இதயம் - 46

 


இதயம் 46

அன்று தான் காம்ப்ளக்ஸ் திறப்பு விழா, அவர்கள் கேட்ட  மொத்த பணத்தையும் தந்து விட்டு, காம்ப்ளக்ஸை தனது மனைவியின் பெயரிலே வாங்கிருந்தான் சைத்து. அவள் கொடுத்த நகையை வைத்து  பணம் திரட்டி காம்பளக்ஸை வாங்கியதோடு சில பல வேலைகளையும் பார்த்து பெயர் மாற்றம் செய்து வைத்திருந்தான் .


அவனது நடனப் பள்ளியுடன் மேலும்  பத்து கடைகள் இருந்தது அங்கே.  ஏற்கனவே அங்கே ஐந்துக் கடைகள் வாடகைக்கு விட்ட படி இருக்க, மேலும் ஐந்து கடைகள் திறக்கும் முன்னமே புக் செய்து விட்டு சென்றனர்.  எந்தக் கடைகளும் காலியாக இல்லை. வித விதமான கடைகள் அந்தக் காம்பளக்ஸுக்குள் இருந்தன. 


எல்லா வேலையும் முடிந்து திறக்கும் நாளும் வந்தது. வைஷுவிடம்' அவளை திறக்க வேண்டும் 'என்று  சைத்து சொல்ல, அவளோ மறுத்து விட்டு, சரஸ்வதியை திறக்க வைக்கச் சொல்ல வேண்டும் "என்றாள். இதை கேட்ட சாந்தியும் தேவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சைத்துவோ பல்லைக் கடித்தான். 


அவனுக்கு தான் அவரது  சுயநலம் தெரியும் அல்லவா ! 'அவரை வைத்து திறக்க சொல்ல வேண்டுமா?' என்று உள்ளுக்குள் கோபம் கொப்பளிக்க, அவளோ பொறுமையாக, "அவங்களுக்கு  என்னை பிடிக்காது தான். என் கூட சண்டை போட்டு  என்னால அவங்க போனாலும், நீங்க ரெண்டு பேரும் பேசாம இருக்கிறது என்னமோ போல இருக்கு அத்தை. ஏதோ நான் வந்து குடும்பத்தை பிரிச்சது போல இருக்கு அத்தை.


இப்பக் கூட  நீங்க  ரெண்டு பேரும் அவங்க கிட்ட முகம் கொடுத்து பேசற மாதிரி எனக்கு தெரியல. ஆனா இதெல்லாம் என்னாலனு ஒரு பீல் வருது அந்த பீல்ல போக்க, நீங்க எல்லாரும் பழைய படி மாறனும் , நீங்க ரெண்டு பெரும் அவங்க கிட்ட சகஜமா பேசணும். அதுக்கு தான் அவங்களை திறக்க வைக்க சொல்றேன். நான் திறந்தேனா தேவை இல்லாத சீன்  க்ரியேட் பண்ணுவாங்க. உங்களுக்குள்ள இருக்க விரிசல் இன்னும் அதிகமாகும். ப்ளீஸ் அத்தை ப்ளீஸ்  சைத்து அவங்களே வெட்டட்டுமே ! உங்களுக்குள்ள மனஸ்தாபம் இல்லேன்னா இந்நேரம் பெரியவங்க அவங்களை தான கூப்பிட்டு இருப்பீங்க... இப்பையும் அப்படியே கூப்பிடுங்க"என்று கூறி இருவரையும் நெகிழச் செய்தாள்.


'ஆனால் சரஸ்வதி  செய்த காரியங்கள் மட்டும் தெரிந்தால் இவள் எவ்வாறு எடுத்துக் கொள்ள போகிறாளோ !' எண்ணி இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டு தவித்தனர்.


மருமகளை அணைத்து  உச்சி முகர்ந்தார் சாந்தி. " அவங்க  உன்னை அவ்வளவு பேசியும்,  நீ அவங்களுக்காக யோசிக்கிற  நம்ம மொத்த குடும்பத்துக்காக யோசிக்கற... உன்னை விட  சிறந்த மருமகள்னு வேறு யார  சொல்ல முடியும்.  இதை அந்த அக்கா புரிஞ்சுக்க மாட்டிக்கிதே ! வெறும் வீட்டு வேலை பார்க்கிறதும். வீட்ல இருக்கிறவங்க பேச்சை கேட்கறவ மட்டும் நல்ல மருமக இல்ல...  தன்னோட குடும்பம்னு எல்லாரையும் சேர்த்து  யோசிக்கறவ தான் நல்ல மருமக... நீ என்னோட பெஸ்ட் மருமக "என கன்னம் கிள்ளி கொஞ்சினார்.


