இதயம் 39


இதயம் 39

மறுவீட்டு சம்பிரதாயமாக பிறந்தகம் செல்வதற்காக வைஷு ஒரு பக்கமும் சைத்து ஒரு பக்கமும் தயாராகிக் கொண்டிருந்தனர்.


ஓர விழியால் அவனை நோட்டம் விட்டு திட்டியபடி கிளம்பிக் கொண்டிருந்தாள். அதையெல்லாம் கவனித்தப்படி அவளது முனங்களை உள்ளுக்குள்  ரசித்து, வெளியே வெடித்து வந்த சிரிப்பை உதட்டிக்குள் மறைத்து அவனும் தயாராகினான்.


இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். சுடிதார் அணிந்து கொண்டு அவளும் பேண்ட் ஷர்ட் அணிந்து கொண்டு அவனும் வர, சாந்தி இருவரையும் கண்டு லேசாக முகத்தை சுருக்கினார்.


"அப்போ நாங்க கிளம்பிறோம் அத்த !"என்ற மருமகளின் அருகே சென்றவர்"வைஷு மா ! மத்த நேரம் எல்லாம் ஓ.கே. இன்னைக்கி நீங்க மறு வீட்டுக்கு போறீங்க. அதுனால் சம்பிரதாய படி புடவை கட்டிட்டு போகணும்மா ! போ புடவை கட்டிடுவா !"என்றார்.


"புடவை கட்டணுமா?"அதிர்ச்சியில் கேட்க, அவளது அதிர்ச்சியில் அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்த்தனர்.


"உனக்கு சேலை கட்ட தெரியும் தானே மா ?"எனவும் 'அவளுக்கு கட்டத் தெரியவில்லை என்றாலும் 'கட்டத் தெரியும்' என்று சரஸ்வதி முன் கெத்தை விட்டுத்தாராமல்  அறையை நோக்கிச்  சென்றாள்.

ஆனால் சைத்துவோ, யாரும் அறியாத அவளது திருட்டு முழியைக் கண்டவனாக  எதையோ யோசித்து நின்றான். 


"சைத்து நீயும் வேட்டிச் சட்டை போட்டு வா "என்று அனுப்பி வைக்க,  அவனும் உள்ளே நுழைய அங்கே அவளை காணவில்லை. உள்ளே ரவிக்கையும் பாவாடையும் அணிய சென்றிருந்தாள்.


இவனும் தனது காப்போர்டடிலிருந்து  வேட்டி மட்டும் அதற்குப் பொருத்தமான சட்டையை அணிய எடுக்க, சரியாக இவளும் வந்து "ரெடி" எனவும் திரும்பிப் பார்த்தான்.


அங்கே வீடியோ காலில் ஸ்ருதி சுடி மேல் சேலையோடு நிற்க இவளும் அவள் சொன்ன படி சேலையின் மற்றொரு நுனியை தேடிக் கொண்டிருந்தாள்.


அவனும் அவள் பின்னே வந்து  நின்று பார்க்க, ஸ்ருதி அவன் பார்ப்பத்தை கண்டு சேலை கட்டுவதை நிறுத்தினாள். வைஷுவோ அவனை கண்டு கொள்ளாது. "சொல்லு ஸ்ருதி ! டைம் ஆகுது"என்று துரித்தப்படுத்தினாள்.


"உனக்கு சேலை கட்ட தெரியாதா?"


"தெரியாது"என்று அவனை பாராமல் சொன்னவள், சேலை கட்டுவதில் மும்மரமாக இருக்க, அவள் முன்னே வந்து "அண்ணி! நான் பார்த்துகிறேன். தேங்க்ஸ் "என்று காலை கட் பண்ணி விட்டான்.


"என்ன பண்ற சைத்து நீ ! நான் சேலை கட்டணும். நீ பாட்டுக்கு கால் கட் பண்ணி விட்டுட"என்று மீண்டும் இணைத்திட பார்க்க, 


"எதுக்கு சேலை கட்ட தெரியாதுனு பொய் சொன்ன?"என கேட்டான்." உங்க பெரியம்மா முன்னாடி அசிங்கப்படக்கூடாதுனு தான் பொய் சொன்னேன்" என்று உண்மையை சொன்னாள்.


