இதயம் - 49

 இதயம் 49

மேலும் இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் தான் இருந்தாள் வைஷு. சாந்தியும் தேவனும்  மகிழும் விஷ்ணுவும் , எகாவும் உடன் இருந்தனர். ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை.  கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தாள்.


அவளை பரிசோதித்து விட்டு அனுப்பி வைக்க ஐவருடன் இல்லம் வந்து சேர்ந்தாள். வஸ்தியும் அவளுக்கு துணையாக அகல்யாவும் வீட்டிலிருக்க அவர்கள் இருவரும் அவளை  வரவேற்றனர்.


மனதின் வலியுடன் விழிகள் அவனை தேட, அவனோ அங்கு இல்லை. அவளது விழித்தேடலை எகாவும் வஸ்தியும் குறித்துக் கொண்டனர்.


அவளை மெத்தையில் அமர வைத்து தானும் உடன் அமர்ந்தார் சாந்தி. அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு அகன்றனர்.


அவள் அவரைப் பார்க்க தவித்துக் கொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.  அவளை பார்த்து முறுவலித்தவர், அவள் நாடியைத் தொட்டு உயர்த்தி "என்னடா, உன் அத்தைய பார்க்க இவ்வளவு தயக்கமா? நான் எப்பையும் உன் தோழி தானே வைஷுமா மறந்துட்டியா?  என் புள்ள செஞ்சது தப்பு தான். என் புள்ளையாகிட்டானேனு அவனுக்கு நான் சப்போர்ட் பண்ணல.


ஆனால் டிவோர்ஸ் வேணாம் டா. உன் கோபம் தீரும் வர இங்க இரு ! அது எத்தனை வருஷமா இருந்தாலும் பரவாயில்ல. ஆனா ஓரடியா பிரியணும் மட்டும் நினைக்காத செல்லம். உன்னை போல எனக்கு எந்த ஜென்மத்திலும் மருமக கிடைக்க மாட்டாங்க. எனக்கு வேணாவும் வேணா நீ மட்டும் தான் வேணும்... உடம்ப பார்த்துக்கோ ! தான் எடுத்த முடிவு தப்புனு நினைச்சி பீல் பண்ணாத, நீ பண்ணது ரொம்ப சரி தான் . ஆனா ரொம்ப நாள் கோபத்த இழுத்து பிடிக்காத பாவம் என் புள்ள !"எனவும் அவரை முறைக்க, 


"ஈஈ... அம்மா வா போயிட்டேனே !"எனவும் அவள் சிரித்துவிட்டாள். அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு"உடம்ப பார்த்துக்க... உனக்காக நம்ம வீடு எப்பவும் காத்துட்டு இருக்கும் டா !" என்று அவள் கையை அழுத்தி விட்டு கிளம்பி விட, அவர் முதுகை வெறித்தவள்,கதவை சாத்திவிட்டு சென்றபின் லேசாக சாய்ந்து கண்களை மூட, அவள் விழிகளுக்குள் வந்து நின்றான் அவளது காதல் கணவன். பட்டென தன் இமைகளை பிரித்து எழுந்தவள் கோபத்தில் அருகே இருந்த தலையணையை தூக்கி எறிந்தாள்.


சாந்தி, மகிழின் கையை பற்றிய மன்னிப்பு கோர, பதறிப் போனார்."அண்ணி ! எங்களுக்கு மாப்பிள்ளை மேல கோபம் இல்ல. நம்ம எல்லாரும் வைஷு  இடத்துல இருந்து தான் யோசிக்கிறோம். ஆனா யாரும் மாப்பிள்ளை இடத்தில  இருந்து யோசிக்கல. அவர் இடத்தில இருந்து பார்த்தால் தான் அவர் கஷ்டம் நமக்கு புரியும்... அவர் மேலையும் உங்க மேலையும் எங்களுக்கு கோபம் இல்ல  சீக்கிரம் இந்த பிரச்சினை சரியாகி வைஷு மாப்பிள்ளை கூட சேர்ந்து வாழ்ந்தால் போதும் வேற எதுவும் வேணாம் எங்களுக்கு !"கண்ணீர் உகுக்க அவரை கட்டி அணைத்து ,ஆறுதல் சொல்லி விட்டு அகல்யாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.



வெறுமையாக இருந்தது வீடு. வைஷு இன்றி இந்த ஒரு நாளிலே கலகலப்பை தொலைத்த வீடு ! இன்னும் எத்தனை நாளைக்கு சிரிப்பின்றி பாலைவனமாக இருக்கப் போகிறதோ என்ற பயம் அவருக்குள் வந்தது . நேராகச் சென்று மகனை திட்ட வேண்டும் என்று  அறைக்கு செல்ல,காலியான அறையே அவரை வரவேற்க, அந்த காலி அறையை துழாவியவரின் கண்ணில் சிக்கியது அந்த வெள்ளை காகிதம் தான். எடுத்து பார்த்து படித்தார்.


