இதயம் - 40


இதயம் 40

ஆலிவ் பச்சை குர்தியும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து வெளியே வந்தாள் வைஷு. அவளை தன்னோடு அழைத்து போக காத்திருந்தான் சைத்து.


மறுவீட்டுக்கு சென்று வந்ததிலிருந்து இவரும் தேவைக்கு மட்டுமே பேசிக் கொள்கிறார்கள். மெத்தையில் இருவருக்கும்  இடையில் ஒருவர் படுக்குமளவு இடைவெளி இருந்தது. அன்று அவனோடு சென்றவள் தான் அதன் பின் அவள் வீட்டை விட்டு செல்வதில்லை. அப்படியே அவள் வெளியே சென்றாலும் அவனோடு செல்லவதில்லை. 


பாவம் அவன் தான், அவளை நெருங்கவும் முடியாமல் விலகி இருக்கவும் முடியாமல் ஒரு சத்தியத்தில் தடுமாறி நிக்கிறான். அந்த சத்தியத்தை பெரிதாக நினைத்துக் கொண்டு அவளுடன் இணைய தயங்குகிறான்.


அவளுக்கோ அவன் காதல் சொல்லாததே கோபம் என்றால், அன்று விலகிப் போனது கடுங்கோபத்தை தந்தது. அவனாக மன்னிப்பு கேட்டு காதலை சொல்லும் வரைக்கும் பேசக் கூடாது என்று முடிவெடுத்து மேலும் அவனை வதைக்கிறாள்.


கிளம்பி வந்தவள் தனக்காக காத்திருக்கும் சைத்துவை ஒரு தரம் பார்த்து விட்டு சனா அறைக்குச் சென்றாள்.


"சனா !"வாசலில் நின்றவாறு அழைத்தாள்.  உள்ளிருந்து வந்தவள்"என்ன அண்ணி வாசல்ல நின்னு கூப்பிடுறீங்க? உள்ள வரலாம்ல"என்று செல்லமாக சிணுங்கினாள்.


"இருக்கட்டும் சனாமா ஹெல்மெட் இருக்குனு சொன்னீயே அதை கொடு. புதுசு வாங்கினதும் இதை தரேன்"என்றாள்.


"எதுக்கு அண்ணி புதுசு? அதே வச்சிக்கோங்க. அதுவும் புதுசு போல  தான் இருக்கு..."என்றாள்.


"சரி கொடு"என வாங்கிக் கொண்டவள்"அத்தை நான் கிளம்பறேன்..."என்று கத்திவிட்டுச் செல்ல இருந்தவளை தடுத்த சாந்தி "மத்தியானதுக்கு வருவீயா? இல்ல சாப்பாட்ட கொடுத்து விடட்டுமா?"என மகளை போல அக்கறையாகக் கேட்டார்.


தன் அன்னை சொல்லும் அதே வார்த்தையை அவரும் செல்ல ஒரு கணம் கலங்கின விழிகள். ஓரம் துளிர்த்த நீரை விரட்டியடித்தவள், "நான் வந்து சாப்பிடுறேன் அத்தை"என்றாள். அவரும் சரியென தலையை ஆட்ட, அவரை கட்டிபிடித்து முத்தம் வைத்து விட்டு நகர,  சனாவும் சைத்துவும் அவர்கள் இருவரையும் பார்க்கத் தான் செய்தனர். ஒரு முறை கூட இவ்வாறு அவர்கள் செய்தது இல்லை.


'மாமியார் மருமக மாதிரியா நடந்துக்கிறாங்க.. மாமியார்னு ஒரு பயம் இருக்கா அவளுக்கு. கட்டிபிடிச்சி முத்தம் வேற கொடுக்கறா. இந்த சாந்தி வேற மருமக கிட்ட எப்படி இருக்கணும் தெரியாது. சொல்லிக் கொடுக்கணும். அதுவும் இவ கிட்ட இப்படி இருந்தால் தலையில் மொளகா அறைச்சிடுவா'அரிசி மெல்லுவதைப் போல முணுமுணுத்தார்.


