இதயம் - 44

 


இதயம் 44

மெத்தையில் அவளது இரு கைகளை தன் ஒருகையால் சிறைப் பிடித்தவன்  கால்களையும் அவ்வாறு தன்னிருகால்களுக்குள் வைத்து அவள் மீது பட்டும் படாமலும் படர்ந்தவன், அவள் முகத்தைப் பார்த்தான்.


சற்று நேரம் கூடியிருந்த திமிரெல்லாம் காற்றாகப் பறந்து போய் வெறும் அச்சம் மட்டும் அவள் முகத்தில் மிச்சமிருக்க, பயத்தில் அவள் விழி இரண்டை உருட்டும் அழகை ரசிக்காமலும் இருக்க முடியவில்லை. 


நுனி புல்லில் படர்ந்த பனிப்போல் அவள் கூர்மூக்கின் மீது வியர்வை படித்திருப்பதையும் தன் வரிகளை படிக்கச் சொல்லித் துடிக்கும் உதடுகளையும் இளைப்பாற  ஏறி இறங்கும் நெஞ்சுக் கூட்டையும் அவன் கண்கள் அளவிடாமல் இல்லை.


"எ... எ... என்ன ப... பண்ண போ... போற நீ?"பயத்தில் வார்த்தைகள் தந்தடியடித்தன அவளுக்கு.


"மன்னிப்பு கேட்கணும் சொன்ன, அதான் 

மன்னிப்பு கேட்க போறேன்"என்றான் 

அவன் சொல்லும் தோரணை கண்டு பயந்து எச்சில் கூட்டி விழுங்கியவள்"எ... எப்படி??"என தடுமாற,


"இப்படி"என்றவன் நெற்றியில் அழுத்தமாக இதழை பதித்து கண்கள் , கன்னம் , மூக்கு, இதழ் ஒவ்வொன்றிலும் முத்த முத்திரையை அழுத்தமாக அவள் என்றும் மறவாத நொடியாக இருக்க பதித்தான். 


மேலும் அவன் இதழ்கள் அவளது சங்கு கழுத்திலும் அடுத்த நடுக்கூடத்திலும் பசக்கென்று வைத்தவன் , அங்கே முகாமிட்டது போல முகத்தை வைத்து அழுத்திப் படுத்துக் கொண்டான்.


"இங்கே கிடக்கணும் போல இருக்குடி"என்றவன் எக்குதப்பாக துடிக்கும் அவளது இதயத்துடிப்பை மெல்லிசைப் போல கேட்டு கண்ணை மூடினான்.



"சைத்து..." 


"ம்ம்" என்றான் வாகாய் அங்கே படுத்துக்கொண்டு.


"டைம் ஆச்சி ஃபங்கசனுக்கு போகணும் எழுந்திரி ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..."என்றாள்  கிரக்கத்தில்.


"மாட்டேன், நான் தான் அப்றம் பேசலாம் சொன்னேனே. நீ கேட்டியா? இல்லேல, சோ எனக்கு இப்போ பேசணும். ஆசையா இருக்கு. அதனால இந்த இடத்தை விட்டு எந்திருக்க மாட்டேன். போடி"என்றான்.


"அடேய்  சைக்கோ ! அடம்பிடிக்காத டா லேட்டா போனா எல்லாம் சொதப்பிடும் புரிஞ்சுக்க. நாம அப்றம் பேசிக்கலாம். எழுந்திருடா !"எனக் கெஞ்ச, அவசரமாக அங்கே  ஒரு  முத்தம் வைத்து அவளை விடுவிக்க, அவசர அவசரமாக  மெத்தையிலிருந்து இறங்கினாள்.


"பொறுக்கி !"என அவன் கேட்கும்படி முணங்கினாள்."ஹாஹாஹா..."வாய்விட்டு சிரித்தான். அவனை முறைத்து விட்டு தன்னை சரி செய்ய மீண்டும் அவளை நெருங்கினான்.


"பொறுக்கி ! கிட்ட வந்தே !"என நகர்ந்தவள் கை நீட்டி எச்சரிக்கை செய்ய.

