இதயம் - 48

 இதயம் 48


மருத்துவமனையில் அனைவரும் கூடியிருக்க, உள்ளே வைஷுவிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர் மருத்துவர்கள். 


பெண்கள் இருவரும் ஒரு புறம் அழுதுபடி இருக்க, தேவனும் எகாவும் விஷ்ணுவிற்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தனர். 


தனித்து விடப்பட்ட சைத்து, கண்ணீல் நீர் வழிய அறைக் கதவை  வெறித்துப்  பார்த்திருந்தான். 


வெகு நாட்களுக்கு பின் தன்னிருக் கன்னங்கள் நனைந்திருப்பதை கண்டான்.  அதுவும் அந்த கண்ணீர் தனக்காக இல்லை என்று மூளை உரைக்க, மனம் அவளுக்கென்றது. 


ஆகாயத்தை தொட்ட சந்தோசத்தில் பறந்தவனை பூமியின் கடைசி பகுதிக்கு தூக்கி எறிந்தது  விட்டது போல இருந்தது. 

சொர்க்க வாழ்க்கையை ருசித்தவனுக்கு நரகத்தின் காரத்தை ஊட்டியது போல இருந்தது.


தவறு செய்த போதிலும் யாரிடமும் மண்டியிடாத அவனது மனம் இன்று ஆயிரம் முறை அவளிடம்  மன்னிப்புக் கேட்டு விட்டது. எதை பற்றியும் கவலையின்றி திரிந்தவனுக்கு முதல் முறையாகப் பயம் உண்டானது. தன் காதல் கை நழுவிப் போவதாக உணர்ந்தான். எதற்கும் கலங்கிடாதவன் மனைவியின் கோபத்தை  எண்ணி கலங்கி நிற்கிறான்.


அவன் அமர்ந்திருப்பதைக் கண்டு அவன்  அருகே அமர்ந்து இருக்கையை நிரப்பினான் எகாந்த்.


இருவரிடத்தில் அமைதி. அதை முதலில் விழுங்கியது சைத்து தான். "உனக்கு  என் சட்டைப் பிடிச்சு கேள்வி கேட்கற அளவுக்கு என் மேல கோபம் இருக்குல?"என்றான்.


"ஆமா, அதுக்கு மேல அதிகமாகவே இருக்கு. உன்னால ஒரு காதலை கூட பத்திரமா பார்த்துக்க முடியாதானு கேட்டு அடிக்கணும் போல இருக்கு..."என்றான் எங்கோ வெறித்து. அவனை திரும்பிப் பார்த்து முறுவலித்தவன்" அதுனால தான் உண்மைய அவகிட்ட இருந்து மறைச்சேன். அதன் விளைவு தான் அனுபவிக்கிறேன்"என்றான் நெற்றியை பிடித்தபடி.


"எதுக்கு சத்தியம் செஞ்ச??? அவளை விரும்பினதுக்கு அப்புறமும் எப்படி உனக்கு சத்தியம் செய்ய மனசு வந்தது??"


"தூக்கி வளர்த்த ஒரே காரணத்துக்காக மறுக்க முடியாம சத்தியம் பண்ணிட்டேன். ஆனா, அந்த சத்தியம் நான் மனசார பண்ணல. நான் வைஷு மேல வச்ச காதல் மட்டும் தான் உண்மை.  அதை புரிய வைக்க தான் இவ்வளவு போராட்டம் எனக்கு. ஆனா அதுல தோத்து போயிடுவேனோ பயமா இருக்கு !" முகத்தை மறைத்து கண்ணீர் விட்டான்.


"நீ தோத்துப் போக மாட்ட சைத்து. உன் காதலோட ஆழத்தை நானும் பாத்திருக்கேன். முதல்ல உன் மேல பெருசா எனக்கு நம்பிக்கை இருந்தது இல்ல. உன்னை பிடிக்காம,  வைஷு கூட நான் சண்டை போட்டு இருக்கேன். 'அவன் என்ன  நேரத்துல என்ன யோசிப்பேன் கூட தெரியாது. நீ தான் ஃபீல் பண்ண போறேனு கூட' வைஷு கிட்ட சொல்லிருக்கிறேன்.


