இதயம் - 37

இதயம் 37

வெள்ளிச்சிலை மின்னுவது போல மேடையில் தனியாக நின்று அழகாய் ஜொலித்து கொண்டிருந்தாள் வைஷு. 

ஓரமாய் அமர்ந்து புகைப்படத்திற்காக அவள் கொடுக்கும் போஸ்'களை எல்லாம் ரசித்துக் கொண்டிருந்தான் சைத்து. 


அவளை ரசித்த வேளையில் அவனது நினைவோ அவனுக்குள் காதல் என்று தொடங்கின புள்ளிக்கே சென்றது.

'எனக்கு அவள் மீது காதலா?' என்று முதல் முறையாக தனக்கு தானே கேட்டுக் கொண்டவனுக்கு இன்றைய நிகழ்வு எல்லாம் கனவுப் போல் இருந்தது. 

மோதலில் ஆரம்பித்த இந்த உறவு, இனி காதலோடு கழிய போவதை எண்ணி அவனுக்குள் புன்சிரிப்பு. 


இஞ்சித்துக்கும் 'அவள் வேண்டும்'என்று  சிறு முயற்சி கூட எடுக்காமல் வீம்பாக தனக்குள் மறைத்து வைத்த காதல் இது. கைக்கூடும் என்று அசரீரி வைத்து சொன்னாலும் கூட நம்பிருக்க மாட்டான். ஆனால் இன்று தன் காதலி தனக்கே மனைவியாகி இருப்பது அவனுக்கு ஆச்சர்யதுக்கும்  ஆச்சர்யம். 


ஆனால் எளிதில் கிடைத்த காதல் அவனுக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. கையில் கிடைத்த காதலை கைவிடாது கைப்பற்றிக் காப்பாற்றி வைப்பதே  வாழ்க்கை அவனுக்கு கொடுக்கும் மிக பெரிய'டாஸ்க்'கானது.


கைப்பற்றிய காதலை பறிக்க,  தன் காதலியை தன்னிடமிருந்து பிரிக்க  கங்கணம் கட்டிக் கொண்டு தனக்கு தடையாய் நிற்கும்  பெரியம்மாவிடமிருந்து தன் காதலை காப்பாற்றி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு' எவ்வாறு செல்ல போகிறேன்? 'என்ற பயம் அவ்வப்போது மனதிற்குள் கிடைக்கும் சந்தோஷத்தையும் மீறி வெளியே வந்து விடுகிறது. 


காதலி, மனைவியாக அருகில் நிற்கும் போது கிடைக்கும் சுகத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் தடைக்கல்லாக இருக்கிறது அவன் செய்து கொடுத்த சத்தியம் . 'சத்தியம் 'தானே என்று அவனால் கடக்க முடியவில்லை. சிறுபிள்ளை போல 'சத்தியத்தை' நினைத்து கவலை கொண்டிருக்கிறான். 


காதலும் காதலியும் கிடைத்த பின்பும் அதை அனுபவிக்க முடியாத சோகத்தில் இருக்கிறான் சைத்து. உள்ளே  குடைச்சலாகிப் போனது அந்தச் சம்பவம்.

அவளை மட்டும் தனியாக புகைப்படம் எடுத்து பின் சைத்துவையும் அழைத்து தனியாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார்கள். பின் இருவரையும் சேர்த்து வைத்து எடுக்க, சரஸ்வதிக்காகவே அவனை ஒட்டி , உரசி கட்டிக் கொண்டு புகைப்படம் எடுக்க வைத்தாள் வைஷு. அங்கே ஒருவருக்கு  மட்டும் கோபம் கொப்பளித்து கொண்டு வந்தது. அதை அடக்க சிரமப் பட்டுக் கொண்டிருந்தார் சரஸ்வதி. 