"சரிரிரி... வரல. ஆனாஆஆ... நைட் பேசலாமா???"குரல் குழைய அவளுக்கு தான் அடி வயிறு கூசியது.


"பாக்கலாம் பாக்கலாம்..."என தெனவெட்டாக சொன்னவளை அருகே இழுத்தவன் அவளை சுற்றி சால்வையைப் போட்டு விட்டான்.


"அந்த இடம் பார்க்கவோ ரசிக்கவோ

எனக்கு மட்டுமே உரிமை"என்றான் விலகி நின்று.


"மழை துளி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைக்கையில்  உள்ளூறக் கள்ளூருதே"வரிகள் உள்ளே ஓட, சிவந்துபோனாள் பேதையவள்.


"போலாமா??"அவன் கேட்கவும்"ஆங்..."என விழித்தவள் தலையை ஆட்டிக் கொண்டு அவனோடு நடந்தாள்.


இருவரும் லீஃப்ட்டை நெருங்கினர்" லிஃப்ட் வேணாம். படி வழியாவே போலாம்"என்றாள் அவன் மேல் எழுந்த சிறு பயத்தில். ஆனால் அதற்குள் பட்டனை அழுத்தி இருந்தான்.


"டைம் ஆச்சி சொன்னேல... வா இதுலே போலாம். படியில இறங்கி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்..."என்றான்.

சரியாக லிப்ட் திறக்க... இருவரும் உள்ளே நுழைந்தனர். மீண்டும்  பட்டனை அழுத்தி பார்வையை அவள் மீது பதித்திருந்தான் அவளோ கைப்பையை  நெஞ்சோடு அணைத்தப்படி  மிரட்சியுடன் அவனை பார்க்க, அவள் முகம் நோக்கி குனிய சற்று பின்னே நகர்ந்தாள். 


"பயப்படாத !  நாங்க இங்க எல்லாம் பேச மாட்டேன். ஒன்லி ரூம்ல தான்"என்று கண்ணடித்துவிட்டு விலகி நிற்க" பொறுக்கி!"என்று முணங்கினாள். 

அவள் காதுகளில் விழ, நாசியில் புறங்கையை தடவியை படி சிரிப்பை அடக்கினான். 


இருவரும் மண்டபத்தை அடைந்தனர். பொண்ணும் மாப்பிள்ளையும் அவரவர் அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர். 


மண்டபத்தின் வாசலில் இருந்து மேடை வரைக்கும் படமாகப் பதிவு செய்தவர்கள். இருவராகப் பிரிந்து மணமக்கள் அறைக்கு சென்று அவர்களையும் படம் பிடித்தனர்.  


பரணியுடன் சைத்துவும் செல்ல. அகிலாவை அழைத்துக் கொண்டு வைஷு சென்று மணமக்களை தனியாக தனியாக நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்தனர். 


நிச்சய வேலைகளும் தொடங்க அதையும் படம் பிடித்தனர். பின் அவர் சாங்கி சம்பிரதாயங்களையும்  மோதிரம் மாற்றுவதையும் படம் பிடித்தனர். வந்த சொந்தங்கள் அனைவரும் வாழ்த்திவிட்டு போவதை எல்லாம் படமாகப் பிடித்தும். புகைப்படமும் எடுத்தனர். 


இடையில் அவள் சோர்வுறும் வேளையில் அவளுக்காக ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தான் சைத்து. அவளை தள்ளி நிறுத்திவிட்டு அவள் செய்யும் வேலைகளை கேட்டு அவனே பார்க்க, அகியும் பரணியும் இதழை வளைத்தனர். 


மணமக்கள் இருவரையும் பல விதமாக நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுத்தனர். எல்லாம் முடிந்து விட கடைசியாக சாப்பிட அமர, இருப்பதை அவர்களுக்கு எடுத்து வைக்க, தின்று விட்டு வெளியேறியவர்கள் அறைக்கு வந்தனர்.