அவளை முறைத்தபடி சேலையை நுனியை எடுத்து அவள் இடையில் சொருகி விட, விக்கித்து போனாள். ஆனால் அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாது அவளுக்கு சேலை கட்டுவதில் ஆர்வமாக இருந்தான்.


"உனக்கு எப்படி சேலை கட்டத் தெரியும்?" என அதி முக்கிய  கேள்வியை கேட்டாள்.

"காலேஜ் டேஸ் ஒரு காம்படிசனுக்கு எங்க  ஜூனியர் பசங்களுக்கு கட்டிவிட  கத்துக்கிட்டேன்"என்றவன் தோளில் மடிப்பை போட்டு பின் குத்தினான். அவனது  சுண்டு விரல் என்ன என்ன புண்ணியம் செய்ததோ அவளது அகங்களில் ஊர்வலம் நடத்தியது.


இடையில் மடிப்பை சொருக் அவளை  நெருங்கி நாபிக்கு கீழே கையை விட்டான். அவன் தீண்டலில் கூச்சம் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். அது அவனுக்கு வசதியாய் போக,  முத்தமிட நெருங்கியவன் சேலை தட்டி அவள் மேலே சரிந்தான். அவன் பாரம் தாங்க முடியாமல் மெத்தையில் விழ, அவள் மேலே அவன் விழுந்தான்.


இருவரின் பார்வை ஒருவரை ஒருவர் பார்த்து காதலில் கரைத்தனர். அவன் பார்வை அவள் விழியை தாண்டி உதடு கழுத்து என கீழே இறங்க, அவளோ அவன் பார்வையைத் தடுக்க முடியாமல் அதே நிலையில் தவிப்பாய் கண்ணை மூடிக் கொண்டாள்.


கழுத்துக்கிடையில் முகம் புதைத்து மெல்லிய முத்தம் வைத்தான். ஷாக்கடித்து போல அவளுடல் லேசாக தூக்கிப் போட்டது. 


அவன் இதழ்கள் மேலும் முன்னேற , மூளையோ மின்னலை போல அவன் செய்த சத்தியத்தை நியாபக்கப்படுத்திச் செல்ல, பட்டென  அவளை விட்டு விலகி எழுந்தான். 


அவளோ இன்னும் கண்ணை மூடிக் கொண்டு தான்கிடந்தாள். அவளை பாராமல் "வைஷு எழுந்திரு"என்றதும் விழியை திறக்க, அவனோ அவளுக்கு முதுகாட்டிக் கொண்டு நின்றான்.


அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. உள்ளுக்குள் எழுந்த மோகம் பாதியில் அறுப்பட்டு போக, ஏமாற்றத்துடன் எழுந்து 

"என்னாச்சி?"எனக் குரலில் சிறு ஏமாற்றம் தோணிக்க கேட்டாள்.


"டைம் ஆச்சி கிளம்பணும் வா"என்றான். 


அதன் பின் அவன் அவளை பார்க்கவில்லை கவனம் சேலை கட்டிவிடுவதில் இருக்க, அவளோ அவனை மட்டும் பார்த்திருந்தாள்.


சைத்து" கட்டி விட்டிட்டேன் வைஷு போய் கண்ணாடியில பார்"என்றான். அவள் கண்ணாடியை நோக்கிச் செல்ல இவனோ தன் உடையை மாற்றினான். 


"தேங்கஸ் ரொம்ப நல்லா இருக்கு" என்று இறுகிய குரலில் கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள். அவனுக்கு தான் ஏதோ போல ஆகிவிட்டது. தலையில் அடித்து தன்னை திட்டிக் கொண்டு வெளியே வந்தான். இருவரும் ஜோடியாக நிற்க வைத்து நெற்றி முறுகினார் சாந்தி.


ஆனால் விழிகள் முழுக்க வெறுப்பை சுமந்து அவர்கள் எரிக்குமளவு பார்த்து கொண்டிருத்தார் சரஸ்வதி. 