அதன் பின் பந்தியில் அமர்ந்து சேர்ந்த உண்டு , மாறி மாறி உணவை ஊட்டிக் கொண்டு ஒருஜினல் காதலர்களையும் மிஞ்சினர் இருவரும்.


பின் வந்தவர்கள் சென்று விட, வரவேற்பு விழாவும்  முடிந்தது. மணமக்களை இருவரையும் சாந்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். 


இருவர் கையை விடாது பற்றிக் கொண்டு சேர்ந்தே வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தனர். மருமகளை விளக்கேற்றி கடவுளை வழிபட சொல்ல, அவளை தொடர்ந்து  அனைவரும் சேர்ந்து வழிபட்டனர். 


அன்றே நல்ல நேரம் பார்த்து முதல்  இரவை வைக்க பெரியவர்கள் முடிவு செய்து அதற்கு நேரமும் பார்த்தனர். 


'நடக்காததற்கு எதுக்கு நல்ல நேரம் பார்த்துட்டு? ' என்ற எண்ணத்திலும் அதை வாய்வழியாகவும் முணங்கிக் கொண்டிருந்தார்கள்  வைஷு, சைத்து, சரஸ்வதி. 


பெரிய மனுஷியாய் நின்று அவர் தான் பார்க்க வேண்டும் . ஆனால் அவர் தான் ஒதுங்கிக் கொண்டாரே ! இல்லை இல்லை ஒதுக்கி வைத்து விட்டனரே ! எதிலும் கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். ஆனால் அப்படியே இருந்தால் பரவாயில்லை வாயை விட்டு மாட்டிக் கொள்ளவா போகிறார்.


வைஷுவின் குடும்பம் கிளம்ப இருந்தனர். விஷ்ணுவை கட்டிக் கொண்டு நிமிரவே பெண்ணவள். அவள் தலையை வருடிய படி அக்கறையாக அறிவுரையாக நாலு வார்த்தை சொன்னார் மகிழ். அதை எல்லாம் தலையை அசைத்து கேட்டாலும் விஷ்ணுவை விட்டு விலக வில்லை .


மகளை பிரிய அவராலும் இயலவில்லை. கண்ணீர் வடிக்க இருவரது பாசம் யாருக்கும் புரியாமல் இல்லை. கண்ணை துடைத்துக் கொண்டு விலகியவள், அவர் முகம் பார்த்தாள். 


அவளது கண்ணீரை துடைத்தவர். "என் பொண்ணு ரொம்ப தைரியமானவளா ஆச்சே ! கண்ணீர் சிந்துட்டு நிக்கலாமா??  அப்பாக்கு நீ தைரியம் குடுப்பனு பார்த்தால், உனக்கு நான் கொடுக்க வேண்டியாதா இருக்கே ! மம்ம்... அழ கூடாது தைரியமா எதையும் ஃபேஸ் பண்ணு வைஷுமா. இது நீ தேர்ந்தெடுத்த  வாழ்க்கைனு உன்னை யாரும்  பிலேம் பண்ணாத அளவுக்கு நீ ஹாண்டில் பண்ணி கொண்டு போகணும். அப்ஸ் அண்ட டவுன்ஸ் இருக்கும். நல்லது கெட்டது எல்லாம் இருக்கும் இந்த வாழ்க்கையிலே. நீ பேலன்ஸா இருந்து பழகணும். எல்லாத்தையும் நன்மைக்கேனு  எடுத்து போயிட்டே இரு. என் மக மேல நிறைய நம்பிக்கை இருக்கு அத காப்பாத்துவானு நான் நம்புறேன்"எனவும் அதற்கும் தலையை அசைத்தாள்.


அருகே நின்ற எகாவை கண்டதும் வேகமாக கட்டிணைத்தாள். அவனும்  இறுக்க அணைத்துக் கொண்டான். அங்கிருப்பவர்கள் யாருக்கும் விரசமாகத் தெரியவில்லை சரஸ்வதியை தவிர, அவர் மட்டும் தான் அவர்கள்  கட்டியணைத்து இருபதை கண்டு முகத்தை சுழித்தார்.



