இதயம் - 47

 இதயம் 47


சாந்தி தன் கையில் வைத்திருந்த ரவிக்கையை எல்லாம் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருத்தார் . 

அனைத்தும் ஸ்ருதியின் கை வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டவை.  


வெள்ளை நிற கற்களாலும் தங்க நிற கற்களாலும்  ரவிக்கை முழுவதும் தைத்து பறவை போன்ற  வடிவத்தில்  கற்களை வைத்து  அழகாய் அலங்கரித்து இருந்தாள். 


"மருமகளே ! ரொம்ப அழகா இருக்குடி. இவ்வளவு நாள் இந்த திறமை எல்லாம் எங்கடி மறச்சி  வச்சிருந்த??"என சாந்தி கேட்கவும்


ஸ்ருதி"எல்லாத்தையும் உங்க அக்கா வீட்டு அடிப்பங்கறையில தான் அத்தை...!" என்றாள்.


"ம்க்கும்... என் புள்ள மட்டும் இல்லேனா  ! இந்நேரம் இதை நீ மறந்தே போயிருப்பேலடி?"என்றிட, 


உடனே அவளும் "அடேப்பா ! என்ன பண்ணிட்டார்னு உங்க புள்ளைய நீங்க புகழ்றீங்க?"எனக் கேலி செய்தாள்.


"இல்லடி அவன் தான, அன்னைக்கி அக்கா கிட்ட பேசி உன்னை இதெல்லாம் பண்ண அனுமதி வாங்கிக் கொடுத்தான். அவன் பேசாம இருந்திருந்தால்,  இதை நீ செஞ்சிருப்பீயா என்ன??"என மகனை விட்டுக்கு கொடுக்காது பேசினார் சாந்தி.


"உங்க புள்ளை வாய் திறந்தது என்னவோ உண்மை தான். ஆனா ரொம்ப சீக்கிரமா திறந்துட்டார் அத்தை. அதுவும் வைஷு இல்லேன்னா இன்னும் திறந்து இருக்கவே மாட்டார்..."என்றிட, வாயில் வைத்து ஆச்சர்யப்பட்டவர்"அவ என்ன பண்ணா?" என்று ஆர்வமாகக் கேட்டார்.

ஸ்ருதியின் நினைவோ பின் நோக்கி சென்றது.


சைத்து காம்பிளக்ஸ் திறந்த அன்று இரவு, தனக்கு முதுக் காட்டி படுத்திருந்த மனைவியை அணைத்திருந்தான் சாய். அவளோ தூங்காமல் முழித்துக் கொண்டு எதையோ யோசித்திருந்தாள்.

அவள் விழித்திருப்பதைக் கண்டு"இன்னும் தூங்கலையாடி நீ?"என கேட்டான்.


"வரலங்க"என்றாள்  எங்கோ வெறித்து.'ஏன்?'என கேட்டவனுக்கு "

'தெரியலே'என்றே  பதிலளித்தவளை

தன் பக்கம் திருப்பியவன், "என் கிட்ட எதையும் ஷேர் பண்ணிக்க மாட்டீயா ஸ்ருதி?" என்றான் 


"ஷேர் பண்ணிக்கற அளவுக்கு புதுசா  எனக்கு எதுவும்  நடக்கலங்க "என்றாள். அவனுக்குத்தான் சங்கடமாகிப் போனது. " இன்னைக்கி ஏன் நீ அந்தக் கடைய வெறிச்சி பார்த்த?"


"அந்தக் கடைய பார்க்கும் போது என் கனவு நியாபகம் வந்தது. அதான் பார்த்தேன்"என்றாள்.



"ஸாரி மா ! என்னால தான் உன் கனவ நிறைவேத்த முடியல !" என்றான் வருத்தமாக, 


"பரவாயில்லங்க இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்றம் எது மேலையும் ஆசையும் வைக்கக் கூடாது  எதை பத்தியும் கனவும் காணக் கூடாதுனு புரிஞ்சிக்கிட்டேங்க"என்று திரும்பி படுத்துக் கொள்ள, 


அங்கே தான் ஒரு கணவனாகத் தோற்று போனதாக எண்ணினான். அன்றிலிருந்தே ஒரு வாரம் அவள் முகமே சரியில்லை.  சரஸ்வதி அதைக் கண்டு கொள்ளவில்லை. 