இருவரும் கிளம்பினார்கள். அவள் அவனை அணைக்கவில்லை. அவனும் கேட்கவில்லை. இருவரும் அமைதியாகச் சென்றனர். 


*****


இங்கோ வஸ்தியை தவிர மற்ற அனைவரும் வைஷுவிற்கு செய்து வைத்திருந்த கேசரி மொத்தத்தையும் வாயில் போட்டு சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர்.


"ஐயோ எகா ! என்னால் நம்பவே முடியலடா ???" சந்தோஷத்தில் குதித்துச் சொல்ல "ஏன் மகிழ்,  நான் உண்மையிலே அப்பாவாகிட்டேன் நம்பு என்னை"என பரிதாபமாக சொன்னான். 


"அடேய் மடையா ! நான் பாட்டியானத  நம்பவே முடியல எனக்கு!" என்று சிரித்து கொண்டே சொல்ல, 


"ஆமா ஆமா, இந்த சின்ன வயசில உன்னை பாட்டினு சொன்ன யாரும் உன்னை நம்ப மாட்டாங்க  இல்ல மகிழு !"என விஷ்ணு அவரை  நக்கல் செய்ய, 


"உண்மை தானேங்க எனக்கு என்ன வயசாகிருச்சி சொல்லுங்க... இந்த  சின்ன வயசிலே பாட்டியாகிட்டேன்.. இது நம்புறமாதியா இருக்கு..."எனவும் வஸ்தி வாயில் கைவைக்க, விஷ்ணுவும் எகாவும் தலையில் அடித்துக் கொண்டனர் 


அதைக் கண்டவர்"என்னங்கடா ! தலையில் அடிச்சிக்கிறீங்க. உங்களுக்கு எல்லாம் பொறாமை நான் இன்னும் யங் இருக்கேனு... ம்கூம்"என சிலிப்பிக் கொள்ள, " வெள்ள முடி எட்டிப்பார்க்க, தோல் கொஞ்சம் சுருங்க, தள்ளாடுற வயசு வந்திருச்சி. இதுல இவுக யங்கா இருக்காங்களாம்...போ மா போ காமெடி பண்ணாம இன்னும் கொஞ்ச கேசரிய எடுத்து வா !"என அவரைக் கேலி செய்ய  அவனைச் செல்லமாக அடிக்கத் துறத்த விஷ்ணுவைச் சுற்றி ஓடினர்.  அங்கே சிரிப்பின் ஒலியே நிறைந்திருந்தது. 



"போதும் போதும் விளையாடியது. சிலேபிரேட் பண்றேன் அத்தையும் மருமகனும் கேசரியைக்காலி பண்ணியாச்சு. இப்போ என் பொண்ணுக்கிட்ட நான் தாத்தாவாகிட்டேன் சொல்லி என்னத்த ஊட்டிவிடறதாம். போ போய் இன்னும் கொஞ்சம் கேசரி செய்" அவர்கள் விளையாட்டுக்கு கட்டையை போட்டார். 


"இருங்கப்பா நான் போய் கேசரி செய்றேன்"என்று வஸ்தி எழ, "ஏய் வஸ்தி குட்டி, அம்மா செய்றேன் நீ இரு"என்று அமர சொல்ல,"இல்ல நான் உங்களுக்கு உதவி பண்றேன்" என்று எழ, "அட கேசரி செய்ய உதவியா? நான் பார்த்திருக்கிறேன் நீ உட்கார்"என்க, "இல்லம்மா நானும் வரேன்" அவளும் சொல்ல. இருவரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டு இருக்க, 


"இப்படி மாத்தி மாத்திபேசிட்டு இருந்தா, எனக்கு எப்போ கேசரி செய்வீங்க?"என  வாசலில் நின்றபடி கேட்டாள் வைஷு. 


நால்வரும் திரும்பி பார்த்தனர். "ஹேய் வைஷு !"என எகா அவளை அணைத்தவன், அவள் தோளில் கைப் போட்டபடி உள்ள  உழைத்து போக, 


அவளோ அதே இடத்தில் நின்றாள். 'என்ன?' என்று எகாவும் அவளை பார்க்க, அவளோ பக்கத்தில் கண்ணை கட்டினாள். அவள் தோளில் இருந்து கையை எடுத்து அவள் பக்கவாட்டில் இருந்த சைத்துவையும் கண்டு "வாங்க"என்றான்  சுரமின்றி. 


