இதயம் - 38

 இதயம் 38

அதிகாலை பூத்த மலராய்  சிவந்த கன்னகதுப்புடன் வெட்கம் கொண்டு தரையைப் பார்த்து நிற்கும் பெண் மலரை ரசிக்காமல் விட்டால் கணவனாக,ஒரு தலைக் காதலனாக அவனுக்கு அது மாபெரும் குற்றம் அல்லவா ! அவள் தன்னைப் பார்ப்பதற்குள் அவள் முகத்தை ரசித்து தனக்குள் நிரப்பி வைத்திட, வேண்டுமென்றே தீவிரமாக ரசித்தான் அவளது காதல் தீவிர ரசிகன்.


ஆனால் அவளோ அவன் அமைதியைக் கண்டு ' கோபத்திலிருக்கிறானோ ' என்று எண்ணி தலையை தூக்கி அவன் முகத்தை பார்த்தாள். அதற்குள் சுதாரித்தவன் அந்நியனை போல முகத்தை மாற்றினான்.


" நீ நினைச்சது நடந்திருச்சி !  என் அம்மா முன்னாடி என் தங்கச்சி முன்னாடி என்னை அசிங்கப் படுத்தியாச்சி. ஹாப்பி !! ம்ம் சொல்லு எத்தனை நாள் பிளான் இது? ஹான் சொல்லுடி எத்தனை நாள் பிளான் இது? பழிவாங்கிட்டேலடி என் பெரியம்மாவோட  என்னையும் சேர்த்து பழிவாங்கிட்டேலடி போச்சி மானம்  போச்சி ! போனா மானம் போனது தான் திருப்பி வருமா? இனி நான் மார்னிங் எழுந்து வெளிய போனாலே எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்கமாட்டாங்க, என்னை கேலி செய்ய மாட்டாங்க... இதுக்கு எல்லாம் காரணம் நீ !  நீ மட்டும் தான். இதெல்லாம் உன்னால தான்"என்று அவளை சுட்டிக்காட்டிக் கோபத்துடன் சொன்னான்.


"ஸா... ஸாரி  சைத்து.. நா .. நா... நான் உங்க பெரியம்மாவை கடுப்பேத்த தான் அப்படி செஞ்சேன். ஆனா நீ  சீரியஸா எடுத்துப்பனு நினைக்கல" என்று மெண்டு முழுங்கினாள்.


"ஓ... எல்லாரும் முன்னாடி நான் அவமானப் பட்டும் நான் கேஸுவலா இருக்கணும்ல. ஹான் சொல்லு அப்படி தான் இருக்கணும்ல??"எனவும் உதட்டை கடித்தவள் தலைக்குனிந்து நின்றாள்.


"நீங்க ஏன் பீல் பண்றீங்க மேடம்? அவமானம் பட்டது நானு. நான் தான் ஃபீல் பண்ணனும். உன் சுயநலத்துக்கு என்னை எல்லார் முன்னாடியும் காம பிசாசா காமிச்சிட்டலடி"என்றான் முகத்தில் முயன்று கோபத்தை வரவழைத்து. 


"ஸாரி சைத்து, நான்..."என்றவளை அவனை "  என்ன ரீசன் சொன்னாலும் நடந்ததை மாத்த முடியுமா??"என அவன் கேட்க, 


இடையூறாக  அவளே "அதே ! தான் நானும் சொல்றேன். இனி எதையும் மாத்த முடியாது .  நடந்தது நடந்திருச்சி. அதை அப்படியே விட்டுடலாமே எதுக்கு பெருசு பண்ணிட்டு சைத்து"என இளிக்க.


"ஆஹான் நல்லா இருக்கே ! நீ செய்யறத  செய்வ, நான் அமைதியா அப்படியே விடணுமா? அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. கண்டிப்பா நீ செஞ்சதுக்கு நான் பனீஸ்மெண்ட் கொடுத்தே ஆவேன். நீ வாங்கி தான் ஆகணும்" என்றான் கறாராக.