பிரபு கேட்கவும் 'ஒன்னுமில்ல' என்று விட்டாள். சாய்க்கு மட்டுமே அவள் வாடிய முகத்திற்கு பின் இருக்கும் காரணங்கள் தெரியும்.


லிப்ட் அருகே வைஷுவுடன் குழந்தையை வைத்து பேசிக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. சரியாக சாய்யும் அங்கு வந்து சேர்ந்தான். ஸ்ருதியிடம் சொல்லிக் கொண்டு வைஷு லிப்டில் நுழைய அவனும் அவளிடம் சொல்லிக் கொண்டு லிப்டில் நுழைந்தான். இருவர் மட்டுமே இருந்தனர். 


அவன் அமைதியாக செல்லைப் பார்த்தான். இவளோ அவனை பார்த்து, 

"இன்னும் எத்தனை நாளைக்கு ஸ்ருதியையும் அவ சுயத்தையும் வீட்லே அடைச்சி வைக்க போறீங்க சாய் மாமா ?"என்றாள். அவன் கைகள் அப்படியே நின்றன . அவளை திரும்பி பார்த்தான்.


"உங்க கிட்ட அவளுக்கு கடை வச்சு கொடுக்க சொல்லல. வீட்லே ஒரு ரெண்டு மூணு மணி நேரம் அவளுக்காக ஒதுக்க விடுங்க தான் சொல்றேன்.


அவளுக்கு பிடிச்சத செஞ்சு அதுல கிடைக்கற காசுல அவளுக்குனு தேவையானத  வாங்கிப்பா !  உங்க கிட்டயும் உங்க அம்மாகிட்டையும் கையேந்தனும் அவசியம் இருக்காதுல . ஒரு பேட் வாங்கணும்னாலும் அவ உங்க ரெண்டு பேர் கிட்ட வந்து நிக்கணுமா??  எப்போ தான் நீங்க திருந்த போறீங்க??? அன்னைக்கி நான் சொன்னது போல நான் சுயமா யோசித்து முடிவெடுக்கறவன தான் நான் கல்யாணம் பண்ணிருக்கேன். ஆனா நீங்க இன்னும் அப்படியே இருங்க..

"என்று சொல்லிவிட்டு செல்ல , அவனுக்கோ அந்த நொடியே மண்ணுக்குள் புதைந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. 


அதன் பின் வந்த நாட்களில் சரஸ்வதியை எதிர்த்து பேசி தான்  அவளை  வீட்லே அவளுக்கு  பிடித்த ஆரி ஓர்க்கை செய்ய அனுமதி வாங்கி தந்தான். முதலில் அவர் வாய்க்கு வந்ததை பேச, தனிக் குடித்தனம் போவதாகச் சொல்லி அவரை அடக்கி வைத்து விட்டான்.


இப்போது அவளும் அப்பார்மெண்ட் மக்களுக்கு ஆரி ஓர்க்கு,  எம்பிராயிடரி என போட்டு கொடுத்து கையில் கொஞ்சம் காசு பார்க்கிறாள்.  குழந்தையை மூவருமாக மாத்தி  மாத்தி பார்த்துக் கொள்கின்றனர். 


இவ்வாறு நடந்ததை அவள் சொல்ல, தன் மருமகளை மெச்சும் பார்வை பார்த்தார். வைஷுவோ, அவர்களது சம்பாஷனையை புன்னகையுடன் கேட்டு கொண்டிருந்தாள். 


சரியாக அகல்யாவும் அங்கே வந்தார். "வா அகி!" சாந்தி அழைக்க, ஸ்ருதியும் வைஷுவும் திரும்பி வந்தவரை வரவேற்றனர்.


"என்ன விஷயம் அகி?"சாந்தி கேட்டிட, அவரோ "வஸ்திக்கு ஐஞ்சாவது மாசம் வர போகுது. களி கிண்டி போடணும் அதை பத்தி பேச தான் வந்தேன் சாந்தி"என்று அவர்களுக்கு நியாபகப்படுத்த, 


"அட ஆமால ! மறந்துட்டேன் பார்ரேன்"என்றார் தலையில் கை வைத்தபடி.