"உறவுகளோட எண்ணிக்கை கூடிட்டே இருந்தாலும். நம்ம உறவு எப்பவும் மாறாது வைஷு. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிருந்தாலும் நமக்குள்ள இருக்க அன்பு , நட்பு , பாசம் எதுவும் மாறாது. உனக்கு ஒண்ணுனா கண்டிப்பா நான் வருவேன். எப்பையும் எந்த நேரத்திலும். எனக்குனு பெரிய குடும்பம் வந்தாலும் உனக்குனு ஒரு குடும்பம் வந்தாலும். நமக்குள்ளே அது எதுவும்  இல்ல... தயங்கி தயங்கி நிக்காம, எப்பவும் போல என்னை உன் எகாவா மட்டுமா பார். அதுல எந்த மாற்றமும் இல்லை புரியதா ?" எனக் கேட்கவும் தலையை அசைத்து கண்ணீரை துடைக்க அவள் நெற்றியில் முத்தம் வைத்தான். 


"ரெண்டுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி நினைப்பு இருக்கா ! கட்டிக்கிட்டும் முத்தம் கொடுத்துக்கிட்டு நிக்குதுங்க. இத பெத்தவங்களுக்கு வேடிக்கை பார்க்குதுங்க... என்ன குடும்பமோ !"என்று முனங்க, 


"எல்லாம் நல்ல குடும்பம் தான். ஆனா  பார்க்கற உன் விதம் சரியில்ல சரஸ்வதி. அதுக மனுசுல சின்ன நெருடலும் இல்ல குழந்தைங்கல இருந்து ஒன்னா வளர்ந்ததுங்க. பிரிவை  நினைச்சி பீல் பண்ணுதுங்க... அந்த இடத்தில ஒரு பொண்ணு இருந்திருந்தால் நீ பெருசா எடுத்திருக்க மாட்ட, பையனா இருக்க போய் நீ தவறாக எடுத்துக்கற... இன்னும் பழைய காலத்துலே இருக்காத  சரஸ்வதி கொஞ்சமாச்சி  அப்டேட் ஆகு"என பிரபு சொல்ல அவரை முறைத்து விட்டு  திரும்பிக் கொண்டார். 


மீண்டும் ஒரு பாசம் போராட்டத்துக்கு பின் அவர்கள் சென்று விட, நல்ல நேரம் நெருங்கவும் வைஷுவை ஸ்ருதி அலங்கரித்தாள்.  அவள் அலங்கரிக்கும் நேரத்திலே இருவரும் தோழியாகிக் கொண்டனர். ஸ்ருதி தன் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பகிர்ந்தாள். அவர்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என அத்தனையும் இருவரும் மாறி மாறி கேட்டு தெரிந்து கொண்டனர்.


சாந்தி வர, மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள் வைஷு. 'அழகு'என நெற்றி முறித்தார். 


"என் பையன் கொஞ்சம் அப்படி இப்படினு விளையாட்டு தனமாவும் கொஞ்சம் திமிராவும் இருப்பான். ஆனா மத்தபடி ரொம்ப நல்லவன் மா. அவன் நல்லவன்றனால  , அவன் திமிரா  இருக்கான்  நீ அட்ஜஸ்ட் பண்ணி போனு எல்லாம் சொல்ல மாட்டேன் டா. நீ அவன் கிட்ட எப்படி வேணா நடந்துக்கோ ! ஆனா அது உங்களுக்குள்ளே இருக்கட்டும் வெளியே காட்டிக்க வேண்டாம் டா... என்னா அதை பெருசாக்கவே இங்க காத்துட்டு இருப்பாங்க... அவங்க வாயில விழ வேண்டாம் தான் டா அத்தை  சொல்றேன். இது உங்க வாழ்க்கை எங்க அட்வைஸ் இருக்கலாம். எங்க தலையீடல் இருக்கக் கூடாது நான் நினைக்கறேன்... உனக்கு புருஞ்சிருக்கும் நினைக்கிறேன் டா"என்று இழுத்தார்.