"அம்மா ! என்னை மன்னிச்சிடுங்க ! நான் பண்ணது தப்பு தான்.அதுக்கு தான் நான் தண்டனை அனுபவிக்கப் போறேன்.  ரொம்ப தூரம் எல்லாம் போல... பக்கத்துல தான். அவ இல்லாம இந்த வீட்ல இருக்க முடியல மா ! அதுனால தான் போறேன். அப்போ அவ தான் முக்கியமா நாங்க இல்லையா??? நீங்க கேட்குறது புரியுது, ஆனா உங்க மகன் நிலமைய நீங்களாவது புரிஞ்சுக்க மா ! கொஞ்ச நாளைக்கு  தான் . கண்டிப்பா திரும்ப வந்துடுவேன் மா !என்னை கான்டெக் பண்ணணும் நினைக்காதீங்க... போன் யூஸ் பண்ண போறதில்ல... டேக் கேரர் ம்மா, அப்பா,  சனாவ பார்த்துக்க  என் வைஷுவையும் பார்த்துக்க மா ! லவ் யூ மா  " என்று 

எழுதிருக்க, மெத்தை அமர்ந்தவர் அழ ஆரம்பிக்க, தேவன் பதறி போய் வர அவரிடம் காகிதத்தை கொடுத்தார்.


வாங்கிப் படித்தவர் ஒரு பெருமூச்சுடன் அவரை நோக்கினார். "நீங்க அடிக்கடி அடிக்கடி சொல்வீங்க, இது நம்ம குடும்பம், நம்ம முடிவுகள் தான் இருக்கணும். ஏன் உங்க அக்காவ உள்ள இழுக்கறனு,என் அக்கா அவ பார்த்து நல்லது செய்வானு கண் மூடித்தனமா நம்பி இருந்துட்டேங்க. அது எவ்வளவு பெரிய  தப்புனு  புரிய  ஆணி அடிச்சது போல சொல்லிட்டா ! அக்கா வா இருந்தாலும் அவளை ஒரு எல்லையில வச்சிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.என்  மகனும் மருமகளும்  இல்லாம, இந்த வீட்டு சந்தோஷத்தை மொத்தமா சிதச்சிட்டா ! அவளை நாலு வார்த்தை கேட்காம விடமாட்டேன்"என்று கோபமாக எழுந்தார்.



"வேணா விடு சாந்தி"அவரை தடுக்க , "இல்ல அவளை திட்டினா தான் என் மனசு கொஞ்சமாச்சும் அடங்கும்"என்று விறுவிறுவென சரஸ்வதியின் இல்லம் நோக்கி சென்றார்.


அங்கே கணவர் கொடுத்த அடியிலும் அதிர்ச்சியிலும் துவண்டு போய் கிடந்தவர், அடுத்து தங்கையின் கோபத்திற்கு ஆளானார்.



"ச்சி ! நீ எல்லாம் ஒரு பொம்பலையா??? அம்மா,  அம்மானு உன்னை பெத்தவளா நினைச்சி சுத்திச்சுத்தி வந்தவனோட வாழ்க்கைய கெடுத்துட்டேல. இப்போ சந்தோசமா உனக்கு??? தளர இருந்த என் வம்சத்தையே அழைச்சிட்டியே நீ எல்லாம் மனுசியா?


அக்கா... அக்கானு வாய் நிறைய சொன்னாலும்  உன்னை  அம்மாவா பார்த்து தானே என் வீட்ல எடுக்கற முடிவை எல்லாம்ந  நீ எடு சொன்னேன். அதுக்கு நீ என்ன பண்ணனுமோ பண்ணிட்ட,

அந்த பொண்ணு உனக்கு என்ன பண்ணா? அவள நீ  என்ன பேசினாலும் உன்னை என்னைக்கும் அவ விட்டுக்கு கொடுத்ததே இல்ல ! திறப்பு விழாவுக்கு கூட அவளை தான் திறக்க சொன்னான் என் புள்ள , ஆனா அவ தான் வீட்லே பெரியவங்கனு நீ தான் திறக்கணும் சொன்னாள்.  அவ உன்னையும் என்னை போல தான் பார்த்தாள். ஆனா நீ தான் அவளை மதிக்கலேயே ஏன் ஒரு பொண்ணா கூட பார்க்கல, அவளை இப்படி படுக்க வச்சிட்டியே ! நீ நல்லா இருப்பீயா??? இனிமே அக்கானு உன் வீட்டு வாசப்படியவே நான் மிதிக்க மாட்டேன். எனக்கு அக்கானு சொல்லிக்க இருந்தவளும் செத்துட்டா. இனி எனக்கு என் குடும்பம் மட்டும் தான் முக்கியம்"என்று கத்தி புலம்பி விட்டு செல்ல, தளர்ந்து விட்டார்.