"ம்ம்... அண்ணி கிட்ட இத பத்தி பேசி ஒரு நல்ல நாள் பார்த்து சம்பந்தி கிட்டையும் சொன்னா, அவங்களும் எதாவது பார்ப்பாங்கல"என்றார். 


"சரி வா போய் பேசுவோம்"என்று இருவரும் எழுந்து கொள்ள, ஸ்ருதி தான் கொண்டு வந்த ஜாக்கெட்டை அடுக்கிய படி வைஷுவை பார்க்க, அவளோ  அடிவயிற்றை தடவிய படி  எதையோ யோசித்து புன்னகை செய்தாள்.


"என்ன வைஷு நீ எப்போ நல்ல நியூஸ் சொல்ல போற?"


"சொல்லணும் ஆசை தான் ஸ்ருதி. ஆனா எனக்கு இர் ரெகுலர் பிரீயட்ஸ். அதான் கொஞ்சம் பயமா இருக்கு"என்று தன் பயத்தை அவளிடம் சொல்ல,


"நீ எதுக்கும் பயப்படாத கண்டிப்பா நல்லதே நடக்கும் வைஷு. உனக்கும் செய்ய வேண்டிய சடங்குகள்ல நாங்க சீக்கிரமா செய்வோம்"என்றாள். அவளும் சிரித்து கொண்டு ஆமோதித்தாள்.


அகி, சாந்தி இருவரும் சரஸ்வதியி்டம் சொல்ல அவரும் ஒரு நல்ல நாள் பார்த்து தேதியை முடிவு செய்தார். அகியும் மகிழிடம் சொன்னார். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது அந்த நாள் வர வரைக்கும்.



****


வஸ்தியை கூடத்தில் அமர வைத்தனர். சரஸ்வதி முன் வந்து சந்தனமிட்டு குங்குமம் வைத்து வளையல் போட்டு விட்டார். வஸ்திக்கு சடங்குகள் செய்ய அவள் பக்கத்தில் வைஷுவையும்  அமர வைத்து அவளும் சீக்கிரம் கர்ப்பம் தரிக்க அவளுக்கும் சடங்குகள் செய்தனர்.


அவள் கண்களோ சைத்துவை நோக்க, அவள் முகத்தை ஆசையாகப் பார்த்துக் கொண்டு தான் நின்றான். அவளுக்கு வெட்கம் வர தலை குனிந்து நின்றாள்.


வைஷுக்கு செய்யும் சடங்கை எல்லாம் சரஸ்வதி வன்மத்துடன் ' இதெல்லாம் செஞ்சா மட்டும் இவளுக்கு எல்லாம் நடக்குமாகும். இவளும் வாயி வயிறுமாயிருவாளாக்கும்..." என இளக்காரமாக எண்ண, சரியாக வைஷுவுக்கோ உணவை கொடுக்க, உள்ளே சென்ற உணவு உள்ளுக்குள் இறங்காமல் வெளியேற வாயை மூடிக் கொண்டு குளியலறை நோக்கி ஓடுவதை கண்டு பதறிப் போனார்கள்.


" என்னாச்சு?"என கேட்டு வந்தவனர் சாந்தியும் மகிழும்.


"தெரில ஒருவாரமாக இப்படி தான் இருக்கு. சாப்பிட்டதெல்லாம் வெளிய வந்துடுது..."என்றாள் வாயை. துடைத்தப்படி.


"ஒரு வாரமாவா ? இதை  ஏன்  என்கிட்ட சொல்லல நீ?"பல்லைக்கடித்த படி வந்தான் சைத்து."நீ பிசியா இருந்தப்பா அதான் நான் சொல்லல "என்று மெத்தையில் அமர்ந்தாள் சோர்வாக, 


"என் கிட்ட சொல்லிருக்கலாம்ல நான் உன்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருப்பேன்ல"சாந்தியும் கடிந்து கொள்ள, " எனக்கு வேலை இருந்தது அத்தை அதான் சொல்லல"என்க, அவளை மூவரும் முறைத்தனர்.


"சரிவா ஹாஸ்பிட்டல் போலாம்" சைத்து அழைக்க, "பச் போலாம்.. கொஞ்ச நேரம் ஆகட்டும்"என்று சோர்வுடன் சொல்ல, அவளை பார்த்து இருந்த மகிழ்.