"வாங்க மாப்பிள்ளை வா வைஷு"என விஷ்ணு மகிழ் அழைத்தனர். 


"வாங்க வாங்க"என இருவரும் உள்ளே வந்து சோபாவில் அமர மற்றவர்களும் அமர்ந்தனர். 


"ஆமா,  எனக்கு கேசரி பிடிக்கும் தெரியும்ல அதை செய்யாம ரெண்டும் அப்படி என்ன கொஞ்சிக் கொலாவிட்டு இருக்கீங்க... "என விளையாட்டாக கேட்டாள்.


"உனக்காக தான் அம்மா செஞ்சாங்க வைஷு. ஆனா அதுக்குள்ள காலி ஆகிடிச்சி"என்று உதட்டை பித்துகினாள் வஸ்தி.


"அடப்பாவிகளா யார கேட்டு காலி பண்ணிங்க?"என எகிற, "என்னடி பண்ண? வஸ்தி  குட் நீயூஸ் சொல்லிருக்கா, அதுக்கு ஸ்வீட் எடுத்து கொண்டாட  வேண்டாமா???"என்க


"என்ன குட் நியூஸ் மா?"ஆவலாக கேட்டாள் வைஷு ! "நாங்க தாத்தா பாட்டி ஆகிட்டோம். எகா அப்பாவா கிட்டான் நீ சித்தி ஆகிட்ட !"என்று குதூகலமாக சொல்ல, "ஏய் வஸ்தி !"அவளை கட்டிக் கொண்டாள். 


"காங்கிராட்ஸ்டி"என்று முத்தம் வைத்தவள்" அகி அம்மாட சொல்லிட்டீயா??"என கேட்க, "இன்னும் இல்ல இனிதான்"என்றாள் வெட்கத்தோடு.


"காங்கிராட்ஸ் வஸ்தி !"என்றவன் அருகே இருந்த எகாவிடமும் "காங்கிராட்ஸ்"என்றான் சைத்து புன்னகை செய்ய, அவனும் பதிலுக்கு புன்னகை செய்தான். வஸ்தியும் வைஷுவும் நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர்.


"அப்பா ! நைன்டி கிட்ஸ் நான் எனக்கு பெண்ணே கிடைக்கலைனு பொலம்பின ஒருத்தன் பொலம்பி ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள அப்பாவாகிட்டான். இப்படி தான் நைன்டிஸ்கிட்ஸ்னு பொலம்பிட்டு ஒன்னும் தெரியாத அப்பாவினு வெளிய சொல்லிக்கிட்டு இந்த வேலையும் கமுக்கமா பார்த்து அப்பாவாகிட்டேன்  வெளிய பீதக்கிறது...இதெல்லாம் என்ன பொழப்போ "என எகாவை நக்கல் செய்ய அவனோ முகத்தை மூடி வெட்கம் கொண்டான். 


வஸ்தியும் வைஷுவும் காரி துப்பினார்கள். "என்ன மேடம் என்னை கலாய்கிறீங்களா?? நீங்களும் அன்னைக்கி சாமியாரா போறேன் சொன்னவங்க தானே ... பாப்போம் நீங்களும் ஒரு நாள் மம்மி ஆகிட்டேன் சொல்லதான் போறீங்க அன்னைக்கி உங்களை வண்டி வண்டி கலாய்கிறேன்"என்றான் ..


"உன் வாக்கு பொண்ணாகட்டும் டா எகா"மகிழ் சொல்ல, வைஷுவோ சைத்துவது பார்க்க, அவனோ வேறு புறம் பார்த்தான். 