"பனிஷ்மெண்ட் எல்லாம் ஒரு மெட்டாரா  என்ன ? நீ தாராலமா கொடு ! நான் ஏத்துப்பேன்"என்று அசட்டையாக சொன்னவள் எதிர்பாராத நேரத்தில் அவள் தாடையைப் பிடித்து அவள் இதழ்களை அவனிரு இதழ்களுக்கு வைத்து பூட்டிக் கொண்டான். 


எதிர்பாராத முத்தத்தில் அதிர்ந்து பெரியதாக அவள் கண்கள் விரிய, 'என்ன நடக்கிறது?' என்று உணர நேரமெடுத்துக் கொண்ட மூளை, அவனை விலக்கச் சொல்லி கைகளுக்கு கட்டளையிட்டது.  


முத்தமிட்ட பின் தாமதமாகவே அவனது நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளிவிட முயன்றாள்.  அது முடியாமல் போனது. அவனை அடித்தாவது வலியில் அவளது இதழை விடிவிப்பான் என்று நினைத்தாள். ஆனால் அவனோ "தரமாட்டேன்" என்று வீம்புடன் இன்னும் முத்த வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு போனான் 


அவள் அடிக்கும் வேகத்தை குறைத்து அவனுள் அடங்கிப்போனாள். உள்ளுக்குள் சிரித்தவன், அவள் மூச்சுவாங்க சிரமப்படுவது போலிருக்க, அவளை மெல்ல விடுவித்து அவள் முகம் பார்த்தான்.கண்களை மூடி முத்தத்தில் சுகித்திருந்தாள். ஆனால் உள்ளுக்குளிருக்கும் இரு கண்மணிகளும் அலைப்புறுதலில் இருந்தன. அவள் முகம் பார்த்து புன்னகைச் செய்தவன், நெற்றியில் இதழொற்றி விட்டுக் குளியலறைக்குள் நுழைந்தான்.


தாமதமாக விழியை திறந்தவள் அவன் அங்கு இல்லாததும் நெஞ்சின் மேல் கைவைத்து மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்கிவள் குளியலறையை வெறிக்க நின்றாள்.


இரண்டு முறை அழைத்த சாந்தியின் குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல கேட்டது.  மூன்றாவது முறை அவர் அழைக்கும் போது நினைவுக்கு வந்தவள் வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.


காலை உணவை சாப்பிட அழைக்க, அவளோ 'சைத்து வந்ததும் சாப்பிட்டு கொள்வதாகவும் இப்போது நீங்க சாப்பிடுங்கள்'என்று சாந்தியையும் சேர்த்து அமர சொல்லிவிட்டு பரிமாறினாள்.


சரஸ்வதிக்கு பெருத்த ஏமாற்றமாகி போனது. அவளும் அமர்வாள் ஏதாவது சொல்லலாம் என்று நினைத்தவருக்கு அவள் கண்டன்ட் ஏதும் கொடுக்கவில்லை. அமைதியாக உண்டார்.


அனைவரும் சாப்பிட்டு முடிக்க, சைத்து வரவும் சரியாக இருந்தது. சைத்து வைஷுவை அமர சொல்லிவிட்டு சாந்தி பரிமாறினார்.


இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஓரக்கண்ணால் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு தான் இருந்தனர். அவள் அவனை ஓரவிழியால் பார்க்க, அவன் அவள்  முகத்தை பார்த்தான். உடனே தலைகுனிந்து கொள்வாள். அவன் அவளை ஓர கண்ணால் பார்க்கும் போது அவள் அவன் முகம் பார்க்க,  திரும்பிக் கொள்வான். இருவருக்கிடைய அழகான இச்சிறு விளையாட்டைக் கண்டு காணாமல்  உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டார் சாந்தி. மகன் மருமகளின் முகத்துல புதிதாக குடியிருக்கும் வெட்கம் , மகிழ்ச்சி, அந்த அழகானப் புன்னகை எல்லாம்அவருக்கு திருப்தியைக் கொடுத்தது.


இருவரின் விருப்பத்தை கேளாமல் நடந்த கல்யாணம் எங்கே வெறுப்பை  சுமந்திருப்பார்களோ என்று எண்ணினார். ஆனால் மாறாக அவர்களது முகமே அவருக்கு திருப்தியை கொடுத்தது.