"ப்பா ! இப்படி ஒரு மாமியாரா எனக்கு ! ஆச்சர்யமா  இருக்கே. அந்த கிர்ஞ்சி ஆண்ட்டிக்கு தங்கச்சியா நீங்க !  உங்களை போல மெட்ஜூர்ட் மாமியாரெல்லாம் பார்கிறது கஷ்டம். கிடைக்கறதும் கஷ்டம்... நான் ரியலி லக்கி.. நான் பார்த்துகிறேன் அத்தை யூ டோன்ட் வொர்ரி" என்றாள்.

"சமத்து... "என்று மீண்டும்  நெற்றி முறுக்கினார். அவளும் அவரை அணைத்துக் கொண்டாள். 


"போதும் போதும் உங்க மாமியார் மருமகள் பாசம்... பொறுமையா இருக்கல"முகத்தை சுருக்கி கொண்டு ஸ்ருதி சொல்ல, "நீயும் தாண்டி என் மருமக"அவளை அணைத்துக் கொண்டு விட்டார்.வைஷுவை அழைத்துக் கொண்டு சைத்து அறையில் விட்டு விட்டு வந்தனர். 


அறையில் அவள் மட்டுமே இருந்தாள். சைத்து இன்னும் அறைக்கு வந்திருக்க வில்லை. அறைக்குள் வந்தவள் உள்ளே அவனது அறையை சுற்றிப் பார்த்தாள்.


இங்கு அவனோ கடுப்பாக நின்றிருந்தான். சரஸ்வதி அவனை தனியாக அழைத்து, செய்து கொடுத்த சத்தியத்தை அவனுக்கு நினைவு படுத்திக் கொண்டிருந்தார்.  


"சைத்து கண்ணா ! அம்மா உன்னை நம்புறேன். நீ எனக்கு செஞ்சா சத்தியத்தை மீற மாட்ட தான். ஆனா, அந்த சண்டாலி என்ன செய்ய காத்திருக்காளோ ! அதுக்கெல்லாம் மசிஞ்சிடாத கண்ணா ! இப்பவும் சொல்றேன் அந்த  பொண்ணு உனக்கு வேணாம்... சீக்கிரமா எதாவது பண்ணி அவளை உன் வாழ்க்கையிலிருந்து துரத்தி விடணும். அதான் எனக்கு வேணும். நான் சொல்றது புரியுதுல சைத்து கண்ணா ! உன் நல்லது தான் சொல்றேன்" என்று கன்னத்தை தொட்டு அவனுக்காக அனுதாப பட்டு பேச, 


பல்லைகடித்துப் பொறுமை காத்தவன் சிரித்துக் கொண்டே" நான் பார்த்துகிறேன் பெரியம்மா ! நீங்க கவலை படாதீங்க"என்று அங்கிருந்து தன் அறையை நோக்கிச் சென்றான். 


தன் அறைக்குள் நுழைய அங்கே அவனது புகைப்படங்களை பார்த்தபடி நின்றிருந்தாள் வைஷு. கதவை தாழிட்டு அவள் பின்னால் வந்து நின்றான். அதை கூட உணராது அவனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பார்த்து நின்றாள். அதில் அவள் ஆடியப் படி இருந்தது.  


"அது ஃபிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது ஒரு டான்ஸ் காம்பிடிசன்ல ஆடும் போது எடுத்தது"என்று விளக்கம் கொடுக்க, பயந்து சட்டென திரும்பி மேசையில் மோதி நின்றாள். 


