இதயம் 42

 

இதயம் 42

நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளையும்  சில பொருட்களையும் பெட்டியில் அதக்கி வைத்துக்  கொண்டிருந்தாள் வைஷு. கட்டிலுக்கும் கப்போரட்டுக்கும் பல முறை நடந்து விட்டாள். அறையை ஐம்பது முறையாவது வலம் வந்திருப்பாள். இடையில் அலைபேசியில் அழைப்பு வேற, பேசிக் கொண்டே ஆடையை மடித்து உள்ளே வைத்தாள்.


அவளது ஒவ்வொரு அசைவையும் மெத்தையின் ஓரத்தில் அமர்ந்து  தாயை பிரியும் சேயைப் போல சோகத்தின் வடிவாக  அமர்ந்து முகத்தை தூக்கி வைத்து கொண்டு பார்த்திருந்தான் சைத்து.


'நம்ம சைக்கோ சைத்துவா இது?'என்று சிலரது ஆச்சர்யக் கேள்விக்கு அதிர்ச்சியான பதில் 'ஆம்' என்பது தான். நம்ம சைத்து தான். சைக்கோ சைத்து  தான். நான்கு நாட்கள் மனைவியின் பிரிவை ஏக்கத்துடன் கழிக்க இருக்கும் சைத்து தான். வைஷுவின் மேல் உண்டான காதல் அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாத்தி இருக்கிறது என்று எனலாம். ஆனாலும்  தன் காதலைச் சொல்லாமல் மறைத்து கொஞ்சம் பழைய சைத்துவாகவும்  இருக்கத்தான் செய்கிறான்.


முன்பு ஈகோவால் காதலை மறைத்தான். இன்றோ காரணம் இல்லாத ஒரு பிடிவாதத்தில் காதலைச் சொல்ல மறுக்கிறான். போதாத குறைக்கு சத்தியம் வேறு  அவனை  அணைப் போட்டு தடுக்கிறது.


காதலை மொழியால் சொல்லாது விட்டாலும் செயலால் காட்டிக் கொண்டுதான் இருக்கிறான் . அதை அவள் புரிந்துக் கொண்டு இவனிடம் அவள் அவளது காதலை காட்ட  வேண்டும் என்று எண்ணுகிறான் இந்தக் காதல் சைக்கோ !  


ஆனால் அது தான் நடக்குமா என்ன?  அவன், வாய்வழிக் காதலை பகிரும்  வரை தன்னை அவனுக்குள் இழக்க மாட்டேன் என்று சபதமாய்  இவளும் வீம்போடு இருக்க. ஆக மொத்தம் இருவரும் கயிற்றின் இரு முனையைப் பற்றிக் கொண்டு தன் பக்கம் இழுக்க முனைக்கிறார்கள் யார் யார்பக்கம் சாய போகிறார்களோ !


மீண்டும் ஒரு முறை அனைத்தையும் பரிசோதித்தவள் கழுத்தில் சுர்ரென வலி வர, கழுத்தை பிடித்தாள் வலியில்.


வேகமாக எழுந்து கப்போர்ட்டை திறந்து வாலினி ஸ்ப்ரேவை  எடுத்து வந்தவன் அவளருகே சென்று மெத்தையில் அமர வைத்து கழுத்தில் அடித்து விட்டு தேய்த்து விட்டான். அவளோ அவனது செய்க்கையில் இதழுக்குள் சிரிப்பை அடக்கினாள்.


"உனக்கு தான் கழுத்து வலிக்குதுல ! எப்படி கேமிராவை பிடிச்சி வீடியோவ கவர் பண்ணுவ !  நீ போகாம வேற யாராவது அனுப்பலாம்ல" என்றான் அக்கறையாக. ஆனால் அதன் உள்ளர்த்தம், இதை சாக்காக வைத்தாவது அவளை இருக்க வைத்திட  வேண்டும் என்று தான்.


"ஜஸ்ட்  சின்ன வலி  தான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். நீ கவலை படாத. அப்றம் இந்த வலிய கொடுத்ததே நீ தான ! இப்போ என்ன அக்கறை உனக்கு ? ஒரு வேளை இது தான் உன் பிளானோ ! கழுத்து வலிய கொடுத்து போக விடாம பண்ணலாம் நினைக்கிறீயா ?"என அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு கேட்க,  


அவனோ சலிப்புடன்"பச்... நீ போக கூடாதுன்ற எண்ணம்  எனக்கு இருக்கு தான். அதுக்குன்னு உனக்கு கழுத்து வலிய கொடுத்து போக விடாம செய்யணுமன்ற எண்ணம் எனக்கு இல்ல. அப்றம் உனக்கு எப்படி கழுத்து வலி வந்ததுனு கூட எனக்கு தெரியாது. ஏன் மேல அனாவசியமா பழி போடாத?"என்றான்.


