வரன் - 2

 




மேகாவின் நேத்திரங்கள் சொரியும் கண்ணீரைக் கண்டுச் சிரிப்பதா? கோபப்படுவதா ? எனக் குழம்பித் தவித்தான் ஆரன். 'அவளாக ஒரு கதைக் கட்டிக் கொண்டு அதற்கு அழுக வேறு செய்கிறாளே ! சரியான மக்கு  சக்கர !' என மனதில் கடிந்தவன் அவளது அழுகையை நிறுத்த வேறு வழியின்றி  முதல் நாளே அவளை திட்டத் தொடங்கினான்.


"ஏய் சக்கர ! நிறுத்து டி உன் அழுகைய !" பொறுமையிழந்து கத்திவிட்டான். அழுது கொண்டிருந்தவள், அவனை' பே ' வென பார்த்து நின்றாள்."சொல்வாங்களே ! அழகு இருந்தால் அறிவு சுத்தமா இருக்காதுனு அது உன் விஷயத்துல உண்மை தான் டேமிட்... சரியான மக்கு டீச்சர் டி நீ ! உண்மை என்னானு  எங்கிட்ட கேட்டுட்டாவது  அழுகணும், அதை விட்டு  பொசுக்குன்னு இன்னாதுக்கு  அழுகற நீ ? என்ன பண்ணிட்டாங்க உன்னை? இல்ல கேக்குறேன் நீ நல்லா தான இருக்க? சொல்லு நீ நல்லா தான இருக்க?" எனக் குரலை உயர்த்தி கேட்டான். பள்ளியில்  எத்தனையோ மாணவர்களை மிரட்டிய சாபம் தான் இப்போது அவளை ஒருத்தன் மிரட்டிக் கொண்டிருக்கிறான்.


அவளது தலை ' ஆம்' என்று செங்குத்தாக ஆடியது." கைகால்  நல்லா  தான இருக்கு? இல்ல இழுத்துக்கிச்சா?" இன்னும் கோபம் குறையாமல் கேட்க,  கண்ணீர் கண்ணில் உறைய ' ஆம் ' ' இல்லை 'என்று  ஆட்டினாள்.


"எல்லாம் நல்லா இருக்க, எதுக்கு டி உனக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வைக்கணும்? உங்க அப்பன் என்ன இல்லாதவனா? இல்ல வீட்ல கஷ்டமா?" எனக் கொஞ்சம்  கீழிறங்கி  கேட்கவும் அவளுக்கு சுர்ரென கோபமேற, முகத்தை சுருக்கிக் கோபத்தை காட்ட " ஓ... மேடமுக்கு கோபம் வருதோ ! சித்தப்பாக்கும் அப்பாக்கும் வித்தியாசம் தெரியாத மக்கு டீச்சருக்கு  கோபம் ஒன்னு தான் அவசியம்" அவளை கோபத்தில் நாறுநாறாக கிழிக்க வேண்டும் நோக்கத்தில்  இறங்கி விட்டான் போலும் திட்டுவதை நிறுத்தவே இல்லை.


'சித்தப்பா வா, ச்ச... மேகா  தப்பா புரிஞ்சிகிட்டு அவன் முன்னாடி சீனெல்லாம் போட்டியே !  மக்கு டீச்சர்னு திட்றளவுக்கு கொண்டு வந்திட்டியே , இவன் திட்றத  எப்படி நிறுத்தறது? ' என செய்வதறியாது நின்றாள்.


"ஆரன்னு, வீட்ல என் பேர  சொல்லிருப்பாங்க தான, கார்த்திக் இன்ஷியல் (t) எங்க  அண்ணன் பேர் தீரன். உன்னை எல்லாம் யாரு  டீச்சரா வேலைக்கு எடுத்தது?   உன்னை கேட்காம உன் வீட்ல எப்படி செகண்ட்  மேரேஜ் பண்ணி வைப்பாங்க? அவ்வளவு நம்பிக்கை என்ன?" என அவன் திட்டுவதை நிறுத்துவதாக இல்லை.