"ஸாரி, பயந்திட்டியா? நான் வந்தத கூட கவனிக்காம பார்த்துட்டே இருந்தியா? அதான் என்ன பார்த்துட்டு இருந்தனு பார்க்க வந்தேன்... ஏன் இந்த போட்டோவ மட்டும் குறுகுறுனு பார்த்துட்டு இருந்த?"தன் சந்தேகத்தை கேட்டான்.


"எல்லாத்தையும் விட இதுல ரொம்ப கியூட்டா, கன்னம் வச்சு அழகா இருந்த அதான் பார்த்துட்டு இருந்தேன்"என்றாள். 


"ஓ..  இப்பையும் அதே கியூட்டோட கொஞ்சம் கன்னம் வச்சு கொஞ்சம் மீசை தாடினு வச்சு அதே அழகோட நிக்கும் என்னையும் சேர்த்து  ரசிக்கலாமே !"என்று தன் தாடையை  தேய்த்தபடி சொன்னவனை கண்கள் சுருக்கிப் பார்த்தவள், "அதுக்கென்ன ரசிச்சிட்டா  போச்சி ! "என்றவள் அவன் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் நின்றாள். 


விழிகள் நான்கும் அதன் பாஷையில் பேசிக் கொள்ள, அறை  முழுதும் மௌன பாஷை பேசியது. நேரம் மறந்து நின்றவர்கள் அலைபேசி ஓசையில் நினைவுற்கு வந்தனர். அதன் பின்  ஒருவரை ஒருவர் பார்க்கத் தயங்கி, இரு திசையைப் பார்த்து அமளியின் ஓரத்தில் அமர்ந்து கொண்டனர். 


யார் முதலில் பேசுவது என்ற போட்டி அமைதியாக உள்ளுக்குள் நடந்துக் கொண்டிருந்தது. நான்கு சுவர்களும் அங்கு நிறைந்த பொருட்களும் ஆர்வமாக அவர்களை கவனித்துக் கொண்டிருந்தன. 


'அமைதி 'என்றால் என்ன எனக்கு கேட்கும் வைஷுவிற்கு அமைதியின்  அகராதி என்று பெயர் சூட்டி விடலாம். அப்படி ஒரு அமைதி. 


முதலில் இறங்கி வந்தான் சைத்து.  கைகளை தூக்கி முறித்தவன்"ரொம்ப டயர்டா இருக்கு.. தூங்கலாமா??"எனக் கேட்டான். 


பட்டென திரும்பி"ஏது தூங்கலாமாவா???"அதிர்ச்சியாக கேட்க அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது வாய்க்குள் சிரிப்பை அடக்கினான். 


"தூங்க வேணாம்னா வேற என்ன பண்ணலாம் ???"என ஹஸ்கி வாய்ஸில் கிறங்கலாக கேட்க, அவளது அடி வயிற்றில் இதுவரை உணராத புது உணர்வை உணர்ந்தாள். 


"இ... இல்ல... பேசிட்டு இருக்கலாம்னு"என்றாள் கொஞ்சம் திணறி. 


"ஓ... பேசலாமே ! நீயே பேசு நான் கேக்குறேன்"என்றான் சாதாரணமாக, அவள் அவன் புறம் திரும்பி, "உனக்கு என் கிட்ட சொல்ல எதுவும் இல்லையா???"என சட்டென கேட்டு விட்டான்.


"இது வரைக்கும் இல்ல ! இனி இருக்கலாம். உனக்கு இருந்தால் சொல்லு கேட்கிறேன்"என்றான் தலையனையை மடியில் வைத்து கன்னத்தில் கைவைத்து கொண்டு கேட்டான். 


'இவன் என்னை காதலிக்கிறான்  தானே ! ஆனா வாய தொறந்து சொல்ல மாட்டிக்கிறான்... ஒரு வேள சப்ரைஸ்ஸா சொல்லுவானா ! ஆனா இவனா பார்த்தா லவ் சொல்றது போல இல்லையே? என்னவா இருக்கும் ஒன்னும் புரியலையே 'என அவன் முகம் பார்த்து யோசனையில் மூழ்க, அவனோ சொடக்கிட்டு அவளை நினைவுக்கு கொண்டு வந்தான்.