"என்ன பெரிய அத்தை, ஸாரி மாமியார் உங்களுக்கும் முத்தம் வேணுமா??"என நக்கல் செய்ய " என்னடி கொழுப்பா? மாமியாருன்ற மட்டு மரியாதை இருக்கா , ஒரு பயம் இருக்கா உனக்கு??"


"மட்டு மரியாதை எல்லாம் இருக்கு. அது என்ன பயம்? நீங்க என்ன பேய்யா பிசாசா நான் ஏன் உங்களை பார்த்து பயப்படணும்?" என கேட்டவளை தீயாக முறைத்தவர், "மாமியாருங்க பேய் பிசாசுங்க இல்லதான். அவங்களுக்கு மருமகங்க நீங்க அடங்கி தான் போகணும். எங்கடி ஊர் சுத்த போற?" ஸ்ருதியைப் போல அவளையும் ஆட்டிப்படைக்க நினைக்க அது அவரால் முடியுமா  என்ன?


அவரது கேள்வி அவளது கடுப்பை கிளரி விட அதை அடக்கிக் கொண்டு" ஊர் சுற்றப் போல வேலைக்கு போறேன்"என்று  அவர் தலையில் பெரும் குண்டைப் போட்டாள்.


"வேலைக்கு போறீயா? என்ன சாந்தி இதெல்லாம்? இந்த வீட்ல இருக்க மருமகங்க வேலைக்கு போகக் கூடாது. புருஷனை இந்தக் குடும்பத்தையும் பார்த்துட்டு வீட்ல தான் இருக்கணும் வேலைக்கு எல்லாம் போக அனுமதி இல்ல"என்றார் கறாராக.


"இந்த வீட்லே இருக்கிறவங்க அவங்களே அவங்களை பார்த்துப்பாங்க. இந்த வீட்டு மருமகங்க தான் கவனிக்கணும் இல்ல. அப்றம் புருஷனை கவனிக்கணும்னா அவனையும் வேலைய விட்டு வீட்டுல இருக்க சொல்லுங்க கவனிச்சிக்கிறேன். காலையில் போயிட்டு நைட் வரவன நான் வீட்ல இருந்து கவனிச்சிக்கணுமா? அவனே வீட்ல இல்லாத போது நான் வீட்ல இருந்து யார கவனிச்சிக்க? என்னால இந்த நாலு சுவரே கதினு இருக்க முடியாது. நான் வேலைக்கு போவேன்"என்றாள் தீர்மானமாக 


"என்னடி எய்த்து பேசற?  நான் உன் மாமியார் நான் சொல்றது தான் கேட்கணும்"என்று அதிகாரமாய் சொல்ல,

அவளோ பொறுமை இழந்து சாந்தியை பார்க்க கண்களால் கெஞ்சினான். 


அவளோ சைத்துவைப் பார்க்க அவனும் அமைதியாக இருந்தான் ' இவன் நமக்காக பேசவே மாட்டான் போல' என புரிந்தது.


இழுத்து பெருமூச்சு விட்டவள்" உங்களையும் உங்க தங்கச்சியையும் நான் என்னைக்கும் பிரிச்சி பார்த்தது இல்ல பார்க்கவும் மாட்டேன். சாந்தி அத்தையும்  என் புருசனும்  எனக்கு வாக்கு கொடுத்துருக்காங்க. வேலைக்கு போக சொல்லி அனுமதி கொடுத்துட்டாங்க. அதையும்  மீறி நான் போகக் கூடாதுனு சொன்னால் , நான் கொடுத்த வாக்கை மீறுவேன்"என்றாள்.


சரஸ்வதி அவளை புரியாமல் பார்த்து 'என்ன வாக்கு?'என்று வாய் திறந்து கேட்காமல் விழிகளாலே  கேட்க, "இந்த வீட்ல இருக்க மருமகங்க தானே வேலைக்கு போக கூடாது. தனிக் குடித்தணும் போயிட்டா  வேலைக்கு போகலாம்ல"என கேட்கவும் வாயடைத்து போனார் சரஸ்வதி.


"இது நம்ம லிஸ்ட்லே இல்லையே"என்பது போல பார்த்தனர் தேவனும் பிரபுவும்.


