின்றாள்.


"சரி,  நீ யார் முதல்ல??" என வைஷு வினவ, "நான் நிஷா ! இவரோட லவ்வர் ! நானும் இவரும் லவ் பண்றோம்"என்றாள் வைஷுவை யார் என்று தெரியாமல்.


வைஷு சட்டென சைத்துவை பார்க்க, அவனோ அவளது பார்வையில் வெளவெளத்து போனான்.


"ஏய்  ! நிஷா... என்ன பேசிட்டு இருக்க நீ ? நான் உன் லவ்வர் இல்ல. உன் லவ்வ அக்சப்ட் பண்ணவும் இல்ல. தேவை இல்லாம பேசிட்டு இருக்காத... பல்லை எல்லாம் தட்டி கையில் கொடுத்திடுவேன்"என்று மிரட்டினான். வைஷுவுக்கு பயந்து. ஆனா அவளோ அவனது பதற்றத்தை கண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கினாள்..



"இப்போ நீங்க  என் லவ்வ அக்ஸப்ட் பண்ணிக்கல தான். ஆனா பின்னாடி என் தீவிரமான காதலை பார்த்து கண்டிப்பா அக்ஸப்ட் பண்ணிப்பீங்க . எனக்கு அந்த நம்பிக்கை இருக்க"என்றாள்.


அவளை பாவமாக பார்த்தாள் வைஷு"அப்படி எல்லாம் நடக்காது மா ! நீ தேவை இல்லாம கற்பனை பண்ணிட்டு இருக்காத  !"என்றாள் அறிவுரையாக, 


அவளோ "ஏன் ஏன் நடக்காது??"


"ஏன்னா இவன் என்னை காதலிக்கிறான். நானும் கூட..."என்று பல்லைக் கடித்து கொண்டு சொன்னாள். அவனது இதழ்கள் லேசாக விரிந்தன. நிஷா அதிர்ச்சியாக அவர்கள்  இருவரையும் பார்த்தாள்.


"இல்ல நீங்க பொய் சொல்றீங்க..."என்றாள் தடுமாற்றத்துடன்.


"நான் ஏன் மா பொய் சொல்ல போறேன். நாங்க லவ்வர்ஸ். நாங்க வெறும் லவ்வர்ஸ் மட்டுமில்ல,  எங்களுக்கு மேரேஜ் கூட ஆயிருச்சி. இவன் சொல்லலையா உன் கிட்ட???" எனக் கேட்கவும்" இல்லை" என்பதும் போல இன்னும் நம்பிக்கை இல்லாமல் தலையை ஆட்டினாள்.


பக்க வாட்டில் நின்றிருந்த சைத்துவை முறைத்து விட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்துக் காட்டினாள். அதில் இருவரும் அணைத்தபடி இருக்க, தலை குனிந்தாள் நிஷா.


"சாரி மேம் ! அவருக்கு கல்யாணமானது எனக்கு தெரியாது. அவர் சொல்லிக்கவும் இல்ல...  ஆனா  அவர் லவ் வேணா சொல்லவும், நான் அவரை லவ் பண்ண வச்சிடனும் நினைச்சேனே தவிர, அவர் ஏன் ஒத்துக்கலன்ற காரணத்தை யோசிக்காம போயிட்டேன் ஸாரி மேம். ஸாரி சார்"என்று அங்கிருந்து சென்று விட்டாள் வாடிய முகத்துடன்..


அவள் சென்றதும் சைத்துவின் முதுகில் நாலு அடியை போட்டவள், "கல்யாணம் ஆனத சொல்லிருந்தா இவ்வள்வு தூரம்  அவ ஆசையை வளர்த்திருக்க மாட்டா ! பொண்ணுங்க மனசை உடைக்கறதுல உனக்கு அவ்வளவு சந்தோசம்ல..."