"என்னை யோசனை??? "


"ஒண்ணுமில்ல... எனக்கு தூக்கம் வருது நான் தூங்கறேன்"என்றாள் "பேசணும் சொன்ன !"


"இல்ல டயர்டா இருக்கு தூக்கம் வருது "என்று படுத்துக் கொண்டாள். 


'என்ன கேட்க நினைச்சிருப்பா?' என அவனும் எண்ணிக் கொண்டு படுத்துக் கொண்டான். சிறு இடைவெளி விட்டு இருவரும் படுத்துறங்கி விட்டனர்.


மறுநாள் அவள் தான் முதலில் எழுந்தது. அறையை நோட்டம் விட்டவள் சட்டென எழுந்து அமர்ந்து பின்னே தனக்கு கல்யாணமானதும் புகுந்த வீட்டில் இருக்கும் உண்மையும் உணர, கசப்புடன் சிரித்து விட்டு குளிக்கச் சென்றாள். 


சுடி ஒன்றை அணிந்து தலையை துவற்றி படி வந்தவள், கொஞ்சம் மீசை கொஞ்சம் தாடி வைத்து உறங்கும் குழந்தையை ரசித்தவள், 'சைல்ட் சைக்கோ'என முணங்கி கொண்டு வெளியே செல்ல கதவை திறந்தாள். 

அங்கே சரஸ்வதி அவர்களை அறையை நோட்டம் விட்டபடி கூடத்தில் அமர்ந்திருப்பதை கண்டு விட்டாள்.  மீண்டும் கதவை அடைத்து விட்டு நின்று யோசித்தாள். 


வேகமாக தனது மேக்கப் செட்டிலிருந்து உதட்டு சாயத்தை எடுத்து  உதட்டில் பூசிக் கொண்டவள், அவனருகே சென்றாள். முதலில் முத்தம் வைக்க தயங்கினாள். பின் தைரியத்தை வரவழைத்து கொண்டு நெற்றி  கழுத்து  கன்னம் என முத்தம் வைத்தாள். அவனோ மெல்ல அசைந்தான். 


வேகமாக எழுந்தவள் உதட்டு சாயத்தை நன்கு துடைத்துவிட்டு வெளியே வந்தாள். 

சரியாக சரஸ்வதியும் சாந்தியும் சமையலறையிலிருந்து அறையிலிருந்தும் வெளியே வந்தனர். 


சரஸ்வதியை  ஓரக்கண்ணால் பார்த்தப்படி சாந்தி காலில் விழுந்தவள், "அத்தை, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க"என்றாள் எந்தப் படத்தை பார்த்து அவர் காலில் விழுந்தாளோ கடவுளுக்கே வெளிச்சம்.


"நல்லா இருடா ! என்ன திடீர்னு???"என கேட்க, "இல்ல நேத்தே எங்க லைப்பை ஸ்டார்ட் பண்ணிட்டோம். அதான் உங்க கிட்ட பிளஸ்ஸிங் வாங்கலாம்னு"என வெட்கப் பட, அவரும் புரிந்து கொண்டு மனதார வாழ்த்தினார். அவள் சொல்வதை கேட்க சரஸ்வதி அதிர்ந்து போனார். 'நேத்து அவ்வளவு சொன்னே ! எப்படி நடந்துருக்கும். ஒருவேள இவ எதுவும்...'யோசிக்கும் போதே 

சரஸ்வதியிடம் வந்தவள், 


"பெரிய அத்தை  நீங்களும் ஆசிர்வாதம் பண்ணுங்க"என்று காலில் விழ, தலையில் கைவைத்து ஆசிர்வதித்து அவளை எழ சொன்னவர் அவளை குறுகுறுவென பார்த்தார்."என்னத்த பொய் சொல்றேன் நினைக்கறீங்களா?? நம்பலேனா உங்க புள்ளை வருவான் ஸாரி வருவாரு கேட்டுக்கோங்க.."என நக்கலாகச் சொல்லிவிட்டு  சாந்தியிடம் வந்து காஃபி கேட்க அவளை கையோடு சமையலறைக்கு அழைத்து சென்றார். 


