இதயம் - 36

 

இதயம் - 36

மண்டபத்திற்கு செல்ல வேண்டிய நல்ல நேரம் இன்னும் வராது இருப்பதால் தன் அறையில் தயாராகி, அலைபேசியில் வரும் வாழ்த்துக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷு. அவளுக்கு துணையாக வஸ்தியும் உடன் இருந்தாள்.


அவள் அவளுக்கு வேண்டியதை  எல்லாம்  பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். மேக்கப் ஆர்டிஸ்ட்டும் வஸ்தியும் தான் அவளை தயார் செய்தனர்.  அவளை அலங்காரிக்க வந்தவர்கள் சென்று விட, வஸ்தியே அவளுக்கு டச்சப்பாகிப் போனாள்.


இருவரும் அறையில் பேசி சிரித்துக்  கொண்டிருந்தனர். கதவைத் தட்டி உள்ளே வர அனுமதிக் கேட்டான் எகாந்த். 


வஸ்தியும்"வா காந்த்" என்றாள். உள்ள வந்த எகா, வஸ்தியிடம் "அவளுக்கு தேவையானத எடுத்து வச்சிட்டாளானு அத்தை கேட்கச் சொன்னாங்க. அவளுக்கு எதாவது தேவைப் படுதுனா  சொல்ல சொல்லு இப்போவே வாங்கிடலாம்னு அத்தை சொன்னாங்க..."என்று படப்படவென பேசிவிட்டு "எதுனாலும் போன் பண்ணு"என்று வேகமாக வெளியே செல்ல இருந்தவனை தடுக்க வைஷுவோ கதவை அடைத்து அதில் சாய்ந்து இருந்தாள்.


அவள் கதவை அடைத்ததும் பயந்து போனான் எகா. "என்ன மாமஸ் எனக்கு என்ன தேவைன்னு என் கிட்ட தான கேட்கணும்? அவ கிட்ட கேட்கற? சரி எனக்கு என்ன தேவைனு சொல்றதுகுள்ள கிளம்பினா எப்படி? இருந்து கேட்டுட்டு போ !" என்றாள் நக்கலாக.


"எனக்கு வேலை இருக்கு வைஷு நான் போகணும்... வழி விடு !"என்றான் அவளை பாராமல் எங்கோ பார்த்து .

"ஓ... உனக்கு  என்னை விட வேலை தான் முக்கியமா போச்சில எகா !"எனும் போதே குரல் தழுதழுக்க, அவனும் கலங்கும் கண்ணை மறைத்தவாக்கில்"வேலை இருக்கு வைஷு விடேன்"என்றான் கெஞ்சியபடி.


"உனக்கு பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிகிட்டதால என்னையும் உனக்கு பிடிக்காம போச்சா ! முகம் கொடுத்து கூட பேச மாட்ற ஏன் எகா ? நான் உன்னை விட்டுட்டுப் போறேன் உனக்கு கொஞ்சம் கூட பீலிங்ஸ் இல்லையா??? நான் உன்னை விட்டு போறத நினைச்சி ஃபீல் பண்றேன். ஆனா உனக்கு அந்த பிலிங் இல்லையா???" எனக் கேட்டவளை அடுத்த நொடி காற்று போகாத அளவிற்கு கட்டியணைத்திருந்தான் எகா.


"உன்னை யாருக்கும் கொடுக்க எனக்கு இஷ்டம் இல்ல வைஷு ! நீ என் கூடவே இருந்துடேன் கேட்க தோணுதுடி. ஏன் நம்ம ரெண்டு பேரும் வளர்ந்தோம் இருக்குமா? சின்ன வயசில இருந்தது போல நம்மலால ஒன்னா இருக்க முடியாதா? நீ இன்னொரு வீட்டுக்கு போய் தான் ஆகணுமா???நீ என் கூடவே இருந்துடேன் வைஷு. வேலை வேலைனு சொல்லி உன்னை அவாய்ட் பண்ண  காரணம் இதான்டி , எங்க உன்னை பார்த்தா குழந்தை மாதிரி உன் சேலை பிடிச்சிட்டு போகாதனு சொல்லிடுவேனோனு பயமா இருந்தது.   அதான் உன்னை பார்க்காம அவாய்ட் பண்ணினேன் வைஷு.  அம்மா அப்பா பாசத்தை எல்லாம் உன் அன்புல தான்டி பார்த்தேன். சொல்லபோனா  நீ தான் எனக்கு'அம்மா '.  குழந்தைய விட்டு அம்மா போனா எந்த குழந்தையால தான் ஏத்துக்க முடியும் முடியாதுலடி... என்னை விட்டுப் போகாதனு கதறி அழணும் தோணுது. உன்னை எவ்வளவு அவாய்ட் பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணினேன். ஆனா முடியலடி ராட்சசி ! உன்கிட்ட பேசாம இருக்க முடியல இதுல எப்படி உன்னை விட்டு இருக்க போறேனோ ! "அவளை அணைத்துக் கொண்டு அழுதான்.. ஒரு ஆண் ' பிரிவை'  எண்ணி அழக் காரணம்  அவனது அன்னை , மனைவியின் இறப்பு மகள் புகந்த வீட்டுற்கு செல்வது. காதலி , தோழியின் பிரிவிற்காக மட்டுமே