'ஐயோ !! இவன்  நிறுத்த மாட்டான் போலயே ! ஏதோ நினைப்புல யோசிச்சிட்டேன். அதுக்கு இந்த திட்டு திட்டுவானா? பேசாம ஸாரி சொல்லி வெள்ளை  கொடி காட்டிட வேண்டுயது தான். இவன் நமக்கு வேணுமா மேகா?' என யோசிக்க,


  '"என்னடா இவ்வளவு திட்டுறானே, இவன் நமக்கு  சரியானவனானு தான யோசிக்கற? " என அவள் எண்ணியதை  படித்தவன் போல் சொல்ல,


 ' அடி ஆத்தி அப்படியே சொல்றான்' என வாயைப்  பிளந்தவள் தலையை சிலுப்பி கொண்டு, " இ... இல்ல ஸார். எப்படி உங்க கிட்ட  மன்னிப்பு கேட்கலாம்  யோசிச்சிட்டு இருந்தேன். ஐ ஆம் எஸ்ட்ரிமிலி ஸாரி ஸார். ஸ்கூல்ல உங்களை கார்த்திக்கோட பார்த்திருக்கிறேன், அவனும் உங்களை 'அப்பா ' சொல்லி தான கூப்பிட்டான் அதான் தப்பா நினைச்சிட்டேன், ரியலி ஸாரி ஸார்" என்று  மெய்யாகவே வருத்தம் கொண்டு மன்னிப்பு கேட்க, அவனது கோபம் கொஞ்சம் மட்டுப் பட்டது. தன் நெற்றியை நீவிக்கொண்டு " மேகா... நான்..."  சற்று  முன் பேசியவனா இவன் மன்னிக்கவும் கத்தியவனா இவன் என்பது போல அவனது குரல் குழைய, ' பிண்றீயே டா ' என பிரகாஷ் ராஜை போல  உள்ளே கமெண்ட் கொடுத்துக் கொண்டாள். அவன் நெருங்கவும் கார்த்திக் வரவும் சரியாக இருந்தது.


"அப்பா, உன்னை கீழ கூப்பிட்டாங்க. மிஸ் உங்களையும் தான்" என்றவன் சொல்லிவிட்டு ஓடிவிட, 'இவனால தான் எல்லாம்' இருவரும் உள்ளுக்குள் கடிந்து கொண்டனர். கார்த்திக்கின் வரவுக்கு பின்  இறங்கிய கோபம்  மீண்டுமேற, ' என்ன மறுமடியும் மலையேறுறான்,  கடவுளே, " இந்த ஸ்பிலிட் பெர்ஸ்னாலிட்டிகாரனையா நீ என் கண்ணுல கட்டணும் இப்போ என்ன சொல்லி  கத்தப் போறானோ !' என உள்ளுக்குள் உதறலெடுத்தது.


"உன் முட்டாள் எண்ணத்தால, நான் உன்கிட்ட பேச வந்ததெல்லாம் பேச முடியாம போயிடுச்சி!    உன்னை பார்த்தும்  எனக்குள்ள வந்த காதல, உன்கிட்ட ஷேர் பண்ணனும்  உன்னைப்  பொண்ணு பார்க்க வர, நான் செஞ்ச  தகிடுதத்த வேலை எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணும், உன் விருப்பத்தை நானே கேட்டு தெரிஞ்சிக்கணும் ஆசையா எவ்வளவு எதிர்பார்ப்போடு  வந்தேன் தெரியுமா? எல்லாதையும் ஸ்பாயில் பண்ணிட டி நீ" என்றவனின் முகம் ஏமாற்றத்தை சுமக்க,அதைக் கண்டவளுக்கு அவனது உண்மையான வலி தெரிய அவனை 'என்ன சொல்லித் தேற்றவது' என்று தெரியாமல் முழித்தவள், " ஸாரி " என்று முணங்க, அது அவனுக்கு துல்லியமாக கேட்டது.


"இட்ஸ் ஓகே ! விடு ! இப்போ கீழ போனதும் மாப்பிள்ளைய பிடிச்சிருக்கானு கேட்பாங்க, என்ன சொல்லுவ?"  எனக் கேட்டவனைக் கண்டு ' என்ன சொல்லனும்?' என்பது  போல திருதிருவென  முழித்து வைத்தாள்.