"ஐயோ ! அவ ஆல் இந்தியா ரேடியோடி கல்யாணம் ஆனத  சொன்னா, ஊரே சொல்லிடுவா, அப்றம் எல்லாரும் நாம பிரிஞ்சதுக்கு என்ன காரணம் கேட்டு உசுர வாங்குவானுங்கனு தான் நான் அவ கிட்ட சொல்லல. ஆனா நான்  அவகிட்ட தெளிவா சொல்லிட்டேன். எனக்கு உன் மேல எந்த ஃபீலிங்கும் இல்ல காதலும் இல்ல, என் பின்னாடி வராத ஸ்ட்ரிக்ட் சொல்லிட்டேன்.காது கொடுத்து கேட்காதது அவ தப்பு. இதுல நான் என்ன பண்ணினேன்"என்றிட " உன்னை எல்லாம் திருத்தவே முடியாது  சைக்கோ !"என்று கோபமாக  வெளியே சென்றவளை சமாதானம் செய்து கொண்டே பின்னே சென்றான்.

அவள் சமாதானமாவது போல தெரியவில்லை..


வேகமாக மேடை எறியவன் அங்கே ஓடிக் கொண்டிருந்த பாட்டை மாற்றச்  சொல்ல, உடனே அவனும் பாட்டை மாற்றினான்.


"ஒரு புன்னகை பூவே... "என ராகம் இழுக்க, திடிரென பாட்டு மாறியதால் திரும்பி  பார்த்தாள். அங்கே சைத்து  தன் குரூப்புடன் ஆட தயாராக இருந்தான்.


எங்கேயோ போகின்றமேகம் நிற்குது 

என் பேரைஉன் பேரை சொல்லி அழைக்குதுலவ் பண்ணு 

லவ் பண்ணு

ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஒரு புன்னகை பூவ

சிறு பூக்களின் தீவே

நீ என்னைமட்டும் காதல் பண்ணு என்வாலிப நெஞ்சம் உன் காலடிகெஞ்சும் சிறு காதல் பிச்சைபோடு கண்ணு

நான் கெஞ்சி கேட்கும் நேரம்

உன் நெஞ்சின் ஓரம் ஈரம் 

அச்சச்சோ அச்சோகாதல் வாராதோ !


என்ற ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுக்கு அவளை சுற்றிச் சுற்றிச் ஆடி , கொஞ்சிக் கெஞ்சி அவளை சமாதானம் செய்து விட்டான்.


இருவரும் சேர்ந்து மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு  இரவு உணவை முடித்து விட்டு அவனுடன் அவன் தங்கி இருந்த அறைக்கு வந்தனர்.


அவன் மட்டும் அங்கே தங்கிருந்தான். ஒரு சிறிய ஹால் அதன் ஓரத்தில் மெத்தை கொஞ்சம் ஓரமாய் கதவு இல்லாத அடுப்படி. சின்ன குளியலறையும் என எல்லாமே உள்ளே இருந்தது. கிட்ட தட்ட அவர்களது அறையைப் போல இருந்தது. 


"சைத்து வெளிய போ  ! நான் ட்ரெஸ் மாத்தணும்.."என்றாள்.


"நீ மாத்துடி. அதுக்கு நான் ஏன் வெளிய போகணும்??? ஒன்னும் இங்க மாத்த இல்ல ரெஸ்ட் ரூம் போ ! வெளிய செம்மையா குளிர்துடி என்னால முடியாது" என்றான்.


"ப்ளீஸ் டா கொஞ்ச நீ வெளிய இரு!" என்றாள். அவனோ கடுப்பாகி


"இப்போ என்ன நீ ட்ரஸ் மாத்தணும் அதானே ! "என்றவன் அவளை இழுத்து திருப்பி, அவளது  முதுகில் முத்தம் கோலம் போடவன் அவளது ஆடையை மெல்ல மெல்ல கலைந்து அவளது வேலையை குறைத்து சுமையை சற்று கூட்டி மெல்ல மெல்ல அவளை  ஆகிரமித்தான்.


மூணாம் ஜாமம் வரை நிகழ்ந்தது அவனது ஆக்கிரமிப்பு. அவனது ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர அவனது நெஞ்சில்  தலைவைத்து கண்ணை முடியிருந்தாள் வைஷு.


