இதயம் - 43

 


இதயம் 43

தன் ஆடைகளை எல்லாம் கட்டப்பையில் அடக்கினார் சரஸ்வதி. தங்கையின் வீட்டிலிருப்பதால் நாலைந்து புடவையும் அதற்கேற்ற ரவிக்கையும் பாவடையும் சில ஆடைகளையும் கொண்டு வந்திருந்தார் சரஸ்வதி. அதை  எல்லாம் கட்டப்பையில் கோபமாக அதக்கி தூக்கிக் கொண்டு வெளிய வர, வேகமாக வந்து அவரை தடுத்தார் சாந்தி.


"என்னக்கா, நீ சின்ன பொண்ணு கணக்கா கோச்சிட்டு போறேங்கற?"


"பின்ன இங்க இருந்து உன் மருமக பேச்சையெல்லாம் கேட்டு அவமானப்பட்டுட்டு இருக்கச் சொல்றீயா? உன் அக்காவை எதிர்த்து பேசறா, நீ அமைதியா கேட்டுட்டு இருக்க.  


உன்னோட மாமியார் அவங்க, அவங்களை எதிர்த்து பேசக் கூடாதுனு சொல்றீயாடி நீ ! உன் மருமகள பேச விட்டு வேடிக்கை பார்க்கற? 


நீ கொடுக்கற இடம் தான் அவ இவ்வளவு பேசக் காரணம். என் மருமக என்னை மீறி ஒரு வார்த்தை பேசி இருப்பாளா? இல்ல எதிர்த்து பேசிட்டு தான் வெளிய போயிருப்பாளா?  அப்படியே என் கட்டுக்குள்ள வச்சிருக்கேன்டி அவள. ஆனா நீ, அவளை வேலைக்கு அனுப்புறதும் வெளியூருக்கு அனுப்புறதுமா இருந்தா, நாளைக்கு நிச்சயம் உன்னை அவமதிப்பா. உன்னை மதிக்கவே மாட்டா. என் கிட்ட பேசினது போல உன் கிட்டையும் பேசுவா. மரியாதை இல்லாம நடந்துப்பா ! அப்ப உனக்கு இந்த அக்கா சொன்னது புரியும்"என்று தன் ஆதங்கத்தை கோபமாக கொட்டினார். 


"நிச்சயம் இல்லக்கா ! என் மருமக என்னை மரியாதை இல்லாம நடத்த மாட்டா ! பேச மாட்டா ! ஏன்னா நான் அவளை மனுசியா மதிக்கிறேன் அவளை வீட்டுக்கு வந்த அடிமையா பார்க்கல. மருமகள  , மகளா , என்னை போல தன் வீட்டை விட்டு வந்த  இன்னொரு மருமகளா ! சக பொண்ணா? உயிரா பார்க்கிறேன் .


அவளுக்கான சுதந்திரத்தை நான் கொடுத்திருக்கேன்.  நிச்சயம் என் மருமக என்னை இன்னொரு தாயா  தான் பார்ப்பா ! பயத்துலையோ  வெறுப்புலையோ என்னை பார்க்க மாட்டா ! நீயும் அப்படி இருக்க, ஸ்ருதி உன் மேல் வச்சிருக்கறது பயம் கலந்த  மரியாதை. நீ அவளுக்கு சுதந்திரத்த கொடுத்து பாரேன், பாசம் கலந்த மரியாதை உனக்கும் கிடைக்கும். நல்ல யோசிக்கா நீ !" என்று பொறுமையாக சொன்னவரை முறைத்தவர், 


"ஓ எனக்கே அட்வைஸ் பண்றளவுக்கு வந்துட்டீயா நீ !  ஆனா பாரு இதெல்லாம் கேட்க தான் நல்லா இருக்கும். அவ உன் தலையில் மொளகா அரைக்க போறா அப்ப புரியும் இந்த அக்கா சொன்னது சரினு அது நடக்குதா? இல்லையானு பார்"என்றவர் சென்று விட, அவளால் அவரை தடுக்க முடியாமல் நின்றிருந்தார் சாந்தி.