"எதே !  எனக்கு எப்படி கழுத்து வலி வந்ததுனு உனக்கு தெரியாதா? நல்லாவே நடிக்கிறீங்க மிஸ்டர் சைதன்யா !  ஆனா என்னால  தான் சகிக்க முடியல. நாலுநாள் பிரிஞ்சி இருக்க போறேன்றதுக்காக ஒரு நாள் நைட் முழுக்க என்னை இறுக்கி கட்டிப்பிடிச்சி அசைய விடாம  தூங்கிட்டு இப்போ தெரியாதுங்கறீயா? ஃபிராடு டா நீ !"என்றாள் .


"ஓ... அதுனால தான் உனக்கு கழுத்து வலியா? "இன்னும் தனக்கு தெரியாதது போலவே காட்டிக் கொள்ள தலையில் அடித்துக் கொண்டு பெட்டியை கீழே வைத்தாள். 


அதை கண்டவன்" நான் பண்ணது ஃபிராடு தனம் தான். எதுக்காக  பண்ணினேன் தெரியுதுல அப்ப ஏன் போற?" என்றவனை தீயாக முறைத்தவள்


"ஹான்...  அப்படியே சாரு என் மேல இருக்க காதலை என்ட சொல்லி.  திகட்ட திகட்ட  என் மேல அன்பையும் பாசத்தையும் காட்டி, ஈருடல் ஓருயிர்னு இருந்துட்டு இந்த நாலு நாள் பிரிய முடியாம தவிக்கறீங்க. நல்லா வாயில வந்திடும்  எனக்கு. போடாங்க..  "என்றவள் தன் பேக்கை பின்னால் மாட்டிக் கொண்டு பெட்டியை தன் புறம் இழுத்தவள், "நான் வரேன் ஒழுங்கா சாப்பிடு அத்தை , மாமா, சனா வா பார்த்துக்க"என்றவள் வாசலை நோக்கி நடந்தாள். அவனோ அவனை பாராமல் குற்றவுணர்வில் தலை குனிந்து நின்றான்.


அவளால் அறை வாசல் வரை தான் செல்ல முடிந்தது. அதற்கு மேல் கால்கள் நகர மறுத்தன.  திரும்பி அவனை பார்க்க அவனோ நிமிரவே இல்லை வேகமாக ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.


அதைச் சற்றும் எதிர்பாராதவன் அதிர்ச்சியில் அவளை அணைக்காமல் கைகளை அந்தரத்தில் வைத்திருந்தான்.

ஆனால் அவளோ அவனை இறுக அணைத்து"நானே இறங்கி வர்றேன் டா ! பாவி ! நீ இறங்கிடாத என்ன !"எனத் திட்டியவள்,


"ஐ லவ் யூ சைக்கோ ! உன் மேல எப்போ காதல் வந்துச்சினு எனக்கு தெரியாது. ஆனா இப்போ  உன்னை காதலிக்கிறேன் டா. கல்யாணதுக்கு முன்னாடி நவிய வச்சி நான் பேசும் போதெல்லாம் நீ பொறாமை படுவ ! அப்போ உன் மேல் க்யூரியாசிட்டி அதிகமா இருந்தது. கல்யாணத்துக் அப்றம் நீ  உன் காதலை சொல்லுவனு நான் காத்திட்டு இருந்தேன். ஆனா நீ இன்ன வரைக்கும் சொல்லல.  நீ ஏன் சொல்லாம மறைக்கிறனு உன்னை நினைச்சி நினைச்சிஎனக்கு உன்  மேல் காதல் வந்திடுச்சி ! ஆனா நீ,  நம்ம காதலுக்காக உன் ஈகோவ கூட விட்டு தரமாட்டேங்கற.


உனக்கு இந்த நாலு நாள் தான் டைம் சைக்கோ.  உன் காதலை நீ என்ட சொல்லிட்டா, நாம சேர்ந்து வாழலாம்.  இல்லேன்னா நாம பிரிஞ்சிடலாம்.. நல்லா யோசித்து உன் முடிவ சொல்லு சைத்து"என்றவள் அவன் முகம் பார்த்தாள். அவன் இன்னும் அதிர்ச்சியின் பிடியில் அவள் சொன்னதை கூட கிரகிக்க முடியாத நிலையில் சிலைப்போல நிற்க, 


ஆனால் அவன் கண்களில்  தவிப்பும்  காதலும் வழியக் கண்டவள்,  உள்ளுக்குள் ஒரு பிடித்தம் வந்தது.