ஆனா உன் காதலால இதுவரை பார்க்காத வைஷுவ நீ காட்டுன. அவ கண்ணுல புதுவிதமான மகிழ்ச்சியையும் காதலை நான் பார்த்திருக்கேன். அதுக்கு காரணம் நீ ! உன் கண்ணுலையும் நீ அவ மேல வச்ச காதலை பார்த்ததுக்கு அப்புறம் தான் என் மனசு மாறுச்சு. இப்போ உன் காதல்ல புயல் வீசினாலும் ஒரு நாள்  இந்த நிலமை மாறும் சைத்து"அவன் தோளில் கரம் பதித்து ஆறுதல் கூறினான். அவனும் அவன் கரத்தை அழுத்தி அவன் தோளில் சாய்ந்தான்.



******


பிரபு  , சாய்  , ஸ்ருதி மூவரும் உலையை போல கோபத்தில் கொதித்து போய் வந்தனர். தான் நினைத்ததை  சாத்தித்த திருப்தியில் வந்தார் சரஸ்வதி.


கடுகளவு கூட கருணை என்பது இல்லாது போனது அவரிடத்தில். தன் கோபம் , பழி உணர்வு அத்தனையும் தீர்த்து கொண்ட சந்தோஷம் அவர் மனதில் பொங்க, இரு உயிரை வதைத்து ஒரு உயிரை குடித்து விட்ட பாவச் சுமையைச் சுமக்கப் போவதை அறியாது உள்ளுக்குள் குதித்துக் கொண்டிருக்கிறார்.


மூவரும் சோகக் கடலில் வர, இவர் மட்டும் எதுவும் நடவாதது போல வந்தமர்ந்தவர் மருமகளை வேலை ஏவினார்.


"ஏய் ஸ்ருதி ! தண்ணி எடுத்திட்டு வா!"என்று சாதாரணமாக சொல்ல, அவளுக்கோ அவரை கொலைச் செய்யும் ஆத்திரம் வந்தது . அப்படியே உக்கர காளியைப் போல நின்றிருந்தாள் அவள்.


"என்னடி வெறிச்சிட்டு நிக்கறே ! போய் எடுத்திட்டு வாடி !" எனக் கட்டளை இட, 


"என்னங்க நீங்க என்னை வீட்டை விட்டு துரத்தினாலும்,  மாமா நீங்க என் மேல கோபப்பட்டாலும் பரவயில்லை. இந்த அம்மாக்கு நான் பச்சை தண்ணீ கூட என் கையால நான் கொடுக்க மாட்டேன். எவ்வளவு பெரிய பாவத்தை பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி உட்கார எப்படி தான் மனசு  வருதோ ? ச்ச" என முகத்தை திருப்ப, 


பல்லைக் கடித்தவர் "என்னடி வாய் ரொம்ப நீளுது ! அப்படி என்ன பாவத்த பண்ணிட்டு வந்தேன் நான்?"என எகிறும் போதே அவர் கன்னத்தை பதம் பார்த்திருந்தார் பிரபு.


"பேசாத ! நீ பேசாத !"என அவர் மிரட்ட , அவர் அடித்த அடியில் கன்னத்தை பிடித்து அதிர்ச்சியில் அவரை பார்த்து நின்றார் சரஸ்வதி.


"இந்த அடிய முன்னாடியே கொடுத்திருக்கணும். நான் தான் நீ வாழ்க்கையில் கஷ்டப்பட்டவளாச்சே ! அதுனால இப்படி நடந்துக்கறேனு நினைச்சேன். ஆனா இப்போ தான் உன் சுயரூபமே தெரியுது. நீ என்ன பண்ணிட்டு வந்ததிருக்க தெரியுமா?? உன் தங்கச்சியோட வம்சத்தையே  அழிச்சிட்ட ! அந்த ரெத்ததுல உன் பழிய தீர்த்து கிட்ட, இந்த பாவம் உன்னை மட்டுமில்ல என்னையும் உன் புள்ளையும் உன் பேத்தியையும் சேரும். போதும் சாமி போதும்  உன் பாவத்தை எங்களால  சுமக்க முடியாது ! "என்று கும்பிடு போட்டவர்.