அவர் தோளை அணைத்த தேவன்" அவங்க போறது நல்லது தான் சாந்தி.  உன்னால வேணா உன் அக்கா பேசுறத சகிச்சிக்க முடியும். உனக்காக நானும் உன் பிள்ளைகளும் கூட பொறுத்துப்போம். ஆனா வந்த மருமகளும் பொறுத்து போகணும் சொல்றது சரியா. இங்க வந்து உட்கார்ந்துட்டு நாட்டமை பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல சாந்தி. மருமக வந்ததிலிருந்து அவங்கிட்ட ஏகப் பேச்சு  வாங்கிட்டு தான் இருக்கா அந்த பொண்ணு . எதிர்த்து பேசினாலும் உன் அக்கானு சகிச்சுட்டு போக தான் செஞ்சது. எத்தனை நாளைக்கு சொல்லு பார்ப்போம். விடுமா எந்த உறவா  இருந்தாலும் அவங்க அவங்க இடத்தில இருக்கிறது தான் நல்லது "என்று ஆறுதல் சொன்னவர்.


பிரபுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல"ரொம்ப நல்லது ! அவ இங்க இருக்கிறது சரி நான் பார்த்துகிறேன் தம்பி"என்று போனை வைத்து விட்டார்.


வீட்டுக்குள் கோபமாக நுழைந்த சரஸ்வதியை கண்டு  விழிப்பிதுங்கி போனாள் ஸ்ருதி . ' ஐயோ  இவங்களா? கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேனே ! இன்னும் கொஞ்ச நாள் அங்க இருப்பாங்க பார்த்தால் வந்துட்டாங்களே ! ஸ்ருதி இனி உனக்கு காலை தூக்கம் கட்டு, மாமா மட்டும் இருந்தார் ஒன்னும் சொல்ல மாட்டார் கொஞ்சம் உதவியா இருந்தார். இப்போ அவர்  உதவியும் இல்லாம பண்ணிடுவாங்களே ! போச்சி போச்சி,  கொஞ்ச நாள் நல்லா இருந்ததே , இனி இவங்கள எப்படி அக்ஸ்ப்ட பண்ணிக்க போறேன் தெரியலயே' என்று தனக்குள்ளே பேசிக் கொண்டு' பே 'வென நின்றாள்.


"என்னடி என்னை புதுசா பார்க்கற மாதிரி பார்க்கிற? நான் உன் மாமியார் மறந்து போச்சா?? போ போய்  தண்ணீ எடுத்துட்டுவா போ. வீடு ஏன்டி குப்பையா கிடக்கு?" என்று குழந்தை வைத்து விளையாடின சாமான்களை பார்த்து முகம் சுளித்து கொண்டு கேட்டார்.


"இவ்வளவு நேரம் பாப்பா விளையாடிட்டு இப்போ தான் தூங்குனா அத்தை.  அவளை தூங்க வச்சிட்டு க்ளின் பண்ணலாம்  இருந்தேன். இருங்க இதோ பண்ணிடுறேன்" பயத்துடனே சொன்னவள், வேகமாக வேலை செய்ய ஆரம்பிக்க, "ம்கூம் சீக்கிரம் இதை பார்த்து முடிச்சிட்டு சமைக்க ஆரம்பி, நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்"என்று அறைக்குள் நுழைய மயக்க வாராத குறையாக இருந்தது  அவளுக்கு.


*****


காரில் தன் உடைமைகளை வைத்துக் கொண்டு ஓட்டுனரோடு நால்வராக ஊட்டிக்கு பயணம் செய்துக் கொண்திருந்தனர்.


அகிலா ஒரு புறம் வாயைப்பிளந்த படி உறங்கிக் கொண்டு இருக்க , முன் சீட்டில் அமர்ந்த பரணி ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான்.  


வைஷு அலைபேசியை பார்த்த வண்ணம் வந்தாள். 'அவன் அழைத்து பேச மாட்டானா? தன் காதலைச் சொல்ல மாட்டானா?' என ஏங்கிப் போனாள். 

இதே அவன் வேறாக  இருந்திருந்தால் 'போடா' என்றிருப்பாள். 


இப்போது அவன் கணவன் மட்டுமில்லையே காதல் கணவன் ஆயிற்றே அவளால அவனை விட்டுக் கொடுக்க  முடியவில்லை. மனம் அவனை தான் எதிர்பார்கிறது. மனத்திற்குள் காதலும் வெட்கமும் வேதனையும் அவளுக்குள் போட்டி போட்டன. 