"எனக்கு ஈகோ எல்லாம் இல்லடி. காதலுக்கும் அதிகமாக குற்றவுணர்வு. அது தான் என்னை தனியா போக வச்சது.


நீ டிவோர்ஸ்னு சொன்னதும் அங்கயே நான் செத்துட்டேன்  வைஷு. என்னால உன்னை டிவோர்ஸ் பண்ண முடியாதுடி. ஆனா எங்கே நீ என்னை பார்த்து பார்த்து உனக்கு என் மேல் கோபம் அதிகமாகி டிவோர்ஸ் பண்ணிடுவியோனு தான் இப்படி ஓடி ஒளிஞ்சேன்டி.  மூணு மாசம் ஆனாலும் உன்னை பார்க்க வர பயம்... எங்க மறுபடியும் என்னை பார்த்து கோபப்பட்டு டிவோர்ஸ் சொல்லிடுவீயோனு பயம்டி.  ரியலி ஸாரி வைஷு... என்னால இந்த மூணு மாசம் உன்னை விட்டு இருக்க முடியல தான்... ஆனாலும் உன் கோபத்தை குறைக்க வேற வழி எனக்கு தெரியல"என மீண்டும்  மன்னிப்பு கேட்க அவன் நெஞ்சில் முத்தம் வைத்து இறுக கட்டிக்  கொண்டாள்.


மறுநாள் இருவரும்  கிளம்பி  நவீ , தாரா கல்யாணத்திற்கு சென்று வந்து ஒரு நாள் முழுக்க ஊரை சுற்றி விட்டு வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதால் சரஸ்வதியை தவிர மொத்த குடும்பமும் கூடியிருந்தது.


அவர்கள் வந்ததும் ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கினர்.




சாந்தி அனைவரையும் சாப்பிட அழைக்க, அதை மறுத்து எல்லாரையும் அழைத்த வைஷு, அவர்களை திரட்டிக் கொண்டு சரஸ்வதி இல்லத்திற்கு அழைத்து வந்தாள்.


தயக்கத்துடன் அனைவரும் உள்ளே சென்றனர். அவர்கள் பேசாது விலகி சென்ற இந்த மூன்று மாதமும் தனக்கு தானே சிறை தண்டனையை எடுத்துக் கொண்டார் சரஸ்வதி.  ஆனால் அவரை தனியாக விடாமல் அகல்யா தான் அவருக்கு வேளாவேளைக்கு சமைத்து கொடுத்து அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரையும் சரியாகக் கொடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொண்டார். 


அகல்யாவாக பார்க்க முன் வந்தாலும் பிரபுவும் சாந்தியும் அவரை பார்த்துக் கொள்ளுமாறு கூடுதல் பொறுப்பை அகல்யாவிடம் கொடுத்து விட்டனர். இவர்கள் பிரிந்து இருந்தாலும் அவர் மீது அக்கறையோடு தான் இருந்தனர். 


வைஷுவும் அவள் வந்த மூன்று  மாதம் அவரிடம் பேசாது இருக்கக் காரணம் உறவின் அருமையை அவர் அறிந்துக் கொள்ளத் தான். ஆனால் அவரது தண்டனை காலம் போதும். இனி ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித் தான் அவர்களை சரஸ்வதி இல்லத்திற்கு  கூட்டி வந்தாள். 


தனியாக உடல் மெலிந்து எதையோ வெறித்து அமர்ந்திருந்த சரஸ்வதியை கண்டு அனைவருக்கும்  சங்கட்டமாகிப் போனது. 


"சரஸ்வதி"என்று பிரபு அழைக்க, வேகமாக திரும்பியவர், ஒட்டு மொத்த குடும்பத்தைக் கண்டதும் கதறி அழுதார். 