யார் யாருடன் தங்கிக் கொள்ள என்று குழப்பம் வர  அகிலா  'எங்கே செல்வது?' என்று விழித்தாள். "அகி ! வா போய் தூங்கலாம். அவங்க ரெண்டு பேரும் அந்த ரூம்ல தூங்கட்டும். நீ வா !"என்றவள் தன் கணவனைப் பார்க்க, அவனும் மூரலுடன் அறைக்குள் சென்று விட்டான். 


அசதியில் நால்வரும் உறங்கிப் போனார்கள். அடுத்த நாள் காலையில் நேரமாக எழுந்து கிளம்பி மீண்டும் மண்டபத்துக்கு விரைந்தனர். மாலை  வரை படப்பிடிப்புக்கள் இருந்தது. இரவில் தான் அறைக்கு வந்தனர்.  

மறுநாள் காலையிலும் போட்டோ சூட் இருக்க முடித்து விட்டு மதியமே மதுரை கிளம்ப  தயாரானார்கள். 


பரணியும் அகிலாவும் கிளம்ப அவர்களுடன் வைஷுவும் சைத்துவும் கூட கிளம்பினார்கள். பரணி, " மதுரைக்கு செல்லலாம்"என்று சொல்லும் போதே சைத்துவும் நாமளும் "மதுரைக்கு போலாம்" என்று சொல்ல அகியோ வைஷுவை பாவமாகப் பார்த்தவள் "உன் தலை எழுத்து அவ்வளவு தான் வா !"என்று தலையில் அடித்து கொண்டு சொல்ல, வைஷுவும்  பெரு மூச்சு விட்டபடி அவளுடன்  நடந்தாள்.


தங்களது உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். வரவேற்பறையில் சாவியை கொடுத்து விட்டு அறையை வெட்கெட்டும் செய்தனர். அவர்களும் சாவியை வாங்கிக் கொள்ள, தனி வீடு போல சில காட்டேஜ்ஜுகளும்  அருகே இருந்தன. அதுவும் அவர்களுடையது  தான். 


அதில் ஒரு காட்டேஜ்ஜை தங்கள் இருவருக்காக புக் செய்ய, வைஷுவின் கண்கள் அகல விரிந்தன. பக்கத்திலிருந்த அகியோ அவளை இடித்து விட்டு "அப்றம் என்னடி எஞ்சாய்!"என்றாள்.


வெட்கம் அவளை பிடிங்கித் தின்றது. தன் நண்பர்களை  வழியனுப்பி வைத்து விட்டு வீடு போல இருக்கும் காடேஜ்ஜுக்குள் நுழைந்தனர். இரு அறைகள் கொண்ட அந்த காட்டேஜ்ஜில் சில பொருட்கள் மட்டும் தேவைக்காக வைத்திருந்தனர்.


அறைக்குள் நுழைந்து பால்கனி கதவை திறந்து நின்றவள் ஏற்கெனவே மங்கிய ஒளியில் மூலையில் கிடைக்கும் சூர்யன் ஒரேடியாக மறைய போகும் காட்சியைக் காண நிற்பவளை வளியோடு வந்த குளிர் லேசாக அணைக்க, புஜங்களை இரண்டையும் தேய்த்த படி   நெருப்பில்லாமல் ஊதி புகைத்துக் கொண்டிருந்தாள். 


அவளை பின் பக்கமாக அணைத்து கழுத்தில் தாடையை அழுத்தியவன் அதில் முத்தம் வைத்து"பேசலாமா?"என்றான் கிறங்கி.


அவன் புறம் திரும்பி கைகளை அவனுக்கு கழுத்துக்கு மாலையாக்கியவள் அவன் விழிகளில் வழியும் மெய்யான காதலை கண்டு உள்ளே சிலாகித்துக் கொண்டாள்.


அவனுடன்  கேட்க லட்ச கேள்விகளும் கொடுக்க கோடி முத்தங்கள் நீண்டு கொண்டே வாழ்நாள் முழுக்க கடக்க வேண்டும் என்று ஆசை.