கையில் அலைபேசி, அதில் அவன் முகத்தை பார்த்த வண்ணம் இருந்தாள். அவளின் நாயகனோ மெத்தையில் சுருண்டு மனைவியின் அருகாமையை  கைகளால் துழாவிய படி கிடந்தான்.


'எழுந்து கிளம்பு 'என்று மனம் ஊந்த, 'அங்கே சென்றால் உன் சத்தியத்தை மீற வேண்டியது வருமென ' மூளை அடக்க, செய்வதறியாது தவித்து போனான்.


அவனுக்கு அவன் காதல் வேணும் காதல் மனைவி வேணும் . கைக்குட்டை போல அவளை மடித்து  தனக்குள்ளே வைத்து அவள் வாசனை  நுகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். கட்டிப்பிடித்த வண்ணம் கண்ட கதைகளை உளற வேண்டும். அவள் 'ச்சீ' என்று வெட்கபட அவளிடம் அந்தரங்க தீண்டல்  செய்து கொஞ்சிக் குழாவ  வேண்டும். அத்தனை ஆசை அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்தாலும், அதை அவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். செயலில்  இறங்க தயங்குகிறான். 


அவனுக்கு நல்லதொரு அறிவுரைச் சொல்ல ஓர் ஆள் இல்லை. அவன் மனது விட்டு பேச, அதை கேட்க காதுகள் இல்லாதது போல எண்ணி மருகினான். யாராவது வந்து தீர்வு சொல்ல மாட்டார்களா என்று கவலையாக அறையில் முடங்கியவனுக்கு ஆபந்தபாந்தனாக வந்தார் சாந்தி. 


இரவானது,  அவன் அவனது அறையில் அடைந்து கிடந்தவனை, சாப்பிட அழைக்க வந்தார் சாந்தி. இருளில் அமளியில்  உடலை மடக்கிக் கூனிப் படுத்திருந்தான்.


அவனை உலுப்பிட மெல்ல  விழித்திறந்தான் சைத்து.


"என்னடா வெளியே வர்றாம வீட்டுக்குள்ள இருக்க, வைஷுவ வழியனுப்ப கூட வெளிய வரல நீ. உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா???ஏன்டா உன் முகம் வாடி போயிருக்கு என்ன ஆச்சிடா?"


"பச்... ! அதெல்லாம் ஒண்ணுமில்ல  நான் நல்லா தான் இருக்கென்"என்றான் அவரை பாராமல். 


"பொய் சொல்லாத டா ! உன் முகமுமே சரி இல்ல. அவ முகமும் சரியில்ல ! அவ கிளம்பும் போது உன்னை எவ்வளவு எதிர்பார்த்தா தெரியுமா? ஏக்கமா உங்க ரூம பார்த்துட்டு போனா ! அப்படி என்னடா வீம்பு உனக்கு அவளை அனுப்பி வைக்காம அறைக்குள்ள அடைஞ்சு கிடக்கிறது. நீ வந்து பார்க்காதது வேதனைனா,  இந்த அக்கா வேற அவளை கேள்விக்கு கேட்டு கோபப்படுத்திட்டாங்க பாவம் அந்த பொண்ணு என்ன மனநிலை போகுதா.. !"என புலம்ப, 


"என்னம்மா சொல்ற?"என அவன் கேட்டதும் அவர் நடந்ததைச் சொன்னார். "ஏன் தான் இந்தக் அக்காக்கு வைஷு பிடிக்கலையோ தெரியல. அவளை கரிச்சிக் கொட்டிட்டே  இருக்காங்க. அவ எது பண்ணிலாம் அவளை திட்டாம இருக்கிறது இல்ல. எப்ப தான் இந்த வைஷுவ அக்கா புரிஞ்சுக்க போறாங்களோ ? சீக்கிரம் ஒரு பேர புள்ளைய பெத்து கையில கொடுத்திடுடா சைத்து. அப்ப தான் உங்க பெரியம்மா  வைஷுவ திட்றத நிறுத்து வாங்க"என்றார்.


"அதுக்கு வாய்ப்பில்லை மா !"என்றதும் அவர் அதிர்ந்து போனார். "என்னடா சொல்ற?"பதட்டத்தில் வினவ" பெரியம்மாவுக்கு வைஷு என்ன பண்ணாலும் பிடிக்காது. அவளை வீட்டை விட்டு அனுப்பனும் நெனைக்கிறாங்கமா"என்றான். 