"வைஷு..."சாந்தி பதற, "கவலை படாதீங்க அத்தை. கொடுத்த வாக்கை நான் மீறவே மாட்டேன். நீங்க மீராத வரைக்கும்" என்று சொல்லி விட்டு செல்ல, சைத்து அவள் பின்னே சென்றான்.  சரஸ்வதிக்கு ஆத்திரமாக வந்தது.


அவள் வேகமாக கீழே இறங்க , அவனும் பின்னாடியே சென்றான். "வைஷு நில்லு !"என்றான்.


"என்ன உன் பெரியம்மா கிட்ட எய்த்து பேசினதுக்கு  திட்ட வந்திருக்கீயோ?"என்றாள் நடந்துக் கொண்டே, "அதெல்லாம் இல்ல... நான் தான் அன்னைக்கி சொல்லிட்டேனே ! நீ தாராளமா என் பெரியம்மாவை பழிவாங்களாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" 


"ஓ அதான் சார் ரொம்ப அமைதியா இருந்தீங்களோ"என நக்கல் செய்தாள்.

"பச்... சரி அதை விடு ! வா நான்  உன்னை ட்ராப் பண்றேன்"என்றான்.


"வேணாம் உங்களுக்கு ஏன் சிரமம். நானே போய்ப்பேன்"


"வண்டி??"


"என் வண்டி தான். கொண்டு வந்து கொடுக்க சொல்லிட்டேன்... பை மிஸ்டர் சைத்து"என்று கைசைத்து விட்டு பறந்து விட்டாள்.


தரையை காலால் உதைத்தவன், "எல்லாம் நேரம் டா சைத்து.உன் கேரக்டரே மாத்திடுச்சிடா இந்தக் காதல். இவ மேல தான் உனக்கு காதல் வரணுமா?? ச்ச"என்று தனியாக புலம்பி விட்டு சென்றான்.


*****


தன் மகளை காண வந்தார் அகல்யா அவருடன் பிரணவ்வும் வந்திருந்தான். போன வாரம் விஷயம் தெரிந்தும்  குடும்பம் மொத்தமும் பார்த்து விட்டு வந்தனர் சரஸ்வதியை தவிர ,

இன்று இருவர் மட்டும் வந்தனர்.


எகா இன்று வேலைக்கு செல்ல வில்லை. தற்காலிகமாக பரத நாட்டிய வகுப்பை நிறுத்தி வைத்திருந்தனர். எல்லாம் வஸ்தியின் உடல் நலனுக்காக உள்ள வளரும் ஜூனியருக்காக தான்.


அகல்யா தயக்கமாக உட்கார்ந்து இருந்தார். மகனை பேச சொல்ல அவனோ அக்காவை எண்ணி பயந்து கொண்டிருந்தான்.


"டேய் பிரணவ் ! என்னடா அக்காக்கு ரொம்ப பயந்தவனா உட்கார்ந்து இருக்க என்ன விஷயம் டா ? ஏன் பம்புற? யாரையும் லவ்கிவ்வு பண்ணிட்டீயா என்ன? ரொம்ப பயந்தவன் போல நடிக்கிறீயே !"என அவனை வம்பிழுத்தாள்.


"இன்னுமா மச்சான் உன் அக்காவை பார்த்து பயப்படற?  உங்க அக்கா என்ன அவ்வளவு டெரரா?"என இவன் தன் மனைவியை வம்பிழுக்க. "ஏன் மாமா அக்கா டெரர்னு உங்களுக்கு தெரியாதா என்ன? என்னை விட அதிக பயப்படறது நீங்க தானு உளவு துறையில் இருந்து ரிப்போர்ட் வந்திருக்கு மாமா !"அவனை வார 'தேவையா இது உனக்கு என்பது போல பார்த்தாள் வஸ்தி' அவனோ வழிந்தான் மனைவி கண்டு.


"என்ன சம்பந்தி ரொம்ப அமைதியா இருக்கீங்க என்ன விஷயம்?"மகிழ் கேட்க,

"இல்ல சம்பந்தி பாப்பாவோட முதல் பிரசவ செலவ நாங்க தான் பார்க்கணும்  அதான் சம்பிரதாயம்.  அதை பத்தி பேசிட்டு  போலாம் வந்தேன்"என்றார்.


