மடல் - 16

 மடல் - 16

முருகனின் தந்தை, பரதன், வைகுண்டத்தின் காம்ப்ளெக்ஸில் தான், படிக்கும் மாணவர்களுக்கு தேவையான  பொருட்கள் கொண்ட கடையை நடத்தி வந்தார்.

எந்நேரமும் அவருக்கு வியாபாரம் தான். மாணவர்கள் கடையை மொய்த்து கொண்டு இருப்பார்கள். அவரது கடையை, அதுவும் பள்ளிக்கு அருகில் இருப்பதால் அவருக்கு வசதியாக இருந்தது.

பரதனுக்கு உதவியாக சோபனா இருப்பார். ஒன்பது மணி வரையில் மாணவர்கள் கூட்டம் கடையில் தான் இருக்கும்.

அதற்கு மேல் பத்து  , இருபது பேர் கடைக்கு வந்து போவார்கள். பின் மாலை ஐந்து மணிக்கு மேல மீண்டும் மாணவர்கள் கூட்டம்.

நன்றாகச் சென்று கொண்டிருந்தது அவரது வியாபாரம். தனது வியாபாரத்தை வைத்து தான்,  மகனை எதிரே இருக்கும் மிகப் பெரிய பள்ளியில் சேர்த்து தனக்கு கிடைக்காத கல்வியை மகனுக்கு கொடுக்க முனைந்தார்.

முருகனும் அவரது நம்பிக்கையை காப்பாத்திக் கொண்டு வந்தான்.

நன்றாகப் படித்து வகுப்பில் முதல் இடத்தை இன்று வரை தக்க வைத்து கொண்டு வரும் மாணவன் முருகன். அவனை கண்டு ஆச்சர்யம் கொள்ளாத ஆசிரியர்களே இல்லை.

பரதன், வைகுண்டத்தை போல தான் உதவி செய்யும் மனம் கொண்டவர், தன்னால் முடிந்த உதவியை செய்வார். அதுவும் திகழுக்கும் தேவாவிற்கும்  அவர்களது கஷ்ட காலத்தில் சோறு போட்டிருக்கார்.

கடைக்கு ஆட்கள் யாரும் வர்றாத நாட்களில் பணமில்லாமல் சமைத்துக் சாப்பிட கூட பொருட்கள் இல்லாமல் நீரை அருந்தி வயிற்று பசியைப் போக்கிய காலங்களும் அப்பெண்கள் இருவருக்கும் உண்டு.

அப்போதெல்லாம் சோபனா தான் அவர்களுக்கு சேர்ந்து  சமைத்து கொண்டு வருவார்.

தங்களது மகள்களை போல தங்களுடன் அமர்ந்து சாப்பிட வைப்பார்கள்.

இவ்வாறு அப்பெண்களின் கஷ்ட காலத்தில் கூட இருந்தவர்களின் பட்டியலில் இவர்களும் உண்டு.

பரதன் தன்னை கவனித்துக் கொள்ளாமல் மகனுக்காக ஓட, அதற்கு பலனாக நெஞ்சு வலி அவரை சூழ்ந்து கொண்டது.

மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க கடையை அடகு வைத்து செலவு செய்து அவரை தேற்றி கொண்டு வர முயன்று தோல்வி தழுவியதோடு அவரை இழக்கவும் நேர்ந்தது.


எமன் அவரது உயிரை பறித்து விட்டார். அவரை நம்பிய இரு ஜீவன்களை தனித்து வாழச் சொல்லி விட்டார் போலும்.

உழைக்கும் ஆண் வீட்டில் இல்லையென்றால் அடிதளம் சரி இல்லாத வீடு போல ஆட்டம் கண்டு விடும்.

சோபனாவின் நிலமை கூட அது தான், படிப்புக்காக வாங்கிய கடனுக்கு கடையை தியாகம் செய்ய வேண்டிய நிலை.

வைகுண்டத்திடம் கேட்டு,  காம்ப்ளெக்ஸ் வேலை போட்டு கொடுக்க கேட்டார். அவரோ உதவி செய்தால் தவறாக திரிந்து விடும் என்பதால் அவருக்கு வேலை போட்டுக் கொடுத்து அவ்வழியில் உதவி செய்தார்.