மீண்டும் அவனை அதிர்ச்சிக்கு ஆளாக்க, அவனது சட்டைக் காலரை பற்றி தன் பக்கமிழுத்து நெற்றி,  கன்னம் , மூக்கு என முத்தம் வைத்தவள், அவன் இதழில் பட்டும் படாமல் தன் இதழை ஒற்றி விட்டு வாசலைத் தாண்டி ஓட, பொத்தென மெத்தையில் அமர்ந்தான்.அவனது கண்களை நீர் நிறைத்தன..


கண்ணீரை துடைத்தபடி வெளியே வந்தவள் சாந்தியை நோக்கி நடந்தாள். "அத்தை  ஹெல்த் பார்த்துக்கங்க... எனக்கு வேலை முடிஞ்சுசதும்  சீக்கிரமா வந்திடுறேன். மாமா அத்தைய சும்மா சும்மா டென்ஷன் பண்ணாதீங்க. வேற யாரும் அவங்க பீப்பியை ஏத்திடாம பார்த்துங்க.. நான் வர்றேன்"என்றவள் கடைசி வரியை  சரஸ்வதியை பார்த்து தான் சொன்னாள். 


கடைசி வரி தனக்கு என்று புரிந்துக் கொண்டவர் அவளை தீயென முறைத்தார். அதை எல்லாம் பொருட்டாக மதிக்காமல் தனது பெட்டியை இழுத்துக்  கொண்டு போக, அவளை அப்படியே போக விட்டால் தான் அது  சரஸ்வதியே இல்லையே. 


"எங்கடி போற பெட்டியோட??" என போறவளை தடுத்து நிறுத்தினார் சரஸ்வதி.  


"அக்கா நான் தான் சொன்னேனே வேலை விஷயமா நாலு நாள் ஊட்டி போறானு மறந்துட்டீயா??" அவள் போகும் நேரம் பிரச்சினை வேண்டாம் என்று நினைத்து சாந்தி முந்திக் கொண்டார். 


"வேலைக்காக தான் போறாளா? இல்ல கூத்தடிக்கபோறாளா?" நரம்பில்லாத

நாக்கும் அவர் இஷ்டப்படி வளைந்து வார்த்தைகளை விட, கண்கள் இடுங்க அவரை பார்த்தாள். 


"அக்கா ! அது நம்ம மருமக? வாய்க்கு வந்தத பேசாதக்கா !"சாந்தி கோபத்தில் கத்த, "மருமக தான். அதுக்காக மகன் கூட இல்லாம இவ நாலு நாள் தனியா போறேன்ங்கறா நீயும்' டாடா 'காட்டிட்டு இருக்க... இது  குடும்பமா என்ன? அதெல்லாம் போகக்  கூடாது   வீட்டோட அடைச்சி போடுவீயா?அதை விட்டுட்டு மருமகள வழியனுப்பி வைக்கிற??" என அவரையும் விடாது திட்ட, இவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.


"நீங்க திருந்தவே மாட்டிங்களா?? எப்ப பாரு மருமக வீட்டு  வேலை செய்யணும் மருமக  புருஷன கவனிக்கணும் மருமக மாமியாருக்கு அடங்கி போகணும்... மருமக வீட்ல தான் அடைஞ்சி கிடக்கணும், அவ எங்கயும் போக கூடாது அப்பப்பா அவ மருமகளா? இல்ல வேலைகாரியா?  வீட்டோட உங்களுக்கு சேவை செய்யணும்ன்றதுக்காக தான்  உங்களுக்கு மருமகளா வரணுமா?? அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கக் கூடாதா? அவளுக்குனு ஆசை இருக்கக் கூடாதா? வீட்டுக்குள்ளே உங்க காலடியில கிடக்கணுமா... உங்க மகன் மட்டும் வேலைன்னு வெளிய போவான். வேலைன்னு சொல்லி வெளியூர் போய் பிரண்ட்ஸோட கூத்தடிப்பான். அதை எல்லாம் நீங்க கண்டுக்க மாட்டிங்க கேட்டா அவன் ஆம்பல. ஆனா பொம்பலைங்க பொறப்பு  அவங்களுக்கு சேவை மட்டும்ல பட் ஸாரி என்னால அது முடியாது. நான் வேலைக்கும் போவேன் வெளியூருக்கும் போவேன்... உங்களால மட்டும்  இல்ல சைத்துவால கூட என்னை அடக்கி வீட்டுக்குள்ள உட்கார வைக்க முடியாது. என்ன பேசணும்னாலும் பேசிக்கோங்க. ஐ டோன்ட் கேர்"என்றாள் திமிராக