ஒன்றாக இருந்த இரட்டையர் பிரிவது போல இருந்தது . வைஷுவின் தோளை கண்ணீரால் நனைத்தான். கணவனின் குழந்தை மனதை அறியாதவளா  வஸ்தி! எகாவின் அன்பை கண்டு சிலர்த்து அடங்கியது தேகம்... அவர்கள் பாசப் போராட்டத்தை கண்ணீரும் சிரிப்புமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் வஸ்தி.


"நான் சொல்ல வேண்டியதை நீயே சொல்லிட்ட எகா ! இனி நான் என்ன சொல்வேன். ஐ மிஸ் யூடா ! நான் போன் பண்ணினா உடனே எடுக்கற. நான் கூப்பிட்டா உடனே வந்து நிக்கற. சாக்கு சொன்னே வந்து வெட்டுவேன். நாம ரெண்டு பேரும் வேற வேற இடத்தில் இருந்தாலும் நம்ம மனசு நம்மலை தேடி நினைக்க வச்சிட்டே இருக்கும்... அம்மா,  அப்பா ,வஸ்திய பார்த்துக்க... சீக்கிரமா குட்டி வஸ்தியோ , இல்ல குட்டி எகாவையோ ரிலீஸ் பண்ணுங்கசித்தியாக வெயிடங்க் காய்ஸ்..."அவனது முதுகை வருடிய படி சொன்னாள்.


இருவரும் பிரிந்தனர்.  வைஷு நெற்றி முட்டி அங்கே இதழை பதித்தான். "உன்னோட வாழ்க்கை போராட்டத்துல நண்பனா ! உன் கூட எப்பையும் இருப்பேன் வைஷு. எதுனாலும் மறைக்காம சொல்லு நான் உனக்கு துணையா இருப்பேன். இஸ் ஆ ப்ரோமிஸ்டி..."என்றான் மூக்கை தட்டிவிட்ட படி. அவளும் அவ்வாறு செய்தாள். பின் அருகே நின்ற வஸ்தியின் அருகே வந்தவள், அவளையும் இறுக்க  அணைத்துவிட்டு"இங்க இருக்க முணு பெரிய சைஸ் குழந்தைய உன் பொறுப்புல விட்டுப்போறேன் வஸ்தி. நீ தான் பார்த்துக்கணும்... கொஞ்சம் பெரிய பொறுப்பு தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ! நீயும் என்னை மறந்திடாத ! தினமும் போன் பண்ணி இந்த குழந்தைங்க பண்ற சேட்டைய சொல்லு ! நான் காத்துட்டு   இருப்பேன்..."என்றாள் கண்ணீரோடு


அவள் கண்ணீரை துடைத்தபடி" இந்த மூணு குழந்தைகளை பார்த்துக்க வேண்டியது என் கடமை வைஷு. அதை சரியா செய்வேன்டி.  உன் கிட்டையும் மணிகணக்கா பேசறேன்.அப்றம் வைஷு அங்க இருக்க மனசங்க எல்லாரும் நல்லவங்க தான். சரஸ்வதி அத்தையை தவிர... பெரிய அத்தையை தவிர மத்த யாரையும் ஹர்ட் பண்ணிடாத ப்ளீஸ்... சைத்து கூட நீ சந்தோசமா வாழ்ந்தாலே போதும் வைஷு மா !  உனக்கு சொல்ல தேவை இல்லை. இருந்தாலும் அதுவும் உன் குடும்பம் பார்த்துக்கோ "என்றாள். 