"என்ன முழிக்கற, என்னால நீ இல்லாம வாழ  முடியாது.  இந்த ஜென்மத்தில நீ தான் எனக்கு. நான் தான் உனக்கு, அத மாத்த யார் வந்தாலும் முடியாது. ஸோ, இப்போ கீழ போற  மாப்பிள்ளைய பிடிச்சிருக்கானு கேட்டா, பிடிச்சிருக்குன்னு சொல்ற, நாளைக்கு ஈவினிக் ஃபைவ்க்கு உங்க ஸ்கூல் பக்கத்தில இருக்க  காஃபி சாப்'க்கு வந்திடுற  சம்ஜே !"  என்று அவள் பதிலைக் கூட எதிர்பாராமல் தடதடவென கீழ இறங்கி சென்றான்.


' ஒருவேள ஆன்டி ஹீரோ வா இருப்பானோ ! வந்தான் திட்டுனான், லவ் பண்றேன் சொன்னான்  பிடிச்சிருக்கு சொல்ல சொன்னான் போயிட்டான். இப்படி யாரும் பொண்ணு பார்த்துட்டு போனதா சரித்திரத்துல படிச்சது இல்லையே மேகா ! இப்ப பிடிச்சிருக்குனு சொல்லனுமா? பிடிக்கலேனு சொல்லனுமா?  குழம்பிய  குழம்பாய் சபையில் வந்து நின்றாள்.


"மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிச்சிருக்கா ?" என சபையிலிருந்த பெரியவர் கேட்டார்  ' இந்தக் கேள்வி அவசியமா?'என அவனது குடும்பத்து ஆட்கள் அவனை  பார்த்தனர். அவனும் தயக்கமின்றி சட்டென "பிடிச்சிருக்கு" என்றான். 


கேள்வி மேகா பக்கம் திரும்ப,  ஒரு முறை  ஒரக் கண்ணால் அவனை பார்த்தாள். அவன் விழிகளை உருட்டி மிரட்ட, பார்வையை திருப்பிக் கொண்டவள் "பிடிச்சிருக்கு"  என்றாள்., அவளறியாமல் அவளை காதலாகப் பார்த்தான்.


மேகாவை  உள்ளே அனுப்பிவிட்டு மற்ற விஷயங்களை பேசினார்கள். பெண்வீட்டுக்காரர்களிடம் மாப்பிள்ளைக்கு வீட்டுக்காரர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்  என்று வெளிப்படையாக பேச, ' பெண் வீட்டில் எதை எதிர் பார்க்கக் கூடாது, கல்யாணச் செலவை வேணா பகிர்ந்துக்கங்க' என்று  மகன் சொன்னதை அப்படியே சொல்ல, மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை பெருமையாக பார்த்தனர். ஆனாலும் நாங்கள் செய்வதை செய்வோம் என்று பெண் தகப்பனார் லிஸ்ட் போடக் கடுப்பாகிவிட்டான்.


பிறகு நிச்சய தேதியை  குறித்தவர்கள் , கல்யாணத் தேதியை இரண்டு மாதம் கடந்தே குறிக்க, இரண்டு மாதம் கால இடைவெளி எண்ணிக்  கோப மூச்சிக்களை வெளியே விட்டான். திருமணம் பேசி முடித்த மனநிறைவுடன் மாப்பிள்ளை வீட்டார்கள் சென்றுவிட, மேகாவின் தந்தை கங்காதரனுக்கும் அவரது மனைவி தனலெட்சுமிக்கும்  மகிழ்ச்சி தாளாவில்லை பார்த்த முதல் இடமே முடிந்ததிட, வேற என்ன பெற்றோர்களுக்கு சந்தோஷம் இருந்து விடப் போகிறது,  நேகாவின் தந்தை ஸ்ரீதருடனும் கனக லெட்சுமியிடம் பேசிக் கொண்டிருக்க, மேகாவின் அறைக்குள் நுழைந்தாள்  நேகா.


"அப்றம் கல்யாணப் பெண்ணே ! என்ன பண்றீங்க?" என்று வந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வளையல்களை கழட்டிக் கொண்டிருந்தாள் மேகா. அவளது கழுத்தில் அணிவித்த அட்டியலை அவிழ்த்த படி, " என்ன டி  ரொம்ப நெர்வஸா இருக்கு மாப்பிள்ளை  பிடிக்கலேன்னா என்ன பண்ணலாம் கேட்ட, இப்போ என்ன புடிச்சிருக்குனு சொல்லி கவுந்துட்ட ? என்ன சொன்னார்  என் வருங்கால மாமா !"  தனியாகச்  சென்று  என்ன பேசினார்கள் என்று அறியும் ஆவலில் கேட்டாள். 