"இதுக்கு தான் இவளை மருமகளாக வீட்டுக்கு கூட்டுட்டி வர்றாதே  அப்பவே சொன்னே கேட்டியா?என்ன திமிரா பேசறானு பாரு. ஆம்பலையும் நீயும் ஒன்னாடி. பொட்ட புள்ள தனியா நாலு நாள் வெளிய தங்க போறேங்கற. உனக்கு என்னாச்சி ஏதாச்சினு நாங்க நினைச்சி பயந்துட்டே இருக்கணுமா? என்னை என்ன உங்க ஆத்தா அப்பன  போல நினைச்சியா, அவங்க வேணா உன்னை அப்படியே தண்ணி தெளிச்சி விட்டு இருக்கலாம். ஆனா எங்களால அப்படி இருக்க முடியாது. இப்போ நீ எங்க வீட்டு மருமக புரியுதா??"


"உங்க அக்கறைக்கு  ரொம்ப நன்றி.என்னை காப்பாத்திக்க,நீங்களோ உங்க புள்ளை தான் இருக்குற மாறி பேசுறீங்க, என்னை காப்பாத்திக்க  எனக்கு தெரியும். எனக்கு எண்ணாகிடுமோ பயந்துட்டே இருந்தால் என்னாலனு இல்ல பொண்ணுங்கனால சாதிக்கவே முடியாதுனு சொல்லி வளர்த்தது என் அப்பா அம்மா, அது உங்களுக்கு  தண்ணி தெளிச்சி விட்டதா தெரிஞ்சா நான் ஒன்னும் பண்ண முடியாது... நான் போக தான் போறேன்..."என்றாள் .


"இந்த வீட்ட விட்டு தாண்டினா, அப்படியே போயிடு. இந்த வீட்டுக்கு நீ வரவே கூடாது..."என்றவர் மிரட்ட ,சிரித்தவள்.


"அதை என் புருஷன் சொல்லணும் நீங்க இல்ல... நீங்களே முதல்ல உங்க தங்கச்சி வீட்ல தான் இருக்கீங்க நியாபகம் இருக்கா? இது உங்க தங்கச்சி வீடுன்னு உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே போல இது என் வீடு என்னை வீட்ட விட்டு போனு சொல்ல முடியாது மாமியார். அதுனால என்ட பேசி உங்க எனர்ஜிய குறைச்சிக்காம போய் வேற வேலைய பாருங்க மாமியார்" 


" அத்தை  என்னால பதில் பேசாம இருக்க முடியல என்னை மன்னிச்சிடுங்க. நான் கிளம்புறேன்"என்றவள் அவள் அறையை ஒருதரம் பார்த்துட்டு விட்டு வேகமாக  வாசலை தாண்டி போய் விட்டாள். 


அவருக்கோ மேலும் சங்கட்டமாக இருந்தது. ஒரு பக்கம் அக்கா ஒரு பக்கம் மருமகள் யாருக்காக பேச என்று குழம்பி  தவித்தார்.


"அவ உன் அக்காவே எதிர்த்து பேசற நீ வாய முடிட்டு நிக்கற?  மருமக வந்ததும் இந்த அக்கா உனக்கு மட்டமா போய்ட்டாளா? இந்த வீட்ல எனக்கு மரியாதையே இல்ல நான் என் வீட்டுக்கு போறேன்"என்றவர் அறையை நோக்கி நடந்திட, சாந்தி தான் செய்வது அறியாது கணவனை சங்கட்டமாகப் பார்த்தார். 

இதயம்

வைஷுவோ சரஸ்வதி ஏற்றி விட்ட  கடுப்பும் அவன் தன்னை வழியனுப்பி வைக்காத கோபத்தில் ஊட்டிக்கு பயணபட்டாள்.


****


மன்னிப்பு கேட்க வந்தவனிடம் காலைக் காட்டி 'விழு' என்றாள் திமிராக,   அவனோ வீம்புடன் மறுத்து கொண்டு நிற்க,   கயிறிலுக்கும் விளையாட்டு ஆரம்பமானது

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2