சரஸ்வதியோ குழம்பி போய் இருக்க அவரை  மேலும் குழப்ப, சைத்துவும் பழக்க தோஷத்தில் அப்படியே எழுந்து வந்தான்.  அவனை கண்டதுமே அதிர்ந்து போனார். அவனது நெற்றி, கன்னம்,  கழுத்து என அவள் உதட்டின் அச்சிருக்க, அவ்வளவு தான் அவரது நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் கண்டது.


சனா கல்லூரிக்கு செல்வதற்காக தயாராகி வெளியே வந்தவள் சைத்துவை கண்டதும் தலையில் அடித்து, "டேய் அண்ணா வயசு பொண்ண வச்சிட்டு நீ பண்ற கூத்து இருக்கே ! ச்ச" என்று பல்லைக் கடித்தவள்" அம்மா உன் புள்ளையோட லட்சணத்த வந்து பாரேன்"என கத்தினாள்.


அவர்கள் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். அவன் முகத்தை கண்டு அவள் சிரிப்பை அடக்க, அவரோ வெட்கம் கொண்டார்.

"உனக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன் சைத்து.  தூங்கி எழுந்ததும் முகத்தை  கழுவிட்டு வாடானு. அப்படியே வந்து நிக்கற, போடா  போய் முகத்தை கழுவிட்டு வா !" அதட்டியவர் "அசிங்க படுத்திட்டு இருக்கான்"என்று முணங்கினார். 


அவனும் புரியாமல் அறைக்குள் சென்றவன் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான். அடுத்த நொடி "வைஷுஉஉஉ"என கத்த வேகமாக அறைக்குள் வந்தவள் அவனை பார்த்ததும் வாய்விட்டே சிரித்துவிட்டாள்.


"ஸ்டாப்பிட் வைஷு  என்ன பண்ணி வச்சிருக்க நீ???எதுக்குடி இப்படி எல்லாம் பண்ண??" என சீற்றத்துடன் கேட்டான்.


"பின்ன, உங்க பெரியம்மாவை பழிவாங்க வேணாமா. அதான் நேரம் கடத்தாம வந்த அடுத்த நாளிலே என் வேலைய ஆரம்பிச்சிட்டேன்... இந்நேரம் உன் பெரியம்மா சும்மா தகதகனு கொதிச்சி போய் இருப்பாங்க. கிட்ட போயிடாத சாம்பலாயிடுவா "என்றாள் நக்கலாக


"உனக்கு கொழுப்புடி. நீ பழிவாங்க நான் ஆளா !  என்னை வச்சு தான் அவங்களை பழிவாங்கணுமா? என்  மானமே போச்சிடி உன்னால !"என்றான் சாயத்தை அழித்தப்படி. 


"உன்னை வச்சு தானே வந்தேன்... அதான் உன்னை வச்சே  என் கேம் ஸ்டார்ட் பண்ணினேன் "என்றாள் வந்த சிரிப்பை அடக்கி. அவளை முறைத்து விட்டு கண்ணாடியைப் பார்த்தவன்"ஆமா எப்படி இத பண்ண? "என சந்தேகத்தை கேட்டான். 


"லிப்ஸ்டிக் கொஞ்சம் அதிகமா போட்டு அழுத்தமா முத்தம் கொடுத்தேன் ! "என சொல்ல, அவளை அதிர்ந்து பார்த்தான். அவளோ வெட்கத்தில் தலை குனிந்தாள். 

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2