அவரை வந்து அணைத்துக் கொண்டார் பிரபு.  "எல்லாரையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிக்கணும். என் பேச்சை  கேட்டு அப்படியே வார்த்தை மாறாம நடக்கணும்... என்னை மீறி என் பேச்சை மீறி எதையும் நீங்க செய்ய கூடாது. என் அனுமதி இல்லாம நீங்களா எதையும் பண்ண கூடாதுனு. அதையும் மீறி செஞ்சா எனக்கு பிடிக்காதவங்களா, எனக்கு வேண்டாதவங்களாக்கி தள்ளி வச்சி, வீட்டுக்கு வந்த மருமகள அடிமையா எல்லா வேலையும்  பார்க்கச் சொல்லி அனுமதி இல்லாமல் எங்கேயும் போகக் கூடாது வீடே கதினு ஒரு கைதியா?  அடிமையா நடத்தி. எல்லாரோட வாழக்கையிலும்  மூக்க நுழைச்சி அவங்க விருப்பத்தை கூட  நிறைவேத்தி வைக்காத ஒரு தாயா இல்லாம கொடுமைக்காரியா இருந்திருக்கேன்லங்க நான். அவங்க அவங்க குடும்பம் அவங்கவங்க முடிவுனு விடாம, உங்களை எல்லாத்தையும் என் வார்த்தையில் கட்டி வச்சி  உங்க  எல்லாரையும் ஆட்டி வச்சிருக்கேன்... வீட்டு பெரிய மனுஷனியா இருந்தும் உங்களை எல்லாம் கொடுமை பண்ணிருக்கேன்..


ஆனா நான் எவ்வளவு பண்ணியும் நீங்க எல்லாரும் என் விருப்பப்படி நடந்தீங்க, என் வார்த்தைய மதிச்சிங்க. அவ்வளவு பண்ணியும் என் மேலே குறையாத அன்பு மட்டுமே காட்டி வந்தீங்க.. ஆனாலும் என் வன்மம் ரொம்ப எல்லை மீறிடுச்சிங்க... ஒரு உயிரை கொல்ற  அளவுக்கு என் அறிவ மழுங்க வச்சிடுச்சி . எனக்கு நீங்க கொடுத்த தண்டனை சரி தாங்க. உறவுகள் சுத்தி இல்லாத போது தான்  அவங்க அருமை புரிஞ்சது எனக்கு. 


அகல்யாவ எவ்வளவோ பேசிருக்கேன், என் தம்பி செத்ததுக்கு அவ தான் காரணம் எத்தனையோ  முறை ஜாடையாவும் நேராவும் பேச்சிருக்கேன் ஆனா அதெல்லாம் ஒரு பொருட்டா நினைக்காம என்னை பார்த்துகிட்டா, இதே இடத்துல வேற ஒருத்தி இருந்திருந்தா என் தம்பி எப்பவோ பிரிச்சி கூட்டிட்டு போயிருப்பா, ஆனா இவ எனக்கு நிறையா பண்ணிட்டா.


வஸ்திக்கு , சைத்துக்கு நான் பண்ணது எல்லாம் அதிகம்ங்க... எல்லாத்தையும் விட நம்ம வீட்டு வாரிசை சுமந்த பொண்ணு கிட்ட பேசாததெல்லாம் பேசி, அந்த கரு கலைய காரணமாகிட்டேங்க... வேற வீட்டுல இருந்து வந்த பொண்ணுக்கு நம்ம குடும்பத்து மேலே குடும்பத்து மனுசங்க மேலே அன்பு அக்கறை இருக்கு, ஆனா நான் அதைக் கூட புரிஞ்சுக்காம என் விருப்பப்படி எல்லாத்தையும் பண்ணிருக்கேன். அவங்க ஆசை  , கனவு, விருப்பத்தை எல்லாம் ஒண்ணுமில்லாம பண்ணிட்டேன். என்ன என்ன ஆசைப்பட்டாங்களோ என் பசங்க, எதை எல்லாம் இழந்தாங்களோ !" என நெஞ்சில் அடித்து அழுதவரை கட்டி அணைத்து கொண்டார். 