"ச்ச அக்கா அப்படி நினைக்க மாட்ட டா !வைஷுவ பிடிக்காம இருக்கலாம் . ஆனா உன் வாழ்க்கைய பழியாக்க நினைக்க மாட்டாங்க டா ! நீ அக்காவை பத்தி தெரியாம தப்பா சொல்ற"


"பச்... ம்மா நான் சொல்றது அத்தனையும் உண்மைமா "என்று நடந்ததை சொல்ல அவனது சட்டையை பற்றினார்


" சைத்து ! என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல. உனக்கு அவளை பிடிக்கலேனா, கல்யாணதப்பவே எந்திருச்சி போயிருக்க வேண்டியது தான ! இப்படி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து வேணாம், சொல்லி அந்த பொண்ணு மனச உடைக்க போறீங்களாடா ! ச்ச சைத்து நான் உன்னை அப்படியா வளர்த்தேன். ஒரு பொண்ணோட சாபத்தை வாங்கிட்டு என்னடா வாழ்ந்து கிழிச்சிட போற நீ ! ஐயோ நீ வந்து என் வயித்துல பொறந்து தொலைச்சீருக்கியே !"என் தலையில் அடித்து புலம்ப


"அம்மா  ! புரிஞ்சிக்காம பேசாதீங்க... நான் ஒன்னும் வைஷு வேணாம்னு மனசார சத்தியம் பண்ணி கொடுக்கல . உன் அக்கா உயிரை காப்பாத்த அப்படி ஒரு சத்தியம் செஞ்சு கொடுத்தேன். எனக்கு சத்தியம் செய்ய விருப்பமில்ல மா, எனக்கு வைஷுவ ரொம்ப பிடிக்கும் அவளை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். 


அவங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்துட்டு, அவ கூடசேர முடியாம தவிச்சிட்டு இருக்கேன் மா... ஏன் சத்தியம் பண்ணின என் மனசாட்சி கொல்லுதுமா? என்னால அவளை நெருங்கவும் முடியல விலகவும் முடியல ! அவ எனக்கு வேணும்மா ! முதல்ல என் ஈகோனால என் காதலை சொல்ல முடியாம போச்சி இப்போ நான் பண்ணா சத்தியம்  சொல்ல முடியாம தடுக்குது !  அவளே வந்து என் கிட்ட காதலை சொல்லியும் நான் சிலை போல  நின்னேன்மா  என்னால சத்தியத்தை மீற முடியல மா !"என அவர்  மடியில படுத்து மனம் விட்டு பேசி கரைந்தான்.


"முட்டாள் முட்டாள் சைத்து நீ ! எதுக்கு டா சத்தியம் செஞ்சுக் கொடுத்த ! நான் வாழணும் பெரியம்மா அவ கூட வாழணும் சொன்னா என்ன?? வாய் இருக்குல வேண்டியது கேட்டு பெற  வேண்டியதை தான..." 


"என் கைய தலைக்கு மேல வச்சி எங்க என்னை பேச விட்டாங்க? செத்துடுவேன்னு சொல்லி அழும் போது  என் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் நீ சாகுனு  சொல்ல முடியுமா? என்ன இருந்தாலும் என் மேல பாசத்தைக் கொட்டி வளர்த்தவங்க சாகறேன் சொல்லும் போது என்னால அந்த இடத்தில எதுவும் செய்ய முடியல, சத்தியம் பண்ணிட்டேன் மா. ஆனா அன்னையிலிருந்து இன்னைக்கி வரைக்கும் நான் உள்ளுக்குள்  செத்துட்டு இருக்கேன் மா  நான்  எனக்கு வைஷு வேணுமா ! அவ என்னை  விட்டு போயிடுவாளோ பயமா இருக்கு.  நான் என்னம்மா பண்ணட்டும்?" முதல் முறையாக தாயிடம்  மனம் திறந்து பேசி அழுதவன் ஆலோசனை கேட்டான்.


"உனக்கு வைஷு முக்கியமா? சத்தியம் முக்கியமா?"