"உங்க அத்தைக்கு மட்டும் தான் பாடம் எடுக்கணும்... மத்த படி எல்லாரும் எனக்கு பிரண்ட்ஸ் தான். ஸோ நான் பார்த்துகிறேன்" என்றாள். இருவரும் அவளை வெளியே அழைத்து வர. சொந்தங்களோடு முழ்கி இருந்த மகிழும் விஷ்ணுவும் மகளை கண்டு வியந்தனர். 


வியப்பு ஒரு பக்கமும்  பிரிவின்  துயரம் ஒரு பக்கமென கண்களை நீரால் நிரப்பீன... மகளை தழுவி கொஞ்சி, மகிழ்ந்து அழுதனர். வழக்கமாக தாயின் அறிவுரையும் தந்தையின் அக்கறை வார்த்தைக்கும் தலையாட்டி முத்தம் வைத்து அந்த தருணத்தை அழகாக்கினர். 

நல்ல நேரம் வர மண்டபத்திற்கு விரைந்தனர்.

*****


ஒரு ஜீவனை, தவிர இப்போ பிறந்த குட்டி வரைக்கும் வரவேற்பு  விழாவிற்கு குதூகலத்துடன் கிளம்பினார்கள். சைத்துவை கையில் பிடிக்க முடியவில்லை. வெளியே தன்னை போல' உணர்ச்சியற்ற மனிதனை' எங்கும் காணோம் என்பது போல இருந்துக் கொண்டு உள்ளே 'உணர்ச்சி கடலாய் 'உள்ளுக்குள் வைஷுவின் வரவுக்காக் காத்திருக்கிறான். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் நல்ல நேரத்தில் மண்டபத்தை வந்து சேர்ந்தனர். 


சைத்து வந்ததும் அவனை ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். மாப்பிள்ளை தோரணையில் வந்தவன் முன்னே அவனது ஆடல் குழுவினர் ஆடிக் கொண்டே மேடை வரை வரவேற்றனர்.  மேடையில் அவன்  ஏறி மணமகளுக்காக காத்திருக்க, அடுத்த காரிலே மணமகள் வந்து இறங்க அவளை அதே முறையில் வரவேற்றனர். 


சைத்து மேடையிலிருந்து நின்று வைஷுவின் வருகையை அப்பட்டமாக ரசித்தான். அவளையும் ஆடல் குழுவினர் ஆடிய பாடி வரவேற்று மேடையில்  விட சைத்துவின் பக்கத்தில் வந்து நின்றாள்.


கண்களும் அவனுக்கு துரோகம்  செய்தபடி அவள் மேல் வைத்தக் கண்ணை எடுக்க முடியாமல் கொஞ்சம் திணறி போனான் அவள் அருகில் நின்று. அவன் பார்வையை உணர்ந்தவளோ உள்ளுக்குள் எழுந்த குறுகுறுப்பை மறைத்துவிட்டு அவனிடம்


"மிஸஸ். வைஷு இன்னும் ஃபிப்டி இயர்ஸ்க்கு நான் உங்க கூட இருக்கப் போறேன். நாம அவ்வளவு வருஷம் சேர்ந்து வாழத் தான் போறோம். அதுனால என்னை இப்படி திங்கற மாதிரி பார்க்கறத நிறுத்திருங்களா  கொஞ்சம்???" வந்தவர்களை கண்டு வணக்கம் வைத்தபடி சொன்னாள். அதை கேட்ட அவனோ அவள் புறம் நன்றாகத் திரும்பி அவள் காது மடல் கூச, 


"மிஸஸ். சைத்து. அந்தப் ஃபிப்டி இயர்ஸ் வருமோ வராதோ ! அதை நம்பி நான், இப்போ கிடைச்ச இந்த நொடியையும்  நிமிஷத்தையும் இழக்க முடியாது. இப்போ  நீ என் பக்கத்தில இருக்கிறது கற்பனையோ இல்ல முடிந்து போன நினைவோ இல்ல நிஜம். அந்த மொமெண்ட்  ரசித்து அனுபவிக்காம வர போற ஃபிப்டி இயர்ஸ்ல பார்த்துக்கலாம் நினைக்கற சாதாரண மனுஷன் நான் இல்ல. நான் சைத்து. தி கிரேட் சைக்கோ ! என்றான் கிறக்கமாக


அவளோ முகம் விகசிக்க, அவனை விழியகற்றாது பார்த்தாள். அவள் தன்னை பார்ப்பதை அறிந்தவன் அவள் புறம் திரும்பி. "என்ன  வைஷு உனக்கும் இந்த மொமெண்ட என்ஜாய் பண்ணிக்க தோணுதா? "என புருவம் உயர்த்தி கேட்க சட்டென அவன் முகத்திலிருந்து விழிகளை திருப்பி வேறெங்கோ வைத்தாள். 