அவர் அவ்வாறு சொல்ல சாய் பிரகாஷ் ஒரு கணம் வைஷுவை தான் பார்த்தான். அவளோ சைத்துவின் கைகளைப் பற்றி சரஸ்வதியை பார்த்திருந்தாள். பின் திரும்பி தன் மனைவியையும் மகளையும் பார்த்து மூரலுடன் சரஸ்வதியை பார்த்தான். 


"விடு சரஸ் மா ! நீ உன் தப்ப உணரனும் தான் உன்னை விட்டு  நாங்க  விலகிப் போனோம். ஆனா இதுக்கு மேலே யாரும் உன்னை விட்டுப் போக மாட்டோம்... நீ எப்பையும் போல இந்த வீட்டுக்கு பெரிய மனுஷியா இருந்து எங்க எல்லாரோட விருப்பத்தையும் தெரிஞ்சு எங்களை எல்லாம் அரவணைச்சி வழி நடத்தர மூத்தவளா எங்களுக்காக வாழ்றவளா நீ இருக்கணும்... அதான் இங்க எல்லாரும்  எதிர்ப்பார்க்கிறாங்க..."அவரது கண்ணீரை துடைத்து விட,  அவர் மேலும்  அழுதார்.


அவர் முதுகை வருடி கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.விழிகளை துடைத்துக் கொண்டவர், வைஷுவின் அருகே சென்றார்.


அவள் கைகளைப் பற்றி"உனக்கு நான் பண்ண  கொடுமைக்கு இந்த ஜென்மத்தை முடிச்சாலும் நான் தண்டனை அனுபவிக்கணும் வைஷு... அந்தக் அளவுக்கு வார்த்தையால குத்தி கிழிச்சிருக்கேன் உன்னை... உன் குழந்தைய கொன்னுருக்கேன்  ஏழு ஜென்மத்துகுக்கும் எனக்கு மன்னிப்பே இல்ல... .

ப்ளீஸ் எனக்கு எதாவது தண்டனை கொடு நான் அனுபவிக்கணும்... இல்லனா குற்றவுணர்ச்சில செத்துருவேன். ப்ளீஸ் தண்டனை கொடு வைஷு"என்று கெஞ்சினார்.


அவர் கையை அழுத்திப் பிடித்த வைஷு" தண்டனை தானே பெரிய அத்தை கொடுத்துட்டா போச்சி... நீங்க என்ன பண்ணறீங்கனா, எனக்கும் உங்க புள்ளைக்கும் பொறக்க போற குழந்தைய  வளர்க்கணும், நானும் இவனும் வேலைக்கு போயிடுவோம். நீங்க தான் அவங்களை பார்த்துக்கணும் என் குழந்தைங்களை மட்டும் இல்ல , இனி அடுத்த  வர போற ஸ்ருதி சாய் குழந்தையையும் நீங்க தான் பார்க்க போறீங்க..."என்றதும் சரஸ்வதி இருவரையும் திரும்பி பார்க்க, ஆம் என்று இருவரும் தலை அசைத்தனர்.


சோ மருமகங்க நாங்க வெளிய வேலைக்கு போவோம். நீங்க எங்க பிள்ளைய பார்த்துக்கணும் தண்டனை ஓகேவா!"என சொல்லி சிரிக்க, எந்த இடத்தில் நின்று அவளிடம் கர்வமாக  கேள்வி கணைகளை கேட்டு நக்கல் செய்தாரோ அதே இடத்தில் இருந்து அவள் கையை பற்றி தண்டனை வேண்டி கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.  வாழ்க்கை ஒரு வட்டம், தொடங்கிய இடத்திலே வந்து முடிந்தது வேறு விதமாக.


அவள் நெற்றியில் முத்தம் வைத்து தண்டனைகளை ஏற்றுக் கொண்டார். சைத்து வின் கைகளை பற்றி கண்ணீர் வடிக்க அவன் அவரை அணைத்து சமாதானம் செய்தான். சாந்தி கையை பற்றி கண்ணீர் விட, அக்கா தங்கைகள் இருவரும் கட்டிணைத்துக் கொண்டு அழுது சமாதானமானர்கள். குடும்பம் மொத்தமும் தங்கள் மனதிலுள்ள கோபம் , வன்மம் , குழப்பம், பயம்,   என அனைத்து  நெருடல்களையும்  கலைந்து எடுத்து தூர வீசி மகிழ்ச்சி, அன்பு, பாசம், கருணை, காதலை மட்டும் மனதில்  வளர்த்துக் கொண்டனர்.