முருகனை அரசு பள்ளியில் படிக்க வைக்க நினைத்தார் சோபனா, மகன் முருகனும் ஒத்துக் கொள்ள, விஷயம் அறிந்த திகழ் தான், அவர்கள் செய்த நன்றி கடனுக்கு வட்டி முதலுமாக முருகனின் படிப்பு செலவை ஏற்று படிக்க வைக்கிறேன் என்று முன் வந்து இரண்டு வருடமாக படிக்க வைக்கவும் செய்கிறாள்.

முதலில் சோபனாவும் வேண்டாம் என்று மறுத்தாலும் பேசி பணிய வைத்து ஒதுக்குள் கொள்ள வைத்தாள்.

அவரை சங்கட படுத்தாமல் சரியாக பள்ளி கட்டணத்தை கட்டி விடுவாள். இந்த வருடம் கொஞ்சம் தாமதமாக , அதையும் முன் கூட்டியே சொல்லியும் விட்டாள்.

***

ஆசிரியர்கள், பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை அவர்கள் செலுத்தும் வரை வெளியே அமர வைப்பது, பிரபாகரன் போட்ட விதி முறைகளில் ஒன்று.

வருடா வருடம் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களிடம் ஜூலை மாதத்திற்குள் பள்ளி கட்டணத்தை  வசூலித்து விடுவார்கள். ஒன்று இரண்டு இருந்தாலும் அவர்களுக்கு தொல்லை கொடுத்தவாது பள்ளிக் கட்டணத்தை வசூலித்து விடுவார்கள்

மதுரையில் இருக்கும் பள்ளியில் சரி, பெங்களுரில் இருக்கும் பள்ளியில் இது போன்று கிடையாது. தியாகராஜன் பணம் கட்டாத பெற்றோர்களை அழைத்து பேசி , அவர்கள் சூழ்நிலை புரிந்து கால அவகாசம் கொடுப்பார், தாத்தா வழியில் தான் பேரனும்,  இடையில் தடம் மாறி போனது என்னவோ பிரபாகரன் தான்.

பள்ளியில் நடக்கும் எதிர்மறையான விஷயங்களை ஒன்றன் பின்னாகச் சரி செய்து வரும் தனிஷ்ஷிற்கு இந்த செய்தியும் புதிதாக இருந்தது.

தன் முன் நின்ற முதல்வரை பதில் வேண்டி தனிஷ் நோக்க, அவர் சொன்ன பதில் அவனுக்கே பேரதிர்ச்சி தான்.

"இது சார் போட்ட ரூல்ஸ் ! ஜூன் ஜூலை மந்த் முடியறதுக்குள்ள  எல்லா ஸ்டூடண்ட்ஸ் ஃபீஸ் கட்டி இருக்கணும் சொல்லி இருக்கார். ஃபீஸ் கட்டாத ஸ்டூடண்ட் வெளிய உட்கார வைங்க ! என்ன வேணாம் பண்ணுங்க !ஆனா ஸ்கூல் ஃபீஸ் கட்ட வைக்கணும் சொல்லி இருக்கார் சார்"என்றார்.

அவனுக்கோ தந்தை மீது கோபம் அதிகரித்தது. அதை வெளியே காட்டாத நிலையில் கை முஷ்டியை இருக்கியவன் மேசையில் "ஷிட்" என்றான்.

முதல்வரிடம் கண்ணை காட்டி போகச் சொன்னான். அவரோ நன்றி சொல்லி விட்டுச் செல்ல, தன் கண்களை மூடி தன் கோபத்தை அடக்க முயன்றான்.

அதுவரை பார்வையாளராக நின்ற திகழுக்கு ஓரளவு  பிரச்சனை காரணம் புரிந்தது.  அமைதியாக அவன் முன் நின்றிருந்தனர், திகழ், முருகன், சோபனா.

எதிரே நிற்பவர்களை கண்டு தன்னை நிலை படுத்தவன் "அது வந்து..."என ஆரம்பிக்க,

"நீங்க இங்க கரஸ்பொண்டர் தானா? நிஜமா இங்க நடக்கிறது உங்களுக்கு எதுவும் தெரியறது இல்லையா? இல்ல இதெல்லாம் நீங்க போட்ற டிராமா வா?"என மனதில்லுள்ளதை கேட்டு விட்டாள்.

"என்னை பார்த்தா, டிராமா போட்ற ஆர்டிஸ்ட் போலவா இருக்கு?"