"சைத்து, நாளைக்கு தான் மறுவீடுக்கு  போகணும். அதுனால இன்னைக்கி மருமகள அழைச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு அப்படியே  ஊர் சுத்திட்டு வாங்க "என்றார். அவனும் சரியென்றான்.


இருவரும்  உண்டு விட்டு அறைக்கு சென்று கிளம்பி வந்தனர்.  அதுவரை அவன் பின்னே வந்தவள் சரஸ்வதியின் பார்வை அவர்கள் மீது இருப்பதைக் கண்டதும் வேகமாக அவனது கைகளை பற்றி அவனுடன் நெருக்கமாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.  அவனும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் சரஸ்வதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

இருவரும் வெளியே வந்தனர். அவன் அவனது பைக்கை எடுத்துக் கொண்டு வந்து நிறுத்தினான்.


அவளும் ஏறி அமர்ந்தாள். அவன் அவளை கண்ணாடி வழியே பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து அவனது வயிற்றைச் சுற்றிக் கையை போட்டுக் கொண்டு நெருங்கி அமர்ந்தாள். அவனும்  குதூகலத்துடன் வண்டியை எடுத்தவன்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முன் தான் நிறுத்தினான்.


பைக்கை பார்க் செய்து விட்டு இருவரும் கோவிலுக்குள் சென்றனர்.  அம்மனையும் அப்பனையும் தரிசித்து விட்டு அந்த வளாகத்தில் நடந்தவர்களுக்கு அவர்கள் முதன் முதலாக சந்தித்த நினைவுகள் இருவரையும் தாக்க, இருவரும் ஒருவரை ஒருவர் காதலாகப் பார்த்துக் கொண்டனர். 


அன்று சைத்து முறுக்கிய வைஷுவின் வலது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவளைக் காதலாக பார்த்து முன்னே அழைத்து சென்றான். 


'கை பிடிப்பான், கட்டிப்பிடிச்சிட்டு வர சொல்வான் முத்தம் கொடுப்பான்.  ஆனா, லவ்வ மட்டும் சொல்ல மாட்டான்.  என்னா மேக் இவன்?' என்று தலையில் அடித்துக் கொண்டு பின்னே சென்றாள். 


கோவிலை விட்டு வெளியே வந்தவர்கள்  ஊர் சுற்ற கிளப்பினார்கள். அந்த நாள் முழுக்க வெளியே  தான் கழித்தனர். அவளும்' வீட்டுக்கு போகலாம்' என்று சொல்லவும் இல்லை அவனும் கேட்கவும் இல்லை. புதிதாக சேர்ந்த ஜோடி நொடி நேரம் அனைத்தையும் மறந்து பறந்தன.


ஆனால் இங்கு சரஸ்வதிக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை. எப்போ வருவார்கள்  என்று வாசலை பார்த்து பார்த்து கண் போனது தான் மிச்சம். அவர்கள் வந்த பாடில்லை. சாந்தியிடமும் அவர்களை பற்றிக் கேட்கவும் முடியாது.  என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சம்... இரவானது யாரும் அவர்களை அழைத்து கேட்கவும் இல்லை. இவரும் சாப்பிட்டு படுக்கச் சென்று விட்டார்    ஆனால் அவர்கள் வரவே இல்லை. 


இரவு தாமதமாக தான் வீட்டிற்கு வந்தனர். வெளியே சாப்பிட்டு வந்ததால் நேராக அறைக்குள் சென்று  உடை மாற்றி விட்டு மெத்தையில் விழுந்தனர்.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாக்கில் படுத்திருந்தனர். ஆனால் உறங்கவில்லை. 


அவன் அவளையே பார்த்திருக்க 'என்ன ?'என்று புருவங்களை உயர்த்தினாள்.


"உனக்கு தூக்கம் வருதா??"எனக் கேட்கவும் இவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை.

"லை... லைட்டா தூக்கம் வருது"என்றாள் திணறிய படி.


"ஓ... டயர்டா இருக்கா?" என்றான்.


"இ... இல்லை"என்றாள்.


"அப்ப சரி ! அந்தப் பக்கம் திரும்பு"என்றான்.