"வைஷு , தலைக்கு குளிச்சிட்டீயா?"எனவும்" இல்லமா" என்றாள்.


"தேதி வந்திருச்சா????"எனக் கேட்டதும் யோசிக்க ஆரம்பித்தாள்." டேட் தாண்டி ரொம்ப நாள் ஆச்சிமா"என்றாள்.


சாந்தி,  மகிழ் முகத்தில்  புன்னகை படற , மகிழ் மகளுக்கு கொடுக்க வாங்கி வைத்திருந்த கர்ப்பம் உறுதி செய்யும் அட்டை கொடுத்து பரிசோதிக்கச் சொன்னார். 


அவள் சைத்துவை பார்க்க ' போ 'என்றான். அவளும் உள்ளே சென்று பரிசோதிக்க, அது ரெட்டைக் கோடு காட்டி நின்றது.


வைஷுவும் சைத்துவும் வெளியே சொல்லிக் கொள்ள வில்லை என்றாலும் உள்ளுக்குள் அவர்கள் இருவரும் குழந்தையை எதிர்பார்த்திருந்தனர். 


அவள் எதிர்பார்த்தது போல நிகழ சந்தோசத்துடன் வெளியே வந்தவள், அவர்கள் முன் முகத்தை முதலில் சோகமாக வைத்துக் கொண்டு வர, மூவரின் முகமும் சற்று வாட, அதைக் கண்டவள் அடுத்த நொடியே இரட்டை கோடு தாங்கிய அட்டை காட்டினாள்.


அவனோ சந்தோஷத்தில் அருகே இருக்கும் தாயையும் மாமியாரையும் மறந்து அவளை தூக்கிச்  சுற்ற, இருவரும் வெட்கப்பட்டு அங்கிருந்து வெளியே வந்தனர்.


வெளியே அவர்களை எதிர்பார்த்தவர்களிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியை சொன்னார்கள். சரஸ்வதியை தவிர அனைவரும் ஆச்சர்யம் கொள்ள சரஸ்வதியோ அதிர்ச்சி அடைந்ததோடு தோற்றுப் போன வெறியில் நின்றிருந்தார்.


"போ மா போ அத்தை மாமா கால்ல விழு!"என்று மகிழ் சரஸ்வதியின் காலில் விழுகிச் சொல்ல, இருவரும் அவர் காலில் விழுந்தனர். 


இருவரும் அவர் பாதம் தொட்டு எழ, தன் ஆதங்கத்தை வார்த்தையில் காட்ட ஆரம்பித்தார். 


"அப்றம் என் புள்ளைய மயக்கி காரியம் சாதிச்சிட்ட???"என்றவரை அதிர்வுடன் பார்த்தான் சைத்து. வைஷுவோ புரியாது அவரை பார்த்தாள். 


"என்ன பேசறீங்க நீங்க?உங்க புள்ளைய மயக்கி காரியம் சாதிச்சிட்டேனா? என்ன காரியம் சாதிச்சிட்டேன்??"


"சத்தியம் செஞ்சு கொடுத்தவன மயக்கி புள்ளைய வாங்கிட்டேல..." 


"அக்கா !" 


"பெரியம்மா !" 


இருவரும் ஒரு சேர கத்தினார்கள். 


"பெருசா சத்தியம் செஞ்சு கொடுத்த? இப்போ என்ன பண்ணிருக்க நீ?? இல்ல அவ தான் மயக்கினான, உனக்கு எங்க போச்சி புத்தி???"என அவர் சைத்துவை  திட்ட, அவனோ நெற்றியில் கைவைத்தான்.


"அக்கா ! எந்த நேரத்தல என்ன பேசிட்டு இருக்க? கொஞ்சம் அமைதியா இருக்கா "அவரை அடக்க முயல, 



"அமைதியா இருந்து தானடி இவன என் தலையில் மொளகா அரைச்சிட்டான்" என 

பற்களை கடிக்க, அவர்கள் சம்பாஷ்ணையை மற்றவர்கள் புரியாமல் முழித்தனர். 


"அக்கா ! பேசாதக்கா "தவிப்பாக கெஞ்ச, "இதுக்கு மேல் பேசி என்னடி ஆக போகுது??  அதான் பண்ண சத்தியத்தை பொய்யாகிட்டான்.  இனி எனக்கு என்ன ஆகப்போகுதோ???" மேலே பார்த்து நெஞ்சில் அடித்து புலம்பினார்.