"இல்ல... ஆனா உங்களுக்கு தெரியாம எப்படி போலீஸ் காம்ப்ளைண்ட் குடுக்க முடியும்? உங்களுக்கு தெரியாம, எப்படி ஃபீஸ் கட்டாத பசங்கள வெளியே உட்கார வச்சிருப்பாங்க ? உங்களுக்கு தெரியாம நடக்குதுன்னா நீங்க நிஜமாவே இங்க கரஸ்பொண்டர் தான? இல்ல உங்க அப்பா, ஆட்டி வைக்கிற பப்பட்டா நீங்க?"

தன் தந்தையின் தவறு தான். இருந்தாலும் அவரை மூன்றாவது மனுஷி முன் விட்டு கொடுக்க முடியவில்லை...

அவள் கேட்ட கேள்விகள் சரி தான்.  தன்னை கை பொம்மை என்றதும் முன் கோபம் சட்டென முளைத்தாலும், தனது தந்தை தன்னை  அவ்வாறு தான் நடத்தி வருகிறாரோ என்றும் தோன்றியது. 

பதில் வேண்டி நிற்பவளிடம் எதுவும் சொல்லாது அவள் பக்கத்தில் நிற்பவரிடம்,

"சாரி மா ! இனி இது போல நடக்காது. உங்களால முடியலைன்னா பணத்தை பாதி பாதியா கூட கட்டுங்க ! ஒரு பிராபலமும் இல்ல... நான் மேனேஜ்மென்ட்ல பேசிக்கிறேன்"என்றவன் ,

முருகனிடம் "முருகன் , இதெல்லாம் மைண்ட்ல வச்சிட்டு படிக்கறத விட்ற கூடாது. இனி உன்னை யாரு அப்படி ட்ரீட் பண்ண மாட்டாங்க  ! அப்படி யாரும் எதுவும் சொன்னாங்கன்னா, நீ நேரடியாக என் கிட்ட வந்து பேசலாம் சரியா !"என்றான். அவனும் ' சரி ' என்றான்

தனிஷ், தன்னையும் தவிர்த்து தன் கேள்வியையும் தவிர்த்து மற்ற இருவரிடமும் நல்ல விதமாக பேசியதை சந்தேக விழிகளுடன் பார்வையிட்டாள்.

இருவரிடமும் பேசி முடித்தவனின் பார்வை அவள் மீது வந்து முடிந்தது. நான்கு கண்களும் பார்வையை தவிர்க்க மறந்தது போல ஒரு கணம் நின்றன. பின் சுதாரித்து கொண்டு விலகின.

குரலை செருமிக் கொண்டவள்" அவனுக்கு ஃபீஸ் கட்ட தான் வந்தேன்.  ஃபீஸ் காட்டாதனால வெளிய உட்கார வச்சிருக்காங்க, ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் அவன பார்த்து சிரிச்சி இருக்காங்க... ஸ்கூலுக்கு வர பிடிக்காம, தான் வீட்ல இருந்திருக்கான். இது போல தான ஒவ்வொரு மாணவர்கள் மனநிலையும் இருந்திருக்கும்...?"என்றாள். அவனை விடாமல் கேள்வியால் துளைத்தாள்.

' இவ விட மாட்டா போலையே ! ' என சலித்து கொண்டவன், அதை முகத்தில் காட்டாது "அதான் மன்னிப்பு கேட்டேனே !  இனி இது போல நடக்காம பார்த்துக்கிறேன்... டீச்சர்ஸ் கிட்ட ஸ்டூடண்ட்ஸ் கிட்ட நான் பேசிக்கிறேன்"என்று கத்தரிக்க,

அதற்கு மேல் அவளுக்கும் பேசும் எண்ணம் இல்லை... "ஓகே தேங்க் யூ !"என்றவள் சோபனாவிடம் கண்ணை காட்ட, இருவரும் நன்றியை உரைத்து விட்டு அவளுடன் வெளியேறினார்கள்.

அவர்கள் வெளியே சென்றதும் உதட்டை குவித்து ஊதிக் கொண்டான்.

' என்ன எழவு விதியோ இவ கிட்ட மோதி பல்ப் வாங்கிட்டே இருக்கேன்...! ' என தனக்குள் பேசிக் கொண்டவன்,  வெளியே மற்ற மாணவர்களின் நிலையைப் பார்க்க வந்தான்.

***
ஒரு மர நிழலில் சோபனா அமர்ந்திருக்க, இவளும் முருகன் பணம் செலுத்த அலுவலகத்திற்குள் நுழைந்திருந்தனர்.

வெளியே  அமர்ந்திருக்கும் சோபனாவை கண்டதும் அவனது கண்கள் அவளையும் தேடின !  அவளோ அலுவகத்திற்குள் நின்றிருந்தாள்.  அவளை கணம் பார்த்து விட்டு சோபனாவிடம் வந்தான்.