"வாட்???"என அதிர்ந்தாள்.


"ப்ம்ச்... அந்த பக்கம் திரும்பு" என்றான். அவளும் திரும்பிட அவளை  நெருங்கி  இறுக அணைத்துக் கொண்டவன் அவள் காது மாடலில் அவன் உயிர்காற்று உரச, "குட் நைட்"என்று உறங்கிப் போனான் 


'இதுக்கு மேல எங்க டா குட் நைட்???' என தன் உறக்கம் பறிபோனத்தை எண்ணி மனசுக்குள் சொல்லிக் கொண்டவள் அசையது அவன் அணைப்பில் கட்டுண்ட சிலையாகிப் போனாள்.  தூக்கம் தூரம் போனதென்று எண்ணியவளுக்கு, வெகு விரைவில் அத்தூக்கம்அவளை தழுவியது. சுகமாக அவனணைப்பில் உறங்கிப் போனாள். 


*****


அழகாய் காலை புலர, அதற்காக காத்திருந்தவள் போல கணவனின் அணைப்பிலிருந்து விடுவித்து கொண்டு வந்தவள் வாங்கி வந்த  தாய்மையை பரிசோதிக்கும்  அட்டையை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றவள் பரிசோதிக்க ஆரம்பித்தாள். 


இரு கோடுகள் தோன்றி அவள் தாய்மையை உறுதி செய்ய வாயில் கைவைத்து ஆச்சர்யப்பட்டவளுக்கு அணையின்றி கண்ணீரைக் கொட்டியது. 


வேகமாக வெளியே வந்தவள் முதுகாட்டி படுத்திருக்கும் கணவனின் காதருகே சென்றவள் "காந்த்"என்று அழைக்க, "ம்ம்ம்"என்று முணங்கினானே தவிர  எழவில்லை. 


"காந்த்...!"என்றாள் மீண்டும்."பம்ச் என்னடி? தூங்க விடுறீயா மனுஷன"என்றபடி நெளிந்தான். 


'தினமும் என்ன தூங்க விடுறது இல்ல... இதுல நான் உன்னை தூங்க விடுறது இல்லையா ' என தலையில் அடித்துக் கொண்டவள்" காந்த், நம்ம  இரண்டு பேர் நடுவுல புதுசா ஒருத்தர் வரப்போறாங்க..." அவள் காதில் மெல்லமாக உரைக்க,  பட்டென எழுந்து அமர்ந்தான். 


"என்னடி சொல்ற நம்ம ரெண்டு பேர்குள்ள யாருடி வர போறா?" என கோபமும் பதற்றமும் நிறைந்தவனாக கேட்டான். "வர போறாங்க ! யார்னு கெஸ் பண்ணு?"என அவள் விளையாட அவனுக்கு அந்நேரத்தில் பொறுமை காற்றோடு கறைய  தொடங்கியது.


"யார்டி சைத்துவா???"எனவும் அவனை முறைத்தவள் "லூசாடா நீ ! அவன் எதுக்கு நம்ம ரெண்டு பேர்குள்ள வரணும்...  வேற ஒரு ஆள்"என்றாள் வெட்கத்தோடு. 



'வேற ஒரு ஆளா???'என யோசித்தவன் அவள் முகம் பார்க்க,  ரோஜா மலரை போல கன்னங்கள் சிவந்து  தலை தாழ்த்தி நாணம் கொள்ள,  

எகாவின் மூளைக்குள் பல்ப் எரிந்தது வேகமாக அவள் முகமேந்தி "பிரதி ! நிஜமாவா ?"என்க, 


அவள் 'ஆம்மென்று' தலையை அசைக்க, நெற்றி , மூக்கு , கன்னம் , கழுத்து உதடு என தன் மகிழ்ச்சியை முத்தமாக வெளிப்படுத்தியவன்" ஏய் ! நான் அப்பாவாக போறேன்ன்ன்"என அறைக்குள் மெத்தையின் மேல் குழந்தை போல குதித்து  அவன் அலம்பலை தொடங்க, தலையில் கைவைத்து  அமர்ந்து விட்டாள் வஸ்தி. 

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2