எட்டு மாதங்கள் கடந்த நிலையில்


தனது  ஐந்து மாத மேடிட்ட வயிற்றை ஒரு கையில் பற்றி, மற்றோரு கையில்  கேமிராவை சரியாக வைத்துக் கொண்டு அந்த இளம் ஜோடிகளை மட்டும் விதமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள். உதவிக்கு கிஷோர் இன்னும் ஒருவர் இருந்தாலும் அவளுக்கு மட்டும் தனியாக உதவிக்கு என்று சைத்து தான் நின்றிருந்தான்.


பல புகைப்படங்கள் எடுத்த பின் ஓய்வு எடுத்துக் கொண்டனர். "இதான் கடைசினு சொல்லிருக்க வைஷு... வார்த்தை மாற மாட்ட தான !" என்றான்.


"நான் எப்போ இதான் கடைசினு  சொன்னே. இன்னும் ரெண்டு புக்கிங் இருக்கு அதை நான் தான் பார்க்கணும்... 

அகிலா பரணி வேற இப்போ தான் மேரேஜ் பண்ணி ஹனி மூனுக்கு போயிருக்காங்க... அவங்களை டிஸ்டர்ப் பண்ண முடியாது. நம்ம வேலைய நாம தான் பார்க்கணும்..." என்றாள்.


"அடிப்பாவி ! நேத்து நாம பேசும் போது கூட சொன்னீயேடி. இனி நான் போக மாட்டேன் , பரணி வந்ததும் எல்லா வர்க்கையும்  அவன் கிட்ட கொடுத்திடுவேன் சொன்ன, அத்தனையும் பொய்யா ?"என்றான் அதிர்ச்சியாக


"அது நேத்து டா சைக்கோ ! ஏதோ  நீ காட்டுனா காதல் மயக்கத்துல'சரி'னு சொல்லிருப்பேன்.  அதை எல்லாமா நம்புறது??? என்னா புள்ள நீ !" எனக் கேட்டு அவனை வாயை பிளக்க வைத்தாள் .


"என் வேலைய கூட நான் பார்க்காம உன் பின்னாடியே சுத்தணும் உனக்கு,  இல்ல..." என கோபத்தில் கேட்க, அவள் இடையில் தன் இரண்டு கையை வைத்து அவனை முறைத்தவள்" இல்ல நான் கேக்குறேன். கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்றேன் சொல்லி என் பின்னாடி சுத்தல, கல்யாணத்துக்கு அப்றமும் காதலை சொல்லி என்  பின்னாடி சுத்துவனு பார்த்தேன் சுத்தல. சண்ட போட்டு கோச்சிகிட்டுப் போனப்ப சமாதானம் பண்ண பின்னாடி சுத்துவனு பார்த்தால் அதுக்கும் சுத்தல.... இப்பயாவது பின்னாடியே வர்றீயேனு நினைச்சா அதுக்கும் மொனச்சிக்கிட்டே இருக்க... இப்படியே பண்ணிட்டு இருந்த  ஒரு குழந்தை போதும் சொல்லி அடுத்த பேச்சு வார்த்தைக்கு ஆப்பு வச்சிடுவேன் ஜாக்கிறத !" என்று மிரட்ட , அதிர்ந்தவன்"அடிப்பாவி, பின்னாடி சுத்தாத காரணதுக்காக எப்படி எல்லாம் பழி வாங்கற என்னை... பாவம்டி நானு...!"என கெஞ்ச, "அப்ப சொன்னதை செய் "எனவும் அவளை முறைத்தவன் அவ எழ, வால் பிடித்தது போல பின்னாடியே சென்றான்.