அவனை கண்டதும் எழுந்து நின்றார். "பரவாயில்லமா உட்காருங்க..."என்றான் மரியாதை நிமித்தமாக,

அவரோ "இருக்கட்டும் தம்பி !" என்றார் கூச்சம் கொண்டு.

"தனிப்பட்டு உங்க கிட்ட நான் மன்னிப்பு கேக்குறேன் மா ! எனக்கு இந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சிருந்தா முன்னாடியே  இதுக்கு நான் அப்போஸ் பண்ணி இருப்பேன். முருகன் மனநிலை என்னவா இருந்திருக்கும்  எனக்கு ஓரளவு புரியுது. இது தான் கடைசி தடவை, உங்க பொண்ணு மூலமா தான் இந்த  விஷயம் என் காதுக்கு வந்திருக்கு, கண்டிப்பா இதுக்கு ஆக்சன் எடுப்பேன் மா "என்றான் மனம் கேட்காமல் மீண்டும் மன்னிப்பு கேட்டான்.

அவரோ "ரொம்ப நன்றிங்க தம்பி ! நீங்க இவ்வளவு தன்மையா பேசறதை பார்க்க ஆச்சர்யமா இருக்கு ! நீங்க இல்லேனா இங்க இருக்க யாரும் பணக்காரங்கள மதிப்பாங்களே தவிர எங்களை மதிப்பான பார்வை கூட பார்க்க மாட்டாங்க...! முருகன் அப்பா இருக்கும் போதே அப்படி தான் நடந்துப்பாங்க ! இப்போ அவரும் இல்ல என் நிலமை மோசமாச்சி தம்பி ! திகழ் மட்டும் இல்லைனா என் புள்ளை படிச்சிருக்கவே மாட்டான் தம்பி ! திகழ் நான் பெறாத மக தம்பி "என்றார்.

"அப்போ இவங்க உங்க பொண்ணு இல்லையா?" அதிர்ச்சியுடன் கேட்டான்.

"சொன்னேனே தம்பி  ! நான் பெறாத மக'ன்னு... அந்த பொண்ணுக்கு யாருமில்லா தம்பி ! அதுவும் தேவா பாப்பாவும் கஷ்டப்படும் போது
சோறு போட்ட ஒரே காரணத்துக்காக எங்களுக்கு உதவி செய்து தம்பி !"என்ற உண்மையை சொன்னார்.

ஆச்சர்யம் கொண்ட  விழிகள் பெரிதாய் விரிய, வைகுண்டம் சொல்லும் போது
கூட பாதி நம்பாமல் போனவன் நேரடியாகப் பார்த்ததும் , அவள் மேல் முதன்  முதலாக நன் மதிப்பு வந்தது.

பணம் கட்டி முடித்து வெளியே வரும் அவளையே கண்மணிகள் அசையாது பிரமிப்பாகப் பார்த்தான்.

அவளால் அவனுக்குள் சட்டென உதித்தது ஒர் எண்ணம், அதுவும் அவளால் தான் அதுவும் கிடைத்தது. அதை தன் தந்தையுடன் பேச வேண்டும் எண்ணினான்.

அவள் வருவதை கண்டு அவரிடம் விடைப்பெற்றுக் கொண்டான்.

இவளும் முருகனை வகுப்பிற்க்குள் அனுப்பி வைக்க, தாய் தன் மகனை மன நிறைவுடன்  பார்த்து கண்கள் கலங்கிப் போய் திகழ் முன் கை கூப்பி நன்றி தெரிவித்தார்.

அவர் கையை பற்றி  கீழே போட்டவள்,  அவரை அணைத்து தேற்றி தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

தூரத்தில் ஒரு பார்வையாளராக பார்த்தவனுக்கு உதட்டில் மென் சிரிப்பு.

முதன் சந்திப்பில் அடாவடியாக அவளை கண்டவனுக்கு புதியவளாக தெரிந்தாள்.

கண்ணில் மறையும் வரை அவளையே பார்த்து நின்றான். இவளும் தனக்குள் எதையோ உணர்ந்து திரும்பிப் பார்க்க , அவன் மறைந்து கொண்டான்.

அவளும் திரும்பி நடக்க ஆரம்பிக்க, மேலும் அவனது விழிகள் விரிந்தது.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2