"சரி நாங்க ஹாஸ்பிட்டலுக்கு  போயிட்டு வர்றோம்"என்று வஸ்தியும் எகாவும் கிளம்பிட, வைஷுவிடம், "மாப்பிள்ளை வீட்டை சுத்திக் காட்டு , உன் ரூம்க்கு கூட்டிட்டு போ, உன் போட்டோஸ் எல்லாம் காட்டு"என்றதும், "சரிப்பா"என்றவளுக்கு ஏதோ தோன்ற, "அப்பா நீங்க பேசிட்டு இருங்க இதோ வர்றேன்" என்று வேகமாக அறையை நோக்கி ஓட" விஷ்ணுவும் மகிழும் சிரித்தனர்.


"எதுக்கு மாமா சிரிக்கிறீங்க?" 


"அது ஒன்னும் இல்ல மாப்பிள்ளை அவளோட சின்ன வயசு போட்டோ ஒன்னும் பிரேம் போட்டு அவ ரூம் மாட்டிருக்கு நீங்க அதை பார்க்கக் கூடாதுனு ஓடுறா !"என்று சிரிக்க,  "அதுக்கு என்ன??"எனக் கேட்க"அதுல அவன ட்ரெஸ் போடல மாப்பிள்ளை அதான்"எனவும் அவனுக்கே சிரிப்பு வந்து விட்டது. 

அவனும் வழியும் சிரிப்போடு அவளது அறையை நோக்கி ஓடினான் .


அங்கே அவளோ கொஞ்சம் பெரிய சைஸில் பிரேம் இருந்த போட்டோவை தூக்கி, எங்கே ஒளித்து வைக்கலாம் என்று பார்க்க அதற்குள் அவனும் உள்ளே வந்திருந்தான். அவன் வந்ததை கண்டதும் பின்னே போட்டோவை மறைத்தாள். 


அவனோ அவனை நெருங்கி வந்தான். "காட்டு !"என்றான். அவளோ "முடியாது"என்றாள். 


"ஏன் முடியாது?" 


"முடியாதுனா முடியாது "என்றாள். 



"ஏன் முடியாது?"


"உனக்கு ஏன் நான் கட்டணும்???"என திமிராக கேட்க, "எனக்கு தாண்டி நீ கட்டணும்... நான் உன் புருஷன் உன்னை பார்க்க எனக்கு முழு உரிமை இருக்கு"என்றான் தாலியை வெளியே போட்ட படி. "ஓ... உரிமை மட்டும் இருந்தா போதுமா??? விருப்பம் இருக்க வேணாமா??"எனவும் குழம்பினான். 


"எனக்கு என்னை காட்ட விருப்பம்  இருக்கு.  ஆனா உனக்கு என்னை பார்க்க விருப்பம் இருக்கா?"என விரக்தியில் கேட்க, அவனுக்கோ முகம் கருத்து விட்டது. 


அந்த போட்டோவை கப்போர்டில் வைத்தவள், அவள் எடுத்த  போட்டோவை எல்லாம் அவன் பார்க்க எடுத்து வைத்து விட்டு அறையில் வேறு  வேலை பார்க்க  சென்றாள். அவனும் அந்த போட்டோக்களை பார்த்தாலும் மனம் அதில் லயிக்கவில்லை.மதியம் குடும்பமாக விருந்துண்டு, பேசி சிரித்து அன்றைய நாளை கழித்தனர். அங்கே தங்கிவிட்டு மறுநாள் வீட்டிற்கு சென்றனர். 



திருமணமாகி ஒரு வாரம் சென்ற நிலை வைஷு வேலைக்கு செல்ல இருந்தாள். சாந்தியிடமும் சைத்து விடமும் சொல்ல அவர்களும் கொடுத்த வாக்கின் படி போகச் சொன்னார்கள்.


காலையில் குர்தியும் ஜீன்ஸூம் அணிந்து ஹெல்மெட்டை கையில் கொண்டு வெளியே வந்தவளை உருத்து விழித்த சரஸ்வதி தன் பேச்சை ஆரம்பித்தார். 


"எங்க மகாராணி கிளம்பிடீங்க??"என அசட்டையாகக் கேட்டார். 


"வேற எங்க வேலைக்கு தான் அத்தை...."என இவள் நக்கலாகச் சொல்ல அவ்வளவு தான் அங்கே தன் காலி ஆட்டத்தை தொடங்கினார் சரஸ்வதி

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2