சாந்தியின் அரவம் கேட்டு அறையில் இருந்து வந்த அந்த மூன்று ஜீவன்களும், அவர் பேசுவதை வேடிக்கைப் பார்த்து நின்றனர். அவர் கத்தி விட்டுச் சென்ற பின்னும், அவர்கள் சரஸ்வதிக்கு ஆறுதல் சொல்லவோ தேற்றவோ வரவில்லை. சாந்தி சென்றதும் அவர்களும் மீண்டும் அறைக்குள் செல்ல, துவண்டு போனவர் நீள்விருக்கையில் சரிந்தார். 


*****


நாட்கள் மாதங்களாக கடந்தன. கொஞ்ச நாட்கள் அறையில் அடைந்தவள் பின் ஸ்டூடியோவிற்கு செல்ல ஆரம்பித்தாள். புதிய கடையில் சில வேலைகள் நடந்தேற இவளோ பழைய கடைக்குச் சென்றாள். 


வழக்கம் போல அவளது நாட்கள் சென்றாலும் மனதில் நிறைந்த வலிகள் மட்டும் மாறவில்லை மறையவில்லை மறுக்கவும் முடியவில்லை .


ஏதோ விதத்தில் ஏதோ ஒரு நிகழ்வில் அவனை நியாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. அவனை ஒதுக்கி வைக்க முடியவே இல்லை. அவனது நினைவுகளிலும் எண்ணங்களிலும் அவனது ஆக்கிரப்பு   தான் அதிகம். பச்சை குத்தியது போல அவனது நினைவு அவளது மூளையிலும் மனதிலும் பதிந்து போயிருக்க, மறக்க வழி தேடி அதிகம் அவனை தேடிக்கொண்டிருக்கிறாள். 



***


இதற்கிடையே ஒரு நாள் அவளைத் தேடி சாய் பிரகாஷ் வந்தான். வந்தவன் அவளிடம் பணத்தை கொடுக்க அவனை புரியாமல் விழித்தாள். 


"இது வாடகைப் பணம், காம்பிளக்ஸ் இருக்க கடைகளுக்கு போய் கலெக்ஷன் பண்ணிட்டு வரேன். இந்த பணத்தை உன்கிட்ட தான் சைத்து ஒப்படைக்க சொன்னான்.  அதான்  கொடுத்துட்டு போக வந்தேன்"என்றான். 


"ஏன் இதை அவன் வாங்கிக்கல? என்ட ஏன் கொடுக்க சொன்னான்???" 


"உனக்கு விஷயம் தெரியாதா? அவன் இங்க இல்ல. எங்க போனானே தெரியல. கான்டெக் பண்ணினா, சுவிட்ச் ஆப்னு வருது. நான் அவன் அனுப்பின மெயில்ல பார்த்து தான் கலெக்ஷன் பண்ண போனேன். மத்தபடி அவன் எங்க இருக்கான் எனக்கு தெரியல. அவன் அனுப்பின மெயிலுக்கே ரிப்பிளை பண்ணி கேட்டேன். ஆனா அவன் பதில் போடலை... நீ வேணா மெயில் பண்ணி கேள்"என்று சென்று விட, அவளது கண்களில் நீர் குளம். 


அலைபேசி எடுத்து சாந்திக்கு அடித்து விஷயத்தைக் கேட்க, அவரோ அழுது கொண்டே அந்தக் கடிதத்தில் இருப்பதை சொல்ல மேலும் கணம் கூடிப் போனது அவளுக்கு. 


மேலும் இரண்டொரு நாளில் சைத்துவின் இல்லத்திற்கே வந்து விட்டாள் வைஷு.  மாமியாருக்கு துணையாக. 


ஆனா அவள் சைத்துவை  மன்னித்து விட்டாள் என்றால் இல்லை.  அவன் மீது மேலும் மேலும் கோபமும் ஆத்திரமும் கூடிப்போனது. தன்னை பற்றி சிறிதும் கவலையின்றி எங்கோ சென்றவனை நினைக்க நினைக்க பத்திக் கொண்டு வந்தது. அவனை அழைக்க கூடாது என்று மூளை சொல்ல அதற்குக்கு முரணாக மனம் நிற்க, மூளையுடன் சேர்ந்து கொண்டு 'அவனாக வரட்டும்'  என்றும்  அவள் முடிவெடுத்தாள்.


அங்கே அவனும் மூளையின் உத்தரவுடன் 'அவளாக அழைக்கட்டும் 'என்றிருக்கிறான். 


ஈகோ என்ற திரையை இருவருக்கும் நடுவில் போட்டுக் கொண்டு மீண்டும் தங்களுக்குள் மௌன போரை தொடங்கி இருக்கின்றனர். 


மூன்று மாதங்களுக்கு பிறகு.. 


தன் முன்னே காளியாக வந்து நிற்கும் வைஷுவை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் கன்னத்தில் கண நேரத்தில் விழுந்த அறையில்  மண்டையில் சுத்த குருவி சுத்த மூளையில்  ஏற்பட்ட அதிர்வில் தள்ளாடி நின்றான்  சைக்கோ சைத்து

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2