"அத்தை அப்படி ஒரு சம்பிரதாயம் இருக்கலாம் . இருக்கட்டும். ஆனா என் முதல் குழந்தைக்கு தகப்பனா நான் தான் எல்லாம் பார்க்கணும். என்னால உருவான குழந்தை அதுக்கு முழுக்க முழுக்க நான் தான் பொறுப்பு. நான் தான் அவளோட ஒவ்வொரு தேவையும் பார்க்கணும். எனக்கு உங்க ஆசை புரியுது. மாசமாசம் அவளுக்கு பார்க்க வேண்டிய ட்ரீட்மெண்ட் செலவை சேர்த்து வச்சி, அவ வளைகப்புக்கு சிறப்பாக செய்ங்க அதுல நான் தலையிட மாட்டேன். ஆனால் என் பிரதியோட மொத்த செலவும் என்னோடு தான் . அதுல தலையிட உங்க பொண்ணுக்கே உரிமை இல்லை"என்று அடுத்த அவர் வாய் திறக்காத அளவுக்கு வாயை மூட வைத்தான்.


மகளை 'ராணி'யாக  பார்க்கும் மருமகன் கிடைததால் மகளை பெற்ற தாய்க்கு வேறு என்ன சந்தோசம் கிடைத்து விட போகிறது. உள்ளம் பூரிக்க இருந்தார். தன் மாமனை ஆசையாக தழுவிக் கொண்டான் பிரணவ். காதலை கண்ணில் தேக்கி காதலாகப் பார்த்தாள் வஸ்தி.


*********


நாட்கள் மெல்ல நகர்ந்தது. ஸ்டூடியோவில் வேலை கழுத்தை நெறிக்கும் அளவுக்கு வரை இருந்தது. இரவில் தாமதமாக தான் இல்லாம் வந்தாள் வைஷு. 

சைத்துவ்வும் அன்று தாமதமாக தான்  இல்லம் வந்தான். 


இருவரும் ஆடை மாற்றி சாப்பிட வந்தனர்."அத்தை  செம பசி என்ன டின்னர்??"எனக் கேட்டு உணவு மேசையில் அமர்ந்தாள். 


"அம்மா எனக்கும் செம பசி தோசை ஊத்துங்க" என சைத்துவும் வந்தமர, 


அப்போது தான் அனைவருக்கும் தோசை ஊற்றிக் கொடுத்து அவரும் சாப்பிட்டு அமர்ந்தவர், அவர்களுக்காக மீண்டும் எழ, அவரை தடுத்தார் சரஸ்வதி. 


"இப்போ தான் அவ கால் கடுக்க  நின்னு தோசை ஊத்தி கொடுத்து அவளும் சாப்பிட்டு இப்போ தான் உட்கார்ந்தாள். மறுபடியும் அவளை வேலை வாங்கறீங்க உங்களுக்கு வேணும்னா போய் ஊத்திக்கங்க...."என்ற பொதுவாக  சொன்னார்.


அவளுக்கும் சாந்தியின் நிலமையைப் புரிந்தது தான் எதுவும் சொல்லாது "சைத்துப் ப்ளீஸ் எனக்கும் சேர்த்து தோசை ஊத்தேன் இன்னைக்கு ஸ்டூடியோல ரொம்ப வேலை" என்று சோர்வாகவும், தன்னை மீறி உரிமையாக அவனிடம் கேட்க, அவனும் 'சரி' என எழுந்தான். 


உடனே சரஸ்வதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது."என்னடி ஒரு ஆம்பல பிள்ளைய போய் தோசை ஊத்த சொல்ற?  பொண்டாட்டினு நீ எதுக்கு இருக்க? அவனுக்கு வேண்டியதை செய்ய தான் நீ இருக்க? அவன் உனக்கு செய்யணுமா?? முதல்ல அவனுக்கு தோசை ஊத்திட்டு அப்றம் நீ சாப்பிடுடி" என்றார்.


"சைத்து நீயும் அவ சொன்னான்னு போய் தோசை ஊத்துற"என அவனையும் கடிந்திட, அவன் அமைதியாக இருந்தான். 