அழகாய் புன்னகைத்தவள் அவரது கன்னைத்தையும்  கிள்ளி "ஐஸ் வச்சத்து போதும்...  சனா வோட சேர்ந்து நாலு பேரா போய் அவங்களை அழைச்சிட்டு வாங்க... முக்கியமா நான் தான் அவங்களை  

திறக்க சொன்னேன் சொல்லி காரியத்தை கெடுத்திடாம இயல்ப நீங்களா  யோசிச்சது போல அவங்களை அழைச்சிட்டு வாங்க  என்ன"எனவும் செல்லமாக அவளது  காதை கிள்ளினார் சாந்தி. 


ஆனால் சைத்துக்கு  இதில் சிறிதும் உடன் பாடில்லை அதை அவன் முகத்தில் காட்டிக் கொண்டிருக்க, அவனை உருட்டி மிரட்டி அவர்களோடு அனுப்பி  வைத்திருந்தாள்..


அவர்கள்  நால்வரும் சென்று திறப்பு விழாவிற்கு அழைத்தோடு நீங்க தான் திறந்து வைக்கணும் என்று சாந்தியும் தேவனும்கூற ஒரு நிமிடம் அவரால் நம்ப முடியவில்லை. 


பழைய சாந்தியாக தன்னை எண்ணி கர்வம் கொண்டார்... சரஸ்வதிக்கு அவர்கள்  மீது இருந்த சின்ன சுணக்கமும் சென்றுவிட, அக்கறை இருப்பது போல மேலும் தன் அதிகாரத்தை காட்ட தவரவில்லை. வேறு வழியின்றி அமைதியாக இருந்தனர்.


திறப்பு விழா நாளும் வந்தது. தன் மனைவி அன்று கவரிங் நகை அணியக் கூடாது என்ற சில செலவுகளை சுருக்கி கொஞ்சம் இருந்த பணத்தில் அவளது பாதி நகைகளை மீட்டுக் கொடுத்தான் சைத்து, அதில் அவளது கணவனின் காதல் மட்டுமே தெரிய கட்டடிணைத்து முத்தம் கொடுக்க, மேலும் அதை நீடிக்கும் வேலையை அவன் பார்த்தான். 


குடும்பமாக திறப்பு விழாவிற்கு சென்றனர். அங்கே விஷ்ணுவும் மகிழும் வஸ்தியும் எகாவும் வந்திருந்தனர். அவர்களை மரியாதை கலந்த அன்போடு வரவேற்றனர் சைத்துவும் சாந்தி தேவன் பிரபுவும். மாமியார் ,  மாப்பிள்ளை வீட்டுக்கர்வம் என சரஸ்வதிக்கு மட்டுமே இருக்க அவரை  பொருட்டாக கூட எண்ணவில்லை.



சரஸ்வதி கையில் கத்திரிக்கோளை கொடுத்து வெட்டச் சொல்ல, அவரோ சைத்துவின் அருகில் நின்ற  வைஷு ஏளனமாக பார்த்து  இதழை வளைத்து விட்டு ரிப்பனை வெட்டினார். வைஷுவோ  அதைப் பொருட்டாக மதிக்காமல் கைதட்டி சந்தோசப்பட்டாள் .


அனைவரும் உள்ளே நுழைந்தனர். கீழே இருந்த கடைகளை பார்வையிட்ட வண்ணம் வந்தவளுக்கு கால்கள் பசைப்போட்டு ஒட்டியது போல  நின்றன. கண்கள் அந்தப் பலகையுள்ள பெயரை கண்டு நிலைக் குத்தி நின்றன. கையை உயர்த்தி காட்டியவளுக்கு நா அசையவில்லை பேச்சும் வரவில்லை. கண்கள் கலங்கிப் போக, அருகே நின்ற சைத்துவின் சட்டை கசங்கி போகுமளவு இருக்க பற்றி அழுதாள். அவள் முதுகை தேய்த்துவிட்டான் சைத்து.