"வைஷு தான் முக்கியம்..."என்றான் பட்டென்று ."அப்போ அவளை தேடி போ !போய் காதலை சொல்லி அவ கூட வாழற வழிய பாரு. இந்த சத்தியம் எல்லாம்  ஒண்ணுமே இல்ல. அதை விட காதலோட மதிப்பு அதிகம். ஊட்டிக்கு போ அவ கிட்ட உன் காதல சொல்லு !  உன் பெரியம்மாவை நான் பார்த்துகிறேன். இனி உன் கவனம் உன் வாழ்க்கை மேல தான் இருக்கணும். சத்தியம் மேலே இருக்க கூடாது... நாளைக்கே போ வரும் போது நீங்க இரண்டு பெரும் புருஷன் பொண்டாட்டியா வரணும்"என்று அழுத்திச் சொல்ல அவனுக்கும் புரிந்து தான்  இருந்தது.


அவ்வளவு தான் அடுத்த நாள் சின்ராசுவை  கையிலே பிடிக்க முடியவில்லை...  அதிகாலை வேளையிலே சிட்டாக பறந்து விட்டான் ஊட்டிக்கு அதுவும் பைக்கில்.


***


"நான் அப்பவே  சொன்னேன் அந்த கிஷோர் பயலையும் கூட்டிட்டு வரலாம்... நீங்க தான் கடைய பாத்துக்கணும் சொல்லி விட்டுட்டு வந்துட்டு இப்போ  என்னை வேலை ஏவுறீங்களே டா மனசாட்சி  இருக்கா  மங்கிகளா ?" என்று புலம்பினாள் அகிலா.


"ஒரு போட்டோ கவரேஜ் எடுக்க மதுரையே கூப்பிடனுங்கறீயா?? சோறு போட்டு,  இருக்க இடம் கொடுத்திருக்காங்களா?  அதுக்காகவாது உதவி செய்ய வேணாமா அகி? புலம்பா வேலைய பாருடி"என்று கடிந்தான் பரணி.


"உனக்கு என்ன ஓரிடத்தில நிக்கிற நான்ல அலையிறேன்"என்று புலம்பினாள். ப்ரீ வெட்டிங் சூட்டிற்காக மணமக்களுடன் மலை பகுதிக்கு அழைத்து வந்திருந்தனர் மூவரும்.


கூகுளின் உதவியுடன் வித்தியாசமான முறையில் மணமக்களை  புகைப்படமாக எடுத்தாள் வைஷு. இருவரை வைத்து வீடியோக்கள் நிறைய எடுக்கப்பட்டன.


அகியின் புலம்பலை அதிகமாக அவளுக்கு உதவும் விதமாக அவன்

"உதவிக்கு வேணா நான் வரட்டுமா?" எனக்  கேட்டு வைஷுவிற்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தான் சைத்து.


'இவனா??? இவன் எங்க இங்க???'என எண்ணிக் கொண்டிருக்க, அவர்களை நெருங்கி இருந்தான் அவன். 


"நான் வேணா உதவி செய்யட்டுமா???"எனக் கேட்டது என்னவோ அகியிடம் தான். ஆனால் அவன் பார்வை என்னவோ வைஷுவை தான் தழுவி இருந்தது. 


"தெய்வமே ! ஆபந்தபாந்தன் சொல்வாங்களே அது நீங்க தான் தெய்வமே ! கொஞ்சம் கூட கருணை இல்லாம இந்தக் குழந்தைய வச்சு செய்றானுங்க... நீங்க கொஞ்சம் உதவி கரம் நீட்டுங்க தெய்வமே "என அகி கும்பிட்டாள் அவனை. 


"டோண்ட் வொர்ரி சிஸ்டர் ! நான் பார்த்துக்கிறேன் இனி !"என்றவன்"என்ன பண்ணனும் சொன்னீங்களா? நானும் பண்ணுவேன்"என்று வைஷுவின் இதழை பார்த்து கூற, அவனை அலட்சிய படுத்தி விட்டு சென்றாலும்  அவனை வைத்து நன்றாக வேலை வாங்கி விட்டுத் தான் விட்டாள். 


அவர்கள் தங்கிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். அவன் பரணியுடன்  அவனது அறைக்குச் சென்றான். அவளும் அகியுடன் தனி அறைக்குச் சென்றவள் அகியை  நன்றாக திட்டித் தீர்த்தாள். அவள் உதவியால் தான் அவன் இங்கு வந்து சேர்ந்தான்.