இருவரையும் முறைத்து விட்டு சமையலறைக்குள் செல்ல, அவனும் பின் தொடர்ந்தான் "நீ எங்கடா போற?"


"இல்ல பெரியம்மா அவ அங்கயும் இங்கயும் நடக்கணும், அதுக்கு அவ பக்கத்துல உட்கார்ந்தால் வேலை ஈஸியா முடியும்ல அதான்"எனவும் அவனை முறைத்தவர்" அதெல்லாம் ஒண்ணும் தேவை இல்ல... இங்கே  உட்கார்டா !"என்றார். 


அவளும் அவரை திட்டியபடியே தோசை வார்த்து வந்து கொடுக்க அவனும் மனைவியின் கையில் கணக்கே இல்லாமல் திண்றான். அவளுக்கு பத்தித் கொண்டு வந்தது . இடையில் போதுமா என்று இருமுறை கேட்டு வசவு சொற்கள் வேற சரஸ்வதியிடம் வாங்கிக் கொண்டாள். 


இதுக்கு மேல் பொறுக்க முடியாதவள் தோசை மாவை கல்லில் ஊற்றி உப்பை அதில் அதிகம் தூவி விட்டு வந்து கொடுத்தாள். அதை வாயில் வைத்தவன் முகம் சுழித்து விட்டு அவளை பார்த்தான். அவளோ அவனை நக்கலாகப் பார்த்து  'இன்னொன்னு வேணுமா?'என கேட்க அவனுக்கோ புரையேறியது போதும் என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டு அதை குப்பையில் போட்டுவிட்டு கைகழுவி வெளியே வந்தான். 


"சைத்து ! நல்லா சாப்பிட்டேல போ ! போய் எனக்கு தோசை ஊத்து "என்று மேசையில் அமர, 


"என்னடி கொழுப்பா உனக்கு..."என அவர் ஆரம்பிக்க அவரை கைநீட்டி தடுத்தவள்"அவன் என் புருஷன். அவனுக்கு தேவையானத நான் செய்யறது போல அவன் எனக்கு தேவையானத செய்வான் செய்யணும். இதுல நீங்களோ அவங்களோ இல்ல இந்த குடும்பமோ தலையிட கூடாது. அவன் எனக்கு தோசை சுட்டு தருவான். உங்களால் உங்க புள்ளை வேலை பார்க்கறத பார்க்க முடியலைனா உள்ள போய் படுங்க... சைத்து போ போய் முறுகலா தோசை ஊத்திட்டுவா ! "என்றிட, அவனும் இவர்களது அலுசாட்டியத்தை பார்க்க முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றான். 



"என்னடி சாந்தி நீ பார்த்துட்டே இருக்க?உன் மருமகள கண்டிச்சி வைக்க மாட்டீயா நீ?"


"அவங்க புருஷன் பொண்டாட்டி. அவங்களுக்குள்ள நாம ஏன் போகணும்? சொல்ல போனால் நம்ம எல்லாரும் மூணாவது மனுசங்க. அவங்களுக்குள்ள போறதோ கேக்குறதோ தப்புக்கா நீ போய் தூங்கு !"என்று அவர் அறைக்கு சென்று விட்டார். சரஸ்வதி கோபத்துடன் அறைக்கு சென்று விட்டார். 


இங்கு அவன் ஊத்திக் கொடுக்க அவளும் ஏழு எட்டு உள்ளே திணித்தாள்.  அவனுக்கு பொறுமை காற்றில் பறக்க, அவளை போல அவனும் உப்பு தோசை ஊற்றிக் கொடுத்தான். வாயில்  வைத்தவளுக்கு காதே கூசும் அளவுக்கு உப்பு கரித்தது. 


வேகமாக தட்டோடு எழுந்து உள்ளே சென்றவள் ஸ்டவை ஆப் செய்து திரும்பிய சைத்துவின் இதழை சிறை செய்து உப்பு தோசையை அவனுக்கு மாற்றம் செய்தாள். 


தண்ணீர் தேவைக்காக சமையலறைக்குள் வந்த சரஸ்வதி இதை கண்டு நெஞ்சடைத்து போனார்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2