"என்ன தான் பிரச்சினை உங்களுக்கு? எனக்கு நீங்க சொல்றது ஒன்னும் புரியல. அவன் என்ன சத்தியம் பண்ணி கொடுத்தான்? நீங்க ஏன் புலம்புறீங்க?என  தன் சந்தேகத்தை  கேட்டாள் வைஷு.


அதற்குள் இடைப்புகுந்த சைத்து, "அதெல்லாம் ஒன்னுமில்ல வைஷு, வா நாம ஹாஸ்பிட்டலுக்கு போலாம்"என்று கையை பற்ற,


அவன் கைகளில் இருந்து தன் கையை உறுவியவள், "இருடா ! ஏதோ  நீ சத்தியம் செஞ்சு கொடுத்து அத மீறினதா சொல்றாங்க... நான் வேற உன்னை மயக்கினதா சொல்றாங்க... எனக்கு ஒன்னும் புரியல உண்மைய சொல்லு சைத்து..."அவனை வீடாது கேள்வி கேட்டு துளைக்க பதில் சொல்ல தயங்கினான்.


"சொல்லு சைத்து..." எனக் கத்தினாள்.


"நான் சொல்றேன். நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தது எனக்கு பிடிக்கல.. அதான் உன் கூட வாழக்கூடாதுனு சொல்லி இவன்ட்ட சத்தியம் வாங்கினேன். இவனும் செஞ்சு கொடுத்தான். ஆனா இப்போ உனக்கு பிள்ளைய கொடுத்து எனக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை மீறிட்டான்"அவனை முறைத்து விட்டு அனைத்தையும் சொல்ல,  சைத்து தலையில் அறைந்து கொண்டான்.


அதிர்ச்சியில் வைஷுவின் கால்கள்  துவழ,  தள்ளாடி கீழே விழ போனவளை தாங்கி பிடிக்க வந்த சைத்துவை தடுத்து நிறுத்தினாள்.


"அவங்க சொன்னது உண்மையா சைத்து?"


"அதெல்லாம் தனியா போய் பேசிக்கலாம். வா வீட்டுக்கு போலாம்"என்றவனை தடுத்தவள், தலையை இடது வலது புறமாக ஆட்டி. "எனக்கு உன் பதில் வேணும்"என்றாள் .


முகத்தை துடைத்தவன் ஆழ மூச்செடுத்து"ஆமா செஞ்சு கொடுத்தேன்.  அவங்க சாக போறேன் தற்கொலை பண்ணிக்க போறேன் மிரட்டுனாங்க. நானும் பயத்துல  அவங்களுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன். ஆனா மனசார இல்ல"என்றான்.


"இதை ஏன் நீ என் கிட்ட சொல்லல?. அந்த சத்தியத்தால தான நீ என் கிட்ட நெருங்கவே யோசிச்ச?  அப்போ நீ என்னை வீட்ட விட்டு அனுப்பற நோக்கத்துல தான் என்னை விட்டு விலகி இருந்திருக்க?  இதுக்கு நீ அந்தக் கல்யாண மண்டபத்தில இருந்து எந்திருச்ச போயிருக்கலாம் சைத்து... இப்படி கழுத்துல தாலிய கட்டிட்டு காதலக்கிறேன் சொல்லி கழுத்த அறுத்திருக்க வேண்டாம் டா.." என கண்ணீருடன்  சொன்னாள்.


"வைஷு மா நான் சொல்றத புருஞ்சுக்கோ !" என கையை பிடிக்க ,  காளியாக அவதாரம் எடுத்து கத்தினாள்.

"தொடாத என்னை தொடாத... !"அவனை தூரத் தள்ளினாள்.


"ச்சீ...  நீ தொட்டா எனக்கு அருவருப்பா இருக்கு ! உன் கூட இத்தனை நாள் இருந்தத நினைச்சாலே எனக்கு பத்திக் கிட்டு வருது !" என தன் வெறுப்பை காட்ட பதறி போனான்.