"டேய் சாய் சீக்கிரமா ஒரு வீட்டைப் பாரு அதுல நீ  ,  நான் , மருமக பேத்தி மட்டும் தான் இருக்க போறோம்... வேற எவளுக்கும்  அங்க இடமில்லை. சீக்கிரமா பார். என்னால் இவ முகத்தை பார்த்துட்டு இருக்க முடியாது"என்று வேகமாக சென்று கதவை அடைத்துக் கொள்ள, சாய்யும் ஸ்ருதியும் அவரை போல முறைத்து விட்டு அவர்கள்  அறைக்குள் சென்று அடைந்து கொள்ள, தனித்து விடப்பட்டார் சரஸ்வதி.


'முற்பகல் செயின் பிற்பகல் விளையும்' என்பது அவரிடத்தில் சரியாகப் பழித்தது.செஞ்ச பாவத்திற்கான பலனை அனுபவிக்க  ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக அவரது தங்கை வந்து என்ன ஆட்டம் ஆடப்போறாரோ ! 


****

அறை கதவை தள்ளிக் கொண்டு சிகிச்சையை முடித்த திருப்தியில் வெளியப்பட்ட மருத்துவரை  வளைத்தனர் வைஷுவின் குடும்பத்தார்கள். 


பதட்டமான நிலயை மறைத்து மருத்துவரை வினவினார் விஷ்ணு..."வைஷு எப்படி இருக்கா டாக்டர்?"என்றார். 


"பேசண்ட்டுக்கு ஒன்னுமில்ல நல்லா தான் இருக்காங்க. ஆனா...???"என சோகமாக இழுக்க, அவரை கேள்வியாக பார்த்தனர். 


"குழந்தை தங்கல. அபார்ட் ஆகிடுச்சி. ஏற்கனவே அவன் கர்ப்பப்பை வீக்கா இருந்திருக்கு.  அதிக ஸ்டர்ஸ் வேற, குழந்தை நிக்கல. நாங்க டி என்சி பண்ணிருக்கோம். கொஞ்சம் வீக்கா இருக்காங்க. மயக்கம் தெளிஞ்சதும் போய் பாருங்க"என்று அவ்விடத்தை விட்டு நகர,  


தலையில் அடித்து  அழுதார் சாந்தி. மகிழ் விஷ்ணுவை பிடித்துக் கொண்டு அழ, எகா சைத்துவைப் பார்க்க, தளர்ந்து அமர்ந்தவன் முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழுதான்.


ஒரு சின்ன சத்தியம் தன் இன்னுயிரை மட்டுமல்லாது இன்னுயிரில் ஜனித்த உயிரையும் அழித்ததை எண்ணி கதறினான் உள்ளுக்குள். சிறிய தவறை பெரிய இழப்புக்கு வழிவகுத்து விட்டதை எண்ணி நொந்தான். 


வானவில்லைப் போல தன் மகிழ்ச்சி மேகத்தினுடே மறைந்து போனது. சோகமே கருமேகமாய் கூடி நின்று கண்ணீர்  மழை பொழியும் வேளையானது.


கண்ணீருக்கு பஞ்சமில்லை என்பது போல அனைவரின் முகங்களிலும் கண்ணீர் கோடுகள் நிற்காமல் வழிந்தோடியது. 


வைஷு கண் விழித்ததாக கூற அனைவரும் உள்ளே செல்ல குற்றவுணர்வுடன் கடைசியாக நுழைந்து அவளுக்கு நேரெதிரே  தலை குனிந்து படி நின்றவனை வெறித்தாள்.