***

அந்த அறை முழுவதும் வசந்த்தின் அழு குரல் தான் கேட்டது. அவன் அழுவதை பார்த்து கொண்டே அமர்ந்திருந்தாள் வஸ்தி.


"ஏன்டி பிள்ளை அழுத்திட்டு இருக்கான். நீ வேடிக்கை பார்த்துட்டு இருக்க..."என்று கடிந்து கொண்ட எகா, அவனை தூக்கச் செல்ல,"தூக்காத" என்று அவனை தடுத்தாள்" ஏன்டி தூக்கக் கூடாது???"


"பின்ன ..கொப்ப மவனே வாடா ! கொப்ப மவனே வாடா னு  சிம்பு மாதிரி அவன் அழுதா தூக்கி தூக்கி வச்சிக்கற, அதே அவனும் பழகிட்டு பகல்ல என்னை தூக்க சொல்றான். நான் வேலைன்னு  ஒன்னு பார்க்க வேணாமா???  உட்கார வச்சி விளையாடுடானு கூட சொல்ல முடியல, அப்பா அப்பானு உன்னை சொல்லி தான் அழறான். என்னமோ இவர் பத்துமாசம் சுமந்து பெத்த மாதிரி"என்று கடைசி வரியை முணங்கினாள்.


குழந்தை தூக்கி கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்தவன் "ஏன்டி உனக்கு இவ்வளவு கோபம் வர்து?" என்றான் அவளை அணைத்துக் கொண்டு.


"பின்ன, மகன்... மகன்... அவன்  மட்டும் தன் உன் உலகம் உன் சொந்தமாட்டுக்கு அவனயே சுத்தி வர ,காதலிச்சி கட்டுன பொண்டாட்டி கண்ணுக்கு தெரியல, அவளையும் கொஞ்சணும்ன்ற எண்ணம் எல்லாம் இல்லை... அதான் குழந்தை குடுத்தாச்சி இனி நான் எதுக்கு உனக்கு ... "என சிலுத்துக் கொள்ள,


"அடியே அப்படி எல்லாம் நினைப்பேனா நானு. பத்து மாசம் கஷ்டப்பட்டியே ஒரு வருஷம் ரெஸ்ட் கொடுக்கலாம் பார்த்தா டெம்ப்ட் பண்றீயே நீ ! சரி  விடு இனி என் வேலைய ஆரம்பிச்சிடுறேன்"என்று இடையே அழுத்த, 


அவன் கரத்தை தட்டிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன்" நீ என் கடவுள் பிரதி. எனக்குன்னு இன்னொரு வாழ்க்கை கொடுத்திருக்க, புது இரத்தச் சொந்தத்தை கொடுத்த கடவுள்.  நீ தான் எனக்கு முதலும் முடிவும் இவங்க எல்லாரும் நடுவுல வர்றவங்க. எனக்கு எல்லாம் நீ அப்றம் தான் இவன், எல்லாரும். இப்படி முகத்தை திருப்பிக்கிட்டா எப்படி? பாவம்லடி நானு!!" எனவும் அவனையும் அவனோடு சேர்ந்து குழந்தையையும் வாரி அணைத்துக் கொண்டாள். 


அவர்களை போல குடும்பம் மொத்தமும் தங்கள் வீட்டில் அடுத்தடுத்த நிகழ இருக்கும் சுப காரியங்களுக்கு நாள் குறிக்க, அதற்கு வேலைப் பார்க்க பரபரப்பாகவும் அத்தோடு மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.



வசந்த் தன் மழலை மொழியில் "பாப்பா பாப்பா "என்று அழைக்க, மெத்தையில் அவனை கண்டு கை கால்களை உதைத்து பொக்கை வாயை திறந்து சிரித்த படி அவன் விரலை பற்றி விளையாடிக் கொண்டிருந்தாள், சைத்து வைஷுவின் மகள் கவிநயா...


தங்களின் நட்பு அடுத்த தலைமுறையும் தொடர்வதை கண்டு நெகிழ்ந்து போனார்கள் இரு ஜோடிகளும்.



முற்றும்





























  


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2