அவளும் அவளது திட்டை எல்லாம் காதை குடந்து கொண்டு கேட்டவள், தூசியை போல தட்டிவிட்டுச் சென்றாள். 


நால்வரும் கொஞ்சம் ஓய்வெடுக்க பின் மாலையில் நடக்க இருக்கும் ரிஷப்ஷனுக்கு தயாராகினர்  நால்வரும். அகியும் பரணியும் முன்னே சென்றிட, வைஷுவின் அறைக்குள் நுழைந்தான் சைத்து. 


"எதுக்கு இங்க வந்த???" என்று கேட்டவளை  நெருங்கி வர, அவள் இரண்டடி பின்னே சென்றாள்" எதுக்கு இப்போ நீ நெருங்கி வர?" 


"என் முடிவை சொல்ல??"என்றான் இன்னும் அவளை நெருங்கி. அவன் மார்ப்பளவு இருந்தவள் நிமிர்ந்து அவன் கண் பார்த்து"என்ன முடிவு?"என அசராமல் கேட்டாலும் உள்ளுக்குள் அவன் என்ன செய்ய போகிறானோ என ஐயம் இருந்தது. 


அவனோ அவள் கன்னங்களை பற்றி எதிர்பாராத நேரத்தில் அவள் இதழில தன் இதழை வைத்து அவன் முடிவைச் சொல்ல, கண் மூடி கண்ணீருடன் அவனது முடிவை ஏற்றுக் கொண்டாள்.


வெகு நேரத்துக்கு பின் அவளை விட்டவன்"ஐ லவ் யூ வைஷு ! "என்று அவனை நெஞ்சோடு அணைக்க, அவனிடமிருந்து விடுபட்டவள், அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.


"நான் உன்னை காதலிக்கிறேன்டி. உன் கூட வாழணும் என் உயிர் என்கூட இருக்கிறவரை உன் கூட சந்தோசமா வாழணும்... உன் கூட சண்டை போட்டு சமாதானம் செய்து இப்படி முத்தம் வைச்சி வாழணும். லவ் யூ டி என் பட்டு "என்று மீண்டும் அவளை அணைக்கச் செல்ல தடுத்தவள் "ம்ம்ம்.. இரு இரு... எல்லாம் ஓகே... ஆனா ஏன் உன் காதல முன்னாடியே சொல்லல? என்னை நீ முன்னாடியே விரும்பிருக்க, அப்ப  சொல்லாத உன் காதல இப்போ மட்டும் ஏன் வந்து சொல்ற? என்ன ரீசன்  எனக்கு தெரிஞ்சாகணும்..."என அவள் பிடியிலே நிற்க, தலையில் கை வைத்து  நின்றான். 


"ம்ம்ம்..  சீக்கிரமா சொல்லு !  எனக்கு டைம் இல்ல ஃபங்க்ஷனுக்கு வேற போகணும் சீக்கிரமா சொல்லுடா"என்றாள்.


"வேலைய முடிச்சிட்டு வந்து பேசலாமா???" 


"இல்ல நீ இப்பயே சொல்லு"என்று அவள் பிடிவாதம் பிடிக்க  "ஏதோ கொஞ்சம் ஈகோவால என் காதல சொல்லல... ஆனா அந்த ஈகோவ விட நீ தான் முக்கியம் தோணுச்சி அதான் இப்ப வந்து என் காதல சொல்லிட்டேன். எனக்கு நீ தான் முக்கியம் என் ஈகோவ விட, ப்ளீஸ் வைஷு, இந்த புள்ளய மன்னிச்சு என் லவ் அக்ஸப்ட்  பண்ணிக்கடி?"என்று  கெஞ்சிட, அவன் கெஞ்சுவதை கண்டு சிரிப்பை அடக்கியவள், அவனை பார்த்து "கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. மன்னிச்சு ஏத்துகிறேன் உன்னையும் உன் காதலையும்"என்றாள் திமிரமாக,


அவளை தீயாக முறைத்தவன், அவள் காலில் விழுவது போல குனிந்து அவளை அப்படியே தூக்கி மெத்தையில் இட்டவன், அவள் மீது படர்ந்தான்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2