'ஃபிரஸ் கிளிக்' என்று அவளது மற்றோரு பிரான்ச்சும் அங்கே திறக்கப் பட இருப்பத்தை சற்றும் எதிர்பாராதவளுக்கு இந்த இன்ப அதிர்ச்சியை தாளமுடியவில்லை... அவள் மட்டும் அல்ல குடும்பம் மொத்தமும் அதை எதிர்பார்க்கவில்லை... விஷ்ணுவும் மகிழும் மருமகனை எண்ணி நெகிழ்ந்து போனார்கள். எகாவோ அவனை பெருமையாக பார்த்தான்., மகனை எண்ணி பெருமிதம் கொள்ள, சரஸ்வதி மட்டுமே  உள்ளுக்குள் பொறுமினார்.


'என் காசில அவளுக்கு கடைவச்சு கொடுத்திருக்கானா?? அவளை துரத்த நினைச்சா , இவன் சேர்க்கணும் நினைக்கறானா?? இருக்கட்டும் இருக்கு அவனுக்கு'என்று உண்மை அறியாது உள்ளுக்குள் கருகினார்.


"இப்படியே அழுதிட்டு  இருக்க போறீங்களா மேடம்? நல்ல நேரம் முடியறதுக்குள்ள ரிப்பனை கட் பண்ணுங்க"என்று கத்திரிக்கோளை நீட்ட, கலங்கியவிழிகளோடு பார்த்தவள், அவன் கையைப் பற்றி இருவருமாக வெட்டி உள்ளே நுழைந்தனர்.


அந்த இடம் முழுவதையும் சுத்தி பார்த்தாள். அவள் ரசனைக்கு ஏற்றது போலவே இருந்தது. பரணி அகிலாவின் உதவிகளோடு தான் இது சாத்தியமானது. பாதி வேலைகள் மட்டுமே முடிந்திருக்க மீதி அவள் விருப்பத்திற்கு  பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.


சாந்தி அவனிடம்"எப்படி டா இது?"எனக் கேட்க,"சிம்பிள் மா, அவ பிரான்ச் ஓபன் வச்சிருந்த பணம் , நகை எல்லாம் எனக்காக கொடுத்தா, அதுல இருந்து நான் அவளுக்கு கொஞ்சமா செஞ்சிருக்கேன்"என்று தோளை குலுக்க, அது கொஞ்சமில்லை என்று அவளுக்கு  தெரியும். ஆனால் அது கடனுக்காகவோ கொடுத்த பணத்திற்காகவோ செய்யவில்லை அதில் முழுக்க முழுக்க காதலோடு தான் செய்திருக்கிறான்  என்று மட்டும் தெளிவாக  தெரிந்தது.


அனைவரும் கடையை சுற்றிப் பார்க்க அவள் மட்டும் அவன் கைகளுடன் கோர்த்து, "இப்போவே உன்னை இறுக்கி அணைச்சு உன் கிட்ட பேசணும் தோணுது சைக்கோ "என்று கன்னடித்து விட்டு சொல்ல, "அதுக்கு இங்க தனி ரூமே இருக்கே "என்று  அவளை அழைத்து செல்ல,  மேலே அவனது டான்ஸ் வேர்லடு  உள்ளே ஒரு சிறு தனி அறை இருக்க, அங்கே அழைத்து சென்றான்


அது  மினி அறை போலவே இருந்தது "உனக்கு எப்போலாம்  பேசணும் போல இருக்கோ எனக்கு எப்போலாம் பேசணும் போல இருக்கோ இந்த ரூமுக்கு வந்திடனும்... ரெண்டு பேரும் கட்டிட்டு காதலிக்கலாம் பேசிக்கலாம்"என்று அவளை நெருங்கினான்.


"நீ எனக்கு இவ்வளவு பெரிய சப்ரைஸ் கொடுப்ப நான் நினைக்கல சைக்கோ "என்று கண்கள் கலங்க சொல்ல,  அவள் இதழில்  விரலை வைத்து தடுத்தவன், வழியும்  கண்ணீரை துடைத்து விட்டு, "நீ எனக்கு கிடைச்சதே பெரிய சப்ரைஸ் தான்  வைஷு...  என் வாழ்க்கையில் எனக்கு இருக்க பெரிய சப்போர்ட் நீ அது போல உனக்கு நானும்  சப்போர்ட்டா இருப்பேன் எப்பையும்.