அவர்களது ஜோடி பொருத்ததை கண்டு வியக்காதோர் யாருமில்லை. சரஸ்வதியின் காது படவே சிலர்பேசி அவரது வயிற்று பகுதி கருகி விடுமளவுக்கு புகைச்சலை ஏற்படுத்தி விட்டு சென்றனர்.


இருவரது பெற்றோர்களும் மணமக்களின் ஜோடி பொருத்தத்தை கண்டு நெற்றி முறுக்கினார்கள். எகாவின் பார்வை சைத்துவை  தான் வண்டமடித்தது.  காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களை போல அப்படி ஒரு நெருக்கம் இருவரிடையே ! 


அன்று யாருக்கோ விருந்தென்று மேடையில் விருப்பமின்றி முகத்தை தூக்கிவைத்து  நின்றவன். இன்று ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கும் காதல் ஆசாமியாகத் தெரிந்தான். அவன் கண்ணில் வழியும் காதலுக்கும் திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. 'ஒரு வேள உண்மையாவே அவன் வைஷுவ லவ் பண்றானோ ? என்னால நம்ப முடியலேயே !' தனக்குள் சொல்லிக் கொண்டான் எகாந்த்


வரவேற்பு  விழாவிற்கு நீலகண்டனும் வதனாவும் வந்தனர். நவநீதன் வர வில்லை. அவன் மாற்றம் வேண்டி வெளியூர் சென்று விட்டான். இவர்களை விஷ்ணு அழைக்க நட்பு ரீதியாக வந்தனர். 


இருவரையும் வாழ்த்திவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டுச் செல்லவிருந்த வேளையில் வைஷுவின் அருகே வந்து தலையை வருடி விட்டு ஆசிர்வாதம்  செய்துவிட்டுப் போனார் வதனா. அவளும் அவரை சிரிப்புடன் பார்த்தாள். 


வதனாவும் நீலகண்டன் செல்வதைப் பார்த்த சரஸ்வதி அவரிடம் பேசச் சென்றார் . 'வதனா' என சரஸ்வதி அழைக்க, திரும்பி  யாரென்று பார்த்த வதனா, சரஸ்வதியை கண்டதும் கோபம் கொண்டு வேகமாக  முன்னே நடந்தார்.  அவரை வழி மறித்த சரஸ்வதி "ப்ளீஸ் வதனா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்"என்க, நீலகண்டன் முன்னே சென்றுவிட்டார்.


"என்ன சொல்ல போற இதுக்கும் எனக்கும் எந்த சமபந்தமும் இல்ல. எல்லாத்துக்கும் காரணம் வைஷு தான் சொல்ல போறீயா?" எனவும் அவர் "உண்மை அதான் வதனா. எனக்கு அவளை மருமகளாக்க  இஷ்டமே இல்ல... நான் சைத்து கிட்ட அவ வேணாம்னு சொல்லிப் பார்த்துட்டேன். அவ சொல்லி அவசர பட்டு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணிட்டான். இல்லேன்னா அந்த சனியன அப்பவே தொலைச்சு காட்டிருப்பேன்"என்று அப்பவும் வைஷுவை திட்ட, 


"போதும் நிறுத்து.  வைஷுவை பத்தி தப்பா பேசாத. உனக்கு அவளை பிடிக்கலேனா அந்தப் பொண்ணு தப்பான பொண்ணுனு அர்த்தமா? உன் பேச்சை கேட்டு அந்தப் பொண்ணை தப்பா நினைச்சி, அவளை என் வீட்டுக்கு மருமகளாக்க கூடாது  நினைச்சிட்டேன்.  ஆனா, இப்போ பீல் பண்ணிட்டு இருக்கேன். இப்படி ஒரு நல்ல பொண்ணு மருமகளா கிடைக்க புண்ணியம் பண்ணிருக்கணும். நீ என்ன புண்ணியம் பண்ணியோ அந்தப் பொண்ணு உனக்கு மருமகளாக கிடைச்சிருக்கு. அந்த பொண்ண நல்லா வச்சிக்க. வன்மம் அது இது சொல்லி நல்ல பொண்ண இழந்திடாத !நான் வரேன்"என்று கோபத்திலும் நாலு வார்த்தை நல்லதாகவே பேசி சென்றார் வதனா.  அதெல்லாம் கேட்டு அவர் திருந்தி விட்டால் தான் அதிசயம். அவரோ வன்மத்தை மேலும் கூட்டி கோபம் கொண்டு மணமகள் அறைக்குள் நுழைந்ததை எல்லாம் மேடையில் இருந்து பார்த்துக் கொண்டு தானிருந்தாள் வைஷு.