"வைஷுமா, ப்ளீஸ்  அப்படி சொல்லாத  என்னால தாங்க முடியல.  இந்த சத்தியம் எல்லாம் பொய். நான் உன்மேல வச்சக் காதல் சத்தியமான உண்மைடி"



"ஓ .. அப்ப  என் மேல வச்சிருந்த உண்மையான காதல ஏன் அவங்க கிட்ட  நீ சொல்லல? என்னால அவ இல்லாம வாழ முடியாது. அவள நான் உண்மையா காதலிக்கிறேன்னு ஏன் நீ அவங்க கிட்ட சொல்லல ???   அவங்க சத்தியத்துக்காக கொஞ்ச நாள் என்னை விட்டு விலகி இருந்த.  அப்பறம் உன் காதலுக்காக என் கூட சேர்ந்து இருந்திருந்த பெரியம்மாவும் உனக்கு உன் காதலும் முக்கியம்  இடையில் நான் தான் ஏமாந்து போயிட்டேன்"என்று தலையில் அடித்தாள். 


"என்னையும் என் காதலை அவமான படுத்திட்டலடா! ச்ச உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கல இங்க இருந்து வெளிய போ !" எனக் கத்தினாள்.


"அப்படி சொல்லாத  வைஷுமா ! அக்கா மேல இருக்க பாசத்துல சத்தியம் பண்ணி கொடுத்துட்டான். ஆனா அதை நெனைச்சி அவன்  ரொம்ப பீல் பண்ணினா மா ! நீன்னா அவனுக்கு உசுருடா. 


உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கான் எனக்கு தெரியும் வைஷு மா ! அவன் உன்னை  ரொம்ப காதலிக்கிறான். அவன வேண்டாம்  சொல்லிடாத வைஷு !"என சாந்தி கெஞ்ச, 


"அப்போ நீங்களும் இதுக்கு உடந்தையா அத்தை.  உங்களுக்கு முன்னாடி தான் அவன் சத்திய பண்ணி கொடுத்திருக்கான் இல்ல..."என்றதும் பதறியவர்


"ஐயோ ! நிஜமா நான் அங்க இல்லம்மா.  இருந்திருந்தா நான் அவனை சத்தியம் பண்ண விட்ருறுக்க மாட்டேன் வைஷுமா. எனக்கே நீ ஊட்டி போனதுக்கு  அப்பறம் தான் இவன் என் கிட்ட சொல்லி அழுதான். நான் தான், சத்தியத்தை விட உனக்கு அவ தான் முக்கியம் சொல்லி அவனை அனுப்பி வச்சேன் மா ! என்னை நம்புடா ! " 


"என்னை தேடி இவன் வந்தப்ப கூட என் கிட்ட உண்மைய சொல்லிருக்கலாம்ல அத்தை... மறச்சுட்டான். மறச்சு காரியமா இருந்திருக்கான்.  எனக்கு இவன் துரோகம் பண்ணிருக்கான் அத்தை. எப்படி இவனை  மன்னிக்க சொல்லுங்க???"


"நீ அவனை மன்னிக்க வேணாம்.  அவனுக்கு  என்ன தண்டனை வேணுனாலும் குடு ! ஆனா வீட்டுக்கு வந்துடுடா ! வேற எந்த முடிவையும் எடுத்திடாத  வைஷுமா !" என அவரும் கெஞ்ச, 


"நோஓஓ... இனி நான் இந்த துரோகிக் கூட வாழவே மாட்டேன். இவன் எனக்கு வேணா. அவன கூட்டிட்டு இங்க இருந்து போயிடுங்க" என்றாள் .


"வைஷு ! எனக்கு  என்ன தண்டனை வேணா குடுடி ! என்னால உன் பிரிவை  மட்டும் தாங்கிக்க முடியாது ! ப்ளீஸ் மா வா வீட்டுக்கு போலாம்" என்று மீண்டும் அவள் கையைப் பிடிக்க  அதை உதறியவள்


"நான் அங்க வரமாட்டேன். இனி எனக்கும் உனக்கும்  நடுவுல எதுவுமே இல்ல! " என அவள் கத்த, அவளது அடிவயிறு சுளிரென வலிக்க காலுகளுக்கிடையே குருதி வழிய "அம்மா !"  என அலறியவள் மயங்கிச் சரிந்தாள்.


"வைஷு" என அலறியவள் அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2