என்னை நீ முழுசா மாத்திட்டடி.  சரஸ்வதி கட்டுப்பாட்டுக்குள்ள பிற்போகுவாதியா பெண்கள் ஆண்களுக்கு அடுத்து தான் நினைச்சிட்டு இருந்த என்னை, காதல் அன்பு,   பாசம், வேலைன்னு எல்லாத்துலையும் எங்களுக்கு மேலே நீங்கனு காட்டிடடி நீ. என்னை உன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்ட, எனக்கு உன் கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கற சுதந்திரம் பிடிச்சிருக்கு.. லவ் யூ வைஷு "என்று அவளை அணைக்க, "லவ் யூ டூ சைக்கோ !"என்று அவளும் அணைத்துக் கொண்டாள்.


இங்கோ சரஸ்வதி சாயை தனியாக அழைத்து உண்மை என்னவென்று விசாரிக்க, அவனும் அவரிடம் சைத்து பணம் வாங்காததைச் சொல்ல, அவர் முகம் கறுத்துவிட்டது. 



****

குழந்தையை கையில் வைத்து கொண்டு கடையை ஏக்கமாகப் பார்க்கும் ஸ்ருதியின்  எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டான் சாய்பிரகாஷ். ஆனாலும் எதுவும் செய்ய முடியா நிலையில் அவனிருக்க. மனைவியை மேலும் ஏக்கம் கொள்ள வைக்காமல் அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.


எகாவும் வஸ்தியின் உடல் நிலையை காரணம் காட்டி அவனும் சென்று விட்டான். மதியம் வரை குடும்பம் மொத்தமும் இருந்தது. பின் அவர்களும் கிளம்பிவிட்டனர். அனைவரும் செல்ல சைத்துக்கு மட்டும் வேலை இருந்தது.  தேவனோடு பார்த்துக் கொண்டிருந்தான்.


இரவு வரை வேலை இழுத்தடித்தது. வெளியே சாப்பிட்டு வந்தவன் மெத்தையில் விழ ,அவனுக்காக காத்திருந்தவள் அவன் மேல் சரிந்து விழுந்தாள்.  சின்னதாக முகம் கூட சுழிக்காது அவளை அப்படியே அணைத்துக் கொண்டான்.


"எனக்காக  என் ஆசையை நிறைவேத்தின  என் கணவனுக்கு என் சைக்கோக்கு நான் என்ன செய்ய போறேன் தெரியலையே !"என உதட்டை பிதுக்க, "பெருசா எதுவும் வேணாம் , வாழ்க்கை முழுக்க  உன் காதலையும் உன்னையும் கொடு போதும்"என்று பெருத்தன்மையாகச் சொல்ல, அவளோ நெற்றி,  மூக்கு,  கன்னம் என முத்தம் வைத்து, தனது சம்மதத்தை தந்து ஆரம்பித்து வைக்க, முடிவே இல்லாமல் நீண்டது  அவர்களது காதல் யுத்தம்.


******


இரண்டு கோடுகள் தாங்கிய அட்டை கையில் கெட்டியாக பிடித்து கொண்டிருந்தவளின் கால்கள் துவண்டன, அவளது இரண்டு கால்களுக்கு இடையே குருதி வழிய வயிற்றைப் பிடித்து வலியில் கத்தியவளை கண்டு தூக்க வந்தவனை எட்ட  நிறுத்தினாள் வைஷு.


"என்னை தொடதே ! இது வரைக்கும் நீ தொட்டத்தை  நினைச்சி எனக்கு அசிங்கமா இருக்கு. உன்னை காதலிச்ச பாவத்துக்கு எனக்கு தண்டனை கிடைச்சிருச்சி. நான் உயிரோட இருக்கணும் நினைச்சா என் முகத்துலே முழிக்காத போ இங்க இருந்து "என்று சைத்துவின் முன் கை நீட்டிச் சொன்னவள் அப்படியே மயங்கி சரிந்தாள்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2