அவன் விழிகளைப் பார்த்தவள் தனது முதல் கேள்வியைக் கேட்டாள்

"என்ன திடீர்னு இந்த ஞானோதயம்? விட்டுட்டு போயிடுவேன் சொன்னதாலையா?"என்று கேட்டிட, 

அவனும் ஆம்மென்று ஒத்துக் கொண்டவன், அவள் இடையை இறுகி மேலும் இடைவெளியை குறைத்தவன்

"உண்மை தான். நீ என் கூட இருக்கும் போது இல்லாத பயம். நீ போறேன் சொல்லும் போது வந்திடுச்சி... என்னால நீ இல்லாம ஜஸ்ட் இமாஜின் கூட பண்ண பிடிக்கல. ஐ  நீட் யூ டில் மை லாஸ்ட் ப்ரீத்... ஐ லவ் யூ வைஷு. இந்த ஜென்மம் உனக்காக மட்டும் தான். எப்போ நீ எனக்குள் வந்தனு தெரியாது ஆனா இனி எனக்குள் இருக்க நீயும் என் கைக்குள்ள இருக்க உன்னையும் என்னை விட்டுப் போக வாய்ப்பில்லை. போக விட மாட்டேன். நீயும் போக மாட்டேல...??" 


 "அப்ப்ப்பா ! என் சைக்கோ வா இது???  என்னால நம்ப முடியலை" என தன் சின்ன கண்களை அகல விரிக்க,  அங்கே முத்தம் வைத்து"இப்போ நம்புறீயா?"எனவும் தலையை ஆட்டி அவள்  நெஞ்சில் சாய்ந்தாள்.


அவள் தலையை வருடியவன்" கிளைமேட் நல்லா இருக்கு வெளிய போலாமா?" என்றான்.


"ம்ம்..."என்று அவனை விட்டு விலகாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

இருவரும் இரவு வரை வெளியே சுற்றி விட்டு உணவை முடித்து விட்டு  அறைக்கு வந்தனர். 


இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றாள். அவன் அங்கே மாற்றிக் கொண்டு மெத்தையில் விழுந்தவன் அவளோடு எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்து பெரிதாக திரையை விரித்து அதில் வைஷுவின் முகத்தை ரசித்தான். அவள் அருகில் வந்து  அவன் புஜத்தில் சாய்ந்து அவளும் அதை ரசித்தவள் அவனோடு மேலும் ஒன்றி "பேசலாமா?"என்றாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.


"ஏன் நான் கேட்கக் கூடாதா???"


"யார்டி சொன்னக் கேட்கக் கூடாதுனு? என்னை போல உனக்கும் ஃபீலிங்ஸ் இருக்குடி. அதை உன் சோல் பாட்னரான என் கிட்ட  நீ ஷேர் பண்ணிக்கலாம்... லவ்ல  கேரிங் மட்டும் இல்ல ஷேரிங் முக்கியம் தான்.  ஹஸ்பண்ட் அண்ட்  வொயிப்க்கு உள்ள..."என்றவன் பக்கவாட்டில் ஃபோனை வைத்து விட்டு அவள் புறம் வாகாய் படுத்துக் கொண்டவன். அவள் கைகளில் முத்தம் வைத்தான்.  அவள் அவனது நெற்றியில் இதழ் பதித்து தொடங்கினாள்.


இருவரும் தேகத்தில் பதிய முத்த உரையாடல்களை தொடங்கினார்கள். இடையில் சிறு சிறு காதல் முணங்களும் இச்சுக்களும் அதில் இடம் பெற்றன.


வாழ்க்கை புத்தகத்தில் காதல் அத்தியாயங்களை கலவிச் சுவையோடு எழுத ஆரம்பித்தனர். மேலும் இரண்டு நாள் தங்கி தங்கள் தேன்நிலவை முழுக் காதலோடு இருவரும்  கொண்டாடிவிட்டு வீடு திரும்பி இருந்தனர்.


இரண்டு நாள் அனைத்தையும் மறந்து இருவருக்கென்ற  தனி உலகில் வாழ்ந்தவர்கள், இன்று நடப்பிற்கும் சாதாரண வாழ்க்கைக்கு வந்து சேர்ந்தனர்.  வாழ்க்கை, அடுத்து அவர்களுக்கு வைத்திருக்கும் ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் காண, அந்தத் தம்பதியர்கள் அடுத்த அடியை எடுத்து வைத்தனர்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2