இவளும் சைத்துவிடம் சொல்லிக் கொண்டு மேடையிலிருந்து  அருகே இருக்கும் மணமகள் அறைக்குள் நுழைந்தாள். அங்கே சரஸ்வதி மட்டும் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார் . 


"என்ன பெரிய மாமியாரே அதுக்குள்ள தலைவலி வந்திடுச்சா? இன்னும் பார்க்க வேண்டியது நிறையா இருக்கே ! அதுக்குள்ள தலைவலினு  உட்கார்ந்துட்டீங்க.. "என அவர்  அருகில்  வந்து நின்றவளை பார்த்து முறைத்தவர்"உனக்கு என்ன வேணும் எதுக்கு இப்போ இங்க வந்து தொந்தரவு செய்ற??"


"என்ன பெரிய மாமியாரே நீங்க ! தலைவலில இருக்கும் போது என்ன ஏதுன்னு கேட்காம எப்படி இருக்கிறது  மாமியாரே?"பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, அவரோ அவளை மேலிருந்து கீழ் வரைக்கும் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.


"என்ன மாமியார் உங்க கல்லூரித் தோழி என்ன சொல்லிட்டு போறாங்க...?" என்றதும் விழுக்கென அவளை நிமிர்ந்து பார்த்தார். 


"மாமியாரே எனக்கு எதுவும் தெரியாது நினைச்சிட்டீங்களா? எல்லாம் தெரியும். உங்களுக்கு ஒன்னு தெரியுமா மாமியாரே ! முற்பகல் செயின் பிற்பகல் விளையும் சொல்லுவாங்களே அதுபோல் தான் நீங்க எனக்கு செஞ்சீங்க, ஆனா பாருங்க கடவுள் உங்க புள்ளை கல்யாணத்துல வச்சு செஞ்சிட்டார். 


ஆனா இன்னொன்னும் இருக்கு.  இன்னார் செய்தாலே ஒருத்தர் அவர் நாண நன்மையும் செய்து விடல்.. எனக்கு நீங்க என்ன தான் துரோகம் பண்ணினாலும் உங்க பையன் வாழ்க்கைய காப்பாத்தி உங்களுக்குகே மருமகளா வந்துருக்கேன்.  நீங்க என்ன புண்ணியம் பண்ணிங்களோ நான் உங்களுக்கு மருமகளா வந்துருக்கேன்.. நீங்க பெருமை பட்டுக்கணும் மாமியாரே ! கல்யாணம் முடிஞ்சிருச்சி, இனி கச்சேரி தான்.  சீக்கிரமாவே  உங்க கையில ஒரு பேரன பெத்து கொடுக்கிறது தான் 

என்னோட அடுத்த வேலையே !  நாங்க சந்தோசமா இருக்கறத கண் குளிர பார்த்து நீங்களும் சந்தோசப்படணும் இல்லையா மாமியாரே.. அப்போ  நான் வரட்டுமா மாமியாரே என் புருஷன் உங்க புள்ளை எனக்காக காத்துட்டு இருக்கார் "என்று வெட்கப்பட்டு கொண்டு சொல்லிச் சென்றாலும் அதில் ஒரு கிலோ  நக்கல் இருந்ததை அவர் அறியாமல் இல்லை.


'போடி கூறுகெட்டவளே ! உன் கூட என் சைத்து சந்தோசமா வாழ்ந்திடுவானா என்ன??? அவன் விரல் நுனி கூட உன் மேல படாதுடி. இதுல நீ எனக்கு பேரன் பெத்து தர போறீயா அதையும் தான்டி பார்ப்போம்...'என்று சைத்துவின் மேலிருந்த நம்பிக்கையில் தனக்குள்ளே அவளுடன் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.  


ஆனால், அவர் எண்ணத்தை தரை மட்டமாக்க அடுத்த நாள் காலையில் அறையிலிருந்து  வெளியே வந்த சைத்துவின் கோலத்தை கண்டு அதிர்ந்து போனார் சரஸ்வதி.


அவன் மேனி எங்கும் முத்த வரிகளைக் கண்டு அவரது  நம்பிக்கையின் அஸ்திவாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது  போல் இருந்தது

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2