"ம்ம்... என்னை மக்கு  டீச்சர் சொன்னார் உன் வருங்கால  மாமா !" என்றாள் பல்லை நறநறனவென கடித்தபடி. அதைக் கேட்டவள் மெத்தையில் சரிந்து சிரிக்க தொடங்கினாள். அவளது சிரிப்பு இவளுக்கு கடுப்பாக இருக்க , அருகே இருந்த  தலையணை  அவள் முகத்தை வைத்து அழுத்தினாள். ' கொல கொல ' எனக் கத்தவே அவளை விட்டாள், " அடியே கொலகாறி ! விட்றீ" என தள்ளி அமர்ந்தவள், 

"சரி சொல்லு எதுக்கு உன்னை அப்படி சொன்னார்?" என்று  தலையணையை மடியில் வைத்து கதை கேட்பதுபோல் கேட்டாள். மேகா அனைத்தையும் கூற, வெகு நேமாக தொடர்ந்தது  அவளது சிரிப்பு. அவள் சிரிப்பதை பாவமாக  முகத்தை வைத்து கொண்டு பார்த்திருந்தாள்.


'செக்ண்ட் மேரேஜ்ஜாம் கார்த்திக் அப்பானு நினைச்சாளாம்  உன்னை மக்கு டீச்சர் சொன்னதுல தப்பே இல்ல டி மக்கு  டீச்சர்... மக்கு டீச்சர்..." என மேகாவின் தலையை கொட்டினாள், அவளும்  தலையைத் தேய்தவாறு அவளை கிள்ளி வைத்தாள்.


"அப்போ நாளைக்கு மாம்ஸ பார்க்க போறீயா?"


"தெரியல, குழப்பமாவும் இருக்கு, பயமாவும் இருக்கு டி" என்றாள் குழப்பத்தில்.


" எதுக்கு குழப்பம்? எதுக்கு பயம்?"


"பொண்ணுப் பார்த்து பேசி முடிச்சிட்டு போன மறுநாள் மாப்பிள்ளையோட பொண்ணு வெளிய ஊர்சுத்துதுனு பேச மாட்டாங்களா?அப்பாக்கு  தெரிஞ்சது என்னை கொன்னே போட்டுடுவார். அவர் கிட்ட சொல்லிட்டு  போகவா சொல்லாம போகவானு குழப்பமா இருக்கு" என்று தன் நகத்தைக் கடித்தாள். அவள் கையை தட்டிவிட்டவள், " முதல் அப்பா அப்பானு சொல்லுறத நிறுத்து, இனி பாவா , மாமா னு தான் சொல்ற புரியுதா?  ஸ்கூல்  முடிஞ்சதும் பிரண்ட பார்க்க போறேன் சொல்லிட்டு போ டி.இதுக்கு  பெர்மிஷன் கேட்க போறாளாம். அவரும்  குடுத்திட்டு தான் மறுவேலைய  பார்ப்பார் போடி நாளைக்கு நீ போற டாட்" என்றாள். "அப்போ நீ வர டாட்" என்றாள்  மேகா.


மறுநாள் மாலையில்  இவரும் காஃபி சாப்'பிற்குள் நுழைய,  அங்கே அவர்களுக்காக முன்னமே காத்திருந்தான் ஆரன்.  நேகாவை பக்கத்து மேசையில் அமர சொன்னவன், மேகாவை  தன் முன்னே அமர சொன்னான். மூவருக்கும் காஃபி ஆடர் சொல்லிவிட்டு, மேகாவிடம் மன்னிப்பு கோர, 'ப்பா ! வாட் எ  பெர்ஃபோர்மேன்ஸ் !' என்று மலைத்தாள்." மன்னிப்பு கோரியவுடன் அவன் சொன்ன விஷயத்தை கேட்டு விழிகள் தெரித்து விடுமளவு கண்கள் இடுங்க அவனை கண்டாள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2