அவன் தலை நிமிர வேறெங்கோ பார்த்தாள். "வைஷு மா !"தலையை தடவிய படி நின்ற விஷ்ணுவை கண்டவள் கண்ணீர் வடித்தபடி தன் வயிற்றை தடவிப் பார்த்தாள். 


அவள்து கண்ணீரைக் கண்டதும்  அனைவரது மனதிலும் கணம் கூடியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 


மகிழும் சாந்தியின் ஆறுதல் வார்த்தைகள் சொல்ல, அவையெல்லாம் அவள்  மூளையில் ஏற்றிக் கொள்ளவில்லை. உள்ளுக்குள் எதையோ எண்ணிக் கொண்டிருந்தாள். 


"வைஷு !"எகா அழைக்கவும் அவளை ஏறிட்டாள். "ஆர் யூ ஓகே ?"என கேட்டான். அவளும் பதில் கூறாமல் தலையை மட்டும் அசைத்தாள். 


"வைஷு !"என சைத்து அழைக்க, அவனுக்கு பதிலளிக்காமல் தன் தந்தையை பார்த்தவள் "அப்பா ! டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க ! எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கு டிவொர்ஸ் வேணும் பா ! என்னால இவன் கூட வாழ முடியாது பா "என்றவளை அதிர்ந்து நோக்க, 


அவள் எடுக்க போகும் முடிவிற்காக அவன் முன்னமே அனைத்தைக்கும் தயாராகத்தான் இருந்தான். மனதை தினப்படுத்திக் கொண்டு தான் உள்ளே நுழைந்தான். 


அவன் இதை எதிர்பார்த்தது தான். ஆனால் இதை அவள் கோபத்துடன் சொல்கிறாள் என்று அவனுக்கு  தெரிந்தது. அவள் பேசட்டும் மனத்தில் இருக்கிறதை பகிரட்டும் என்று அமைதியாக இருந்தான். 


சாந்தி பதட்டம் கொண்டு அவள் கையை பற்றினார் "வேணா வைஷு மா ! கோபத்துலே எடுக்கற எந்த முடிவு சரியானது இல்லடா !  கொஞ்சம் யோசித்து முடிவு பண்ணுடா !"என கெஞ்ச,


"இது என் முடிவு இல்ல அத்தை. உங்க புள்ளையோட முடிவு.  அவனும் அதுக்கு தான சத்தியம் பண்ணி கொடுத்திருக்கான். இனி என்னால் அவன் கூட வாழ முடியாது. அப்பா டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க..."என்றாள். 


"மாமா ! நீங்க டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணினாலும் நான் அவளுக்கு கொடுக்க போறதில்ல. அவளோட தலை எழுத்து என் கூட தான் வாழணும் இருக்கு... நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன். அவ இப்போ கோபத்துலே முடிவெடுக்கறா, அதுக்கெல்லாம் ஒத்துப் போகக் கூடாது மாமா !  இப்போ அவ என் மேல கோபமக இருக்கலாம். ஒரு நாள் அவளோட கோபம் மாறும். 


இப்போ மறஞ்சி போன காதல் அப்போ வெளிவரும். அன்னைக்கி  அவளுக்கு புருஷனா நான் இருக்கணும் மாமா ! அதுனால இந்த டிவோர்ஸ் எல்லாம் வேணாம். அவ சொல்றானு நீங்க அழையாதீங்க...  "என்றவன் அவள் புறம் திரும்பி


"உனக்கு இப்போ என்னை கொலை செய்யற அளவுக்கு கோபம் இருக்கு எனக்கு தெரியும். உன் கோபம் குறையிற வரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன். எத்தனை  நாளானாலும் எத்தனை வருசமானாலும் காத்துட்டு இருப்பேன் உனக்காக. இப்பவும் சொல்றேன்  என் காதல் தான் உண்மை அந்த சத்தியம் உண்மை இல்லை"என்று வெளியேறி விட, அவன போன திசையை வெறித்தாள்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2